(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தரணியில் அரணிய முரண்இரணியனுடல் தனைநக நுதிகொடு
சாடோங்கு நெடுங்கிரி ஓடேந்து பயங்கரி ....1
சாடோங்கு நெடுங்கிரி ஓடேந்து பயங்கரி ....1
தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை
தாதாம்புய மந்திர வேதாந்த பரம்பரை ....2
சரிவளை விரிசடை எரிபுரை வடிவினள் சததள முகுளித
தாமாங்குச மென்றிரு தாளாந்ததர அம்பிகை ....3
தருபதி சுரரோடு சருவிய அசுரர்கள் தடமணி முடிபொடி
தானாம்படி செங்கையில் வாள்வாங்கிய சங்கரி ....4
இரணகிரணமட மயில்ம்ருக மதபுள கிதஇள முலையிள
நீர்தாங்கி நுடங்கிய நூல்போன்ற மருங்கினள் ....5
இறுகிய சிறுபிறை எயிறுடை யமபடர் எனதுயிர் கொளவரின்
யானேங்குதல் கண்டெதிர் தானேன்று கொளுங்குயில் ....6
இடுபலி கொடுதிரி இரவலர் இடர்கெட விடுமன கரதல
ஏகாம்பரை இந்திரை மோகாங்க சுமங்கலை ....7
எழுதிய படமென இருளறு சுடரடி இணைதொழு மவுனிகள்
ஏகாந்த சுகந்தரு பாசாங்குச சுந்தரி ....8
கரணமு மரணமு மலமொடும் உடல்படு கடுவினை கெடநினை
காலாந்தரி கந்தரி நீலாஞ்சனி நஞ்சுமிழ் ....9
கனலெரி கணபண குணமணி அணிபணி கனவளை மரகத
காசாம்பர கஞ்சுளி தூசாம்படி கொண்டவள் ....10
கனைகழல் நினையலர் உயிரவி பயிரவி கவுரிகமலைகுழை
காதார்ந்த செழுங்கழு நீர்தோய்ந்த பெருந்திரு ....11
கரைபொழி திருமுக கருணையில்உலகெழு கடனிலை பெறவளர்
காவேந்திய பைங்கிளி மாசாம்பவி தந்தவன் ....12
அரணெடு வடவரை அடியொடு பொடிபட அலைகடல் கெடஅயில்
வேல்வாங்கிய செந்தமிழ் நூலோன்குமரன்குகன் ....13
அறுமுகன் ஒருபதொடிருபுயன் அபினவன் அழகிய குறமகள்
தார்வேந்த புயன்பகையா மாந்தர்கள் அந்தகன் ....14
அடல்மிகு கடதட விகடித மதகளிறனவரதமும்!அக
லா மாந்தர்கள் சிந்தையில் வாழ்வாம்படி செந்திலில் ....15
அதிபதியெனவரு பொருதிறல் முருகனை அருள்பட மொழிபவர்
ஆராய்ந்து வணங்குவர் தேவேந்திர சங்கமே ....16
No comments:
Post a Comment