(பொதுத் திருப்புகழ் திருப்பாடல்கள்)
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 101:
தனனதன தனனதன தனனதன தனனதன
தனனதன தனனதன ...... தனதான
அனகனென அதிகனென அமலனென அசலனென
அபயனென அதுலனென ...... அநபாயன்
அடல்மதன்என விசையனென முருகனென நெருடி
அவர்பெயரும் இடைசெருகி ...... இசைபாடி
வனசமணி பணிலமழை சுரபிசுரர் தருநிகர்கை
மகிபஎன தினையளவுளவும் ஈயா
மனிதர்கடை தொறுமுழலு மிடியொழிய மொழியொழிய
மனமொழிய ஒருபொருளை ...... அருள்வாயே
இனனிலவு தலைமலைய அடியினுகிர் இலைகளென
இருசதுர திசையில் உரகமும்வீழ
இரணியசயிலம் ரசித சயில மரகத!சயில
மென விமலை யமுனை என ...... நிழல்வீசிக்
ககனமழை உகைகடவுள் உடலமென முதியவிழி
கதுவியெழில் பொதியமிசை ...... படர்கோலக்
கலபகக மயில்கடவு நிருதர்கஜ ரததுரக
கடகமுடன் அமர்பொருத ...... பெருமாளே
திருப்பாடல் 102:
தனனதன தனனதன தனனதன தனனதன
தனனதன தனனதன ...... தனதான
குடருமல சலமுமிடை இடைதடியும் உடையளவு
கொழுவும் உதிரமும் வெளிறளறுமாகக்
கொளகொளென அளவில்புழு நெளுநெளென விளைகுருதி
குமுகுமென இடைவழியில் ...... வரநாறும்
உடலின்மண மலிபுழுகு தடவியணி கலமிலக
உலகமருள் உறவரும் ...... அரிவையார்!அன்
பொழியவினை ஒழிய மனமொழிய இருளொழிய!என
தொழிவில்அகல் அறிவையருள் ...... புரிவாயே
வடகனக சயில முதலிய சயிலம் எனநெடிய
வடிவுகொளு நெடியவிறல் ...... மருவாரை
வகிருமொரு திகிரியென மதிமுதிய பணிலமென
மகரசல நிதிமுழுகி ...... விளையாடிக்
கடல்உலகை அளவுசெய வளருமுகில் எனஅகில
ககனமுகடுற நிமிரு ...... முழுநீலக்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுடன் அமர்பொருத ...... பெருமாளே
திருப்பாடல் 103:
தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன ...... தனதான
குதறுமுனை அறிவுகொடு பதறியெதிர் கதறிமிகு
குமுதமிடு பரசமயம் ...... ஒருகோடி
குருடர் தெரிவரியதொரு பொருள்தெரிய நிகழ்மனது
கொடியஇரு வினையெனும் அளறுபோக
உதறி விதறியகரண மரணமற விரணமற
உருகியுரை பருகி அநுதினஞான
உணர்வுவிழி பெறவுனது மிருகமத நளினபத
யுகளம்இனி உணரஅருள் ...... புரிவாயே
சிதறவெளி முழுதுமொளி திகழுமுடு படலமவை
சிறுபொறிகள் எனவுரக ...... பிலமேழுஞ்
செகதலமு நிகர்சிகரி பலவுநல கெசபுயக
திசையுமுடன் உருகவரு ...... கடைநாளிற்
கதறுமெழு கடல்பருகி வடவைவிடு கரியபுகை
எனமுடிவில் ககன முகடதிலோடுங்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுடன் அமர்பொருத ...... பெருமாளே
திருப்பாடல் 104:
தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன ...... தனதான
வதைபழக மறலிவிறல் மதனன்வழி படுதுமென
வயிரமர கதமகரம் அளவாக
வரிசிதறி விடமளவி வளருமிரு கலகவிழி
வளைஇளைஞர் உயிர்கவர ...... வருமாய
இதையம் அளவிடஅரிய அரிவையர்கள் நெறியொழுகி
எழுபிறவி நெறியொழிய ...... வழிகாணா
இடர்கள்படு குருடனெனை அடிமைகொள மகிழ்வொடுன
திருநயன கருணை சிறிதருள்வாயே
பதயுகள மலர்தொழுது பழுதில்பொரி அவல்துவரை
பயறுபெரு வயிறு நிறையவிடா !முப்
பழமும் இனிதுதவி முனி பகரவட சிகரிமிசை
பரியதனி எயிறுகொடு ...... குருநாடர்
கதைமுழுதும் எழுதுமொரு களிறு பிளிறிட நெடிய
கடலுலகு நொடியில்வரும் ..... அதிவேகக்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுடன் அமர்பொருத ...... பெருமாளே
திருப்பாடல் 105:
தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன ...... தனதான
விடமளவி அரிபரவு விழிகுவிய மொழிபதற
விதறிவளை கலகலென ...... அநுராகம்
விளைய ம்ருகமத முகுள முலைபுளகம் எழநுதலில்
வியர்வுவர அணிசிதற ...... மதுமாலை
அடரளகம் அவிழஅணி துகிலகல அமுதுபொதி
இதழ்பருகி உருகி அரிவையரோடே
அமளிமிசை அமளிபட விரக சலதியில்முழுகி
அவசமுறுகினும் அடிகள் ...... மறவேனே
உடலு முயலகன்முதுகு நெறுநெறென எழுதிமிர
உரகர்பில முடியவொரு ...... பதமோடி
உருவமுது ககன முகடிடிய மதி முடிபெயர
உயர அகிலபுவனம் அதிரவீசிக்
கடககர தலமிலக நடனமிடும் இறைவர்மகிழ்
கருதரிய விதமொடழகுடனாடுங்
கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக
கடகமுடன் அமர்பொருத ...... பெருமாளே
திருப்பாடல் 106:
தனதனன தானதத்த தனதனன தானதத்த
தனதனன தானதத்த ...... தனதான
எழுபிறவி நீர்நிலத்தில் இருவினைகள் வேர்பிடித்து
இடர் முளைகளே முளைத்து ...... வளர்மாயை
எனும்உலவையே பணைத்து விரககுழையே குழைத்து
இருள்இலைகளே தழைத்து ...... மிகநீளும்
இழவுநனையே பிடித்து மரணபழமே பழுத்து
இடியுமுடல் மாமரத்தின் ......அருநீழல்
இசையில்விழ ஆதபத்தி அழியுமுனமே எனக்கு
இனியதொரு போதகத்தை ...... அருள்வாயே
வழுவுநெறி பேசு தக்கன் இசையுமக சாலையுற்ற
மதியிரவி தேவர்வஜ்ர ...... படையாளி
மலர்கமல யோனிசக்ர வளைமருவு பாணிவிக்ர
மறையஎதிர் வீரஉக்ரர் ...... புதல்வோனே
அழகிய கலாபகற்றை விகடமயிலேறி எட்டு
அசலமிசை வாகையிட்டு ...... வரும்வேலா
அடலசுரர் சேனைகெட்டு முறியமிக மோதிவெட்டி
அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே
திருப்பாடல் 107:
தனதனன தானதத்த தனதனன தானதத்த
தனதனன தானதத்த ...... தனதான
நடையுடையிலே அருக்கி நெடியதெரு வீதியிற்குள்
நயனமதனால் மருட்டி ...... வருவாரை
நணுகிமயலே விளைத்து முலையைவிலை கூறிவிற்று
லளிதமுடனே பசப்பி ...... உறவாடி
வடிவதிக வீடுபுக்கு மலரணையின் மீதிருத்தி
மதனனுடை ஆகமத்தின் ...... அடைவாக
மருவியுளமே உருக்கி நிதியமுளதே பறிக்கும்
வனிதையர்கள்ஆசை பற்றி ......உழல்வேனோ
இடையர்மனை தோறுநித்தம் உறிதயிர்நெய் பால்குடிக்க
இருகையுறவே பிடித்து ...... உரலோடே
இறுகிடஅசோதைகட்ட அழுதிடு கொபாலக்ருஷ்ணன்
இயல் மருகனே குறத்தி ...... மணவாளா
அடலெழுது மேடுமெத்த வருபுனலில்ஏறவிட்டு
அரியதமிழ் வாதுவெற்றி ...... கொளும்வேலா
அவுணர்குலம் வேரறுத்து அபயமென ஓலமிட்ட
அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே
திருப்பாடல் 108:
தனதனன தானதத்த தனதனன தானதத்த
தனதனன தானதத்த ...... தனதான
மடலவிழ் சரோருகத்து முகிழ்நகையிலே வளைத்து
மதசுக ப்ரதாப சித்ர ...... முலையாலே
மலரமளி மீதணைத்து விளையும் அமுதாதரத்தை
மனமகிழவே அளித்து ...... மறவாதே
உடலுயிரதாய் இருக்க உனதெனதெனாம் அறிக்கை
ஒரு பொழுதொணாது சற்றுமெனவே தான்
உரைசெய் மடவாரளித்த கலவிதரு தோதகத்தை
ஒழியவொரு போதகத்தை ...... அருள்வாயே
தடமகுட நாகரத்ந படநெளிய ஆடுபத்ம
சரணயுக மாயனுக்கு ...... மருகோனே
சரவணமிலே உதித்த குமரமுருகேச சக்ர
சயிலம் வலமாய் நடத்து ...... மயில்வீரா
அடல்மருவு வேல்கரத்தில் அழகுபெறவே இருத்தும்
அறுமுகவ ஞானதத்வ ...... நெறிவாழ்வே
அசுரர்குல வேரைவெட்டி அபயமென ஓலமிட்ட
அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே
திருப்பாடல் 109:
தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந்
தந்தனந் தந்தனந் ...... தனதான
அங்கதன் கண்டகன் பங்கிலன் பொங்கு!நெஞ்
சன்பிலன் துன்பவன் ...... புகழ்வாரா
அஞ்சொடுங்கும் பொதும்பொன்றை என்றுஞ்!சுமந்
தங்குமிங்குந் திரிந்திரை தேடுஞ்
சங்கடங் கொண்டவெஞ் சண்டிபண்டன் பெருஞ்
சஞ்சலன் கிஞ்சுகந் ...... தருவாயார்
தந்தொழும்பன் தழும்பன் பணிந்தென்றுநின்
தண்டையம் பங்கயம் ...... புகழ்வேனோ
கங்கையும் பொங்குநஞ்சம் பொருந்தும்!புயங்
கங்களுங் திங்களுங் ...... கழுநீருங்
கஞ்சமுந் தும்பையுங் கொன்றையுஞ் சந்ததங்
கந்தமுந் துன்றுசெஞ் ...... சடையாளர்
பங்குதங்கும் பசுங் கொம்பு தந்தின்புறும்
பந்தவெங் குண்டர்தங் ...... குலகாலா
பண்டிதன் கந்தன்என்றண்டர் அண்டந்தொழும்
பண்புநண்பும்பெறும் ...... பெருமாளே
திருப்பாடல் 110:
தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந்
தந்தனந் தந்தனந் ...... தனதான
தந்தமுந் துன்பவெஞ் சிந்தை கொண்டந்தகன்
தண்டஒன்றன்றொடுங்கிடும் ஆவி
தஞ்சமென்றும் பரிந்தின்சொல் வஞ்சந் !தெரிந்
தன்றும் என்றுந்தனந் ...... தனைநாடி
நின்தன் அன்பென்பதொன்றின்றி நன்றென்று!நெஞ்
சின்கணன் பொன்றில் மங்கையர்நேசம்
நின்றளந் துஞ்சளங் கொண்டிடும் !புன்கணந்
தின்பம் ஒன்றின்றி இங்குழல்வேனோ
சுந்தரன் பந்தமுஞ் சிந்த வந்தன்புடன்
தொண்டன் என்றன்று கொண்டிடும்ஆதி
தும்பைசெம் பொன்சொரிந்துந் தருங் கொன்றை!துன்
பங் கடிந்தென்பொடுந் ...... தொலையாநீர்
அந்த முந்திந்துவுங் கெந்தமிஞ்சுங் !கொழுந்
தன்றும் இன்றும் புனைந்திடும்வேணி
அன்பர்நெஞ்சின்புறுஞ் செஞ்சொலன் !கந்தனென்
றண்டர் அண்டந்தொழும் ...... பெருமாளே
திருப்பாடல் 111:
தந்தனா தனதனந் தந்தனா தனதனந்
தந்தனா தனதனந் ...... தனதான
உம்பரார் அமுதெனுந் தொண்டைவாய் அமுதம்!உண்
டுண்டுமே கலை கழன்றயலாக
உந்திவாவியில் விழுந்தின்பமா முழுகி!அன்
பொன்றிலாரொடு துவண்டணைமீதே
செம்பொனார் குடமெனுங் கொங்கைஆபரணமுஞ்
சிந்தவாள் விழி சிவந்தமராடத்
திங்கள்வேர்வுற அணைந்தின்ப வாரியில்விழுஞ்
சிந்தையேன் எனவிதங் ...... கரைசேர்வேன்
கொம்புநாலுடைய வெண் கம்பமால் கிரிவருங்
கொண்டல் புலோமசையள் சங்க்ரமபாரக்
கும்பமால் வரை பொருந்திந்த்ர பூபதிதருங்
கொண்டல்ஆனையை மணஞ் ...... செயும்வீரா
அம்புராசியு நெடுங் குன்றுமா மரமும்!அன்
றஞ்ச வானவர்உறுஞ் ...... சிறைமீள
அங்க நான்மறை சொலும் பங்கயாசனம்!இருந்
தங்கைவேல் உறவிடும் ...... பெருமாளே
திருப்பாடல் 112:
தந்தனா தனதனந் தந்தனா தனதனந்
தந்தனா தனதனந் ...... தனதான
வண்டுதான் மிகவிடங் கொண்டகார் அளகமென்
பந்திமா மலர் சொரிந்துடை சோர
வம்புசேர் கனிபொருந்தின்ப வாய்!அமுதருந்
தந்தமா மதனலம் ...... விதமாக
விண்டுமேனிகள் துவண்டன்றில் போல்!உளமிரண்
டொன்றுமாய் உறவழிந்தநுபோகம்
விஞ்சவே தருமிளங் கொங்கையார் வினைகடந்
துன்றன்மேல் உருக என்றருள்வாயே
பண்டு பாரினையளந்துண்ட மால் மருகசெம்
பைம்பொன்மா நகரில் இந்திரன்வாழ்வு
பண்பெலா மிகுதிபொங்கின்ப யானையை !மணந்
தன்பினோர் அகம் அமர்ந்திடுவோனே
அண்டர்தாம் அதிபயங் கொண்டுவாடிட!நெடுந்
தண்டுவாள் கொடு நடந்திடு சூரன்
அங்கமானது பிளந்தெங்கும் வீரிட!வெகுண்
டங்கைவேல் உறவிடும் ...... பெருமாளே
திருப்பாடல் 113:
தானனா தந்தனந் தானனா தந்தனந்
தானனா தந்தனந் ...... தனதான
காதல் மோகந்தருங் கோதைமார் கொங்கை!சிங்
கார நாகஞ்செழுங் ...... கனிவாய்கண்
காளகூடங் கொடுங் காலரூபம் பொருங்
காமபாணஞ் சுரும்பினம் வாழும்
ஓதிகார் செஞ்சொல்மென் பாகுதேன் !என்றயர்ந்
தோநமோ கந்த என்றுரையாதே
ஊசலாடும்புலன் தாரியே சென்று!நின்
றோயுமாறொன்றையுங் ...... கருதாதோ
தாதகீ சண்பகம் பூகமார் கந்த!மந்
தாரம் வாசந்தி சந்தனநீடு
சாம வேதண்ட வெங்கோப கோதண்ட!சந்
தான மாதெங்கள் பைம் ...... புனமேவும்
தீதிலா வஞ்சியஞ் சீதபாதம் படுஞ்
சேகரா தண்டையங் ...... கழல்பேணித்
தேவிபாகம் பொருந்தாதி நாதன் தொழுந்
தேசிகா உம்பர்தம் ...... பெருமாளே
திருப்பாடல் 114:
தானனா தத்தனத் தானனா தத்தனத்
தானனா தத்தனத் ...... தனதான
கோலகாலத்தை விட்டாசு பாடக்கொடிக்
கோவைபாடக் கொடிக் ...... கொடிவாதிற்
கோடிகூளக் கவிச் சேனைசாடக் கெடிக்
கூறுகாளக் கவிப் ...... புலவோன் யான்
சீலகாலப்புயற் பாரிசாதத் தருத்
த்யாகமேருப் பொருப்பென ஓதுஞ்
சீதரா சித்ர வித்தாரமே செப்பிடக்
கேளெனா நிற்பதைத் ...... தவிர்வேனோ
ஆலகாலப் பணிப் பாயல் நீளப்!படுத்
தாரவாரக் கடற்கிடைசாயும்
ஆழிமாலுக்கு நற் சாமவேதற்கும்!எட்
டாத ரூபத்தினிற் ...... சுடராய
காலகால ப்ரபுச் சாலுமால் !உற்றுமைக்
காக வேளைப்புகக் ...... கழுநீராற்
காதும்வேழச் சிலைப் பாரமீனக் கொடிக்
காமவேள் மைத்துனப் ...... பெருமாளே
திருப்பாடல் 115:
தானனா தத்தனத் தானனா தத்தனத்
தானனா தத்தனத் ...... தனதான
ஞாலமோடொப்ப மக்காள்எனா நற்சொலைத்
தீதெனா நற்றவத்தணைவோர் தம்
நாதமோடுட் கருத்தோடவே !தர்க்கமிட்
டோயுநாய் ஒப்பவர்க்கிளையாதே
நீலமேனிக்குலத் தோகைமேல் உற்று!நிட்
டூரசூர் கெட்டுகப் ...... பொரும்வேலா
நேசமாய் நித்த நிற்றாளை நீளச்!சமற்
றோத நீதிப்பொருள் தரவேணும்
கோலவாரிக்கிடைக் கோபராவிற் !படுத்
தானும் வேதக் குலத்தயனாருங்
கூறும்வானப் புவிக் கூறுதீரக் குறிப்
போதுறா நிற்பஅக் ...... கொடிதான
காலன் மார்புற்றுதைத்தானும்ஓர் கற்புடைக்
கோதைகாமக் கடற்கிடை மூழ்கக்
காவிசேர் கொத்தலர்ப் பாணமேய் வித்தகக்
காமவேள் மைத்துனப் ...... பெருமாளே
திருப்பாடல் 116:
தனதனா தனதனந் தனதனா தனதனந்
தனதனா தனதனந் ...... தனதான
கரவுசேர் மகளிர் குங்கும பயோதர !தனங்
களினறா துயில்வதுஞ் ...... சரிபேசுங்
கரசரோருக நகம் படவிடாய் தணிவதுங்
கமலநாபியின் முயங்கிய வாழ்வும்
அரவுபோல் இடை படிந்திரவெலா முழுகும்!இன்
பநல் மகோததி நலம் ...... பெறுமாறும்
அதர பானமுதமுந் தவிரவே மவுன!பஞ்
சர மனோலய சுகந் ...... தருவாயே
பரவுமாயிர முகங் கொடுதிசா முகதலம்
படர் பகீரதிவிதம் ...... பெறஆடல்
பயில்பணா வனமுகந்த குண மாசுண கணம்
பனிநிலா உமிழும் அம்புலிதாளி
குரவு கூவிளம் அரும்பிதழிதாதகி நெடுங்
குடில வேணியில் அணிந்தவர் ஆகங்
குழைய ஆதரவுடன் தழுவுநாயகி தருங்
குமரனே அமரர்தம் ...... பெருமாளே
திருப்பாடல் 117:
தனதனா தனதனந் தனதனா தனதனந்
தனதனா தனதனந் ...... தனதான
வடிவவேல் தனை வெகுண்டிளைஞர் ஆவியை!வளைந்
தமர்செய்வாள் விழியர் நெஞ்சினில் மாயம்
வளரமால் தனை மிகுந்தவர்கள் போல் அளவி!வந்
தணுகுமா நிதி கவர்ந்திடு மாதர்
துடியை நேரிடை தனந் துவளவே துயில்!பொருந்
தமளி தோய்பவர் வசஞ் ...... சுழலாதே
தொலைவிலா இயல் தெரிந்தவலமானது !கடந்
துனதுதாள் தொழமனந் ...... தருவாயே
படியெலா முடிய நின்றருளுமால் உதவு!பங்
கயனு நான்மறையும் உம்பரும்வாழப்
பரவையூடெழு விடம் பருகிநீள் பவுரி!கொண்
டலகையோடெரி பயின்றெருதேறிக்
கொடிய வாளரவிளம் பிறையினோடலை சலங்
குவளைசேர் சடையர் தந் ...... திருமேனி
குழையஆதரவுடன் தழுவு நாயகி தருங்
குமரனே அமரர்தம் ...... பெருமாளே
திருப்பாடல் 118:
தத்ததன தானான தத்ததன தானான
தத்ததன தானான ...... தனதான
கட்டமுறு நோய்தீமை இட்டகுடில் மாமாய
கட்டுவிடும் ஓர்காலம் அளவாவே
கத்தவுற ஓர்பாலர் தத்தை செறிவார்வாழ்வு
கற்புநெறி தான்மாய ...... உயர்காலன்
இட்டவொரு தூதாளு முட்டவினையால் மூடி
இட்டவிதியே ஆவி ...... இழவாமுன்
எத்தியுனை நாடோறு முத்தமிழினால் ஓத
இட்டமினி தோடார ...... நினைவாயே
துட்டரென ஏழ்பாரு முட்டவினையாள் சூரர்
தொக்கில்நெடு மாமார்பு ...... தொளையாகத்
தொட்டவடி வேல்வீர நட்டமிடுவார் பால
சுத்த தமிழார் ஞான ...... முருகோனே
மட்டுமரை நால்வேதன் இட்டமலர் போல்மேவ
மத்தமயில் மீதேறி ...... வருநாளை
வைத்தநிதி போல்நாடி நித்தம் அடியார்வாழ
வைத்தபடி மாறாத ...... பெருமாளே
திருப்பாடல் 119:
தத்ததன தானான தத்ததன தானான
தத்ததன தானான ...... தனதான
பக்கமுற நேரான மக்களுடனே மாதர்
பத்தியுடன் மேல்மூடி ...... இனிதான
பட்டினுடனே மாலையிட்டு நெடிதோர் பாடை
பற்றியணைவோர் கூவி ......அலைநீரிற்
புக்கு முழுகாநீடு துக்கமது போய்வேறு
பொற்றியிடவே ஆவி ...... பிரியாமுன்
பொற்கழலை நாடோறும் உட்பரிவினால்ஓது
புத்தி நெடிதாம்வாழ்வு ...... புரிவாயே
இக்கனுகவே நாடு முக்கணர் மகாதேவர்
எப்பொருளும் ஆமீசர் ...... பெருவாழ்வே
எட்டஅரிதோர் வேலை வற்ற முதுசூர் மாள
எட்டி எதிரேயேறும் ......இகல்வேலா
மக்களொடு வானாடர் திக்கில் முனிவோர்சூழ
மத்தமயில் மீதேறி ...... வருவோனே
வைத்தநிதி போல்நாடி நித்தம் அடியார் வாழ
வைத்தபடி மாறாத ...... பெருமாளே
திருப்பாடல் 120:
தானதன தந்தான தானதன தந்தான
தானதன தந்தான ...... தனதான
நீருநிலம் அண்டாத தாமரை படர்ந்தோடி
நீளம்அகலஞ் சோதி ...... வடிவான
நேசமலரும் பூவை மாதின் மணமும்போல
நேர்மருவி உண்காதலுடன் மேவிச்
சூரியனுடன் சோமனீழலிவை அண்டாத
சோதி மருவும் பூமி ...... அவையூடே
தோகை மயிலின் பாகனாம்என மகிழ்ந்தாட
சோதி அயிலுந் தாரும் அருள்வாயே
வாரி அகிலங்கூச ஆயிர பணஞ்சேடன்
வாய்விட ஒடெண்பாலும் ஊடுபோல
வார்மணி உதிர்ந்தோடவே கவினிறைந்தாட
மாமயில் விடுஞ்சேவல் ...... கொடியோனே
ஆரியனவன் தாதை தேடியினமும் பாடும்
ஆடல் அருணஞ்சோதி ...... அருள்பாலா
ஆனைமுகவன் தேடி ஓடியெ அணங்!காத
லாசை மருவுஞ்சோதி ...... பெருமாளே
திருப்பாடல் 121:
தத்ததனா தான தத்ததனா தான
தத்ததனா தான ...... தனதான
சுட்டது போலாசை விட்டுலகாசார
துக்கமிலா ஞான ...... சுகமேவிச்
சொற்கரணாதீத நிற்குணம்ஊடாடு
சுத்த நிராதார ...... வெளிகாண
மொட்டலர் வாரீச சக்ர சடாதார
முட்டவு மீதேறி ...... மதிமீதாய்
முப்பதும்ஆறாறு முப்பதும் வேறான
முத்திரையா மோனம் .....அடைவேனோ
எட்டவொணா வேதனத்தொடு !கோகோவெ
னப் பிரமாவோட ...... வரைசாய
எற்றிய ஏழாழி வற்றிட மாறாய
எத்தனையோ கோடி ...... அசுரேசர்
பட்டொருசூர் மாள விக்ரம வேலேவு
பத்திருதோள் வீர ...... தினைகாவல்
பத்தினிதோள் தோயும் உத்தம மாறாது
பத்திசெய் வானாடர் ...... பெருமாளே
திருப்பாடல் 122:
தத்ததனா தான தத்ததனா தான
தத்ததனா தான ...... தனதான
மைச்சுனமார் மா மனைச்சியு மாதாவு(ம்)
மக்களு மாறாத ...... துயர்கூர
மட்டிலதோர் தீயில் இக்குடில்தான் வேவ
வைத்தவர் தாமேக ...... மதிமாய
நிச்சயமாய் நாளும் இட்டொரு தூதேவு
நெட்டளவாம் வாதை ...... அணுகாமுன்
நெக்குருகா ஞான முற்றுன தாளோதி
நித்தலும் வாழ்மாறு ...... தருவாயே
நச்சணைமேல் வாழும் அச்சுத நால்வேதன்
நற்றவர் தாநாட ...... விடையேறி
நற்புதல்வா சூரர் பட்டிட வேலேவு
நற்றுணைவா ஞால ...... மிகவாழப்
பச்செனுநீள் தோகை மெய்ப்பரியூர் பாக
பத்தியதாமாறு ...... முகநாளும்
பக்ஷமு மேலாய் ஷடக்ஷரசூழ் பாத
பத்திசெய் வானாடர் ...... பெருமாளே
திருப்பாடல் 123:
தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன
தத்தனத் தத்ததன ...... தனதான
தத்துவத்துச் செயலொடொட்டில் பட்டக்குருகு
சத்துவிட்டப்படி பொல்அடியேனுஞ்
சச்சிலுற்றுப் படியில் விட்டுவிட்டுக் குளறி
சத்துவத்தைப் பிரிய ...... விடும்வேளை
சுத்தமுத்தப் பதவி பெற்றநற் பத்தரொடு
தொக்குசற்றுக் கடையன் ...... மிடிதீரத்
துப்புமுத்துச் சரண பச்சைவெற்றிப் புரவி
சுற்றவிட்டுக் கடுகி ...... வரவேணும்
வித்தகத்திப் பவள தொப்பையப்பற்கிளைய
வெற்றிசத்திக் கரக ...... முருகோனே
வெற்புமெட்டுத் திசையும் வட்டமிட்டுச் சுழல
விட்டபச்சைச் சரண ...... மயில்வீரா
கத்தர்நெட்டுச் சடையர் முக்கணக்கக் கடவுள்
கச்சியப்பர்க்கருள்செய் ...... குருநாதா
கற்ப தத்தைக்குருகி உற்பதத்துக் குறவர்
கற்பினுக்குற்று புணர் ...... பெருமாளே
திருப்பாடல் 124:
தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன
தத்தனத் தத்ததன ...... தனதான
மக்களொக்கல் தெரிவை பக்கமிக்கத் துணைவர்
மற்றுமுற்றக் குரவர் ...... அனைவோரும்
வைத்தசெப்பிற் பணமும் ரத்நமுத்திற் பணியு
மட்டு மற்றுப் பெருகும் ...... அடியாரும்
புக்கு துக்கித்தெரிகள் தத்தவைக்கப் புகுது
பொய்க்கு மெய்க்குச் செயலும் ...... உருகாதே
புஷ்பமிட்டுக் கருணை நற்பதத்தைப் பரவு
புத்திமெத்தத் தருவதொரு நாளே
செக்கர் கற்றைச் சடையில் மிக்க கொக்கிற்சிறகு
செக்கமுற்றச் சலமு ...... மதிசூடி
சித்தமுற்றுத் தெளிய மெத்தமெத்தத் திகழு
சித்த முத்திச் சிவமும் ...... அருள்வோனே
கொக்குறுப்புக் கொடுமை நிற்கும் வட்டத்தசுரை
கொத்தினொக்கக் கொலைசெய் ...... வடிவேலா
கொற்றவெற்றிப் பரிசை ஒட்டியெட்டிச் சிறிது
குத்திவெட்டிப் பொருத ...... பெருமாளே
திருப்பாடல் 125:
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ...... தனதான
உற்பாதப் பூ தக்காயத்தே
ஒத்தோடித்தத்தியல் காலை
உட்பூரித்தே சற்றே சற்றே
உக்காரித்தற்புத நேரும்
அற்பாயிற்றாய் நிற்பாரைப்!போ
லப் பாவித்துத் ...... !திரிவேனுக்
கப்பாசத்தால் எட்டா !அப்பா
லைப் போதத்தைப் ...... புரிவாயே
பொற்பார் பொற்பார் !புத்தேளிர்க்கா
கப்போய் முட்டிக் ...... கிரிசாடிப்
புக்காழிச் சூழ் கிட்டாகிச்சூர்
பொட்டாகக் குத்திய வேலா
முற்பாடப் பாடற்றாருக்கோர்
முட்காடற்கப் ...... பொருளீவாய்
முத்தா முத்தீ அத்தா சுத்தா
முத்தா முத்திப் ...... பெருமாளே
திருப்பாடல் 126:
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ...... தனதான
எற்றா வற்றா மட்டாகத்!தீ
யிற்காய் செக்கட் ...... !பிறைவாளே
யிற்றார் கைப்பாசத்தே !கட்டா
டிக் கோபித்துக் ...... கொடுபோமுன்
உற்றார் பெற்றார் சுற்றா நிற்பார்
ஒட்டோம் விட்டுக் ...... கழியீர்!என்
றுற்றோதுற்றே பற்றா நிற்பார்
அக்காலத்துக்குறவார் தான்
பற்றார் மற்றாடைக்கே குத்தா
பற்றானப்பிற் ...... களைவோனே
பச்சேனற் கானத்தே நிற்பாள்
பொற்பாதத்திற் ...... பணிவோனே
முற்றா வற்றா மெய்ப்போதத்தே
உற்றார் சித்தத்துறைவோனே
முத்தா முத்தீ அத்தா சுத்தா
முத்தா முத்திப் ...... பெருமாளே
திருப்பாடல் 127:
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ...... தனதான
செட்டாகத் தேனைப் போலச்!சீ
ரைத் தேடித் திட்பமதாகத்
திக்காமற் பாடுற்றாரிற் சீர்
உற்றாருக்குச் ...... சிலபாடல்
பெட்டாகக் கூறிப் !போதத்தா
ரைப்போல் வப்புற்றுழலாதே
பெற்றாரிற் சார்வுற்றாய் நற்றாள்
சற்றோதப் பெற்றிடுவேனோ
எட்டா நெட்டாகத் தோகைக்கே
புக்கோலத்திட்டிமையோர் !வா
னிற் பாரிற் சூழச் சூரைத்தான்
எட்டா வெட்டிப் ...... பொரும்வேலா
முட்டாமல் தாளைச் சேவிப்பார்
முற்பாவத்தைக் ...... களைவோனே
முத்தா முத்தீ அத்தா சுத்தா
முத்தா முத்திப் ...... பெருமாளே
திருப்பாடல் 128:
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ...... தனதான
பட்டாடைக்கே பச்சோலைக் !கா
துக்கே பத்தித் ...... தனமா !கும்
பக்கே நிட்டூரப் பார்வைக்கே
பட்டாசைப் பட்டுறவாடி
ஒட்டார் நட்டார் !வட்டாரத்தே
சுற்றே முற்றத் ...... தடுமாறும்
ஒட்டாரப் பாவிக்கே மிக்காம்
உற்றாள் கிட்டத் ...... தகுமோதான்
கட்டாவிப் போதுள் தாவிப்!பூ
கக் காவிற் புக்களிபாடுங்
கற்பூர் நற்சார் அக்காழித் தோய்
கத்தா சத்தித் ...... தகவோடே
முட்டாகக் கூரிட்டேனல் தாள்
முற்றாமற் கொள் குமரேசா
முத்தா முத்தீ அத்தா சுத்தா
முத்தா முத்திப் ...... பெருமாளே
திருப்பாடல் 129:
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ...... தனதான
பத்தேழெட்டீரெட்டேழ் ரட்டால்
வைத்தே பத்திப் ...... படவேயும்
பைப்பீறற் கூரைப் பாசத்தா
சற்காரத்துக்கிரை தேடி
எத்தேசத்தோடித் !தேசத்தோ
டொத்தேய் சப்தத்திலும்ஓடி
எய்த்தே நத்தா பற்றாமல்!தா
திற்றே முக்கக் ...... கடவேனோ
சத்தே முற்றாய் அத்தானைச் சூர்
கற்சாடிக் கற்பணி தேசா
சட்சோதிப் பூதிப் பாலத்தா
அக்கோடற் செச்சைய மார்பா
முத் தாபத்தார் எட்டா வைப்பா
வித்தா முத்தர்க்கிறையோனே
முத்தா முத்தீ அத்தா சுத்தா
முத்தா முத்திப் ...... பெருமாளே
திருப்பாடல் 130:
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ...... தனதான
பொற்கோவைக்கே பற்கோவைக்கே
பொய்ப் போகத்தைப் ...... பகர்வார்தம்
பொய்க்கே மெய்க்கே பித்தாகிப்!போ
கித்தேகைக்குப் ...... பொருள்தேடித்
தெற்கோடிக் காசிக்கோடிக் கீழ்
திக்கோடிப் பச்சிமமான
திக்கோடிப் பாணிக்கோடித்!தீ
வுக்கோடிக் கெட்டிடலாமோ
தற்கோலிப் பாவிப்பார் !நற்சீ
ரைச் சாரத் தற்பரமானாய்
தப்பா முப்பாலைத் தேடித்!தே
சத்தோர் நிற்கத் ...... தகையோடே
முற்கானப் பேதைக்காகப் போய்
முற்பால் வெற்பிற் ...... கணியானாய்
முத்தா முத்தீ அத்தா சுத்தா
முத்தா முத்திப் ...... பெருமாளே
திருப்பாடல் 131:
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ...... தனதான
பொற்பூவைச் சீரைப் போலப்!போ
தப் பேசிப் பொற் ...... கனிவாயின்
பொய்க்காமத்தே மெய்க்காமப்!பூ
ணைப்பூண் வெற்பில் ...... துகில்சாயக்
கற்பாலெக்கா உட்கோலிக்!கா
சுக்கே கைக்குத்திடு மாதர்
கட்கே பட்டே நெட்டாசைப்!பா
டுற்றே கட்டப் ...... படுவேனோ
சொற்கோலத்தே நற்காலைச்!சே
விப்பார் சித்தத்துறைவோனே
தொக்கே கொக்காகிச் சூழச்சூர்
விக்கா முக்கத் ...... தொடும்வேலா
முற்காலத்தே வெற்பேய்வுற்றார்
முத்தாள் முத்தச் ...... சிறியோனே
முத்தா முத்தீ அத்தா சுத்தா
முத்தா முத்திப் ...... பெருமாளே
திருப்பாடல் 132:
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ...... தனதான
மெய்க்கூணைத் தேடிப் பூமிக்கே
வித்தாரத்திற் ...... பலகாலும்
வெட்காமற் சேரிச் சோரர்க்கே
வித்தாசைச் சொற்களைஓதிக்
கைக்காணிக் கோணற் !போதத்தா
ரைப் போலக் கற்பழியாதுன்
கற்பூடுற்றே நற்றாளைப்!பா
டற்கே நற்சொல் ......தருவாயே
பொய்க்கோணத்தாழ் மெய்க்கோணிப் போய்
முற்பால் வெற்பிற் ...... புனமானைப்
பொற்றோளிற் சேர்கைக்காகப்!பா
தத்தாள் பற்றிப் ...... புகல்வோனே
முக்கோணத் தானத்தாளைப் பால்
வைத்தார் முத்தச் ...... சிறியோனே
முத்தா முத்தீ அத்தா சுத்தா
முத்தா முத்திப் ...... பெருமாளே
திருப்பாடல் 133:
தனதனன தனதனன தந்தந்த னத்ததன
தனதனன தனதனன தந்தந்த னத்ததன
தனதனன தனதனன தந்தந்த னத்ததன ...... தத்ததனதான
அகரமுதல் எனவுரைசெய் ஐம்பந்தொர் அக்ஷரமும்
அகிலகலைகளும் வெகுவிதங் கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும் அடங்குந் தனிப்பொருளை ...... எப்பொருளுமாய
அறிவையறிபவர் அறியும் இன்பந்தனைத் துரிய
முடிவைஅடிநடுமுடிவில் துங்கந்தனைச் சிறிய
அணுவையணுவினின் மலமு(ம்) நெஞ்சுங் குணத்ரயமும் ......அற்றதொருகாலம்
நிகழும் வடிவினை முடிவில் ஒன்றென்றிருப்பதனை
நிறைவுகுறைவொழிவற நிறைந்தெங்கு நிற்பதனை
நிகர்பகர அரியதை விசும்பின் புரத்ரயம் எரித்தபெருமானும்
நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு
பரவஅருளியமவுன மந்த்ரந்தனைப் பழைய
நினதுவழி அடிமையும் விளங்கும் படிக்கினிதுணர்த்தி அருள்வாயே
தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத ...... தத்ததகுதீதோ
தனதனன தனதனன தந்தந்த னத்ததன
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
தரரரர ரிரிரிரிரி யென்றென்றிடக்கையும் உடுக்கையுமியாவும்
மொகுமொகென அதிரமுதிர் அண்டம் பிளக்கநிமிர்
அலகைகரணமிடஉலகெங்கும் ப்ரமிக்கநட
முடுகுபயிரவர்பவுரி கொண்டின்புறப் படுகளத்திலொரு கோடி
முதுகழுகு கொடிகருடன் அங்கம்பொரக் குருதி
நதிபெருக வெகுமுக கவந்தங்கள் நிர்த்தமிட
முரசதிர நிசிசரரை வென்றிந்திரற்கரசளித்த பெருமாளே
திருப்பாடல் 134:
தனன தந்தன தனனா தனதன
தந்தன தனனா தனதன
தனன தந்தன தனனா தனதன ...... தனதான
அரிய வஞ்சகர் அறவே கொடியவர்
அவலர் வன்கணர் இனியார் அவகுணர்
அசடர் அன்பிலர் அவமே திரிபவர் ...... அதிமோக
அலையில் மண்டிய வழியே ஒழுகியர்
வினை நிரம்பிடு பவமே செறிபவர்
அருள் துறந்தவரிடம் வாழ் சவலைகள் ...... நரகேற
உரிய சஞ்சல மதியானதுபெறு
மனஇடும்பர்கள் இடமேதெனஅவர்
உபய அங்கமு நிலையாகிடஒரு ...... கவியாலே
உலகமுண்டவர் மதனார் இமையவர்
தருவெனும்படி மொழியா அவர்தர
உளது கொண்டுயிர் அவமே விடுவது ...... தவிராதோ
கரிய கொந்தள மலையாள் இருதன
அமுதுணுங் குருபரனே திரைபடு
கடலடும்படி கணையேவியஅரி ...... மருகோனே
கருணை கொண்டொரு குறமா மகளிடை
கலவி தங்கிய குமரா மயில்மிசை
கடுகி எண்டிசை நொடியே வலம்வரும் ...... இளையோனே
திரிபுரங்கனல் நகையால் எரிசெய்து
பொதுநடம்புரி அரனார் இடமுறை
சிவை சவுந்தரி உமையாள் அருளிய ...... புதல்வோனே
சிகர வெண்கரி அயிராவதமிசை
வருபுரந்தரன் அமராபதியவர்
சிறைவிடும்படி வடிவேல் விடவல ...... பெருமாளே
திருப்பாடல் 135:
தானான தான தான தானன
தானான தான தான தானன
தானான தான தான தானன ...... தந்ததான
ஆராத காதலாகி மாதர்தம்
ஆபாத சூட மீதிலேவிழி
ஆலோலனாய் விகாரமாகி ....இலஞ்சியாலே
ஆசாபசாசு மூடி மேலிட
ஆசார வீனனாகியே மிக
ஆபாசனாகி ஓடி நாளும் ....அழிந்திடாதே
ஈராறு தோளும் !ஆறுமாமுக
மோடாரு நீப வாச மாலையும்
ஏறான தோகை நீல வாசியும் ...... அன்பினாலே
ஏனோரும்ஓதுமாறு தீதற
நானாசு பாடியாடி நாடொறும்
ஈடேறுமாறு ஞான போதகம் .....அன்புறாதோ
வாராகி நீள் கபாலி மாலினி
மாமாயி ஆயி தேவி யாமளை
வாசாமகோசரா பராபரை ...... இங்குளாயி
வாதாடி மோடி காடுகாளுமை
மாஞால லீலி ஆலபோசனி
மாகாளி சூலி வாலை யோகினி ...... அம்பவானி
சூராரி மாபுராரி கோமளை
தூளாய பூதி பூசு நாரணி
சோணாசலாதி லோக நாயகி ...... தந்தவாழ்வே
தோளாலும் வாளினாலு மாறிடு
தோலாத வான நாடு சூறைகொள்
சூராரியே விசாகனே சுரர் ...... தம்பிரானே
திருப்பாடல் 136:
தானாதன தானந் தனத்த தானாதன தானந் தனத்த
தானாதன தானந் தனத்த ...... தனதான
ஆராதனர் ஆடம்பரத்து மாறாது சவாலம் பனத்தும்
ஆவாகன மாமந்திரத்து ...... மடலாலும்
ஆறார்தெச மாமண்டபத்தும் வேதாகம மோதுந் தலத்தும்
ஆமாறெரி தாமிந்தனத்து ...... மருளாதே
நீராளக நீர்மஞ்சனத்த நீடாரக வேதண்ட மத்த
நீநானற வேறின்றி நிற்க ...... நியமாக
நீவாவென நீயிங்கழைத்து பாராவர ஆநந்த சித்தி
நேரே பரமாநந்த முத்தி ...... தரவேணும்
வீராகர சாமுண்டி சக்ர பாராகண பூதங் களிக்க
வேதாள சமூகம் பிழைக்க ...... அமராடி
வேதாமுறையோ என்றரற்ற ஆகாச கபாலம் பிளக்க
வேர்மாமர மூலந் தறித்து ...... வடவாலும்
வாராகரம் ஏழுங் குடித்து மாசூரொடு போர்அம்பறுத்து
வாணாசன மேலுந் துணித்த ...... கதிர்வேலா
வானாடரசாளும் படிக்கு வாவாவென வாவென்றழைத்து
வானோர் பரிதாபந் தவிர்த்த ...... பெருமாளே
திருப்பாடல் 137:
தானா தத்தன தத்தன தானா தத்தன தத்தன
தானா தத்தன தத்தன ...... தனதான
ஆலாலத்தை அழுத்திய வேல்போல் நற்குழையைப்!பொரு
தாகாரைத் தொடர் கைக்கெணும் ...... விழியாலே
ஆளா மற்றவர் சுற்றிட மீளாமல் !தலையிட்டறி
வார் போகச்செயல் விச்சைகள் ...... விலைகூறிக்
கோலாலக் கணமிட்டு வராதார் நெக்குருகப் பொருள்
கூறாகப்பெறில் நிற்கவும் ...... இலதானார்
கூடா நட்புமும் உரைத்திடு கேடா விட்டகல் மட்டைகள்
கோமாளத்துயர் உட்பயம் ...... உறலாமோ
பாலாம் அக்கடலில் துயில் மாலோர் எட்டுதலைக்கிரி
பால் பார்வைக்களவிட்டும் ..... ஐயுறுபோதிற்
பார்மேல் இக்கனுடற் பொறியாய் வீழச்சுடும் வித்தகர்
பாலா பத்தரிடத்தியல் ...... பயில்வோனே
மேலாயத்தொடு திக்கடை மேவார் வெற்பொடரக்கரை
வேர்மாளப் பொருதிட்டொளி ...... விடும்வேலா
மேனாடர்ச் சிறைவிட்டருள் மீளா விக்கிரமத்தொடு
வேதாவைச் சிறையிட்டருள் ...... பெருமாளே
திருப்பாடல் 138:
தானான தான தத்த தத்த தத்தன
தானான தான தத்த தத்த தத்தன
தானான தான தத்த தத்த தத்தன ...... தனதான
ஆனாத ஞான புத்தியைக் கொடுத்ததும்
ஆராயு நூல்களிற் கருத்தளித்ததும்
ஆதேச வாழ்வினிற் ப்ரமித்திளைத்துயிர் ......அழியாதே
ஆசாப யோதியைக் கடக்க விட்டதும்
வாசாம கோசரத்திருத்துவித்ததும்
ஆபாதனேன் மிக ப்ரசித்தி பெற்றினிதுலகேழும்
யானாக நாம அற்புதத் திருப்புகழ்
தேனூற ஓதி எத்திசைப் புறத்தினும்
ஏடேவு ராஜதத்தினைப் பணித்ததும் ...... இடராழி
ஏறாத மாமலத்ரயக் குணத்ரய
நானாவிகார புற்புதப் பிறப்பற
ஏதேமமாய் எனக்கநுக்ரகித்ததும் ...... மறவேனே
மாநாக நாண் வலுப்புறத் துவக்கியொர்
மாமேரு பூதரத் தனுப்பிடித்தொரு
மாலாய வாளியைத் தொடுத்தரக்கரில் ...... ஒருமூவர்
மாளாது பாதகப் புரத்ரயத்தவர்
தூளாகவே நுதற் சிரித்த வித்தகர்
வாழ்வே வலாரி பெற்றெடுத்த கற்பக ...... வனமேவும்
தேநாயகா எனத் துதித்த உத்தம
வானாடர் வாழ விக்ரமத் திருக்கழல்
சேராத சூரனைத் துணித்தடக்கி ...... அவரைமோதிச்
சேறாய சோரி புக்களக்கர் திட்டெழ
மாறாநிசாசரக் குலத்தை இப்படி
சீராவினால் அறுத்தறுத்தொதுக்கிய ...... பெருமாளே
திருப்பாடல் 139:
தனதனனந் தாத்த தான தத்த
தனதனனந் தாத்த தான தத்த
தனதனனந் தாத்த தான தத்த ...... தனதான
இடமருவுஞ் சீற்ற வேலெடுத்து
விடமுழுதுந் தேக்கியே நிறைத்து
இருகுழையுந் தாக்கி மீள்கயற்கண் ...... வலையாலே
இனிமையுடன் பார்த்துளே அழைத்து
முகபடமுஞ் சேர்த்து வாரழுத்தும்
இருவரையுங் காட்டி மாலெழுப்பி ...... விலைபேசி
மடலவிழும் பூக்களால் நிறைத்த
சுருளளகந் தூற்றியே முடித்து
மறுகிடை நின்றார்க்கவே நகைத்து ...... நிலையாக
வருபொருள் கண்டேற்கவே பறிக்கும்
அரிவையர்தம் பேச்சிலே முழுக்க
மனமுருகுந் தூர்த்தனாய் இளைத்து ...... விடலாமோ
படிமுழுதுங் கூர்த்த மாகுலத்தி
முதுமறையின் பேச்சி நூலிடைச்சி
பகிர்மதியம் பூத்த தாழ்சடைச்சி ...... இருநாழி
படிகொடறங் காத்த மாபரைச்சி
மணிவயிரங் கோத்த தோள்வளைச்சி
பலதிசையும் போய்க்குலா விருப்பி ...... நெடுநீலி
அடுபுலியின் தோற்படாம் உடைச்சி
சமரமுகங் காட்டு மால்விடைச்சி
அகிலமும் உண்டார்க்கு நேரிளைச்சி ...... பெருவாழ்வே
அரிஅயனின்றேத்தவே மிகுத்த
விபுதர்குலம் பேர்க்க வாளெடுத்த
அசுரர்குலம் பாழ்க்க வேலெடுத்த ...... பெருமாளே
திருப்பாடல் 140:
தனதத்தத் தனதத்தத் தனதத்தத் தனதத்தத்
தனதத்தத் தனதத்தத் ...... தனதான
இடர்மொய்த்துத் தொடரிற்பொய்க் குடில்!அக்கிக்கிடையிட்டிட்
டினிமைச்சுற்றமு மற்றைப் ...... புதல்வோரும்
இனமொப்பித் திசையச்சொற் பலகத்திட்டிழியப் !பிற்
கிடையத் துக்கமும் விட்டிட்டவரேக
விடமெத்தச் சொரிசெக்கட் சமன்வெட்டத் !தனமுற்றிட்
டுயிர்வித்துத் தனையெற்றிக் ...... கொடுபோமுன்
வினைபற்றற்றற நித்தப் புதுமைச்சொற் கொடுவெட்சிப்
புயவெற்றிப் புகழ்செப்பப் ...... பெறுவேனோ
அடர்செக்கர்ச் சடையிற்பொற் பிறையப்புப் !புனையப்பர்க்
கறிவொக்கப் பொருள் கற்பித்திடுவோனே
அலகைக்குட் பசிதித்தப் பலகைக் கொத்தது !பட்டிட்
டலறக் குத்துறமுட்டிப் ...... பொரும்வேலா
கடலுக்குட் படுசர்ப்பத்தினில் மெச்சத் துயில்பச்சைக்
கிரிகைக்குட் திகிரிக் கொற்றவன்மாயன்
கமலத்திற் பயில்நெட்டைக் குயவற்கெண் திசையர்க்குக்
கடவுட் சக்கிரவர்த்திப் ...... பெருமாளே
திருப்பாடல் 141:
தனதனன தான தத்த தந்த
தனதனன தான தத்த தந்த
தனதனன தான தத்த தந்த ...... தனதான
இரவினிடை வேள் தொடுத்துடன்று
முறுகுமலர் வாளியைப் பிணங்கி
இருகுழையு மோதி அப்படங்கு ...... கடலோடே
எதிர்பொருது மானினைத் துரந்து
சலதிகிழி வேல்தனைப் பொருந்தி
இனியமுத ஆலமுற்ற கண்கள் ...... வலையாலே
முரணிளைஞர் ஆவியைத் தொ டர்ந்து
விசிறிவளை மாதரைக் கலந்து
மொழியதர கோவை இக்கருந்தி ...... அமுதாகு
முகிழ்முகுளி தார வெற்பணைந்து
சுழிமிதுன வாவியிற் புகுந்து
முழுகிஅழியாமல் நற்பதங்கள் ...... தரவேணும்
திரையுலவு சாகரத்திலங்கை
நகரிலுறை ராவணற்கியைந்த
தெசமுடியும் ஈருபத்தொழுங்கு ...... திணிதோளுஞ்
சிதையவொரு வாளியைத் துரந்த
அரிமருக தீதறக் கடந்து
தெளிமருவு காரணத்தமர்ந்த ...... முருகோனே
அரணமதிள் சூழ்புரத்திருந்து
கருதுமொரு மூவருக்கிரங்கி
அருளுமொரு நாயகற் பணிந்த ...... குருநாதா
அகல்முடிவை ஆதியைத் தெளிந்து
இரவுபகலாக நெக்கவிழ்ந்த
அடியவர்கள் பாடலுக்கிசைந்த ...... பெருமாளே
திருப்பாடல் 142:
தனன தந்தன தானா தானா
தனன தந்தன தானா தானா
தனன தந்தன தானா தானா ...... தனதான
இரவொடும் பகலே மாறாதே
அநுதினந் துயர் ஓயாதேயே
எரியும் உந்தியி னாலே மாலே ...... பெரிதாகி
இரைகொளும்படி ஊடே பாடே
மிகுதி கொண்டொழியாதே வாதே
இடைகளின்சில நாளே போயே ...... வயதாகி
நரைகளும் பெரிதாயே போயே
கிழவன் என்றொரு பேரே சார்வே
நடைகளும்பல தாறே மாறே ...... விழலாகி
நயனமுந் தெரியாதே போனால்
விடிவதென்றடியேனே தானே
நடன குஞ்சித வீடே கூடாதழிவேனோ
திருநடம்புரி தாளீ தூளீ
மகர குண்டலி மாரீ சூரி
திரிபுரந்தழல்ஏவீ சார்வீ ...... அபிராமி
சிவன்இடந்தரி நீலீ சூலீ
கவுரி பஞ்சவி ஆயீ மாயீ
சிவைபெணம்பிகை வாலா சீலா ...... அருள்பாலா
அரவ கிங்கிணி வீரா தீரா
கிரிபுரந்தொளிர் நாதா பாதா
அழகிளங்குற மானார் தேனார் ...... மணவாளா
அரியரன் பிரமாவோடே!மூ
வகையர் இந்திர கோமானீள்!வா
னமரர் கந்தருவானோர் ஏனோர் ...... பெருமாளே
திருப்பாடல் 143:
தனதன தானான தானன
தனதன தானான தானன
தனதன தானான தானன ...... தனதான
இருகுழை மீதோடி மீளவும்
கயல்களும் ஆலால காலமும்
ரதிபதி கோலாடு பூசலும் ......எனவே!நின்
றிலகிய கூர்வேல் விலோசன
ம்ருகமத பாடீர பூஷித
இளமுலை மாமாதரார் வசம் ...... உருகாதே
முருகவிழ் கூதாள மாலிகை
தழுவிய சீர்பாத தூளியின்
முழுகிவிடாய் போமனோலயம் ...... வரவோது
முழுமதி மாயா விகாரமும்
ஒழிவது வாசா மகோசர
முகுளித ஞானோபதேசமும் ...... அருள்வேணும்
அருமறை நூலோதும் வேதியன்
இரணிய ரூபா நமோவென
அரிகரி நாராயணாவென ...... ஒருபாலன்
அவனெவன் ஆதாரமேதென
இதனுளனோஓது நீயென
அகிலமும் வாழ்வான நாயக ...... எனஏகி
ஒருகணை தூணோடு மோதிட
விசைகொடு தோள்போறு வாளரி
உகிர்கொடு வாரா நிசாசரன் ......உடல்பீறும்
உலகொரு தாளான மாமனும்
உமையொரு கூறான தாதையும்
உரைதரு தேவா சுராதிபர் ...... பெருமாளே
திருப்பாடல் 144:
தனதன தனதன தத்தத் தானன
தனதன தனதன தத்தத் தானன
தனதன தனதன தத்தத் தானன ...... தனதான
இருமுலை மலையென ஒப்பிட்டேஅவர்
இருவிழி அதனில் அகப்பட்டே மனம்
இசைபட வசனம் உரைத்திட்டேபலம்...... இனிதோடே
இடையது துவள குலுக்கிக் காலணி
பரிபுர ஒலிகள் தொனிக்கப் பூதர
இளமுலை குழையஅணைத்துக் கேயுர ...... மணியோடே
மதகத பவளம் அழுத்திப் பூஷணம்
அணிபல சிதறிநெறித்துத் தானுக
மருமலர் புனுகு தரித்துப் பூவணை ...... மதராஜன்
மருவிய கலவி தனக்கொப்பாம்என
மகிழ்வொடு ரசிது மிகுத்துக் கோதையை
மருவியும் உருகி களைத்துப் பூமியில் ...... உழல்வேனோ
திரிபுரம் எரிய நகைத்துக் காலனை
உதைபட மதனை அழித்துச் சாகர
திரைவரு கடுவை மிடற்றில் தானணி ...... சிவனார்தந்
திருவருள் முருக பெருத்துப் பாரினில்
சியொதனன் மடிய மிகுத்துப் பாரத
செயமுறும் அரிதன் மனத்துக்காகிய ...... மருகோனே
நரிகழு அதுகள் களிக்கச் சோரிகள்
ரணகள முழுது மிகுத்துக் கூளிகள்
நடமிட அசுரர் குலத்துக் காலனை ...... நிகராகி
நனிகடல் கதறபொருப்புத் தூளெழ
நணுகிய இமையவருக்குச் சீருற
நணுகலர் மடியதொலைத்துப் பேர்பெறு ...... பெருமாளே
திருப்பாடல் 145:
தனதன தானா தானா தனதன தானா தானா
தனதன தானா தானா ...... தனதான
இலகிய வேலோ சேலோ ஒளிவிடு வாளோ போதோ
எமன்விடு தூதோ மானோ ...... விடமீதோ
எனவிழி கூறா வாரா அரிவையர் தோளூடாடா
இறுதியில் வேறாய் மாறா ...... நினைவாலே
பலபல கோளாய் மாலாய் உழலும்அதானால் வீணே
படிறு சொலாகா லோகாயதனாகிப்
பரிவுடனாடாய் வீடாய் அடிமையும் ஈடேறாதே
பணிதியில் மூழ்கா மாயா ...... விடுவேனோ
அலைகடல் கோகோ கோகோ எனவுரை கூறா வோடா
அவுணரை வாடா போடா ...... எனலாகி
அழகிய வேலால் வாளால் நிலவிய சீராவாலே
அவருடல் வாணாள் ஈரா ...... எதிராகி
மலைமிகு தோளா போதா அழகிய வாலா பாலா
மகபதி வாழ்வே சேயே ...... மயில்வீரா
மறைதொழு கோவே தேவே நறை செறி பூவே நீரே
வளவிய வேளே மேலோர் ...... பெருமாளே
திருப்பாடல் 146:
தனதன தனதத்த தனனா தனனா
தனதன தனதத்த தனனா தனனா
தனதன தனதத்த தனனா தனனா ...... தனதான
உமையெனு மயில்பெற்ற மயில்வாகனனே
வனிதையர் அறுவர்க்கும் ஒருபாலகனே
உளமுருகிய பத்தர்உறவே மறவேன் ...... எனவோதி
உருகுதலொரு சற்றும் அறியேன் வறியேன்
இருவினை இடையிட்ட கொடியேன் அடியேன்
உணர்விலி பெறமுத்தி தருவாய் துகிர்வாய் ...... மடமாதர்
அமையென வளர்சித்ர இருதோள் தழுவா
அமுதென மதுரித்த கனிவாய் அணுகா
அமளியில் அணைவுற்ற அநுராக மகோததி மூழ்கி
அநவரதமும் உற்ற மணிமா முலைதோய்
கலவியினலம் அற்ப சுகமாகினு மா
அநுபவம் இதுசற்றும் விடவோ இயலாதியலாதே
தமனிய குலசக்ர கிரியோ கடலோ
விடமென முடிவைத்த முதுபேர்இருளோ
தனுவென முனையிட்ட கொலைமூவிலைவேல் ...... கொடுபார்வை
தழலெழ வருமுக்ர எமபாதகனோ
யுகஇறுதியில் மிக்க வடவானலமோ
தனியிவன் எனமிக்க பிசிதாசன பூபதியாகி
இமையவர் அனைவர்க்கும் அறையோ அறையோ
அரியயன் முழுதுக்கும் அறையோ அறையோ
எழுபுவி உலகுக்கும் அறையோ அறையோ ...... பொரவாரும்
எனவரும் ஒருதுட்டன் முறையோ முறையோ
வடகுல கிரியெட்டும் அபிதா அபிதா
எனவொரு அயில்தொட்ட அரசே இமையோர் ...... பெருமாளே
திருப்பாடல் 147:
தனத்த தத்தன தனதன தந்தத்
தனத்த தத்தன தனதன தந்தத்
தனத்த தத்தன தனதன தந்தத் ...... தனதான
உரைத்த பற்றுடன் அடிகள்!பணிந்திட்
டிருத்தி மெத்தென இளநகையுஞ்!சற்
றுமிழ்த்தடைக்கலம் எனஎதிர் கும்பிட்டணைமேல்!வீழ்ந்
துடுத்த பொற்றுகில் அகலல்குலுந்!தொட்
டெடுத்தணைத்திதழ் பெருகமுதந் !துய்த்
துனக்கெனக்கென உருகி முயங்கிட்டுளம் வேறாய்
அருக்கியத்தனை எனுமவசம் !பட்
டறுத்தொதுக்கிய நகநுதியுந் !தைத்
தறப் பிதற்றிட அமளிகலங்கித் ...... தடுமாறி
அளைத்துழைத்திரு விழிகள் !சிவந்திட்
டயர்த்திதத்தொடு மொழிபவர் !உந்திக்
கடுத்தகப்படு கலவியில் நொந்தெய்த்திடலாமோ
தரைக்கடற்புகு நிருதர் தயங்கச்
சளப்படத்தட முடிகள் பிடுங்கித்
தகர்த்தொலித்தெழு மலையொடு துண்டப் ...... பிறைசூடி
தனுக்கிரித் திரிதர எதிருங்!கொக்
கினைப் பதைத்துடல் அலறிடவஞ்சத்
தருக்கடக்கிய சமர்பொரு துங்கத் ...... தனிவேலா
பருப்பதப்ரிய குறுமுனி !வந்தித்
திருக்கும் உத்தம நிருதர் கலங்கப்
படைப்பெலத்தொடு பழயக்ரவுஞ்சக் ...... கிரிசாடிப்
படர்ப்பறைக் குருகுடல் உதிரங்!குக்
குடக் கொடிக்கிடு குமரகொடுங்கற்
பதத்திறுத்துகு பசிய சிகண்டிப் ...... பெருமாளே
திருப்பாடல் 148:
தனதத்தன தானன தந்தன
தனதத்தன தானன தந்தன
தனதத்தன தானன தந்தன ...... தனதான
உலகத்தினில் மாதரு மைந்தரும்
உறுசுற்றமும் வாழ்வொடுறுங் கிளை
உயர் துக்கமுமோடுறவென்றுற ...... வருகாலன்
உதிரத்துடனே சலம் என்பொடு
உறுதிப்படவே வளருங்குடில்
உதிரக்கனல் மீதுற என்றனை ...... ஒழியாமுன்
கலகக்கலை நூல்பல கொண்டெதிர்
கதறிப்பதறா உரை வென்றுயர்
கயவர்க்குளனாய் வினை நெஞ்சொடு ...... களிகூருங்
கவலைப் புலமோடுற என்துயர்
கழிவித்துன தாளிணை அன்பொடு
கருதித்தொழும் வாழ்வது தந்திட ...... நினைவாயே
இலகப் பதினாலுலகங்களும்
இருளைக் கடிவான்எழும் அம்புலி
எழில்மிக்கிட வேணியில் வந்துற ...... எருதேறி
இருகைத்தல மான்மழுவும் புனை
இறைஅப்பதியாகிய இன்சொலன்
இசையப் பரிவோடினிதன்றருள் ......இளையோனே
மலைபட்டிரு கூறெழ வன்கடல்
நிலை கெட்டபிதாவென அஞ்சகர்
வலியற்றசுரேசரு மங்கிட ...... வடிவேலால்
மலைவித்தக வானவர் இந்திரர்
மலர்கைக்கொடு மாதவருந் தொழ
வடிவுற்றொரு தோகையில் வந்தருள் ...... பெருமாளே
திருப்பாடல் 149:
தனதனன தனதனன தானான தானதன
தனதனன தனதனன தானான தானதன
தனதனன தனதனன தானான தானதன ...... தந்ததான
உறவின்முறை கதறியழ ஊராரும் ஆசையற
பறைதிமிலை முழவினிசை ஆகாச மீதுமுற
உலகிலுள பலர்அரிசி வாய்மீதிலே சொரியும் ......அந்தநாளில்
உனதுமுக கருணைமலர் ஓராறும் ஆறிருகை
திரள்புயமும் எழில்பணிகொள் வார்காது நீள்விழியும்
உபயபத மிசைகுலவு சீரேறு நூபுரமும் ...... அந்தமார்பும்
மறையறைய அமரர்தரு பூமாரியே சொரிய
மதுவொழுகு தரவில்மணி மீதேமுநூல் ஒளிர
மயிலின்மிசை அழகுபொலி ஆளாய்முனார்அடியர் ...... வந்துகூட
மறலிபடை யமபுரமு மீதோடவே பொருது
விருதுபல முறைமுறையிலே ஊதி வாதுசெய்து
மதலையொரு குதலையடி நாயேனையாள இஙன் ...... வந்திடாயோ
பிறையெயிறு முரணசுரர் பேராது பாரில்விழ
அதிரஎழு புவியுலகம் ஈரேழும் ஓலமிட
பிடிகளிறின் அடல்நிரைகள் பாழாகவேதிசையில் ...... நின்றநாகம்
பிரியநெடு மலையிடிய மாவாரி தூளியெழ
பெரியதொரு வயிறுடைய மாகாளி கூளியொடு
பிணநிணமும் உணவுசெய்து பேயோடும் ஆடல்செய ...... வென்றதீரா
குறமறவர் கொடிஅடிகள் கூசாது போய்வருட
கரடிபுலி திரிகடிய வாரான கானில்மிகு
குளிர்கணியின் இள மரமதேயாகி நீடியுயர் ...... குன்றுலாவி
கொடியதொரு முயலகனின் மீதாடுவாருடைய
ஒருபுறமதுற வளரு மாதாபெறா அருள்செய்
குமரகுரு பரஅமரர் வானாடர் பேணஅருள் ...... தம்பிரானே
திருப்பாடல் 150:
தனன தந்தன தானா தானன
தனன தந்தன தானா தானன
தனன தந்தன தானா தானன ...... தனதான
உறவு சிங்கிகள் காமாகாரிகள்
முறை மசங்கிகள் ஆசா வேசிகள்
உதடு கன்றிகள் நாணா வீணிகள் ...... நகரேகை
உடைய கொங்கையின் மீதே தூசிகள்
பிணமெனும்படி பேய்நீராகிய
உணவை உண்டுடை சோர்கோமாளிகள் ...... கடல்!ஞாலத்
தறவு நெஞ்சுபொலா மாபாவிகள்
வறுமை தந்திடு பாழ்மூதேவிகள்
அணிநெருங்கிகள் ஆசா பாஷண ...... மடமாதர்
அழகுயர்ந்த பொய் மாயா ரூபிகள்
கலவியின்பம் எனாவே சோருதல்
அலமலந் தடுமாறாதோர் கதி ...... அருள்வாயே
பறவைஎன்கிற கூடார் மூஅரண்
முறையிடுந் தமர் வானோர் தேரரி
பகழி குன்றவிலாலே நீறெழ ...... ஒருமூவர்
பதநினைந்துவிடாதே தாள் பெற
அருள்புரிந்த பிரானார் மாபதி
பரவு கந்த சுவாமீ கானகம் ...... அதின்மேவுங்
குறவர் தங்கள்பிரானே மாமரம்
நெறுநெறென்றடி வேரோடேநிலை
குலைய வென்றிகொள் வேலேஏவிய ...... புயவீரா
குயில்கள் அன்றில்கள் கூகூ கூவென
மலர்கள் பொங்கிய தேன்வீழ் காமிசை
குறவர் சுந்தரியோடே கூடிய ...... பெருமாளே
No comments:
Post a Comment