Sunday, May 27, 2018

கயிலை

(வட நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)

பிரிவு: வட நாடு

மாவட்டம்: 

திருக்கோயில்: திருக்கயிலை மலை 

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்)நாவுக்கரசு சுவாமிகள் (தேவாரம்),  சுந்தரர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்:


அமைவிடம் (செல்லும் வழி):



திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 6.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனதன தனனத் தான தனதன தனனத் தான
     தனதன தனனத் தான ...... தனதான

திருநிலம் மருவிக் காலின் இருவழி அடைபட்டோடி
     சிவவழி உடனுற்றேக ...... பரமீதே

சிவசுடர் அதனைப் பாவை மணமென மருவிக் கோல
     திரிபுரம் எரியத் தீயில் நகைமேவி

இருவினை பொரியக் கோல திருவருள் உருவத்தேகி
     இருள்கதிரிலி பொன் பூமி ...... தவசூடே

இருவரும் உருகிக் காயம் நிலையென மருவித் தேவர் 
     இளையவன் என வித்தாரம் ...... அருள்வாயே

பரிபுர கழலெட்டாசை செவிடுகள் பட முத்தேவர்
     பழமறை பணியச் சூல ...... மழுமானும்

பரிவொடு சுழலச் சேடன் முடிநெறு நெறெனக் கோவு
     பரியினை மலர் விட்டாடி ...... அடியார்கள்

அரஹர உருகிச் சேசெ எனதிரு நடனக் கோலம் 
     அருள்செயும் உமையின் பாகர்  ...... அருள்பாலா

அலரணி குழல்பொற் பாவை திருமகள் அமளிப் !போரொ
     டடியவர் கயிலைக்கான ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தானந் தனத்ததன தானந் தனத்ததன
     தானந் தனத்ததன ...... தனதான

தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிள நிர்
     சீரும் பழித்த சிவம் அருளூறத்

தீதும் பிடித்தவினை ஏதும் பொடித்துவிழ
     சீவன் சிவச்சொருபம் எனதேறி

நானென்பதற்று உயிரொடூண் என்பதற்று வெளி
     நாதம் பரப்பிரம ...... ஒளிமீதே

ஞானம் சுரப்ப மகிழ் ஆநந்த சித்தியொடெ
     நாளும் களிக்க பதம் அருள்வாயே

வானம் தழைக்க அடியேனும் செழிக்கஅயன்
     மாலும் பிழைக்கஅலை ...... விடம் மாள

வாரும் கரத்தன் எமையாளும் தகப்பன்மழு
     மானின் கரத்தன்அருள் ...... முருகோனே

தானம் தனத்ததனனா வண்டு சுற்றிமது
     தானுண் கடப்ப மலர் அணிமார்பா

தானம் குறித்து எமையாளும் திருக்கயிலை
     சாலும் குறத்திமகிழ் ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தனத்த தனத்த தனத்த தனத்த
     தனத்த தனத்த ...... தனதான

நகைத்து உருக்கி விழித்து மிரட்டி
     நடித்து விதத்தில் அதிமோகம்

நடத்தும் சமத்தி முகத்தை மினுக்கி
     நலத்தில் அணைத்து ...... மொழியாலும் 

திகைத்த வரத்தில் அடுத்த பொருள்கை
     திரட்டி எடுத்து ...... வரவேசெய்

திருட்டு முலைப்பெண் மருட்டு வலைக்குள்
     தெவிட்டு கலைக்குள் ...... விழுவேனோ

பகைத்த அரக்கர் சிரத்தை அறுத்து
     படர்ச்சி கறுத்த ...... மயிலேறிப்

பணைத்த கரத்த குணத்த மணத்த
     பதத்த கனத்த ...... தனமாதை

மிகைத்த புனத்தில் இருத்தி அணைத்து
     வெளுத்த பொருப்பில் உறைநாதா

விரித்த சடைக்குள் ஒருத்தி இருக்க
     ம்ருகத்தை எடுத்தொர் ...... பெருமாளே.

திருப்பாடல் 4:
தனன தந்தன தானனா தனதனன
     தனன தந்தன தானனா தனதனன
          தனன தந்தன தானனா தனதனன ...... தனதான

பனியின் விந்துளி போலவே கருவினுறு  
     அளவில் அங்கொரு சூசமாய் மிளகுதுவர்
          பனை தெனங்கனி போலவே பலகனியின் ...... வயறாகிப்

பருவமும் தலைகீழதாய் நழுவிநிலம் 
     மருவி ஒன்பது வாசல் சேர்உருவமுள
          பதுமையின் செயல் போலவே வளிகயிறின் உடனாடி

மனவிதம் தெரியாமலே !மலசலமொ
     டுடல் நகர்ந்தழுதாறியே அனை முலையின்
          மயம் அயின்றொரு பாலனாய் இகமுடைய ...... செயல்மேவி

வடிவம் முன்செய்த தீமையால் எயும்உனையும்
     அற மறந்தகம் மீதுபோய் தினதினமும் 
          மனம்அழிந்துடல் நாறினேன் இனிஉனது ...... கழல்தாராய்

தனன தந்தன தானனா தனதனன
     தினன திந்தன தீததோ திகுததிகு
          தகுத குந்ததி தாகுதோ எனமுழவு ...... வளைபேரி

தவில்கணம்பறை காளமோடிமிலை தொனி
     இனம் முழங்கெழு வேலைபோல் அதிரபொரு
          சமர் முகங்களின் மேவியே விருதுசொலும் அவுணோர்கள்

சினம்அழிந்திட தேர்கள் தோல்அரிபரிகள்
     குருதி எண்திசை மூடவே அலகைநரி
          சிறையினம் களி கூரவே நகையருளி ...... விடும்வேலா

சிவன் மகிழ்ந்தருள் ஆனைமாமுகன் மருவி
     மன மகிழ்ந்தருள் கூரஓர் கயிலைமகிழ்
          திகழ் குறிஞ்சியின் மாதுமால் மருவுபுகழ் ...... பெருமாளே.

திருப்பாடல் 5:
தனதனனத் ...... தனதான
     தனதனனத் ...... தனதான

புமியதனில் ......ப்ரபுவான
     புகலியில் வித்தகர் போல

அமிர்த கவித் ...... தொடைபாட
     அடிமை தனக்கருள்வாயே

சமரில் எதிர்த்தசுர் மாளத்
     தனிஅயில் விட்டருள்வோனே

நமசிவயப் ...... பொருளானே
     ரசதகிரிப் ...... பெருமாளே.

திருப்பாடல் 6:
தனத்தத் தனத்த தத்த தனத்தத் தனத்த தத்த
     தனத்தத் தனத்த தத்த ...... தனதான

முகத்தைப் பிலுக்கி மெத்த மினுக்கித் தொடைத்து ரத்ந
     முலைக் கச்சவிழ்த்தசைத்து ...... முசியாதே

முழுக்கக் கழப்பி எத்தி மழுப்பிப் பொருள் பறித்து
     மொழிக்குள் படுத்தழைத்தமளி மீதே

நகைத்திட்டழுத்தி முத்தம் அளித்துக் களித்து மெத்த
     நயத்தில் கழுத்திறுக்கி ...... அணைவார் பால்

நடுக்குற்றவர்க்கு மெத்த மனத்தைப் பெருக்க வைத்து
     நயத்துத் தியக்கி நித்தம் அழிவேனோ

செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க
     திமித்தித் திமித்தி தித்தி ...... எனஆடும்

செகத்துக்கொருத்தர் புத்ர நினைத்துத் துதித்த பத்த
     ஜெனத்துக்கினித்த சித்தி ...... அருள்வோனே

மிசைத்துத் திடத்தொடுற்று அசைத்துப் பொறுத்தரக்கன்
     மிகுத்துப் பெயர்த்தெடுத்த ...... கயிலாய

மிசைக்குற்றடுத்து மற்ற பொருப்பைப் பொடித்திடித்து
     மிதித்துத் துகைத்து விட்ட ...... பெருமாளே.

No comments:

Post a Comment