(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தான தத்தன தானா தனாதன
தான தத்தன தானா தனாதன
தான தத்தன தானா தனாதன ...... தந்ததான
தான தத்தன தானா தனாதன
தான தத்தன தானா தனாதன
தான தத்தன தானா தனாதன ...... தந்ததான
போத நிர்க்குண போதா நமோநம
நாத நிஷ்கள நாதா நமோநம
பூரணக்கலை சாரா நமோநம ...... பஞ்சபாண
பூபன் மைத்துன பூபா நமோநம
நீப புஷ்பக தாளா நமோநம
போக சொர்க்க புபாலா நமோநம ...... சங்கமேறும்
மாதமிழ்த்ரய சேயே நமோநம
வேதனத்ரய வேளே நமோநம
வாழ்ஜகத்ரய வாழ்வே நமோநம ...... என்றுபாத
வாரிஜத்தில் விழாதே மகோததி
ஏழ்பிறப்பினில் மூழ்கா மனோபவ
மாயையிற் சுழியூடே விடாது ...... கலங்கலாமோ
கீத நிர்த்த வெதாளாடவீ நட
நாத புத்திர பாகீரதீ !கிரு
பாசமுத்திர ஜீமூத வாகனர் ...... தந்திபாகா
கேகயப் பிரதாபா முலாதிப
மாலிகைக் குமரேசா விசாக!க்ரு
பாலு வித்ருமகாரா ஷடானன ...... புண்டரீகா
வேத வித்தக வேதா விநோத!கி
ராத லக்ஷ்மி கிரீடா மகாசல
வீர விக்ரம பாராவதானஅகண்டசூரா
வீர நிட்டுர வீராதி காரண
தீர நிர்ப்பய தீராபிராம!வி
நாயகப்ரிய வேலாயுதா சுரர் ...... தம்பிரானே
திருப்பாடல் 2:
தான தத்தன தானா தனாதன
தான தத்தன தானா தனாதன
தான தத்தன தானா தனாதன ...... தந்ததான
ஓது முத்தமிழ் தேரா வ்ருதாவனை
வேதனைப்படு காமா விகாரனை
ஊனமுற்றுழல் ஆபாச ஈனனை ...... அந்தர்யாமி
யோக மற்றுழல் ஆசா பசாசனை
மோக முற்றிய மோடாதி மோடனை
ஊதியத்தவம் நாடாத கேடனை ...... அன்றிலாதி
பாதகக் கொலையேசூழ் கபாடனை
நீதி சற்றுமிலா கீத நாடனை
பாவியர்க்குள்எலா மா துரோகனை ...... மண்ணின்மீதில்
பாடு பட்டலை மாகோப லோபனை
வீடு பட்டழி கோமாள வீணனை
பாச சிக்கினில் வாழ்வேனை ஆளுவதெந்தநாளோ
ஆதி சற்குண சீலா நமோநம
ஆடகத்திரி சூலா நமோநம
ஆதரித்தருள் பாலா நமோநம ...... உந்திஆமை
ஆனவர்க்கினியானே நமோநம
ஞான முத்தமிழ் தேனே நமோநம
ஆரணற்கரியானே நமோநம ...... மன்றுளாடும்
தோதி தித்திமி தீதா நமோநம
வேத சித்திர ரூபா நமோநம
சோபம்அற்றவர் சாமீ நமோநம ...... தன்மராச
தூதனைத்துகை பாதா நமோநம
நாத சற்குரு நாதா நமோநம
ஜோதியிற் ஜகஜோதீ மஹாதெவர் ...... தம்பிரானே
திருப்பாடல் 3:
தான தத்தனா தானா தனாதன
தான தத்தனா தானா தனாதன
தான தத்தனா தானா தனாதன ...... தந்ததான
வேத வித்தகா சாமீ நமோநம
வேல் மிகுத்தமா சூரா நமோநம
வீம சக்ரயூகாளா நமோநம ...... விந்துநாத
வீர பத்மசீர் பாதா நமோநம
நீல மிக்க கூதாளா நமோநம
மேக மொத்த மாயூரா நமோநம ...... விண்டிடாத
போத மொத்தபேர் போதா நமோநம
பூத மற்றுமே ஆனாய் நமோநம
பூரணத்துளே வாழ்வாய் நமோநம ...... துங்கமேவும்
பூதரத்தெலாம் வாழ்வாய் நமோநம
ஆறிரட்டிநீள் தோளா நமோநம
பூஷணத்துமா மார்பா நமோநம ...... புண்டரீக
மீதிருக்குநா மாதோடு சேயிதழ்
மீதிருக்கும் ஏரார்மா புலோமசை
வீர மிக்கஏழ் பேர்மாதர் நீடினம் ...... நின்றுநாளும்
வேத வித்தகீ வீமா விராகிணி
வீறு மிக்கமா வீணா கரே!மக
மேருவுற்றுவாழ் சீரே சிவாதரெ ...... அங்கராகீ
ஆதி சத்திசா மாதேவி பார்வதி
நீலி துத்தியார் நீணாக பூஷணி
ஆயி நித்தியே கோடீர மாதவி ...... என்றுதாழும்
ஆர்யை பெற்ற சீராளா நமோநம
சூரையட்டுநீள் பேரா நமோநம
ஆரணத்தினார் வாழ்வே நமோநம ...... தம்பிரானே
திருப்பாடல் 4:
தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தன
தான தாத்தன தாத்தன ...... தனதானா
ஆவி காப்பது மேற்பதம் ஆதலாற் புருடார்த்தம்!இ
தாமெனாப் பரமார்த்தமதுணராதே
ஆனை மேற்பரி மேற்பல சேனை போற்றிட !வீட்டொட
நேக நாட்டொடு காட்டொடு ...... தடுமாறிப்
பூவை மார்க்குருகாப் புதிதான கூத்தொடு பாட்டொடு
பூவினாற்றம் அறாத்தன ...... கிரிதோயும்
போக போக்ய கலாத்தொடு வாழ்பராக் கொடிராப்பகல்
போது போக்கி எனாக்கையை ...... விடலாமோ
தேவி பார்ப்பதி சேர்ப்பர பாவனார்க்கொரு சாக்ர!அ
தீத தீக்ஷை பரீக்ஷைகள் அறவோதுந்
தேவ பாற்கர நாற்கவி பாடு லாக்ஷண !மோக்ஷதி
யாக ராத்திகழ் கார்த்திகை ...... பெறுவாழ்வே
மேவினார்க்கருள் தேக்குதுவாத சாக்ஷ ஷடாக்ஷர
மேரு வீழ்த்த பராக்ரம ...... வடிவேலா
வீர ராக்கதர் ஆர்ப்பெழ வேத தாக்ஷகனாக்கெட
வேலை கூப்பிட வீக்கிய ...... பெருமாளே
திருப்பாடல் 5:
தான தாத்தன தாத்தன தான தாத்தன தாத்தன
தான தாத்தன தாத்தன ...... தனதானா
ஏகமாய்ப் பலவாய்ச் சிவபோகமாய்த் தெளிவாய்ச்சிவம்
ஈதெனாக்குரு வார்த்தையை ...... உணராதே
ஏழு பார்க்கும் வியாக்கிரன் யானெனாப் பரிதேர்க்கரி
ஏறு மாப்பிறுமாப்புடன் அரசாகி
தோகைமார்க்கொரு காற்றொலையாத வேட்கையினாற்கெடு
சோர்வினாற் கொடிதாக்கையை ...... இழவாமுன்
சோதி காட்ட வராச்சுத நாதனார்க்கருள் போற்றிய
தூரிதாப் பரமார்த்தம் ...... அதருள்வாயே
நாக மேற்றுயில்வார்க்கயனான பேர்க்கரியார்க்கொரு
ஞான வார்த்தையினாற் குரு ...... பரனாய
நாத நாட்டமுறாப்பல காலும் வேட்கையினாற்புகல்
நாவலோர்க்கருளாற் பதம் ...... அருள்வாழ்வே
வேக மேற்கொளராப்புடை தோகை மேற்கொடு வேற்கொடு
வீரமாக் குலையாக் குல ...... வரைசாய
மேலை நாட்டவர் பூக்கொடு வேல போற்றியெனாத் தொழ
வேலை கூப்பிட வீக்கிய ...... பெருமாளே
திருப்பாடல் 6:
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன ...... தனதானா
தோடு மென்குழையூடே போரிடு
வாணெடுங்கயல் போலே ஆருயிர்
சூறை கொண்டிடு வேல்போலேதொடர் ...... விழிமானார்
சூதகந்தனிலே மாலாயவர்
ஓதுமன்றறியாதே ஊழ்வினை
சூழும் வெந்துயராலே தானுயிர் ...... சுழலாதே
ஆடு வெம்பண காகோதாசன
மூறு கண்டிட மேல்வீழ் !தோகையி
லாரும் வண்குமரேசா ஆறிரு ...... புயவேளே
ஆரு நின்றருளாலே தாள்தொழ
ஆண்மை தந்தருள் வாழ்வே தாழ்வற
ஆதி தந்தவ நாயேன் வாழ்வுற ...... அருள்வாயே
ஓடு வெங்கதிரோடே சோமனும்
ஊழியண்டமும் லோகா லோகமும்
ஊருமந்தர நானா தேவரும் ...... அடிபேண
ஊழிடம்புயன் வேலாவாலய
மூடு தங்கிய !மாலாராதர
வோத வெண்திரை சூர்மார் பூடுற ...... விடும்வேலா
வேடு கொண்டுள வேடா வேடைய
வேழ வெம்புலி போலே வேடர்கள்
மேவு திண்புன மீதே மாதொடு ...... மிகமாலாய்
மேக மென்குழலாய்நீ கேளினி
வேறு தஞ்சமு நீயேயாமென
வேளை கொண்ட பிரானே வானவர் ...... பெருமாளே
திருப்பாடல் 7:
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன ...... தனதான
நாலிரண்டிதழாலே கோலிய
ஞாலமுண்டக மேலே தானிள
ஞாயிறென்றுறு கோலாகாலனும் ...... அதின்மேலே
ஞாலமுண்ட பிராணாதாரனும்
யோக மந்திர மூலாதாரனும்
நாடி நின்ற ப்ரபாவாகாரனு ...... நடுவாக
மேலிருந்த கிரீடா பீடமு(ம்)
நூலறிந்த மணீமா மாடமு(ம்)
மேதகும் ப்ரபை கோடா கோடியும் ...... இடமாக
வீசி நின்றுள தூபா தீப!வி
சால மண்டப மீதேயேறிய
வீர பண்டித வீராசாரிய ...... வினைதீராய்
ஆல கந்தரி மோடா மோடி!கு
மாரி பிங்கலை நானா தேசி!அ
மோகி மங்கலை லோகா லோகி ...... எவுயிர்பாலும்
ஆன சம்ப்ரமி மாதா மாதவி
ஆதி அம்பிகை ஞாதா !வானவ
ராட மன்றினிலாடா நாடிய ...... அபிராமி
கால சங்கரி சீலா சீலி!த்ரி
சூலி மந்த்ரச பாஷா பாஷணி
காள கண்டிக பாலீ மாலினி ...... கலியாணி
காம தந்திர லீலா லோகினி
வாம தந்திர நூலாய் வாள்!சிவ
காம சுந்தரி வாழ்வே தேவர்கள் ...... பெருமாளே
திருப்பாடல் 8:
தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன
தானன தந்தன தாத்தன ...... தனதான
போதிலிருந்து விடாச்சதுர் வேதமொழிந்தவனாற்!புளி
னாகம் உகந்தவனால் தெரிவரிதான
போதுயர் செந்தழலாப்பெரு வான நிறைந்தவிடாப்!புக
ழாளன் அருஞ்சிவ கீர்த்தியனெறி காண
ஆதரவின்பருள் மாக்குரு நாதனெனும்படி போற்றிட
ஆன பதங்களை நாக்கருதிடவேஎன்
ஆசையெணும்படி மேற்கவி பாடுமிதம்பல !பார்த்தடி
யேனும் அறிந்துனை ஏத்துவதொருநாளே
காதடரும்படி போய்ப்பல பூசலிடுங் கயலாற்கனி
வாயிதழின் சுவையாற்பயில் ...... குறமாதின்
காரடருங் குழலாற் கிரியான தனங்களினாற் கலை
மேவு மருங்கதனாற் செறி ...... குழையோலை
சாதனம் என்றுரையாப் பரிதாபமெனும் படி வாய்த்!தடு
மாறி மனந்தளராத் தனி ...... திரிவோனே
சாகரம் அன்றெரியாக் கொடு சூரர்உகும்படியாத் திணி
வேலையுரம் பெறவோட்டிய ...... பெருமாளே
திருப்பாடல் 9:
தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன
தானன தந்தன தாத்தன ...... தனதான
வேடர் செழுந்தினை காத்திதண் மீதிலிருந்த பிராட்டி!வி
லோசன அம்புகளாற்செயல் ...... தடுமாறி
மேனி தளர்ந்துருகாப் பரிதாபமுடன் புனமேற்றிரு
வேளை புகுந்த பராக்ரமம் ...... அதுபாடி
நாடறியும்படி கூப்பிடு நாவலர் தங்களை யார்ப்!பதி
னாலுலகங்களும் ஏத்திய ...... இருதாளில்
நாறு கடம்பணியாப் பரிவோடு புரந்தபராக்ரம
நாடஅருந்தவம் வாய்ப்பதும் ...... ஒருநாளே
ஆடக மந்தர நீர்க்கசையாமல் உரம் பெற !நாட்டியொ
ராயிர வெம்பகுவாய்ப்பணி ...... கயிறாக
ஆழிகடைந்தமுதாக்கிஅநேகர் பெரும்பசி தீர்த்தருள்
ஆயனும் அன்றெயில் தீப்பட ...... அதிபார
வாடைநெடுங்கிரி கோட்டிய வீரனுமெம்பரம் ஆற்றிய
வாழ்வென வஞ்சக ராக்ஷதர் ...... குல மாள
வாசவன் வன்சிறை மீட்டவன் ஊருமடங்கலு(ம்) மீட்டவன்
வானுலகுங் குடியேற்றிய ...... பெருமாளே
திருப்பாடல் 10:
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
இலகி இருகுழை கிழிகயல் விழியினும்
இசையின் அசைதரு மொழியினு மருவமர்
இருள்செய் குழலினும் இடையினு நடையினும் ...... அநுராக
இனிமை தருமொரு இதழினு நகையினு(ம்)
இளைய ம்ருகமத தன குவடழகினும்
இயலு மயல்கொடு துணிவது பணிவது ...... தணியாதே
குலவி விரகெனும் அளறிடை முழுகிய
கொடிய நடலையனடமிட வருபிணி
குறுகியிடஎமன் இறுதியில் உயிரது ...... கொடுபோநாள்
குனகியழுபவர் அயர்பவர் முயல்பவர்
குதறு முதுபிணம் எடுமென ஒருபறை
குணலையிடஅடு சுடலையில் நடவுதல் ...... இனிதோதான்
மலையில் நிகரிலதொரு மலை தனையுடல்
மறுகி அலமர அறவுர முடுகிய
வலிய பெலமிக உடையவன் அடையவும் ...... அதிகாய
மவுலிஒருபதும் இருபது கரமுடன்
மடிய ஒருசரம் விடுபவபன் மதகரி
மடுவில் முறையிட உதவிய க்ருபைமுகில் ...... மதியாதே
அலகை உயிர்முலை அமுது செய்தருளிய
அதுலன் இருபதம் அதுதனில் எழுபுவி
அடைய அளவிட நெடுகிய அரிதிரு ...... மருகோனே
அவுணர் உடலமதலமர அலைகடல்
அறவு மறுகிட வட குவடனகிரி
அடைய இடிபொடி படஅயில் விடவல ...... பெருமாளே
திருப்பாடல் 11:
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
கடலை பயறொடு துவரை எளவல்பொரி
சுகியன் வடைகனல் கதலிஇனமுதொடு
கனியு முதுபல கனிவகை நலமிவை ...... இனிதாகக்
கடல்கொள் புவிமுதல் துளிர்வொடு வளமுற
அமுது துதிகையில் மனமது களிபெற
கருணையுடன்அளி திருவருள் மகிழ்வுற ...... நெடிதான
குடகு வயிறினில் அடைவிடு மதகரி
பிறகு வருமொரு முருக சண்முகவென
குவிய இருகர மலர்விழி புனலொடு ...... பணியாமற்
கொடிய நெடியன அதிவினை துயர்கொடு
வறுமை சிறுமையின் அலைவுடன் அரிவையர்
குழியில் முழுகியும் அழுகியும் உழல்வகை ...... ஒழியாதோ
நெடிய கடலினில் முடுகியெ வரமுறு
மறலி வெருவுற ரவிமதி பயமுற
நிலமு நெறுநெறு நெறுவென வருமொரு ...... கொடிதான
நிசிசர் கொடுமுடி சடசட சடவென
பகர கிரிமுடி கிடுகிடு கிடுவென
நிகரில் அயில்வெயில் எழுபசுமைய நிறம் ......உளதான
நடன மிடுபரி துரகத மயிலது
முடுகி கடுமையில் உலகதை வலம்வரு
நளின பதவர நதிகுமு குமுவென ...... முநிவோரும்
நறிய மலர்கொடு ஹரஹர ஹரவென
அமரர் சிறைகெட நறைகமழ் மலர்மிசை
நணியெ சரவண மதில்வளர் அழகிய ...... பெருமாளே
திருப்பாடல் 12:
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
கமல குமிளித முலைமிசை துகிலிடு
விகட கெருவிகள் அசடிகள் கபடிகள்
கலகம் இடுவிழி வலைகொடு தழுவிகள் ...... இளைஞோர்கள்
கனலில் இடுமெழுகெனநகை அருளிகள்
அநெக விதமொடு தனியென நடவிகள்
கமரில் விழுகிடு கெடுவிகள் திருடிகள் ...... தமைநாடி
அமுத மொழிகொடு தவநிலை அருளிய
பெரிய குணதரர் உரைசெய்த மொழிவகை
அடைவு நடைபடி பயிலவு முயலவும் ...... அறியாத
அசடன் அறிவிலி இழிகுலன் இவனென
இனமு மனிதருள் அனைவரும் உரைசெய
அடியன் இதுபட அரிதினி ஒருபொருள் ...... அருள்வாயே
திமித திமிதிமி டமடம டமவென
சிகர கரதல டமருகம் அடிபட
தெனன தெனதென தெனவென நடைபட ...... முநிவோர்கள்
சிவமில் உருகியும் அரகர எனஅதி
பரத பரிபுர மலரடி தொழ!அநு
தினமு நடமிடுபவரிடம் உறைபவள் ...... தருசேயே
குமர சரவண பவதிறல் உதவிய
தரும நிகரொடு புலமையும் அழகிய
குழக குருபரன் எனவொரு மயில்மிசை ...... வருவோனே
குறவரிடுதினை வனமிசை இதணிடை
மலையும் அரையொடு பசலைகொள் வளர்முலை
குலவு குறமகள் அழகொடு தழுவிய ...... பெருமாளே
திருப்பாடல் 13:
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
தசையும் உதிரமு நிணமொடு செருமிய
கரும கிருமிகள் ஒழுகிய பழகிய
சடல உடல்கடை சுடலையில் இடுசிறு ...... குடில்பேணுஞ்
சகல கருமிகள் சருவிய சமயிகள்
சரியை கிரியைகள் தவமெனும் அவர்சிலர்
சவலை அறிவினர் நெறியினை விடஇனி ...... !அடியேனுக்
கிசைய இதுபொருளென அறிவுறவொரு
வசனமுறஇரு வினையற மலமற
இரவு பகலற எனதற நினதற ...... அநுபூதி
இனிமை தருமொரு தனிமையை மறைகளின்
இறுதி அறுதியிடவரிய பெறுதியை
இருமை ஒருமையில் பெருமையை வெளிபட ...... மொழிவாயே
அசல குலபதி தருமொரு திருமகள்
அமலை விமலைகள் எழுவரும் வழிபட
அருளி அருணையில் உறைதரும் இறையவள்..... அபிராமி
அநகை அநுபவை அநுதயை அபிநவை
அதல முதலெழு தலமிவை முறைமுறை
அடைய அருளிய பழையவள் அருளிய ...... சிறியோனே
வசுவ பசுபதி மகிழ்தர ஒருமொழி
மவுனம் அருளிய மகிமையும் இமையவர்
மரபில் வனிதையும் வனசரர் புதல்வியும் ...... வடிவேலும்
மயிலும் இயலறி புலமையும் உபநிட
மதுர கவிதையும் விதரண கருணையும்
வடிவும் இளமையும் வளமையும் அழகிய ...... பெருமாளே
திருப்பாடல் 14:
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
நெடிய வடகுவடிடியவும் எழுகிரி
நெறுநெறென நெரியவு முது பணிபதி
நிபிட முடிகிழியவு நிலம் அதிரவும் ...... விளையாடும்
நிகரில் கலபியும் ரவியுமிழ் துவசமும்
நினது கருணையும் உறைதரு பெருமையும்
நிறமும் இளமையும் வளமையும் இருசரணமும்நீப
முடியும் அபிநவ வனசரர் கொடியிடை
தளர வளர்வன ம்ருகமத பரிமள
முகுள புளகித தனகிரி தழுவிய ...... திரள்தோளும்
மொகுமொகென மது கரமுரல் குரவணி
முருகன் அறுமுகனென வருவனபெயர்
முழுதும் இயல்கொடு பழுதற மொழிவதும் ...... ஒருநாளே
கொடிய படுகொலை நிசிசரர்உரமொடு
குமுகுமென விசையுடன்இசை பெறமிகு
குருதி நதிவித சதியொடு குதிகொள ...... விதியோடக்
குமுறு கடல்குடல் கிழிபட வடுமர
மொளுமொளென அடியொடலறி விழவுயர்
குருகு பெயரிய வரைதொளை படவிடு ...... சுடர்வேலா
இடியு முனைமலி குலிசமும் இலகிடு
கவள தவளவிகட தட கனகட
இபமும் இரணிய தரணியும் உடையதொர் ...... !தனியானைக்
கிறைவ குருபர சரவண வெகுமுக
ககன புனிதையும் வனிதையர் அறுவரும்
எனது மகவென உமைதரும் இமையவர் ...... பெருமாளே
திருப்பாடல் 15:
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
பகிர நினைவொரு தினையளவிலும்இலி
கருணையிலிஉனதருணையொடு தணியல்
பழநி மலைகுரு மலைபணி மலைபல ...... மலைபாடிப்
பரவு மிடறிலி படிறுகொடிடறு சொல்
பழகி அழகிலி குலமிலி நலமிலி
பதிமையிலி பவுஷதுமிலி மகிமையிலி குலாலன்
திகிரி வருமொரு செலவினில் எழுபது
செலவு வருமன பவுரி கொடலமரு
திருகன்உருகுதல் அழுகுதல் தொழுகுதல் ...... நினையாத
திமிரன் இயல்பிலி அருளிலி பொருளிலி
திருடன் மதியிலி கதியிலி விதியிலி
செயலில் உணர்விலி சிவபதம் அடைவதும் ......ஒருநாளே
மகர சலநிதி முறையிட நிசிசரன்
மகுடம் ஒருபதும் இருபது திரள்புய
வரையு மறவொரு கணைதெரி புயல்குரு ...... ந்ருபதூதன்
மடுவில் மதகரி முதலென உதவிய
வரதன் இருதிறல் மருதொடு பொருதவன்
மதலை குதலையின் மறைமொழி இகழ்இரணியனாகம்
உகிரினுதிகொடு வகிருமொர்அடலரி
திகிரி தரமர கதகிரி எரியுமிழ்
உரக சுடிகையில் நடநவில் அரிதிரு ...... மருகோனே
உருகும் அடியவர் இருவினை இருள்பொரும்
உதய தினகர இமகரன் வலம்வரும்
உலக முழுதொரு நொடியினில் வலம்வரு ...... பெருமாளே
திருப்பாடல் 16:
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
முருகு செறிகுழல் அவிழ்தர முகமதி
முடிய வெயர்வர முதுதிரை அமுதன
மொழிகள் பதறிட வளைகல கலவென ...... அணைபோக
முலையின் மிசையிடு வடமுடியறஇடை
முறியுமெனஇரு பரிபுர மலறிட
முகுள அலரிள நிலவெழ இலவிதழ் ...... பருகா!நின்
றுருகி உளமுடல் உடலொடு செருகிட
உயிரும் எனதுயிர் எனமிக உறவு!செய்
துதவு மடமகளிர்களொடும் அமளியில் ......அநுராக
உததி அதனிடை விழுகினும் எழுகினும்
உழலுகினும்உனதடியிணை எனதுயிர்
உதவி எனவுனை நினைவது மொழிவது ...... மறவேனே
எருவையொடுகொடி கெருடனும் வெளி!சிறி
திடமும் இலையென உலவிட அலகையின்
இனமும் நிணமுண எழுகுறள்களும் இயலிசைபாட
இகலி முதுகளம் இனமிசையொடுதனி
இரண பயிரவி பதயுக மிகுநடம்
இடவு மிகவெதிர் எதிரெதிர் ஒருதனு ...... இருகாலும்
வரிசை அதனுடன் வளைதர ஒருபது
மகுடம் இருபது புயமுடன் மடிபட
வலியின் ஒருகணை விடுகர முதலரி ...... நெடுமாயன்
மருக குருபர சரவண மதில்வரு
மகிப சுரபதி பதிபெற அவுணர்கள்
மடிய இயல்கொளு மயில்மிசை வரவல ...... பெருமாளே
திருப்பாடல் 17:
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன ...... தனதான
இலகு வேலெனும் இருவினை விழிகளும்
எழுதொணாதெனும் இருதன கிரிகளும்
இசையினால்வசை பொசிதரு மொழிகளும் ...... எதிர்வே!கொண்
டெதிரிலாஅதி பலமுடை இளைஞர்என்
இனிய மாவினை இருளெனும் வலைகொடு
இடைவிடாதெறு நடுவனும் எனவளை ...... மடவார்தம்
கலவி மால்கொடு கலைகளும் அறிவொடு
கருதொணாதென முனிவுற மருள்கொடு
கரையிலாவிதி எனுமொரு கடலிடை ...... கவிழாதே
கருணை வானவர் தொழுதெழு மயிலுறை
குமர கானவர் சிறுமியொடுருகிய
கமல தாளிணை கனவிலு(ம்) நினைவுற ...... அருள்தாராய்
பலகையோடொரு பதுசிரம் அறஎறி
பகழியான் அரவணைமிசை துயில்தரு
பரமன் மால்படி அளவிடும் அரிதிரு ...... மருகோனே
பழுதிலாமனம் உடையவர் மலர்கொடு
பரவ மால்விடை மிசைஉறைபவரொடு
பரம ஞானமும் இதுவென உரைசெய்த ...... பெரியோனே
அலகை காளிகள் நடமிட அலைகடல்
அதனில் நீள்குடல் நிணமலை பிணமலை
அசுரர் மார்பகம் அளறது படவிடும் ...... அயில்வேலா
அரிய பாவலர் உரைசெய அருள்புரி
முருக ஆறிரு புயஇயல்இசையுடன்
அழகும் ஆண்மையும் இலகிய சரவண ...... பெருமாளே
திருப்பாடல் 18:
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன ...... தனதான
முருகுலாவிய குழலினு நிழலினும்
அருவமாகிய இடையினு நடையினு(ம்)
முளரி போலுநல் விழியினு மொழியினு(ம்) ...... மடமாதர்
முனிவிலாநகை வலையினு நிலையினும்
இறுக வாரிடு மலையெனு முலையினு(ம்)
முடிவிலாததொர் கொடுவிட மடுவித ...... மயலாகி
நரகிலேவிழும் அவலனை அசடனை
வழிபடாதவொர் திருடனை மருடனை
நலமிலாஅக கபடனை விகடனை ...... வினையேனை
நடுவிலாதன படிறுகொள் இடறுசொல்
அதனில் மூழ்கிய மறவனை இறவனை
நளினமார் பதம் அதுபெற ஒருவழி ...... அருள்வாயே
வரியராவினின் முடிமிசை நடமிடு
பரத மாயவன் எழுபுவி அளவிடு
வரதன் மாதவன் இரணியன் உடலிரு ...... பிளவாக
வகிரு மாலரி திகிரியன் அலையெறி
தமர வாரிதி முறையிட நிசிசரன்
மகுடமானவை ஒருபதும் விழவொரு ...... கணையேவுங்
கரிய மேனியன் மருதொடு பொருதவன்
இனிய பாவலன் உரையினில் ஒழுகிய
கடவுள் வேயிசை கொடுநிரை பரவிடும் ...... அபிராமன்
கருணை நாரண நரபதி சுரபதி
மருக கானகம் அதனிடை உறைதரு
கரிய வேடுவர் சிறுமியொடுருகிய ...... பெருமாளே
திருப்பாடல் 19:
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன ...... தனதான
அரிசன பரிசஅலங்க்ருதாம்ருத
கலசமு(ம்) மதனுயர் அம்பொன் !மாமுடி
யதுமென இளைஞர்கள் நெஞ்சும் ஆவியும் ...... ஒருகோடி
அடைபடு குட யுகளங்களாமென
ம்ருகமத களபம் அணிந்த சீதள
அபிநவ கனதன மங்கைமாருடன் ...... விளையாடி
இரவொடு பகலொழிவின்றி மால்தரும்
அலைகடல் அளறுபடிந்து !வாயமு
தினிதென அருளஅருந்தி ஆர்வமொடிதமாகி
இருவரு மருவிஅணைந்து பாழ்படும்
அருவினை அறவு மறந்துனீள்தரும்
இணைமலரடிகள் நினைந்து வாழ்வதும் ......ஒருநாளே
சுரர்குல பதிவிதி விண்டு !தோலுரி
யுடைபுனை இருடிகள் அண்டரானவர்
துதிசெய எதிர்பொர வந்த தானவர் ......அடிமாள
தொலைவறும் அலகை இனங்களானவை
நடமிட நிணமலை துன்றவேஅதில்
துவரிது புளியிது தொய்ந்த தீதிது ...... இதுவீணால்
பருகுதல் அரியதுகந்ததீதிது
உளதென குறளிகள் தின்று மேதகு
பசிகெட ஒருதனி வென்ற சேவக ...... மயில்வீரா
பகிரதி சிறுவ விலங்கல் ஊடுறு
குறமகள் கொழுந படர்ந்து மேலெழு
பருவரை உருவ எறிந்த வேல்வல ...... பெருமாளே
திருப்பாடல் 20:
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன ...... தந்ததான
உரைதரு பரசமயங்கள் !ஓதுவ
துருவென அருவென ஒன்றிலாததொர்
ஒளியென வெளியென உம்பராமென ...... இம்பரா!நின்
றுலகுகள் நிலைபெறு தம்பமாமென
உரைசெய அதுபொருள் கண்டு !மோனமொ
டுணர்வுற உணர்வொடிருந்த நாளும் ......அழிந்திடாதே
பரகதி பெறுவதொழிந்திடார்வன
பரிசன தெரிசன கந்த ஓசைகள்
பலநல விதமுள துன்பமாகி ...... மயங்கிடாதே
பரிபுர பதமுள வஞ்ச மாதர்கள்
பலபல விதமுள துன்ப சாகர
படுகுழியிடைவிழு பஞ்ச பாதகன் ...... என்றுதீர்வேன்
அரகர சிவசுத கந்தனே!நின
தபயம் அபயமென நின்று வானவர்
அலறிட ஒழிகினி அஞ்சிடாதென ...... அஞ்சல்கூறி
அடல்தரு நிருதர நந்த வாகினி
யமபுரமடைய அடர்ந்து போர்புரி
அசுரனதகலம் இடந்து போக வகிர்ந்தவேகம்
விரிகடல் துகளெழ வென்ற வேலவ
மரகத கலப சிகண்டி வாகன
விரகுள சரவண முந்தை நான்மறை ...... அந்தமோதும்
விரைதரு மலரிலிருந்த வேதனும்
விடஅரவமளி துயின்ற மாயனும்
விமலைகொள் சடையரனும் பராவிய ...... தம்பிரானே
திருப்பாடல் 21:
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான
இமகிரி மத்திற் புயங்க வெம்பணி
கயிறது சுற்றித் தரங்க ஒண்கடல்
இமையவர் பற்றிக் கடைந்த அன்றெழு ...... நஞ்சுபோலே
இருகுழை தத்திப் புரண்டு வந்தொரு
குமிழையும் எற்றிக் கரும்பெனுஞ் சிலை
ரதிபதி வெற்றிச் சரங்கள் அஞ்சையும் ...... விஞ்சிநீடு
சமர மிகுத்துப் பரந்த செங்கயல்
விழியினில் மெத்தத் ததும்பி விஞ்சிய
தமனிய வெற்புக்கிசைந்த வம்பணி ...... கொங்கைமீதே
தனிமனம் வைத்துத் தளர்ந்து வண்டமர்
குழலியர் பொய்க்குட் கலங்கல் இன்றியெ
சததளம் வைத்துச் சிவந்த நின்கழல் ...... தந்திடாயோ
அமரர் துதிக்கப் புரந்தரன் தொழ
எழுபது வர்க்கக் குரங்கு கொண்டெறி
அலையை அடைத்துக் கடந்து சென்றெதிர் ...... முந்துபோரில்
அசுரர்முதற் கொற்றவன் பெருந்திறல்
இருபது கொற்றப் புயங்கள் சிந்திட
அழகிய கொத்துச் சிரங்கள் ஒன்பதும் ...... ஒன்றுமாளக்
கமல மலர்க்கைச் சரந் துரந்தவர்
மருமக மட்டுக்க கொன்றையந் தொடை
கறையற ஒப்பற்ற தும்பைஅம்புலி ...... கங்கைசூடுங்
கடவுளர் பக்கத்தணங்கு தந்தருள்
குமரகுறத் தத்தைபின் திரிந்தவள்
கடின தனத்திற் கலந்திலங்கிய ...... தம்பிரானே
திருப்பாடல் 22:
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான
முகமு மினுக்கிப் பெருங்கருங் குழல்
முகிலை அவிழ்த்துச் செருந்தி சண்பக
முடியநிறைத்துத் ததும்பி வந்தடி ...... முன்பினாக
முலையை அசைத்துத் திருந்த முன்தரி
கலையை நெகிழ்த்துப் புனைந்து வஞ்சக
முறுவல் விளைத்துத் துணிந்து தந்தெரு ...... முன்றிலூடே
மகளிர் வரப்பிற் சிறந்த பந்தியின்
மதனனு நிற்கக் கொளுந்து வெண்பிறை
வடவையெறிக்கத் திரண்டு பண்டனை ...... வண்டுபாட
மலயநிலத்துப் பிறந்த தென்றலு(ம்)
நிலைகுலையத் தொட்டுடம்பு புண்செய
மயலைஅளிக்கக் குழைந்து சிந்தை .....மலங்கலாமோ
பகலவன் மட்கப் புகுந்து கந்தர
ககனமுகட்டைப் பிளந்து மந்தர
பருவரை ஒக்கச் சுழன்று பின்பு ...... பறந்துபோகப்
பணமணி பட்சத் துரங்கமுந் தனி
முடுகினடத்திக் கிழிந்து விந்தெழு
பரவை அரற்றப் ப்ரபஞ்ச நின்று ......பயந்துவாடக்
குகனென முக்கட் சயம்புவும் ப்ரிய
மிகஅசுரர்க்குக் குரம்பை வந்தரு
குறவமர் குத்திப் பொருங்கொடும்படை ...... வென்றவேளே
குழைசயை ஒப்பற்றிருந்த சங்கரி
கவுரியெடுத்துப் பரிந்து கொங்கையில்
குணஅமுதுய்க்கத் தெளிந்து கொண்டருள் ...... தம்பிரானே
திருப்பாடல் 23:
தனதன தனதன தனதன தனதன
தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான
படிதனில் உறவெனும் அனைவர்கள் பரிவொடு
பக்கத்திற்பல கத்திட்டுத்துயர் ...... கொண்டுபாவப்
பணைமர விறகிடை அழலிடை உடலது
பற்றக் கொட்டுகள் தட்டிச் சுட்டலை ...... ஒன்றியேகக்
கடிசமன் உயிர்தனை இருவிழி அனலது
கக்கச் சிக்கென முட்டிக் கட்டியுடன்றுபோமுன்
கதிதரு முருகனும் எனநினை நினைபவர்
கற்பிற் புக்கறிவொக்கக் கற்பது ...... தந்திடாயோ
வடகிரி தொளைபட அலைகடல் சுவறிட
மற்றுத் திக்கெனும் எட்டுத் திக்கிலும் ......வென்றிவாய
வலியுடன்எதிர்பொரும் அசுரர்கள் பொடிபட
மட்டித் திட்டுயர் கொக்கைக் குத்தி ......மலைந்தவீரா
அடர்சடை மிசைமதி அலைஜலம் அதுபுனை
அத்தர்க்குப்பொருள் கற்பித்துப்புகழ் ...... கொண்டவாழ்வே
அடியுக முடியினும் வடிவுடன் !எழுமவு
னத்திற் பற்றுறு நித்தச் சுத்தர்கள் ...... தம்பிரானே
திருப்பாடல் 24:
தனதன தனதன தனதன தனதன தனதன தனதன
தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான
விடமென அயிலென அடுவன நடுவன மிளிர்வன சுழல்விழி
வித்தைத்குப்பகர் ஒப்புச் சற்றிலை ...... என்றுபேசும்
விரகுடை வனிதையர் அணைமிசை உருகிய வெகுமுக கலவியில்
இச்சைப் பட்டுயிர் தட்டுப் பட்டு ......உழன்றுவாடும்
நடலையில் வழிமிக அழிபடு தமியனை நமன்விடு திரளது
கட்டிச் சிக்கென ஒத்திக் கைக்கொடு ...... கொண்டுபோயே
நரகதில் விடுமெனும் அளவினில் இலகிய நறைகமழ் திருவடி
முத்திக்குட்படு நித்யத் தத்துவம் ...... வந்திடாதோ
இடியென அதிர்குரல் நிசிசரர் குலபதி இருபது திரள்புய
மற்றுப் பொற்றலை தத்தக் கொத்தொடு ...... நஞ்சுவாளி
எரியெழ முடுகிய சிலையினர் அழகொழுகியல்சிறு வினைமகள்
பச்சைப் பட்சி தனைக்கைப் பற்றிடும் .....இந்த்ரலோகா
வடவரை இடிபட அலைகடல் சுவறிட மகவரை பொடிபட
மைக்கட் பெற்றிடும் உக்ரக் கட்செவி ...... அஞ்சசூரன்
மணிமுடி சிதறிட அலகைகள் பலவுடன் வயிரவர் நடமிட
முட்டிப் பொட்டெழ வெட்டிக் குத்திய ...... தம்பிரானே
திருப்பாடல் 25:
தனதனன தான தந்த தந்த
தனதனன தான தந்த தந்த
தனதனன தான தந்த தந்த ...... தனதான
குகையில்நவ நாதருஞ் சிறந்த
முகைவனச சாதனுந் தயங்கு
குணமும் அசுரேசருந் தரங்க ...... முரல்வேதக்
குரகத புராரியும் ப்ரசண்ட
மரகத முராரியுஞ் செயங்கொள்
குலிசகை வலாரியுங் கொடுங்கண் .....அறநூலும்
அகலிய புராணமும் ப்ரபஞ்ச
சகலகலை நூல்களும் பரந்த
அருமறைஅநேகமுங் குவிந்தும் ...... அறியாத
அறிவும் அறியாமையுங் கடந்த
அறிவுதிரு மேனி என்றுணர்ந்துன்
அருண சரணார விந்தமென்று ...... அடைவேனோ
பகைகொள் துரியோதனன் பிறந்து
படைபொருத பாரதந் தெரிந்து
பரியதொரு கோடு கொண்டு சண்ட ...... வரைமீதே
பழுதற வியாசன் அன்றியம்ப
எழுதியவிநாயகன் சிவந்த
பவளமத யானை பின்பு வந்த ...... முருகோனே
மிகுதமர சாகரங் கலங்க
எழுசிகர பூதரங் குலுங்க
விபரித நிசாசரன் தியங்க ...... அமராடி
விபுதர்குல வேழ மங்கை துங்க
பரிமள படீர கும்ப விம்ப
ம்ருகமத பயோதரம் புணர்ந்த ...... பெருமாளே
திருப்பாடல் 26:
தனதனன தான தந்த தந்த
தனதனன தான தந்த தந்த
தனதனன தான தந்த தந்த ...... தனதான
மழையளக பாரமுங் குலைந்து
வரிபரவு நீலமுஞ் சிவந்து
மதிமுகமும் வேர்வு வந்தரும்ப ...... அணைமீதே
மகுடதன பாரமுங் குலுங்க
மணி கலைகளேறவுந் திரைந்து
வசமழியவே புணர்ந்தணைந்து ...... மகிழ்வாகிக்
குழைய இதழ்ஊறலுண்டழுந்தி
குருகுமொழி வாய்மலர்ந்து கொஞ்ச
குமுதபதி போக பொங்கு கங்கை ...... குதிபாயக்
குழியிலில் இழியா விதங்களொங்கு
மதனகலை ஆகமங்கள் விஞ்சி
குமரியர்களோடுழன்று நைந்து ...... விடலாமோ
எழுபடைகள் சூர வஞ்சர் அஞ்ச
இரணகளமாக அன்று சென்று
எழுசிகர மாநிலங் குலுங்க ...... விசையூடே
எழுகடலு மேருவுங் கலங்க
விழிபடர்வு தோகை கொண்ட துங்க
இயல்மயிலின் மாறு கொண்டமர்ந்த ...... வடிவேலா
பொழுதளவு நீடு குன்று சென்று
குறவர்மகள் காலினும் பணிந்து
புளிஞர் அறியாமலுந் திரிந்து ...... புனமீதே
புதிய மடலேறவுந் துணிந்த
அரிய பரிதாபமுந் தணிந்து
புளகித பயோதரம் புணர்ந்த ...... பெருமாளே
திருப்பாடல் 27:
தத்தானத் தாத்தத் தனதன
தத்தானத் தாத்தத் தனதன
தத்தானத் தாத்தத் தனதன ...... தனதான
கற்பார்மெய்ப் பாட்டைத் தவறிய
சொற்பாகைக் காட்டிப் புழுகொடு
கஸ்தூரிச் சேற்றைத் தடவிய ...... இளநீரைக்
கட்சேலைக் காட்டிக் !குழல்அழ
கைத்தோளைக் காட்டித் தரகொடு
கைக்காசைக் கேட்டுத் தெருவினில் ...... மயில்போலே
நிற்பாருக்காட்பட்டுயரிய
வித்தாரப் பூக்கட்டிலின் மிசை
நெட்டூரக் கூட்டத்தநவரதமு மாயும்
நெட்டாசைப் பாட்டைத் துரிசற
விட்டேறிப் போய்ப் பத்தியருடன்
நெக்கோதிப் போற்றிக் கழலிணை ...... பணிவேனோ
வெற்பால் மத்தாக்கிக் கடல்கடை
மைச்சாவிக் காக்கைக் கடவுளை
விட்டார்முக் கோட்டைக்கொரு கிரி ...... இருகாலும்
விற்போலக் கோட்டிப் பிறகொரு
சற்றேபற் காட்டித் !தழலெழு
வித்தார் தத்வார்த்தக் குருபரன் ...... எனவோதும்
பொற்பா பற்றாக்கைப் புதுமலர்
பெட்டேயப் பாற்பட்டுயரிய
பொற்றோளிற் சேர்த்துக் கருணைசெய் ...... எனமாலாய்ப்
புட்கானத்தோச்சிக் கிரிமிசை
பச்சேனற் காத்துத் திரிதரு
பொற்பூவைப் பேச்சுக்குருகிய ...... பெருமாளே
திருப்பாடல் 28:
தத்தானத் தாத்தத் தனதன
தத்தானத் தாத்தத் தனதன
தத்தானத் தாத்தத் தனதன ...... தனதான
சிற்றாயக் கூட்டத் தெரிவையர்
வித்தாரச் சூழ்ச்சிக் கயல்விழி
சற்றேறப் பார்த்துச் சிலபணி ...... விடையேவிச்
சிற்றாபத்தாக்கைப் பொருள்கொடு
பித்தேறிக் கூப்பிட்டவர் !பரி
செட்டாமல் தூர்த்தத் தலைபடு ...... சிறுகாலை
உற்றார் பெற்றார்க்குப் பெரிதொரு
பற்றாயப் பூட்டுக் கயிறு!கொ
டுச்சாயத்தாக்கைத் தொழிலொடு ...... தடுமாறி
உக்காரித் தேக்கற்றுயிர் !நழு
விக்காயத் தீப்பட்டெரி!உட
லுக்கேன்மெய்க் காட்டைத் தவிர்வதும் ......ஒருநாளே
வற்றா முற்றாப் பச்சிள!முலை
யிற்பால்கைப் பார்த்துத் தருமொரு
மைக்காமக் கோட்டக் குலமயில் ...... தருபாலா
மத்தோசைப் போக்கில் தயிருறி
நெய்பாலுக்காய்ச்சிக்கிரு பதம்
வைத்தாடிக் காட்டிப் பருகரி ...... மருகோனே
கற்றாவிற் காட்டிக் கரைதுறை
நற்றாயிற் காட்டிப் புகழ்கலை
கற்றார்சொற் கேட்கத் தனிவழி ...... வருவோனே
கைச்சூலக் கூற்றைக் கணை!மத
னைத்தூள் பட்டார்ப்பக் கனல்பொழி
கர்த்தாவுக்கேற்கப் பொருளருள் ...... பெருமாளே
திருப்பாடல் 29:
தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான
இருட்குழலைக் குலைத்து!முடித்
தெழிற்கலையைத் !திருத்தியுடுத்
திணைக்கயலைப் புரட்டி விழித்ததிபார
இழைக்களபப் பொருப்பணி!கச்
செடுத்து மறைத்தழைத்து வளைத்
திருத்தியகப் படுத்தி நகைத்துறவாடி
பொருட்குமிகத் துதித்திளகிப்
புலப்படு சித்திரக் கரணப்
புணர்ச்சி விளைத்துருக்கு பரத்தையர் மோகப்
புழுத்தொளையில் திளைத்ததனைப்
பொறுத்தருளிச் சடக்கெனஅப்
புறத்தில் அழைத்திருத்தி அளித்திடுவாயே
உருத்திரரைப் !பழித்துலகுக்
குகக்கடை அப்பெனக் !ககனத்
துடுத் தகரப் படுத்துகிரித் ...... தலமேழும்
உடுத்தபொலப் பொருப்பு!வெடித்
தொலிப்ப மருத்திளைப்ப !நெருப்
பொளிக்க இருப்பிடத்தைவிடச் ...... சுரரோடித்
திரைக்கடல் உட்படச் சுழலச்
செகத்ரையம் இப்படிக் கலையச்
சிரித்தெதிர் கொக்கரித்து மலைத்திடு பாவி
செருக்கழியத் தெழித்துதிரத்
திரைக்கடலிற் சுழித்தலையில்
திளைத்தஅயிற் கரக்குமரப் ...... பெருமாளே
திருப்பாடல் 30:
தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான
வினைத் திரளுக்கிருப்பென !வித்
தகப் படவிற் !சலப்பிலமிட்
டிசைக்குமிடற் குடிற்கிடை புக்கிடுமாய
விளைப்பகுதிப் !பயப்பளவுற்
றமைத்ததெனக் கருத்தமைவிற்
சகப்பொருள் மெய்க்குறப் பருகக் ...... கருதாதே
எனக்கெதிர் ஒப்பிசைப்பவர்!எத்
தலத்துளர்எச் சமர்த்தரெனப்
புறத்துரை இட்டிகழ்ச்சியினுற்றிளையாதுன்
எழிற்கமலத் திணைக்கழலைத்
தமிழ்ச் சுவையிட்டிறப்பற !எய்த்
திடக்கருணைத் திறத்தெனை வைத்தருள்வாயே
சினத்தை மிகுத்தனைத்துலகத்
திசைக்கருதிக் கடற்பரவித்
திடத்தொடதிர்த்தெதிர்த்திடல் உற்றிடு சூரன்
சிரத்துடன்மற் !புயத்தகலத்
தினிற் குருதிக் கடற்பெருகச்
சிறப்புமிகத் திறத்தொடு கைத்திடும்வேலா
கனத்த மருப்பினக்கரி !நற்
கலைத்திரள் கற்புடைக் கிளியுட்
கருத்துருகத் தினைக்குளிசைத் ...... திசைபாடி
கனிக்குதலைச் சிறுக்குயிலைக்
கதித்தமறக் குலப்பதியிற்
களிப்பொடுகைப் பிடித்தமணப் ...... பெருமாளே
திருப்பாடல் 31:
தத்த தனதனன தானத் தான
தத்த தனதனன தானத் தான
தத்த தனதனன தானத் தானத் ...... தனதான
முத்து மணிபணிகள் ஆரத்தாலு(ம்)
மொய்த்த மலைமுலை கொடே வித்தார
முற்றும் இளைஞருயிர் மோகித்தேகப் ...... பொருமாதர்
முற்று மதிமுகமும் வானிற் காரும்
ஒத்த குழல்விழியும் வேய்நற்றோளு(ம்)
முத்தி தகுமெனும் வினாவிற் பாயற்கிடை மூழ்கிப்
புத்தி கரவடம் உலாவிச் சால
மெத்த மிகஅறிவிலாரைத் தேறி
பொற்கை புகழ்பெரியராகப் பாடிப் ...... புவியூடே
பொய்க்குள் ஒழுகிஅயராமற் போது
மொய்த்த கமலஇரு தாளைப் பூண
பொற்பும் இயல்புதுமையாகப் பாடப் ...... புகல்வாயே
பத்து முடியும் அதனோடத்தோளிர்
பத்தும் இறையவொரு வாளிக்கேசெய்
பச்சை முகில்சதுர வேதத்தோடுற்றயனாரும்
பற்ற அரியநடமாடத் தாளில்
பத்தி மிகஇனிய ஞானப் பாடல்
பற்று மரபுநிலையாகப் பாடித் ...... திரிவோனே
மெத்த அலைகடலும் வாய்விட்டோட
வெற்றி மயில்மிசை கொடேகிச் சூரர்
மெய்க்குளுறஇலகு வேலைப் போகைக்கெறிவோனே
வெற்றி மிகுசிலையினால் மிக்கோர்தம்
வித்து விளைபுனமும் வேய்முத்தீனும்
வெற்பும் உறையு மயில் வேளைக் காரப் ...... பெருமாளே
திருப்பாடல் 32:
தத்த தனதனன தானத் தான
தத்த தனதனன தானத் தான
தத்த தனதனன தானத் தானத் ...... தனதான
விட்ட புழுகுபனி நீர்கத்தூரி
மொய்த்த பரிமள படீரச் சேறு
மிக்க முலையைவிலை கூறிக் காசுக்களவே தான்
மெத்த விரியுமலர் சேர்கற்பூர
மெத்தை மிசைகலவி ஆசைப் பாடு
விற்கு மகளிர் சுருளோலைக் கோலக் ...... குழையோடே
முட்டி இலகுகுமிழ் தாவிக் காமன்
விட்ட பகழிதனை ஓடிச் சாடி
மொய்க்கும் அளியதனை வேலைச் சேலைக் ...... கயல்மீனை
முக்கி யமனையட மீறிச் சீறு
மைக்கண் விழிவலையிலே பட்டோடி
முட்ட வினையன் மருளாகிப் போகக் ...... கடவேனோ
செட்டி எனுமொர்திரு நாமக்கார
வெற்றி அயில்தொடு ப்ரதாபக் கார
திக்கை உலகைவலமாகப் போகிக் ...... கணமீளுஞ்
சித்ர குலகலப வாசிக் கார
தத்து மகரசல கோபக் கார
செச்சை புனையு மணவாளக் கோலத் ...... திருமார்பா
துட்ட நிருதர்பதி சூறைக்கார
செப்பும் அமரர்பதி காவற்கார
துப்பு முகபட கபோலத் தானக் ...... களிறூரும்
சொர்க்க கனதள விநோதக்கார
முத்தி விதரண உதாரக்கார
சுத்த மறவர்மகள் வேளைக்காரப் ...... பெருமாளே
திருப்பாடல் 33:
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
ஏடுமலருற்ற ஆடல்மதன் !உய்க்கு
மேஅதுபழிக்கும் ...... விழியாலே
ஏதையும் அழிக்கு மாதர் !தமயக்கி
லேமருவி மெத்த ...... மருளாகி
நாடுநகர் மிக்க வீடுதன மக்கள்
நாரியர்கள் சுற்றம் ...... இவைபேணா
ஞானவுணர்வற்று நானெழு பிறப்பும்
நாடி நரகத்தில் ...... விழலாமோ
ஆடும்அரவத்தை ஓடியுடல் கொத்தி
ஆடுமொரு பச்சை ...... மயில்வீரா
ஆரணமுரைக்கு மோனகஇடத்தில்
ஆருமுய நிற்கு ...... முருகோனே
வேடுவர்புனத்தில் நீடும்இதணத்தில்
மேவியகுறத்தி ...... மணவாளா
மேலசுரர்இட்ட தேவர்சிறை வெட்டி
மீள விடுவித்த ...... பெருமாளே
திருப்பாடல் 34:
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
சீதமலம் வெப்பு வாதமிகு !பித்த
மானபிணி சுற்றி ...... உடலூடே
சேருமுயிர் தப்பி ஏகும்வண மிக்க
தீதுவிளைவிக்க ...... வருபோதில்
தாதையொடு மக்கள் நீதியொடு துக்க
சாகரம்அதற்குள் ...... அழியாமுன்
தாரணி தனக்குள் ஆரணமுரைத்த
தாள்தர நினைத்து ...... வரவேணும்
மாதர்மயலுற்று வாடவடிவுற்று
மாமயிலில் நித்தம் ...... வருவோனே
மாலும்அயன்ஒப்பிலாதபடி பற்றி
மாலுழலு மற்ற ...... மறையோர்முன்
வேதமொழி வித்தை ஓதியறிவித்த
நாதவிறல் மிக்க ...... இகல்வேலா
மேலசுரரிட்ட தேவர்சிறை வெட்டி
மீள விடுவித்த ...... பெருமாளே
திருப்பாடல் 35:
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
தோடுபொரு மைக்கணாட !வடிவுற்ற
தோர் தனமசைத்து ...... இளைஞோர்தம்
தோள்வலி மனத்து வாள்வலிஉழக்கு
தோகையர் மயக்கில் ...... உழலாதே
பாடலிசை மிக்க ஆடல்கொடு !பத்தி
யோடுநினை பத்தர் ...... பெருவாழ்வே
பாவவினையற்று நாமநினை புத்தி
பாரில் அருள்கைக்கு ...... வரவேணும்
ஆடல்அழகொக்க ஆடுமயிலெற்றி
ஆண்மையுடனிற்கு ...... முருகோனே
ஆதியரனுக்கு வேதமொழி முற்றி
ஆர்வம் விளைவித்த ...... அறிவோனே
வேடைமயலுற்று வேடர்மகளுக்கு
வேளையென நிற்கும் ...... விறல்வீரா
மேலசுரரிட்ட தேவர்சிறை வெட்டி
மீள விடுவித்த ...... பெருமாளே
திருப்பாடல் 36:
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
தோதக மிகுத்த பூதமருள் பக்க
சூலைவலி வெப்பு ...... மதநீர்தோய்
சூழ்பெரு வயிற்று நோயிருமல் குற்று
சோகைபல குட்டம் ...... அவைதீரா
வாதமொடு பித்த மூலமுடன் மற்று
மாயபிணி சற்றும் ...... அணுகாதே
வாடுமெனை முத்தி நீடிய பதத்தில்
வாழமிக வைத்து ...... அருள்வாயே
காதல் மிகவுற்று மாதினை விளைத்த
கானக குறத்தி ...... மணவாளா
காசினிஅனைத்தும் ஓடியளவிட்ட
கால்நெடிய பச்சை ...... மயில்வீரா
வேதமொழி மெத்த ஓதிவரு பத்தர்
வேதனை தவிர்க்கு ...... முருகோனே
மேலசுரர்இட்ட தேவர்சிறை வெட்டி
மீள விடுவித்த ...... பெருமாளே
திருப்பாடல் 37:
தான தான தானான தானத் ...... தனதான
காதி மோதி வாதாடு நூல் கற்றிடுவோருங்
காசு தேடி ஈயாமல் வாழப் ...... பெறுவோரும்
மாதுபாகர் வாழ்வே எனா நெக்குருகாரும்
மாறிலாத மாகாலனூர் புக்கலைவாரே
நாத ரூப மாநாதர் ஆகத்துறைவோனே
நாக லோகம் ஈரேழு பாருக்குரியோனே
தீதிலாத வேல்வீர சேவற் ...... கொடியோனே
தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே
திருப்பாடல் 38:
தான தான தானான தானத் ...... தனதான
கூறு மார வேள் ஆரவாரக் ...... கடலாலே
கோப மீது மாறாத கானக் ...... குயிலாலே
மாறு போலு மாதாவின் வார்மைப் ...... பகையாலே
மாது போத மாலாகி வாடத் ...... தகுமோதான்
ஏறு தோகை மீதேறி ஆலித்திடும்வீரா
ஏழு லோகம் வாழ்வான சேவற் ...... கொடியோனே
சீறு சூரர் நீறாக மோதிப் ...... பொரும்வேலா
தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே
திருப்பாடல் 39:
தான தான தானான தானத் ...... தனதான
பேரவா அறாவாய்மை பேசற்கறியாமே
பேதை மாதராரோடு கூடிப் ...... பிணிமேவா
ஆரவார மாறாத நூல்கற்றடி நாயேன்
ஆவி சாவியாகாமல் நீசற்றருள்வாயே
சூர சூர சூராதி சூரர்க்கெளிவாயா
தோகையா குமாரா கிராதக் ...... கொடிகேள்வா
தீர தீர தீராதி தீரப் ...... பெரியோனே
தேவ தேவ தேவாதி தேவப் ...... பெருமாளே
திருப்பாடல் 40:
தான தான தனத்தம் தான தான தனத்தம்
தான தான தனத்தம் ...... தனதான
காதிலோலை கிழிக்குங் காமபாண விழிக்குங்
கான யாழின் மொழிக்கும் ...... பொதுமாதர்
காணொணாத இடைக்கும் பூணுலாவு முலைக்குங்
காதில் நீடு குழைக்கும் ...... புதிதாய
கோதிலாத கருப்பஞ் சாறுபோல ருசிக்குங்
கோவை வாய்அமுதுக்குந் ...... தணியாமல்
கூருவேன்ஒருவர்க்குந் தேடொணாததொர்அர்த்தங்
கூடுமாறொரு சற்றுங் ...... கருதாயோ
பூதி பூஷணர் கற்பின் பேதை பாகர் துதிக்கும்
போத தேசிக சக்ரந் ...... தவறாதே
போக பூமி புரக்குந் த்யாக மோக குறப்பெண்
போத ஆதரவைக்கும் ...... புயவீரா
சோதிவேலை எடுத்தன்றோத வேலையில் நிற்குஞ்
சூத தாருவும் வெற்பும் ...... பொருகோவே
சூரர் சேனையனைத்துந் தூளியாக நடிக்குந்
தோகை வாசி நடத்தும் ...... பெருமாளே
திருப்பாடல் 41:
தான தான தனத்தம் தான தான தனத்தம்
தான தான தனத்தம் ...... தனதான
காருலாவு குழற்குங் கூரிதான விழிக்குங்
காதல் பேணு நுதற்குங் ...... கதிர்போலுங்
காவி சேர் பவளத்தின் கோவை வாய் இதழுக்குங்
காசு பூணு முலைக்குங் ...... கதிசேரா
நேரிதான இடைக்குஞ் சீதவார நகைக்கும்
நேரிலாத தொடைக்குஞ் ...... சதிபாடும்
நீதமான அடிக்கும் மாலுறாத படிக்குன்
நேயமோடு துதிக்கும் ...... படிபாராய்
பார மேரு வளைக்கும் பாணியார் சடையிற்செம்
பாதி சோமனெருக்கும் ...... புனைவார்தம்
பாலகா எனநித்தம் பாடு நாவலர்துக்கம்
பாவ நாசம் அறுத்தின் பதமீவாய்
சோரி வாரியிடச் சென்றேறியோடி அழற்கண்
சூல காளி நடிக்கும் ...... படிவேலாற்
சூரர் சேனை தனைக் கொன்றாரவார மிகுத்தெண்
தோகை வாசி நடத்தும் ...... பெருமாளே
திருப்பாடல் 42:
தானத்த தானத்த தானத்த தானத்த
தானத்த தானத்த ...... தனதான
தோடுற்ற காதொக்க நீடுற்ற போருற்ற
தோய்மைக் கணால்மிக்க ...... நுதலாலே
தோள்வெற்பினால் விற்கை வேளுக்கு மேன்மக்கள்
சோர்கைக்கு மால்விற்கு ...... மடவார்தம்
ஊடற்குளே புக்கு வாடிக்கலா மிக்க
ஓசைக்கு நேசித்து ...... உழலாதே
ஊர்பெற்ற தாய்சுற்றமாய் உற்ற தாள்பற்றி
ஓதற்கு நீசற்றும் ...... உணர்வாயே
வேடர்க்கு நீள்சொர்க்கம் வாழ்விக்கவோர் வெற்பின்
மீதுற்ற பேதைக்கொர் ...... மணவாளா
வேழத்தின் ஆபத்தை மீள்வித்த மாலொக்க
வேதத்திலே நிற்கும் ...... அயனாருந்
தேடற்கொணா நிற்கும் வேடத்தர் தாம்வைத்த
சேமத்தினாமத்தை ...... மொழிவோனே
தீதற்ற நீதிக்குளேய் பத்தி கூர்பத்தர்
சேவிக்க வாழ்வித்த ...... பெருமாளே
திருப்பாடல் 43:
தானத்த தானத்த தானத்த தானத்த
தானத்த தானத்த ...... தனதான
தோலத்தியால் அப்பினால் ஒப்பிலாதுற்ற
தோளுக்கை காலுற்ற ...... குடிலூடே
சோர்வற்று வாழ்வுற்ற கால்பற்றிஏகைக்கு
வேதித்த சூலத்தன் ...... அணுகாமுன்
கோலத்தை வேலைக்குளேவிட்ட சூர்!கொத்தொ
டேபட்டு வீழ்வித்த ...... கொலைவேலா
கோதற்ற பாதத்திலே பத்தி கூர்புத்தி
கூர்கைக்கு நீகொற்ற ...... அருள்தாராய்
ஆலத்தை ஞாலத்துளோர் திக்கு வானத்தர்
ஆவிக்கள் மாள்வித்து ...... மடியாதே
ஆலித்து மூலத்தொடே உட்கொள்!ஆதிக்கு
மாம் வித்தையாமத்தை ...... அருள்வோனே
சேலொத்த வேலொத்த நீலத்து மேலிட்ட
தோதக்கண் மானுக்கு ...... மணவாளா
தீதற்ற நீதிக்குளேய் பத்தி கூர்பத்தர்
சேவிக்க வாழ்வித்த ...... பெருமாளே
திருப்பாடல் 44:
தானந் தனதன தானந் தனதன
தானந் தனதன ...... தனதான
ஊனுந் தசையுடல் தானொன்பது வழி
ஊருங் கருவழி ...... ஒருகோடி
ஓதும் பலகலை கீதஞ் சகலமும்
ஓரும் படிஉனதருள்பாடி
நானுன் திருவடி பேணும் படியிரு
போதுங் கருணையில் ...... மறவாதுன்
நாமம் புகழ்பவர் பாதந் தொழஇனி
நாடும் படியருள் ...... புரிவாயே
கானுந் திகழ் கதிரோனுஞ் சசியொடு
காலங்களு நடை ...... உடையோனுங்
காருங் கடல்வரை நீருந்தரு !கயி
லாயன் கழல்தொழும் ...... இமையோரும்
வானிந்திரனெடு மாலும் பிரமனும்
வாழும் படிவிடும் ...... வடிவேலா
மாயம் பலபுரி சூரன் பொடிபட
வாள்கொண்டமர் செய்த ...... பெருமாளே
திருப்பாடல் 45:
தானந் தனதன தானந் தனதன
தானந் தனதன ...... தனதான
தீயும் பவனமு நீருந் தரணியும்
வானுஞ் செறிதரு ...... பசுபாசத்
தேகந் தனைநிலையே ஒன்றிருவினை
தீருந் திறல்வினை ...... அறியாதே
ஓயும் படியறு நூறும் பதின்உறழ்
நூறும் பதினிரு ...... பதுநூறும்
ஓடுஞ் சிறுவுயிர் மீளும் படிநல
யோகம் புரிவது ...... கிடையாதோ
வேயுங் கணியும் விளாவும் படுபுன
மேவுஞ் சிறுமிதன் ...... மணவாளா
மீனம் படுகடலேழுந் தழல்பட
வேதங் கதறிய ...... ஒருநாலு
வாயுங் குலகிரி பாலுந் தளைபட
மாகந் தரமதில் ...... மறைசூரன்
மார்புந் துணையுறு தோளுந் துணிபட
வாள்கொண்டமர் செய்த ...... பெருமாளே
திருப்பாடல் 46:
தானந் தனதன தானந் தனதன
தானந் தனதன ...... தனதான
வாதந் தலைவலி சூலம் !பெருவயி
றாகும் பிணியிவை ...... அணுகாதே
மாயம் பொதிதரு காயந் தனின்மிசை
வாழுங் கருவழி ...... மருவாதே
ஓதம் பெறுகடல் மோதுந் திரையது
போலும் பிறவியில் ...... உழலாதே
ஓதும் பலஅடியாருங் கதிபெற
யானுன் கழலிணை ...... பெறுவேனோ
கீதம் புகழிசை நாதங் கனிவொடு
வேதங் கிளர்தர ...... மொழிவார்தம்
கேடின் பெருவலி மாளும் படி!அவ
ரோடுங் கெழுமுதல் ......உடையோனே
வேதந் தொழுதிரு மாலும் பிரமனு
மேவும் பதமுடை ...... விறல்வீரா
மேல்வந்தெதிர் பொரு சூரன் பொடிபட
வேல்கொண்டமர் செய்த ...... பெருமாளே
திருப்பாடல் 47:
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
ஊனே தானாய் ஓயா நோயால்
ஊசாடூசற் ...... குடில்பேணா
ஓதா மோதா வாதாகாதே
லோகாசாரத்துளம் வேறாய்
நானே நீயாய் நீயே நானாய்
நானா வேதப் ...... பொருளாலும்
நாடா வீடாய் ஈடேறாதே
நாயேன் மாயக் ...... கடவேனோ
வானே காலே தீயே நீரே
பாரே பாருக்குரியோனே
மாயா மானே கோனே மானார்
வாழ்வே கோழிக் ...... கொடியோனே
தேனே தேனீள் கானாறாய்வீழ்
தேசார் சாரற் ...... கிரியோனே
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே
திருப்பாடல் 48:
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
சாவா மூவா வேளே போல்வாய்
தாளாவேனுக்கருள் கூருந்
தாதாவே ஞாதாவே கோவே
சார்பானார்கட்குயிர் போல்வாய்
ஏவால் மாலே போல்வாய் காரே
போல்வாய் ஈதற்கெனையாள் !கொண்
டேயா பாடா வாழ்வோர் பாலே
யான் வீணே கத்திடலாமோ
பாவா நாவாய் வாணீ சார்வார்
பாராவாரத்துரகேசப்
பாய் மீதே சாய்வார் காணாதே
பாதாளாழத்துறு பாதச்
சேவா மாவூர் கோமான் வாழ்வே
சீமானே செச்சைய மார்பா
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே
திருப்பாடல் 49:
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
நாராலே தோல் நீராலேயாம்
நானா வாசற் ...... குடிலூடே
ஞாதாவாயே வாழ்கால் ஏகாய்
நாய்பேய் சூழ்கைக்கிடமா முன்
தாரார் ஆர்தோள் ஈராறானே
சார்வானோர் நற் ...... பெருவாழ்வே
தாழாதே நாயேனாவாலே
தாள் பாடாண்மைத் ...... திறல்தாராய்
பாரேழோர் தாளாலே ஆள்வோர்
பாவார் வேதத்தயனாரும்
பாழூடே வானூடே !பாரூ
டேயூர் பாதத்தினை நாடாச்
சீரார் மாதோடே வாழ் வார்நீள்
சேவூர் வார்பொற் ...... சடையீசர்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே
திருப்பாடல் 50:
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
மாதாவோடே மாமான் ஆனோர்
மாதோடே மைத்துனமாரும்
மாறானார் போனீள் தீயூடே
மாயா மோகக் ...... குடில்போடாப்
போதா நீரூடே போய் மூழ்கா
வீழ்கா வேதைக்குயிர் போமுன்
போதாகாரா பாராய் சீரார்
போதார் பாதத்தருள் தாராய்
வேதாவோடே மாலானார் மேல்
வானோர் மேனிப் ...... !பயமீள
வே தானோர் மேலாகாதேஓர்
வேலால் வேதித்திடும்வீரா
தீதார் தீயார் தீயுடேமூள்
சேரா சேதித்திடுவோர் தஞ்
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே
No comments:
Post a Comment