Tuesday, March 28, 2017

பூத வேதாள வகுப்பு:

(பிற தொகுப்புகள்)

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 

 அருண கணபண புயக சுடிகையின்
    அகில புவனமும் உதவு மலைமகள்  ...... 1

அமலை ஆரியை அந்தரி சுந்தரி
    இமய மாமயில் அம்பை த்ரியம்பகி  ...... 2

அச்சுத சகோதரி அனைத்து வேதத்தலைவி
    அற்புத புராதனி வரப்ரகாச ப்ரக்ருதி  ...... 3

அம்பொற் குண்டலப் பேதை சாம்பவி
    விம்பக் கிஞ்சுகப் பூவை பூங்கொடி  ...... 4

அக்ஷர லக்ஷஜ பத்தர் க்ரமத்திடு
    சக்ரதலத்தி த்ரியக்ஷி சடக்ஷரி  ...... 5

ஆயிஇ திருமைந்தன், முகம் ஆயிரம் விளங்கியதொர்
    ஆறுதர வந்தருளும் ஆறுமுக புண்டரிகன்  ...... 6

அருவரை திறந்து வன் சங்க்ராம கற்கிமுகி
    அபயமிட அஞ்சலென்றங் கீரனுக்குதவி  ...... 7

அரசறிய வாமன முநிக்கொரு தமிழ்த்ரயமும்
    அபரிமிதமாக விவரித்த கடவுட்புலவன்  ...... 8

அநுபவ சித்த பவக்கடலிற் புகாதெனை
    வினவி எடுத்தருள் வைத்த கழற் க்ருபாகரன்  ...... 9

ஆசிலா சார தபோதனர் இன்புறும்
    வாசகாதீத மனோலய பஞ்சரன்  ...... 10

அகரு ம்ருகமத களப பரிமள
    விகட முகபட கடின புளகித  ...... 11

அமிர்த பூதரி அண்டர் செழுங்கொடி
    குமுத வாய்மயில் குஞ்சரி மஞ்சரி  ...... 12

அக்கமொரு கோடிபெறு வஜ்ரபாணிக் குமரி
    தக்கஅமராவதி புரக்கும் ஆனைக்கிறைவன்  ...... 13

ஐம்பத்தொன்றில் எட்டாறில் மூன்றினில்
    ஐந்தில் தங்கும் அப்பாலை வான்பொருள்  ...... 14

அப்படி பத்தி பழுத்த மனத்தினர்
    அர்ச்சனை மெச்சிய செச்சை மணிப்புயன்  ...... 15

ஆறுநிலை என்று முதலாகிய பரங்கிரியும்
    ஆவினனெடுங்குடியும் ஆரண முடிந்திடமும்  ...... 16

அருணையும் இலஞ்சியுஞ் செந்தூர் திருப்பழநி
    அடியர்மன பங்கயஞ் செங்கோடிடைக்கழியும்  ...... 17

அநவரத நீலமலர் முத்தெறி சுனைப்புனலில்
    அருவிகுதி பாய்தரு செருத்தணியென் வெற்புமெனும்  ...... 18

அலகில் திருப்பதியிற் பயில் கற்பகாடவி
    அநுபவன் அத்தன் நிருத்தன் அரத்த ஆடையன்  ...... 19

ஆறுமா மாதர் பயோதர பந்தியில்
    ஆரவே பாலமுதாரு நெடுந்தகை  ...... 20

வருண சரவண மடுவில் வருமொரு
    மதலை மறைகமழ் குதலை மொழியினன்  ...... 21

மதுகராரவ மந்திர சிந்துர
    மணமறாத கடம்பு புனைந்தவன்  ...... 22

மட்டொழுகு சார மதுரித்த தேனைப் பருக
    மர்க்கட சமூகம்அமை தொட்டிறால் எட்டுவரை  ...... 23

மன்றற் பைம்புனத் தாள் பதாம்புயம்
    வந்திக்குந் தனிக்காம வாஞ்சையன்  ...... 24

மத்தமுடித்தருள் அத்தர் ப்ரியப்பட
    நித்தமறைப் பொருளைத் தெளிவித்தவன்  ...... 25

மாதிரமு மந்தரமு நீருநிலனுங் கனக
    மால்வரையுடன் சுழல வாசுகி விடம்பொழிய  ...... 26

மகர சலிலங் கடைந்திந்த்ராதியர்க்கமுது
    பகிர்தரு முகுந்தன்மன் பஞ்சாயுதக் கடவுள்  ...... 27

மருகன், மறவாதவர் நினைப்பவை முடிக்குமவன்
    உருகுமடியார் இருவினைத்தொகை அறுக்குமவன்  ...... 28

மறவர்பொருப்பில் ஒருத்திபொருட்ட நாளிள
    வடிவ முழுக்க நரைத்த விருத்த வேதியன்  ...... 29

மாதரா ரூபன் நிராகுல சிந்தையன்
    ஆதிகூதாள மதாணி அலங்க்ருதன்  ...... 30

வரத விதரண விரத அநுபவ
    மவுன குருபரன் நிபுண குணதரன்  ...... 31

வனஜ ஜாதனை அன்று முனிந்தற
    வலிய பார விலங்கிடு புங்கவன்  ...... 32

மட்டிலிரு நாலுதிசை கட்டு நெமிக்கிரியும்
    உத்தர குணாதி குட தக்ஷிணா திக்கிரியும்  ...... 33

மங்கத் துங்க விட்டேறு வாங்கிய
    செங்கைப் பங்கயச் சோதி காங்கேயன்  ...... 34

மத்த மலத்ரய மித்தை தவிர்த்தருள்
    சுத்த பவித்ர நிவர்த்தி அளிப்பவன்  ...... 35

வாரணமுகன் தனது தாதையை வலஞ்சுழல
    வாகைமயில் கொண்டுலகு சூழ்நொடிவருங் குமரன்  ...... 36

மயமுறு ப்ரபஞ்சமுஞ் சங்கேத ஷட்சமய
    வழியு மனமுங் கடந்தெங்கேனு நிற்குமவன்  ...... 37

மதுரமொழியால் உலகனைத்தையும் உணர்த்துமவன்
    வடஅனல நேர்கொடிய குக்குடம் உயர்த்தகுகன்  ...... 38

மரகத பக்ஷ குலத்துரகத் திவாகரர்
    வடிவை உருக்கி வடித்த திருக்கை வேல்கொடு  ...... 39

வாரிகோகோ என வாய்விட வந்தெதிர்
    சூரமா சேனையை மோது களந்தனில்  ...... 40

உருவம் இருளெழ எயிறு நிலவெழ
    உலகு வெருவர அசைய வருவன  ...... 41

உடைய நாயகி கண்டு மகிழ்ந்திட
    நடைவிநோத விதம்புரி பந்திய  ...... 42

ஒக்கலை விடாதழுதரற்று பாலர்க்கு மிக
    உச்சிவெடியாது நிணமெத்தவேதப்புவன  ...... 43

உங்குக்கிங்கு இட்டாழி நான்கினும்
    ஒன்றுக்கொன்றடி பாய்தல் காண்பன  ...... 44

யுத்தகளத்தினில் ரத்ந மணிக்குவை
    ஒட்டமொடொற்றை இரட்டை பிடிப்பன  ...... 45

யோகினிகளும் பெரிய சாகினிகளும் புதிய
    மோகினிகளும் பழைய டாகினிகளும் புகழ  ...... 46

உவணநிரை கொண்டிடுஞ் செங்காவணத்திடையில்
    உறவுகொள வந்துதம் பெண்காறை கட்டுவன  ...... 47

உமிழ்குருதி ஆறடைபடக் குறடடுக்கி அதில்
    உபவனம்ஒர் ஏழையு முறித்தருகொழுக்குவன  ...... 48

உடுபடலத்தை மறைத்த குறைக் குவாலுடல்
    உதிர சமுத்திர முற்று நிலைப்படாதன  ...... 49

ஓடைமால் வாரண யூகம் அடங்கலும்
    ஓரொர்பேய் நீள்கடை வாயில்அடங்குவ  ...... 50

உடலின்நிசிசரர் மவுலி ஒலியலும்
    உதடு மலைவன பதடி முலையின  ...... 51

உததி ஏழும் அடங்க உறிஞ்சியும்
    உதர வாரழல் நின்று கொளுந்துவ  ...... 52

உக்கிர இராவணன் எடுத்த மேருக்கிரியும்
    ஒற்றியிரு தோள்கொடு பறித்திடாதப்புவன  ...... 53

ஒன்றித் திண்குரற் கூகை பாம்பொடு
    வென்றிச் செந்தலைத் தாலி பூண்பன  ...... 54

ஒக்க மிடற்றில் இறக்கு குறைத்தலை
    விக்கி வெளுக்க வெளுக்க விழிப்பன  ...... 55

யோகுபுரியுங் குகையும் யோகபரரும் பொருவ
    ஓடைமத தந்தி வயிறூடினிதுறங்குவன  ...... 56

உசித பிசிதங் கொணர்ந்திங்கேற விற்றுமென
    மதமலை எலும்பு கொண்டங்காடி கட்டுவன  ...... 57

உதிரநிண வாள்பெருக ஒட்டுவன வெட்டுவன
    உடலினடு ஊடுருவ முட்டுவன தட்டுவன  ...... 58

ஒழுகு பிணத்து நிணத்தின் அளற்றிலே பழு
    ஒடிய உழக்கி வழுக்கி உருட்டி வீழ்வன  ...... 59

ஊசலார் வார்குழை ஓலையிடும்படி
    ஓது சாமீகர நேமி பிடுங்குவ  ...... 60

கரணம் இடுவன குணலை இடுவன
    கழையை நடுவன பவுரி வருவன  ...... 61

ககன கூடம் உடைந்து விழும்படி
    கதறி வாயனல் கண்கனல் சிந்துவ  ...... 62

கைச்சதியினா முறை விதித்தவாம் உற்கடித
    சச்சபுட சாசபுட சட்பிதா புத்திரிக  ...... 63

கண்டச் சம்பதிப் பேதமாம் பல
    கஞ்சப் பஞ்சகத் தாளமாம் படி  ...... 64

கற்சரி உற்சவ தர்ப்பண லக்ஷண
    சச்சரி மட்டிசை ஒற்றிஅறுப்பன  ...... 65

காயெரிய பங்கியொடு சேகர மிகுந்தசைவ
    காதுபடு சங்கவள மாலிகை புனைந்திசைவ  ...... 66

கருணை அதிகந்து வந்தொண்கோ குலப்பெரிய
    கருமுடியொடும் படுங் கங்காளம் ஒத்துவன  ...... 67

கடிபயிரவாதிகள் ப்ரியப்படு கதிக்கிசைய
    நடைநவிலு பாவனை உதிக்குநட வித்தையின  ...... 68

கடகமடுத்த இடக்கை வலக்கை வாளின
    கருதிய லக்ஷிய லக்ஷண முற்றும் ஓதுவ  ...... 69

காலமாறாத வராளி சிகண்டிகை
    பாலசீகாமர மானவி பஞ்சிகை  ...... 70

கவுட பயிரவி லளிதை கயிசிகை
    கவுளி மலகரி பவுளி இசைவன  ...... 71

கனவராடி அரும்பட மஞ்சரி
    தன தனாசி விதம்படு பஞ்சமி  ...... 72

கைச்சுலவு கோன்முறை விதித்த ராகத்தடைவில்
    உச்சமது சாதிகம்எடுத்து மேல் எட்டுவன  ...... 73

கஞ்சக் கஞ்சநற்றேசி ராஞ்சி !கு
    றிஞ்சிப் பண்குறித்து யாழை ஏந்துவ  ...... 74

கற்ற உடுக்கை இடக்கை களப்பறை
    மத்தளி கொட்டிய முற்றும் அடிப்பன  ...... 75

காரென முழங்கு குரலேறுதுடி சந்த்ரவளை
    வீரமுரசுந் திமில் தடாரிகுட பஞ்சமுகி  ...... 76

கரடிபறை அங்கனந்தங் கோடி கொட்டுவன
    முறைமுறை கவந்த நின்றொன்றோடு கிட்டுவன  ...... 77

கசரத பதாகினி அரக்கர்துணி பட்டுவிழு
    களமுழுதும் வாழிய திருப்புகழ் முழக்குவன  ...... 78

கடிய குணத்த சினத்த சகத்ர யோசனை
    நெடிய கழுத்த சுழித்த விழித்த பார்வைய  ...... 79

காத நூறாயிர கோடி வளைந்தன
    பூதவேதாளம் அநேக விதங்களே.  ...... 80

No comments:

Post a Comment