Sunday, December 30, 2018

மயிலம்:

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: விழுப்புரம்

திருக்கோயில்: அருள்மிகு சுப்ரமண்ய சுவாமி திருக்கோயில்

தல வகை: முருகன் திருக்கோயில்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

திண்டிவனத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இத்தலம்.

(Google Maps: Sri Mailam Murugan Temple, Adheenakarther, SSBS Thirumadam, Mailam, Tamil Nadu 604304, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனதந்த தானன தானா தானா
     தனதந்த தானன தானா தானா
          தனதந்த தானன தானா தானா ...... தனதான

கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ
     விடமிஞ்சு பாதக வேலோ சேலோ
          குழை கொண்டுலாவிய மீனோ மானோ ...... எனுமானார்

குயில்தங்கு மாமொழியாலே நேரே
     இழைதங்கு நூலிடையாலே மீதூர்
          குளிர் கொங்கை மேருவினாலே நானா ...... விதமாகி

உலைகொண்ட மாமெழுகாயே மோகா
     அலையம்பு ராசியினூடே மூழ்கா
          உடல் பஞ்ச பாதக மாயா நோயால் ...... அழிவேனோ

உறுதண்ட பாசமொடாரா வாரா
     எனைஅண்டியே நமனார் தூதானோர்
          உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதாள்  ...... அருள்வாயே

அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ
     எனநின்று வாய்விடவே நீள்மாசூர்
          அணியம் சராசனம் வேறாய் நீறாய் ...... இடவேதான்

அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீர்
     அனலங்கை வேல்விடும் வீரா தீரா
          அருமந்த ரூபக ஏகா வேறோர் ...... வடிவாகி

மலைகொண்ட வேடுவர் கானூடேபோய்
     குறமங்கையாளுடனே மால்ஆயே
          மயல் கொண்டுலாயவள் தாள்மீதேவீழ் ...... குமரேசா

மதிமிஞ்சு போதக வேலா ஆளா
     மகிழ் சம்புவே தொழு பாதா நாதா
          மயிலம்தண் மாமலை வாழ்வே வானோர் ...... பெருமாளே

No comments:

Post a Comment