(பாண்டிய நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: பாண்டிய நாடு
மாவட்டம்: தூத்துக்குடி
திருக்கோயில்: அருள்மிகு செந்திலாண்டவன் திருக்கோயில்
தல வகை: முருகன் திருக்கோயில்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
தூத்துக்குடியிலிருந்து 35 கி.மீ தூரத்திலும், மதுரையிலிருந்து 181 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது திருச்செந்தூர்.
(Google Maps: Thiruchendur Murugan Temple, Tiruchendur, Tamil Nadu 628215, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 83.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தந்த தந்தன தானா தானா
தந்த தந்தன தானா தானா
தந்த தந்தன தானா தானா ...... தனதான
அங்கை மென்குழல் ஆய்வார் போலே
சந்தி நின்றயலோடே போவார்
அன்பு கொண்டிட நீரோ போறீர் அறியீரோ
அன்று வந்தொரு நாள்நீர் போனீர்
பின்பு கண்டறியோம் நாம்ஈதே
அன்றும் இன்றுமொர் போதோ போகா ...... துயில்வாரா
எங்கள் அந்தரம் வேறார் ஓர்வார்
பண்டு தந்தது போதாதோ மேல்
இன்று தந்துறவோ தான்ஈதேன் !இதுபோதா
திங்கு நின்றதென் வீடே வாரீர்
என்றிணங்கிகள் மாயா லீலா
இன்ப சிங்கியில் வீணே வீழாதருள்வாயே
மங்குல் இன்புறு வானாய் !வானூ
டன்றரும்பிய காலாய் நீள்கால்
மண்டுறும் பகை நீறா வீறா ...... எரிதீயாய்
வந்திரைந்தெழு நீராய் நீர்சூழ்
அம்பரம் புனை பாராய் பாரேழ்
மண்டலம் புகழ் நீயாய் நானாய் ...... மலரோனாய்
உங்கள் சங்கரர் தாமாய் நாமார்
அண்ட பந்திகள் தாமாய் வானாய்
ஒன்றினும் கடை தோயா மாயோன் ...... மருகோனே
ஒண்தடம் பொழில் நீடூர் கோடூர்
செந்திலம்பதி வாழ்வே வாழ்வோர்
உண்ட நெஞ்சறி தேனே வானோர் ...... பெருமாளே.
திருப்பாடல் 2:
தந்தன தனந்தனந் தனதனத்
தந்தன தனந்தனந் தனதனத்
தந்தன தனந்தனந் தனதனத் ...... தனதான
அந்தகன் வரும்தினம் பிறகிடச்
சந்ததமும் வந்து !கண்டரிவையர்க்
கன்புருகு சங்கதம் தவிர முக்குணமாள
அந்தி பகல் என்றிரண்டையும்!ஒழித்
திந்திரிய சஞ்சலம் !களையறுத்
தம்புய பதங்களின் பெருமையைக் ...... கவிபாடிச்
செந்திலை உணர்ந்துணர்ந்துணர்வுறக்
கந்தனை அறிந்தறிந்தறிவினில்
சென்று செருகும்தடம் தெளிதரத் ...... தணியாத
சிந்தையும் அவிழ்ந்தவிழ்ந்துரை !ஒழித்
தென்செயல் அழிந்தழிந்தழிய மெய்ச்
சிந்தை வரஎன்றுநின் தெரிசனைப் ...... படுவேனோ
கொந்தவிழ் சரண்சரண் சரணெனக்
கும்பிடு புரந்தரன் பதிபெறக்
குஞ்சரி குயம்புயம் பெறஅரக்கரும் மாளக்
குன்றிடிய அம்பொனின் திருவரைக்
கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்
குண்டலம் அசைந்திளம் குழைகளில் ..... ப்ரபைவீசத்
தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கை கொஞ்சிட மணித்
தண்டைகள் கலின்கலின் கலினெனத் ...... திருவான
சங்கரி மனம் குழைந்துருக!முத்
தம்தர வரும்செழும் தளர்நடைச்
சந்ததி சகம்தொழும் சரவணப் ...... பெருமாளே.
திருப்பாடல் 3:
தனதனன தனதனன தந்தத் தந்தத்
தனதனன தனதனன தந்தத் தந்தத்
தனதனன தனதனன தந்தத் தந்தத் ...... தனதான
அமுதுததி விடம்உமிழு செங்கண் திங்கள்
பகவினொளிர் வெளிறெயிறு துஞ்சல் குஞ்சித்
தலையும் உடையவன்அரவ தண்டச் சண்டச் ...... சமனோலை
அதுவருகும் அளவில் உயிர் அங்கிட்டிங்குப்
பறைதிமிலை திமிர்தமிகு தம்பட்டம் பல்
கரையஉறவினர் அலற உந்திச் சந்தித் ...... தெருவூடே
எமதுபொருள் எனும்மருளை இன்றிக் குன்றிப்
பிளவளவு தினையளவு !பங்கிட்டுண்கைக்
கிளையும்முது வசைதவிர இன்றைக்கன்றைக்கென !நாடா
திடுக கடிதெனும்உணர்வு பொன்றிக் கொண்டிட்
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்
டெனஅகலும் நெறிகருதி நெஞ்சத்தஞ்சிப் ...... பகிராதோ
குமுதபதி வகிரமுது சிந்தச் சிந்தச்
சரணபரி புரசுருதி கொஞ்சக் கொஞ்சக்
குடிலசடை பவுரிகொடு தொங்கப் பங்கில் ...... கொடியாடக்
குலதடினி அசையஇசை பொங்கப் பொங்கக்
கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத்
தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத் ...... தொகுதீதோ
திமிதமென முழவொலி முழங்கச் செங்கைத்
தமருகம்அததிர் !சதியொடன்பர்க்கின்பத்
திறம்உதவும் பரதகுரு வந்திக்கும்சற் ...... குருநாதா
திரளுமணி தரளமுயர் தெங்கில் தங்கிப்
புரளஎறி திரைமகர சங்கத் துங்கத்
திமிரசல நிதிதழுவு செந்தில் கந்தப் ...... பெருமாளே.
திருப்பாடல் 4:
தந்தத் தனனத் தந்தத் தனனத்
தந்தத் தனனத் ...... தனதானா
அம்பொத்த விழித் தந்தக் !கலகத்
தஞ்சிக் கமலக் ...... கணையாலே
அன்றிற்கும் அனல் தென்றற்கும் !இளைத்
தந்திப் பொழுதில் ...... பிறையாலே
எம்பொன் கொடிமன் துன்பக் !கலன்அற்
றின்பக் கலவித் ...... துயரானாள்
என்பெற்றுலகில் பெண் பெற்றவருக்
கின்பப் புலிஉற்றிடலாமோ
கொம்புக் கரிபட்டஞ்சப் பதுமக்
கொங்கைக் குறவிக்கினியோனே
கொன்றைச் சடையற்கொன்றைத் தெரியக்
கொஞ்சித் தமிழைப் ...... பகர்வோனே
செம்பொற் சிகரப் பைம்பொற் கிரியைச்
சிந்தக் கறுவிப் ...... பொரும்வேலா
செஞ்சொல் புலவர்க்கன்புற்ற !திருச்
செந்தில் குமரப் ...... பெருமாளே.
திருப்பாடல் 5:
தனதனன தான தானன தனதனன தான தானன
தனதனன தான தானன
தனதனன தான தானன தந்தத் தந்தத் ...... தனதான
அருணமணி மேவு பூஷித ம்ருகமத படீர லேபன
அபிநவ விசால பூரண
அம்பொன் கும்பத் ...... தனமோதி
அளிகுலவு மாதர் லீலையின் முழுகி அபிஷேகம் ஈதென
அறவும் உறவாடி நீடிய
அங்கைக் கொங்கைக்கிதமாகி
இருள் நிறையம்ஓதி மாலிகை சருவிஉறவான வேளையில்
இழை கலைய மாதரார் வழி
இன்புற்றன்புற்றழியா நீள்
இரவுபகல் மோகனாகியெ படியில் மடியாமல் யானுமுன்
இணையடிகள் பாடி வாழஎன்
நெஞ்சில் செஞ்சொல் ...... தருவாயே
தருணமணி ஆடராவணி குடில சடிலாதி ஓதிய
சதுர்மறையின் ஆதியாகிய
சங்கத் துங்கக் ...... குழையாளர்
தருமுருக மேக சாயலர் தமர மகராழி சூழ்புவி
தனை முழுதும் வாரியே!அமு
துண்டிட்டண்டர்க்கருள்கூரும்
செருமுதலி மேவு மாவலி அதிமதக போல மாமலை
தெளிவினுடன் மூலமேயென
முந்தச் சிந்தித்தருள்மாயன்
திருமருக சூரன் மார்பொடு சிலையுருவ வேலை ஏவிய
ஜெயசரவணா மனோகர
செந்தில் கந்தப் ...... பெருமாளே.
திருப்பாடல் 6:
தனதன தந்தாத் தந்தத்
தனதன தந்தாத் தந்தத்
தனதன தந்தாத் தந்தத் ...... தனதானா
அவனிபெறும் தோடம்பொற்
குழைஅடர் அம்பால் !புண்பட்
டரிவையர் தம்பால் கொங்கைக்கிடையே !சென்
றணைதரு பண்டாட்டம் !கற்
றுருகிய கொண்டாட்டம் !பெற்
றழிதரு திண்டாட்டம் சற்றொழியாதே
பவமற நெஞ்சால் !சிந்தித்
திலகு கடம்பார்த் தண்டைப்
பதயுகளம் போற்றும் கொற்றமும் நாளும்
பதறிய அங்காப்பும் !பத்
தியும் அறிவும் போய்ச் சங்கைப்
படுதுயர் கண் பார்த்தன்புற்றருளாயோ
தவநெறி குன்றாப் பண்பில்
துறவினரும் தோற்றஞ்சத்
தனிமலர் அஞ்சார்ப் புங்கத்தமராடி
தமிழினி தென்காற் கன்றில்
திரிதரு கஞ்சாக் கன்றைத்
தழலெழ வென்றார்க்கன்றற்புதமாகச்
சிவவடிவம் காட்டும்!சற்
குருபர தென்பால் சங்கத்
திரள்மணி சிந்தாச் சிந்துக் ...... கரைமோதும்
தினகர திண்தேர்ச் சண்டப்
பரியிடறும் கோட்டிஞ்சித்
திருவளர் செந்தூர்க் கந்தப் ...... பெருமாளே.
திருப்பாடல் 7:
தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன ...... தனதான
அளக பாரம் அலைந்து குலைந்திட
வதனம் வேர்வு துலங்கி நலங்கிட
அவச மோகம் விளைந்து தளைந்திட ...... அணைமீதே
அருண வாய்நகை சிந்திய சம்ப்ரம
அடர் நகாநுதி பங்க விதம்செய்து
அதர பானம்அருந்தி மருங்கிற ...... முலைமேல்!வீழ்ந்
துளமும் வேறுபடும்படி ஒன்றிடு
மகளிர் தோதக இன்பின் முயங்குதல்
ஒழியுமாறு தெளிந்துளம் அன்பொடு ...... சிவயோகத்
துருகு ஞான பரம்பர தந்திர
அறிவினோர் கருதம்கொள் சிலம்பணி
உபய சீதள பங்கய மென்கழல் ...... தருவாயே
இளகிடா வளர் சந்தன குங்கும
களப பூரண கொங்கை நலம்புனை
இரதி வேள்பணி தந்தையும் அந்தண ...... மறையோனும்
இனதுறாதெதிர் இந்திரன் அண்டரும்
ஹரஹரா சிவ சங்கர சங்கர
எனமிகா வரு நஞ்சினை உண்டவர் ...... அருள்பாலா
வளர் நிசாசரர் தங்கள் சிரம்பொடி
பட விரோதமிடும் குல சம்ப்ரமன்
மகர வாரி கடைந்த நெடும்புயல் ...... மருகோனே
வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும்
இடைவிடாது நெருங்கிய மங்கல
மகிமை மாநகர் செந்திலில் வந்துறை ...... பெருமாளே.
திருப்பாடல் 8:
தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன ...... தனதானா
அறிவழிய மயல்பெருக உரையுமற விழிசுழல
அனலவிய மலமொழுக ...... அகலாதே
அனையுமனை அருகிலுற வெருவியழ உறவுமழ
அழலினிகர் மறலியெனை ...... அழையாதே
செறியுமிரு வினைகரண மருவுபுலன் ஒழியவுயர்
திருவடியில் அணுக வரம் அருள்வாயே
சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு
செவிகுளிர இனியதமிழ் ...... பகர்வோனே
நெறிதவறி அலரிமதி நடுவன்மக பதிமுளரி
நிருதிநிதி பதிகரிய ...... வனமாலி
நிலவுமறை அவனிவர்கள் அலைய அரசுரிமைபுரி
நிருதனுர மறஅயிலை ...... விடுவோனே
மறிபரசு கரமிலகு பரமனுமை இருவிழியும்
மகிழமடி மிசைவளரும் இளையோனே
மதலைதவழ் உததியிடை வருதரள மணிபுளின
மறையஉயர் கரையிலுறை ...... பெருமாளே.
திருப்பாடல் 9:
தனத்தந் தானன தானன தானன
தனத்தந் தானன தானன தானன
தனத்தந் தானன தானன தானன ...... தனதான
அனிச்சம் கார்முகம் வீசிட மாசறு
துவள் பஞ்சான தடாகம் விடாமட
அனத்தின் தூவி குலாவிய சீறடி ...... மடமானார்
அருக்கன் போலொளி வீசிய மா!மர
கதப் பைம் பூணணி வார்முலை மேல்முகம்
அழுத்தும் பாவியை ஆவி ஈடேறிட ...... நெறிபாரா
வினைச் சண்டாளனை வீணணை நீள்நிதி
தனைக் கண்டானவமான நிர் மூடனை
விடக்கன் பாய்நுகர் பாழனை ஓர்மொழி ...... பகராதே
விகற்பம் கூறிடு மோக விகாரனை
அறத்தின் பாலொழுகாத முதேவியை
விளித்துன் பாதுகை நீதர நானருள் ...... பெறுவேனோ
முனைச் சங்கோலிடு நீல மகோததி
அடைத்தஞ்சாத இராவணன் நீள்பல
முடிக்கன்றோர் கணைஏவும் இராகவன் ...... மருகோனே
முளைக்கும் சீத நிலாவொடரா விரி
திரைக் கங்கா நதி தாதகி கூவிள
முடிக்கும் சேகரர் பேரருளால் வரு ...... முருகோனே
தினைச்செம் கானக வேடுவரானவர்
திகைத்தந்தோ எனவே கணியாகிய
திறல்கந்தா வளி நாயகி காமுறும் ...... எழில்வேலா
சிறக்கும் தாமரை ஓடையில் மேடையில்
நிறக்கும் சூல்வளை பால்மணி வீசிய
திருச்செந்தூர்வரு சேவகனே சுரர் ...... பெருமாளே.
திருப்பாடல் 10:
தனதன தனந்த தந்த தனதன தனந்த தந்த
தனதன தனந்த தந்த ...... தனதான
அனைவரும் மருண்டருண்டு கடிதென வெகுண்டியம்ப
அமரஅடி பின்தொடர்ந்து ...... பிணநாறும்
அழுகுபிணி கொண்டு விண்டு புழுவுடன் எலும்பலம்பும்
அவலவுடலம் சுமந்து ...... தடுமாறி
மனைதொறும் இதம் பகர்ந்து வரவர விருந்தருந்தி
மனவழி திரிந்து மங்கும் ...... வசைதீர
மறைசதுர் விதம்தெரிந்து வகைசிறு சதங்கை கொஞ்சு
மலரடி வணங்க என்று ...... பெறுவேனோ
தினைமிசை சுகம்கடிந்த புனமயில் இளம்குரும்பை
திகழிரு தனம் புணர்ந்த ...... திருமார்பா
ஜெகமுழுது முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு
திகிரி வலம்வந்த செம்பொன் ...... மயில்வீரா
இனியகனி மந்திசிந்து மலைகிழவ செந்தில்வந்த
இறைவகுக கந்த என்றும் இளையோனே
எழுகடலும் எண் சிலம்பும் நிசிசரரும்அஞ்ச அஞ்சும்
இமையவரை அஞ்சலென்ற ...... பெருமாளே.
திருப்பாடல் 11:
தனதனன தனன தந்தத் ...... தனதான
தனதனன தனன தந்தத் ...... தனதான
இயலிசையில் உசித வஞ்சிக்கயர்வாகி
இரவுபகல் மனது சிந்தித்துழலாதே
உயர்கருணை புரியும் இன்பக் ...... கடல்மூழ்கி
உனையெனதுள்அறியும் அன்பைத் ...... தருவாயே
மயில்தகர்கல் இடையர் அந்தத் ...... தினைகாவல்
வனசகுற மகளை வந்தித்தணைவோனே
கயிலைமலை அனைய செந்தில் ...... பதிவாழ்வே
கரிமுகவன் இளைய கந்தப் ...... பெருமாளே.
திருப்பாடல் 12:
தனதன தனந்த தந்தன தனதன தனந்த தந்தன
தனதன தனந்த தந்தன ...... தனதான
இருகுழையெறிந்த கெண்டைகள் ஒருகுமிழ் அடர்ந்து வந்திட
இணைசிலை நெரிந்தெழுந்திட ...... அணைமீதே
இருளளக பந்தி வஞ்சியில் இருகலையுடன் குலைந்திட
இதழ் அமுதருந்த சிங்கியின் ...... மனமாய
முருகொடு கலந்த சந்தன அளருபடு குங்குமம் கமழ்
முலைமுகடு கொண்டெழுந்தொறு ...... முருகார
முழுமதி புரிந்த சிந்துர அரிவையருடன் கலந்திடு
முகடியும் நலம் பிறந்திட ...... அருள்வாயே
எரிவிட நிமிர்ந்த குஞ்சியில் நிலவொடும் எழுந்த கங்கையும்
இதழியொடணிந்த சங்கரர் ...... களிகூரும்
இமவரை தரும் கருங்குயில் மரகத நிறம்தரும்கிளி
எனதுயிரெனும் த்ரியம்பகி ...... பெருவாழ்வே
அரைவடம் அலம்பு கிண்கிணி பரிபுர நெருங்கு தண்டைகள்
அணிமணி சதங்கை கொஞ்சிட ...... மயில்மேலே
அகமகிழ்வுகொண்டு சந்ததம் வருகுமர முன்றிலின் புறம்
அலைபொருத செந்தில் தங்கிய ...... பெருமாளே.
திருப்பாடல் 13:
தனதன தனன தனத்தத் தாத்தன
தனதன தனன தனத்தத் தாத்தன
தனதன தனன தனத்தத் தாத்தன ...... தந்ததான
இருள்விரி குழலை விரித்துத் தூற்றவும்
இறுகிய துகிலை நெகிழ்த்துக் காட்டவும்
இருகடை விழியும் முறுக்கிப் பார்க்கவும் ...... மைந்தரோடே
இலை பிளவதனை நடித்துக் கேட்கவும்
மறுமொழி பலவும் இசைத்துச் சாற்றவும்
இடையிடை சிறிது நகைத்துக் காட்டவும் எங்கள்வீடே
வருகென ஒருசொல் உரைத்துப் பூட்டவும்
விரிமலர் அமளி அணைத்துச் சேர்க்கவும்
வருபொருள் அளவில் உருக்கித் தேற்றவும் ...... நிந்தையாலே
வனைமனை புகுதில் அடித்துப் போக்கவும்
ஒருதலை மருவு புணர்ச்சித் தூர்த்தர்கள்
வசைவிட நினது பதத்தைப் போற்றுவதெந்தநாளோ
குருமணி வயிரம் இழித்துக் கோட்டிய
கழைமட உருவு வெளுத்துத் தோற்றிய
குளிறிசை அருவி கொழித்துத் தூற்றிய ...... மண்டுநீரூர்
குழிபடு கலுழி வயிற்றைத் தூர்த்தெழு
திடர் மணலிறுகு துருத்திக் காப்பொதி
குளிர்நிழல் அருவி கலக்கிப் பூப்புனை ...... வண்டலாடா
முருகவிழ் துணர்கள் உகுத்துக் காய்த்தினை
விளைநடு இதணில் இருப்பைக் காட்டிய
முகிழ்முலை இளைய குறத்திக்காட்படு ...... செந்தில்வாழ்வே
முளையிள மதியை எடுத்துச் சாத்திய
சடைமுடி இறைவர் தமக்குச் சாத்திர
முறையருள் முருக தவத்தைக் காப்பவர் ...... தம்பிரானே.
திருப்பாடல் 14:
தனதனன தந்த தானதன
தனதனன தந்த தானதன
தனதனன தந்த தானதன ...... தந்ததான
உததியறல் மொண்டு சூல்கொள் கரு
முகிலென இருண்ட நீலமிக
ஒளிதிகழு மன்றல் ஓதிநரை ...... பஞ்சுபோலாய்
உதிரமெழு துங்க வேலவிழி
மிடைகடை ஒதுங்கும் பீளைகளும்
முடைதயிர் பிதிர்ந்ததோஇதென ...... வெம் புலாலாய்
மதகரட தந்தி வாயினிடை
சொருகுபிறை தந்த சூதுகளின்
வடிவுதரு கும்ப மோதிவளர் ...... கொங்கை தோலாய்
வனமழியும் மங்கை மாதர்களின்
நிலைதனை உணர்ந்து தாளிலுறு
வழியடிமை அன்பு கூருமது ...... சிந்தியேனோ
இதழ்பொதி அவிழ்ந்த தாமரையின்
மணவறை புகுந்த நான்முகனும்
எறிதிரை அலம்பு பாலுததி ...... நஞ்சராமேல்
இருவிழி துயின்ற நாரணனும்
உமைமருவு சந்த்ரசேகரனும்
இமையவர் வணங்கு வாசவனும் ...... நின்றுதாழும்
முதல்வ சுக மைந்த பீடிகையில்
அகிலசக அண்ட நாயகிதன்
மகிழ்முலை சுரந்த பாலமுதம் உண்டவேளே
முளைமுருகு சங்கு வீசியலை
முடுகி மை தவழ்ந்த வாய்பெருகி
முதலிவரு செந்தில் வாழ்வுதரு ...... தம்பிரானே.
திருப்பாடல்1 5:
தனத்தந் தானன தானன தானன
தனத்தந் தானன தானன தானன
தனத்தந் தானன தானன தானன ...... தனதான
உருக்கம் பேசிய நீலியர் காசுகள்
பறிக்கும் தோஷிகள் மோக விகாரிகள்
உருட்டும் பார்வையர் மா பழிகாரிகள் ...... மதியாதே
உரைக்கும் வீரிகள் கோள்அரவாமென
உடற்றும் தாதியர் காசளவே மனம்
உறைக்கும் தூரிகள் மீதினில் ஆசைகள் ...... புரிவேனோ
அருக்கன் போலொளி வீசிய மாமுடி
அனைத்தும் தான்அழகாய் நலமேதர
அருட்கண் பார்வையினால் அடியார்தமை ...... மகிழ்வோடே
அழைத்தும் சேதிகள் பேசிய காரண
வடிப்பம் தானெனவே எனை நாள்தொறும்
அதிக்கம் சேர் தரவே அருளால் உடன் இனிதாள்வாய்
இருக்கும் காரண மீறிய வேதமும்
இசைக்கும் சாரமுமே தொழு தேவர்கள்
இடுக்கண் தீர் கனனே அடியார் தவமுடன் மேவி
இலக்கம் தானெனவே தொழவே மகிழ்
விருப்பம் கூர்தரும் ஆதியுமாய் !உல
கிறுக்கும் தாதகி சூடிய வேணியன் அருள்பாலா
திருக்கும் தாபதர் வேதியர் ஆதியர்
துதிக்கும் தாளுடை நாயகனாகிய
செகச்செஞ் சோதியுமாகிய மாதவன் ...... மருகோனே
செழிக்கும் சாலியு மேகம் அளாவிய
கருப்பம் சோலையும் வாழையுமே திகழ்
திருச்செந்தூர் தனில் மேவிய தேவர்கள் ...... பெருமாளே.
திருப்பாடல் 16:
தானன தானன தானன தானன
தானன தானன ...... தனதானா
ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை ...... நெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழுதா முழு
ஏழையை மோழையை ...... அகலாநீள்
மாவினை மூடிய நோய் பிணியாளனை
வாய்மையிலாதனை ...... இகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவதும் ஒருநாளே
நாவலர் பாடிய நூலிசையால் வரு
நாரதனார் புகல் ...... குறமாதை
நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயில் உடையோனே
தேவி மநோமணி ஆயி பராபரை
தேன்மொழியாள் தரு ...... சிறியோனே
சேணுயர் சோலையின் நீழலிலே திகழ்
சீரலைவாய் வரு ...... பெருமாளே.
திருப்பாடல் 17:
தானா தந்தத் தானா தந்தத்
தானா தந்தத் ...... தனதானா
ஓராதொன்றைப் !பாராதந்தத்
தோடே வந்திட்டுயிர் சோர
ஊடா நன்றற்றார் போல் !நின்றெட்
டாமால் தந்திட்டுழல் மாதர்
கூரா அன்பில் சோரா !நின்றக்
கோயா நின்றுட் ...... குலையாதே
கோடார் செம்பொற் தோளா நின்சொல்
கோடாதென்கைக்கருள் தாராய்
தோரா வென்றிப் போரா மன்றற்
தோளா குன்றைத் ...... தொளையாடீ
சூதா எண் திக்கேயா வஞ்சச்
சூர்மா அஞ்சப் ...... பொரும் வேலா
சீரார் கொன்றைத் தார்மார் பொன்றச்
சேவேறெந்தைக்கினியோனே
தேனே அன்பர்க்கேயாம் இன்சொல்
சேயே செந்தில் ...... பெருமாளே.
திருப்பாடல் 18:
தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன
தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன
தத்ததன தத்தத் தனந்தந் தனந்ததன ...... தனதான
கட்டழகு விட்டுத் தளர்ந்தங்கிருந்து முனம்
இட்டபொறி தப்பிப் பிணம்கொண்டதின் சிலர்கள்
கட்டணமெடுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் ...... முறையோடே
வெட்டவிட வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
மக்கள் ஒருமிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
விட்டுவரும் இத்தைத் தவிர்ந்துன் பதங்களுற ...... உணர்வேனோ
பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்
முற்றுமலை வற்றிக் குழம்பும் குழம்ப முனை
பட்டஅயில் தொட்டுத் திடம் கொண்டெதிர்ந்தவுணர் ...... முடிசாயத்
தட்டழிய வெட்டிக் கவந்தம் பெரும்கழுகு
நிர்த்தமிட ரத்தக் குளம் கண்டுமிழ்ந்து மணி
சற்சமய வித்தைப் பலன்கண்டு செந்திலுறை ...... பெருமாளே.
திருப்பாடல்1 9:
தந்ததன தந்த தந்த தந்ததன தந்த தந்த
தந்ததன தந்த தந்த ...... தனதான
கண்டுமொழி கொம்பு கொங்கை வஞ்சியிடை அம்பு நஞ்சு
கண்கள்குழல் கொண்டல் என்று ...... பலகாலும்
கண்டுளம் வருந்தி நொந்து மங்கையர் வசம் புரிந்து
கங்குல்பகல் என்று நின்று ...... விதியாலே
பண்டைவினை கொண்டுழன்று வெந்து விழுகின்றல் கண்டு
பங்கய பதங்கள் தந்து ...... புகழோதும்
பண்புடைய சிந்தை அன்பர் தங்களினுடன் கலந்து
பண்புபெற அஞ்சல்அஞ்சல் எனவாராய்
வண்டுபடுகின்ற தொங்கல் கொண்டற நெருங்கியிண்டு
வம்பினை அடைந்து சந்தின் ...... மிகமூழ்கி
வஞ்சியை முனிந்த கொங்கை மென்குற மடந்தை செங்கை
வந்தழகுடன் கலந்த ...... மணிமார்பா
திண்திறல் புனைந்த அண்டர் தங்கள் அபயங்கள் கண்டு
செஞ்சமர் புனைந்து துங்க ...... மயில்மீதே
சென்றசுரர் அஞ்ச வென்று குன்றிடை மணம் புணர்ந்து
செந்தில்நகர் வந்தமர்ந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 20:
தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன ...... தனதான
கமல மாதுடன் இந்திரையும் சரி
சொலவொணாத மடந்தையர் சந்தன
களப சீதள கொங்கையில் அங்கையில் ...... இரு போதேய்
களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன
விழியின் மோகித கந்த சுகம்தரு
கரிய ஓதியில் இந்து முகம்தனில் ...... மருளாதே
அமலமாகிய சிந்தை அடைந்தகல்
தொலைவிலாத அறம்பொருள் இன்பமும்
அடைய ஓதியுணர்ந்து தணந்தபின் ...... அருள்தானே
அறியுமாறு பெறும்படி அன்பினின்
இனிய நாத சிலம்பு புலம்பிடும்
அருண ஆடக கிண்கிணி தங்கிய ...... அடிதாராய்
குமரி காளி பயங்கரி சங்கரி
கவுரி நீலி பரம்பரை அம்பிகை
குடிலை யோகினி சண்டினி குண்டலி ...... எமதாயி
குறைவிலாள் உமை மந்தரி அந்தரி
வெகு விதாகம சுந்தரி தந்தருள்
குமர மூஷிக முந்திய ஐங்கர ...... கணராயன்
மம விநாயகன் நஞ்சுமிழ் கஞ்சுகி
அணி கஜானன விம்பனொர் அம்புலி
மவுலியான்உறு சிந்தை உகந்தருள் ...... இளையோனே
வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும்
இடைவிடாது நெருங்கிய மங்கல
மகிமை மாநகர் செந்திலில் வந்துறை ...... பெருமாளே.
திருப்பாடல் 21:
தனத்தந்தம் தனத்தந்தம்
தனத்தந்தம் தனத்தந்தம்
தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானா
கரிக்கொம்பம் தனித்தங்கம்
குடத்தின்பம் தனத்தின்கண்
கறுப்பும்தன் சிவப்பும்செம் ...... பொறிதோள் சேர்
கணைக்கும் பண்டுழைக்கும் !பங்
களிக்கும்பண் பொழிக்கும் கண்
கழுத்தும் சங்கொளிக்கும் பொன் ...... குழையாடச்
சரக்குஞ்சம் புடைக்கும் பொன்
துகில் தந்தம் தரிக்கும்தன்
சடத்தும்பண் பிலுக்கும் சம்பள மாதர்
சலித்தும்பின் சிரித்தும் !கொண்
டழைத்தும் சண் பசப்பும் பெண்
தனத் துன்பம் தவிப்புண்டிங்குழல்வேனோ
சுரர்ச்சங்கம் !துதித்தந்தஞ்
செழுத்தின்பம் களித்துண் பண்
சுகத்துய்ந்தின் பலர்ச் சிந்தங்கசுராரைத்
துவைத்தும் பந்தடித்தும் !சங்
கொலித்தும் குன்றிடித்தும்பண்
சுகித்தும் கண் களிப்பும் கொண்டிடும் வேலா
சிரப் பண்பும் கரப் பண்பும்
கடப்பம் தொங்கலில் பண்பும்
சிவப் பண்பும் தவப் பண்பும் ...... தருவோனே
தினைத்தொந்தம் குறப்பெண் பண்
சசிப்பெண் கொங்கையில் துஞ்சும்
செழிக்கும் செந்திலில் தங்கும் ...... பெருமாளே.
திருப்பாடல் 22:
தனத்தந்தம் தனத்தந்தம்
தனத்தந்தம் தனத்தந்தம்
தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானா
கருப்பம் தங்கிரத்தம் !பொங்
கரைப் புண் கொண்டுருக்கும் !பெண்
களைக் கண்டங்கவர்ப்பின் சென்றவரோடே
கலப்புண்டும் சிலுப்புண்டும்
துவக்குண்டும் பிணக்குண்டும்
கலிப்புண்டும் சலிப்புண்டும் ...... தடுமாறிச்
செருத்தண்டம் தரித்தண்டம்
புகத்தண்டந்தகற்கென்றும்
திகைத்தம்திண் செகத்தஞ்சும் ...... கொடுமாயும்
தியக்கம் கண்டுயக் கொண்டென்
பிறப்பங்கம் சிறைப்பங்கம்
சிதைத்துந்தன் பதத்தின்பம் ...... தருவாயே
அருக்கன் சஞ்சரிக்கும் தெண்
திரைக்கண் சென்றரக்கன் !பண்
பனைத்தும் பொன்றிடக் கன்றும் ...... கதிர்வேலா
அணிச்சங்கம் கொழிக்கும் !தண்
டலைப் பண்பெண் திசைக்கும் !கொந்
தளிக்கும் செந்திலில் தங்கும் ...... குமரேசா
புரக்கும் சங்கரிக்கும் !சங்
கரர்க்கும் சங்கரர்க்கின்பம்
புதுக்கும் கங்கையட்கும் தம் சுதனானாய்
புனைக் குன்றம் திளைக்கும் !செந்
தினைப் பைம்பொன் குறக்கொம்பின்
புறத்தண் கொங்கையில் துஞ்சும் ...... பெருமாளே.
திருப்பாடல் 23:
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
களபம் ஒழுகிய புளகித முலையினர்
கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்
கழுவுசரி புழுகொழுகிய குழலினர் ...... எவரோடும்
கலகம் இடுகயல் எறிகுழை விரகியர்
பொருளில் இளைஞரை வழிகொடு மொழிகொடு
தளர விடுபவர் தெருவினில் எவரையும் ...... நகையாடிப்
பிளவு பெறில்அதில் அளவளஒழுகியர்
நடையில் உடையினில் அழகொடு திரிபவர்
பெருகு பொருள்பெறில் அமளியில் இதமொடு ...... குழைவோடே
பிணமும் அணைபவர் வெறிதரு புனலுணும்
அவச வனிதையர் முடுகொடும் அணைபவர்
பெருமை உடையவர் உறவினை விடஅருள் ...... புரிவாயே
அளையில் உறைபுலி பெறு மகவயில் தரு
பசுவின் நிரைமுலை அமுதுண நிரைமகள்
வசவனொடு புலி முலையுண மலையுடன் ...... உருகாநீள்
அடவி தனிலுள உலவைகள் தளிர்விட
மருள மதமொடு களிறுகள் பிடியுடன்
அகல வெளிஉயர் பறவைகள் நிலம்வர ...... விரல் சேரேழ்
தொளைகள் விடுகழை விரல்முறை தடவிய
இசைகள் பலபல தொனிதரு கருமுகில்
சுருதி உடையவன் நெடியவன் மனமகிழ் ...... மருகோனே
துணைவ குணதர சரவணபவ நம
முருக குருபர வளர் அறுமுக குக
துறையில் அலையெறி திருநகர் உறைதரு ...... பெருமாளே.
திருப்பாடல் 24:
தனந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த ...... தனதான
கனங்கள் கொண்ட குந்தளங்களும் குலைந்தலைந்து விஞ்சும்
கண்களும் சிவந்தயர்ந்து ...... களிகூரக்
கரங்களும் குவிந்து நெஞ்சகங்களும் கசிந்திடும்!க
றங்கு பெண்களும் பிறந்து ...... விலைகூறிப்
பொனின்குடங்கள் அஞ்சு மென்தனங்களும் புயங்களும்!பொ
ருந்தி அன்பு நண்பு பண்பும் உடனாகப்
புணர்ந்துடன் புலர்ந்து பின்கலந்தகம் குழைந்தவம்!பு
ரிந்து சந்ததம் திரிந்து ...... படுவேனோ
அனங்கனொந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண்!தி
றந்திருண்ட கண்டர் தந்த ...... அயில்வேலா
அடர்ந்தடர்ந்தெதிர்ந்து வந்த வஞ்சர் அஞ்ச வெஞ்சமம்!பு
ரிந்த அன்பர் இன்ப நண்ப ...... உரவோனே
சினங்கள் கொண்டிலங்கை மன்சிரங்கள் சிந்த வெஞ்சரம்!தெ
ரிந்தவன் பரிந்த இன்ப ...... மருகோனே
சிவந்த செஞ் சதங்கையும் சிலம்பு தண்டையும் புனைந்து
செந்தில் வந்த கந்த எங்கள் ...... பெருமாளே.
திருப்பாடல் 25:
தந்ததன தான தந்ததன தான
தந்ததன தான ...... தனதான
கன்றிலுறு மானை வென்ற விழியாலே
கஞ்சமுகை மேவு ...... முலையாலே
கங்குல்செறி கேச மங்குல் குலையாமை
கந்தமலர் சூடும் அதனாலே
நன்றுபொருள் தீர வென்றுவிலை பேசி
நம்பவிடு மாதர் உடனாடி
நஞ்சுபுசி தேரை அங்கம்அதுவாக
நைந்து விடுவேனை ...... அருள்பாராய்
குன்றிமணி போல்வ செங்கண்வரி போகி
கொண்ட படம் வீசு ...... மணிகூர்வாய்
கொண்ட மயிலேறி அன்றசுரர் சேனை
கொன்ற குமரேச ...... குருநாதா
மன்றல்கமழ் பூக தெங்குதிரள் சோலை
வண்டுபடு வாவி ...... புடைசூழ
மந்தி நடமாடு செந்தில்நகர் மேவு
மைந்த அமரேசர் ...... பெருமாளே.
திருப்பாடல் 26:
தானனா தந்தனம் தானனா தந்தனம்
தானனா தந்தனம் ...... தனதான
காலனார் வெங்கொடும் தூதர் பாசம்கொடென்
காலினார் தந்துடன் ...... கொடுபோகக்
காதலார் மைந்தரும் தாயராரும்சுடும்
கானமே பின்தொடர்ந்தலறா முன்
சூலம்வாள் தண்டுசெஞ் சேவல் கோதண்டமும்
சூடுதோளும் தடம் ...... திருமார்பும்
தூயதாள் தண்டையும் காணஆர்வம்செயும்
தோகைமேல் கொண்டுமுன் ...... வரவேணும்
ஆலகாலம் பரன் பாலதாகஞ்சிடும்
தேவர் வாழன்றுகந்தமுதீயும்
ஆரவாரம் செயும் வேலைமேல் கண்!வளர்ந்
தாதி மாயன் தன்நன் ...... மருகோனே
சாலிசேர் சங்கினம் வாவிசூழ் பங்கயம்
சாரலார் செந்திலம் ...... பதிவாழ்வே
தாவுசூர் அஞ்சிமுன் சாய வேகம்பெறும்
தாரை வேல்உந்திடும் ...... பெருமாளே.
திருப்பாடல் 27:
தனன தானனத் தனதன தனனாத்
தந்தத் தந்தத் ...... தனதான
குகர மேவுமெய்த் துறவினின் மறவாக்
கும்பிட்டுந்தித் ...... தடமூழ்கிக்
குமுத வாயின் முற்றமுதினை நுகராக்
கொண்டல் கொண்டைக் ...... !குழலாரோ
டகரு தூளி கர்ப்புரதன !இருகோட்
டன்புற்றின்பக் ...... கடலூடே
அமிழுவேனை மெத்தெனவொரு கரைசேர்த்
தம்பொன் தண்டைக் ...... கழல் தாராய்
ககன கோளகைக்கண இரும்அளவாக்
கங்கைத் துங்கப் ...... புனலாடும்
கமல வாதனற்களவிட முடியாக்
கம்பர்க்கொன்றைப் ...... புகல்வோனே
சிகர கோபுரத்தினும் மதிளினும்மேல்
செம்பொன் கம்பத் தளமீதும்
தெருவிலே நித்திலமெறி அலைவாய்ச்
செந்தில் கந்தப் ...... பெருமாளே.
திருப்பாடல் 28:
தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த ...... தானாந்தனனா
குடர்நிணம் என்பு சலமல மண்டு
குருதி நரம்பு ...... சீயூன் பொதிதோல்
குலவு குரம்பை முருடு சுமந்து
குனகி மகிழ்ந்து ...... நாயேன் தளரா
அடர் மதனம்பை அனைய கருங்கண்
அரிவையர் தங்கள் ...... தோள்தோய்ந்தயரா
அறிவழிகின்ற குணமற உந்தன்
அடியிணை தந்து ...... நீயாண்டருள்வாய்
தடவியல் செந்தில் இறையவ நண்பு
தருகுற மங்கை ...... வாழ்வாம் புயனே
சரவண கந்த முருக கடம்ப
தனிமயில் கொண்டு ...... பார் சூழ்ந்தவனே
சுடர்படர் குன்று தொளைபட அண்டர்
தொழவொரு செங்கை ...... வேல் வாங்கியவா
துரித பதங்க இரத ப்ரசண்ட
சொரிகடல் நின்ற ...... சூராந்தகனே.
திருப்பாடல் 29:
தனத்தந்தம் தனத்தந்தம்
தனத்தந்தம் தனத்தந்தம்
தனத்தந்தம் தனத்தந்தம் ...... தனதானா
குழைக்கும் சந்தனச் !செம்குங்
குமத்தின் சந்த நல்குன்றம்
குலுக்கும்பைங் கொடிக்கென்றிங்கியலாலே
குழைக்கும் குண் குமிழ்க்கும்!சென்
றுரைக்கும் செங்கயற்கண் !கொண்
டழைக்கும் பண் தழைக்கும் சிங்கியராலே
உழைக்கும் சங்கடத் துன்பன்
சுகப்பண்டம் !சுகித்துண்டுண்
டுடற் பிண்டம் பருத்தின்றிங்குழலாதே
உதிக்கும்செங் கதிர்ச்சிந்தும்
ப்ரபைக்கொன்றும் சிவக்கும் !தண்
டுயர்க்கும் கிண்கிணிச் செம்பஞ்சடி சேராய்
தழைக்கும் கொன்றையைச் செம்பொன்
சடைக்கண்டங்கியைத் தங்கும்
தரத்தம் செம் புயத்தொன்றும் ...... பெருமானார்
தனிப்பங்கின் புறத்தின்செம்
பரத்தின் பங்கயத்தின் !சஞ்
சரிக்கும் சங்கரிக்கென்றும் ...... பெருவாழ்வே
கழைக்கும் குஞ்சரக் கொம்பும்
கலைக் கொம்பும் கதித்தென்றும்
கயற்கண் பண்பளிக்கும் திண் ...... புயவேளே
கறுக்கும் கொண்டலில் பொங்கும்
கடல்சங்கம் கொழிக்கும்!செந்
திலில் கொண்டன்பினில் தங்கும் ...... பெருமாளே.
திருப்பாடல் 30:
தந்ததன தந்ததன தந்ததன தந்ததன
தந்ததன தந்ததன ...... தந்ததான
கொங்கைகள் குலுங்கவளை செங்கையில் விளங்கஇருள்
கொண்டலை அடைந்தகுழல் ...... வண்டுபாடக்
கொஞ்சிய வனம்குயில்கள் பஞ்சநல் வனம்கிளிகள்
கொஞ்சியதெனும் குரல்கள் ...... கெந்து பாயும்
வெங்கயல் மிரண்டவிழி அம்புலி அடைந்த நுதல்
விஞ்சையர்கள் தங்கள்மயல் ...... கொண்டு மேலாய்
வெம்பிணி உழன்றபவ சிந்தனை நினைந்துனது
மின்சரண பைங்கழலொடண்ட ஆளாய்
சங்க முரசம் திமிலை துந்துமி ததும்ப வளை
தந்தன தனந்தஎன ...... வந்த சூரர்
சங்கைகெட மண்டிதிகை எங்கிலு மடிந்துவிழ
தண்கடல் கொளுந்த நகை ...... கொண்ட வேலா
சங்கரன் உகந்த பரிவின் குருஎனும் சுருதி
தங்களின் மகிழ்ந்துருகும் எங்கள்கோவே
சந்திர முகம் செயல் கொள் சுந்தர குறம்பெணொடு
சம்பு புகழ் செந்தில் மகிழ் ...... தம்பிரானே.
திருப்பாடல் 31:
தந்தத் தனனத் தந்தத் தனனத்
தந்தத் தனனத் ...... தனதானா
கொங்கைப் பணையில் செம்பொன் செறிவில்
கொண்டல் குழலில் ...... கொடிதான
கொன்றைக் கணையொப்பந்தக் கயலில்
கொஞ்சுக் கிளியுற்றுறவான
சங்கத் தொனியில் சென்றில் கடையில்
சந்திப்பவரைச் ...... சருவாதே
சந்தப்படி உற்றென்றன் தலையில்
சந்தப் பதம் வைத்தருள்வாயே
அங்கப்படை விட்டன்றைப் !படுகைக்
கந்திக் கடலில் ...... கடிதோடா
அந்தப் பொழிலில் சந்துத் !தலையுற்
றஞ்சப் பொருதுற்றொழியாதே
செங்கைக் கதிர் உற்றொன்றக் கடலில்
சென்றுற்றவர் தற்பொருளானாய்
சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலில்
செந்தில் குமரப் ...... பெருமாளே
திருப்பாடல் 32:
தனதனன தனதனன தந்தனந் தந்தனம்
தனதனன தனதனன தந்தனந் தந்தனம்
தனதனன தனதனன தந்தனந் தந்தனம் ...... தந்ததானா
கொடியனைய இடைதுவள அங்கமும் பொங்க!அங்
குமுத அமுதிதழ் பருகி இன்புறும் சங்கையன்
குலவியணை முகில்அளகமும் சரிந்தன்பினின் ...... பண்புலாவக்
கொடியவிரல் நகநுதியில் புண்படும் சஞ்சலன்
குனகிஅவருடன் இனிது சம்ப்ரமம் கொண்டுளம்
குரலழிய அவசமுறு குங்குணன் கொங்கவிழ்ந்தொன்று பாய்மேல்
விடமனைய விழிமகளிர் கொங்கை இன்பன்புறும்
வினையன்இயல் பரவுமுயிர் வெந்தழிந்தங்கமும்
இதமொழிய அறிவில்நெறி பண்பில்அண்டும் சகன் ...... செஞ்செ நீடும்
வெகுகனக ஒளிகுலவும் அந்தமன் செந்தில்!என்
றவிழஉளம் உருகிவரும் அன்பிலன் தந்திலன்
விரவுமிரு சிறுகமல பங்கயம் தந்துகந்தன்புறாதோ
படமிலகும் அரவினுடல் அங்கமும் !பங்கிடந்
துதறுமொரு கலபிமிசை வந்தெழுந்தண்டர் தம்
பகையசுரர் அனைவருடல் சந்து சந்துங்கதம் ...... சிந்தும் வேலா
படியவரும் இமையவரும் நின்றிறைஞ்செண்குணன்
பழையஇறை உருவமிலி அன்பர் பங்கன் பெரும்
பருவரல்செய் புரமெரிய விண்டிடும் செங்கணண் ...... கங்கைமான் வாழ்
சடிலமிசை அழகுபுனை கொன்றையும் பண்புறும்
தருணமதியின குறைசெய் துண்டமும் செங்கையொண்
சகல புவனமும் ஒழி கதங்குறங்கங்கியும் ...... பொங்கிநீடும்
சடமருவு விடையரவர் துங்கஅம் பங்கில்!நின்
றுலகு தரு கவுரியுமை கொங்கை தந்தன்புறும்
தமிழ்விரக உயர்பரம சங்கரன் கும்பிடும் ...... தம்பிரானே.
திருப்பாடல் 33:
தந்தன தானான தானன
தந்தன தானான தானன
தந்தன தானான தானன ...... தனதான
கொம்பனையார் காது மோதிரு
கண்களில் ஆமோத சீதள
குங்கும பாடீர பூஷண ...... நகமேவு
கொங்கையில் நீராவி மேல்வளர்
செங்கழு நீர்மாலை சூடிய
கொண்டையில் ஆதார சோபையில் ...... மருளாதே
உம்பர்கள் ஸ்வாமி நமோநம
எம்பெருமானே நமோநம
ஒண்டொடி மோகா நமோநம ...... எனநாளும்
உன்புகழேபாடி நானினி
அன்புடன் ஆசார பூசை!செய்
துய்ந்திட வீணாள் படாதருள் ...... புரிவாயே
பம்பரமே போல ஆடிய
சங்கரி வேதாள நாயகி
பங்கய சீபாத நூபுரி ...... கரசூலி
பங்கமிலா நீலி மோடி!ப
யங்கரி மாகாளி யோகினி
பண்டு சுராபான சூரனொடெதிர் போர்!கண்
டெம் புதல்வா வாழி !வாழியெ
னும்படி வீறான வேல்தர
என்றும்உளானே மநோகர ...... வயலூரா
இன்சொல் விசாகா க்ருபாகர
செந்திலில் வாழ்வாகியே !அடி
யென்தனை ஈடேற வாழ்வருள் ...... பெருமாளே.
திருப்பாடல் 34:
தனதன தனதன தனதன தன
தந்தத் ...... தனதானா
கொலைமத கரியன ம்ருகமத தனகிரி
கும்பத் ...... தனமானார்
குமுதஅமுதஇதழ் பருகிஉருகிமயல்
கொண்டுற்றிடு நாயேன்
நிலையழி கவலைகள் கெட உனதருள் விழி
நின்றுற்றிடவே தான்
நினதிருவடி மலர் இணை மனதினிலுற
நின் பற்றடைவேனோ
சிலையென வடமலை உடையவர் அருளிய
செஞ்சொல் ...... சிறுபாலா
திரைகடலிடை வரும் அசுரனை வதைசெய்த
செந்தில் ...... பதிவேலா
விலைநிகர் நுதலிப மயில் குறமகளும்!வி
ரும்பிப் ...... புணர்வோனே
விருதணி மரகத மயில்வரு குமர!வி
டங்கப் ...... பெருமாளே.
திருப்பாடல் 35:
தந்தனா தந்தனத் தந்தனா தந்தனத்
தந்தனா தந்தனத் ...... தனதான
சங்குபோல் மென் கழுத்தந்த வாய் தந்தபல்
சந்த மோகின்ப முத்தென வானில்
தங்குகார் பைங்குழல் கொங்கைநீள் தண்!பொருப்
பென்று தாழ்வொன்றறுத்துலகோரைத்
துங்கவேள் செங்கைபொன் கொண்டல் நீயென்றுசொல்
கொண்டுதாய் நின்றுரைத்துழலாதே
துன்பநோய் சிந்தநல் கந்தவேள் என்றுனைத்
தொண்டினால் ஒன்றுரைக்கருள்வாயே
வெங்கண் வ்யாளம் கொதித்தெங்கும் !வேமென்றெடுத்
துண்டுமேல் அண்டருக்கமுதாக
விண்டநாதன்திருக் கொண்டல் பாகன்!செருக்
குண்டு பேரம்பலத்தினில்ஆடி
செங்கண்மால் பங்கயக் !கண்பெறாதந்தரத்
தின் கணாடும்திறல் ...... கதிராழித்
திங்கள்வாழும் சடைத் தம்பிரான் அன்புறச்
செந்தில்வாழ் செந்தமிழ்ப் ...... பெருமாளே.
திருப்பாடல் 36:
தந்தனா தந்தனா தந்தனா தந்தனா
தந்தனா ...... தந்ததான
சங்கைதான் ஒன்றுதான் இன்றியே நெஞ்சிலே
சஞ்சலாரம்ப மாயன்
சந்தொடே குங்குமாலங்க்ருதாடம்பரா
சம்ப்ரமாநந்த மாயன்
மங்கைமார் கொங்கைசேர் அங்க மோகங்களால்
வம்பிலே ...... துன்புறாமே
வண்குகா நின்சொரூபம் ப்ரகாசம்கொடே
வந்துநீ ...... அன்பிலாள்வாய்
கங்கைசூடும் பிரான் மைந்தனே அந்தனே
கந்தனே ...... விஞ்சையூரா
கம்பியாதிந்த்ர லோகங்கள் !காவென்றவா
கண்டலேசன் சொல்வீரா
செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே
சென்று மோதும் ப்ரதாபா
செங்கண்மால் பங்கஜானன் தொழாநந்தவேள்
செந்தில்வாழ் ...... தம்பிரானே.
திருப்பாடல் 37:
தத்ததன தானதன தத்தான
தத்ததன தானதன தத்தான
தத்ததன தானதன தத்தான ...... தனதான
சத்தமிகு ஏழுகடலைத் தேனை
உற்றமது தோடு கணையைப் போர்கொள்
சத்திதனை மாவின் வடுவைக் காவி ...... தனைமீறு
தக்கமணம் வீசு கமலப்பூவை
மிக்க விளைவான கடுவைச்சீறு
தத்துகளும் வாளையடும் மைப்பாவு ...... விழிமாதர்
மத்தகிரி போலும்ஒளிர் வித்தார
முத்துவட மேவுமெழில் மிக்கான
வச்சிர கிரீடநிகர் செப்பான ...... தனமீதே
வைத்தகொடி தானமயல் விட்டான
பத்திசெய ஏழை அடிமைக்காக
வஜ்ரமயில் மீதிலினி(ல்) எப்போது ...... வருவாயே
சித்ர வடிவேல் பனிரு கைக்கார
பத்தி புரிவோர்கள் பனுவற்கார
திக்கினும் நடாவு புரவிக்கார ...... குறமாது
சித்தஅநுராக கலவிக்கார
துட்ட அசுரேசர் கலகக்கார
சிட்டர் பரிபால லளிதக்கார ...... அடியார்கள்
முத்திபெறவே சொல் வசனக்கார
தத்தைநிகர் தூய வநிதைக்கார
முச்சகர் பராவு சரணக்கார ...... இனிதான
முத்தமிழை ஆயும் வரிசைக்கார
பச்சைமுகில் தாவு புரிசைக்கார
முத்துலவு வேலைநகர் முத்தேவர் ...... பெருமாளே.
திருப்பாடல் 38:
தந்ததன தானதன தத்தான
தந்ததன தானதன தத்தான
தந்ததன தானதன தத்தான ...... தனதான
சந்தன சவாதுநிறை கற்பூர
குங்கும படீரவிரை கத்தூரி
தண் புழுகளாவு களபச்சீத ...... வெகுவாச
சண்பக கலார வகுளத் தாம
வம்பு துகிலார வயிரக் கோவை
தங்கிய கடோரதர வித்தார ...... பரிதான
மந்தரமதான தன மிக்காசை
கொண்டு பொருள் தேடுமதி நிட்டூர
வஞ்சக விசார இதயப் பூவை ...... அனையார்கள்
வந்தியிடு மாய விரகப் பார்வை
அம்பில் உளம் வாடும் அறிவற்றேனை
வந்தடிமையாள இனி எப்போது ...... நினைவாயே
இந்த்ரபுரி காவல் முதன்மைக்கார
சம்ப்ரம மயூர துரகக்கார
என்றும் அகலாத இளமைக்கார ...... குறமாதின்
இன்ப அநுபோக சரசக்கார
வந்த அசுரேசர் கலகக்கார
எங்களுமை சேயென் அருமைக்கார ...... மிகுபாவின்
செந்தமிழ்சொல் நாலு கவிதைக்கார
குன்றெறியும் வேலின் வலிமைக்கார
செஞ்சொல்அடியார்கள் எளிமைக்கார ...... எழில்மேவும்
திங்கள்முடி நாதர் சமயக்கார
மந்த்ரஉபதேச மகிமைக்கார
செந்தில்நகர் வாழும் அருமைத்தேவர் ...... பெருமாளே.
திருப்பாடல் 39:
தானத் தானன தானத் தானன
தானத் தானன ...... தந்ததான
சேமக் கோமள பாதத் தாமரை
சேர்தற்கோதும் அநந்த !வேதா
தீதத்தே அவிரோதத்தே குண
சீலத்தே மிக ...... அன்புறாதே
காம க்ரோத உலோபப் !பூதவி
காரத்தே அழிகின்ற மாயா
காயத்தே பசு பாசத்தே சிலர்
காமுற்றேயும் அதென் கொலோதான்
நேமிச் சூரொடு மேருத் தூளெழ
நீளக் காள புயங்க கால
நீல க்ரீப கலாபத் தேர்விடு
நீபச் சேவக ...... செந்தில்வாழ்வே
ஓமத்தீ வழுவார்கட்கூர் சிவ
லோகத்தே தரு ...... மங்கைபாலா
யோகத்தாறுபதேசத் தேசிக
ஊமைத் தேவர்கள் ...... தம்பிரானே.
திருப்பாடல் 40:
தனதனன தாந்த தந்தத்
தனதனன தாந்த தந்தத்
தனதனன தாந்த தந்தத் ...... தனதான
தகரநறை பூண்ட விந்தைக்
குழலியர்கள் தேய்ந்த இன்பத்
தளருமிடை ஏந்து தங்கத் ...... தனமானார்
தமைமனதில் வாஞ்சை பொங்கக்
கலவியொடு சேர்ந்து மந்த்ரச்
சமயஜெப நீங்கி இந்தப் ...... படிநாளும்
புகலரிய தாந்த்ரி சங்கத்
தமிழ்பனுவல் ஆய்ந்து கொஞ்சிப்
புவியதனில் வாழ்ந்து வஞ்சித்துழல் மூடர்
புநிதமிலி மாந்தர் தங்கள்
புகழ் பகர்தல் நீங்கி நின்பொற்
புளகமலர் பூண்டு வந்தித்திடுவேனோ
தகுடதகு தாந்த தந்தத்
திகுடதிகு தீந்தமிந்தித்
தகுகணக தாங்கணங்கத் ...... தனதான
தனனதன தாந்தனந்தத்
தெனநடனம் ஆர்ந்த துங்கத்
தனிமயிலை ஊர்ந்த சந்தத் ...... திருமார்பா
திசையசுரர் மாண்டழுந்தத்
திறலயிலை வாங்கு செங்கைச்
சிமையவரை ஈன்ற மங்கைக்கொரு பாலா
திகழ் வயிரமேந்து கொங்கைக்
குற வனிதை காந்த சந்த்ரச்
சிகர முகிலோங்கு செந்தில் ...... பெருமாளே.
திருப்பாடல் 41:
தந்தா தந்தா தந்தா தந்தா
தந்தா தந்தத் ...... தனதான
தண் தேனுண்டே வண்டார்வம்சேர்
தண்தார் மஞ்சுக் ...... குழல்மானார்
தம்பால்அன்பார் நெஞ்சே கொண்டே
சம்பாவம் சொற்றடி நாயேன்
மண்தோயம்தீ மென்கால் விண்தோய்
வண்காயம் பொய்க் ...... குடில்வேறாய்
வன்கானம் போய் அண்டா முன்பே
வந்தே நின்பொற் ...... கழல்தாராய்
கொண்டாடும்பேர் கொண்டாடும்சூர்
கொன்றாய் வென்றிக் ...... குமரேசா
கொங்கார் வண்டார் பண்பாடும்சீர்
குன்றா மன்றற் ...... கிரியோனே
கண்டாகும் பாலுண்டாய் அண்டார்
கண்டா கந்தப் ...... புயவேளே
கந்தா மைந்தாரம் தோள் மைந்தா
கந்தா செந்தில் ...... பெருமாளே.
திருப்பாடல் 42:
தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்
தந்ததன தந்தனந் ...... தந்ததானா
தண்டையணி வெண்டையம் கிண்கிணி சதங்கையும்
தண்கழல் சிலம்புடன் ...... கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந்தின்பவுரி கொண்டுநன்
சந்தொடமணைந்து நின்றன்பு போலக்
கண்டுற கடம்புடன் சந்த மகுடங்களும்
கஞ்சமலர் செங்கையும் ...... சிந்துவேலும்
கண்களும் முகங்களும் சந்திர நிறங்களும்
கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ
புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும்
பொங்கியெழ வெங்களம் ...... கொண்டபோது
பொன்கிரியெனஞ் சிறந்தெங்கினும் வளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையும் ...... சிந்தைகூரக்
கொண்ட நடனம்பதம் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சி நடனம் கொளும் ...... கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடும்
கும்பமுநி கும்பிடும் ...... தம்பிரானே.
திருப்பாடல் 43:
தந்த தனதனன தந்த தனதனன
தந்த தனதனன ...... தனதானா
தந்த பசிதனை அறிந்து முலையமுது
தந்து முதுகு தடவிய தாயார்
தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
தங்கை மருகர் உயிரெனவே சார்
மைந்தர் மனைவியர் கடும்பு கடனுதவும்
அந்த வரிசைமொழி ...... பகர்கேடா
வந்து தலைநவிர் அவிழ்ந்து தரைபுக!ம
யங்க ஒருமகிட ...... மிசையேறி
அந்தகனும்எனை அடர்ந்து வருகையினில்
அஞ்சலென வலிய ...... மயில்மேல்நீ
அந்த மறலியொடுகந்த மனிதன்!நம
தன்பன் எனமொழிய ...... வருவாயே
சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
சிந்து பயமயிலு ...... மயில்வீரா
திங்கள் அரவுநதி துன்று சடிலரருள்
செந்தில் நகரிலுறை ...... பெருமாளே.
திருப்பாடல் 44:
தனத்தந்தன தனத்தந்தன
தனத்தந்தன ...... தனதானத்
தரிக்கும் கலை நெகிழ்க்கும்!பர
தவிக்கும் கொடி ...... மதனேவில்
தகைக்கும்தனி திகைக்கும்சிறு
தமிழ்த் தென்றலின் உடனே!நின்
றெரிக்கும்பிறை எனப் புண்படும்
எனப் புன்கவி ...... சிலபாடி
இருக்கும்சிலர் திருச்செந்திலை
உரைத்துய்ந்திட ...... அறியாரே
அரிக்கும்சதுர் மறைக்கும்!பிர
மனுக்கும் தெரிவரிதான
அடிச்செஞ்சடை முடிக்கொண்டிடும்
அரற்கும் புரி ...... தவபாரக்
கிரிக்கும்ப நன் முநிக்கும் க்ருபை
வரிக்கும் குரு ...... பரவாழ்வே
கிளைக்கும்திறல் அரக்கன்கிளை
கெடக்கன்றிய ...... பெருமாளே.
திருப்பாடல் 45:
தந்தந்தந் தந்தன தந்தன
தந்தந்தந் தந்தன தந்தன
தந்தந்தந் தந்தன தந்தன ...... தனதான
துன்பம் கொண்டங்கம் மெலிந்தற
நொந்தன்பும் பண்பு மறந்தொளி
துஞ்சும்பெண் சஞ்சலம் என்பதில் அணுகாதே
இன்பம் தந்தும்பர் தொழும்பத
கஞ்சம் தம் தஞ்சமெனும்படி
என்றென்றும் தொண்டு செயும்படி ...... அருள்வாயே
நின்பங்கொன்றும் குற மின்!சர
ணம் கண்டுன் தஞ்சமெனும்படி
நின்றன்பின் தன்படி கும்பிடுன் இளையோனே
பைம்பொன் சிந்தின்துறை தங்கிய
குன்றெங்கும் சங்கு வலம்புரி
பம்பும் தென் செந்திலில் வந்தருள் ...... பெருமாளே.
திருப்பாடல் 46:
தனத்த தத்தத் தனத்தனா
தனத்த தத்தத் தனத்தனா
தனத்த தத்தத் தனத்தனா ...... தந்ததான தனனா
தெருப் புறத்துத் துவக்கியாய்
முலைக்கு வட்டைக் குலுக்கியாய்
சிரித்துருக்கித் தருக்கியே ...... பண்டைகூளம் எனவாழ்
சிறுக்கி ரட்சைக்கிதக்கியாய்
மனத்தை வைத்துக் கனத்தபேர்
தியக்கமுற்றுத் தவிக்கவே ...... கண்டுபேசியுடனே
இருப்பகத்துத் தளத்துமேல்
விளக்கெடுத்துப் படுத்துமேல்
இருத்தி வைத்துப் பசப்பியே ...... கொண்டுகாசு !தணியா
திதுக்கதுக்குக் கடப்படாம்
எனக்கை கக்கக் கழற்றியே
இளைக்க விட்டுத் துரத்துவார் ...... தங்கள்சேர்வை தவிராய்
பொருப்பை ஒக்கப் பணைத்ததோர்
இரட்டி பத்துப் புயத்தினால்
பொறுத்த பத்துச் சிரத்தினால் ...... மண்டுகோபமுடனே
பொரப் பொருப்பில் கதித்தபோர்
அரக்கர் பட்டுப் பதைக்கவே
புடைத்து முட்டத் துணித்தமால் அன்புகூரு மருகா
வரப்பையெட்டிக் குதித்துமேல்
இடத்தில் வட்டத் தளத்திலே
மதர்த்த முத்தைக் குவட்டியே ...... நின்று சேலினினம் வாழ்
வயற்புறத்துப் புவிக்குள்நீள்
திருத்தணிக்குள் சிறப்பில்வாழ்
வயத்த நித்தத் துவத்தனே ...... செந்தில்மேவு குகனே.
திருப்பாடல் 47:
தனதன தந்தாத் தந்தத்
தனதன தந்தாத் தந்தத்
தனதன தந்தாத் தந்தத் ...... தனதான
தொடர்இயமன்போல் துங்கப்
படையை வளைந்தோட்டும் !துட்
டரைஇளகும் தோள் கொங்கைக்கிடும் மாயத்
துகில்விழவும் !சேர்த்தங்கத்
துளை விரகும் சூழ்த்தண்டித்
துயர்விளையும் சூட்டின்பத்தொடு !பாயற்
கிடைகொடு சென்றீட்டும் பொன்
பணியரை மென்றேற்றம் !கற்
றனைஎன இன்றோட்டென்றற்கிடும் !மாதர்க்
கினிமையில் ஒன்றாய்ச் !சென்றுட்
படுமனம் உன் !தாட்கன்புற்
றியலிசை கொண்டேத்தென்றுள் ...... தருவாயே
நெடிதுதவம் கூர்க்கும்!சற்
புருடரும் நைந்தேக்கம் !பெற்
றயர்வுற நின்றார்த் தங்கள் கணையேவும்
நிகரில் மதன் தேர்க் !குன்றற்
றெரியில் விழும்தேர்ப் பொன்றச்
சிறிது நினைந்தாட்டம் கற்றிடுவார் முன்
திடமுறு அன்பால் !சிந்தைக்
கறிவிடமும் !சேர்த்தும்பர்க்
கிடர் களையும் போர்ச் செங்கைத் ...... திறல்வேலா
தினவரி !வண்டார்த்தின்புற்
றிசைகொடு வந்தேத்திஞ்சித்
திருவளர் செந்தூர்க் கந்தப் ...... பெருமாளே.
திருப்பாடல் 48:
தந்த தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன ...... தனதான
தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
தந்தமசைய முதுகே வளையஇதழ்
தொங்க ஒருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி
தொண்டு கிழவன் இவனாரென இருமல்
கிண்கிணென முனுரையே குழறவிழி
துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி
வந்த பிணியும் அதிலே மிடையுமொரு
பண்டிதனும் மெயுறு வேதனையும்இள
மைந்தர் உடைமை கடனேதென முடுக ...... துயர்மேவி
மங்கை அழுது விழவே யமபடர்கள்
நின்று சருவ மலமே ஒழுகவுயிர்
மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்
எந்தை வருக ரகுநாயகவருக
மைந்த வருக மகனே இனிவருக
என்கண் வருக எனதாருயிர் வருக ...... அபிராம
இங்கு வருக அரசே வருகமுலை
உண்க வருக மலர் சூடிட வருக
என்று பரிவினொடு கோசலைபுகல ...... வருமாயன்
சிந்தை மகிழும் மருகா குறவரிள
வஞ்சி மருவும் அழகா அமரர்சிறை
சிந்த அசுரர் கிளை வேரொடுமடிய ...... அடுதீரா
திங்களரவு நதி சூடிய பரமர்
தந்த குமர அலையே கரைபொருத
செந்திநகரில் இனிதே மருவிவளர் ...... பெருமாளே.
திருப்பாடல் 49:
தானன தானன தானன தந்தத்
தானன தானன தானன தந்தத்
தானன தானன தானன தந்தத் ...... தனதான
தோலொடு மூடிய கூரையை நம்பிப்
பாவையர் தோதக லீலை நிரம்பிச்
சூழ்பொருள் தேடிட ஓடி வருந்திப் ...... புதிதான
தூதொடு நான்மணி மாலை ப்ரபந்தக்
கோவையுலா மடல் கூறிஅழுந்தித்
தோமுறு காளையர் வாசல் தொறும் புக்கலமாரும்
காலனை வீணனை நீதிகெடும் பொய்க்
கோளனை மானமிலா வழி நெஞ்சக்
காதகலோப வ்ருதாவனை நிந்தைப் ...... புலையேனைக்
காரண காரிய லோக ப்ரபஞ்சச்
சோகமெலாம்அற வாழ்வுற நம்பிற்
காசறு வாரிமெய்ஞ் ஞானதவம் சற்றருளாதோ
பாலன மீதுமன் நான்முக செம்பொற்
பாலனை மோதபராதன பண்டப்
பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற்றமராடிப்
பாவிஇராவணனார் தலை சிந்திச்
சீரிய வீடணர் வாழ்வுற மன்றற்
பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக்கினியோனே
சீலமுலாவிய நாரதர் !வந்துற்
றீதவள் வாழ்புனமாமென முந்தித்
தேமொழி பாளித கோமள இன்பக் ...... கிரிதோய்வாய்
சேலொடு வாளை வரால்கள் கிளம்பித்
தாறுகொள் பூகமளாவிய இன்பச்
சீரலைவாய் நகர் மேவிய கந்தப் ...... பெருமாளே.
திருப்பாடல் 50:
தான தந்த தான தான - தான தந்த தான தான
தான தந்த தான தான ...... தனதான
நாலும் ஐந்து வாசல் கீறு தூறுடம்பு கால்கையாகி
நாரிஎன்பிலாகும் ஆகம் அதனூடே
நாதமொன்ற ஆதி வாயில் நாடகங்களான ஆடி
நாடறிந்திடாமல் ஏக ...... வளராமுன்
நூல்அநந்த கோடி தேடி மால்மிகுந்து பாருளோரை
நூறு செஞ்சொல் கூறி மாறி ...... விளைதீமை
நோய் கலந்த வாழ்வுறாமல் நீகலந்துள்ஆகு ஞான
நூலடங்க ஓத வாழ்வு ...... தருவாயே
காலன் வந்து பாலனாவி காயவென்று பாசம் வீசு
காலம் வந்து ஓலம் ஓலம் எனும்ஆதி
காமனைந்து பாணமோடு வேமின்என்று காணு மோனர்
காள கண்டரோடு வேத ...... மொழிவோனே
ஆலமொன்று வேலையாகி யானை அஞ்சல் தீரு மூல
ஆழியங்கை ஆயன் மாயன் ...... மருகோனே
ஆரணங்கள் தாளை நாட வாரணங்கை மேவும் !ஆதி
யான செந்தில் வாழ்வதான ...... பெருமாளே.
திருப்பாடல் 51:
தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனம்
தனத்தத் தந்தனம் ...... தனதான
நிதிக்குப் பிங்கலன் பதத்துக்கிந்திரன்
நிறத்திற் கந்தன்என்றினைவொரை
நிலத்தில் தன்பெரும் பசிக்குத் !தஞ்சமென்
றரற்றித் துன்பநெஞ்சினில் நாளும்
புதுச்சொல் சங்கமொன்றிசைத்துச் சங்கடம்
புகட்டிக் கொண்டுடம்பழி மாயும்
புலத்தில் சஞ்சலம் குலைத்திட்டுன் பதம்
புணர்க்கைக்கன்பு தந்தருள்வாயே
மதித்துத் திண்புரம் சிரித்துக் கொன்றிடும்
மறத்திற் தந்தை மன்றினில்ஆடி
மழுக்கைக் கொண்ட சங்கரர்க்குச் சென்றுவண்
தமிழ்ச்சொல் சந்தம்ஒன்றருள்வோனே
குதித்துக் குன்றிடம் தலைத்துச் செம்பொனும்
கொழித்துக் கொண்ட செந்திலின் வாழ்வே
குறப்பொன் கொம்பைமுன் புனத்தில் செங்கரம்
குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.
திருப்பாடல் 52:
தனனாத் தனன தனனாத் தனன
தனனாத் தனன ...... தனதான
நிலையாப் பொருளை உடலாக் கருதி
நெடுநாள் பொழுதும் அவமேபோய்
நிறைபோய்ச் செவிடு குருடாய்ப் பிணிகள்
நிறைவாய்ப் பொறிகள் ...... தடுமாறி
மலநீர்ச் சயன மிசையாப் பெருகி
மடிவேற்குரிய ...... நெறியாக
மறை போற்றரிய ஒளியாய்ப் பரவு
மலர்தாள் கமலம் அருள்வாயே
கொலை காட்டவுணர் கெடமாச் சலதி
குளமாய்ச் சுவற ...... முதுசூதம்
குறிபோய்ப் பிளவு படமேற்கதுவு
கொதிவேல் படையை ...... விடுவோனே
அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர
அழியாப் புநித ...... வடிவாகும்
அரனார்க்கதித பொருள் காட்டதிப
அடியார்க்கெளிய ...... பெருமாளே.
திருப்பாடல் 53:
தனத்தந் தானன தத்தன தத்தன
தனத்தந் தானன தத்தன தத்தன
தனத்தந் தானன தத்தன தத்தன ...... தனதான
நிறுக்கும் சூதன மெய்த்தன முண்டைகள்
கருப்பம் சாறொடரைத்துள உண்டைகள்
நிழற்கண் காணஉணக்கி மணம்பல ...... தடவாமேல்
நெருக்கும் பாயலில் வெற்றிலையின்புறம்
ஒளித்தன்பாக அளித்தபின் இங்கெனை
நினைக்கின்றீரிலை மெச்சலிதம் சொலி ...... எனஓதி
உறக்கண்டாசை வலைக்குள் அழுந்திட
விடுக்கும் பாவிகள் பொட்டிகள் சிந்தனை
உருக்கும் தூவைகள் செட்டை குணம்தனில் உழலாமே
உலப்பில்ஆறெனும் அக்கரமும் கமழ்
கடப்பம்தாரு முகப்ரபையும் தினம்
உளத்தின் பார்வை இடத்தினில் நினைந்திட ...... அருள்வாயே
கறுக்கும் தூயமிடற்றன் அரும் சிலை
எடுக்கும் தோளன் இறத்தமர்எண் கரி
கடக்கும் தானவனைக் கொல்அரும்புயன் ...... மருகோனே
கனத் தஞ்சாபுரி சிக்கல் வலஞ்சுழி
திருச்செங்கோடுஇடைக்கழி தண்டலை
களர்ச்செங்காடு குறுக்கை புறம்பயம் ...... அமர்வோனே
சிறுக்கண் கூர்மத அத்தி சயிந்தவம்
நடக்கும் தேர்அனிகப்படை கொண்டமர்
செலுத்தும் பாதகன் அக்ரமன் வஞ்சனை ...... உருவானோன்
செருக்கும் சூர்அகலத்தை இடந்துயிர்
குடிக்கும் கூரிய சத்திஅமர்ந்தருள்
திருச்செந்தூர் நகரிக்குள் விளங்கிய ...... பெருமாளே.
திருப்பாடல் 54:
தந்தனா தந்தனத் தந்தனா தந்தனத்
தந்தனா தந்தனத் ...... தனதான
பங்கமேவும் பிறப்பந்தகாரம் தனில்
பந்தபாசம் தனில் தடுமாறிப்
பஞ்சபாணம்படப் புண்படா வஞ்சகப்
பண்பில் ஆடம்பரப் ...... பொதுமாதர்
தங்கள் ஆலிங்கனக் கொங்கை ஆகம்படச்
சங்கைமால் கொண்டிளைத்தயராதே
தண்டைசூழ் கிண்கிணிப் புண்டரீகம் தனை
தந்துநீ அன்பு வைத்தருள்வாயே
அங்கைவேல் கொண்டரக்கன் ப்ரதாபம்!கெடுத்
தண்ட வேதண்டம் உட்படவேதான்
அஞ்சவே திண்திறல் கொண்டல் !ஆகண்டலற்
கண்ட லோகம் கொடுத்தருள்வோனே
திங்களார் கொன்றை மத்தம் துழாய் துன்றுபொற்
செஞ்சடா பஞ்சரத்துறு தோகை
சிந்தையே தென்திசைத் தென்றல்வீசும் பொழில்
செந்தில்வாழ் செந்தமிழ்ப் ...... பெருமாளே.
திருப்பாடல் 55:
தந்த தானன தனதன தனதன
தந்த தானன தனதன தனதன
தந்த தானன தனதன தனதன ...... தனதான
பஞ்ச பாதகம் உறுபிறை எயிறெரி
குஞ்சி கூர்விட மதர்விழி பிலவக
பங்க வாள்முக முடுகிய நெடுகிய ...... திரிசூலம்
பந்த பாசமும் மருவிய கரதலம்
மிஞ்சி நீடிய கருமுகில் உருவொடு
பண்பிலாதொரு பகடது முதுகினில் ...... யமராஜன்
அஞ்சவே வரும் அவதரம் அதிலொரு
தஞ்சமாகிய வழிவழி அருள்பெறும்
அன்பினால் உனதடி புகழ் அடிமையென் எதிரேநீ
அண்ட கோளகை வெடிபட இடிபட
எண்திசா முகம் மடமட நடமிடும்
அந்த மோகர மயிலினில் இயலுடன் ...... வரவேணும்
மஞ்சு போல்வளர் அளகமும் இளகிய
ரஞ்சிதாம்ருத வசனமும் நிலவென
வந்த தூயவெண் முறுவலும் இருகுழை ...... அளவோடும்
மன்றல் வாரிச நயனமும் அழகிய
குன்ற வாணர் தம் மடமகள் தடமுலை
மந்தராசல மிசை துயிலழகிய ...... மணவாளா
செஞ்சொல் மாதிசை வடதிசை குடதிசை
விஞ்சு கீழ்திசை சகலமும் இகல்செய்து
திங்கள் வேணியர் பலதளி தொழுதுயர் ...... மகமேரு
செண்டு மோதினர் அரசருள் அதிபதி
தொண்டராதியும் வழிவழி நெறிபெறு
செந்தில் மாநகர் இனிதுறை அமரர்கள் ...... பெருமாளே.
திருப்பாடல் 56:
தனதனன தான தான தந்தன
தனதனன தான தான தந்தன
தனதனன தான தான தந்தன ...... தந்ததான
படர்புவியின் மீது மீறி வஞ்சர்கள்
வியனினுரை பானுவாய் வியந்துரை
பழுதில்பெரு சீல நூல்களும் தெரி ...... சங்கபாடல்
பனுவல்கதை காவ்யமாம் எணெண்கலை
திருவளுவ தேவர் வாய்மைஎன்கிற
பழமொழியை ஓதியேஉணர்ந்துபல் ...... சந்தமாலை
மடல்பரணி கோவையார் கலம்பகம்
முதல்உளது கோடி கோள் ப்ரபந்தமும்
வகை வகையிலாசு சேர்பெரும்கவி ...... சண்டவாயு
மதுரகவி ராஜநானென் வெண்குடை
விருதுகொடி தாள மேள தண்டிகை
வரிசையொடுலாவு மால்அகந்தை தவிர்ந்திடாதோ
அடல்பொருது பூசலே விளைந்திட
எதிர்பொர ஒணாமல் ஏக சங்கர
அரஹர சிவா மஹாதெவென்றுனி அன்று!சேவித்
தவனிவெகு காலமாய் வணங்கியுள்
உருகிவெகு பாச கோச சம்ப்ரம
அதிபெல கடோர மா சலந்தரன் நொந்துவீழ
உடல்தடியும் ஆழிதா எனம்புய
மலர்கள் தச நூறு தாளிடும்பகல்
ஒருமலரிலாது கோஅணிந்திடு ...... செங்கண் !மாலுக்
குதவிய மகேசர் பால இந்திரன்
மகளைமண மேவி வீறு செந்திலில்
உரிய அடியேனை ஆள வந்தருள் ...... தம்பிரானே.
திருப்பாடல் 57:
தனன தனதனந் தத்தத் தத்தத்
தனன தனதனந் தத்தத் தத்தத்
தனன தனதனந் தத்தத் தத்தத் ...... தனதான
பதும இருசரண் கும்பிட்டின்பக்
கலவி நலமிகும் துங்கக் கொங்கைப்
பகடு புளகிதம் துன்றக் கன்றிக் ...... கயல்போலும்
பரிய கரியகண் செம்பொன் கம்பிக்
குழைகள் பொர மருண்டின்சொல் கொஞ்சிப்
பதற விதமுறும் கந்துக் கொந்துக் ...... குழல்சாயப்
புதுமை நுதிநகம் !பங்கத்தங்கத்
தினிது வரையவெண் சந்தத்திந்துப்
புருவ வெயர்வுடன் பொங்கக் கங்கைச் ...... சடைதாரி
பொடிசெய்தருள் மதன் தந்த்ரப் !பந்திக்
கறிவை இழவிடும் பண்புத் துன்பப்
பொருளின் மகளிர்தம் அன்புப் பண்பைத் ...... தவிரேனோ
திதிதி ததததந் திந்திந் தந்தட்
டிடிடி டடடடண் டிண்டிட் டண்டத்
தெனன தனதனந் தெந்தத் தந்தத் ...... தெனனானா
திகுர்தி தகிர்ததிந் திந்தித் திந்தித்
திரிரி தரர என்றென்றொப்பின்றித்
திமிலை பறையறைந்தெண் திக்கண்டச் ...... சுவர்சோரச்
சதியில் வருபெரும் சங்கத் தொங்கல்
புயஅசுரர் வெகுண்டஞ்சிக் குஞ்சித்
தலைகொடடி பணிந்தெங்கட்குன் கண் ...... க்ருபை தாவென்
சமர குமர கஞ்சம் சுற்றும் !செய்ப்
பதியில் முருகமுன் பொங்கித் தங்கிச்
சலதி அலைபொரும் செந்தில் கந்தப் ...... பெருமாளே.
திருப்பாடல் 58:
தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா
தனதன தனதன தந்தத் தந்தத் ...... தனதானா
பரிமள களப சுகந்தச் சந்தத் ...... தனமானார்
படை யம படையென அந்திக்கும் கண் ...... கடையாலே
வரியளி நிரைமுரல் கொங்குக் கங்குல் ...... குழலாலே
மறுகிடு மருளனை இன்புற்றன்புற்றருள்வாயே
அரிதிரு மருக கடம்பத் தொங்கல் ...... திருமார்பா
அலைகுமு குமுவென வெம்பக் கண்டித்தெறிவேலா
திரிபுர தகனரும் வந்திக்கும் சற் ...... குருநாதா
ஜெயஜெய ஹரஹர செந்தில் கந்தப் ...... பெருமாளே.
திருப்பாடல் 59:
தனத்தந்தத் தனத்தந்தத்
தனத்தந்தத் தனத்தந்தத்
தனத்தந்தத் தனத்தந்தத் ...... தனதான
பருத் தந்தத்தினைத் !தந்திட்
டிருக்கும் கச்சடர்த்துந்திப்
பருக்கும்பொற் ப்ரபைக் குன்றத் ...... தனமானார்
பரிக்கும்துற் சரக்கொன்றத்
திளைத்தங்குற்பலப் பண்பைப்
பரக்கும் சக்கரத்தின் சத்தியை நேரும்
துரைச்செங்கண் கடைக்கொன்றிப்
பெருத்தன்புற்றிளைத்தங்குத்
துணிக்கும் புத்தியைச் சங்கித்தறியேனைத்
துணைச்செம்பொன் !பதத்தின்புற்
றெனக்கென்றப் பொருள் தங்கத்
தொடுக்கும் சொற்தமிழ்த் தந்திப்படி ஆள்வாய்
தருத்தங்கப் !பொலத்தண்டத்
தினைக் கொண்டச் சுரர்க்கஞ்சத்
தடத் துன்பத்தினைத் தந்திட்டெதிர் சூரன்
சமர்க்கெஞ்சிப் படித்துஞ்சக்
கதிர்த் துங்கத்தயில் !கொண்டத்
தலத்தும்பர்ப் பதிக்கன்புற்றருள்வோனே
திருக்கஞ்சத்தனைக் !கண்டித்
துறக்கம் குட்டிவிட்டும் சத்
சிவற்கன்றப் பொருள் கொஞ்சிப் ...... பகர்வோனே
செயத்துங்கக் கொடைத்துங்கத்
திருத்தங்கித் தரிக்கும்பொன்
திருச்செந்தில் பதிக் கந்தப் ...... பெருமாளே.
திருப்பாடல் 60:
தான தானனந் தானனந் தானதன
தான தானனந் தானனந் தானதன
தான தானனந் தானனந் தானதன ...... தந்ததானா
பாத நூபுரம் பாடகம் சீர்கொள்நடை
ஓதி மோகுலம் போல சம்போகமொடு
பாடி பாளிதம் காருகம் பாவையிடை ...... வஞ்சிபோலப்
பாகு பால்குடம் போலிரண்டான!குவ
டாட நீள்வடம் சேர்அலங்கார குழல்
பாவ மேகபொன் சாபமிந்தே பொருவர் அந்தமீதே
மாதர் கோகிலம் போல் கரும்பான மொழி
தோகை வாகர் கண்டாரை கொண்டாடி !தகை
வாரும் வீடெஎன்றோதி தம் பாயல்மிசை ...... அன்புளார்போல்
வாச பாசகம் சூது பந்தாடஇழி
வேர்வை பாய சிந்தாகு கொஞ்சாரவிழி
வாகு தோள்கரம் சேர்வை தந்தாடுமவர் ...... சந்தமாமோ
தீத தோதகந் தீததிந் தோதிதிமி
டூடு டூடுடுண் டூடுடுண் டூடுடுடு
டீகு டீகுகம் போலவொண் பேரிமுர ...... சங்கள்வீறச்
சேடன் மேருவும் சூரனும் தாருகனும்
வீழ ஏழ்தடம் தூளி கொண்டாடமரர்
சேசெ சேசெ என்றாட நின்றாடிவிடும் அங்கி வேலா
தாதை காதிலங்கோது சிங்காரமுகம்
ஆறும் வாகுவும் கூர சந்தானசுக
தாரி மார்பலங்காரி என் பாவை வளி ...... எங்கள்மாதைத்
தாரு பாளிதம் சோர சிந்தாமணிகள்
ஆடவே புணர்ந்தாடி வங்காரமொடு
தாழை வானுயர்ந்தாடு செந்தூரில்உறை ...... தம்பிரானே.
திருப்பாடல் 61:
தனனத் தந்தத் தனனத் தந்தத்
தனனத் தந்தத் ...... தனதான
புகரப் புங்கப் பகரக் குன்றில்
புயலில் தங்கிப் ...... பொலிவோனும்
பொருவில் தஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பில் ...... புகல்வோனும்
திகிரிச் செங்கட் செவியில் துஞ்சத்
திகிரிச் செங்கைத் ...... திருமாலும்
திரியப் பொங்கித் திரையற்றுண்டுள்
தெளிதற்கொன்றைத் ...... தரவேணும்
தகரத்தந்தச் சிகரத்தொன்றித்
தடநற் கஞ்சத்துறைவோனே
தருணக் கொங்கைக் !குறவிக்கின்பத்
தை அளித்தன்புற்றருள்வோனே
பகரப் பைம்பொன் சிகரக் குன்றைப்
படியில் சிந்தத் ...... தொடும்வேலா
பவளத் துங்கப் புரிசைச் செந்தில்
பதியில் கந்தப் ...... பெருமாளே.
திருப்பாடல் 62:
தானன தான தந்த தானன தான தந்த
தானன தான தந்த தானன தான தந்த
தானன தான தந்த தானன தான தந்த ...... தனதான
பூரண வார கும்ப சீதபடீர கொங்கை
மாதர் விகார வஞ்ச லீலையிலே உழன்று
போதவமே இழந்து போனது மானம் என்பதறியாத
பூரியனாகி நெஞ்சு காவல் படாத பஞ்ச
பாதகனாய் அறம்செயாதடி ஓடிறந்து
போனவர் வாழ்வு கண்டும் ஆசையிலே அழுந்து ...... மயல்தீரக்
காரண காரியங்கள் ஆனதெலாம் ஒழிந்து
யானெனும் மேதை விண்டு பாவகமாயிருந்து
காலுடல் ஊடியங்கி நாசியின் மீதிரண்டு ...... விழிபாயக்
காயமும் நாவு நெஞ்சும் ஓர் வழியாக அன்பு
காயம்விடாமல் உந்தன் நீடிய தாள் நினைந்து
காணுதல் கூர்தவம் செய் யோகிகளாய் விளங்க ...... அருள்வாயே
ஆரணசார மந்த்ர வேதமெலாம் விளங்க
ஆதிரையானை நின்று தாழ்வன்எனா வணங்கும்
ஆதரவால் விளங்கு பூரண ஞான மிஞ்சும் உரவோனே
ஆர் கலிஊடெழுந்து மாவடிவாகி நின்ற
சூரனை மாள வென்று வானுலகாளும் அண்டர்
ஆனவர் கூர்அரந்தை தீரமுனாள் மகிழ்ந்த ...... முருகேசா
வாரண மூலமென்ற போதினில்ஆழி கொண்டு
வாவியின் மாடிடங்கர் பாழ்படவே எறிந்த
மாமுகில் போலிருண்ட மேனியனாம் முகுந்தன் ...... மருகோனே
வாலுக மீது வண்டல் ஓடிய காலில் வந்து
சூல்நிறைவான சங்கு மாமணி ஈன உந்து
வாரிதி நீர் பரந்த சீரலைவாய் உகந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 63:
தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந்
தனத்தத்தந் தனத்தத்தந் ...... தனதான
பெருக்கச் சஞ்சலித்துக்!கந்
தலுற்றுப் புந்தியற்றுப் பின்
பிழைப்பற்றும் குறைப்புற்றும் ...... பொது மாதர்
ப்ரியப்பட்டங்கழைத்துத் தம்
கலைக்குள் தங்கிடப் பட்சம்
பிணித்துத் தம் தனத்தைத் தந்தணையாதே
புரக்கைக்குன் பதத்தைத்!தந்
தெனக்குத் தொண்டுறப் பற்றும்
புலத்துக்கண் செழிக்கச் செந்தமிழ் பாடும்
புலப்பட்டம் கொடுத்தற்கும்
கருத்தில் கண் படக்கிட்டும்
புகழ்ச்சிக்கும் க்ருபைச் சித்தம் ...... புரிவாயே
தருக்கிக்கண் களிக்கத்!தெண்
டனிட்டுத்தண் புனத்தில்!செங்
குறத்திக்கன்புறச் சித்தம் ...... தளர்வோனே
சலிப்புற்றங்குரத்தில் !சம்
ப்ரமித்துக் கொண்டலைத்துத் தன்
சமர்த்தில் சங்கரிக்கத் தண்டிய சூரன்
சிரத்தைச் சென்றறுத்துப்!பந்
தடித்துத் திண் குவட்டைக்!கண்
டிடித்துச் செந்திலில் புக்கங்குறைவோனே
சிறக்கற்கஞ்செழுத்தத்தம்
திருச்சிற்றம்பலத்தத்தன்
செவிக்குப் பண்புறச் செப்பும் ...... பெருமாளே.
திருப்பாடல் 64:
தந்த தனன தந்த தனன
தந்த தனன ...... தனதான
மங்கை சிறுவர் தங்கள் கிளைஞர்
வந்து கதற ...... உடல்தீயின்
மண்டிஎரிய விண்டு புனலில்
வஞ்சமொழிய ...... விழஆவி
வெங்கண் மறலி தன்கை மருவ
வெம்பிஇடறும் ஒருபாச
விஞ்சை விளையும் அன்றுனடிமை
வென்றி அடிகள் ...... தொழவாராய்
சிங்கம் உழுவை தங்கும் அடவி
சென்று மறமினுடன் வாழ்வாய்
சிந்தை மகிழ அன்பர் புகழும்
செந்திலுறையும் ...... முருகோனே
எங்கும் இலகு திங்கள் கமலம்
என்று புகலும் ...... முகமாதர்
இன்பம் விளைய அன்பில் அணையும்
என்றும் இளைய ...... பெருமாளே.
திருப்பாடல் 65:
தந்த தந்தன தந்தன தந்தன
தந்த தந்தன தந்தன தந்தன
தந்த தந்தன தந்தன தந்தன ...... தந்ததான
மஞ்செனும் குழலும் பிறை அம்!புரு
வங்களென் சிலையும் கணைஅங்கயல்
வண்டு புண்டரிகங்களையும் பழி ......சிந்துபார்வை
மண்டலம் சுழலும் செவிஅங்குழை
தங்க வெண் தரளம் பதியும் பலும்
மண்டலம் திகழும் கமுகஞ்சிறு ...... கண்டமாதர்
கஞ்சுகம் குரலும் கழை அம்புய
கொங்கை செங்கிரியும் பவளம்பொறி
கந்த சந்தனமும் பொலியும் துகில் ...... வஞ்சிசேரும்
கஞ்ச மண்டுளில் நின்றிரசம் புகு
கண்படர்ந்திட ரம்பையெனும் தொடை
கண்கை அஞ்சரணம் செயல் வஞ்சரை ...... நம்புவேனோ
சஞ்ச சஞ்சக ணஞ்சக டுண்டுடு
டுண்டு டிண்டிமி டண்டம டுண்டுடு
தந்த னந்தன திந்திமி சங்குகள் ...... பொங்குதாரை
சம்புவின் குமரன் புலவன்பொரு
கந்தன்என்றிடு துந்துமியும்!துவ
சங்கள் அங்கொளிரும் குடையும் திசை ...... விஞ்சவே!கண்
டஞ்ச வஞ்சசுரன் திரளும்!குவ
டன்றடங்கலும் வெந்து பொரிந்திட
அண்டர் இந்திரனும் சரணம்புக ...... வென்றவேளே
அம்புயம் தண் அரம்பை குறிஞ்சியின்
மங்கை அங்குடில் மங்கையொடன்புடன்
அண்டரும்தொழு செந்திலில் அன்புறு ...... தம்பிரானே.
திருப்பாடல் 66:
தனத்தந்தந் தனத்தந்தந்
தனத்தந்தந் தனத்தந்தந்
தனத்தந்தந் தனத்தந்தந் ...... தனதானா
மனத்தின் பங்கெனத் தங்கைம்
புலத்தெந்தன் !குணத்தஞ்சிந்
த்ரியத் தம்பம் தனைச் சிந்தும் ...... படிகாலன்
மலர்ச் செங்கண் கனற்பொங்கும்
திறத்தின் தண்டெடுத்தண்டம்
கிழித்தின்றிங்குறத் தங்கும் ...... பலவோரும்
!எனக்கென்றிங்குனக்கென்றங்
கினத்தின் கண் !கணக்கென்றென்
றிளைத்தன்பும் கெடுத்தங்கம் கழிவாமுன்
இசைக்கும் செந்தமிழ்க் !கொண்டங்
கிரக்கும்புன் தொழிற்பங்கம்
கெடத் துன்பம் கழித்தின்பம் ...... தருவாயே
கனைக்கும்தண் கடற்சங்கம்
கரத்தின்கண் தரித்தெங்கும்
கலக்கம் சிந்திடக் கண் துஞ்சிடு மாலும்
கதித்தொண் பங்கயத்தன் !பண்
பனைத்தும் குன்றிடச் சந்தம்
களிக்கும் சம்புவுக்கும் செம் ...... பொருளீவாய்
தினைக்குன்றம் தனில்தங்கும்
சிறுப்பெண் குங்குமக் கும்பம்
திருச்செம்பொன் புயத்தென்றும் ...... புனைவோனே
செழிக்கும் குண்டகழ்ச் சங்கம்
கொழிக்கும் சந்தனத்தின் பைம்
பொழில்தண் செந்திலில் தங்கும் ...... பெருமாளே.
திருப்பாடல் 67:
தனதனன தந்த தனதனன தந்த
தனதனன தந்த ...... தனதானா
மனைகனக மைந்தர் தமதழகு பெண்டிர்
வலிமை குல நின்ற ...... நிலைஊர்பேர்
வளரிளமை தஞ்சம் முனை புனை வளங்கள்
வரிசை தமரென்று ...... வருமாயக்
கனவுநிலை இன்பம் அதனை எனதென்று
கருதிவிழி இன்ப ...... மடவார்தம்
கலவிமயல் கொண்டு பலவுடல் புணர்ந்து
கருவில் விழுகின்றதியல்போ தான்
நினையும் நினதன்பர் பழவினை களைந்து
நெடுவரை பிளந்த ...... கதிர்வேலா
நிலமுதல் விளங்கு நலமருவு செந்தில்
நிலைபெற இருந்த ...... முருகோனே
புனைமலர் புனைந்த புனமற மடந்தை
புளகஇரு கொங்கை ...... புணர்மார்பா
பொருதுடன் எதிர்ந்த நிருதர் மகுடங்கள்
பொடிபட நடந்த ...... பெருமாளே
திருப்பாடல் 68:
தான தானன தந்தன தந்தன
தான தானன தந்தன தந்தன
தான தானன தந்தன தந்தன ...... தனதானா
மாய வாடை திமிர்ந்திடு கொங்கையில்
மூடு சீலை திறந்த மழுங்கிகள்
வாசல் தோறும் நடந்து சிணுங்கிகள் ...... பழையோர்மேல்
வால நேச நினைந்தழு வம்பிகள்
ஆசை நோய்கொள் மருந்திடு சண்டிகள்
வாற பேர்பொருள் கண்டு விரும்பிகள் எவரேனும்
நேய மேகவி கொண்டுசொல் மிண்டிகள்
காசிலாதவர் தங்களை அன்பற
நீதி போல நெகிழ்ந்த பறம்பிகள் அவர் தாய்மார்
நீலி நாடகமும் பயில் மண்டைகள்
பாளையூறுகள் உண்டிடு தொண்டிகள்
நீசரோடும் இணங்கு கடம்பிகள் உறவாமோ
பாயு மாமத தந்தி முகம்பெறும்
ஆதி பாரதமென்ற பெருங்கதை
பார மேருவில் அன்று வரைந்தவன் இளையோனே
பாவையாள்குற மங்கை செழுந்தன
பார மீதில் அணைந்து முயங்கிய
பாகமாகிய சந்தன குங்கும ...... மணிமார்பா
சீயமாய் உருவம்கொடு !வந்தசு
ரேசன் மார்பை இடந்து பசுங்குடர்
சேர வாரி அணிந்த நெடும்புயன் ...... மருகோனே
தேனுலாவு கடம்பம் அணிந்த!கி
ரீட சேகர சங்கரர் தந்தருள்
தேவ நாயக செந்தில் உகந்தருள் ...... பெருமாளே.
திருப்பாடல் 69:
தாந்தாத்தந் தான தந்தன
தாந்தாத்தந் தான தந்தன
தாந்தாத்தந் தான தந்தன ...... தனதான
மான்போல்கண் பார்வை பெற்றிடு
மூஞ்சால் பண்பாடு மக்களை
வாய்ந்தால் பொன் கோடு செப்பெனும் ...... முலைமாதர்
வாங்காத் திண்டாடு சித்திரம்
நீங்காச் சங்கேத முக்கிய
வாஞ்சால் செஞ்சாறு மெய்த்திடும் ...... மொழியாலே
ஏன்கால் பங்காக நற்புறு
பூங்கால் கொங்காரும் மெத்தையில்
ஏய்ந்தால் பொன் சாரு பொற்பணம் ...... முதல்நீதா
ஈந்தாற்கன்றோ ரமிப்பென
ஆன்பால் தென் போல செப்பிடும்
ஈண்டாச் சம்போக மட்டிகள் உறவாமோ
கான்பால் சந்தாடு பொற்கிரி
தூம்பால் பைந்தோளி கண்கடை
காண்பால் துஞ்சாமல் நத்திடும் ...... அசுரேசன்
காம்பேய்ப் பந்தாட விக்ரம
வான்தோய்க் கெம்பீர வில்கணை
காண் தேர்க் கொண்டேவும் அச்சுதன் ...... மருகோனே
தீம்பாற்கும் பாகு சர்க்கரை
காம்பால் செந்தேறல் ஒத்துரை
தீர்ந்தார்க் கங்காளி பெற்றருள் ...... புதல்வோனே
தீண்பார்க்குன் போதம் முற்றுற
மாண்டார்க் கொண்டோதும் முக்கிய
தேன்போல் செந்தூரில் மொய்த்தருள் ...... பெருமாளே.
திருப்பாடல் 70:
தனனாதன தனனந் தாத்த
தனனாதன தனனந் தாத்த
தனனாதன தனனந் தாத்த ...... தனதான
முகிலாமெனும் அளகம் காட்டி
மதிபோலுயர் நுதலும் காட்டி
முகிழாகிய நகையும் காட்டி ...... அமுதூறு
மொழியாகிய மதுரம் காட்டி
விழியாகிய கணையும் காட்டி
முகமாகிய கமலம் காட்டி ...... மலைபோலே
வகையாமிள முலையும் காட்டி
இடையாகிய கொடியும் காட்டி
வளமான கை வளையும் காட்டி ...... இதமான
மணிசேர்கடி தடமும் காட்டி
மிகவே தொழில் அதிகம் காட்டு
மடமாதர்கள் மயலின் சேற்றில் உழல்வேனோ
நகையால் மதனுருவம் தீத்த
சிவனார்அருள் சுதன் என்றார்க்கும்
நலமேஅருள் அமர்செந்தூர்க்குள் உறைவோனே
நவமாமணி வடமும் பூத்த
தன மாதெனும் இபமின் சேர்க்கை
நழுவா வகை பிரியம் காட்டும் ...... முருகோனே
அகமேவிய நிருதன் போர்க்கு
வரவே சமர் புரியும் தோற்றம்
அறியாமலும் அபயம் காட்டி ...... முறைகூறி
அயிராவத முதுகின் தோற்றி
அடையாமென இனிதன்பேத்தும்
அமரேசனை முழுதும் காத்த ...... பெருமாளே.
திருப்பாடல் 71:
தந்ததன தான தானத் தான
தந்ததன தான தானத் தான
தந்ததன தான தானத் தான ...... தனதானா
முந்துதமிழ் மாலை கோடிக் கோடி
சந்தமொடு நீடு பாடிப் பாடி
முஞ்சர்மனை வாசல் தேடித் தேடி ...... உழலாதே
முந்தைவினையே வராமல் போக
மங்கையர்கள் காதல் தூரத்தேக
முந்தடிமையேனை ஆளத் தானும் ...... முனைமீதே
திந்திதிமி தோதி தீதித் தீதி
தந்ததன தான தானத் தான
செஞ்செணகு சேகு தாளத் தோடு ...... நடமாடும்
செஞ்சிறிய கால் விசாலத் தோகை
துங்க அநுகூல பார்வைத் தீர
செம்பொன் மயில் மீதிலே எப்போதும் ...... வருவாயே
அந்தண்மறை வேள்வி காவற்கார
செந்தமிழ்சொல் பாவின் மாலைக்கார
அண்டர்உபகார சேவற்கார ...... முடிமேலே
அஞ்சலி செய்வோர்கள் நேயக்கார
குன்றுருவ ஏவும் வேலைக்கார
அந்தம் வெகுவான ரூபக்கார ...... எழிலான
சிந்துரமின் மேவு போகக்கார
விந்தை குறமாது வேளைக்கார
செஞ்சொல்அடியார்கள் வாரக்கார ...... எதிரான
செஞ்சமரை மாயும் மாயக் கார
துங்கரண சூர சூறைக்கார
செந்தில்நகர் வாழும் ஆண்மைக்கார ...... பெருமாளே.
திருப்பாடல் 72:
தனன தந்த தந்த தனன தந்த தந்த
தனன தந்த தந்த ...... தனதான
முலை முகம் திமிர்ந்த கலவையும் துலங்கு
முறுவலும் சிவந்த ...... கனிவாயும்
முருகவிழ்ந்துதிர்ந்த மலர்களும் சரிந்த
முகிலும்இன்ப சிங்கி ...... விழிவேலும்
சிலைமுகம் கலந்த திலதமும் குளிர்ந்த
திருமுகம் ததும்பும் ...... குறுவேர்வும்
தெரிய வந்து நின்ற மகளிர் பின்சுழன்று
செயலழிந்துழன்று ...... திரிவேனோ
மலைமுகம் சுமந்த புலவர் செஞ்சொல் கொண்டு
வழிதிறந்த செங்கை ...... வடிவேலா
வளர்புனம் பயின்ற குறமடந்தை கொங்கை
மணிவடம் புதைந்த ...... புயவேளே
அலைமுகம் தவழ்ந்து சினை முதிர்ந்த சங்கம்
அலறி வந்து கஞ்ச ...... மலர்மீதே
அளி கலந்திரங்க இசையுடன் துயின்ற
அரிய செந்தில் வந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 73:
தாத்தத் தத்தன தாத்தத் தத்தன
தாத்தத் தத்தன ...... தனதான
மூப்புற்றுச் செவி கேட்பற்றுப் பெரு
மூச்சுற்றுச் செயல் ...... தடுமாறி
மூர்க்கச் சொற்குரல் காட்டிக் கக்கிட
மூக்குக்குள் சளி ...... இளையோடும்
கோப்புக் கட்டி இனாப்பிச் செற்றிடு
கூட்டிற் புக்குயிர் அலையாமுன்
கூற்றத் தத்துவ நீக்கிப் பொற்கழல்
கூட்டிச் சற்றருள் ...... புரிவாயே
காப்புப் பொற்கிரி கோட்டிப் பற்றலர்
காப்பைக் கட்டவர் ...... குருநாதா
காட்டுக்குள் குறவாட்டிக்குப் பல
காப்புக் குத்திரம் ...... மொழிவோனே
வாய்ப்புற்றத் தமிழ் மார்க்கத் திண்பொருள்
வாய்க்குச் சித்திர ...... முருகோனே
வார்த்தைச் சிற்பர தீர்த்தச் !சுற்றலை
வாய்க்குள் பொற்பமர் ...... பெருமாளே.
திருப்பாடல் 74:
தானதன தான தானந்த தானந்த
தானதன தான தானந்த தானந்த
தானதன தான தானந்த தானந்த ...... தனதான
மூளும்வினை சேர மேல்கொண்டிடா ஐந்து
பூதவெகுவாய மாயங்கள் தானெஞ்சில்
மூடிநெறி நீதியேதும்செயா வஞ்சி ...... அதிபார
மோக நினைவான போகம் செய்வேன்அண்டர்
தேடஅரிதாய ஞேயங்களாய் நின்ற
மூலபரயோக மேல்கொண்டிடா நின்றதுளதாகி
நாளும் அதி வேக கால்கொண்டு தீமண்ட
வாசிஅனலூடு போயொன்றி வானின்கண்
நாமமதி மீதில் ஊறுங்கலாஇன்ப ...... அமுதூறல்
நாடியதன் மீது போய்நின்ற ஆநந்த
மேலைவெளியேறி நீயின்றி நானின்றி
நாடியினும் வேறு தானின்றி வாழ்கின்றதொரு நாளே
காளவிட மூணி மாதங்கி வேதம்சொல்
பேதைநெடு நீலி பாதங்களால் வந்த
காலன்விழ மோது சாமுண்டி பார்அம்பொடனல் வாயு
காதிமுதிர் வான மேதங்கி வாழ்வஞ்சி
ஆடல் விடையேறி பாகம்குலா மங்கை
காளி நடமாடி நாளன்பர் தாம்வந்து ...... தொழுமாது
வாள முழுதாளும் ஓர்தண் துழாய்தங்கு
சோதிமணி மார்ப மாலின் பினாள்இன்சொல்
வாழும் உமை மாதராள் மைந்தனே எந்தை ...... இளையோனே
மாசில் அடியார்கள் வாழ்கின்ற ஊர்சென்று
தேடிவிளையாடியே அங்ஙனேநின்று
வாழுமயில் வீரனே செந்தில் வாழ்கின்ற ...... பெருமாளே.
திருப்பாடல் 75:
தந்தந்தந் தந்தன தானன
தந்தந்தந் தந்தன தானன
தந்தந்தந் தந்தன தானன ...... தனதான
வஞ்சம் கொண்டும் திட !ராவண
னும் பந்தென் திண்பரி தேர்கரி
மஞ்சின் பண்பும் சரியாமென ...... வெகுசேனை
வந்தம்பும் பொங்கியதாக!எ
திர்ந்தும் தன் சம்பிரதாயமும்
வம்பும் தும்பும்பல பேசியும் எதிரே!கை
மிஞ்சென்றும் சண்டைசெய் போது!கு
ரங்கும் துஞ்சும் கனல் போல!வெ
குண்டும் குன்றும் கரடார் மரமதும்வீசி
மிண்டும் துங்கங்களினாலெ !த
கர்ந்தங்கம் கங்கர மார்பொடு
மின்சந்தும் சிந்த நிசாசரர் ...... வகை!சேர
வும்சண்டன் தென்திசை நாடி!வி
ழுந்தங்கும் சென்றெம தூதர்கள்
உந்துந்துந்தென்றிடவே தசை ...... நிணமூளை
உண்டும் கண்டும் சில கூளிகள்
டிண்டிண்டென்றும் குதி போட!உ
யர்ந்தம்பும் கொண்டுவெல் மாதவன் ...... மருகோனே
தஞ்சம் தஞ்சம் சிறியேன்மதி
கொஞ்சம் கொஞ்சம் துரையேஅருள்
தந்தென்றின்பம் தரு வீடது ...... தருவாயே
சங்கம் கஞ்சங்கயல் சூழ்தடம்
எங்கெங்கும் பொங்க !மகாபுநி
தம்தங்கும் செந்திலில் வாழ்வுயர் ...... பெருமாளே.
திருப்பாடல் 76:
தந்தத் தனதன தந்தத் தனதன
தந்தத் தனதன ...... தனதான
வஞ்சத்துடனொரு நெஞ்சில் பலநினை
வஞ்சிக் கொடியிடை ...... மடவாரும்
வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞரும்
மண்டிக் கதறிடு ...... வகைகூர
அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல்
அங்கிக்கிரையென ...... உடன்மேவ
அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும்
அன்றைக்கடியிணை ...... தரவேணும்
கஞ்சப் பிரமனை அஞ்சத் துயர்செய்து
கன்றச் சிறையிடு ...... மயில்வீரா
கண்டொத்தன மொழி அண்டத் திருமயில்
கண்டத்தழகிய ...... திருமார்பா
செஞ்சொல் புலவர்கள் சங்கத் தமிழ்தெரி
செந்தில் பதிநகர் உறைவோனே
செம்பொன் குலவட குன்றைக் கடலிடை
சிந்தப் பொரவல ...... பெருமாளே.
திருப்பாடல் 77:
தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த
தந்த தந்த தந்த தந்த ...... தனதான
வந்து வந்து முன் தவழ்ந்து
வெஞ்சுகம் தயங்க நின்று
மொஞ்சி மொஞ்சி என்றழும் குழந்தையோடு
மண்டலம் குலுங்க அண்டர்
விண்டலம் பிளந்தெழுந்த
செம்பொன் மண்டபங்களும் பயின்றவீடு
கொந்தளைந்த குந்தளம்!த
ழைந்து குங்குமம் தயங்கு
கொங்கை வஞ்சி தஞ்சமென்று ...... மங்குகாலம்
கொங்கடம்பு கொங்கு பொங்கு
பைங்கடம்பு தண்டை கொஞ்சு
செஞ்சதங்கை தங்கு பங்கயங்கள் தாராய்
சந்தடர்ந்தெழுந்தரும்பு
மந்தரம் செழும் கரும்பு
கந்தரம்பை செண்பதம் கொள் ...... செந்தில்வாழ்வே
தண்கடம் கடந்து சென்று
பண்கள்தங்கடர்ந்த இன்சொல்
திண்புனம் புகுந்து கண்டிறைஞ்சு கோவே
அந்தகன் கலங்க வந்த
கந்தரம் கலந்த !சிந்து
ரம் சிறந்து வந்தலம் புரிந்த மார்பா
அம்புனம் புகுந்த நண்பர்
சம்பு நன் புரந்தரன்!த
ரம்பல் உம்பர் கும்பர் நம்பு ...... தம்பிரானே.
திருப்பாடல் 78:
தனனா தனந்த ...... தனதான
வரியார் கருங்கண் ...... மடமாதர்
மகஆசை தொந்தம் ...... அதுவாகி
இருபோது நைந்து ...... மெலியாதே
இருதாளின் அன்பு ...... தருவாயே
பரிபாலனம் செய்தருள்வோனே
பரமேசுரன் தன் அருள்பாலா
அரிகேசவன் தன் ...... மருகோனே
அலைவாய் அமர்ந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 79:
தனதான தந்த தனதான தந்த
தனதான தந்த ...... தனதான
விதிபோலும் உந்த விழியாலும் இந்து
நுதலாலும் ஒன்றி ...... இளைஞோர்தம்
விரிவான சிந்தை உருவாகி நொந்து
விறல்வேறு சிந்தை ...... வினையாலே
இதமாகி இன்ப மதுபோத உண்டு
இனிதாளும்என்று ...... மொழிமாதர்
இருளாய துன்ப மருள்மாயை வந்து
எனை ஈர்வதென்றும் ...... ஒழியாதோ
மதிசூடி அண்டர் பதிவாழ மண்டி
வரும்ஆலம் உண்டு ...... விடையேறி
மறவாத சிந்தை அடியார்கள் பங்கில்
வருதேவ சம்பு ...... தருபாலா
அதிமாயம் ஒன்றி வருசூரர் பொன்ற
அயில் வேல் கொடன்று ...... பொரும்வீரா
அழகான செம்பொன் மயில் மேலமர்ந்து
அலைவாய் உகந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 80:
தந்தன தான தந்தன தான
தந்தன தான ...... தனதான
விந்ததினூறி வந்தது காயம்
வெந்தது கோடி ...... இனிமேலோ
விண்டுவிடாமல் உன்பத மேவு
விஞ்சையர் போல ...... அடியேனும்
வந்துவிநாச முன்கலி தீர
வண்சிவ ஞான ...... வடிவாகி
வன் பதமேறி என் களையாற
வந்தருள் பாத ...... மலர்தாராய்
எந்தனுளேக செஞ்சுடராகி
என்கணிலாடு ...... தழல்வேணி
எந்தையர் தேடும் அன்பர் சகாயர்
எங்கள் சுவாமி ...... அருள்பாலா
சுந்தர ஞான மென்குற மாது
தன்திரு மார்பில் அணைவோனே
சுந்தரமான செந்திலில் மேவு
கந்த சுரேசர் ...... பெருமாளே.
திருப்பாடல் 81:
தனதான தந்த தனதான தந்த
தனதான தந்த ...... தனதான
விறல்மாரன் ஐந்து மலர்வாளி சிந்த
மிகவானில் இந்து ...... வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல ஒன்ற
வினைமாதர் தந்தம் ...... வசைகூற
குறவாணர் குன்றில் உறைபேதை கொண்ட
கொடிதான துன்ப ...... மயல்தீர
குளிர்மாலையின் கண் அணிமாலை தந்து
குறைதீர வந்து ...... குறுகாயோ
மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து
வழிபாடு தந்த ...... மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை அஞ்ச
வடிவேலெறிந்த ...... அதிதீரா
அறிவால் அறிந்துன் இருதாள் இறைஞ்சும்
அடியார் இடைஞ்சல் ...... களைவோனே
அழகான செம்பொன் மயில் மேலமர்ந்து
அலைவாய் உகந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 82:
தந்தா தந்தா தந்தா தந்தா
தந்தா தந்தத் ...... தனதான
வெங்காளம் பாணம்சேல் கண்பால்
மென் பாகஞ்சொல் ...... குயில்மாலை
மென் கேசந்தான் என்றே கொண்டார்
மென்தோள் ஒன்றப் ...... பொருள்தேடி
வங்காளம் சோனம் சீனம்போய்
வன்பே துன்பப் ...... படலாமோ
மைந்தாரும்தோள் மைந்தா அந்தா
வந்தே இந்தப் ...... பொழுதாள்வாய்
கொங்கார் பைந்தேன் உண்டே வண்டார்
குன்றாள் கொங்கைக்கினியோனே
குன்றோடும் சூழ்அம்பேழும்!சூ
ரும்போய் மங்கப் ...... பொருகோபா
கங்காளம் சேர் மொய்ம்பார் அன்பார்
கன்றே உம்பர்க்கொரு நாதா
கம்பூர் சிந்தார் தென்பால் வந்தாய்
கந்தா செந்தில் ...... பெருமாளே.
திருப்பாடல் 83:
தந்த தானன தானன தந்த தானன தானன
தந்த தானன தானன ...... தனதான
வெஞ் சரோருகமோ கடு நஞ்சமோ கயலோநெடு
இன்ப சாகரமோ வடு ...... வகிரோமுன்
வெந்து போன புராதன சம்பராரி புராரியை
வென்ற சாயகமோ கரு ...... விளையோ கண்
தஞ்சமோ யம தூதுவர் நெஞ்சமோ எனும் மாமத
சங்க மாதர் பயோதரம் அதில்மூழ்கு
சங்கையோவிரு கூதள கந்த மாலிகை தோய்தரு
தண்டை சேர்கழல் ஈவதும் ஒருநாளே
பஞ்ச பாதக தாருக தண்டன் நீறெழ வானவர்
பண்டு போல் அமராவதி ...... குடியேறப்
பங்கயாசனர் கேசவர் அஞ்சலேயென மால்வரை
பங்க நீறெழ வேல்விடும் இளையோனே
செஞ்சடாடவி மீமிசை கங்கை மாதவி தாதகி
திங்கள் சூடிய நாயகர் ...... பெருவாழ்வே
செண்பகாடவி நீடிய துங்க மாமதிள் சுழ்தரு
செந்தில் மாநகர் மேவிய ...... பெருமாளே
No comments:
Post a Comment