Monday, July 30, 2018

விராலி மலை:

(பாண்டிய நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: பாண்டிய நாடு

மாவட்டம்: புதுக்கோட்டை 

திருக்கோயில்: அருள்மிகு ஷண்முகநாதர்  திருக்கோயில் 

தல வகை: முருகன் திருக்கோயில்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

திருச்சியிலிருந்து 34 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்தலம்.

(Google Maps: Viralimalai murugan temple, Neathaji Nagar, Viralimalai, Tamil Nadu 621316, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 16.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தானான தான தான தனதன
     தானான தான தான தனதன
          தானான தான தான தனதன ...... தனதான

சீரான கோல கால நவமணி
     மாலாபிஷேக பார வெகுவித
          தேவாதி தேவர் சேவை செயுமுக ...... மலராறும்

சீராடு வீர மாது மருவிய
     ஈராறு தோளும் நீளும் வரியளி
          சீராக மோது நீப பரிமள ...... இருதாளும்

ஆராத காதல் வேடர் மடமகள்
     ஜீமூதம் ஊர்வலாரி மடமகள்
          ஆதார பூதமாக வலமிட ...... முறைவாழ்வும்

ஆராயும் நீதி வேலும் மயிலும்மெய்ஞ்
     ஞானாபிராம தாப வடிவமும்
          ஆபாதனேனும் நாளும் நினைவது ...... பெறவேணும்

ஏராருமாட கூட மதுரையில்
     மீதேறி மாறியாடும் இறையவர்
          ஏழேழு பேர்கள் கூற வருபொருள் அதிகாரம்

ஈடாய ஊமர் போல வணிகரில் 
     ஊடாடி ஆலவாயில் விதிசெய்த
          லீலாவிசார தீர வரதர ...... குருநாதா

கூராழியால்முன் வீய நினைபவன் 
     ஈடேறுமாறு பாநு மறைவுசெய்
          கோபாலராய நேயம் உளதிரு ...... மருகோனே

கோடாமல் ஆரவார அலையெறி
     காவேரியாறு பாயும் வயலியில்
          கோனாடு சூழ் விராலி மலையுறை ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தானான தான தான தனதன
     தானான தான தான தனதன
          தானான தான தான தனதன ...... தனதான

பாதாளம் ஆதி லோக நிகிலமும் 
     ஆதாரமான மேரு எனவளர்
          பாடீர பாரமான முலையினை ...... விலைகூறிப்

பாலோடு பாகுதேனென இனிய!சொ
     லாலேஅநேக மோகமிடுபவர்
          பாதாதி கேசமாக வகைவகை ...... கவிபாடும்

வேதாள ஞான கீனன் விதரண
     நாதானிலாத பாவி அநிஜவன்
          வீணாள்படாத போத தவமிலி ...... பசுபாச

வ்யாபார மூடன் யானும் உனதிரு
     சீர்பாத தூளியாகி நரகிடை
          வீழாமலே சுவாமி திருவருள் ...... புரிவாயே

தூதாளரோடு காலன் வெருவிட
     வேதாமுராரியோட அடுபடை
          சோரா வலாரி சேனை பொடிபட ...... மறைவேள்விச்

சோமாசிமார் சிவாய நமவென
     மாமாய வீர கோரமுடன்இகல்
          சூர்மாள வேலையேவும் வயலியில் இளையோனே

கூதாள நீப நாக மலர்மிசை
     சாதாரி தேசி நாம க்ரியைமுதல்
          கோலால நாத கீத மதுகர ...... மடர்சோலை

கூராரல் தேரு நாரை மருவிய
     கானாறு பாயு மேரி வயல்பயில்
          கோனாடு சூழ்விராலி மலையுறை ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தனாதன தனாதன தனாதன தனாதன
     தனாதன தனாதனன ...... தனதான

இலாபமில் பொலாவுரை சொலாமன தபோதனர் 
     இயாவரும் இராவுபகல் அடியேனை

இராகமும் விநோதமும் உலோபமுடன்மோகமும் 
     இலான்இவனு மாபுருஷன் எனஏய

சலாபவ மலாகர சசீதர விதாரண
     சதாசிவ மயேசுர சகல லோக

சராசர வியாபக பராபர மநோலய
     சமாதிஅநுபூதிபெற ...... நினைவாயே

நிலாவிரி நிலாமதி நிலாதவ நிலாசன
     நியாய பரிபாலஅர ...... நதிசூடி

நிசாசர குலாதிபதி ராவண புயாரிட
     நிராமய சரோருகரன் அருள்பாலா

விலாசுகம் வலாரெனும் உலாசஇதவாகவ
     வியாதர்கள் விநோதமகள் ...... மணவாளா

விராவு வயலார்புரி சிராமலை பிரான்மலை
     விராலிமலைமீதிலுறை ...... பெருமாளே.

திருப்பாடல் 4:
தனாதன தனாதன தனாதன தனாதன
     தனாதன தனாதனத் ...... தனதான

நிராமய புராதன பராபர வராம்ருத
     நிராகுல சிராதிகப் ...... ப்ரபையாகி

நிராச சிவராஜ தவராஜர்கள் பராவிய
     நிராயுத புராரிஅச்சுதன்வேதா

சுராலய தராதல சராசர பிராணிகள்
     சொரூபமிவர் ஆதியைக் ...... குறியாமே

துரால்புகழ் பராதின கராவுள பராமுக
     துரோகரை தராசையுற்றடைவேனோ

இராகவ இராமன்முன் இராவண இராவண
     இராவண இராஜன்உட்குடன் மாய்!வென்

றிராகன்மலராள்நிஜ புராணர் குமராகலை
     இராஜ சொல வாரணர்க்கிளையோனே

விராகவ சுராதிப பொராது தவிராதடு
     விராயண பராயணச் ...... செருவூரா

விராவிய குராவகில் பராரை முதிராவளர்
     விராலி மலைராஜதப் ...... பெருமாளே.

திருப்பாடல் 5:
தனதன தனதன தனன தனதன
     தனதன தனதன தனன தனதன
          தத்ததன தந்ததன தத்ததன தந்ததன
தனதன தனதன தனன தனதன
     தனதன தனதன தனன தனதன
          தத்ததன தந்ததன தத்ததன தந்ததன
தனதன தனதன தனன தனதன
     தனதன தனதன தனன தனதன
          தத்ததன தந்ததன தத்ததன தந்ததன ...... தனதான

இதமுறு விரைபுனல் முழுகி அகில்மணம் 
     உதவிய புகையினில் அளவி வகைவகை
          கொத்தலர்களின் தொடையல் வைத்துவளர் கொண்டலென
அறலென இசையளி எனநள்இருளென
     நிறமது கருகிநெடுகி நெறிவுபட
          நெய்த்து முசுவின்திரிகை ஒத்தசுருள் குந்தளமும்
இலகிய பிறையென எயினர் சிலையென
     விலகிய திலதநுதலும் மதிமுகமும்
          உற்பலமும் வண்டுவடு விற்கணை யமன்படரும் ...... முனைவாளும்

இடர்படுகவும் நடுவனும் வலடல்பொரு
     கடுவதும் எனநெடிதடுவ கொடியன
          இக்குசிலை கொண்டமதன் மெய்த்தவ நிறைந்தவிழி
தளவன முறுவலும் அமுத குமுதமும்
     விளைநறவினியமொழியும் இனையதென
          ஒப்பறு நகங்கள்விரல் துப்பென உறைந்து!கமு
கிடியொடி படவினை செயும்வின் மதகலை
     நெடிய கவுடிஇசை முரலும் சுரிமுக
          நத்தனைய கண்டமும்வெண் முத்துவிளை விண்டனைய ...... எழில்தோளும்

விதரண மனவிதனம்அதை அருள்வன
     சததள மறைமுகில் அழதனை நிகர்வன
          புத்தமிர்து கந்தகுடம் வெற்பென நிரம்புவன
இமசல ம்ருகமத களப பரிமள
     தமனிய ப்ரபைமிகு தருண புளகித
          சித்ரவர மங்கல விசித்ர விருதுங்ககன
விகலித மிருதுள ம்ருதுள நவமணி
     முகபட விகடின தனமும் உயர்வட
          பத்திரம் இருந்தகடில் ஒத்தசுழி உந்தியுள ...... மதியாத

விபரிதம் உடையிடை இளைஞர் களைபட
     அபகடம் அதுபுரி அரவ சுடிகைய
          ரத்நபணம் என்ப அழகுற்றவரையும் புதிய
நுணிய தளிரென உலவிய பரிபுர
     அணிநடனபதமும் உடைய வடிவினர்
          பொற்கலவிஇன்பமதி துக்கமெனல் அன்றியவர்
விரகினில் அனதுறு மனமதுருகிய
     பிரமையும் அறஉனதருள்கை வரஉயர்
          பத்திவழியும்பரம முத்திநெறியும் தெரிவதொருநாளே

தததத தததத ததத தததத
     திதிதிதி திதிதிதி திதிதி திதிதிதி
          தத்ததத தந்ததத தித்திதிதி திந்திதிதி
டகுடகு டிகுடிகு டகுகு டிகுடிகு
     டிகுடிகு டகுடகு டிகுகு டகுடகு
          தத்ததிமி டங்குகுகு தித்திதிமி டிங்குகுகு
தமிதமி தமிதக தமித திமிதக
     திமிதிமி செககண திமித திகதிக
          தத்திமித தந்திமித தித்திமிதி திந்திமிதி ...... யெனவேதான்

தபலை குடமுழவு திமிலை !படகம
     தபுத சலிகைதவில் முரசு கரடிகை
          மத்தளி தவண்டைஅறவைத் தகுணி துந்துமிகள்
மொகுமொகு மொகுவென அலற விருதுகள்
     திகுதிகு திகுவென அலகை குறளிகள்
          விக்கிட நிணம்பருக பக்கிஉவணம்கழுகு
சதிர்பெற அதிர்தர உததி சுவறிட
     எதிர்பொரு நிருதர்கள் குருதி பெருகிட
          அப்புவின் மிதந்தெழுபதற்புத கவந்தமெழ ...... வெகுகோடி

மதகஜ துரக ரதமுமும் உடையபுவி
     அதலமுதல்முடிய இடிய நெடியதொர்
          மிக்கொலி முழங்க இருள் அக்கணம் விடிந்துவிட
இரவியும் மதியமும் நிலைமை பெறஅடி
     பரவிய அமரர்கள் தலைமை பெறஇயல்
          அத்திறலணங்குசெய சத்திவிடு கந்ததிரு
வயலியில் அடிமைய குடிமைஇனலற
     மயலொடு மலமற அரிய பெரிய!தி
          ருப்புகழ் விளம்புஎன் முன்அற்புதம் எழுந்தருள் குக விராலி

மலையுறை குரவ நல்இறைவ வருகலை
     பலதெரி விதரண முருக சரவண
          உற்பவ க்ரவுஞ்சகிரி நிக்ரக அகண்டமய
நிருபவி மலசுக சொருப பரசிவ
     குருபர வெளிமுகடுருவ உயர்தரு
          சக்ரகிரியும்குலைய விக்ரம நடம்புரியும் 
மரகத கலபம் ஏரிவிடு மயில்மிசை
     மருவியெ அருமைய இளமை உருவொடு
          சொர்க்கதலமும்புலவர் வர்க்கமும் விளங்கவரு ...... பெருமாளே.

திருப்பாடல் 6:
தனதான தான தத்த தனதான தான தத்த
     தனதான தான தத்த ...... தந்ததான

உருவேறவே ஜெபித்து ஓருகோடி ஓம சித்தி
     உடனாக ஆகமத்துகந்துபேணி

உணர்வாசை யாரிடத்தும் மருவாது ஓரெழுத்தை
     ஒழியாது ஊதை விட்டிருந்து நாளும்

தரியாத போதகத்தர் குருவாவர் ஓரொருத்தர்
     தருவார்கள் ஞான வித்தை ...... தஞ்சமாமோ

தழலாடி வீதி வட்டன் ஒளிபோத ஞான சித்தி
     தருமாகில் ஆகுமத்தை ...... கண்டிலேனே

குருநாடி ராசரிக்கர் துரியோதனாதி வர்க்க
     குடிமாள மாய விட்டு ...... குந்திபாலர்

குலையாமல் நீதி கட்டி எழுபாரை யாள விட்ட
     குறளாகன் ஊறில் நெட்டை ...... கொண்டஆதி

மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ர
     மலைமேலுலாவு சித்த ...... அங்கைவேலா

மதுரா புரேசர் மெய்க்க அரசாளும் மாறன் வெப்பு
     வளைகூனையே நிமிர்த்த ...... தம்பிரானே.

திருப்பாடல் 7:
தனதனனந் தான தாத்த தனதனனந் தான தாத்த
     தனதனனந் தான தாத்த ...... தனதான

எதிரெதிர்கண்டோடி ஆட்கள் களவதறிந்தாசை பூட்டி
     இடறிவிழும் பாழி காட்டு ...... மடமாதர்

இறைவைகொளும் கூவல் மூத்த கறையொழுகும் தாரை பார்க்கில் 
     இளமைகொடும் காதலாற்றில் ...... நிலையாத

அதிவிகடம் பீழலாற்ற அழுகிவிழும் பீறலூத்தை
     அடையுமிடம் சீலை தீற்று ...... கருவாயில்

அருவிசலம் பாயும் ஓட்டை அடைவுகெடும் தூரை பாழ்த்த
     அளறில்அழுந்தாமல்ஆட்கொடருள்வாயே

விதுரன்நெடும் த்ரோணமேற்று எதிர்பொரும்அம்பாதியேற்றி
     விரகின்எழுந்தோய நூற்று ...... வருமாள

விரவுஜெயன் காளி காட்டில் வருதருமன் தூதனீற்ற
     விஜயனெடும் பாக தீர்த்தன் ...... மருகோனே

மதியணையும் சோலைஆர்த்தும் அதிவள சந்தான கோட்டின்
     வழியருளின் பேறு காட்டிய விராலி

மலைமருவும் பாதியேற்றி கடிகமழ் சந்தான கோட்டில்
     வழியருளின் பேறு காட்டு ...... பெருமாளே.

திருப்பாடல் 8:
தந்த தானன தான தனதன
     தந்த தானன தான தனதன
          தந்த தானன தான தனதன ...... தனதான

ஐந்து பூதமும் ஆறு சமயமும் 
     மந்த்ர வேதபுராண கலைகளும்
          ஐம்பதோர் விதமான லிபிகளும் ...... வெகுரூப

அண்டராதி சராசரமும் உயர்
     புண்டரீகனும் மேக நிறவனும்
          அந்தி போலுரு வானு நிலவொடு ...... வெயில்காலும்

சந்த்ர சூரியர் தாமும் அசபையும்
     விந்து நாதமும் மேக !வடிவம
          தன் சொரூபமதாக உறைவது ...... சிவயோகம்

தங்கள் ஆணவ மாயை கரும!ம
     லங்கள் போய் உபதேச குருபர
          சம்ப்ரதாயமொடேயு நெறியது ...... பெறுவேனோ

வந்த தானவர் சேனை கெடிபுக
     இந்த்ரலோகம் விபூதர் குடிபுக
          மண்டு பூதபசாசு பசிகெட ...... மயிடாரி

வன்கண் வீரி பிடாரி ஹரஹர
     சங்கராஎன மேரு கிரிதலை
          மண்டு தூளெழ வேலை உருவிய ...... வயலூரா

வெந்த நீறணி வேணி இருடிகள்
     பந்த பாசவிகார பரவச
          வென்றியான சமாதி முறுகுகல் ...... முழைகூடும்

விண்டு மேல் மயிலாட !இனியக
     ளுண்டு காரளி பாட இதழிபொன்
          விஞ்ச வீசு விராலி மலையுறை ...... பெருமாளே.

திருப்பாடல் 9:
தனதன தந்தன தந்த தந்தன
     தனதன தந்தன தந்த தந்தன
          தனதன தந்தன தந்த தந்தன ...... தனதான

கரதலமும்குறி கொண்ட கண்டமும்
     விரவியெழுந்து சுருண்டு வண்டடர்
          கனவிய கொண்டை குலைந்தலைந்திட ...... அதிபாரக்

களப சுகந்த மிகுந்த கொங்கைகள் 
     இளக முயங்கி மயங்கி அன்புசெய்
          கனியிதழுண்டு துவண்டு பஞ்சணை ...... மிசைவீழா

இரதமருந்தி உறும் கருங்கயல்
     பொருது சிவந்து குவிந்திடும்படி
          இதவிய உந்தியெனும் தடந்தனில் உறமூழ்கி

இனியதொர்இன்பம் விளைந்தளைந்துபொய்
     வனிதையர் தங்கள் மருங்கிணங்கிய
          இளமை கிழம்படு முன்பதம்பெற ...... உணர்வேனோ

பரதசிலம்பு புலம்பும் அம்பத
     வரிமுக எண்கினுடன் குரங்கணி
          பணிவிடை சென்று முயன்ற குன்றணி ...... இடையேபோய்ப்

பகடிஇலங்கை கலங்க அம்பொனின்
     மகுட சிரம் தசமும் துணிந்தெழு
          படியும் நடுங்க விழும் பனம்பழம் எனவாகும்

மருதம் உதைந்த முகுந்தன் அன்புறு
     மருக குவிந்து மலர்ந்த பங்கய
          வயலியில் அம்பவிழ் சண்பகம் பெரியவிராலி

மலையில்விளங்கிய கந்த என்றுனை
     மகிழ்வொடு வந்திசெய் மைந்தன் என்றனை
          வழிவழி அன்புசெய் தொண்டு கொண்டருள் ...... பெருமாளே.

திருப்பாடல் 10:
தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

கரிபுராரி காமாரி திரிபுராரி தீயாடி
     கயிலையாளி காபாலி ...... கழையோனி

கரஉதாசனாசாரி பரசு பாணி பானாளி
     கணமொடாடி காயோகி ...... சிவயோகி

பரம யோகி மாயோகி பரிஅரா ஜடாசூடி
     பகரொணாத மாஞானி ...... பசுவேறி

பரதமாடி கானாடி பர வயோதிகாதீத
     பரம ஞான ஊர்பூத ...... அருளாயோ

சுருதியாடி தாதா வி வெருவியோட மூதேவி
     துரக கோப மீதோடி ...... வடமேரு

சுழல வேலை தீமூள அழுதளாவி வாய்பாறி
     சுரதினோடு சூர்மாள ...... உலகேழும்

திகிரி மாதிராவார திகிரி சாய வேதாள
     திரளினோடு பாறோடு ...... கழுகாடச்

செருவில்நாடு வான்நீப கருணை மேருவேபார
     திரு விராலி ஊர்மேவு ...... பெருமாளே.

திருப்பாடல் 11:
தானாத்தன தான தனதன
     தானாத்தன தான தனதன
          தானாத்தன தான தனதன ...... தனதான

காமாத்திரமாகி இளைஞர்கள்
     வாழ்நாட்கொடு போகிஅழகிய
          காதாட்டிய பார இருகுழை ...... அளவோடிக்

கார்போல்தவழோதி நிழல்தனில் 
     ஆர்வாள் கடையீடு கனகொடு
          காலேற்றுவை வேலின் முனைகடை ...... யமதூதர்

ஏமாப்பற மோக வியல்செய்து
     நீலோற்பல ஆசில் மலருடன் 
          நேராட்ட விநோதமிடும்விழி ...... மடவார்பால்

ஏகாப்பழி பூணும் மருளற
     நீதோற்றி முனாளும் அடிமையை
          ஈடேற்றுதலால்உன் வலிமையை ...... மறவேனே

சீமாட்டியும் ஆய திரிபுரை
     காலாக்கினி கோப பயிரவி
          சீலோத்தமி நீலி சுரதிரி ...... புவநேசை

சீகார்த்திகையாய அறுவகை
     மாதாக்கள் குமாரனெனவெகு
          சீராட்டொடு பேண வடதிசை ...... கயிலாசக்

கோமாற்குபதேசம் உபநிட
     வேதார்த்த மெய்ஞ் ஞான நெறியருள்
          கோதாட்டிய ஸ்வாமி எனவரும் இளையோனே

கோடாச்சிவ பூஜை பவுருஷ
     மாறாக்கொடை நாளும் மருவிய
          கோனாட்டு விராலி மலையுறை ...... பெருமாளே.

திருப்பாடல் 12:
தனாதனன தான தந்த தனாதனன தான தந்த
     தனாதனன தான தந்த ...... தனதான

கொடாதவனையே புகழ்ந்து குபேரனெனவே மொழிந்து
     குலாவியஅவமே திரிந்து ...... புவிமீதே

எடாதசுமையே சுமந்து எணாதகலியால் மெலிந்து
     எலாவறுமை தீர அன்றுன் அருள்பேணேன்

சுடாத தனமான கொங்கைகளால் இதயமே மயங்கி
     சுகாதரமதாய் ஒழுங்கில் ஒழுகாமல்

கெடாத தவமே மறைந்து கிலேசமதுவே மிகுந்து
     கிலாதவுடல்ஆவி நொந்து ...... மடியாமுன்

தொடாய்மறலியே நியென்ற சொலாகியதுன் நாவருங்கொல்
     சொலேழுலகம் ஈனும்அம்பை ...... அருள்பாலா

நடாதசுழி மூல விந்து நளாவிவிளை ஞான நம்ப
     நபோமணி சமான துங்க ...... வடிவேலா

படாதகுளிர் சோலை அண்டம் அளாவிஉயர் வாய் வளர்ந்து
     பசேலெனவுமே தழைந்து ...... தினமேதான்

விடாதுமழை மாரி சிந்த அநேகமலர் வாவி பொங்கு
     விராலிமலை மீது கந்த ...... பெருமாளே.

திருப்பாடல் 13:
தானா தனான தனத்த தத்தன
     தானா தனான தனத்த தத்தன
          தானா தனான தனத்த தத்தன ...... தனதான

மாயா சொரூப முழுச் சமத்திகள்
     ஓயா உபாய மனப் பசப்பிகள்
          வாணாளைஈரும் விழிக் கடைச்சிகள் ...... முநிவோரும்

மாலாகிவாட நகைத்துருக்கிகள்
     ஏகாசமீது தனத் திறப்பிகள்
          வாரீர்இரீர்என் முழுப்புரட்டிகள் ...... வெகுமோகம்

ஆயாதஆசை எழுப்பும் எத்திகள்
     ஈயாதபோதில் அறப் பிணக்கிகள்
          ஆவேசநீருண் மதப்பொறிச்சிகள் ...... பழிபாவம்

ஆமாறெணாத திருட்டு மட்டைகள்
     கோமாளமான குறிக் கழுத்திகள்
          ஆசாரஈன விலைத்தனத்தியர் உறவாமோ

காயாத பால்நெய் தயிர்க் குடத்தினை
     ஏயா எணாமல் எடுத்திடைச்சிகள்
          காணாதவாறு குடிக்குமப் பொழுதுரலோடே

கார்போலுமேனி தனைப் பிணித்தொரு
     போர்போல் அசோதை பிடித்தடித்திட
          காதோடுகாது கையிற் பிடித்தழுதினிதூதும்

வேயால்அநேக விதப் பசுத்திரள்
     சாயாமல் மீள அழைக்கும் அச்சுதன்
          வீறான மாமன் எனப் படைத்தருள் ...... வயலூரா

வீணாள் கொடாத படைச் செருக்கினில்
     சூர்மாள வேலை விடுக்கும் அற்புத
          வேலா விராலி மலைத் தலத்துறை ...... பெருமாளே.

திருப்பாடல் 14:
தானான தான தானான தான
     தானான தான ...... தனதான

மாலாசை கோபம் ஓயாதெ நாளும் 
     மாயா விகார ...... வழியேசெல்

மாபாவி காளி தானேனு நாத
     மாதா பிதாவும் இனிநீயே

நாலான வேத நூலாகமாதி
     நான்ஓதினேனுமிலை வீணே

நாள்போய் விடாமல் ஆறாறு மீதில்
     ஞானோபதேசம் அருள்வாயே

பாலா கலார ஆமோத லேப
     பாடீர வாக ...... அணிமீதே

பாதாள பூமி ஆதார மீன
     பானீய மேலை ...... வயலூரா

வேலா விராலி வாழ்வே சமூக
     வேதாள பூத ...... பதிசேயே

வீரா கடோர சூராரியே!செ
     வேளே சுரேசர் ...... பெருமாளே.

திருப்பாடல் 15:
தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன
     தானன தந்தன தாத்தன ...... தனதான

மேகமெனும்குழல் சாய்த்திரு கோகனகம்கொடு கோத்தணை
     மேல்விழுகின்ற பராக்கினில் உடைசோர

மேகலையும்தனி போய்த்தனியே கரணங்களும் ஆய்க்கயல்
     வேல்விழியும் குவியாக்குரல் ...... மயில்காடை

கோகிலமென்றெழ போய்க்கனி வாயமுதுண்டுருகாக் களி
     கூரவுடன் பிரியாக் கலவியில் மூழ்கிக்

கூடிமுயங்கி விடாய்த்திரு பார தனங்களின் மேல்துயில்
     கூரினும் அம்புய தாள்துணை ...... மறவேனே

மோகர துந்துமி ஆர்ப்ப விராலி விலங்கலின் வீட்டதில்
     மூவுலகும் தொழுதேத்திட ...... உறைவோனே

மூதிசை முன்பொருகால் தட மேருவை அம்பினில் வீழ்த்திய
     மோகன சங்கரி வாழ்த்திட ...... மதியாமல்

ஆகமடிந்திட வேற்கொடு சூரனை வென்றடல் போய்த்!தணி
     யாமையின் வென்றவனால் பிறகிடுதேவர்

ஆதிஇளந்தலை காத்தரசாள அவன்சிறை மீட்டவன் 
     ஆள்உலகம் குடியேற்றிய ...... பெருமாளே.

திருப்பாடல் 16:
தான தனதனன தான தனதனன
     தான தனதனன ...... தந்ததான

மோதி இறுகிவட மேரு எனவளரும் 
     மோக முலையசைய ...... வந்துகாயம்

மோசமிடும் அவர்கள் மாயை தனில்முழுகி
     மூடமெனஅறிவு ...... கொண்டதாலே

காதி வரும் இயம தூதர் கயிறுகொடு
     காலில் இறுகஎனை ...... வந்திழாதே

காவலெனவிரைய ஓடி உனதடிமை
     காண வருவதினி ...... எந்தநாளோ

ஆதி மறையவனும் மாலும் உயர்சுடலை
     ஆடும் அரனும் இவரொன்றதான

ஆயி அமலை திரிசூலி குமரி!மக
     மாயி கவுரிஉமை ...... தந்தவாழ்வே

சோதி நிலவுகதிர் வீசு மதியின்மிசை
     தோய வளர்கிரியின் உந்திநீடு

சோலை செறிவுள விராலி நகரில்வளர்
     தோகை மயிலுலவு ...... தம்பிரானே.


No comments:

Post a Comment