(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: திருவள்ளூர்
திருக்கோயில்: அருள்மிகு சுப்ரமண்ய சுவாமி திருக்கோயில்
தல வகை: முருகன் கோயில்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், நக்கீரர் (திருமுருகாற்றுப்படை)
தலக் குறிப்புகள்:நெடிய
சென்னையிலிருந்து சுமார் 90 கி.மீ. தூரத்திலும், திருவள்ளூரிலிருந்து 40 கி.மீ தூரத்திலும், காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 45 கி.மீ தூரத்திலும் இத்தலம் அமைந்துள்ளது.
(Google Maps: Arulmigu Thiruthani Murugan Temple, Thiruthani Hill, Thiruthani, Tamil Nadu 631209, India)
(Google Maps: Arulmigu Thiruthani Murugan Temple, Thiruthani Hill, Thiruthani, Tamil Nadu 631209, India)
(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 63.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
அமைவுற்றடையப் !பசியுற்றவருக்
கமுதைப் பகிர்தற்கிசையாதே
அடையப் பொருள் கைக்கிளமைக்கென!வைத்
தருள் தப்பி மதத்தயராதே
தமர் சுற்றியழப் பறை கொட்டியிடச்
சமனெட்டுயிரைக் ...... கொடுபோகும்
சரிரத்தினை நிற்குமெனக் கருதித்
தளர்வுற்றொழியக் ...... கடவேனோ
இமயத்து மயிற்கொரு !பக்கமளித்
தவருக்கிசையப் ...... புகல்வோனே
இரணத்தினில்எற்றுவரைக் !கழுகுக்
கிரையிட்டிடு விக்ரம வேலா
சமயச் சிலுகிட்டவரைத் தவறித்
தவமுற்ற அருள் ...... புகநாடும்
சடுபத்ம முகக் குக புக்ககனத்
தணியில் குமரப் ...... பெருமாளே.
திருப்பாடல் 2:
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
அரகர சிவனரி அயனிவர் பரவிமுன்
அறுமுக சரவணபவனே !என்
றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
அநலென எழவிடும் ...... அதிவீரா
பரிபுர கமலமதடியிணை அடியவர்
உளமதில் உறவருள் ...... முருகேசா
பகவதி வரைமகள் உமைதர வருகுக
பரமன திருசெவி ...... களிகூர
உரைசெயும் ஒருமொழி பிரணவ முடிவதை
உரைதரு குருபர ...... உயர்வாய
உலகமன் அலகில உயிர்களும் இமையவர்
அவர்களும் உறுவர ...... முநிவோரும்
பரவிமுன் அநுதின மனமகிழ்வுறஅணி
பணிதிகழ் தணிகையில் உறைவோனே
பகர்தரு குறமகள் தருவமை வநிதையும்
இருபுடை உறவரு ...... பெருமாளே.
திருப்பாடல் 3:
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் ...... தனதான
அருக்கி மெத்தெனச் சிரித்துருக்கி இட்டுளக்!கருத்
தழித்தறக் கறுத்தகண் ...... பயிலாலே
அழைத்தகப் படுத்திஒட்டறப் பொருள் !பறிப்பவர்க்
கடுத்தபத்தமுற்று வித்தகர் போலத்
தரிக்கும் வித்தரிக்கு மிக்க தத்துவப் ப்ரசித்தி!எத்
தலத்து மற்றிலைப் பிறர்க்கென ஞானம்
சமைத்துரைத்திமைப்பினில் சடக்கெனப் படுத்தெழச்
சறுக்குமிப் பிறப்பு பெற்றிடலாமோ
பொருக்கெழக் கடற்பரப்பரக்கர் கொத்திறப்புறப்
பொருப்பினில் பெருக்க உற்றிடுமாயம்
புடைத்திடித்தடல் கரத்துறப் பிடித்த !கற்பகப்
புரிக்கிரக்கம் வைத்தபொற் ...... கதிர்வேலா
திருத்த முத்தமிழ்க் கவிக்கொருத்த மைக் குறத்தியைத்
தினைப்புனக் கிரித்தலத்திடை தோயும்
சிவத்த குக்குடக் கொடிச் செருக்கஉற்பலச் சுனைச்
சிறப்புடைத் திருத்தணிப் ...... பெருமாளே.
திருப்பாடல் 4:
தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
தனத்தன தனத்தன ...... தனதான
இருப்பவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை அறுத்திடும் எனஓதும்
இசைத்தமிழ் நடத்தமிழ் எனத்துறை விருப்புடன்
இலக்கண இலக்கிய ...... கவிநாலும்
தரிப்பவர் உரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
தலத்தினில் நவிற்றுதல் அறியாதே
தனத்தினில் முகத்தினில் மனத்தினில் உருக்கிடு
சமர்த்திகள் மயக்கினில் ...... விழலாமோ
கருப்புவில் வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்
களிப்புடன் ஒளித்தெய்த ...... மதவேளைக்
கருத்தினில் நினைத்தவ(ன்) நெருப்பெழ நுதற்படு
கனற்கணில் எரித்தவர் ...... கயிலாயப்
பொருப்பினில் இருப்பவர் பருப்பத உமைக்கொரு
புறத்தினை அளித்தவர் ...... தருசேயே
புயற்பொழில் வயற்பதி நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு ...... பெருமாளே.
திருப்பாடல் 5:
தனதன தான தனதன தான
தனதன தான ...... தனதான
இருமல்உரோக முயலகன் வாதம்
எரிகுண நாசி ...... விடமே!நீ
ரிழிவுவிடாத தலைவலி சோகை
எழுகள மாலை ...... இவையோடே
பெரு வயிறீளை எரிகுலை சூலை
பெருவலி வேறும் ..... உளநோய்கள்
பிறவிகள் தோறும் எனைநலியாத
படிஉன தாள்கள் ...... அருள்வாயே
வருமொரு கோடி அசுரர் பதாதி
மடிய அநேக ...... இசைபாடி
வருமொரு கால வயிரவராட
வடிசுடர் வேலை ...... விடுவோனே
தருநிழல் மீதில் உறை முகிலூர்தி
தருதிரு மாதின் ...... மணவாளா
சலமிடை பூவின் நடுவினில் வீறு
தணிமலை மேவு ...... பெருமாளே.
திருப்பாடல் 6:
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
உடலினூடு போய்மீளும் உயிரினூடு மாயாத
உணர்வினூடு வானூடு ...... முது!தீயூ
டுலவையூடு நீரூடு புவியினூடு வாதாடும்
ஒருவரோடு மேவாத ...... தனிஞானச்
சுடரினூடு நால்வேதம் முடியினூடும் ஊடாடு
துரிய வாகுலாதீத ...... சிவரூபம்
தொலைவிலாத பேராசை துரிசறாத ஓர்பேதை
தொடும்உபாய ஏதோசொல் அருள்வாயே
மடலறாத வாரீச அடவிசாடி மாறான
வரிவரால் குவால்சாய ...... அமராடி
மதகு தாவி மீதோடி உழவரால் அடாதோடி
மடையை மோதிஆறூடு ...... தடமாகக்
கடல்புகா மகாமீனை முடுகி வாளை தான்மேவு
கமல வாவி மேல்வீழு ...... மலர்வாவிக்
கடவுள் நீல மாறாத தணிகை காவலா வீர
கருணை மேருவே தேவர் ...... பெருமாளே.
திருப்பாடல் 7:
தனனதன தான தனனதன தான
தனனதன தான ...... தனதான
உடையவர்கள்ஏவர் எவர்களென நாடி
உளமகிழ ஆசு ...... கவிபாடி
உமதுபுகழ் மேரு கிரியளவும்!ஆன
தென உரமுமான ...... மொழிபேசி
நடைபழகி மீள வறியவர்கள் நாளை
நடவுமென வாடி ...... முகம்வேறாய்
நலியுமுனமே உன் அருணஒளி வீசு
நளினஇரு பாதம் அருள்வாயே
விடைகொளுவு பாகர் விமலர் திரிசூலர்
விகிர்தர் பரயோகர் ...... நிலவோடே
விளவு சிறு பூளை நகுதலையொடாறு
விடஅரவு சூடும் ...... அதிபாரச்
சடைஇறைவர் காண உமை மகிழ ஞான
தளர் நடையிடாமுன் ...... வருவோனே
தவமலரு நீல மலர்சுனை அநாதி
தணிமலைஉலாவு ...... பெருமாளே.
திருப்பாடல் 8:
தய்யனா தத்ததன தய்யனா தத்ததன
தய்யனா தத்ததன ...... தனதான
உய்ய ஞானத்து நெறி கைவிடாதெப்பொழுதும்
உள்ள வேதத்துறை கொடுணர்வோதி
உள்ள மோகத்திருளை விள்ள மோகப் பொருளை
உள்ள மோகத்தருளி ...... உறவாகி
வையமேழுக்கு நிலை செய்யு நீதிப் பழைய
வல்ல மீதுற்பல சயிலமேவும்
வள்ளியா நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமுறி
கிள்ளி வீசுற்று மலர் ...... பணிவேனோ
பையராவைப் புனையும் ஐயர்பாகத் தலைவி
துய்ய வேணிப் பகிரதி குமாரா
பையமால் பற்றிவளர் சையமேல் வைக்கு முது
நெய்யனே சுற்றிய குறவர் கோவே
செய்யுமால் வெற்புருவ வெய்யவேல் சுற்றிவிடு
கையமால் வைத்ததிரு ...... மருகோனே
தெய்வயானைக்கிளைய வெள்ளை யானைத் தலைவ
தெய்வயானைக்கினிய ...... பெருமாளே.
திருப்பாடல் 9:
தத்ததன தான தத்தம் தத்ததன தான தத்தம்
தத்ததன தான தத்தம் ...... தனதான
எத்தனை கலாதி சித்தங்கெத்தனை வியாதி !பித்தங்
கெத்தனை சராசரத்தின் ...... செடமான
எத்தனைவிடா வெருட்டங்கெத்தனை வலாண்மை !பற்றங்
கெத்தனை கொலூனை நித்தம் ...... பசியாறல்
பித்தனையநான் அகட்டுண்டிப்படி கெடாமல் முத்தம்
பெற்றிட நினா சனத்தின் ...... செயலான
பெற்றியும்ஒராது நிற்கும் தத்தகுரு தார நிற்கும்
பெத்தமும் ஒராது நிற்கும் ...... கழல்தாராய்
தத்தனதனா தனத்தம் தத்தனதனா தனத்தம்
தத்தனதனா தனத்தம் ...... தகுதீதோ
தக்குகுகு டூடுடுட்டுண்டிக்குகுகு டீகுதத்தம்
தத்தனதனானனுர்த்தும் ...... சதபேரி
சித்தர்கள் நிடாதர் வெற்பின் கொற்றவர் சுவாமி பத்தர்
திக்குகளொர் நாலிரட்டின் ...... கிரிசூழச்
செக்கண்அரிமா கனைக்கும் சித்தணிகை வாழ் சிவப்பின்
செக்கர் நிறமாயிருக்கும் ...... பெருமாளே.
திருப்பாடல் 10:
தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான
எலுப்பு நாடிகள் !அப்பொடிரத்தமொ
டழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழு
இருக்கும் வீடதில் எத்தனை தத்துவ ...... சதிகாரர்
இறப்பர் சூதக|வர்ச் சுத|ரப்பதி
உழப்பர் பூமி தரிப்பர் பிறப்புடன்
இருப்பர் வீடுகள் கட்டிஅலட்டுறு ...... சமுசாரம்
கெலிப்பர் மால்வலை பட்டுறு துட்டர்கள்
அழிப்பர் மாதவம் உற்று நினைக்கிலர்
கெடுப்பர் யாரையும் மித்திர குத்தரர் ...... கொலைகாரர்
கிருத்தர் கோளகர் பெற்று திரிக்!கள
வரிப்பர் சூடகர்எத்தனை வெப்பிணி
கெலிக்கும் வீடதை நத்திஎடுத்திவண் உழல்வேனோ
ஒலிப்பல் பேரிகை உக்ர அமர்க்களம்
எதிர்த்த சூரரை வெட்டிஇருள்கிரி
உடைத்து வானவர் சித்தர் துதித்திட ...... விடும்வேலா
உலுத்த ராவணனைச் சிரமிற்றிட
வதைத்து மாபலியைச் சிறை வைத்தவன்
உலக்கை ராவி நடுக்கடல் விட்டவன் ...... மருகோனே
வலிக்க வேதனை குட்டி நடித்தொரு
செகத்தை ஈனவள் பச்சைநிறத்தியை
மணத்த தாதை பரப்ரமருக்கருள் ...... குருநாதா
வனத்தில் வாழு மயிற்குலம் ஒத்திடு
குறத்தியாரை மயக்கியணைத்துள
மகிழ்ச்சியோடு திருத்தணி பற்றிய ...... பெருமாளே.
திருப்பாடல் 11:
தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் ...... தனதான
எனக்கென யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலம் ...... தனில்ஓயா
எடுத்திடு காயம் தனைக்கொடு மாயும்
இலச்சை இலாதென் ...... பவமாற
உனைப்பல நாளும் திருப்புகழாலும்
உரைத்திடுவார் தம் குளிமேவி
உணர்த்திய போதம் தனைப் பிரியாதொண்
பொலச் சரண் நானும் ...... தொழுவேனோ
வினைத் திறமோடன்றெதிர்த்திடும் வீரன்
விழக்கொடு வேள் கொன்றவ நீயே
விளப்பென மேலென்றிட அயனாரும்
விருப்புற வேதம் ...... புகல்வோனே
சினத்தொடு சூரன் தனைக்கொடு வேலின்
சிரத்தினை மாறும் ...... முருகோனே
தினைப்புன மேவும் குறக் கொடியோடும்
திருத்தணி மேவும் ...... பெருமாளே.
திருப்பாடல் 12:
தான தத்தன தான தத்தன
தான தத்தன தான தத்தன
தான தத்தன தான தத்தன ...... தந்ததான
ஏது புத்தி ஐயா எனக்கினி
யாரை நத்திடுவேன் !அவத்தினி
லேஇறத்தல் கொலோ எனக்குநி .... தந்தை!தாயென்
றேஇருக்கவும் !நானும்இப்படி
யே தவித்திடவோ சகத்தவர்
ஏசலில்படவோ நகைத்தவர் ...... கண்கள்காணப்
பாதம் வைத்திடையா தெரித்தெனை
தாளில் வைக்க நியே மறுத்திடில்
பார்நகைக்கும்ஐயா தகப்பன்முன் ...... மைந்தனோடிப்
பால்மொழிக் குரல் ஓலமிட்டிடில்
யாரெடுப்பதெனா வெறுத்தழ
பார் விடுப்பர்களோ எனக்கிது ...... சிந்தியாதோ
ஓத முற்றெழு பால் கொதித்தது
போல எட்டிகை நீசமுட்டரை
ஓட வெட்டிய பாநு சத்திகை ...... எங்கள் கோவே
ஓத மொய்ச்சடை ஆடவுற்றமர்
மான்மழுக் கரமாட பொற்கழல்
ஓசை பெற்றிடவே நடித்தவர் ...... தந்த வாழ்வே
மா தினைப்புன மீதிருக்கு மை
வாள்விழிக் குறமாதினைத் திரு
மார்பணைத்த மயூர அற்புத ...... கந்தவேளே
மாரன் வெற்றிகொள் !பூமுடிக்குழ
லார் வியப்புற நீடு மெய்த்தவர்
வாழ் திருத்தணி மாமலைப்பதி ...... தம்பிரானே.
திருப்பாடல் 13:
தான தத்தன தத்தன தத்தன
தான தத்தன தத்தன தத்தன
தான தத்தன தத்தன தத்தன ...... தனதான
ஓலையிட்ட குழைச்சிகள் சித்திர
ரூபமொத்த நிறத்திகள் !விற்கணை
யோடிணைத்த விழிச்சிகள் சர்க்கரை ...... அமுதோடே
ஊறியொத்த மொழிச்சிகள் !புட்குர
லோடு வைத்து மிழற்று மிடற்றிகள்
ஓசைபெற்ற துடிக்கொள் இடைச்சிகள் ...... மணம்வீசும்
மாலையிட்ட கழுத்திகள் முத்தணி
வாரழுத்து தனத்திகள் குத்திர
மால் விளைத்து மனத்தைஅழித்திடு ...... மடமாதர்
மார்பசைத்து மருட்டிஇருட்டறை
வாவெனப் பொருள் பற்றி முயக்கிடு
மாதருக்கு வருத்தம் இருப்பது ...... தணியாதோ
வேலை வற்றிட நற்கணை தொட்டலை
மீதடைத்து தனிப்படை விட்டுற
வீறரக்கன் முடித்தலை பத்தையு(ம்) ...... மலைபோலே
மீதறுத்து நிலத்தில் அடித்துமெய்
வேத லக்ஷுமியைச் சிறை விட்டருள்
வீர அச்சுதனுக்கு நலற்புத ...... மருகோனே
நீலி நிட்களி நிர்க்குணி நித்தில
வாரிமுத்து நகைக்கொடி சித்திர
நீல ரத்தின மிக்கஅறக்கிளி ...... புதல்வோனே
நீறதிட்டு நினைப்பவர் புத்தியில்
நேசமெத்த அளித்தருள் சற்குரு
நீலமுற்ற திருத்தணி வெற்புறை ...... பெருமாளே.
திருப்பாடல் 14:
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன ...... தனதான
கச்சணி இளமுலை முத்தணி பலவகை
கைச்சரி சொலிவர ...... மயல்கூறிக்
கைப்பொருள் கவர்தரு மைப்பயில் விழியினர்
கட்செவி நிகரல்குல் ...... மடமாதர்
இச்சையின்உருகிய கச்சையன் அறிவிலி
எச்சமில் ஒருபொருள் !அறியேனுக்
கிப்புவி இசைகமழ் பொற்பத மலரிணை
இப்பொழுதணுக உனருள் தாராய்
கொச்சையர் மனையில் இடைச்சியர் தயிர்தனை
நச்சியெ திருடிய ...... குறையால்வீழ்
குற்கிரவினியொடு நற்திற வகையறி
கொற்ற உவணமிசை ...... வரு கேசன்
அச்சுதை நிறைகடல் நச்சரவணை துயில்
அச்சுதன் மகிழ்தரு ...... மருகோனே
அப்பணி சடைஅரன் மெச்சிய தணிமலை
அப்பனெ அழகிய ...... பெருமாளே!!!
திருப்பாடல் 15:
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் ...... தனதான
கடல்செகத்தடக்கி மற்றடுத்தவர்க்கிடுக்கணைக்
கடைக்கணில் கொடுத்தழைத்தியல் காமக்
கலைக் கதற்றுரைத்துபுட் குரல்கள் விட்டுளத்தினைக்
கரைத்துடுத்த பட்டவிழ்த்தணை மீதே
சடக்கெனப் புகத்தனத்தணைத்திதழ்க் கொடுத்து!முத்
தமிட்டிருள் குழல் பிணித்துகிரேகை
சளப்படப் புதைத்தடித்திலைக் குணக் கடித்!தடத்
தலத்தில் வைப்பவர்க்கிதப் ...... படுவேனோ
இடக்கடக்கு மெய்ப்பொருள் !திருப்புகழ்க்குயிர்ப்பளித்
தெழில்தினைக் கிரிப்புறத் ...... துறைவேலா
இகல் செருக்கரக்கரைத் தகர்த்தொலித்துரத்த !பச்
சிறைச்சியைப் பசித்திரைக்கிசை கூவும்
பெடைத்திரட்களித்த குக்குடக்கொடிக் கரத்தபொய்ப்
பிதற்றறப் படுத்துசற் ...... குருவாய்முன்
பிறப்பிலிக்குணர்த்து சித்தவுற்றநெல் பெருக்குவைப்
பெருக்குமெய்த் திருத்தணிப் ...... பெருமாளே.
திருப்பாடல் 16:
தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
தனத்தன தனத்தம் ...... தனதான
கரிக்குழல் விரித்தும் புறக்கயல் விழித்தும்
கரிக்குவடிணைக்கும் ...... தனபாரக்
கரத்திடு வளைச் சங்கிலிச்சரம் ஒலித்தும்
கலைத்துகில் மினுக்யும் ...... பணிவாரைத்
தரித்துளம் அழிக்கும் கவட்டர்கள் இணக்கம்
தவிர்த்துனது சித்தம் ...... களிகூரத்
தவக்கடல் குளித்திங்குனக்கடிமை உற்றுன்
தலத்தினில்இருக்கும் ...... படிபாராய்
புரத்தையும் எரித்தங்கயத்தையும் உரித்தொண்
பொடிப்பணி எனப்பன் ...... குருநாதா
புயப்பணி கடப்பம் தொடைச் சிகரம்உற்றின்
புகழ்ச்சிஅமுதத் திண் ...... புலவோனே
திரள்பரி கரிக்கும் பொடிப்படவுணர்க்கும்
தெறிப்புற விடுக்கும் ...... கதிர்வேலா
சிறப்பொடு குறப்பெண் களிக்கும் விசயத்தென்
திருத்தணி இருக்கும் ...... பெருமாளே.
திருப்பாடல் 17:
தனதன தானம் தனதன தானம்
தனதன தானம் ...... தனதான
கலை மடவார் தம் சிலைஅதனாலும்
கன வளையாலும் ...... கரைமேலே
கருகிய காளம் பெருகிய தோயம்
கருதலையாலும் ...... சிலையாலும்
கொலைதரு காமன் பலகணையாலும்
கொடியிடையாள் நின்றழியாதே
குரவணி நீடும் புயமணி நீபம்
குளிர்தொடை நீ தந்தருள்வாயே
சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்
திருமகள் நாயன் ...... தொழும்வேலா
தினைவன மானும் கநவன மானும்
செறிவுடன் மேவும் ...... திருமார்பா
தலமகள் மீதெண் புலவர்உலாவும்
தணிகையில் வாழ் செங்கதிர்வேலா
தனியவர் கூரும் தனிகெட நாளும்
தனி மயிலேறும் ...... பெருமாளே.
திருப்பாடல் 18:
தனனத்த தத்தனத் தனனத்த தத்தனத்
தனனத்த தத்தனத் ...... தனதான
கவடுற்ற சித்தர்சட் சமய ப்ரமத்தர்நற்
கடவுள் ப்ரதிஷ்டைபற் ...... பலவாகக்
கருதிப் பெயர்க் குறித்துருவர்க்கம் இட்டிடர்க்
கருவில்புகப் பகுத்துழல்வானேன்
சவடிக்கிலச்சினைக்கிருகைச் சரிக்கு!மிக்
க சரப்பளிக்கெனப் ...... பொருள் தேடி
சகலத்தும் ஒற்றை பட்டயல்பட்டு நிற்குநின்
சரண ப்ரசித்தி சற்றுணராரோ
குவடெட்டும் அட்டு நெட்டுவரிக் கணத்தினைக்
குமுறக் கலக்கி விக்ரம சூரன்
குடலைப் புயத்திலிட்டுடலைத் !தறித்துருத்
துதிரத்தினில் குளித்தெழும் வேலா
சுவடுற்ற அற்புதக் கவலைப் புனத்தினில்
துவலைச் சிமிழ்த்து நிற்பவள் நாணத்
தொழுதெத்து முத்தபொற் புரிசைச் செருத்தணிச்
சுருதித் தமிழ்க்கவிப் ...... பெருமாளே.
திருப்பாடல் 19:
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் ...... தனதான
கனத்தறப் பணைத்தபொன் கழைப்புயத் தனக்கிரிக்
கனத்தையொத்து மொய்த்த மைக் ...... குழலார்தம்
கறுத்தமைக் கயற்கணில் கருத்து வைத்தொருத்த நின்
கழல் பதத்தடுத்திடற்கறியாதே
இனப்பிணிக் கணத்தினுக்கிருப்பெனத் துருத்தி!ஒத்
திசைத்தசைத்த சுக்கிலத் ...... தசை தோலால்
எடுத்தபொய்க் கடத்தினைப் பொறுக்குமிப் !பிறப்பறுத்
தெனக்கு நித்த முத்தியைத் ...... தரவேணும்
பனைக்கரச் சினத்திபத்தனைத் துரத்தரக்கனைப்
பயத்தினில் பயப்படப் ...... பொரும்வேலா
பருப்பதச் செருக்கறத் துகைக்குமுள் பதத்தினைப்
படைத்த குக்குடக் கொடிக் ...... குமரேசா
தினைப்புனப் பருப்பதத்தினில் குடிக் குறத்தியைச்
செருக்குறத் திருப் புயத்தணைவோனே
திருப்புரப் புறத்தியல் திருத்தகுத்து நித்திலத்
திருத்திசைத் திருத்தணிப் பெருமாளே.
திருப்பாடல் 20:
தனத்த தத்தனத் தந்த தாத்தன ...... தந்ததான
தனத்த தத்தனத் தந்த தாத்தன ...... தந்ததான
கனைத்ததிர்க்கும்இப் பொங்கு கார்க்கடல் ...... ஒன்றினாலே
கறுத்தறச் சிவத்தங்கி வாய்த்தெழு ...... திங்களாலே
தனிக் கருப்புவில் கொண்டு வீழ்த்த சரங்களாலே
தகைத்தொருத்தி எய்த்திங்கு யாக்கை சழங்கலாமோ
தினைப் புனத்தினைப் பண்டு காத்த மடந்தை கேள்வா
திருத்தணிப்பதிக் குன்றின் மேல்திகழ் ...... கந்தவேளே
பனைக்கரக் கயத்தண்டர் போற்றிய ...... மங்கைபாகா
படைத்தளித்தழிக்கும் த்ரிமூர்த்திகள் ...... தம்பிரானே.
திருப்பாடல் 21:
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன ...... தனதான
கிரியுலாவிய முலைமிசை துகிலிடு
கபட நாடக விரகிகள் அசடிகள்
கெடுவியாதிகள் அடைவுடை உடலினர் ...... விரகாலே
க்ருபையினாரொடு மணமிசை நழுவிகள்
முழுது நாறிகள் இதமொழி வசனிகள்
கிடையின் மேல்மனம் உருகிட தழுவிகள் ...... பொருளாலே
பரிவிலா மயல் கொடுசமர் புரிபவர்
அதிகமாஒரு பொருள் தருபவரொடு
பழைய பேரென இதமுற அணைபவர் ...... விழியாலே
பகழி போல்விடு வினைகவர் திருடிகள்
தமையெணா வகை உறுகதி பெரும்வகை
பகர மாமயில் மிசைவர நினைவதும் ஒருநாளே
அரியராதிபர் மலரயன் இமையவர்
நிலைபெறாதிடர் படவுடன் முடுகியெ
அசுரர் தூள்பட அயில்தொடும் அறுமுக ...... இளையோனே
அரிய கானகம் உறைகுற மகளிடம்
கணவனாகிய அறிவுள விதரண
அமரர் நாயக சரவண பவதிறல் உடையோனே
தரும நீதியர் மறையுளர் பொறையுளர்
சரிவுறா நிலை பெறுதவம் உடையவர்
தளர்விலா மனம் உடையவர் அறிவினர் ...... பர ராஜர்
சகல லோகமும் உடையவர் நினைபவர்
பரவு தாமரை மலரடி இனிதுற
தணிகை மாமலை மணிமுடி அழகியல் ...... பெருமாளே.
திருப்பாடல் 22:
தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
தனதனத் தனதனத் ...... தனதான
கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக்
கெடுபிறப்பற விழிக்கிற பார்வைக்
கெடுமடக் குருடரைத் திருடரைச் சமய!தர்க்
கிகள்தமைச் செறிதல்உற்றறிவேதும்
!அறிதலற்றயர்தலுற்றவிழ்தலற்றருகலுற்
றறவு நெக்கழி கருக் ...... கடலூடே
அமிழ்தலற்றெழுதலுற்றுணர் !நலத்துயர்தலுற்
றடியிணைக்கணுகிடப் ...... பெறுவேனோ
பொறியுடைச் செழியன் வெப்பொழிதரப் பறிதலைப்
பொறியிலச் சமணரத்தனை பேரும்
பொடிபடச் சிவமணப் பொடி பரப்பியதிருப்
புகலியில் கவுணியப் ...... புலவோனே
தறி வளைத்துற நகைப் பொறியெழப் !புரமெரித்
தவர்திருப் புதல்வ நற் ...... சுனைமேவும்
தனிமணக் குவளை நித்தமு மலர்த் தருசெருத்
தணியினில் சரவணப் ...... பெருமாளே.
திருப்பாடல் 23:
தனனந் தனனத் தனனந் தனனத்
தனனந் தனனத் ...... தனதான
குயிலொன்று மொழிக் குயில் நின்றலையக்
கொலையின்ப மலர்க் ...... கணையாலே
குளிரும் தவளக் குலசந்த்ர ஒளிக்
கொடி கொங்கையின் முத்தனலாலே
புயல் வந்தெறியக் கடல் நின்றலறப்
பொரு மங்கையர் உக்கலராலே
புயமொன்ற மிகத் தளர்கின்ற தனிப்
புயம் வந்தணையக் ...... கிடையாதோ
சயிலம் குலையத் தடமும்தகரச்
சமன் நின்றலையப் ...... பொரும்வீரா
தருமங்கை வனக் குறமங்கையர் மெய்த்
தனமொன்று மணித் ...... திருமார்பா
பயிலும் ககனப் பிறைதண் பொழிலில்
பணியும் தணிகைப் ...... பதிவாழ்வே
பரமன் பணியப் பொருள் அன்றருளி
பகர் செங்கழநிப் ...... பெருமாளே.
திருப்பாடல் 24:
தனன தனத்தன தனன தனத்தன
தனன தனத்தன தனன தனத்தன
தனன தனத்தன தனன தனத்தன ...... தனதான
குருவியெனப்பல கழுகு நரித்திரள்
அரிய வனத்திடை மிருகமெனப் புழு
குறவைஎனக்கரி மரமுமெனத் திரி ...... உறவாகா
குமரி கலித்துறை முழுகி மனத்துயர்
கொடுமையெனப் பிணி கலகமிடத்திரி
குலையன்எனப்புலை கலியனெனப்பலர் ...... நகையாமல்
மருவு புயத்திடை பணிகள்அணப்பல
கரிபரிசுற்றிட கலைகள் தரித்தொரு
மதன சரக்கென கனக பலக்குடன் அது தேடேன்
வரிய பதத்தினின் அருவிஇருப்பிடம்
அமையும்எனக்கிடம் உனது பதச்சரண்
மருவு திருப்புகழ் அருள எனக்கினி ...... அருள்வாயே
விருது தனத்தன தனன தனத்தன
விதமி திமித்திமி திமித திமித்திமி
விகிர்த டடுட்டுடு ரிரிரி யெனக்குகு ...... வெகுதாளம்
வெருவ முகிழ்த்திசை உரகன் முடித்தலை
நெறுநெறெனத் திசை அதிர அடைத்திட
மிகுதி கெடப்பொரு அசுரர் தெறித்திட ...... விடும்வேலா
அரிய திரிப்புரம்எரிய விழித்தவன்
அயனை முடித்தலை உரியும் மழுக்கையன்
அகிலம்அனைத்தையும் உயிரும்அளித்தவன் அருள்சேயே
அமணர் உடல்கெட வசியிலழுத்தி!வி
ணமரர் கொடுத்திடும் அரிவை !குறத்தியொ
டழகு திருத்தணி மலையில் நடித்தருள் ...... பெருமாளே.
திருப்பாடல் 25:
தனத்த தனத் தனத்த தனத்
தனத்த தனத் தனத்த தனத்
தனத்த தனத் தனத்த தனத் ...... தனதான
குலைத்து மயிர்க் கலைத்து வளைக்
கழுத்து மணித் தனப்புரளக்
குவித்த விழிக் கயற்சுழலப் ...... பிறைபோலக்
குனித்த நுதல் புரட்டி !நகைத்
துருக்கி மயல் கொளுத்திஇணைக்
குழைச்செவியில் அழைப்ப பொறித் ...... தனபாரப்
பொலித்து மதத் தரித்த கரிக்
குவட்டு முலைப் பளப்பளெனப்
புனைத்த துகில் பிடித்த இடைப் ...... பொதுமாதர்
புயத்தில் வளைப் பிலுக்கில் நடைக்
குலுக்கில்அறப் பசப்பி மயல்
புகட்டி தவத்தழிப்பவருக்குறவாமோ
தலத்த நுவைக் குனித்தொரு!முப்
புரத்தை விழக் கொளுத்தி மழுத்
தரித்து புலிக் கரித்துகிலைப் ...... பரமாகத்
தரித்து தவச் சுரர்க்கண் முதல்
பிழைக்க மிடற்றடக்கு விடச்
சடைக்கடவுள் சிறக்க பொருள் ...... பகர்வோனே
சிலுத்த சுரர்க்கெலித்து மிகக்
கொளுத்தி மறைத் துதிக்க அதில்
செழிக்க அருள் கொடுத்த மணிக் ...... கதிர்வேலா
தினைப்புனமிற் குறத்தி மகள்
தனத்தின் மயல் குளித்து மகிழ்த்
திருத்தணியில் தரித்த புகழ்ப் ...... பெருமாளே.
திருப்பாடல் 26:
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
குவளைக் கணைதொட்டவனுக்கு முடிக்
குடையிட்ட குறைப் ...... பிறையாலே
குறுகுற்ற அலர்த் தெரிவைக்கு மொழிக்
குயிலுக்கும்இனித் ...... தளராதே
இவளைத் துவளக் கலவிக்கு!நயத்
திறுகத் தழுவிப் ...... புயமீதெ
இணையற்றழகில் புனையக் !கருணைக்
கினிமைத் தொடையைத் ...... தரவேணும்
கவளக் கரடக் கரியெட்டலறக்
கனகக் கிரியைப் ...... பொரும்வேலா
கருதிச் செயலைப் புயனுக்குருகிக்
கலவிக் கணயத்தெழு மார்பா
பவளத் தரளத் திரளக் குவை!வெற்
பவை ஒப்பு வயல் ...... புறமீதே
பணிலத் திரள்மொய்த்த திருத்தணிகைப்
பதியில் குமரப் ...... பெருமாளே.
திருப்பாடல் 27:
தாந்தன தத்தன தத்தன தத்தன
தாந்தன தத்தன தத்தன தத்தன
தாந்தன தத்தன தத்தன தத்தன ...... தனதான
கூந்தலவிழ்த்து முடித்து மினுக்கிகள்
பாய்ந்த விழிக்கு மையிட்டு மிரட்டிகள்
கோம்பு படைத்த மொழிச் சொல் பரத்தையர் ...... புயமீதே
கோங்கு படைத்த தனத்தை அழுத்திகள்
வாஞ்சையுறத் தழுவிச் சிலுகிட்டவர்
கூன் பிறையொத்த நகக்குறி வைப்பவர் ...... பலநாளும்
ஈந்த பொருள் பெற இச்சை உரைப்பவர்
ஆந்துணையற்றழுகைக் குரலிட்டவர்
ஈங்கிசை உற்றவலக் குண மட்டைகள் ...... பொருள்தீரில்
ஏங்கிஇடக்கடையில் தளி வைப்பவர்
பாங்ககலக் கருணைக்கழல் பெற்றிட
ஈந்திலை எப்படி நற்கதி புக்கிடல் அருள்வாயே
காந்தள் மலர்த்தொடை இட்டெதிர் விட்டொரு
வேந்து குரக்கரணத்தொடு மட்டிடு
காண்டிப அச்சுதன் உத்தம சற்குணன் ...... மருகோனே
காங்கிசை மிக்க மறக்கொடி வெற்றியில்
வாங்கிய முக்கனி சர்க்கரை மொக்கிய
கான்கனி முற்கியல் கற்பக மைக்கரி ...... இளையோனே
தேந்தினை வித்தினர் உற்றிட வெற்றிலை
வேங்கை மரத்தெழிலைக் கொடு நிற்பவ
தேன் சொலியைப் புணரப் புனமுற்றுறைகுவை வானம்
தீண்டு கழைத்திரள் உற்றது துற்றிடு
வேங்கைதனில் குவளைச் சுனை சுற்றலர்
சேர்ந்த திருத்தணிகைப் பதி வெற்புறை ...... பெருமாளே.
திருப்பாடல் 28:
தானா தனத்ததன தானா தனத்ததன
தானா தனத்ததன ...... தனதான
கூர்வேல் பழித்த விழியாலே மருட்டிமுலை
கோடால் அழைத்துமலர் அணைமீதே
கோபா இதழ்ப்பருக மார்போடணைத்து கணை
கோல்போல் சுழற்றியிடை ...... உடை நாணக்
கார்போல் குழல்சரியவே வாயதட்டிஇரு
காதோலை இற்றுவிழ ...... விளையாடும்
காமா மயர்க்கியர்கள் ஊடே களித்துநமன்
கானூர் உறைக் கலகம் ஒழியாதோ
வீராணம் வெற்றி முரசோடே தவில்திமிலை
வேதாகமத்தொலிகள் ...... கடல்போல
வீறாய் முழக்கவரும் சூரார் இறக்கவிடும்
வேலா திருத்தணியில் உறைவோனே
மாரோன் இறக்க நகை தாதா திருச்செவியில்
மாபோதகத்தை அருள் ...... குருநாதா
மாலோன் அளித்த வளியார்மால் களிப்பவெகு
மாலோடணைத்து மகிழ் ...... பெருமாளே
திருப்பாடல் 29:
தந்து தானன தனதன தனதன
தந்து தானன தனதன தனதன
தந்து தானன தனதன தனதன ...... தனதான
கொந்துவார் குரவடியினும் அடியவர்
சிந்தை வாரிஜ நடுவினும் நெறிபல
கொண்ட வேதநன் முடியினும் மருவிய ...... குருநாதா
கொங்கிலேர்தரு பழநியில் அறுமுக
செந்தில் காவல தணிகையில் இணையிலி
கொந்து காவென மொழிதர வருசமய விரோத
தந்த்ரவாதிகள் பெறஅரியது பிறர்
சந்தியாதது தனதென வருமொரு
சம்ப்ரதாயமும் இதுவென உரைசெய்து ...... விரைநீபச்
சஞ்சரீகரிகர முரல் தமனிய
கிண்கிணீமுக இதபத யுகமலர்
தந்த பேரருள் கனவிலும் நனவிலும் ...... மறவேனே
சிந்து வாரமும் இதழியும் இளநவ
சந்த்ர ரேகையும் அரவமும் அணிதரு
செஞ்சடாதரர் திருமகன் எனவரு ...... முருகோனே
செண்பகாடவியினும் இதணினும் உயர்
சந்தனாடவியினும்உறை குறமகள்
செம்பொனூபுர கமலமும் வளையணி ...... புதுவேயும்
இந்து வாண்முக வனசமு(ம்) ம்ருகமத
குங்குமாசல யுகளமும் மதுரித
இந்தளாம்ருத வசனமும் முறுவலும் அபிராம
இந்த்ர கோபமும் மரகத வடிவமும்
இந்த்ர சாபமும் இருகுழையொடு பொரும்
இந்த்ர நீலமும் மடலிடைஎழுதிய ...... பெருமாளே.
திருப்பாடல் 30:
தனத்தன தனத்தம் தனத்தன தனத்தம்
தனத்தன தனத்தம் ...... தனதான
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
செகுத்தவர் உயிர்க்கும் ...... சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென்றறிவோம் யாம்
நினைத்ததும் அளிக்கும் மனத்தையும் உருக்கும்
நிசிக்கருஅறுக்கும் ...... பிறவாமல்
நெருப்பையும் எரிக்கும் பொருப்பையும் மிடிக்கும்
நிறைப் புகழுரைக்கும் ...... செயல் தாராய்
தனத்தன தனத்தம் திமித்திமி திமித்திம்
தகுத்தகு தகுத்தம் ...... தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்கும்
தளத்துடன் நடக்கும் ...... கொடுசூரர்
சினத்தையும் உடல்சங்|கரித்த மலைமுற்றும்
சிரித்தெரி கொளுத்தும் ...... கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணியிருக்கும் ...... பெருமாளே.
திருப்பாடல் 31:
தனத்த தத்தன தனதன தனதன
தனத்த தத்தன தனதன தனதன
தனத்த தத்தன தனதன தனதன ...... தனதான
சினத் திலத்தினை சிறுமணல் அளவுடல்
செறித்ததெத்தனை சிலைகடலினில் உயிர்
செனித்ததெத்தனை திரள் கயலெனபல ...... அதுபோதா
செமித்ததெத்தனை மலைசுனை உலகிடை
செழித்ததெத்தனை சிறுதன மயல்கொடு
செடத்தில்எத்தனை நமனுயிர் பறி கொள்வதளவேதோ
மனத்திலெத்தனை நினை கவடுகள்!குடி
கெடுத்ததெத்தனை மிருகமதென உயிர்
வதைத்ததெத்தனை அளவிலை விதிகரம் ஒழியாமல்
வகுத்ததெத்தனை மசகனை முருடனை
மடைக் குலத்தனை மதியழி விரகனை
மலர்ப் பதத்தினில் உருகவும் இனியருள் ...... புரிவாயே
தனத் தனத்தன தனதன தனதன
திமித் திமித்திமி திமிதிமி திமிதிமி
தகுத் தகுத்தகு தகுதகு தகுதகு ...... தகுதீதோ
தரித் தரித்தரி தரிரிரி ரிரிரிரி
தடுட் டுடுட்டுடு டடுடுடு டுடுடுடு
தமித் தமத்தள தமருக விருதொலி ...... கடல்போலச்
சினத்தமர்க்கள செருதிகழ் குருதிய
திமிழ்த்திடக் கரி அசுரர்கள் பரிசிலை
தெறித்திடக் கழு நரிதின நிணமிசை ...... பொரும்வேலா
செழிக்கும் உத்தம சிவசரணர்கள் தவ
முநிக்கணத்தவர் மதுமலர் கொடுபணி
திருத்தணிப்பதி மருவிய குறமகள் ...... பெருமாளே.
திருப்பாடல் 32:
தனன தனனத் தனன தனனத்
தனன தனனத் ...... தனதான
சொரியும் முகிலைப் பதும நிதியைச்
சுரபி தருவைச் ...... சமமாகச்
சொலியும் மனமெள் தனையும் நெகிழ்வில்
சுமடர் அருகுற்றியல் வாணர்
தெரியும் அருமைப் பழைய மொழியைத்
திருடி நெருடிக் ...... கவிபாடித்
திரியும் மருள்விட்டுனது குவளைச்
சிகரி பகரப் ...... பெறுவேனோ
கரிய புருவச் சிலையும் வளையக்
கடையில் விடமெத்திய நீலக்
கடிய கணை பட்டுருவ வெருவிக்
கலைகள் பலபட்டன !கானிற்
குரிய குமரிக்கபயம் என!நெக்
குபய சரணத்தினில் வீழா
உழையின் மகளைத் தழுவ !மயலுற்
றுருகு முருகப் ...... பெருமாளே.
திருப்பாடல் 33:
தாத்தன தத்தன தானன தானன
தாத்தன தத்தன தானன தானன
தாத்தன தத்தன தானன தானன ...... தனதான
தாக்கமருக்கொரு சாரையை வேறொரு
சாக்ஷியறப் பசியாறியை நீறிடு
சாஸ்த்ர வழிக்கதி தூரனை வேர்விழு ...... தவமூழ்கும்
தாற்பர்யம் அற்றுழல் பாவியை நாவலர்
போல் பரிவுற்றுனையே கருதாதிகல்
சாற்று தமிழ்க்குரை ஞாளியை நாள்வரை ...... தடுமாறிப்
போக்கிடமற்ற வ்ருதாவனை ஞானிகள்
போற்றுதலற்ற துரோகியை மாமருள்
பூத்த மலத்ரய பூரியை நேரிய ...... புலையேனைப்
போக்கிவிடக் கடனோ அடியாரொடு
போய்ப் பெறுகைக்கிலையோ கதியானது
போர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயிலாஅருள் ...... புரிவாயே
மூக்கறை மட்டை மகாபல காரணி
சூர்ப்பநகைப் படு மூளி உதாசனி
மூர்க்க குலத்தி விபீஷணர் சோதரி ...... முழுமோடி
மூத்தவரக்கனி !ராவணனோடியல்
பேற்றிவிடக் கமலாலய சீதையை
மோட்டன் வளைத்தொரு தேர்மிசையே கொடு ...... முகிலேபோய்
மாக்கன சித்திர கோபுர நீள்படை
வீட்டிலிருத்திய நாளவன் வேரற
மார்க்க முடித்த விலாளிகள் நாயகன் ...... மருகோனே
வாச்சிய மத்தள பேரிகை போல்மறை
வாழ்த்த மலர்க்கழு நீர்தரு நீள்சுனை
வாய்த்த திருத்தணி மாமலை மேவிய ...... பெருமாளே.
திருப்பாடல் 34:
தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான
திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள்
வறட்டு மோடியில் நித்த நடிப்பவர்
சிறக்க மேனிஉலுக்கி மடக்குகண் ...... வலையாலே
திகைத்துளாவி கரைத்து மனத்தினில்
இதத்தையோட விடுத்து மயக்கிடு
சிமிட்டு காம விதத்திலும் உட்பட ...... அலைவேனோ
தரித்து நீறுபிதற்றிடும் பித்தனும்
இதத்து மாகுடிலைப் பொருள் சொற்றிடு
சமர்த்த பால எனப்புகழ் பெற்றிடு ...... முருகோனே
சமப்ரவீண மதித்திடு புத்தியில்
இரக்கமாய்வரு தற்பர சிற்பர
சகத்ர யோக விதக்ஷண தெக்ஷிண ...... குருநாதா
வெருட்டு சூரனை வெட்டி ரணப்பெலி
களத்திலே கழுதுக்கிரை இட்டிடர்
விடுத்த கூளிகள் தித்திகு தித்தென ...... விளையாட
விதித்த வீரசமர்க்கள ரத்தமும்
இரற்றியோட வெகு ப்ரளயத்தினில்
விலக்கி வேல்செருகிட்டுயிர் மொக்கிய ...... மறவோனே
பெருக்கமோடு சரித்திடு மச்சமும்
உளத்தின் மாமகிழ் பெற்றிட உற்றிடு
பிளப்பு வாயிடை முப்பொழுதத்தும்ஒர் ...... கழுநீரின்
பிணித்த போது வெடித்து ரசத்துளி
கொடுக்கும் ஓடை மிகுத்த திருத்தணி
பிறக்க மேவுற அத்தலம்உற்றுறை ...... பெருமாளே.
திருப்பாடல் 35:
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தனனத் ...... தனதான
துப்பார் அப்பா|டல்தீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக் ...... குணமோகம்
துற்றாயப் பீறல் தோலிட்டே
சுற்றா மதனப் ...... பிணிதோயும்
இப்பாவக் காயத்தாசைப்!பா
டெற்றே உலகில் ...... பிறவாதே
எத்தார் வித்தாரத்தே கிட்டா
எட்டா அருளைத் ...... தரவேணும்
தப்பாமல் பாடிச் சேவிப்பார்
தத்தாம் வினையைக் ...... களைவோனே
தற்காழிச்சூர் செற்றாய் !மெய்ப்போ
தத்தாய் தணிகைத் ...... தனிவேலா
அப்பாகைப் பாலைப்போல் சொல்!கா
வல் பாவை தனத்தணைவோனே
அத்தா நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.
திருப்பாடல் 36:
தத்தனாத் தனன தத்தனாத் தனன
தத்தனாத் தனன ...... தனதான
தொக்கறாக் குடில் அசுத்தமேற்ற சுக
துக்கமாற் கடம் முமலமாயை
துற்றகாற் பதலை சொற்படாக் குதலை
துப்பிலாப் பலசமய நூலைக்
கைக்கொளாக் கதறு கைக்கொள்ஆக்கை!அவ
லப் புலால் தசை குருதியாலே
கட்டு கூட்டருவருப்பு வேட்டுழல
சட்டவாக்கழிவதொரு நாளே
அக்கராப் பொடியின் மெய்க்கிடாக் குரவர்
அர்ச்சியாத் தொழு முநிவனாய
அப்ப போர்ப் பனிரு வெற்ப பூத்தணியல்
வெற்ப பார்ப்பதி நதி குமாரா
இக்கணோக்குறில் நிருத்த நோக்குறு!த
வத்தினோர்க்குதவும் இளையோனே
எத்திடார்க்கரிய முத்த பாத்தமிழ்!கொ
டெத்தினார்க்கெளிய ...... பெருமாளே.
திருப்பாடல் 37:
தனத்த தத்தன தனதன தனதன
தனத்த தத்தன தனதன தனதன
தனத்த தத்தன தனதன தனதன ...... தனதான
தொடத்துளக்கிகள் அபகட நினைவிகள்
குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள்
சுதைச் சிறுக்கிகள் குசலிகள் அசலிகள் ...... முழுமோசம்
துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள்
முழுப்புரட்டிகள் நழுவிகள் மழுவிகள்
துமித்த மித்திரர் விலைமுலை இனவலை ...... புகுதாமல்
அடைத்தவர்க்கியல் சரசிகள் விரசிகள்
தரித்த வித்ரும நிறமென வரவுடன்
அழைத்து சக்கிர கிரிவளை படிகொடு ...... விளையாடி
அவத்தை தத்துவம் அழிபட இருளறை
விலக்கு வித்தொரு சுடரொளி பரவ!ந
லருள் புகட்டி உனடியிணை அருளுவதொருநாளே
படைத்தனைத்தையும் வினையுற நடனொடு
துடைத்த பத்தினி மரகத சொருபியொர்
பரத்தின்உச்சியில் நடநவில் உமையருள் இளையோனே
பகைத்தரக்கர்கள் யமனுலகுறஅமர்
தொடுத்த சக்கிர வளைகரம் அழகியர்
படிக்கடத்தையும் வயிறடை நெடியவர் ...... மருகோனே
திடுக்கிடக்கடல் அசுரர்கள் முறிபட
கொளுத்திசைக்கிரி பொடிபட சுடரயில்
திருத்தி விட்டொரு நொடியினில் வலம்வரு ...... மயில்வீரா
தினைப்புனத்திரு தனகிரி குமரிநல்
குறத்தி முத்தொடு சசிமகளொடுபுகழ்
திருத்தணிப்பதி மலைமிசை நிலைபெறு ...... பெருமாளே.
திருப்பாடல் 38:
தனதான தனத்தன தான தனதான தனத்தன தான
தனதான தனத்தன தான ...... தனதான
நிலையாத சமுத்திரமான சமுசார துறைக்கணின் மூழ்கி
நிசமானதெனப் பல பேசி ...... அதனூடே
நெடுநாளும் உழைப்புளதாகி பெரியோர்கள் இடைக்கரவாகி
நினைவால் நினடித்தொழில் பேணி ...... துதியாமல்
தலையான உடற்பிணியூறி பவநோயின் அலைப்பல வேகி
சலமான பயித்தியமாகி ...... தடுமாறித்
தவியாமல் பிறப்பையும் நாடி அதுவேரை அறுத்துனையோதி
தலைமீதில் பிழைத்திடவே நினருள் தாராய்
கலியாண சுபுத்திரனாக குறமாது தனக்கு விநோத
கவினாரு புயத்தில்உலாவி ...... விளையாடிக்
களிகூரும் உனைத்துணை தேடும் அடியேனை சுகப்படவே வை
கடனாகும் இதுக் கனமாகும் ...... முருகோனே
பலகாலும் உனைத் தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
படிமீது துதித்துடன் வாழ ...... அருள்வேளே
பதியான திருத்தணி மேவு சிவலோகம் எனப் பரிவேறு
பவரோக வயித்தியநாத ...... பெருமாளே.
திருப்பாடல் 39:
தனத்த தத்தனத் ...... தனதான
தனத்த தத்தனத் ...... தனதான
நினைத்ததெத்தனையில் ...... தவறாமல்
நிலைத்த புத்திதனைப் ...... பிரியாமல்
கனத்த தத்துவ முற்றழியாமல்
கதித்த நித்திய சித்தருள்வாயே
மனித்தர் பத்தர் தமக்கெளியோனே
மதித்த முத்தமிழில் ...... பெரியோனே
செனித்த புத்திரரில் ...... சிறியோனே
திருத்தணிப்பதியில் ...... பெருமாளே
திருப்பாடல் 40:
தனன தானனம் தனன தானனம்
தனன தானனம் ...... தனதான
பகல்இராவினும் கருவியாலனம்
பருகி ஆவிகொண்டுடல் பேணிப்
பழைய வேதமும் புதிய நூல்களும்
பலபுராணமும் ...... சிலஓதி
அகல நீளம்என்றளவு கூறரும்
பொருளிலே அமைந்தடைவோரை
அசடர் மூகர் என்றவலமே!மொழிந்
தறிவிலேன் அழிந்திடலாமோ
சகல லோகமும் புகல நாள்தொறும்
சறுகிலாத செங்கழுநீரும்
தளவு நீபமும் புனையு மார்பதென்
தணிகை மேவு செங்கதிர்வேலா
சிகர பூதரம் தகர நான்முகன்
சிறுகு வாசவன் ...... சிறைமீளத்
திமிர சாகரம் கதற மாமரம்
சிதற வேல்விடும் ...... பெருமாளே.
திருப்பாடல் 41:
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் ...... தனதான
பருத்தபல் சிரத்தினைக் குருத்திறல் கரத்தினைப்
பரித்தவப் பதத்தினைப் ...... பரிவோடே
படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத் திடத்தினைப்
பசிக்குடல் கடத்தினைப் ...... பயமேவும்
பெருத்த பித்துருத்தனைக் கிருத்திமத் துருத்தியைப்
பிணித்தமுக் குறத்தொடைப் ...... புலனாலும்
பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக்
குறிக் கருத்தெனக்களித்தருள்வாயே
கருத்தில்உற்றுரைத்த பத்தரைத் தொறுத் திருக்கரைக்
கழித்த மெய்ப் பதத்தில் வைத்திடு வீரா
கதித்தநல் தினைப்புனக் கதித்தநல் குறத்தியைக்
கதித்தநல் திருப்புயத்தணைவோனே
செருத்தெறுத்தெதிர்த்த முப்புரத்துரத்தரக்கரைச்
சிரித்தெரித்த நித்தர்பொற் ...... குமரேசா
சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க்குயர்த் திசைச்
சிறப்புடைத் திருத்தணிப் ...... பெருமாளே.
திருப்பாடல் 42:
தனன தத்தன தத்தன தத்தன
தனன தத்தன தத்தன தத்தன
தனன தத்தன தத்தன தத்தன ...... தனதான
பழமை செப்பி அழைத்திதமித்துடன்
முறை மசக்கி அணைத்து நகக்குறி
படஅழுத்தி முகத்தை முகத்துற ...... உறவாடிப்
பதறி எச்சிலை இட்டு மருத்திடு
விரவு குத்திர வித்தை விளைப்பவர்
பலவிதத்திலும் அற்பரெனச் சொலு ...... மடமாதர்
அழிதொழிற்கு விருப்பொடு நத்திய
அசடனைப் பழியுற்ற அவத்தனை
அடைவு கெட்ட புரட்டனை முட்டனை ...... அடியேனை
அகில சத்தியும் எட்டுறு சித்தியும்
எளிதெனப்பெரு வெட்ட வெளிப்படும்
அருண பொற்பதம் உற்றிட வைப்பதும் ஒருநாளே
குழிவிழிப்பெரு நெட்டலகைத் திரள்
கரணமிட்டு நடித்தமிதப்படு
குலிலி இட்டகளத்தில் எதிர்த்திடும் ஒருசூரன்
குருதி கக்கியதிர்த்து விழப்பொரு
நிசிசரப்படை பொட்டெழ விக்ரம
குலிச சத்தியை விட்டருள் கெர்ச்சித ...... மயில்வீரா
தழையுடுத்த குறத்தி பதத்துணை
வருடி வட்டமுகத் திலதக்குறி
தடவி வெற்றி கதித்த முலைக் குவடதன்மீதே
தரள பொற்பணி கச்சு விசித்திரு
குழை திருத்தி அருத்தி மிகுத்திடு
தணிமலைச் சிகரத்திடை உற்றருள் ...... பெருமாளே.
திருப்பாடல் 43:
தனதன தத்தத் தனதன தத்தத்
தனதன தத்தத் ...... தனதான
புருவ நெறித்துக் குறு வெயர்வுற்றுப்
புளகித வட்டத் ...... தனமானார்
பொருவிழியில் பட்டவரொடு கட்டிப்
புரளும் அசட்டுப் ...... புலையேனைக்
கருவிழியுற்றுக் குருமொழியற்றுக்
கதிதனை விட்டிட்டிடு தீயக்
கயவனை வெற்றிப் புகழ்திகழ் பத்மக்
கழல்கள் துதிக்கக் ...... கருதாதோ
செருஅசுரப் பொய்க் குலமது கெட்டுத்
திரைகடல் உட்கப் ...... பொரும்வேலா
தினைவனம் உற்றுக் குறவர் மடப்பைக்
கொடிதன வெற்பைப் ...... புணர்மார்பா
பெருகிய நித்தச் சிறுபறை கொட்டிப்
பெரிகை முழக்கப் ...... புவிமீதே
ப்ரபலமுள் சுத்தத் தணிமலை உற்றுப்
ப்ரியமிகு சொக்கப் ...... பெருமாளே.
திருப்பாடல் 44:
தானனத் தத்த தத்த தானனத் தத்த தத்த
தானனத் தத்த தத்த ...... தனதான
பூசலிட்டுச் சரத்தை நேர்கழித்துப் பெருத்த
போர்விடத்தைக் கெடுத்து ...... வடிகூர்வாள்
போலமுட்டிக் குழைக்குள் ஓடிவெட்டித் தொளைத்து
போகமிக்கப் பரிக்கும் ...... விழியார்மேல்
ஆசை வைத்துக் கலக்க மோகமுற்றுத் !துயர்க்கு
ளாகி மெத்தக் களைத்துள் அழியாமே
ஆரணத்துக் கணத்து நாண்மலர்ப் பொற்பதத்தை
யான் வழுத்திச் சுகிக்க ...... அருள்வாயே
வாசமுற்றுத் தழைத்த தாளிணைப் பத்தரத்த
மாதர்கள் கட்சிறைக்குள் அழியாமே
வாழ்வுறப் புக்கி ரத்ன ரேகையொக்கச் சிறக்கு
மாமயில் பொற் கழுத்தில் ...... வரும்வீரா
வீசுமுத்துத் தெறிக்க ஓலை புக்குற்றிருக்கும்
வீறுடைப் பொற்குறத்தி ...... கணவோனே
வேலெடுத்துக் கரத்தில் நீலவெற்பில் தழைத்த
வேளெனச் சொல் கருத்தர் ...... பெருமாளே.
திருப்பாடல் 45:
தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் ...... தனதான
பெருக்க உபாயம் கருத்துடையோர் தம்
ப்ரபுத் தனபாரங்களிலே!சம்
ப்ரமத்துடன்நாளும் ப்ரமித்திருள் கூரும்
ப்ரியக் கடலூடும் ...... தணியாத
கருக் கடலூடும் கதற்றும் அநேகம்
கலைக் கடலூடும் ..... சுழலாதே
கடப்பலர் சேர்கிண்கிணி ப்ரபை வீசும்
கழல்புணை நீ தந்தருள்வாயே
தருக்கிய வேதன் சிறைப்பட நாளும்
சதுர்த்தச லோகங்களும் வாழச்
சமுத்திரம்ஏழும் குலக்கிரிஏழும்
சளப்பட மாவும் ...... தனிவீழத்
திருக்கையில் வேல்ஒன்றெடுத்தமராடும்
செருக்கு மயூரம்தனில் வாழ்வே
சிறப்பொடு ஞானந் தமிழ்த்ரய நீடும்
திருத்தணி மேவும் ...... பெருமாளே.
திருப்பாடல் 46:
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
பொரியப் பொரியப் பொலிமுத்து வடத்
துகளில் புதையத் ...... தனமீதே
புரளப் புரளக் கறுவித் தறுகண்
பொருவில் சுறவக் ...... கொடிவேள் தோள்
தெரிவைக்கரிவைப் பரவைக் குருகிச்
செயலற்றனள் கற்பழியாதே
செறிவுற்றணையில் துயிலுற்றருமைத்
தெரிவைக்குணர்வைத் ...... தரவேணும்
சொரி கற்பக நற்பதியைத் தொழுகைச்
சுரருக்குரிமைப் ...... புரிவோனே
சுடர்பொன் கயிலைக் கடவுட்கிசையச்
சுருதிப் பொருளைப் ...... பகர்வோனே
தரிகெட்டசுரப் படை கெட்டொழியத்
தனி நெட்டயிலைத் ...... தொடும்வீரா
தவளப் பணிலத் தரளப் பழனத்
தணிகைக் குமரப் ...... பெருமாளே.
திருப்பாடல் 47:
தனனத் தந்ததனத் தனனத் தந்ததனத்
தனனத் தந்ததனத் ...... தனதான
பொருவிக் கந்தொடடர்ச் செருவிக்கன் தொடும்இப்
புதுமைப் புண்டரிகக் ...... கணையாலே
புளகக் கொங்கையிடத்திளகக் கொங்கையனல்
பொழியத் தென்றல் துரக்குதலாலே
தெருவில் பெண்கள்மிகக் கறுவிச் சண்டையிடத்
திரியத் திங்கள்உதிப்பதனாலே
செயலற்றிங்கணையில் துயிலற்றஞ்சியயர்த்
தெரிவைக்குன் குரவைத் ...... தரவேணும்
அருவிக் குன்றடையப் பரவிச் !செந்தினைவித்
தருமைக் குன்றவருக்கெளியோனே
அசுரர்க்கங்கயல் பட்டமரர்க் !கண்டமளித்
தயில் கைக் கொண்ட திறல் ...... குமரேசா
தரு வைக்கும்பதியில் திருவைச் சென்றணுகித்
தழுவிக் கொண்ட புயத் ...... திருமார்பா
தரளச் சங்குவயல் திரளில் தங்குதிருத்
தணிகைச் செங்கழநிப் ...... பெருமாளே
திருப்பாடல் 48:
தத்தன தத்தன தத்தன தத்தன
தத்தன தத்தன ...... தானா
பொற்குடம்ஒத்த குயத்தை அசைப்பவர்
கைப்பொருள் புக்கிடவே தான்
புட்குரல் விச்சை பிதற்று மொழிச்சியர்
பொட்டணி நெற்றியர்ஆனோர்
அற்ப இடைக்கலை சுற்றி நெகிழ்ப்பவர்
அற்பர் அமட்டைகள் ...... பால்சென்று
அக்கண் வலைக்குள் அகப்படு புத்தியை
அற்றிட வைத்தருள்வாயே
கொக்கரை சச்சரி மத்தளியொத்து
இடக்கை முழக்கொலிஆலக்
கொக்கிறகக்கர மத்தம் அணிக்கருள்
குத்த தணிக் குமரேசா
சர்க்கரை முப்பழ ஒத்தமொழிச்சி!கு
றத்தி தனக்கிரி ...... மேலே
தைக்கு மனத்த சமர்த்த அரக்கர்!த
லைக்குலை கொத்திய ...... வேளே.
திருப்பாடல் 49:
தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த தத்த
தத்த தத்த தத்த தத்த ...... தனதான
பொற்பதத்தினைத் துதித்து நற்பதத்திலுற்ற பத்தர்
பொற்புரைத்து நெக்குருக்க ...... அறியாதே
புத்தகப் பிதற்றை விட்டு வித்தகத்துனைத் துதிக்க
புத்தியில் கலக்கமற்று ...... நினையாதே
முற்படத் தலத்துதித்து பிற்படைத்த கிர்த்யமுற்றி
முற்கடைத்த வித்து நித்த உழல்வேனை
முட்ட இக்கடைப் பிறப்பின் உட்கிடப்பதைத் தவிர்த்து
முத்தி சற்றெனக்களிப்பதொருநாளே
வெற்பளித்த தற்பரைக்கிடப்புறத்தை உற்றளித்த
வித்தகத்தர் பெற்ற கொற்ற ...... மயில்வீரா
வித்தை தத்வ முத்தமிழ்ச்சொல் அத்த சத்தம் வித்தரிக்கு
மெய்த் திருத்தணிப் பொருப்பில் உறைவோனே
கற்பகப் புனக்குறத்தி கச்சடர்த்த சித்ரமுற்ற
கற்புரத் திருத்தனத்தில் அணைவோனே
கைத்தரக்கர் கொத்து கச்சினத்து வஜ்ரனுக்கமைத்த
கைத் தொழுத்தறித்து விட்ட ...... பெருமாளே.
திருப்பாடல் 50:
தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் ...... தனதான
மருக்குல மேவும் குழற்கனி வாய்வெண்
மதிப்பிளவாகும் ...... நுதலார்தம்
மயக்கினிலே நண்புறப் படுவேனுன்
மலர்க்கழல் பாடும் ...... திறநாடாத்
தருக்கன்உதாரன் துணுக்கிலி லோபன்
சமத்தறியா அன்பிலி மூகன்
தலத்தினிலே வந்துறப்பணியாதன்
தனக்கினியார்தம் ...... சபைதாராய்
குருக்குல ராஜன் தனக்கொரு தூதன்
குறள்பெல மாயன் ...... நவநீதம்
குறித்தயில் நேயன் திருப்பயில் மார்பன்
குணத்ரய நாதன் ...... மருகோனே
திருக்குள நாளும் பலத்திசை மூசும்
சிறப்பதுறா எண்திசையோடும்
திரைக்கடல் சூழும் புவிக்குயிராகும்
திருத்தணி மேவும் ...... பெருமாளே.
திருப்பாடல் 51:
தனன தத்தன தனன தத்தன
தனன தத்தன ...... தனதான
மலை முலைச்சியர் கயல் விழிச்சியர்
மதிமுகத்தியர் அழகான
மயில் நடைச்சியர் குயில் மொழிச்சியர்
மனதுருக்கிகள் அணைமீதே
கலைநெகிழ்த்தியே உறவணைத்திடு
கலவியில் துவள் ...... பிணிதீராக்
கசடனைக் குண அசடனைப் புகல்
கதியில் வைப்பதும் ஒருநாளே
குலகிரிக்குலம் உருவ விட்டமர்
குலவு சித்திர ...... முனைவேலா
குறவர் பெற்றிடு சிறுமியைப் புணர்
குமர சற்குண ...... மயில்வீரா
தலமதிகல்புகல் அமரருற்றிடர்
தனையகற்றிய ...... அருளாளா
தருநிரைத்தெழு பொழில் மிகுத்திடு
தணி மலைக்குயர் ...... பெருமாளே.
திருப்பாடல் 52:
தனத்தன தத்தன தனதன தனதன
தனத்தன தத்தன தனதன தனதன
தனத்தன தத்தன தனதன தனதன ...... தனதான
முகத்தை மினுக்கிகள் அசடிகள் கபடிகள்
விழித்து மருட்டிகள் கெருவிகள் திருடிகள்
மொழிக்குள் மயக்கிகள் வகைதனில் நகைதனில் ...... விதமாக
முழித்து மயல்கொளும் அறிவிலி நெறியிலி
புழுக்குடலைப் பொருள் எனமிக எணியவர்
முயக்கம்அடுத்துழி தரும் அடியவன்இடர் ...... ஒழிவாக
மிகுத்தழ கைப்பெறும் அறுமுக சரவண
புயத்திளகிக் கமழ் நறைமலர் தொடைமிக
விசைக் கொடுமைப் பெறு மரகத கலபியும் ...... வடிவேலும்
வெளிப்படெனக்கினி இரவொடு பகலற
திருப்பதியப் புகழ் அமுதியல் கவிசொலி
விதித் தனெழுத்தினை தரவரும் ஒருபொருள் அருளாயோ
புகைத்தழலைக் கொடு திரிபுரம் எரிபட
நகைத்தவருக்கிடம் உறைபவள் வலைமகள்
பொருப்பில் இமக்கிரி பதிபெறும் இமையவள் அபிராமி
பொதுற்று திமித்திமி நடமிடு பகிரதி
எழுத்தறி ருத்திரி பகவதி கவுரிகை
பொருள் பயனுக்குரை அடுகிய சமைபவள் ...... அமுதாகச்
செகத்தை அகட்டிடு நெடியவர் கடையவள்
அறத்தை வளர்த்திடு பரசிவை குலவதி
திறத் தமிழைத்தரு பழையவள் அருளிய ...... சிறியோனே
செருக்கும் அரக்கர்கள் பொடிபட வடிவுள
கரத்தில் அயில்கொடு பொருதிமையவர் பணி
திருத்தணி பொற்பதி தனில்மயில் நடவிய ...... பெருமாளே.
திருப்பாடல் 53:
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
முகிலும் இரவியும் முழுகதிர் தரளமும்
முடுகு சிலைகொடு கணைவிடு மதனனும்
முடிய ஒருபொருள் உதவிய புதல்வனும் எனநாடி
முதிய கனனென தெய்வதரு நிகரென
முதலை மடுவினில் அதவிய புயலென
முகமும் அறுமுகம் உடையவன் இவனென ...... வறியோரைச்
சகல பதவியும் உடையவர் இவரென
தனிய தநுவல விஜயவன் இவனென
தபனன் வலம்வரு கிரிதனை நிகரென ...... இசைபாடிச்
சயில பகலவர் இடைதொறு நடைசெயும்
இரவு தவிரவெ இருபதம் அடையவெ
சவித அடியவர் தவமதில் வரவருள் ...... புரிவாயே
அகில புவனமும் இடைவினில் உதவிய
இமய கிரிமயில் குலவரை தநுவென
அதிகை வருபுர நொடியினில் எரிசெய்த ...... அபிராமி
அமரும் இடன்அனல் எனுமொரு வடிவுடை
அவனில் உரையவன் முதுதமிழ் உடையவன்
அரியொடயன் உலகரியவன் நடநவில் ...... சிவன்வாழ்வே
திகிரி நிசிசரர் தடமுடி பொடிபட
திரைகள் எறிகடல் சுவறிட களமிசை
திரடு குறடுகள் புரள்வெகு குருதிகள் ...... பெருகாறாச்
சிகர கிரிநெரி படபடை பொருதருள்
திமிர தினகர குருபர இளமயில்
சிவணி வருமொரு தணிகையில் நிலைதிகழ் ...... பெருமாளே.
திருப்பாடல் 54:
தனத்த தனதன தனத்த தனதன
தனத்த தனதன ...... தனதான
முடித்த குழலினர் வடித்த மொழியினர்
முகத்தில் இலகிய ...... விழியாலும்
முலைக் கிரிகள்மிசை அசைத்த துகிலினும்
இளைத்த இடையினும் ...... மயலாகிப்
படுத்த அணைதனில் அணைத்த அவரொடு
படிக்குள் அநுதினம் உழலாதே
பருத்த மயில்மிசை நினைத்த பொழுதுன
பதத்து மலரிணை ...... அருள்வாயே
துடித்து தசமுகன் முடித்தலைகள் விழ
தொடுத்த சரம்விடு ...... ரகுராமன்
துகைத்திவுலகையொர் அடிக்குள் அளவிடு
துலக்க அரிதிரு ...... மருகோனே
தடத்துள்உறைகயல் வயற்குள் எதிர்படு
தழைத்த கதலிகள் அவை சாயத்
தருக்கும் எழிலுறு திருத்தணிகையினில்
தழைத்த சரவண ...... பெருமாளே.
திருப்பாடல் 55:
தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததன
தத்தத் தனத்த ...... தனதான
முத்துத் தெறிக்க வளரிக்குச் சிலைக்கை மதன்
முட்டத் தொடுத்த ...... மலராலே
முத்தத் திருச்சலதி முற்றத்துதித்தியென
முற்பட்டெறிக்கு ......நிலவாலே
எத் தத்தையர்க்கும் இதமிக்குப் பெருக்கம்அணி
இப்பொற் கொடிச்சி ...... தளராதே
எத்திக்கும் உற்றபுகழ் வெற்றித் திருத்தணியில்
இற்றைத் தினத்தில் ...... வரவேணும்
மெத்தச் சினத்துவட திக்குக் குலச்சிகர
வெற்பைத் தொளைத்த ...... கதிர்வேலா
மெச்சிக் குறத்திதன மிச்சித்தணைத்துருகி
மிக்குப் பணைத்த ...... மணிமார்பா
மத்த ப்ரமத்தர்அணி மத்தச்சடைப் பரமர்
சித்தத்தில் வைத்த ...... கழலோனே
வட்டத் திரைக் கடலில் மட்டித்தெதிர்த்தவரை
வெட்டித் துணித்த ...... பெருமாளே.
திருப்பாடல் 56:
தனதனன தனதந்த தனதனன தனதந்த
தனதனன தனதந்த ...... தனதான
முலைபுளகம் எழஅங்கை மருவுசரி வளைகொஞ்ச
முகிலளகம் அகில்பொங்க ...... அமுதான
மொழிபதற அருமந்த விழிகுவிய மதிகொண்ட
முகம் வெயர்வு பெற மன்றல் அணையூடே
கலைநெகிழ வளர்வஞ்சி இடைதுவள உடலொன்று
படவுருகி இதயங்கள் ...... ப்ரியமே கூர்
கலவிகரை அழியின்ப அலையில்அலை படுகின்ற
கவலைகெட நினதன்பு ...... பெறுவேனோ
அலையெறியும் எழில்சண்ட உததி வயிறழல் மண்ட
அதிரவெடி படஅண்டம் இமையோர்கள்
அபயமென நடுநின்ற அசுரர்பட அடியுண்டு
அவர்கள்முனை கெடநின்று ...... பொரும்வேலா
தலைமதிய நதிதும்பை இளஅறுகு கமழ் கொன்றை
சடைமுடியில் அணிகின்ற ...... பெருமானார்
தருகுமர விடஐந்து தலையரவு தொழுகின்ற
தணிமலையில் உறைகின்ற ...... பெருமாளே.
திருப்பாடல் 57:
தனதனன தனதனன தத்தத்த தத்ததன
தனதனன தனதனன தத்தத்த தத்ததன
தனதனன தனதனன தத்தத்த தத்ததன ...... தனதான
மொகுமொகென நறைகொள்மலர் வற்கத்தில் அன்புடைய
முளரிமயில் அனையவர்கள் நெய்த்துக் கறுத்துமழை
முகிலனைய குழல்சரிய ஒக்கக் கனத்து வளர் அதிபார
முலைபுளகம் எழவளைகள் சத்திக்க முத்தமணி
முறுவலிள நிலவுதர மெத்தத் தவித்தசில
மொழிபதற இடைதுவள வட்டச்சிலைப் புருவ ...... இணைகோட
அகில்மிருக மதசலிலம் விட்டுப் பணித்தமலர்
அமளிபட ஒளிவிரவு ரத்நப்ரபைக் !குழையொ
டமர்பொருத நெடியவிழி செக்கச் சிவக்கமர ...... மதநீதி
அடல்வடிவு நலமிதனில் மட்கச் செருக்கிஉளம்
உருகநரை பெருகவுடல் ஒக்கப் பழுத்துவிழும்
அளவிலொரு பரமவெளியில் புக்கிருக்க எனை ...... நினையாதோ
செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத
கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத
டிமிடடிமி டிமிடிமிட டிட்டிட்டி டிட்டிமிட ...... டிடிதீதோ
திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட
திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி
செணுசெணுத தணசெணுத தத்தித்தி குத்ரிகுட ...... ததிதீதோ
தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட
குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத
தரரரர ரிரிரிரிரி றிற்றித்த றிற்றிரிரி ...... எனவேநீள்
சதிமுழவு பலவும்இரு பக்கத்திசைப்ப முது
சமைய பயிரவி இதயம் உட்கி ப்ரமிக்க உயர்
தணிகைமலை தனில் மயிலில் நிர்த்தத்தில் நிற்கவல ...... பெருமாளே.
திருப்பாடல் 58:
தந்தந் தனதன தந்தந் தனதன
தந்தந் தனதன ...... தனதான
வங்கம் பெறுகடல் எங்கும் பொருதிரை
வந்துந்தி அதிரும் ...... அதனாலே
வஞ்சம் பெறுதிட நெஞ்சன் தழலுற
அஞ்சம்பதும் விடும் அதனாலே
பங்கம் படுமென தங்கம் தனிலுதி
பண்பொன்றிய ஒரு ...... கொடியான
பஞ்சொன்றிய மயில் நெஞ்சொன்றியெ அழல்
பொன்றும் தனிமையை ...... நினையாயோ
தெங்கம் திரளுடன் எங்கும் கதலிகள்
சென்றொன்றிய பொழில் அதனூடே
தெந்தெந் தெனதென என்றண்டுறஅளி
நின்றும் திகழ்வொடு ...... மயிலாடப்
பொங்கும் சுனைகளில் எங்கும் குவளைகள்
என்றும் புகழ்பெற ...... மலரீனும்
பொன்தென் தணிகையில் நின்றங்கெழு புவி
என்றும் செயவல ...... பெருமாளே.
திருப்பாடல் 59:
தத்தனாத் தனன தத்தனாத் தனன
தத்தனாத் தனன ...... தனதான
வட்டவாள்தன மனைச்சிபால் குதலை
மக்கள் தாய்க் கிழவி ...... பதிநாடு
வைத்த தோட்ட மனை அத்தம்ஈட்டுபொருள்
மற்ற கூட்டம் அறிவயலாக
முட்டஓட்டிமிக வெட்டு மோட்டெருமை
முட்டர் பூட்டியெனை ...... அழையாமுன்
முத்தி வீட்டணுக முத்தராக்க !சுரு
திக் குராக்கொள்இரு ...... கழல்தாராய்
பட்டநாற்பெரு மருப்பினால் கர!இ
பத்தின் வாள்பிடியின் ...... மணவாளா
பச்சைவேய்ப் பணவை கொச்சை வேட்டுவர்!ப
திச்சி தோள் புணர் தணியில் வேளே
எட்டுநால்கர ஒருத்தல் மாத் திகிரி
எட்டுமாக் குலைய ...... எறிவேலா
எத்திடார்க்கரிய முத்த பாத்தமிழ் !கொ
டெத்தினார்க்கெளிய ...... பெருமாளே.
திருப்பாடல் 60:
தனத்ததன தனதான தனத்ததன தனதான
தனத்ததன தனதான ...... தனதான
வரிக்கலையி(ன்) நிகரான விழிக்கடையில் இளைஞோரை
மயக்கியிடு மடவார்கள் ...... மயலாலே
மதிக்குளறி உளகாசும் அவர்க்குதவி மிடியாகி
வயிற்றிலெரி மிகமூள ...... அதனாலே
ஒருத்தருடன் உறவாகி ஒருத்தரொடு பகையாகி
ஒருத்தர்தமை மிகநாடி ...... அவரோடே
உணக்கையிடு படுபாவி எனக்குனது கழல்பாட
உயர்ச்சிபெறு குணசீலம் அருள்வாயே
விரித்தருணகிரிநாதன் உரைத்ததமிழ் எனுமாலை
மிகுத்த பலம்உடனோத ...... மகிழ்வோனே
வெடித்தமணர் கழுவேற ஒருத்தி கணவனுமீள
விளைத்ததொரு தமிழ்பாடு ...... புலவோனே
செருக்கியிடு பொருசூரர் குலத்தை அடியற மோது
திருக்கையினில் வடிவேலை ...... உடையோனே
திருக்குலவும்ஒருநீல மலர்ச்சுனையில் அழகான
திருத்தணிகை மலைமேவு ...... பெருமாளே.
திருப்பாடல் 61:
தானத்தன தானன தந்தன
தானத்தன தானன தந்தன
தானத்தன தானன தந்தன ...... தனதான
வாருற்றெழு பூண்முலை வஞ்சியர்
காருற்றெழு நீள்குழல் மஞ்சியர்
வாலக்குயில் போல்மொழி கொஞ்சியர் ...... தெருமீதே
மாணுற்றெதிர் மோகன விஞ்சையர்
சேலுற்றெழு நேர்விழி விஞ்சியர்
வாகக் குழையாம் அபரஞ்சியர் ...... மயலாலே
சீருற்றெழு ஞானமுடன் கல்வி
நேரற்றவர் மால்கொடு மங்கியெ
சேருற்றறிவானதழிந்துயிர் இழவாமுன்
சேவற்கொடியோடு சிகண்டியின்
மீதுற்றறிஞோர் புகழ் பொங்கிய
தேசுக்கதிர் கோடியெனும் பதம் அருள்வாயே
போருற்றிடு சூரர் சிரங்களை
வீரத்தொடு பாரில்அரிந்தெழு
பூதக்கொடி சோரிஅருந்திட ...... விடும்வேலா
பூகக் குலையேவிழ மென்கயல்
தாவக்குலை வாழைகளும் செறி
போகச் செநெலே உதிரும் செய்கள் அவைகோடி
சாரல்கிரி தோறும்எழும்பொழில்
தூரத்தொழு வார்வினை சிந்திடு
தாதுற்றெழு கோபுர மண்டபம் அவைசூழும்
தார்மெத்திய தோரண மென்தெரு
தேர்சுற்றிய வார்பதி அண்டர்கள்
தாமெச்சிய நீள் தணியம்பதி ...... பெருமாளே.
திருப்பாடல் 62:
தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் ...... தனதான
வினைக்கினமாகும் தனத்தினர் வேள்!அம்
பினுக்கெதிராகும் ...... விழிமாதர்
மிகப் பலமானம் தனில்புகுதா வெஞ்
சமத்திடை போய் வெந்துயர் மூழ்கிக்
கனத்த விசாரம் பிறப்படி தோயும்
கருக்குழி தோறும் ...... கவிழாதே
கலைப் புலவோர்பண் படைத்திடஓதும்
கழல் புகழோதும் ...... கலை தாராய்
புனத்திடை போய்வெஞ் சிலைக் குறவோர்!வஞ்
சியைப் புணர்வாகம் ...... புயவேளே
பொருப்பிரு கூறும் படக்கடல் தானும்
பொருக்கெழ வானும் ...... புகைமூளச்
சினத்தொடு சூரன் கனத்திணி மார்பம்
திறக்கமராடும் ...... திறல்வேலா
திருப்புகழ்ஓதும் கருத்தினர் சேரும்
திருத்தணி மேவும் ...... பெருமாளே.
திருப்பாடல் 63:
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்த தனதான
வெற்றி செயவுற்றகழை விற்குதை வளைத்துமதன்
விட்டகணை பட்ட ...... விசையாலே
வெட்டவெளியில் தெருவில் வட்டபணையில் கனல்!வி
ரித்தொளி பரப்பு ...... மதியாலே
பற்றிவசை கற்றபல தத்தையர் தமக்கும்இசை
பட்ட திகிரிக்கும் அழியாதே
பத்தியை எனக்கருளி முத்தியை அளித்துவளர்
பச்சை மயிலுற்று ...... வரவேணும்
நெற்றிவிழி பட்டெரிய நட்டமிடு முத்தமர்!நி
னைக்கு மனமொத்த ...... கழல்வீரா
நெய்கமல மொக்கு முலை மெய்க்குறவி இச்சையுற
நித்தம்இறுகத் தழுவுமார்பா
எற்றிய திருச்சலதி சுற்றிய திருத்தணியில்
எப்பொழுது நிற்கும் ...... முருகோனே
எட்டசலம்எட்ட நிலமுட்டமுடி நெட்டசுரர்
இட்டசிறை விட்ட ...... பெருமாளே.
(2021 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No. of songs is 64 as per the kaumaram site
ReplyDeleteவணக்கம், 'எனையடைந்த குட்டம்' எனும் திருப்புகழ் நெடியமலை தலத்திற்கானது, கௌமாரம் வலைத்தளத்தில் தவறுதலாக அத்திருப்பாடல் 'திருத்தணி' என்று குறிக்கப் பெற்றுள்ளது. நெடியமலைக்கான பக்கத்தில் அத்திருப்புகழைக் காணவும். சிவ சிவ!!!
Delete