(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: துளுவ நாடு
மாவட்டம்: ஹம்பி (கர்நாடகா மாநிலம்)
திருக்கோயில்: அருள்மிகு ஸ்ரீவிருபாக்ஷேஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
அமைவிடம் (செல்லும் வழி):
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தந்ததன தான தந்ததன தான
தந்ததன தான ...... தனதான
அஞ்சுவித பூதமும் கரண நாலும்
அந்தி பகல் யாதும் அறியாத
அந்தநடு ஆதி ஒன்றும் இலதான
அந்தவொரு வீடு ...... பெறுமாறு
மஞ்சுதவழ் சாரலஞ்சயில வேடர்
மங்கைதனை நாடி ...... வனமீது
வந்த சரணார விந்தமது பாட
வண்தமிழ் விநோதம் அருள்வாயே
குஞ்சர கலாப வஞ்சி அபிராம
குங்கும படீர ...... அதிரேகக்
கும்பதன மீது சென்றணையும் மார்ப
குன்று தடுமாற ...... இகல்கோப
வெஞ்சமர சூரன் நெஞ்சுபக வீர
வென்றி வடிவேலை ...... விடுவோனே
விம்பமதில் சூழு நிம்பபுர வாண
விண்தல மகீபர் ...... பெருமாளே.
No comments:
Post a Comment