(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
உதர கமலத்தினிடை முதிய புவனத்ரயமும்
உகமுடிவில் வைக்கும் உமையாள்பெற்ற பாலகனும் ....1
உமிழ்திரை பரப்பிவரு வெகுமுக குலப்பழைய
உதகமகள் பக்கல்வரு சோதிச் சடானனும் ....2
உவகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்கஅவர்
ஒருவரொரு வர்க்கவணொர் ஓர்புத்ரன் ஆனவனும் ....3
உதயரவி வர்க்கநிகர் வனகிரண விர்த்தவிதம்
உடையசத பத்ரநவ பீடத்து வாழ்பவனும் ....4
உறைசரவணக் கடவுள் மடுவிலடர் வஜ்ரதரன்
உடையமத வெற்புலைய வேதித்த வீரியனும் ....5
உறைபெற வகுத்தருணை நகரில்ஒரு பத்தனிடும்
ஒளிவளர் திருப்புகழ்மதாணிக்ரு பாகரனும் ....6
உரககண சித்தகண கருடகண யக்ஷகணம்
உபநிடம் உரைத்தபடி பூசிக்கும் வானவனும் ....7
ஒருவனும் மகிழ்ச்சிதரு குருபரனும் உத்தமனும்
உபயமுறும் அக்நிகர மீதிற் ப்ரபாகரனும் ....8
அதிமதுர சித்ரகவி நிருபனும் அகத்தியனும்
அடிதொழு தமிழ்த்ரய விநோதக் கலாதரனும் ....9
அவரைபொரி எட்பயறு துவரைஅவல் !சர்க்கரையொ
டமுதுசெயும் விக்நபதி யானைச் சகோதரனும் ....10
அவுணர்படை கெட்டுமுது மகரசல வட்டமுடன்
அபயமிட விற்படை கொடாயத்தமானவனும் ....11
அருணையில் இடைக்கழியில் உரககிரியிற்புவியில்
அழகிய செருத்தணியில் வாழ் கற்பகாடவியில் ....12
அறிவும்அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும்
அறியென இமைப்பொழுதில் வாழ்வித்த வேதியனும் ....13
அரிபிரமருக்கு முதல் அரிய பரமற்குயரும்
அருமறை முடிப்பை உபதேசித்த தேசிகனும் ....14
அமலனும் எனக்கரசும் அதிகுணனும் நிர்க்குணனும்
அகில புவனத்தமர சேனைக்கு நாயகனும் ....15
அநுபவனும் அற்புதனும் அநுகுணனும் அக்ஷரனும்
அருமனம் ஒழிக்கும் அநுபூதிச் சுகோதயனும் ....16
இதமகிதம் விட்டுருகி இரவு பகலற்ற இடம்
எனதற இருக்கைபுரி யோகப் புராதனனும் ....17
எனதுமன சிற்பரம சுகமவுன கட்கமதை
யமன்முடி துணிக்க விதியா வைத்த பூபதியும் ....18
எழுமையும் எனைத்தனது கழல்பரவு பத்தனேன
இனிதுகவி அப்படி ப்ரசாதித்த பாவலனும் ....19
இமையவர் முடித்தொகையும் வனசரர் பொருப்பும்!என
திதயமு(ம்) மணக்கும்இரு பாதச் சரோருகனும் ....20
எழுதரிய கற்பதரு நிழலில்வளர் தத்தை!தழு
வியகடக வஜ்ர அதிபாரப் புயாசலனும் ....21
எதிரில் புலவர்க்குதவு வெளிமுகடு முட்டவளர்
இவுளிமுகியைப் பொருத ராவுத்தன் ஆனவனும் ....22
எழுபரி ரதத்திரவி எழுநிலமொடக்கரிகள்
இடர்பட முழக்கியெழு சேவற் பதாகையனும் ....23
இணையிலியும் நிர்ப்பயனும் மலம்இலியும் நிஷ்களனும்
இளையவனும் விப்ரகுல யாகச் சபாபதியும் ....24
மதுகையொடு சக்ரகிரி முதுகுநெளி அப்புவியை
வளையவரும் விக்ரம கலாபச் சிகாவலனும் ....25
வலிய நிகளத்தினொடு மறுகுசிறை பட்டொழிய
வனஜ முனியைச் சிறிது கோபித்த காவலனும் ....26
வருசுரர் மதிக்கஒரு குருகுபெயர் பெற்றகன
வடசிகரி பட்டுருவ வேல்தொட்ட சேவகனும் ....27
வரதனும் அநுக்ரகனும் நிருதர்குல நிஷ்டுரனும்
மநுபவன சித்தனு(ம்) மநோதுக்க பேதனனும் ....28
வயிரிசை முழக்கமிகு மழைதவழ் குறிச்சிதொறும்
மகிழ்குரவையுள் திரியும் வேடிக்கை வேடுவனும் ....29
மரகத மணிப்பணியின் அணிதழை உடுத்துலவும்
வனசரர் கொடிச்சிதனை யாசிக்கும் யாசகனும் ....30
மதனன்விடு புட்பசர படலம்உடல் அத்தனையும்
மடலெழுதி நிற்கும்அதி மோகத் தபோதனனும் ....31
வரிசிலை மலைக்குறவர் பரவிய புனத்திதணின்
மயிலென இருக்குமொரு வேடிச்சி காவலனே ....32
No comments:
Post a Comment