Monday, July 30, 2018

திருப்புனவாயில் (திருப்புனவாசல்)

(பாண்டிய நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: பாண்டிய நாடு 

மாவட்டம்: புதுக்கோட்டை

திருக்கோயில்: அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்:

புதுக்கோட்டையிலிருந்து 80 கி.மீ தூரத்திலும், அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ தூரத்திலும்,  அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

(Google Maps: Thirupunavasal Vruddhapureeswarar Temple, Thiruppunavasal, Tamil Nadu 614629, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனனந் தந்தன தானன தந்தன
     தனனந் தந்தன தானன தந்தன
          தனனந் தந்தன தானன தந்தன ...... தனதான

உரையும் சென்றது நாவும் உலர்ந்தது
     விழியும் பஞ்சுபொலானது கண்டயல்
          உழலும் சிந்துறு பால்கடை நின்றது ...... கடைவாயால்

ஒழுகும் சஞ்சல மேனி குளிர்ந்தது
     முறிமுன் கண்டுகை கால்கள் நிமிர்ந்தது
          உடலும் தொந்தியும் ஓடிவடிந்தது ...... பரிகாரி

வரஒன்றும் பலியாதினி என்றபின்
     உறவும் பெண்டிரும் மோதிவிழுந்தழ
          மறல்வந்திங்கென தாவிகொளும்தினம் ...... இயல்தோகை

மயிலும் செங்கைகள் ஆறிரு திண்புய
     வரைதுன்றும்கடி மாலையும் இங்கித
          வனமின் குஞ்சரி மாருடன் என்றன்முன் ...... வருவாயே

அரிமைந்தன்புகழ் மாருதி என்றுள
     கவியின் சங்கம் இராகவ புங்கவன்
          அறிவும் கண்டருள்வாயென அன்பொடு ...... தரவேறுன்

அருளும் கண்டதராபதி வன்புறு
     விஜயம் கொண்டெழு போது புலம்பிய
          அகமும் பைந்தொடி சீதை மறைந்திட ...... வழிதோறும்

மருவும் குண்டலம் ஆழிசிலம்புகள்
     கடகம் தண்டைபொன் நூபுர மஞ்சரி
          மணியின் பந்தெறிவாயிது பந்தென ...... முதலான

மலையும் சங்கிலி போல மருங்குவிண்
     முழுதும்  கண்டநராயணன் அன்புறு
          மருகன் தென்புனவாயில் அமர்ந்தருள் ...... பெருமாளே.



No comments:

Post a Comment