Tuesday, March 28, 2017

பெருத்த வசன வகுப்பு:

(பிற தொகுப்புகள்)

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 

 அருக்கன் உலவிய சகத்ரயமும் இசை
    அதிற்கொள் சுவையென அனைத்து நிறைவதும்   ....1  

அவஸ்தை பலவையும் அடக்கி அகிலமும்
    அவிழ்ச்சி பெற இனிதிருக்கு மவுனமும்   ....2  

அசட்டு வெறுவழி வழக்கர் அறுவரும்
    அரற்றுவன பொருள் விகற்பம் ஒழிவதும்   ....3  

அழுக்கு மலஇருள் முழுக்கின் உழல்வதை
    அடக்கி அவநெறி கடக்க விடுவதும்   ....4  

எருக்கும் இதழியு முடிக்கும் இறைகுரு
    எமக்கும் இறையவன் எனத் திகழுவதும்   ....5  

இரட்டை வினைகொடு திரட்டு மலவுடல்
    இணக்கம் அறவொரு கணக்கை அருள்வதும்   ....6  

இருக்கு முதலிய சமஸ்த கலைகளும்
    இதற்கிதெதிரென இணைக்க அரியதும்   ....7  

இறக்க எனதெதிர் நடக்கும் யமபடர்
    கடக்க விடுவதொர் இயற்கை அருள்வதும்   ....8  

நெருக்குவன உபநிடத்தின் இறுதிகள்
    நிரப்பு கடையினில் இருப்பை உடையதும்   ....9  

நெருப்பு நிலம்வெளி மருத்துவனமென
    நிறைத்த நெறிமுறை கரக்கும் உருவமும்   ....10

நினைப்பு நினைவது நினைப்பவனும்அறு
    நிலத்தில் நிலைபெற நிறுத்த உரியதும்   ....11  

நிலைத்த அடியவர் மலைத்தல் அதுகெட
    நிவிர்த்தியுற அநுபவிக்கு நிதியமும்   ....12  

உருக்கு திருவருள் திளைத்து மகிழ்தர
    உளத்தொடுரைசெயல் ஒளித்து விடுவதும்   ....13  

ஒளிக்கும் ஒளியென வெளிக்கும் வெளியென
    உயிர்க்கும் உயிரென நிகழ்ச்சி தருவதும்   ....14  

உரத்த தனிமயில் உகைத்து நிசிசரர்
    ஒளிக்க அமர்பொரு சமர்த்தன் அணிதழை   ....15  

உடுத்த குறமகள் மணக்கும் அறுமுகன்
    ஒருத்தன் அருளிய பெருத்த வசனமே   ....16

No comments:

Post a Comment