(பாண்டிய நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: பாண்டிய நாடு
மாவட்டம்: புதுக்கோட்டை
திருக்கோயில்: அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், மணிவாசகர் (திருவாசகம்)
தலக் குறிப்புகள்:
அறந்தாங்கியிலிருந்து 14 கி.மீ தூரத்திலும், புதுக்கோட்டையிலிருந்து 45 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயில்..
(Google Maps: Thiruchendur Murugan Temple, Tiruchendur, Tamil Nadu 628215, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 3.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தனத்த தந்தன தானன தந்தத்
தனத்த தந்தன தானன தந்தத்
தனத்த தந்தன தானன தந்தத் ...... தனதான
இரத்தமும்சியும் மூளையெலும்புள்
தசைப் பசுங்குடல் நாடி!புனைந்திட்
டிருக்கு மண்சல வீடுபுகுந்திட்டதில் மேவி
இதத்துடன்புகல் சூது!மிகுந்திட்
டகைத்திடும் பொருளாசை எனும்புள்
தெருட்டவும் தெளியாது பறந்திட்டிட மாயா
பிரத்தம் வந்தடு வாதசுரம்!பித்
துளைப்புடன் பல வாயுவும் மிஞ்சிப்
பெலத்தையும் சில நாளுள் ஒடுங்கித் ...... தடிமேலாய்ப்
பிடித்திடும்பல நாள்கொடு மந்திக்
குலத்தெனும்படி கூனியடங்கிப்
பிசக்கு வந்திடு போதுபினஞ்சிச் ...... சடமாமோ
தரித்த னந்தன தானன தந்தத்
திமித்தி மிந்திமி தீதக் திந்தத்
தடுட்டு டுண்டுடு டூடுடி மிண்டிட்டியல் தாளம்
தனத்த குந்தகு தானன தந்தக்
கொதித்து வந்திடு சூருடல் சிந்தச்
சலத்துடன்கிரி தூள்படெறிந்திட்டிடும் வேலா
சிரத்துடன் கரமேடு !பொழிந்திட்
டிரைத்து வந்தமரோர்கள் படிந்துச்
சிரத்தினும்கமழ் மாலைமணம்பொற் ...... சரணோனே
செகத்தினில் குருவாகிய தந்தைக்
களித்திடும்குரு ஞான ப்ரசங்கத்
திருப்பெருந்துறை மேவிய கந்தப் ...... பெருமாளே.
திருப்பாடல் 2:
தனத்தனந் தனதன தனத்தனந் தனதன
தனத்தனந் தனதன ...... தனதான
வரித்தகுங்குமம் அணி முலைக் குரும்பையர் மன
மகிழ்ச்சி கொண்டிடஅதி ...... விதமான
வளைக்கரங்களினொடு வளைத்திதம் படஉடன்
மயக்க வந்ததில் அறிவழியாத
கருத்தழிந்திடஇரு கயற்கணும் புரள்தர
களிப்புடன் களிதரு ...... மடமாதர்
கருப்பெரும் கடலது கடக்கஉன் !திருவடி
களைத் தரும்திருவுளம் ...... இனியாமோ
பொருப்பகம் பொடிபட அரக்கர்தம் பதியொடு
புகைப் பரந்தெரியெழ ...... விடும்வேலா
புகழ்ப்பெரும் கடவுளர் களித்திடும் படிபுவி
பொறுத்த மந்தரகிரி ...... கடலூடே
திரித்த கொண்டலுமொரு மறுப்பெறும் சதுமுக
திருட்டி எண்கணன் முதல் அடிபேணத்
திருக்குருந்தடிஅமர் குருத்வ சங்கரரொடு
திருப்பெருந்துறையுறை ...... பெருமாளே.
திருப்பாடல் 3:
தனன தந்தனந் தனதன தனதன
தனன தந்தனந் தனதன தனதன
தனன தந்தனந் தனதன தனதன ...... தனதான
முகர வண்டெழும் கருமுகில் அலையவும்
முதிய நஞ்சுமிழ்ந்தயில் விழி குவியவும்
முகிள சந்திரன் பொருநுதல் வெயரவும் அமுதூறும்
முருகு தங்குசெம் துகிரிதழ் தெரியவும்
மருவு சங்கம் நின்றொலி கொடு பதறவும்
முழுதும் அன்பு தந்தமளியின் உதவிய ...... அநுராகச்
சிகர கும்பகுங்கும புளகித தனம்
ருபுயம் புதைந்திடநடு விடைவெளி
தெரியலின்றி ஒன்றிடஉயிர் உயிருடன் உறமேவித்
திமிர கங்குல் இன்புதவிடும் அவசர
நினைவு நெஞ்சினின்றறஅவர் முகமது
தெரிசனம்செயும் பரிவற இனியருள் ...... புரிவாயே
மகர நின்ற தெண் திரைபொரு கனைகடல்
மறுகியஞ்சி வந்தடி தொழுதிடவொரு
வடிகொள் செஞ்சரம் தொடுபவன் இருபது ...... புயவீரன்
மடிய அங்கு சென்றவனொரு பதுமுடி
முடிய முன்பு மண்டமர் பொருதமர் நிழல்
மதில்இலங்கையும் பொடிபட அருளரி ...... மருகோனே
நிகரில் அண்டமெண் திசைகளும் மகிழ்வுற
விரகு கொண்டு நின்றழகுறு மயில்மிசை
நினைவின் உந்தியம் புவிதனை வலம்வரும் இளையோனே
நிலவரும்பு தண் தரளமும் மிளிரொளிர்
பவளமும்பொரும் பழனமும் அழகுற
நிழல் குருந்தமும் செறிதுறை வளர்வுறு ...... பெருமாளே
No comments:
Post a Comment