Sunday, July 29, 2018

திருக்குற்றாலம்

(பாண்டிய நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: பாண்டிய நாடு 

மாவட்டம்: திருநெல்வேலி 

திருக்கோயில்: அருள்மிகு குற்றாலநாத சுவாமி திருக்கோயில்

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்:

தென்காசியிலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இத்தலம்.

(Google Maps: Thirukuttralanatha Swamy Temple, SH 40, Courtallam, Tamil Nadu 627802, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 3.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தானத்தத் தானன தானன
     தானத்தத் தானன தானன
          தானத்தத் தானன தானன ...... தனதான

ஏடுக்கொத்தாரலர் வார்குழல்
     ஆடப் பட்டாடை நிலாவிய
          ஏதப்பொற் தோள்மிசை மூடிய ...... கரமாதர்

ஏதத்தைப் பேசு பணாளிகள்
     வீசத்துக்காசை கொடாடிகள்
          ஏறிட்டிட்டேணியை வீழ்விடு ...... முழுமாயர்

மாடொக்கக் கூடிய காமுகர்
     மூழ்குற்றுக் காயமொடே வரு
          வாயுப்புல் சூலை வியாதிகள் ...... இவைமேலாய்

மாசுற்றுப் பாசம் விடா!சம
     னூர்புக்குப் பாழ் நரகே விழு
          மாயத்தைச் சீவி உனாதரவருள்வாயே

தாடுட்டுட் டூடுடு டீடிமி
     டூடுட்டுட் டூடுடு டாடமி
          தானத்தத் தானதனாவென ...... வெகுபேரி

தானொத்தப் பூத பசாசுகள்
     வாய்விட்டுச் சூரர்கள் சேனைகள்
          சாகப்பொற் தோகையிலேறிய ...... சதிரோனே

கூடற் கச்சாலை சிராமலை
     காவைப் பொற்காழி வெளூர்திகழ்
          கோடைக் கச்சூர் கருவூரிலும் ...... உயர்வான

கோதில் பத்தாரொடு மாதவ
     சீலச் சித்தாதியர் சூழ்தரு
          கோலக் குற்றாலம் உலாவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தானத்தத் தானன தானன
     தானத்தத் தானன தானன
          தானத்தத் தானன தானன ...... தனதான

வேதத்தில் கேள்வியிலாதது
     போதத்தில் காணவொணாதது
          வீசத்தில் தூரமிலாதது ...... கதியாளர்

வீதித்துத் தேடரிதானது
     ஆதித்தற் காயவொணாதது
          வேகத்துத் தீயில் வெகாதது ...... சுடர்கானம்

வாதத்துக்கே அவியாதது
     காதத்தில் பூவியலானது
          வாசத்தில் பேரொளியானது ...... மதமூறு

மாயத்தில் காய மதாசல
     தீதர்க்குத் தூரமதாகிய
          வாழ்வைச் சற்காரமதா இனி ...... அருள்வாயே

காதத்தில் காயமதாகும்
     தீதித்தித் தீதிது தீதென
          காதற் பட்டோதியுமே விடு ...... கதிகாணார்

காணப்பட்டே கொடு நோய்கொடு
     வாதைப்பட்டே மதி !தீதக
          லாமல் கெட்டே தடுமாறிட ...... அடுவோனே

கோதைப் பித்தாய்ஒரு வேடுவ
     ரூபைப் பெற்றே வனவேடுவர்
          கூடத்துக்கே குடியாய்வரு ...... முருகோனே

கோதில் பத்தாரொடு மாதவ
     சீலச் சித்தாதியர் சூழ்தரு
          கோலக் குற்றாலம் உலாவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தத்தான தனத்த தத்தன
     தத்தான தனத்த தத்தன
          தத்தான தனத்த தத்தன ...... தனதான

முத்தோலை தனைக்!கிழித்தயி
     லைப்போர் இகலிச் சிவத்து!மு
          கத்தாமரையில் செருக்கிடும் ...... விழிமானார்

முற்றாதிளகிப் பணைத்தணி
     கச்சாரம் அறுத்த நித்தில
          முத்தாரம் அழுத்துகிர்க்குறி ...... அதனாலே

வித்தார கவித் திறத்தினர்
     பட்டோலை நிகர்த்திணைத்தெழு
          வெற்பான தனத்தில் நித்தலும்  ...... உழல்வேனோ

மெய்த்தேவர் துதித்திடத் தரு
     பொற்பார் கமலப் பதத்தினை
          மெய்ப்பாக வழுத்திட க்ருபை ...... புரிவாயே

பத்தான முடித்தலைக்!குவ
     டுற்றாட அரக்கருக்கிறை
          பட்டாவி விடச் செயித்தவன் ...... மருகோனே

பற்பாசன் மிகைச் சிரத்தை!அ
     றுத்தாதவனைச் சினத்துறு
          பற்போக உடைத்த தற்பரன் ...... மகிழ்வோனே

கொத்தார் கதலிப் பழக்குலை
     வித்தார வருக்கையின் சுளை
          கொத்தோடுதிரக் கதித்தெழு ...... கயலாரம்

கொட்டா சுழியில் கொழித்தெறி
     சிற்றாறு தனில் களித்திடு
          குற்றாலர்இடத்தில் உற்றருள் ...... பெருமாளே.

No comments:

Post a Comment