(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
குதிரைத் திரள்பட்ட பிணத்தை !எடுத்
துதிரப் புனலிற் குளிக்கும் ஒருதிரள் ....1
குருதிக் கடலைப் பெருகப் பருகிக்
குணலைத் திறனிற் களிக்கும் ஒருதிரள் ....2
கொடுகொட்டி படத் துடிகொட்டி !நடத்
தடமிட்டு வளைத்திருக்கும் ஒருதிரள் ....3
குடரைப் புயமிட்டுடலைச் சிறுகக்
குலையிட்டதிரச் சிரிக்கும் ஒருதிரள் ....4
சதையைச் சிலகைக் கொள மற்றதனைச்
சருவிச் சருவிப் பறிக்கும் ஒருதிரள் ....5
தறுகட் சிறுகண் தவளக் கவளத்
தரளத் திரளைக் குவித்தடியெனுரல் ....6
தலைஉக்குள நற்றருணக் கிரணத்
தரளத் திரளைக் குவித்தடியெனுரல் ....7
தனில்இட்டதனைத் தகு கைத்தலம் !உற்
றிடு நெட்டை மருப்புலக்கை முறைமுறை ....8
எதிரிட்டது குத்தி முடித் தலை!ஒப்
ப அடுப்பென வைத்தெலுப்பு விறகினை ....9
எரியிட்டெரியிட்டுருவத்துடன்!எட்
டுலை வைத்துணவைச் சமைக்கும் ஒருதிரள் ....10
இருள் செற்றதடித்தினை ஒத்திடு !கட்
கமெடுத்தெறியத் தெறித்த தலைகளை ....11
இதெனக்கதுனக்கது !மற்றதனுக்
கென மொய்த்துலவிப் பொறுக்கும் ஒருதிரள் ....12
அதரத்து விரற் படவைத்து !மிகுத்
தரவத்தொடு கொக்கரிக்கும் ஒருதிரள் ....13
அமுதொத்த நிணத்தசை முக்கி!அறத்
தவசத் துயிலிற் கிடக்கும் ஒருதிரள் ....14
அடவிப் புனமுற்ற குறத் !திருவுக்
கமைவுற்ற மணிப் புயத்தன் அறுமுகன் ....15
அடல்மிக்க தயித்தியர் பட்டுவிழப்
பொருதிட்ட செருக்களத்தில் அலகையே ....16
No comments:
Post a Comment