Tuesday, March 28, 2017

சீர்பாத வகுப்பு:

(பிற தொகுப்புகள்)

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 

தனதனன தனதனன தனதனன தனதனன 
    தனதனன தனதனன தனதான தானதன 

உததியிடை கடவு மரகத அருண குலதுரக
    உபலளித கனகரத  ......  சதகோடி சூரியர்கள்   ....1

உதயமென அதிகவித கலப கக மயிலின்மிசை
    யுகமுடிவின் இருளகல  ......  ஒருசோதி வீசுவதும்   ....2

உடலுமுடல் உயிருநிலை பெருதல்பொருள் எனஉலகம் 
    ஒருவி வரு மநுபவன  ......  சிவயோக சாதனையில்  

ஒழுகும்அவர் பிறிது பரவசம்அழிய விழிசெருகி
    உணர்வுவிழி கொடுநியதி  ......  தமதூடு நாடுவதும்   ....3

உருவெனவு மருவெனவும் உளதெனவும் இலதெனவும் 
    உழலுவன பரசமய  ......  கலையார வாரமற   ....4  

உரையவிழ உணர்வவிழ உளமவிழ உயிரவிழ
    உளபடியை உணருமவர்  ......  அநுபூதி ஆனதுவும்   ....5

உறவுமுறை மனைவி மகவெனும் அலையில் எனதிதய
    உருவுடைய மலினபவ  ......  சலராசி ஏறவிடும்   ....6

உறுபுணையும் அறிமுகமும் உயர்அமரர் மணிமுடியில்
    உறைவதுவும் உலைவிலதும்  ......  அடியேன் மனோரதமும்   ....7

இதழிவெகு முகககன நதிஅறுகு தறுகண்அர
    இமகிரண தருண உடுபதி சேர் சடாமவுலி   ....8  

இறைமகிழ உடைமணியொடணி சகல மணிகலென
    இமையமயில் தழுவுமொரு  ......  திருமார்பில் ஆடுவதும்   ....9

இமையவர்கள் நகரிலிறை குடிபுகுத நிருதர்!வயி
    றெரிபுகுத உரகர்பதி  ......  அபிஷேகம் ஆயிரமும்   ....10  

எழுபிலமு நெறுநெறென முறியவட குவடிடிய
    இளையதளர் நடைபழகி  ......  விளையாடல் கூருவதும்   ....11

இனியகனி கடலை பயறொடியல்பொரி அமுதுசெயும்
    இலகுவெகு கடவிகட  ......  தடபார மேருவுடன்   ....12

இகலிமுது திகிரிகிரி நெரியவளை கடல்கதற
    எழுபுவியை ஒருநொடியில்  ......  வலமாக ஓடுவதும்   ....13

எறுழிபுலி கரடிஅரி கரிகடமை வருடைஉழை
    இரலைமரை இரவுபகல்  ......  இரைதேர் கடாடவியில்   ....14

எயினர்இடும் இதண்அதனில் இளகுதினை கிளிகடிய
    இனிதுபயில் சிறுமிவளர்  ......  புன மீதுலாவுவதும்   ....15 

முதலவினை முடிவில்இரு பிறைஎயிறு கயிறுகொடு
    முதுவடவை விழிசுழல  ......  வருகால தூதர்கெட   ....16 

முடுகுவதும் அருள்நெறியில் உதவுவதும் நினையும்அவை
    முடியவருவதும் அடியர்  ......  பகைகோடி சாடுவதும்   ....17

மொகுமொகென மதுபமுரல் குரவு விளவினது குறு
    முறியு மலர் வகுளதள  ......  முழுநீல தீவரமும்   ....18

முருகு கமழ்வதும் அகில முதன்மை தருவதும் விரத
    முநிவர் கருதரியதவ  ......  முயல்வார் தபோபலமும்   ....19

முருக சரவண மகளிர் அறுவர்முலை நுகரும் அறு
    முககுமர சரணமென  ......  அருள்பாடி ஆடிமிக   ....20

மொழிகுழற அழுதுதொழுதுருகும் அவர் விழியருவி
    முழுகுவதும் வருகவென  ......  அறைகூவி ஆளுவதும்   ....21

முடியவழி வழியடிமை எனும்உரிமை அடிமை!முழு
    துலகறிய மழலைமொழி  ......  கொடுபாடும் ஆசுகவி   ....22

முதலமொழிவன நிபுண மதுப முகரித மவுன
    முகுள பரிமள நிகில  ......  கவிமாலை சூடுவதும்   ....23  

மதசிகரி கதறிமுது முதலைகவர் தரநெடிய
    மடுநடுவில் வெருவியொரு  ......  விசைஆதி மூலமென   ....24

வரு கருணை வரதன்இகல் இரணியனை நுதிஉகிரின்
    வகிருமடல் அரிவடிவு  ......  குறளாகி மாபலியை   ....25  

வலியசிறையிட வெளியின் முகடுகிழி படமுடிய
    வளருமுகில் நிருதன்இரு  ......  பதுவாகு பூதரமும்   ....26

மகுடம் ஒருபதுமுறிய அடுபகழி விடுகுரிசில்
    மருக நிசிசரர் தளமும்  ......  வரு தாரகாசுரனும்   ....27

மடியமலை பிளவுபட மகரசல நிதிகுறுகி
    மறுகிமுறையிட முனியும்  ......  வடிவேலன் நீலகிரி   ....28

மருவு குருபதி யுவதி பவதி பகவதி மதுர
    வசனி பயிரவி கவுரி  ......  உமையாள் த்ரிசூலதரி   ....29 

வநசை மதுபதி அமலை விசயை திரிபுரை புநிதை
    வநிதை அபிநவை அநகை  ......  அபிராம நாயகிதன்   ....30

மதலைமலை கிழவன் அநுபவன் அபயன் உபயசதுர்
    மறையின்முதல் நடுமுடிவின்  ......  மணநாறு சீறடியே   ....31

No comments:

Post a Comment