(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
சடலை பட்டலை உடல் எனப்படு
தரும சித்திர கூடமானவை ....1
தவிர நிட்கள வெளியில் நிற்பன
சமய தர்க்க விரோதவாதிகள் ....2
தகர எற்றுவ புகர் மனக்கிரி
தனைமுருக்குவ, ஆசை ஆணவ ....3
தளைஇயற்கையை விடநடிப்பன
சனன முற்றிய சாதமாம் எழு ....4
கடல் கடப்பன, படுகொலைச்சமர்
கடகம் அப்படி சாய மோதுவ ....5
கருவினைத்தரும் இருவினைத்தொடர்
கழல்பதத்தன, யோக சாதகர் ....6
களை பறிப்பன, கிளை எனப்படு
கவலை சுற்றிய காடு சாடுவ ....7
கருணை மெய்த்தவ திருவருட்கன
கவள மொக்குவ, காம ராசனை ....8
அடல் கெடுப்பன, அகில கற்பனை
அரண் அழிப்பன, கோபமானவை ....9
அவிய நற்பொறை எனு !நதிப்பிர
ளயம் இறைப்பன, லோப மோகிதம் ....10
அவை முறிப்பன, மத முழுத்தறி
அடி பறிப்பன, ராச தாதியின் ....11
அதிகுணத்ரய மதில் இடிப்பன
அளவில் தத்துவ தூளி வீசுவ ....12
திடமுடைச்சிறை மயில் உகைத்தெழு
சிகரி குத்திய வேலை நீள்சுனை ....13
தினமும் உற்பல மலர் திருத்தணி
இறைதிருப்புகழ் பாடு நாவலர் ....14
திரள் ப்ரியப்பட இனிதளிப்பன
செயலொழித்தநுபூதி மீமிசை ....15
திகழும் அற்புத மவுன நிர்க்குண
சிவமயத்திரு ஞான வேழமே ....16
No comments:
Post a Comment