(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: கொங்கு நாடு
மாவட்டம்: திண்டுக்கல்
திருக்கோயில்: அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில்
தல வகை: முருகன் திருக்கோயில்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
அமைவிடம் (செல்லும் வழி):
'காசியின் மீறிய பழநியங்கிரி' என்று அருணகிரிப் பெருமான் போற்றிப் பரவும் புண்ணிய ஷேத்திரம். 697 படிகளோடு கூடிய மலைக்கோயில், எந்நேரமும் அடியவர்கள் கூட்டம் கூட்டமாக 'பழநியாண்டவனுக்கு அரோகரா' எனும் கோஷத்துடன் காதலுடன் தரிசித்துப் போற்றி மகிழும் திருத்தலம். பிரமாண்டமான மலைக்கோயில் வளாகம், திருக்கருவறையில் பால சுவரூபியாய், வலது திருக்கரத்தில் தண்டமேந்திய நின்ற திருக்கோலத்தில், திருமுகத்தில் பேரானந்தப் புன்முறுவலோடு 'தண்டாயுதபாணி சுவாமி' எழுந்தருளி இருக்கின்றான். காண்பதற்கரிய திருக்காட்சி.
உட்பிரகாரச் சுற்றில் போகரின் ஜீவசமாதித் திருக்கோயிலையும், போகர் வழிபட்ட விக்கிரகத் திருமேனிகளையும் தரிசிக்கலாம். அருணகிரியார் இத்தலத்திற்கென்று (திருஆவினன்குடி திருப்பாடல்கள் நீங்கலாக) ஒப்புவமையற்ற 85 திருப்புகழ் திருப்பாடல்களை அருளிச் செய்துள்ளார்.
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 85.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தனதன தத்தா தத்தன தனதன தத்தா தத்தன
தனதன தத்தா தத்தன ...... தனதான
அகல்வினை உள்சார் சட்சமயிகளொடு வெட்கா தட்கிடும்
அறிவிலி வித்தாரத் தனம் அவிகார
அகில்கமழ் கத்தூரித்தனி அணைமிசை கைக்!காசுக்கள
வருள்பவர் நட்பே கொட்புறும் ஒருபோதன்
பகலிரவில் போதிற்பணி பணியற விட்டாரெட்டிய
பரமமயச் சோதிச்சிவ ...... மயமாநின்
பழநிதனில் போய்உற்பவ வினைவிள கள்சேர் வெட்சி!கு
ரவுபயில் நற்தாள் பற்றுவதொருநாளே
புகலி வனப்பேறப் புகல் மதுரைமன் வெப்பாறத் திகழ்
பொடிகொடு புற்பாய் சுற்றிகள் ...... கழுவேறப்
பொருத சமர்த்தா குத்திர துரக முகக் கோதைக்கிடை
புலவரில் நக்கீரர்க்குதவிய வேளே
இகல்படு நெட்டூர் பொட்டெழ இளநகை இட்டே சுட்டருள்
எழுபுவி துய்த்தார் மைத்துனர் ...... மதலாய்!வென்
றிடர்அற முப்பால் செப்பிய கவிதையின் மிக்காரத்தினை
எழுதி வனத்தே எற்றிய ...... பெருமாளே.
திருப்பாடல் 2:
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
அணிபட்டணுகித் திணிபட்ட !மனத்
தவர் விட்டவிழிக் ...... கணையாலும்
அரிசுற்று கழைத்தவர் பெற்ற!வளத்
தவன் விட்ட மலர்க் ...... கணையாலும்
பிணிபட்டுணர்வற்றவமுற்றியமற்
பெறுமக் குணமுற்றுயிர் மாளும்
பிறவிக் கடல்விட்டுயர் நற்கதியைப்
பெறுதற்கருளைத் ...... தரவேணும்
கணிநற் சொருபத்தை எடுத்து மலைக்
கனியைக் கணியுற்றிடுவோனே
கமலத்தயனைப் ப்ரணவத் துரையைக்
கருதிச் சிறை வைத்திடுவோனே
பணியப் பணியப் பரமர்ப் பரவப்
பரிவுற்றொரு சொல் ...... பகர்வோனே
பவளத் தவளக் கனகப் புரிசைப்
பழநிக் குமரப் ...... பெருமாளே.
திருப்பாடல் 3:
தனன தனதனன தந்தத்த தந்ததன
தனன தனதனன தந்தத்த தந்ததன
தனன தனதனன தந்தத்த தந்ததன ...... தந்ததான
அதல விதலமுதல் அந்தத் தலங்களென
அவனியென அமரர் அண்டத்த கண்டமென
அகில சலதியென எண்திக்குள் விண்டுஎன ...... அங்கிபாநு
அமுத கதிர்களென அந்தித்த மந்த்ரமென
அறையும் மறையென அரும் தத்துவங்களென
அணுவில் அணுவென நிறைந்திட்டு நின்றதொரு ...... சம்ப்ரதாயம்
உதயமெழஇருள் விடிந்தக் கணந்தனில்!இ
ருதய கமலமுகிழம் கட்டவிழ்ந்துணர்வில்
உணரும் அநுபவ மனம் பெற்றிடும்படியை ...... வந்துநீமுன்
உதவ இயலினியல் செஞ்சொல் ப்ரபந்தமென
மதுர கவிகளில் மனம் பற்றிருந்து புகழ்
உரிய அடிமைஉனை அன்றிப் ப்ரபஞ்சமதை ...... நம்புவேனோ
ததத ததததத தந்தத்த தந்ததத
திதிதி திதிதிதிதி திந்தித்தி திந்திதிதி
தகுகு தகுதகுகு தந்தத்த தந்தகுகு ...... திந்திதோதி
சகக சககெணக தந்தத்த குங்கெணக
டிடிடி டிடிடிடிடி டிண்டிட்டி டிண்டிடிடி
தகக தகதகக தந்தத்த தந்தகக ...... என்றுதாளம்
பதலை திமிலை துடி தம்பட்டமும் பெருக
அகில நிசிசரர் நடுங்கக் கொடும் கழுகு
பரிய குடர்பழு எலும்பைப் பிடுங்க ரண ...... துங்ககாளி
பவுரியிட நரி புலம்பப் பருந்திறகு
கவரியிட இகலை வென்றுச் சிகண்டிதனில்
பழநி மலையின்மிசை வந்துற்ற இந்திரர்கள் ...... தம்பிரானே.
திருப்பாடல் 4:
தனதன தானத் தான தனத்தத்
தனதன தானத் தான தனத்தத்
தனதன தானத் தான தனத்தத் ...... தனதான
அரிசன வாடைச் சேர்வை குளித்துப்
பலவித கோலச் !சேலையுடுத்திட்
டலர் குழலோதிக் கோதி முடித்துச் ...... சுருளோடே
அமர்பொரு காதுக்கோலை திருத்தித்
திருநுதல் நீவிப் பாளித !பொட்டிட்
டகில் புழுகாரச் சேறு தனத்திட்டலர் வேளின்
சுரத விநோதப் பார்வை மையிட்டுத்
தருண கலாரத் தோடை தரித்துத்
தொழிலிடு தோளுக்கேற வரித்திட்டிளைஞோர் மார்
துறவினர் சோரச் சோர நகைத்துப்
பொருள்கவர் மாதர்க்காசை அளித்தல்
துயரறவே பொற் பாதமெனக்குத் ...... தருவாயே
கிரியலை வாரிச் சூரர் இரத்தப்
புணரியின் மூழ்கிக் கூளி களிக்கக்
கிரணவை வேல் புத்தேளிர் பிழைக்கத் ...... தொடுவோனே
கெருவித கோலப் பார தனத்துக்
குறமகள் பாதச் சேகர சொர்க்கக்
கிளி தெய்வயானைக்கே புயவெற்பைத் ...... தருவோனே
பரிமள நீபத் தாரொடு வெட்சித்
தொடைபுனை சேவல் கேதன துத்திப்
பணியகல் பீடத் தோகை மயிற்பொற் பரியோனே
பனிமலரோடைச் சேலும் களித்துக்
ககனம் அளாவிப் போய் வரு வெற்றிப்
பழநியில் வாழ்பொற் கோமள சத்திப் ...... பெருமாளே.
திருப்பாடல் 5:
தனத்த தானன தனதன தனதன ...... தனதான
அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியும் உறவோரும்
அடுத்த பேர்களும் இதமுறு மகவோடு ...... வளநாடும்
தரித்த ஊருமெய் எனமனம் நினைவது ...... நினையாதுன்
தனைப் பராவியும் வழிபடு தொழிலது ...... தருவாயே
எருத்திலேறிய இறையவர் செவிபுக ...... உபதேசம்
இசைத்த நாவின இதணுறு குறமகள் இருபாதம்
பரித்த சேகர மகபதி தரவரு ...... தெய்வயானை
பதிக்கொள் ஆறிருபுய பழநியிலுறை ...... பெருமாளே.
திருப்பாடல் 6:
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
அவனிதனிலே பிறந்து மதலையெனவே தவழ்ந்து
அழகுபெறவே நடந்து ...... இளைஞோனாய்
அருமழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று
அதிவிதமதாய் வளர்ந்து ...... பதினாறாய்
சிவகலைகள் ஆகமங்கள் மிகவும் மறையோதும் அன்பர்
திருவடிகளே நினைந்து ...... துதியாமல்
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகு கவலையாய் உழன்று
திரியுமடியேனை உந்தன் அடிசேராய்
மவுன உபதேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீதணிந்த ...... மகதேவர்
மனமகிழவே அணைந்து ஒருபுறமதாக வந்த
மலைமகள் குமார துங்க ...... வடிவேலா
பவனி வரவே உகந்து மயிலின் மிசையே திகழ்ந்து
படியதிரவே நடந்த ...... கழல்வீரா
பரமபதமே செறிந்த முருகனெனவே உகந்து
பழநிமலை மேலமர்ந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 7:
தனதனா தனதத்த தனதனா தனதத்த
தனதனா தனதத்த ...... தனதான
அறமிலா நிலைகற்று கொடியவேல் விழிவிட்டுள்
அறிவுதானற வைத்து ...... விலைபேசி
அமளி மீதினில் வைத்து பவளவாய் அமுதத்தை
அதிகமா உதவிக்கை ...... வளையாலே
உறவினால் உடலத்தை இறுகவே தழுவிக்கொள்
உலையிலே மெழுகொத்த ...... !மடவாரோ
டுருகியே வருபெற்றி மதன நாடக பித்து
ஒழியுமாறொரு முத்தி ...... தரவேணும்
மறவர் மாதொரு ரத்ந விமல கோ கநகத்தி
மயிலனாள் புணர்செச்சை ...... மணிமார்பா
மருள் நிசாசரன் வெற்பில் உருகிவீழ் உறமிக்க
மயிலிலேறிய உக்ர ...... வடிவேலா
பறைகள் பேணிய ருத்ரி கரியகார் அளகத்தி
பரமர்பால் உறைசத்தி ...... எமதாயி
பழைய பார்வதி கொற்றி பெரியநாயகி பெற்ற
பழநி மாமலை உற்ற ...... பெருமாளே.
திருப்பாடல் 8:
தானா தனதன தானா தனதன
தானா தனதன ...... தனதான
ஆதாளிகள்புரி கோலாகல!விழி
யாலே அமுதெனும் ...... மொழியாலே
ஆழ்சீர் இளநகையாலே !துடியிடை
யாலே மணமலி ...... குழலாலே
சூதார் இளமுலையாலே அழகிய
தோடார் இருகுழை ...... அதனாலே
சோரா மயல்தரு மானார் உறவிடர்
சூழா வகையருள் ...... புரிவாயே
போதார் இருகழல் சூழாதது தொழில்
பூணாதெதிர்உற ...... மதியாதே
போராடியஅதி சூரா பொறுபொறு
போகாதென அடு ...... திறலோனே
வேதாவுடன் நெடு மாலானவன்!அறி
யாதார் அருளிய ...... குமரேசா
வீராபுரி வரு கோவே பழநியுள்
வேலா இமையவர் ...... பெருமாளே.
திருப்பாடல் 9:
தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன
தான தானன தத்தன தத்தன ...... தனதான
ஆலகாலமெனக் கொலை முற்றிய
வேலதாமென மிக்க விழிக் !கடை
யாலும் மோகம் விளைத்து விதத்துடன் இளைஞோரை
ஆரஆணை மெயிட்டு மறித்து!வி
கார மோகம் எழுப்பி !அதற்குற
வான பேரை அகப்படுவித்ததி ...... விதமாகச்
சால மாலை அளித்தவர் கைப்பொருள்
மாளவே சிலுகிட்டு மருட்டியெ
சாதி பேதமறத் தழுவித்திரி ...... மடமாதர்
தாக போகமொழித்து !உனக்கடி
யானென் வேள்வி முகத் தவமுற்றிரு
தாளை நாளும் வழுத்தி நினைத்திட ...... அருள்வாயே
வால மாமதி மத்தம் !எருக்கறு
காறு பூளை தரித்த சடைத்திரு
ஆலவாயன் அளித்தருள் அற்புத ...... முருகோனே
மாய மானொடரக்கரை வெற்றிகொள்
வாலி மார்பு தொளைத்திட விற்கொடு
வாளி ஏவிய மற்புயன் அச்சுதன் ...... மருகோனே
நாலு வேத நவிற்று முறைப்பயில்
வீணை நாதன் உரைத்த வனத்திடை
நாடியோடி குறத்தி தனைக்கொடு ...... வருவோனே
நாளிகேரம் வருக்கை பழுத்துதிர்
சோலை சூழ் பழநிப் பதியில்திரு
ஞான பூரண சத்தி தரித்தருள் ...... பெருமாளே.
திருப்பாடல் 10:
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன ...... தந்ததான
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ...... என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடும்!அடி
யார்கள் பதமே துணையதென்று நாளும்
ஏறுமயில் வாகன குகா சரவணாஎனது
ஈசஎன மானமுனதென்று மோதும்
ஏழைகள் வியாகுலம் இதேதென வினாவிலுனை
ஏவர் புகழ்வார் மறையுமென் சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாக உமை ...... தந்தவேளே
நீசர்கள் தமோடெனது தீவினையெலாம் மடிய
நீடுதனி வேல்விடு மடங்கல் வேலா
சீறிவரு மாறவுணன் ஆவியுணும் ஆனைமுக
தேவர் துணைவா சிகரி ...... அண்டகூடம்
சேரும் அழகார்பழநி வாழ் குமரனே பிரம
தேவர் வரதா முருக ...... தம்பிரானே.
திருப்பாடல் 11:
தத்தா தனத்ததன தத்தா தனத்ததன
தானத் தனந்ததன தானத் தனந்ததன
தத்தா தனத்ததன தத்தா தனத்ததன
தானத் தனந்ததன தானத் தனந்ததன
தத்தா தனத்ததன தத்தா தனத்ததன
தானத் தனந்ததன தானத் தனந்ததன ...... தனதனதான
இத்தாரணிக்குள்மநு வித்தாய் முளைத்தழுது
கேவிக் கிடந்துமடி மீதில் தவழ்ந்தடிகள்
தத்தா தனத்ததன இட்டே தெருத்தலையில்
ஓடித் திரிந்துநவ கோடிப் ப்ரபந்தகலை
இச்சீர் பயிற்ற வயதெட்டொடும் எட்டுவர
வாலக் குணங்கள்பயில் கோலப் பெதும்பையர்கள் உடனுறவாகி
இக்கார் சரத்து மதனுக்கே இளைத்து !வெகு
வாகக் கலம்பவகை பாடிப் புகழ்ந்துபல
திக்கோடு திக்குவரை மட்டோடி மிக்கபொருள்
தேடிச் சுகந்தஅணை மீதில் துயின்றுசுகம்
இட்டாதரத்துருகி வட்டார் முலைக்குள்இடை
மூழ்கிக் கிடந்து மயலாகித் துளைந்துசில ...... பிணியதுமூடிச்
சத்தான புத்தியது கெட்டே கிடக்கநமன்
ஓடித் தொடர்ந்து கயிறாடிக் கொளும்பொழுது
பெற்றோர்கள் சுற்றியழ உற்றார்கள் மெத்தஅழ
ஊருக்கடங்கல் இலர் காலற்கடங்க உயிர்
தக்காதிவர்க்கும் அயன் இட்டான் விதிப்படியின்
ஓலைப் பழம்படியினால் இற்றிறந்ததென ...... எடுமெனஓடிச்
சட்டா நவப்பறைகள் கொட்டா வரிச்சுடலை
ஏகிச் சடம்பெரிது வேகப் புடம் சமைய
இட்டே அனற்குள்எரி பட்டார்எனத் தழுவி
நீரில் படிந்துவிடு பாசத்தகன்றுனது
சற்போதகப் பதுமம் உற்றே தமிழ்க்கவிதை
பேசிப் பணிந்துருகு நேசத்தை இன்றுதர ...... இனிவரவேணும்
தித்தா திரித்திகுட தத்தா தனத்தகுத
தாதத் தனந்ததன தானத் தனந்ததன
செச்சே செகுச்செகுகு தித்தா திமித்ததிகு
தாதத் தசெந்திகுத தீதத் தசெந்தரிக
தித்தா கிடக்கணக டக்கா குகுக்குகுகு
தோதக் கணங்கணக கூகுக் கிணங்கிணென ...... ஒருமயிலேறித்
திண்தேர் ரதத்தசுரர் பட்டே விழப்பொருது
வேலைத் தொளைந்துவரை ஏழைப் பிளந்துவரு
சித்தா பரத்தமரர் கத்தா குறத்திமுலை
மீதில் புணர்ந்துசுக லீலைக் கதம்பம்அணி
சுத்தா உமைக்குமொரு முத்தாய் முளைத்தகுரு
நாதக் குழந்தையென ஓடிக் கடம்பமலர் ...... அணிதிருமார்பா
மத்தா மதக்களிறு பின்தானுதித்த குகன்
ஏதத்திலங்கையினில் ஆதிக்கம் உண்டதொரு
முட்டாள் அரக்கர்தலை இற்றே !விழக்கணைக
ளே தொட்ட கொண்டல் உருவாகிச் சுமந்ததிகம்
மட்டார் மலர்க்கமல முற்றா சனத்திருவை
மார்பில் புணர்ந்த ரகுராமற்கும் அன்புடைய ...... மருமகனாகி
வற்றா மதுக்கருணை உற்றே மறைக்கலைகள்
ஓதித் தெரிந்து தமிழ் சோதித்தலங்கல் அணி
அத்தா பரத்தை அறிவித்தாவி சுற்றுமொளி
ஆகிப் ப்ரபந்தமணி வேல்தொட்ட மைந்தபுய
வர்க்கா மருப்புழுகு முட்டா திருப்பழநி
வாழ்வுக்குகந்தடியர் ஆவிக்குள் நின்றுலவி ...... வருபெருமாளே.
திருப்பாடல் 12:
தனதனன தனதனன தானான தனதனன
தனதனன தனதனன தானான தனதனன
தனதனன தனதனன தானான தனதனன ...... தனதான
இரவியென வடவையென ஆலால விடமதென
உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர
இரதிபதி கணைகளொரு நாலேவ விருதுகுயில் அதுகூவ
எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணி
இசைகுறுகி இருசெவியில் நாராசம் உறுவதென
இகல்புரிய மதனகுரு ஓராத அனையர்கொடு ...... வசைபேச
அரஹரென வநிதைபடு பாடோத அரிதரிது
அமுதமயில் அதுகருதி யாரோடும் இகல்புரிவள்
அவசம்உற அவசம்உற ஆரோமல் தரவும் மிக ...... மெலிவானாள்
அகுதியிவள் தலையில் விதியானாலும் விலகரிது
அடிமைகொள உனதுபரம் ஆறாத ஒருதனிமை
அவளையணை தரஇனிதின் ஓகார பரியின்மிசை ...... வருவாயே
நிரைபரவி வரவரையுள் ஓர்சீத மருதினொடு
பொருசகடு உதையது செய்தாமாய மழைசொரிதல்
நிலைகுலைய மலைகுடையதாவே கொள் கரகமலன் ...... மருகோனே
நிருமலிய திரிநயனி வாள்வீச வருகுமரி
கவுரி பயிரவி அரவ பூணாரி திரிபுவனி
நிபுடமலை அரசனருள் வாழ்வான புரணஉமை ...... அருள்பாலா
பரவைகிரி அசுரர்திரள் மாசேனை தவிடுபொடி
படஅமரர் துயரகல வேலேவி அமர்பொருத
பதும கரதல முருக நால்வேதகரர் அணிக ...... மயில்வீரா
பளித ம்ருகமத களப சேறார வளருமுலை
வநிதைகுற மகள்மகிழும் லீலா விதரமதுர
பநுவல்தரு பழநிவரு கோலாகல அமரர் ...... பெருமாளே.
திருப்பாடல் 13:
தனதனன தானான தானதன தந்த
தனதனன தானான தானதன தந்த
தனதனன தானான தானதன தந்த ...... தனதான
இருகனக மாமேருவோ களப துங்க
கடகடின பாடீர வாரமுத கும்பம்
இணைசொல்இள நீரோ கராசல இரண்டு ...... குவடேயோ
இலகு மலரே வாளியாகிய அநங்கன்
அணிமகுடமோ தானெனா மிக வளர்ந்த
இளமுலை மினார்மோக மாயையில் விழுந்து ...... தணியாமல்
பெருகியொரு காசே கொடாதவரை ஐந்து
தருவை நிகரேயாகவே எதிர் புகழ்ந்து
பெரிய தமிழே பாடி நாள்தொறும்இரந்து ...... நிலைகாணாப்
பிணியின்அகமேயான பாழுடலை நம்பி
உயிரை அவமாய் நாடியே பவ நிரம்பு
பிறவிதனிலே போக மீளவும் உழன்று ...... திரிவேனோ
கருணைஉமை மாதேவி காரணி அநந்த
சயனகளி கூராரி சோதரி புரந்த
கடவுளுடன் வாதாடு காளி மலை மங்கை ...... அருள்பாலா
கருடனுடன் வீறான கேதனம் விளங்கு
மதிலினொடு மாமாட மேடைகள் துலங்கு
கலிசைவரு காவேரி சேவகனொடன்பு ...... புரிவோனே
பரவையிடையே பாதகாசுரர் விழுந்து
கதறியிடவே பாக சாதனன்உள் நெஞ்சு
பலிதமெனவே ஏகவே மயிலில் வந்த ...... குமரேசா
பலமலர்களே தூவி ஆரண நவின்று
பரவி இமையோர்சூழ நாள்தொறும் இசைந்து
பழநிமலை மீதோர் பராபரன் இறைஞ்சு ...... பெருமாளே.
திருப்பாடல் 14:
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
இருசெப்பென வெற்பென வட்டமும்!ஒத்
திளகிப் புளகித்திடு மாதர்
இடையைச் சுமையைப் !பெறுதற்குறவுற்
றிறுகக் குறுகிக் ...... குழல்சோரத்
தருமெய்ச் சுவையுற்றிதழைப் பருகித்
தழுவிக் கடிசுற்றணை மீதே
சருவிச் சருவிக் குனகித் தனகித்
தவமற்றுழலக் ...... கடவேனோ
அரிபுத்திர !சித்தஜனுக்கருமைக்
குரியத் திரு மைத்துன வேளே
அடல்குக்குட நற்கொடி பெற்றெதிர்!உற்
றசுரக் கிளையைப் ...... பொருவோனே
பரிவுற்றரனுக்கருள் நற் பொருளைப்
பயனுற்றறியப் ...... பகர்வோனே
பவனப் புவனச் செறிவுற்றுயர் மெய்ப்
பழநிக் குமரப் ...... பெருமாளே.
திருப்பாடல் 15:
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன
தனதன தனதன தந்த தானன ...... தனதான
இலகிய களப சுகந்த வாடையின்
ம்ருகமத மதனை மகிழ்ந்து பூசியெ
இலைசுருள் பிளவை அருந்தியேஅதை ...... இதமாகக்
கலவியில் அவரவர் தங்கள் வாய்தனில்
இடுபவர் பலபல சிந்தை மாதர்கள்
கசனையை விடுவதும் எந்த நாளது ...... பகர்வாயே
சிலைதரு குறவர் மடந்தை நாயகி
தினைவனம் அதனில் உகந்த நாயகி
திரள்தனம் அதனில் அணைந்த நாயக ...... சிவலோகா
கொலைபுரி அசுரர் குலங்கள் மாளவெ
அயிலயில் அதனை உகந்த நாயக
குருபர பழநியில் என்றும் மேவிய ...... பெருமாளே.
திருப்பாடல் 16:
தனதனன தந்த தனதனன தந்த
தனதனன தந்த ...... தனதான
இலகுகனி மிஞ்சு மொழியிரவு துஞ்சும்
இருவிழியெ நஞ்சும் ...... முகமீதே
இசைமுரல் சுரும்பும் இளமுலை அரும்பும்
இலகிய கரும்பும் ...... மயலாலே
நிலவில் உடல் வெந்து கரிய அலமந்து
நெகிழுமுயிர் நொந்து ...... மதவேளால்
நிலையழியும் நெஞ்சில் அவர் குடிபுகுந்த
நினைவொடும் இறந்து ...... படலாமோ
புலவினை அளைந்து படுமணி கலந்து
புதுமலர் அணிந்த ...... கதிர்வேலா
புழுகெழ மணந்த குறமகள் குரும்பை
பொரமுகை உடைந்த ...... தொடைமார்பா
பலநிறம் இடைந்த விழுசிறை அலர்ந்த
பருமயில் அடைந்த ...... குகவீரா
பணைபணி சிறந்த தரளமணி சிந்து
பழநிமலை வந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 17:
தனத்தான தனதனன தனத்தான தனதனன
தனத்தான தனதனன ...... தனதான
உயிர்க்கூடு விடுமளவும் உமைக்கூடி மருவுதொழில்
ஒருக்காலும் நெகிழ்வதிலை ...... எனவேசூள்
உரைத்தேமுன் மருவினரை வெறுத்தேம !திரவியம
துடைத்தாய் பின் வருகுமவர் எதிரே போய்ப்
பயிற்பேசி இரவுபகல் அவர்க்கான பதமைபல
படப்பேசி உறுபொருள் கொள் ...... விலைமாதர்
படப்பார வலைபடுதல் தவிர்த்தாள மணிபொருவு
பதத்தாள மயிலின்மிசை ...... வரவேணும்
தயிர்ச்சோரன் எனுமவுரை வசைக்கோவ வனிதையர்கள்
தரத்தாடல் புரியும்அரி ...... மருகோனே
தமிழ்க்காழி மருதவன மறைக்காடு திருமருகல்
தநுக்கோடி வருகுழகர் ...... தருவாழ்வே
செயிற்சேல்விண் உடுவினொடு பொரப்போய் விமமர் பொருது
செயித்தோடி வருபழநி ...... அமர்வோனே
தினைக்காவல் புரியவல குறப்பாவை முலைதழுவு
திருத்தோள அமரர்பணி ...... பெருமாளே.
திருப்பாடல் 18:
தனதனன தான தந்த ...... தனதான
தனதனன தான தந்த ...... தனதான
உலகபசு பாச தொந்தம் அதுவான
உறவுகிளை தாயர் தந்தை ...... மனைபாலர்
மலசல சுவாச சஞ்சலம் அதாலென்
மதிநிலை கெடாமல் உந்தன் அருள் தாராய்
சலமறுகு பூளை தும்பை ...... அணிசேயே
சரவணபவா முகுந்தன் ...... மருகோனே
பலகலை சிவாகமங்கள் ...... பயில்வோனே
பழநிமலை வாழ வந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 19:
தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான
தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான
ஒருபொழுதும் இருசரண நேசத்தே வைத்துணரேனே
உனதுபழநி மலையெனும் ஊரைச் சேவித்தறியேனே
பெருபுவியில் உயர்வரிய வாழ்வைத் தீரக் ...... குறியேனே
பிறவியற நினைகுவன்என் ஆசைப்பாடைத் ...... தவிரேனோ
துரிதமிடு நிருதர்புர சூறைக்காரப் ...... பெருமாளே
தொழுது வழிபடும் அடியர் காவற்காரப் ...... பெருமாளே
விருதுகவி விதரண விநோதக்காரப் ...... பெருமாளே
விறன்மறவர் சிறுமிதிரு வேளைக்காரப் ...... பெருமாளே.
திருப்பாடல் 20:
தனதன தனன தான தனதன தனன தான
தனதன தனன தான ...... தனதான
ஒருவரையொருவர் தேறி அறிகிலர் மதவிசாரர்
ஒருகுண வழியுறாத ...... பொறியாளர்
உடலது சதமெனாடி களவுபொய் கொலைகளாடி
உறநம நரகில் வீழ்வர் ...... அதுபோய்பின்
வருமொரு வடிவ மேவி இருவினை கடலுளாடி
மறைவர் இனனைய கோலம் அதுவாக
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு
வடிவுற அருளி பாதம் அருள்வாயே
திரிபுரம்எரிய வேழ சிலைமதன் எரிய மூரல்
திருவிழி அருள்மெய்ஞ் ஞான ...... குருநாதன்
திருசரஸ்வதி மயேசுவரிஇவர் தலைவரோத
திருநடம் அருளும் நாதன் அருள்பாலா
சுரர்பதி அயனும் மாலும் முறையிட அசுரர் கோடி
துகளெழ விடுமெய்ஞ் ஞான ...... அயிலோனே
சுககுற மகள் மணாள எனமறை பலவும்ஓதி
தொழமுது பழநி மேவு ...... பெருமாளே.
திருப்பாடல் 21:
தான தான தனத்தன தத்தன
தான தான தனத்தன தத்தன
தான தான தனத்தன தத்தன ...... தனதான
ஓடியோடி அழைத்துவரச் சில
சேடிமார்கள் பசப்ப அதற்குமுன்
ஓதி கோதி முடித்த இலைச்சுருள் அதுகோதி
நீடு வாச நிறைத்த அகிற்!புழு
கோட மீது திமிர்த்த தனத்தினில்
நேசமாகி அணைத்த சிறுக்கிகள் உறவாமோ
நாடி வாயும் வயற்தலையில் புனல்
ஓடை மீதில் நிலத்த திவட்கையில்
நாத கீத மலர்த்துளி பெற்றளி ...... இசைபாடும்
கோடுலாவிய முத்து நிரைத்தவை
காவுர் நாடதனில் பழநிப்பதி
கோதிலாத குறத்தி அணைத்தருள் ...... பெருமாளே.
திருப்பாடல் 22:
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான
கடலைச் சிறைவைத்து மலர்ப் பொழிலில்
ப்ரமரத்தை உடற் பொறியிட்டு மடுக்
கமலத்தை மலர்த்தி விடத்தை இரப்பவன் ஊணாக்
கருதிச் சருவிக் கயலைக் கயமுள்
படுவித்துழையைக் கவனத்தடைசிக்
கணையைக் கடைவித்து வடுத்தனை உப்பினின்மேவி
அடலைச் செயல் சத்தியை அக்கினியில்
புகுவித்து யமப் ப்ரபுவைத் !துகைவித்
தரி கட்கம் விதிர்த்து முறித்து மதித்த சகோரம்
அலறப் பணிரத்ந மணிக் குழையைச்
சிலுகிட்டு மையிட்டொளிவிட்டு !மருட்
டுதல்உற்ற பொறிச்சியர்கள் கடையிற் ...... படுவேனோ
சடிலத்தவனிட்ட !சிட்டகுலத்
தொரு செட்டியிடத்தின் உதித்தருள் !வித்
தக ருத்ரஜன்மப் பெயர் செப்பியிடப் ...... பரிவாலே
சநகர்க்கும் அகஸ்த்ய புலஸ்த்ய சநற்
குமரர்க்கும் அநுக்க்ரக மெய்ப் பலகைச்
சதுபத்து நவப் புலவர்க்கும் விபத்தியில்ஞான
படலத்துறு லக்கண லக்ய தமிழ்த்
த்ரயமத்தில் அகப் பொருள் வ்ருத்தியினைப்
பழுதற்றுணர்வித்தருள் வித்தக சற் ...... குருநாதா
பவளக் கொடி சுற்றியபொற் கமுகின்
தலையில் குலையில் பலமுத்துதிர் செய்ப்
பழநிப் பதி வெற்பினில்நில் குமரப் ...... பெருமாளே.
திருப்பாடல் 23:
தனன தனதனன தனன தனதனன
தனன தனதனன ...... தனதான
கடலை பொரியவரை பலகனி கழைநுகர்
கடின குடவுதர ...... விபரீத
கரட தடமும் மத நளின சிறுநயன
கரிணி முகவரது ...... துணைவோனே
வடவரையின் முகடு அதிர ஒருநொடியில்
வலம் வரு மரகத ...... மயில்வீரா
மகபதி தரு சுதை குறமினொடிருவரும்
மருவு சரசவித ...... மணவாளா
அடலசுரர்கள் குல முழுதும் மடியஉயர்
அமரர் சிறையைவிட ...... எழில்மீறும்
அருண கிரணவொளி ஒளிரு மயிலைவிடும்
அரகர சரவண ...... பவ லோலா
படல உடுபதியை இதழிஅணிசடில
பசுபதி வரநதி ...... அழகான
பழநி மலைஅருள்செய் மழலை மொழிமதலை
பழநி மலையில்வரு ...... பெருமாளே.
திருப்பாடல் 24:
தனன தனத்த தாதத தனன தனத்த தானன
தனன தனத்த தானன ...... தனதான
கதியை விலக்கு மாதர்கள் புதிய இரத்ன பூஷண
கனதன வெற்பு மேல்மிகு ...... மயலான
கவலை மனத்தனாகிலும் உனது ப்ரசித்தமாகிய
கனதன மொத்த மேனியும் ...... முகம்ஆறும்
அதிபல வஜ்ரவாகுவும் அயில் நுனைவெற்றி வேலதும்
அரவு பிடித்த தோகையும் உலகேழும்
அதிர அரற்று கோழியும் அடியர் வழுத்தி வாழ்வுறும்
அபிநவ பத்ம பாதமும் ...... மறவேனே
இரவி குலத்தி ராசத மருவி எதிர்த்து வீழ்கடு
ரணமுக சுத்த வீரிய ...... குணமான
இளையவனுக்கு நீள்முடி அரசதுபெற்று வாழ்வுற
இதமொடளித்த ராகவன் ...... மருகோனே
பதினொரு ருத்திராதிகள் தபனம் விளக்கு மாளிகை
பரிவொடு நிற்கும் ஈசுர ...... சுரலோக
பரிமள கற்ப காடவி அரியளி சுற்று பூவுதிர்
பழநி மலைக்குள் மேவிய ...... பெருமாளே.
திருப்பாடல் 25:
தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
கரிய பெரிய எருமை கடவு
கடிய கொடிய ...... திரிசூலன்
கறுவி இறுகு கயிறொடுயிர்கள்
கழிய முடுகி ...... எழுகாலம்
திரியும் நரியும் எரியும் உரிமை
தெரிய விரவி ...... அணுகாதே
செறிவும் அறிவும் உறவும்அனைய
திகழும் அடிகள் ...... தரவேணும்
பரிய வரையின் அரிவை மருவு
பரமர் அருளும் ...... முருகோனே
பழன முழவர் கொழுவிலெழுது
பழைய பழநி ...... அமர்வோனே
அரியும் அயனும் வெருவ உருவ
அரிய கிரியை ...... எறிவோனே
அயிலும் மயிலும் மறமும் நிறமும்
அழகும் உடைய ...... பெருமாளே.
திருப்பாடல் 26:
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன
தனன தானன தானன தானன ...... தனதான
கரிய மேகமதோ இருளோகுழல்
அரிய பூரணமா மதியோமுகம்
கணைகொலோஅயில் வேலதுவோ விழி ...... இதழ்பாகோ
கமுகு தான்நிகரோ வளையோ களம்
அரிய மாமலரோ துளிரோ கரம்
கனக மேரதுவோ குடமோ முலை ...... மொழிதேனோ
கருணை மால்துயில் ஆலிலையோ!வயி
றிடையதீர் ஒரு நூலதுவோ என
கனக மாமயில் போல் மடவாருடன் ...... மிகநாடி
கசடனாய் வயதாயொரு நூறு!செல்
வதனின் மேல்எனதாவியை நீயிரு
கமல மீதினிலே வரவேஅருள் ...... புரிவாயே
திரிபுராதிகள் நீறெழவே மிக
மதனையே விழியால் விழவே செயும்
சிவசொரூப மகேசுரன் நீடிய ...... தனயோனே
சினமதாய் வரு சூரர்கள் வேரற
அமரர் வானவர் வாடிடு தேவர்கள்
சிறைகள் மீளவுமே வடிவேல்விடு ...... முருகோனே
பரிவு சேர் கமலாலய சீதன
மருவுவார் திருமால் அரி நாரணர்
பழைய மாயவர் மாதவனார்திரு ...... மருகோனே
பனக மாமணி தேவி க்ருபாகரி
குமரனே பதினாலுலகோர் புகழ்
பழநி மாமலை மீதினிலே உறை ...... பெருமாளே.
திருப்பாடல் 27:
தனதனத் தானனத் தனதனத் தானனத்
தனதனத் தானனத் ...... தனதான
கரியிணைக் கோடெனத் தனமசைத்தாடி நல்
கயல்விழிப் பார்வையில் ...... பொருள்பேசிக்
கலையிழுத்தே குலுக்கென நகைத்தேமயல்
கலதியிட்டே அழைத்தணையூடே
செருமி வித்தார சிற்றிடை துடித்தாட மல்
திறமளித்தே பொருள் ...... பறிமாதர்
செயலிழுக்காமல் இக் கலியுகத்தேபுகழ்ச்
சிவ பதத்தே பதித்தருள்வாயே
திரிபுரக் கோல வெற்பழல் கொளச் சீர்நகைச்
சிறிதருள் தேவருள் ...... புதல்வோனே
திரைகடல் கோவெனக் குவடுகள் தூள்படத்
திருடர் கெட்டோட விட்டிடும் வேலா
பரிமளப் பாகலின் கனிகளைப் பீறிநல்
படியினிட்டே குரக்கினமாடும்
பழநியில் சீருறப் புகழ்குறப் பாவையைப்
பரிவுறச் சேர்மணப் ...... பெருமாளே.
திருப்பாடல் 28:
தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த ...... தனதான
கருகி அகன்று வரிசெறி கண்கள்
கயல் நிகரென்று ...... துதிபேசிக்
கலை சுருளொன்றும் மிடை படுகின்ற
கடி விடமுண்டு ...... பலநாளும்
விரகுறு சண்ட வினையுடல் கொண்டு
விதிவழி நின்று ...... தளராதே
விரைகமழ் தொங்கல் மருவிய துங்க
இதபதம் என்று ...... பெறுவேனோ
முருக கடம்ப குறமகள் பங்க
முறையென அண்டர் ...... முறைபேச
முதுதிரை ஒன்ற வருதிறல் வஞ்ச
முரணசுர் வென்ற ...... வடிவேலா
பரிமள இன்ப மரகத துங்க
பகடித வென்றி ...... மயில்வீரா
பறிதலை குண்டர் கழுநிரை கண்டு
பழநிஅமர்ந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 29:
தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன
தனத்ததன தனத்ததன
தனத்தனா தனதன ...... தனதான
கருப்புவிலில் மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனைய
கடைக்கணொடு சிரித்தணுகு
கருத்தினால் விரகுசெய் ...... மடமாதர்
கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக எதிர்த்துமலை
கனத்தஇரு தனத்தின்மிசை
கலக்கு மோகனம்அதில் ...... மருளாமே
ஒருப்படுதல் விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளி
உனைப்புகழும் எனைப்புவியில்
ஒருத்தனாம் வகைதிரு ...... அருளாலே
உருத்திரனும் விருத்திபெற அநுக்கிரகி எனக்குறுகி
உரைக்கமறை அடுத்துபொருள்
உணர்த்துநாள் அடிமையும் உடையேனோ
பருப்பதமும் உருப்பெரிய அரக்கர்களும் இரைக்குமெழு
படிக்கடலும் அலைக்க வல
பருத்த தோகையில்வரு ...... முருகோனே
பதித்த மரகதத்தினுடன் இரத்னமணி நிரைத்தபல
பணிப்பனிரு புயச்சயில
பரக்கவே இயல்தெரி ...... வயலூரா
திருப்புகழை உரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமை
செயித்தருளும் இசைப்பிரிய
திருத்த மாதவர்புகழ் ...... குருநாதா
சிலைக்குறவர் இலைக்குடிலில் புகைக்களக முகிற்புடைசெல்
திருப்பழநி மலைக்குள்உறை
திருக்கைவேல் அழகிய ...... பெருமாளே.
திருப்பாடல் 30:
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
கருவின் உருவாகி வந்து வயதளவிலே வளர்ந்து
கலைகள் பலவே தெரிந்து ...... மதனாலே
கரியகுழல் மாதர் தங்கள் அடிசுவடு மார் புதைந்து
கவலை பெரிதாகி நொந்து ...... மிகவாடி
அரகர சிவாய என்று தினமும் நினையாமல் நின்று
அறுசமய நீதியொன்றும் அறியாமல்
அசனமிடுவார்கள் தங்கள் மனைகள்தலை வாசல் நின்று
அநுதினமும் நாணமின்றி ...... அழிவேனோ
உரகபட மேல் வளர்ந்த பெரியபெருமாள் அரங்கர்
உலகளவு மால் மகிழ்ந்த ...... மருகோனே
உபயகுல தீப துங்க விருதுகவி ராஜ சிங்க
உறைபுகலியூரில் அன்று ...... வருவோனே
பரவைமனை மீதிலன்று ஒருபொழுது தூது சென்ற
பரமனருளால் வளர்ந்த ...... குமரேசா
பகையசுரர் சேனை கொன்று அமரர்சிறை மீளவென்று
பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே.
திருப்பாடல் 31:
தனன தானன தானா தானா
தனன தானன தானா தானா
தனன தானன தானா தானா ...... தனதான
கலக வாள்விழி வேலோ சேலோ
மதுர வாய்மொழி தேனோ பாலோ
கரிய வார்குழல் காரோ கானோ ...... துவரோ வாய்
களமும் நீள்கமுகோ தோள் வேயோ
உதரமானது மாலேர் பாயோ
களப வார்முலை மேரோ கோடோ ...... இடைதானும்
இழையதோ மலர் வேதாவானோன்
எழுதினான் இலையோ வாய் பேசீர்
இதென மோன மினாரே பாரீர் எனமாதர்
இருகண் மாயையிலே மூழ்காதே
உனது காவிய நூல் ஆராய்வேன்
இடர் படாதருள் வாழ்வே நீயே ...... தரவேணும்
அலைவிலாதுயர் வானோர் ஆனோர்
நிலைமையே குறி வேலா சீலா
அடியர் பால் அருள்ஈவாய் நீபார் ...... மணிமார்பா
அழகுலாவு விசாகா வாகார்
இபமினாள் மகிழ் கேள்வா தாழ்வார்
அயல்உலாவிய சீலா கோலா ...... கலவீரா
வலபை கேள்வர் பின்ஆனாய் கானார்
குறவர் மாது மணாளா நாளார்
வனச மேல்வரு தேவா மூவா ...... மயில்வாழ்வே
மதுர ஞான விநோதா நாதா
பழநி மேவு குமாரா தீரா
மயுர வாகன தேவா வானோர் ...... பெருமாளே.
திருப்பாடல் 32:
தனனத் தனதன தானன தானன
தனனத் தனதன தானன தானன
தனனத் தனதன தானன தானன ...... தனதான
கலகக் கயல்விழி போர்செய வேள்படை
நடுவில் புடைவரு பாபிகள் கோபிகள்
கனியக் கனியவுமே மொழி பேசிய ...... விலைமாதர்
கலவித் தொழில் நலமே இனிதாமென
மனமிப்படி தினமே உழலா வகை
கருணைப் படியெனை ஆளவுமே அருள் ...... தரவேணும்
இலவுக்கிளையெனும் வாய்வளி நாயகி
குழையத் தழுவிய மேன்மையினால் உயர்
இசை பெற்றருளிய காமுகனாகிய ...... வடிவோனே
இதமிக்கருமறை வேதியரானவர்
புகலத் தயவுடனேஅருள் மேன்மைகள்
இசையத் தரும் அநுகூல வசீகர ...... முதல்வோனே
நிலவைச் சடைமிசையே புனை காரணர்
செவியில் பிரணவமோதிய தேசிக
நிருதர்க்கொரு பகையாளியுமாகிய ...... சுடர்வேலா
நிமலக் குருபர ஆறிரு பார்வையும்
அருளைத் தரஅடியார் தமை நாள்தொறும்
நிகரற்றவர்எனவே மகிழ் கூர்தரும் உரியோனே
பலவில் கனிபணை மீறிய மாமர
முருகில் கனியுடனேநெடு வாளைகள்
பரவித் தனியுதிர் சோலைகள் மேவிய ...... வகையாலே
பழனத்துழவர்கள் ஏரிடவே விளை
கழனிப் புரவுகள் போதவும் மீறிய
பழநிச் சிவகிரி மீதினிலே வளர் ...... பெருமாளே.
திருப்பாடல் 33:
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான
கலவியில் இச்சித்திரங்கி நின்றிரு
கன தனம் விற்கச் சமைந்த மங்கையர்
கயல்கள் சிவப்பப் பரிந்து நண்பொடும் இன்பமூறிக்
கனிஇதழ் உற்றுற்றருந்தி அங்குறும்
அவச மிகுத்துப் பொருந்தி இன்புறு
கலகம் விளைத்துக் கலந்து மண்டணை ...... அங்கமீதே
குலவிய நற்கைத் தலம் கொடங்கணை
கொடியிடை மெத்தத் துவண்டு தண்புயல்
குழலளகக் கட்டவிழ்ந்து பண்டையில் அங்கம்வேறாய்க்
குறிதரு வட்டத்தடர்ந்த சிந்துர
முகதல முத்துப் பொலிந்திலங்கிட
கொடிய மயல்செய்ப் பெருந்தடம்தனில் ...... மங்கலாமோ
இலகிய சித்ரப் புனம் தனிந்துறை
குறமகள் கச்சுக் கிடந்த கொங்கைமின்
இனிதுறு பத்மப் பதம் பணிந்தருள் ...... கந்தவேளே
எழுகடல் வற்றப் பெரும் கொடுங்கிரி
இடிபட மிக்கப் ப்ரசண்டம் விண்டுறும்
இகலர் பதைக்கத் தடிந்திலங்கிய ...... செங்கை வேலா
பலவித நல் கற்படர்ந்த சுந்தரி
பயில்தரு வெற்புத் தரும் செழும்கொடி
பணைமுலை மெத்தப் பொதிந்து பண்புறுகின்ற பாலைப்
பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ்
பகரென இச்சித்துகந்து கொண்டருள்
பழநியில் வெற்பிற் திகழ்ந்து நின்றருள் ...... தம்பிரானே.
திருப்பாடல் 34:
தனதனன தத்த தான தனதனன தத்த தான
தனதனன தத்த தான ...... தனதான
கலைகொடு பவுத்தர் காம கருமிகள் துருக்கர் மாய
கபிலர் பகர் அக்கணாதர் ...... உலகாயர்
கலகமிடு தர்க்கர் வாம பயிரவர் விருத்தரோடு
கலகலென மிக்க நூல்கள் அதனாலே
சிலுகியெதிர் குத்தி வாது செயவும் ஒருவர்க்கு நீதி
தெரிவரிய சித்தியான ...... உபதேசம்
தெரிதர விளக்கி ஞான தரிசநம் அளித்து வீறு
திருவடியெனக்கு நேர்வதொரு நாளே
கொலையுற எதிர்த்த கோர இபமுக அரக்கனோடு
குரகத முகத்தர் சீய ...... முகவீரர்
குறையுடலெடுத்து வீசி அலகையொடு பத்ர காளி
குலவியிட வெற்றி வேலை ...... விடுவோனே
பலமிகு புனத்துலாவு குறவநிதை சித்ர பார
பரிமள தனத்தில் மேவு ...... மணிமார்பா
படைபொருது மிக்க யூக மழைமுகிலை ஒட்டியேறு
பழநிமலை உற்ற தேவர் ...... பெருமாளே.
திருப்பாடல் 35:
தனதனன தத்த தந்த தனதனன தத்த தந்த
தனதனன தத்த தந்த ...... தனதான
களபமுலையைத் திறந்து தளவ நகையைக் கொணர்ந்து
கயலொடு பகைத்த கண்கள் ...... குழைதாவக்
கரியகுழலைப் பகிர்ந்து மலர்சொருகு கொப்பவிழ்ந்து
கடியிருள் உடுக்குலங்கள் எனவீழ
முழுமதி எனச் சிறந்த நகைமுகம் மினுக்கி இன்ப
முருகிதழ் சிவப்ப நின்று ...... விலைகூறி
முதலுளது கைப்புகுந்து அழகு துகிலைத் திறந்து
முடுகும் அவருக்கிரங்கி ...... மெலிவேனோ
இளமதி கடுக்கை தும்பை அரவணிபவர்க்கிசைந்து
இனியபொருளைப் பகர்ந்த ...... குருநாதா
இபமுகவனுக்கு கந்த இளையவ மருக்கடம்ப
எனதுதலையில் பதங்கள் அருள்வோனே
குழகென எடுத்துகந்த உமைமுலை பிடித்தருந்து
குமரசிவ வெற்பமர்ந்த ...... குகவேலா
குடிலொடு மிகச் செறிந்த இதணுள புனத்திருந்த
குறவர் மகளைப் புணர்ந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 36:
தனத்த தனதன தனதன தந்தத்
தனத்த தனதன தனதன தந்தத்
தனத்த தனதன தனதன தந்தத் ...... தனதான
கறுத்த குழலணி மலரணி பொங்கப்
பதித்த சிலைநுதல் அணிதிலதம் பொற்
கணைக்கு நிகர்விழி சுழலெழு கஞ்சச் ...... சிரமான
கழுத்தில் உறுமணி வளைகுழை மின்னக்
குவட்டு முலையசை படஇடை !அண்மைக்
கமைத்த கலை இறுகுறு துவள் வஞ்சிக் ...... கொடிபோலச்
சிறுத்த களமிகு மதமொழுகின் சொல்
குயில்கள் எனமட மயில் எகினங்கள்
திருக்கு நடைபழகிகள் களபம் கச்சுடைமாதர்
திகைத்த தனமொடு பொருள்பறி ஒண்கண்
குவட்டி அவர்வலை அழலுறு பங்கத்
திடக்குதலை புலையவர் வழி இன்பைத் ...... தவிர்வேனோ
பறித்த விழிதலை மழுவுழை செங்கைச்
செழித்த சிவபரன் இதழிநல் தும்பைப்
படித்த மதியறல் அரவணி சம்புக் ...... குருநாதா
பருத்த அசுரர்களுடன்மலை துஞ்சக்
கொதித்த அலைகடல் எரிபட செம்பொன்
படைக்கை மணிஅயில் விடுநடனம்கொள் ...... கதிர்வேலா
தெறித்து விழியர உடல் நிமிரம்பொற்
குவட்டொள்திகை கிரி பொடிபட சண்டச்
சிறப்பு மயில்மிசை பவுரிகொளும் பொற்திரு பாதா
சிறக்கும் அழகிய திருமகள் வஞ்சிக்
குறத்தி மகளுமை மருமகள் கொங்கைச்
சிலைக்குள் அணைகுக சிவமலை கந்தப் ...... பெருமாளே.
திருப்பாடல் 37:
தனன தந்தன தந்த தானன
தனன தந்தன தந்த தானன
தனன தந்தன தந்த தானன ...... தந்ததான
கனக கும்பம் இரண்டு நேர்மலை
எனநெருங்கு குரும்பை மாமணி
கதிர் சிறந்த வடம் குலாவிய ...... முந்து சூதம்
கடையில் நின்று பரந்து நாள்தொறும்
இளகி விஞ்சியெழுந்த கோமள
களப குங்கும கொங்கை யானையை ...... இன்பமாக
அனைவரும் கொளும் என்றுமே விலை
இடும் மடந்தையர் தங்கள் தோதகம்
அதின் மருண்டு துவண்டவாசையில் ...... நைந்துபாயல்
அவச மன்கொளும் இன்ப சாகரம்
முழுகும் வஞ்சக நெஞ்சையேஒழி
தரு பதம் கதி எம்பிரான்அருள் ...... தந்திடாயோ
தனத னந்தன தந்த னாவென
டிகுகு டிங்குகு டிங்கு பேரிகை
தகுதி திந்திகு திந்த தோவென ...... உந்துதாளம்
தமர சஞ்சலி சஞ்சலா என
முழவு டுண்டுடு டுண்டு டூவென
தருண கிண்கிணி கிண்கி ணாரமு ...... முந்தஓதும்
பணி பதம் கயம் எண்திசா முக
கரிஅடங்கலும் அண்ட கோளகை
பதறி நின்றிட நின்று தோதக ...... என்றுதோகை
பவுரி கொண்டிட மண்டியேவரு
நிசிசரன்கிளை கொன்ற வேலவ
பழநியங் கிரியின் கண் மேவிய ...... தம்பிரானே.
திருப்பாடல் 38:
தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான
கனத்திறுகிப் பெருத்திளகிப்
பணைத்து மணத்திதத்து முகக்
கறுப்பு மிகுத்தடர்த்து நிகர்த் ...... தலமேராய்
கவட்டையும் மெத்தடக்கி !மதர்த்
தறக் கெருவித்திதத்திடு நல்
கலைச் சவுளித் தலைக்குலவிக் ...... களிகூரும்
தனத்தியர் கட்கிதத்து !மிகுத்
தனற்குள் மெழுக்கெனப் புவியில்
தவித்திழி சொல் பவக்கடல் உற்றயர்வாலே
சலித்த வெறித்துடக்கு !மனத்
திடக்கன் எனச் சிரிக்கமயல்
சலத்தின் வசைக்கிணக்கம்உறக் ...... கடவேனோ
புனத்தின்மலைக் குறத்தி!உயர்த்
திருக்கு தனக் குடத்தின்நறைப்
புயத்தவ நற் கருத்தையுடைக் ...... குகவீரா
!பொருப்பரசற்கிரக்கமொடுற்
றறல் சடிலத்தவச் சிவனில்
புலச்சி தனக்கிதத்தை மிகுத்திடு நாதா
சினத்தெதிர் துட்டரக்கர் தமைத்
திகைத்துவிழக் கணப்பொழுதில்
சிதைத்திடுநற் கதிர்க் கை படைத்துடையோனே
செருக்கொடுநல் தவக் !கமலத்
தயற்கும் அரிக்கருள் புரிசைத்
திருப்பழநிக் கிரிக் குமரப் ...... பெருமாளே.
திருப்பாடல் 39:
தனந்த தனதன தனதன தனதன
தனந்த தனதன தனதன தனதன
தனந்த தனதன தனதன தனதன ...... தனதான
குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
குலைந்த செயிர்மயிர் குருதியொடிவை பல ...... கசுமாலக்
குடின் புகுதும்அவர் அவர்கடு கொடுமையர்
இடும்பர்ஒருவழி இணையிலர் கசடர்கள்
குரங்கர் அறிவிலர் நெறியிலர் மிருகணை ...... விறலான
சரம்பர் உறவனை நரகனை துரகனை
இரங்கு கலியனை பரிவுறு சடலனை
சவுந்தரிக முக சரவண பதமொடு ...... மயிலேறித்
தழைந்த சிவசுடர் தனையென மனதினில்
அழுந்த உரைசெய வருமுக நகையொளி
தழைந்த நயனமும் இருமலர் சரணமும் ...... மறவேனே
இரும்பை வகுளமொடியை பல முகில்பொழில்
உறைந்த குயிலளி ஒலிபர விடமயில்
இசைந்து நடமிடும் இணையிலி புலிநகர் ...... வளநாடா
இருண்ட குவடிடி பொடிபட வெகு!முக
டெரிந்து மகரமொடிசை கரி குமுறுக
இரைந்த அசுரரொடிப பரி யமபுரம் ...... விடும்வேளே
சிரம்பொன் அயனொடு முநிவர்கள் அமரர்கள்
அரம்பை மகளிரொடரகர சிவசிவ
செயம்புவென நடமிடு பதம் அழகியர் ...... குருநாதா
செழும்ப வளவொளி நகைமுக மதிநகு
சிறந்த குறமகள் இணைமுலை புதைபட
செயம் கொடணைகுக சிவமலை மருவிய ...... பெருமாளே.
திருப்பாடல் 40:
தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன
தனன தனதன தனன தனதன ...... தனதான
குருதி மலசலம் ஒழுகு நரகுடல்
அரிய புழுவது நெளியும் உடல்மத
குருபி நிணசதை விளையும் உளைசளி ...... உடலூடே
குடிகளெனபல குடிகை வலிகொடு
குமர வலிதலை வயிறு வலியென
கொடுமை எனபிணி கலகமிடும் இதை ...... அடல்பேணி
மருவி மதனனுள் கரிய புளகித
மணிஅசல பல கவடி மலர்புனை
மதன கலைகொடு குவடு மலைதனில் ...... மயலாகா
மனது துயரற வினைகள் சிதறிட
மதன பிணியொடு கலைகள் சிதறிட
மனது பதமுற எனது தலைபதம் அருள்வாயே
நிருதர் பொடிபட அமரர் பதிபெற
நிசித அரவளை முடிகள் சிதறிட
நெறிய கிரிகடல் எரிய உருவிய ...... கதிர்வேலா
நிறைய மலர்பொழி அமரர் முநிவரும்
நிருப குருபர குமர சரணென
நெடிய முகிலுடல் கிழிய வருபரி ...... மயிலோனே
பருதி மதிகனல் விழிய சிவனிடம்
மருவும் ஒருமலை அரையர் திருமகள்
படிவ முகிலென அரியின் இளையவள் அருள்பாலா
பரம கணபதி அயலின் மதகரி
வடிவு கொடுவர விரவு குறமகள்
அபயமென அணை பழநி மருவிய ...... பெருமாளே.
திருப்பாடல் 41:
தனன தனதன தனன தனதன
தனன தனதன ...... தனதான
குழல் அடவிமுகில் பொழில் விரவில் நுதல்
குமுத அதரம் முறுவல்ஆரம்
குழை மகரம்வளை மொழி குயிலமுது
குய முளரி முகை ...... கிரிசூது
விழிகயல் அயில் பகழி வருணிகரு
விளை குவளை விடமென நாயேன்
மிக அரிவையரை அவ நெறிகள் சொலி
வெறிதுளம் விதனம் உறலாமோ
கழல்பணிய வினை கழல் பணியைஅணி
கழல் பணிய அருள் ...... மயில்வீரா
கமலை திருமருக மலை நிருதர்!உ
க மலை தொளைசெய்த ...... கதிர்வேலா
பழனி மலைவரு பழநி மலைதரு
பழநி மலை முருக விசாகா
பரவு பரவைகொல் பரவை வணஅரி
பரவும் இமையவர் ...... பெருமாளே.
திருப்பாடல் 42:
தனன தனன தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
குழல்கள் சரிய மொழிகள் பதற விழிகள்உலவ
கொலைகள் செயவெ ...... களவோடே
குலவு கிகிகி கிகிகி எனவும் மிடறில் ஒலிகள்
குமுற வளையின் ஒலிமீற
இளநிரெனவும் முலைகள் அசைய உபய தொடையும்
இடையும் அசைய ...... மயில்போலே
இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர்
இடரில் மயலில் ...... உளர்வேனோ
மிளிரு மதுர கவிதையொளிரும் அருண கிரிசொல்
விஜய கிரிசொல் ...... அணிவோனே
விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி
விபின கெமனி ...... அருள்பாலா
பழைய மறையின் முடிவில் அகர மகர உகர
படிவ வடிவம் உடையோனே
பழன வயல்கள் கமுகு கதலி பனசை உலவ
பழநி மருவு ...... பெருமாளே.
திருப்பாடல் 43:
தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத்
தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான
குறித்தமணிப் பணித்துகிலைத்
திருத்தி உடுத்திருள் குழலைக்
குலைத்து முடித்திலைச் சுருளைப் ...... பிளவோடே
குதட்டிய துப்புதட்டை !மடித்
தயில் பயிலிட்டழைத்து மருள்
கொடுத்துணர்வைக் கெடுத்துநகக் ...... குறியாலே
பொறித்த தனத்தணைத்து மனச்
செருக்கினர் கைப் பொருள் கவரப்
புணர்ச்சிதனில் பிணிப்படுவித்திடுமாதர்
புலத்தலையில் செலுத்து மனப்
ப்ரமத்தைஅறப் ப்ரசித்தமுறப்
புரித்தருளித் திருக்கழலைத் ...... தருவாயே
பறித்ததலைத் திருட்டமணக்
குருக்கள்அசட்டுருக்களிடைப்
பழுக்கள்உகக் கழுக்கள்புகத் ...... திருநீறு
பரப்பியதத் திருப்பதி!புக்
கனல் புனலில் கனத்தசொலைப்
பதித்தெழுதிப் புகட்டதிறல் ...... கவிராசா
செறித்தசடைச் சசித்தரி!அத்
தகப்பன் மதித்துகப்பன் எனச்
சிறக்கஎழுத்தருள் கருணைப் ...... பெருவாழ்வே
திகழ்ப்படுசெய்ப் பதிக்குளெனைத்
தடுத்தடிமைப் படுத்தஅருள்
திருப்பழநிக் கிரிக்குமரப் ...... பெருமாளே.
திருப்பாடல் 44:
தந்தம் தந்தம் தந்தம் தந்தம்
தனதன தனதன தனதன தனதன
தந்தம் தந்தம் தந்தம் தந்தம்
தனதன தனதன தனதன தனதன
தந்தம் தந்தம் தந்தம் தந்தம்
தனதன தனதன தனதன தனதன ...... தனதான
குன்றும் குன்றும் செண்டும் கன்றும்
படிவளர் முலையினில் ம்ருகமத மெழுகியர்
இந்தும் சந்தம் தங்கும் தண்செங்
கமலமும் எனஒளிர் தருமுக வநிதையர்
கொஞ்சும் கெஞ்சும் செஞ்சும் வஞ்சம்
சமரசம் உறவொரு தொழில்வினை புரிபவர் ...... விரகாலும்
கும்பும் பம்பும் சொம்பும் தெம்பும்
குடியென வளர்தரு கொடியவர் கடியவர்
எங்கெங்கெம் பங்கென்றென்றென்றும்
தனதுரிமைஅதென நலமுடன் அணைபவர்
கொஞ்சம் தங்கின்பம் தந்தெந்தன்
பொருள் உளதெவைகளும் நயமொடு கவர்பவர் ...... மயலாலும்
என்றென்றும் கன்றும் துன்பும்!கொண்
டுனதிரு மலரடி பரவிட மனதினில்
நன்றென்றும் கொண்டென்றும் சென்றும்
தொழு மகிமையின் நிலை உணர்வில்நின் அருள்பெற
இன்பும் பண்பும் தெம்பும் !சம்பந்
தமும் மிக அருள்பெற விடைதரு விதமுனம் அருள்வாயே
எங்கும் கஞ்சன் வஞ்சன் கொஞ்சன்
அவன்விடும் அதிசய வினையுறும் அலகையை
வென்றும் கொன்றும் துண்டம் துண்டம்
செயுமரி ஒருமுறை இரணிய வலனுயிர்
நுங்கும் சிங்கம் வங்கம் தன்கண்
துயில்பவன் எகினனை உதவிய கருமுகில் ...... மருகோனே
ஒன்றென்றென்றும் துன்றும் குன்றும்
தொளைபட மதகரி முகனுடல் நெரிபட
டுண்டுண் டுண்டுண் டிண்டிண் டிண்டிண்
டிடியென விழுமெழு படிகளு மதிர்பட
ஒண்சங்கம் சஞ்சஞ் சஞ்சஞ் !சென்
றொலிசெய மகபதி துதிசெய அசுரரை ...... அடுவோனே
உந்தன் தஞ்சம் தஞ்சம் தஞ்சம்
சிவனருள் குருபர என முநிவரர் !பணி
யும் தொந்தம் தொந்தம் தொந்தம் !என்
றொலிபட நடமிடு பரனருள் அறுமுக
உண்கண் வண்டும் கொண்டும் தங்கும்
விரைபடு குரவலர் அலர்தரும் எழில்புனை ...... புயவீரா
அன்றென்றொன்றும் !கொண்டன்பின்றெங்
கடியவர் தமையிகழ் சமணர்கள் கழுவினில்
அங்கம் சிந்தும் பங்கம் துஞ்சும்
படியொரு தொகுதியின் உரைநதி எதிர்பட
அன்பின் பண்பெங்கும் கண்டென்பின்
அரிவையை எதிர்வர விடுகவி புகல்தரு ...... திறலோனே
அண்டம் கண்டும் பண்டுண்டும் !பொங்
கமர் தனில் விஜயவன் இரதமை நடவிய
துங்கன் வஞ்சன் சங்கன் மைந்தன்
தருமகன் முநிதழல் வருதகர் இவர்வல
அங்கம் கஞ்சம் சங்கம் பொங்கும்
கயநிறை வளமுறு சிவகிரி மருவிய ...... பெருமாளே.
திருப்பாடல் 45:
தந்தத் தனதன தனனா தனனா
தந்தத் தனதன தனனா தனனா
தந்தத் தனதன தனனா தனனா ...... தனதான
கொந்துத் தருகுழல் இருளோ புயலோ
விந்தைத் தருநுதல் சிலையோ பிறையோ
கொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ ...... விழிவேலோ
கொங்கைக் குடமிரு கரியோ கிரியோ
வஞ்சிக் கொடியிடை துடியோ பிடியோ
கொங்குற்றுயர் அல்குல் அரவோ ரதமோ ...... எனுமாதர்
திந்தித் திமிதிமி திமிதா திமிதோ
தந்தித் திரிகட கிடதா எனவே
சிந்திப்படி பயில் நடமாடிய பாவிகள் பாலே
சிந்தைத் தயவுகள் புரிவேன் உனையே
வந்தித்தருள்தரும் இருசேவடியே
சிந்தித்திட மிகு மறையாகிய சீர் அருள்வாயே
வெந்திப்புடன் வரும் அவுணேசனையே
துண்டித்திடுமொரு கதிர்வேல் உடையாய்
வென்றிக்கொரு மலை எனவாழ் மலையே ...... தவவாழ்வே
விஞ்சைக்குடையவர் தொழவே வருவாய்
கஞ்சத்தயனுடன் அமரேசனுமே
விந்தைப் பணிவிடை புரிபோதவர் மேல் அருள்கூர்வாய்
தொந்திக் கணபதி மகிழ் சோதரனே
செங்கண் கருமுகில் மருகா குகனே
சொந்தக் குறமகள் கணவா திறல்சேர் ...... கதிர்காமா
சொம்பில் பலவள முதிர்சோலைகள் சூழ்
இஞ்சித் திருமதிள் புடைசூழ் அருள்சேர்
துங்கப் பழநியில் முருகா இமையோர் ...... பெருமாளே.
திருப்பாடல் 46:
தான தனதனன தான தனதனன
தான தனதனன தான தனதனன
தான தனதனன தான தனதனன ...... தனதான
கோல மதிவதனம் வேர்வு தரஅளக
பாரம் நெகிழவிழி வேல்கள் சுழலநுவல்
கோவை இதழ்வெளிற வாய்மை பதறியிள ...... முகையான
கோகனக உபய மேரு முலையசைய
நூலின் இடைதுவள வீறு பறவைவகை
கூற இனியகளம் ஓலமிட வளைகள் ...... கரமீதே
காலின் அணிகனக நூபுரமும் ஒலிகள்
ஓலமிடஅதிக போகமது மருவு
காலை வெகுசரச லீலை அளவுசெயும் ...... மடமானார்
காதல் புரியும் அநுபோக நதியினிடை
வீழுகினும் அடிமை மோசமற உனது
காமர் கழலிணைகள் ஆனதொரு சிறிது ...... மறவேனே
ஞால முழுதும் அமரோர்கள் புரியும்!இக
லாக வரும்அவுணர் சேர உததியிடை
நாசமுறஅமர்செய் வீரதர குமர ...... முருகோனே
நாடி ஒருகுறமின் மேவு தினை செய்புன
மீதில் இயலகல் கல் நீழலிடை நிலவி
நாணம் வரவிரகம் ஓதும் ஒருசதுர ...... புரிவேலா
மேலை அமரர்தொழும் ஆனைமுகர் அரனை
ஓடி வலம்வருமுன் மோது திரைமகர
வேலை உலகை வலமாக வரு துரக ...... மயில்வீரா
வீறு கலிசைவரு சேவகனதிதயம்
மேவும் முதல்வ வயல் வாவி புடைமருவு
வீரை வருபழநி ஞான மலையில்வளர் ...... பெருமாளே.
திருப்பாடல் 47:
தனனத்தத் தனனத் தத்தத்
தனனத்தத் தனனத் தத்தத்
தனனத்தத் தனனத் தத்தத்
தனனத்தத் தனனத் தத்தத்
தனனத்தத் தனனத் தத்தத்
தனனத்தத் தனனத் தத்தத் ...... தனதான
சகடத்தில் குழையிட்டெற்றிக்
குழலுக்குச் சரம் வைத்தெற்றிப்
புளகித்துக் குவளைக் கண்பொன்
கணை ஒத்திட்டுழலச் சுத்தித்
தரளப்பல் பவளத்தொட்டக்
களபப்பொட்டுதல் இட்டத்திக் குவடான
தனதுத்திப் படிகப் !பொற்பிட்
டசையப் பெள் பசளைத் துப்புக்
கொடி ஒத்திட்டிடையில் பட்டைத்
தகையில் தொட்டுகளப் பச்சைச்
சரணத்துக்கியலச் சுற்றிச்
சுழலிட்டுக் கடனைப் பற்றிக் ...... கொளுமாதர்
சுகமுற்றுக் கவலைப் பட்டுப்
பொருள் கெட்டுக் கடைகெட்டுச்சொல்
குளறிட்டுத் தடிதொட்டெற்றிப்
பிணியுற்றுக்கசதிப் பட்டுச்
சுக துக்கத்திடர் கெட்டுற்றுத்
தளர்பட்டுக் கிடைபட்டுப்பிக் கிடைநாளில்
சுழலர்ச் சக்கிரியைச் !சுற்றிட்
டிறுகக் கட்டுயிரைப் பற்றிக்
கொளுகப்பற் பலரைக் கட்டிக்
கரம்வைத்துத் தலையில் குத்திச்
சுடுகட்டைச் சுடலைக் !கட்டைக்
கிரையிட்டுப் பொடிபட்டுட்கிச் ...... சடமாமோ
திகுடத்திக் குகுடட் டுட்டுட்
டமடட்டட் டமடட் டிக்குட்
டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத்
தொகுதொக்குத் தொகுதத் தொக்குச்
செகணக்கச் செகணச் செக்குத்
தகுடத்தத் தகுடத் தட்டுட் ...... டிடிபேரி
திமிலைக் கைத்துடி தட்டெக்கைப்
பகடிட்டுப் பறையொத்தக் கண்
திகையெட்டுக் கடல் வற்றித் !தித்
தர உக்கக் கிரியெட்டுத் !தைத்
தியருக்குச் சிரமிற்றுட்கச்
சுரர்பொற்புச் சொரியக் கைத் தொட்டிடும்வேலா
பகலைப்பல் சொரியத் தக்கன்
பதி புக்கட்டழல்இட்டுத் திண்
புரம் மட்கிக் கழைவில் புட்பச்
சரனைச் சுட்டயனைக் கொத்திப்
பவுரிக்கொள் பரமர்க்குச் சற்
குருஒத்துப் பொருளைக் கற்பித்தருள்வோனே
பவளப்பொன் கிரிதுத்திப் பொன்
தனகொச்சைக் கிளிசொல் பற்றிப்
பரிவுற்றுக் கமலப் !புட்பத்
திதழ்பற்றிப் புணர்ச் சித்ரப்பொன்
படிகத்துப் பவளப் பச்சைப்
பதமுத்துப் பழநிச் சொக்கப் ...... பெருமாளே.
திருப்பாடல் 48:
தந்தன தானன தத்தத் தந்தன
தந்தன தானன தத்தத் தந்தன
தந்தன தானன தத்தத் தந்தன ...... தனதான
சிந்துர கூர மருப்புச் செஞ்சரி
செங்கை குலாவ நடித்துத் தென்புற
செண்பக மாலை முடித்துப் பண்புள ...... தெருவூடே
சிந்துகள் பாடி முழக்கிச் செங்கயல்
அம்புகள் போல விழித்துச் சிங்கியில்
செம்பவளாடை துலக்கிப் பொன்பறி ...... விலைமாதர்
வந்தவரார் எனழைத்துக் கொங்கையை
அன்புற மூடி நெகிழ்த்திக் கண்பட
மஞ்சணிராடி மினுக்கிப் பஞ்சணை ...... தனிலேறி
மந்திர மோகமெழுப்பிக் கெஞ்சிட
முன்றலை வாயிலடைத்துச் சிங்கிகொள்
மங்கையராசை விலக்கிப் பொன்பதம் அருள்வாயே
இந்திர நீல வனத்தில் செம்புவி
அண்ட கடாகம் அளித்திட்டண்டர்கள்
எண்படு சூரையழித்துக் கொண்டருள் ஒருபேடி
இன்கன தேரை நடத்திச் செங்குரு
மண்டல நாடும் அளித்துப் பஞ்சவர்
இன்புறு தோழ்மை உடைக் கத்தன் திரு ...... மருகோனே
சந்திர சூரியர் திக்கெட்டும்புகழ்
அந்தமில் வாழ்வது பெற்றுத் தங்கிய
சங்கரனார் செவி புக்கப் பண்பருள் ...... குருநாதா
சம்ப்ரமமான குறத்திக்கின்புறு
கொங்கையின் மேவு சமர்த்தச் சுந்தர
தண்தமிழ் சேர் பழநிக்குள் தங்கிய ...... பெருமாளே.
திருப்பாடல் 49:
தனதனன தனனதன தத்தத் தனத்ததன
தனதனன தனனதன தத்தத் தனத்ததன
தனதனன தனனதன தத்தத் தனத்ததன ...... தனதான
சிறுபறையும் முரசுதுடி சத்தக் கணப்பறையும்
மொகுமொகென அதிரவுடன் எட்டிப் பிடித்துமுடி
சிறுகயிறு நெடிதுகொடு கட்டிட்டிழுக்க இனி ...... அணுகாதே
சிலதமர்கள் உறவுகிளை கத்திப் பிதற்றியெடு
சுடலைதனில் இடுகனலை இட்டுக் கொளுத்து புனல்
திரைகடலில் முழுகென உரைக்கப் படிக்குடிலை ...... ஒழியாதே
மறைமுறையின் இறுதிநிலை முத்திக்கிசைத்தபடி
உடலுயிர்கள் கரணவெளி பட்டுக் குணத்திரயம்
வழிபடவும் நினதடிமை இச்சைப் படுத்துவதும் ஒருநாளே
வருதுரக மயில்மணிகள் சத்திக்க நிர்த்தமிட
ஒருபதுடன் இருபுயமும் மட்டுத் தொடைக்கிசைய
மனமகிழ இனியமொழி செப்பிச் சிவத்தபதம் அருள்வாயே
நறையிதழி இறுகுபல புட்பத் திரள்களொடு
சிறுபிறையும் அரவும்எழில் அப்புத் திருத்தலையில்
நளினமுற அணிசடையர் மெச்சிப் ப்ரியப்படவும் ...... மயிலேறி
நவநதிகள் குமுகுமென வெற்புத் திரள்சுழல
அகிலமுதல் எழுபுவனம் எத்தத் திடுக்கிடவும்
நவமணிகள் உரகனுடல் கக்கத் துரத்திவரு ...... முருகோனே
குறவர்முனை கெடமனது வெட்கப் படக்குடிலில்
மலையிலெழு தினையிதணில் வைத்துச் சிறுக்கியிரு
குவிமுலையும் அணிஇடையும் மெச்சிப் புணர்ச்சிசெயும் ...... மணவாளா
குறு முநிவன் இருபொழுதும் அர்ச்சித்து முத்திபெற
அறிவுநெறி தவநிலைகள் செப்புத் தமிழ்க்கினிய
குருகுமர பழநிவளர் வெற்புத்தனில் திகழும் ...... பெருமாளே.
திருப்பாடல் 50:
தானதன தந்த தானதன தந்த
தானதன தந்த தானதன தந்த
தானதன தந்த தானதன தந்த தனதான
சீயுதிரம் எங்கும் ஏய்புழு நிரம்பும்
மாயமல பிண்ட நோயிடு குரம்பை
தீநரிகள் கங்கு காகம்இவை தின்பதொழியாதே
தீதுள குணங்களே பெருகு தொந்த
மாயையில் வளர்ந்த தோல்தசை எலும்பு
சேரிடு நரம்பு தானிவை பொதிந்து ...... நிலைகாணா
ஆயது நமன்கை போகவுயிர் அந்த
நாழிகையில் விஞ்ச ஊசிடும் இடும்பை
ஆகிய உடம்பு பேணி நிலையென்று ...... மடவார்பால்
ஆசையை விரும்பியே விரக சிங்கி
தானுமிக வந்து மேவிட மயங்கும்
ஆழ்துயர் விழுந்து மாளும்எனை அன்பு ...... புரிவாயே
மாயைவல கஞ்சனால் விட வெகுண்டு
பார்முழுதும் அண்ட கோளமும் நடுங்க
வாய்பிளறி நின்று மேகநிகர் தன்கை ...... அதனாலே
வாரியுற அண்டி வீறொடு முழங்கு
நீரை நுகர்கின்ற கோபமொடெதிர்ந்த
வாரண இரண்டு கோடொடிய வென்ற ...... நெடியோனாம்
வேயினிசை கொண்டு கோநிரை புரந்து
மேயல்புரி செங்கண் மால்மருக துங்க
வேலகிரவுஞ்ச மால்வரை இடிந்து ...... பொடியாக
வேலைவிடு கந்த காவிரி விளங்கு
கார்கலிசை வந்த சேவகன் வணங்க
வீரைநகர் வந்து வாழ் பழநி அண்டர் ...... பெருமாளே.
திருப்பாடல் 51:
தான தனதனன தான தனதனன
தான தனதனன ...... தனதான
சீறலசடன் வினைகாரன் முறைமையிலி
தீமை புரிகபடி ...... பவநோயே
தேடு பரிசிகன நீதி நெறி முறைமை
சீர்மை சிறிதுமிலி ...... எவரோடும்
கூறு மொழியது பொய்யான கொடுமையுள
கோளன் அறிவிலியுன் அடிபேணாக்
கூளன் எனினும்எனை நீயுன்அடியரொடு
கூடும் வகைமையருள் ...... புரிவாயே
மாறுபடும் அவுணர் மாள அமர்பொருது
வாகையுள மவுலி ...... புனைவோனே
மாகமுகடதிர வீசு சிறை மயிலை
வாசியென உடைய ...... முருகோனே
வீறு கலிசைவரு சேவகனதிதயம்
மேவுமொரு பெருமை ...... உடையோனே
வீரையுறை குமர தீரதர பழநி
வேல இமையவர்கள் ...... பெருமாளே.
திருப்பாடல் 52:
தனதனன தானந்த தத்ததன தானதன
தனதனன தானந்த தத்ததன தானதன
தனதனன தானந்த தத்ததன தானதன ...... தனதான
சுருதிமுடி மோனம்சொல் சிற்பரம ஞானசிவ
சமய வடிவாய் வந்த அத்து விதமான பர
சுடரொளியதாய் நின்ற நிட்கள சொரூபமுதல் ஒருவாழ்வே
துரியநிலையே கண்ட முத்தர்இதய கமலம்
அதனில்விளையா நின்ற அற்புத சுபோதசுக
சுய படிகமாய் இன்ப பத்மபதமே அடைய ...... உணராதே
கருவிலுருவே தங்கு சுக்கில நிதானவளி
பொருமஅதிலே கொண்ட முக்குண விபாக நிலை
கருதஅரியா வஞ்சகக் கபட மூடியுடல் ...... வினைதானே
கலகமிடவே பொங்கு குப்பைமல வாழ்வுநிஜம்
எனஉழலும் மாயம் செனித்த குகையே உறுதி
கருதசுழமாம் இந்த மட்டைதனை ஆள உனதருள்தாராய்
ஒருநியமமே விண்ட சட்சமய வேதஅடி
முடிநடுவுமாய் அண்ட முட்டைவெளியாகி உயிர்
உடலுணர்வதாய்எங்கும் உற்பனமதாகஅமர் உளவோனே
உத தரிசமாம் இன்ப புத்தமிர்த போகசுகம்
உதவும் அமலாநந்த சத்திகர மேவுணர
உருபிரணவா மந்த்ர கர்த்தவியமாக வரு ...... குருநாதா
பருதி கதிரேகொஞ்சு நற்சரண !நூபுரம
தசைய நிறை பேரண்டம் ஒக்க நடமாடுகன
பத கெருவிதா துங்க வெற்றி மயிலேறுமொரு ...... திறலோனே
பணியும்அடியார் சிந்தை மெய்ப் பொருளதாக நவில்
சரவணபவா ஒன்றும் வற்கரமும் ஆகிவளர்
பழநிமலை மேல்நின்ற சுப்ரமணியா அமரர் ...... பெருமாளே.
திருப்பாடல் 53:
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
சுருளளக பார கொங்கை மகளிர் வசமாய் இசைந்து
சுரதக்ரியையால் விளங்கும் ...... மதனூலே
சுருதியெனவே நினைந்து அறிவிலிகளோடிணங்கு
தொழிலுடைய யானும்இங்குன் அடியார்போல்
அருமறைகளே நினைந்து மநுநெறியிலே நடந்து
அறிவைஅறிவால் அறிந்து ...... நிறைவாகி
அகில புவனாதி எங்கும் வெளியுற மெய்ஞ்ஞான இன்ப
அமுதை ஒழியாதருந்த ...... அருள்வாயே
பருதிமகன் வாசல் மந்த்ரி அநுமனொடு நேர்பணிந்து
பரி தகழையா முன்வந்து ...... பரிவாலே
பரவிய விபீஷணன் பொன் மகுடமுடி சூட நின்ற
படைஞரொடு ராவணன் தன் உறவோடே
எரிபுகுத மாறில் அண்டர் குடி புகுதமாறு கொண்ட
ரகுபதி இராமசந்த்ரன் ...... மருகோனே
இளைய குறமாது பங்க பழநிமலை நாத கந்த
இமையவள் தனால் மகிழ்ந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 54:
தானந்த தனன தான தானந்த தனன தான
தானந்த தனன தான ...... தனதான
ஞானம்கொள் பொறிகள்கூடி வானிந்து கதிரிலாத
நாடண்டி நமசிவாய ...... வரையேறி
நாவின்ப ரசமதான ஆநந்த அருவி பாய
நாதங்களொடு குலாவி ...... விளையாடி
ஊனங்கள் உயிர்கள் மோக நானென்பதறிவிலாமல்
ஓம்அங்கி உருவமாகி ...... இருவோரும்
ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகினேறி
லோகங்கள் வலமதாட ...... அருள்தாராய்
தேனம்கொள் இதழிதாகி தாரிந்து சலில வேணி
சீர்அங்கன் எனது தாதை ...... ஒருமாது
சேர்பஞ்ச வடிவி மோகி யோகம்கொள் மவுன ஜோதி
சேர்பங்கின் அமல நாதன் அருள் பாலா
கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீல
காடந்த மயிலிலேறு ...... முருகோனே
காமன்கை மலர்கள் நாண வேடம்பெண் அமளி சேர்வை
காண் எங்கள் பழநி மேவு ...... பெருமாளே.
திருப்பாடல் 55:
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
தகர நறுமலர் பொதுளிய குழலியர்
கலக கெருவித விழிவலை படவிதி
தலையில் எழுதியும் மனைவிஇல்உறவிடு ...... அதனாலே
தனயர் அனைமதர் மனைவியர் சினெகிதர்
சுரபி விரவிய வகையென நினைவுறு
தவன சலதியின் முழுகியெ இடர்படு ...... துயர்தீர
அகர முதலுள பொருளினை அருளிட
இருகை குவிசெய்துள் உருகிட உருகியெ
அரகரென வலன் இடமுற எழில் உனதிருபாதம்
அருள அருளுடன் மருளற இருளற
கிரண அயில்கொடு குருகணி கொடியொடு
அழகு பெற மரகத மயில் மிசை வர ...... இசைவாயே
சிகர குடையினில் நிரைவர இசைதெரி
சதுரன் விதுரன்இல் வருபவன் அளையது
திருடி அடிபடு சிறியவன் நெடியவன் ...... மதுசூதன்
திகிரி வளைகதை வசிதநு உடையவன்
எழிலில் வடிவினன் அரவுபொன் முடிமிசை
திமித திமிதிமி எனநடமிடும் அரி ...... மருகோனே
பகர புகர்முக மதகரி உழைதரு
வனிதை வெருவமுன் வரஅருள் புரிகுக
பரம குருபர இமகிரி தருமயில் ...... புதல்வோனே
பலவின் முதுபழம் விழைவு செய்தொழுகிய
நறவு நிறைவயல் கமுகடர் பொழில்திகழ்
பழநி மலைவரு புரவல அமரர்கள் ...... பெருமாளே.
திருப்பாடல் 56:
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
தகைமைத் தனியில் பகை கற்றுறுகைத்
தநுமுட்ட வளைப்பவனாலே
தரளத் திரளில் புரளக் கரளத்
தமரத் திமிரக் ...... கடலாலே
உகைமுத்த மிகுத்ததெனப் பகல்!புக்
கொளி மட்கு மிகைப் ...... பொழுதாலே
உரையற்றுணர்வற்றுயிரெய்த்த !கொடிக்
குன நல் பிணையற்றரவேணும்
திகைபத்தும்உகக் கமலத்தனை முன்
சிறையிட்ட பகைத் ...... திறல்வீரா
திகழ்கற்பகம் மிட்டவனக் கனகத்
திருவுக்குருகிக் ...... குழைமார்பா
பகலக் கிரணப் பரணச் சடிலப்
பரமற்கொரு சொல் ...... பகர்வோனே
பவனப் புவனச் செறிவுற்றுயர் மெய்ப்
பழநிக் குமரப் ...... பெருமாளே.
திருப்பாடல் 57:
தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
தமரும் அமரும் அனையும் இனிய
தனமும் அரசும் ...... அயலாகத்
தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய ...... எறியாதே
கமல விமல மரகத மணி
கனக மருவும் இருபாதம்
கருத அருளி எனது தனிமை
கழிய அறிவு ...... தரவேணும்
குமர சமர முருக பரம
குலவு பழநி ...... மலையோனே
கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி ...... மணவாளா
அமரர் இடரும் அவுணர் உடலும்
அழிய அமர் செய்தருள்வோனே
அறமும் நிறமும் அயிலும் மயிலும்
அழகுமுடைய ...... பெருமாளே.
திருப்பாடல் 58:
தனதன தந்தான தானான தானதன
தனதன தந்தான தானான தானதன
தனதன தந்தான தானான தானதன ...... தனதான
தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்
விழிவலி வறள்சூலை காயாசு வாசம்வெகு
சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி ...... அணுகாதே
தலமிசை அதற்கான பேரோடு கூறியிது
பரிகரி எனக்காது கேளாது போலுமவர்
சரியும் வயதுக்கேது தாரீர் சொலீரெனவும் ...... விதியாதே
உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்
வகைவகை எடுத்தே தொடா மாலிகாபரணம்
உனதடியினில் சூடவேநாடு மாதவர்கள் இருபாதம்
உளமது தரித்தே வினாவோடு பாடியருள்
வழிபட எனக்கே தயாவோடு தாளுதவ
உரகமதெடுத்தாடு மேகார மீதின்மிசை ...... வரவேணும்
அலைகடல் அடைத்தே மகாகோர ராவணனை
மணிமுடி துணித்தாவியேயான ஜானகியை
அடலுடன் அழைத்தேகொள் மாயோனை மாமனெனும் ...... மருகோனே
அறுகினை முடித்தோனை ஆதாரமானவனை
மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்
அவைதனில் நடித்தோனை மாதாதையே எனவும் ...... வருவோனே
பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை
இருசரண வித்தார வேலாயுதா உயர்செய்
பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு ...... மணவாளா
பதும வயலில் பூகமீதே வரால்கள் துயில்
வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்
பழநி வரு கற்பூர கோலாகலா அமரர் ...... பெருமாளே.
திருப்பாடல் 59:
தனதனனத் தனதனனத் தனதனனத் ...... தனதான
தனதனனத் தனதனனத் தனதனனத் ...... தனதான
திடமிலிசற் குணமிலி நற்திறமிலி அற்புதமான
செயலிலி மெய்த் தவமிலிநற் செபமிலி சொர்க்கமும் ஈதே
இடமிலி கைக் கொடையிலி சொற்கியல்பிலி நற்றமிழ்பாட
இருபதம்உற்றிரு வினையற்றியல் கதியைப் ...... பெறவேணும்
கெடுமதிஉற்றிடும் அசுரக் கிளைமடியப் ...... பொரும்வேலா
கிரணகுறைப் பிறை அறுகக்கிதழ் மலர் கொக்கிறகோடே
படர்சடையில் புனைநடனப் பரமர் தமக்கொருபாலா
பலவயலில் தரளநிறைப் பழநிமலைப் ...... பெருமாளே.
திருப்பாடல் 60:
தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
திமிர உததி அனைய நரக
செனனம் அதனில் ...... விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியும் அணுகாதே
அமரர் வடிவும் அதிக குலமும்
அறிவு நிறையும் ...... வரவேநின்
அருளதருளி எனையும் !மனதொ
டடிமை கொளவும் ...... வரவேணும்
சமர முகவெல் அசுரர் தமது
தலைகள் உருள ...... மிகவேநீள்
சலதி அலற நெடிய பதலை
தகர அயிலை ...... விடுவோனே
வெமர அணையில் இனிது துயிலும்
விழிகள் நளினன் ...... மருகோனே
மிடறு கரியர் குமர பழநி
விரவும் அமரர் ...... பெருமாளே.
திருப்பாடல் 61:
தானதன தானதன தானான தானதன
தானதன தானதன தானான தானதன
தானதன தானதன தானான தானதன ...... தனதான
தோகை மயிலே கமல மானே உலாசமிகு
காமதுரையான மதவேள் பூவையே இனிமை
தோயும் அநுபோக சுகலீலா விநோத முழுதுணர்தேனே
சூதனைய சீதஇள நீரான பாரமுலை
மீதணைய வாருமிதழ் தாரீரென் ஆணைமொழி
சோர்வதிலை யானடிமை ஆவேனும் ஆணைமிக ...... மயலானேன்
ஆகமுறவே நகமதாலே விடாத!அடை
யாளமிட வாருமெனவே மாதரார்களுடன்
ஆசைசொலியே உழலும் மாபாதன் நீதியிலி ...... உனையோதேன்
ஆமுனது நேயஅடியாரோடு கூடுகிலன்
ஈறுநுதல் மீதிடல் இலாமூடன் ஏதுமிலி
ஆயினும் இயானடிமை ஈடேறவே கழல்கள் ...... தருவாயே
மாகம் முகடோடகில பாதாள !மேருவுட
னேசுழல வாரியதுவே தாழியா அமரர்
வாலிமுதலானவர்கள் ஏனோர்களால் அமுது ...... கடைநாளில்
வாருமெனவேஒருவர் நோகாமல் ஆலவிடம்
ஈசர்பெறு மாறுதவியே தேவர் யாவர்களும்
வாழஅமுதே பகிரும் மாமாயனார் இனிய ...... மருகோனே
மேகநிகரான கொடைமான் நாயகாதிபதி
வாரிகலி மாருத கரோபாரி மாமதன
வேள்கலிசை வாழவரும் காவேரி சேவகனதுளமேவும்
வீரஅதி சூரர்கிளை வேர்மாளவே பொருத
தீரகுமரா குவளை சேரோடை சூழ்கழனி
வீரைநகர் வாழ்பழநி வேலாயுதா அமரர் ...... பெருமாளே.
திருப்பாடல் 62:
தனதனன தந்த தத்த தானன
தனதனன தந்த தத்த தானன
தனதனன தந்த தத்த தானன ...... தனதான
நிகமமெனில் ஒன்று மற்றும் நாள்தொறும்
நெருடுகவி கொண்டு வித்தை பேசிய
நிழலர்சிறு புன்சொல் கற்று வீறுள ...... பெயர்கூறா
நெளியமுது தண்டு சத்ர சாமர
நிபிடமிட வந்து கைக்கு மோதிர
நெடுகிஅதி குண்டல ப்ரதாபமும் உடையோராய்
முகமுமொரு சம்பு மிக்க நூல்களும்
முதுமொழியும் வந்திருக்குமோ எனில்
முடிவிலவை ஒன்றுமற்று வேறொரு ...... நிறமாகி
முறியுமவர் தங்கள் வித்தை தானிது
முடியஉனை நின்று பத்தியால் மிக
மொழியும்வளர் செஞ்சொல் வர்க்கமே வர ...... அருள்வாயே
திகுதிகென மண்ட விட்ட தீயொரு
செழியனுடல் சென்று பற்றி ஆருகர்
திகையின்அமண் வந்து விட்ட போதினும் அமையாது
சிறியகர பங்கயத்து நீறொரு
தினையளவு சென்று பட்ட போதினில்
தெளியஇனி வென்றி விட்ட மோழைகள் ...... கழுவேற
மகிதலம் அணைந்த அத்த யோனியை
வரைவற மணந்து நித்த நீடருள்
வகைதனை அகன்றிருக்கும் மூடனை ...... மலரூபம்
வரவரமனம் திகைத்த பாவியை
வழியடிமை கொண்டு மிக்க மாதவர்
வளர் பழநி வந்த கொற்ற வேலவ ...... பெருமாளே.
திருப்பாடல் 63:
தத்தன தத்தன தனத்த தானன
தத்தன தத்தன தனத்த தானன
தத்தன தத்தன தனத்த தானன ...... தனதான
நெற்றி வெயர்த்துளி துளிக்கவேஇரு
குத்து முலைக்குடம் அசைத்து வீதியில்
நிற்பவர் மைப்படர் விழிக் கலாபியர் ...... மொழியாலே
நித்த மயக்கிகள் மணத்த பூமலர்
மெத்தையில் வைத்ததி விதத்திலேஉடல்
நெட்டுவரத்தொழில் கொடுத்து மேவியும் உறவாடி
உற்ற வகைப்படி பொருட்கள் யாவையும்
மெத்தவு நட்பொடு பறித்து நாள்தொறும்
உற்பன வித்தைகள் தொடுக்கும் மாதர்கள் உறவாமோ
உச்சித மெய்ப்புற அனைத் தயாவுடன்
மெய்ப்படு பத்தியின் இணக்கமேபெற
உட்குளிர் புத்தியை எனக்கு நீதர ...... வருவாயே
கற்ற தமிழ்ப்புலவனுக்குமே மகிழ்
உற்றொரு பொற்கொடி களிக்கவே பொரு
கற்பனை நெற்பல அளித்த காரணன் அருள்பாலா
கற்ப நகர்க் களிர்அளித்த மாதணை
பொற்புய மைப்புயல் நிறத்த !வானவர்
கட்கிறை உட்கிட அருள் க்ருபாகர ...... எனநாளும்
நற்றவர் அர்ச்சனை இடத் தயாபர
வஸ்துவெனப் புவியிடத்திலே வளர்
நத்தணி செக்கரன் மகிழ்ச்சி கூர்தரு ...... மருகோனே
நட்டுவர் மத்தளம் முழக்கமாமென
மைக்குல மெத்தவும் முழக்கமேதரு
நற்பழநிப்பதி செழிக்க மேவிய ...... பெருமாளே.
திருப்பாடல் 64:
தந்த தானனந் தானதன தானதன
தந்த தானனந் தானதன தானதன
தந்த தானனந் தானதன தானதன ...... தனதான
பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன்வெகு
வஞ்ச லோபியன் சூது கொலைகாரன் மதி
பண்கொளாதவன் பாவகடல் ஊடுநுழை ...... பவுஷாசை
பங்கன் மோதியம் பாழ்நரகில் வீணின்விழ
பெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறை
பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகு ...... சதிகாரர்
அஞ்சு பூதமுண்டா கடியகாரர் இவர்
தங்கள் வாணிபம் காரியம் அலாமல்அருள்
அன்பர் பாலுடன் கூடியறியாதபுகழ் அடியேனை
அண்டர் மாலயன் தேடிஅறியாதஒளி
சந்த்ர சேகரன் பாவை விளையாடு படி
கந்த நாடுடன் கூடிவிளையாடஅருள் ...... புரிவாயே
வஞ்ச மாசுரன் சேனை கடலோடு!குவ
டுங்கவே இனன் போலஒளிர் வேலைவிடு
வண்கையா கடம் பேடுதொடை ஆடுமுடி ...... முருகோனே
மங்கை மோகசிங்கார ரகு ராமரிட
தங்கை சூலிஅங் காளிஎமை ஈணபுகழ்
மங்களாயி சந்தான சிவகாமிஉமை ...... அருள்பாலா
கொஞ்சு மாசுகம் போலமொழி நீலகடை
பெண்கள் நாயகம் தோகைமயில் போலிரச
கொங்கை மால்குறம் பாவைஅவல் தீரவர ...... அணைவோனே
கொண்டல் சூழுமஞ் சோலைமலர் வாவிகயல்
கந்து பாய நின்றாடுதுவர் பாகையுதிர்
கந்தியோடகம் சேர்பழநி வாழ்குமர ...... பெருமாளே.
திருப்பாடல் 65:
தான தானதனத் தந்த தானன
தான தானதனத் தந்த தானன
தான தானதனத் தந்த தானன ...... தனதான
பாரியான கொடைக் கொண்டலேதிரு
வாழ் விசால தொடைத் திண்புயா எழு
பாரும்ஏறு புகழ்க் கொண்ட நாயக ...... அபிராம
பாவலோர்கள் கிளைக்கென்றும் வாழ்வருள்
சீலஞால விளக்கின்ப சீவக
பாக சாதன உத்துங்க மானத ...... எனவோதிச்
சீரதாக எடுத்தொன்று மாகவி
பாடினாலும் இரக்கம் செயாதுரை
சீறுவார் கடையில் சென்று தாம்அயர்வுறவீணே
சேய பாவகையைக் கொண்டு போய்!அறி
யாமலே கமரில் சிந்துவார் சிலர்
சேயனார் மனதில் சிந்தியார் அருகுறலாமோ
ஆரு நீர்மை மடுக் கண்கரா நெடு
வாயில் நேர்பட உற்றன்று !மூலமெ
னார வார மதத் தந்தி தானுய ...... அருள்மாயன்
ஆதி நாராணனற் சங்க பாணியன்
ஓதுவார்கள் உளத்தன்பன் !மாதவ
னான நான்முகனற் தந்தை சீதரன் ...... மருகோனே
வீர சேவக உத்தண்ட தேவ!கு
மார ஆறிருபொற் செங்கை நாயக
வீசு தோகை மயில் துங்க வாகனம் உடையோனே
வீறு காவிரியுள் கொண்ட !சேகர
னான சேவகன்நற் சிந்தை மேவிய
வீரை வாழ்பழநித் துங்க வானவர் ...... பெருமாளே.
திருப்பாடல் 66:
தனனத் தனதன தனதன தந்தத்
தனனத் தனதன தனதன தந்தத்
தனனத் தனதன தனதன தந்தத் ...... தனதான
புடவிக்கணி துகில் எனவளர் அந்தக்
கடலெட்டையும் அற குடிமுநி எண்கண்
புநிதச் சததள நிலைகொள் சயம்புச் ...... சதுர்வேதன்
புரமட்டெரியெழ விழிகனல் சிந்திக்
கடினத்தொடுசில சிறுநகை !கொண்டற்
புத கர்த்தரகர பரசிவன் இந்தத் ...... தனிமூவர்
இடசித்தமும் நிறை தெளிவுறவும்பொற்
செவியுள் பிரணவ ரகசியம் !அன்புற்
றிடவுற்பன மொழி உரைசெய் குழந்தைக் ...... குருநாதா
எதிருற்றசுரர்கள் படைகொடு !சண்டைக்
கிடம் வைத்திடஅவர் குலமுழுதும்!பட்
டிடஉக்கிரமொடு வெகுளிகள் பொங்கக் ...... கிரியாவும்
பொடிபட்டுதிரவும் விரிவுறும் அண்டச்
சுவர் விட்டதிரவும் முகடு !கிழிந்தப்
புறமப் பரவெளி கிடுகிடெனும் சத்தமுமாகப்
பொருதுக் கையிலுள அயில்நிணம் உண்கக்
குருதிப் புனலெழு கடலினும் மிஞ்சப்
புரவிக் கனமயில் நடவிடும் விந்தைக் ...... குமரேசா
படியில் பெருமித தகஉயர் செம்பொன்
கிரியைத் தனிவலம் வரஅரன் அந்தப்
பலனைக் கரிமுகன் வசமருளும் பொற்பதனாலே
பரன்வெட்கிடஉள மிகவும் !வெகுண்டக்
கனியைத் தரவிலையென அருள் செந்தில்
பழநிச் சிவகிரி தனிலுறை கந்தப் ...... பெருமாளே.
திருப்பாடல் 67:
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் ...... தனதான
புடைசெப்பென முத்தணி கச்சறவுள்
பொருமிக் கலசத்திணையாய
புளகக் களபக் கெருவத் தனமெய்ப்
புணரத் தலையிட்டமரே செய்
அடைவில் தினமுற்றவசப்படும் !எற்
கறிவில் பதடிக்கவமான
அசடற்குயர் ஒப்பதில்நற் !க்ருபையுற்
றடிமைக்கொரு சொல் ...... புகல்வாயே
குடமொத்த கடக் கரடக் கலுழிக்
குணமெய்க் களிறுக்கிளையோனே
குடிபுக்கிட மிட்டசுரப் படையைக்
குறுகித் தகரப் ...... பொரும்வேலா
படலைச் செறிநல் கதலிக் குலையில்
பழமுற்றொழுகப் ...... புனல்சேர்நீள்
பழனக்கரையில் கழை முத்துகு நல்
பழநிக் குமரப் ...... பெருமாளே.
திருப்பாடல் 68:
தனதனா தனதன தந்த தானன
தனதனா தனதன தந்த தானன
தனதனா தனதன தந்த தானன ...... தனதான
பெரியதோர் கரியிரு கொம்பு போலவே
வடிவமார் புளகித கும்ப மாமுலை
பெருகியே ஒளிசெறி தங்க ஆரமும் அணியான
பிறையதோ எனுநுதல் துங்க மீறுவை
அயிலதோ எனுமிரு கண்கள்ஆரவெ
பிறகெலாம் விழுகுழல் கங்குலாரவெ ...... வருமானார்
உரியதோர் பொருள்கொடு வந்த பேர்களை
மனையிலே வினவியெ கொண்டு போகிய
உளவிலே மருவிய வஞ்ச மாதர்கள் ...... மயலாலே
உருகியே உடலற வெம்பி வாடியெ
வினையிலே மறுகியெ நொந்த பாதகன்
உனதுதாள் தொழுதிட இன்ப ஞானம்அதருள்வாயே
அரியதோர் அமரர்கள் அண்டம் ஏறவே
கொடியதோர் அசுரர்கள் அங்கம் மாளவே
அடலதோடமர் புரிகின்ற கூரிய ...... வடிவேலா
அரகரா எனமிக அன்பர் சூழவே
கடியதோர் மயில்மிசை அன்றை ஏறியே
அவனியோர் நொடிவருகின்ற காரண ...... முருகோனே
பரியதோர் கயிறனை கொண்டு வீசவே
உறியதோய் தயிர்தனை உண்டு நாடியே
பசியதோ கெடஅருள் கொண்ட மாயவன் ...... மருகோனே
பரமமா நதிபுடை கொண்டணாவவே
வனசமா மலரினில் வண்டுலாவவே
பழநிமா மலைதனில் என்றும் மேவிய ...... பெருமாளே.
திருப்பாடல் 69:
தந்ததன தனனா தனந்த
தந்ததன தனனா தனந்த
தந்ததன தனனா தனந்த ...... தனதான
மந்தரமதெனவே சிறந்த
கும்பமுலை தனிலே புனைந்த
மஞ்சள்மணம் அதுவே துலங்க ...... வகைபேசி
மன்றுகமழ் தெருவீதி வந்து
நின்றவரை விழியால் வளைந்து
வந்தவரை அருகே அணைந்து ...... தொழில்கூறி
எந்தளவும் இனிதாக நம்பு
தந்துபொருள் தனையே பிடுங்கி
இன்பமருள் விலைமாதர் தங்கள் ...... மனைதேடி
எஞ்சிமனம் உழலாமல் உந்தன்
அன்புடைமை மிகவே வழங்கி
என்றனையும் இனிதாளஇன்று ...... வரவேணும்
விந்தையெனும் உமைமாது தந்த
கந்தகுரு பரதேவ வங்கம்
என்ற வரை தனில் மேவும்எந்தை ...... புதல்வோனே
மிஞ்சும் அழகினிலே சிறந்த
மங்கைகுற மடமாது கொங்கை
மென்கிரியில் இதமாய் அணைந்த ...... முருகோனே
சிந்தைமகிழ் புலவோர்கள் வந்து
வந்தனை செய் சரணாரவிந்த
செந்தமிழில் உனையே வணங்கு ...... குருநாதர்
தென்றல்வரை முநிநாதர் அன்று
கும்பிட நலருளே பொழிந்த
தென்பழநி மலைமேல் உகந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 70:
தனதனன தந்த தந்த தனதனன தந்த தந்த
தனதனன தந்த தந்த ...... தனதான
மரு மலரினன் துரந்து விடவினை அருந்த அந்தி
மதியொடு பிறந்து முன்பெய் ...... வதையாலே
வகை தனை மறந்தெழுந்து முலைதனை அருந்திஅந்த
மதலையென வந்து குன்றின் ...... வடிவாகி
இருமயல்கொடும் துவண்டு பொதுவையர் அகம் புகுந்து
இரவுபகல் கொண்டொடுங்கி ...... அசடாகும்
இருவினை பொதிந்த இந்த ஜனன மரணம் துறந்துன்
இணையடி வணங்க என்று ...... பெறுவேனோ
திருவொடு பெயர்ந்திருண்ட வனமிசை நடந்திலங்கை
திகழெரியிடும் குரங்கை ...... நெகிழாத
திடமுள முகுந்தர் கஞ்சன் வரவிடுமெல் வஞ்சகங்கள்
செறிவுடன் அறிந்து வென்ற ...... பொறியாளர்
பரிவொடு மகிழ்ந்திறைஞ்சு மருதிடை தவழ்ந்து நின்ற
பரமபத நண்பர் அன்பின் ...... மருகோனே
பதுமமிசை வண்டலம்பு சுனைபல விளங்கு துங்க
பழநிமலை வந்தமர்ந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 71:
தனத்ததன தான தந்த தனத்ததன தான தந்த
தனத்ததன தான தந்த ...... தனதான
மனக்கவலை ஏதுமின்றி உனக்கடிமையே புரிந்து
வகைக்கு மநு நூல் விதங்கள் ...... தவறாதே
வகைப்படி மனோரதங்கள் தொகைப்படியினால் இலங்கி
மயக்கமற வேதமும் கொள் ...... பொருள்நாடி
வினைக்குரிய பாதகங்கள் துகைத்து வகையால் நினைந்து
மிகுத்தபொருள் ஆகமங்கள் ...... முறையாலே
வெகுட்சி தனையே துரந்து களிப்பினுடனே நடந்து
மிகுக்கும் உனையே வணங்க ...... வரவேணும்
மனத்தில் வருவோனெ என்றுன் அடைக்கலமதாக வந்து
மலர்ப்பதமதே பணிந்த ...... முநிவோர்கள்
வரர்க்கும் இமையோர்கள் என்பர் தமக்கும் மனமே இரங்கி
மருட்டிவரு சூரை வென்ற ...... முனைவேலா
தினைப்புன முனே நடந்து குறக்கொடியையே மணந்து
செகத்தை முழுதாள வந்த ...... பெரியோனே
செழித்த வளமே சிறந்த மலர்ப் பொழில்களே நிறைந்த
திருப்பழநி வாழ வந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 72:
தனதன தந்தத் தனத்த தானன
தனதன தந்தத் தனத்த தானன
தனதன தந்தத் தனத்த தானன ...... தனதான
மலரணி கொண்டைச் சொருக்கிலேஅவள்
சொலுமொழி இன்பச் செருக்கிலே !கொடு
மையும் அடர் நெஞ்சத்திருக்கிலே முக ...... மதியாலே
மருவு நிதம்பத் தடத்திலே நிறை
பரிமள கொங்கைக் குடத்திலே மிக
வலியவும் வந்தொத்திடத்திலே விழி ...... வலையாலே
நிலவெறி அங்கக் குலுக்கிலே எழில்
வளைபுனை செங்கைக் கிலுக்கிலே கன
நிதிபறி அந்தப் பிலுக்கிலே செயும் ஒயிலாலே
நிதமியலும் துர்க் குணத்திலே பர
வசமுடன் அன்புற்றிணக்கிலே ஒரு
நிமிஷம் இணங்கிக் கணத்திலேவெகு ...... மதிகேடாய்
அலைய நினைந்துற்பநத்திலே !அநு
தினமிகு என் சொப்பனத்திலே வர
அறிவும் அழிந்தற்பன் அத்திலே நிதம் ...... உலைவேனோ
அசடனை வஞ்சச் சமர்த்தனாகிய
கசடனை உன்சிற் கடைக் கணாடிய
மலர்கொடு நின்பொற் பதத்தையேதொழ ...... அருள்தாராய்
பலபல பைம்பொன் பதக்கம் ஆரமும்
அடிமைசொலும் சொல் தமிழ்ப்பனீரொடு
பரிமள மிஞ்சக் கடப்ப மாலையும் அணிவோனே
பதியினில் மங்கைக் கதித்த மாமலை
ஒடுசில குன்றில் தரித்து வாழ்வுயர்
பழநியில் அன்புற்றிருக்கும் வானவர் ...... பெருமாளே.
திருப்பாடல் 73:
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன
தனதன தத்தத் தனந்த தந்தன ...... தந்ததான
முகில்அளகத்தில் கமழ்ந்த வண்!பரி
மளஅலர் துற்றக் கலந்திடம்தரு
முகிழ்நுதி தைத்துத்துயர்ந்த மங்கையர் அங்கமீதே
முகம் வெயர்வுற்றுப் பரந்து செங்கயல்
விழியிணை செக்கச் சிவந்து குங்கும
ம்ருகமத மத்தத் தனங்களின்மிசை ...... எங்குமேவி
உகஉயிரொத்துப் புயங்கள் இன்புற
உறவினை உற்றுத் திரண்டு !கொங்கள
வுறும்அணை உற்றுத்திரங்கும் மஞ்சமில் ஒன்றிமேவி
ஒளிதிகழ் பத்மக் கரங்களின்புறம்
உறுவளை ஒக்கக் கலின் கலென்கவும்
உயர் மயலுற்றுற்றிரங்கும் அன்பதொழிந்திடாதோ
செக முழுதொக்கப் பயந்த சங்கரி
அடியவர் சித்தத்துறைந்த சம்ப்ரம
சிவனொரு பக்கத்துறைந்த மங்கைசு ...... மங்கைநீடு
திகழ்வன பச்சைப் பசங்கி அம்பண
கரதலி கச்சுற்றிலங்கு கொங்கையள்
திருஅருள் நற்பொன் பரந்திடும்பரை ...... அண்டமீதே
பகல் இரவற்றிட்டுயர்ந்த அம்பிகை
திரிபுரை முற்றிட்டிரண்டொடொன்றலர்
பரிவுற ஒக்கச் செயும் பரம்ப்ரமி ...... அன்புகூரும்
பதிவ்ரதை மிக்கச் சிரந்தெரிந்தருள்
பகிரதி வெற்பில் பிறந்த பெண்தரு
பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்றருள் ...... தம்பிரானே.
திருப்பாடல் 74:
தனதனன தனதான தனதனன தனதான
தனதனன தனதான ...... தனதான
முகைமுளரி ப்ரபைவீசும் எழில்கனக மலைபோலும்
முதிர்வில்இள தனபார ...... மடவார்தோள்
முழுகிஅமிழ் அநுபோக விழலன்என உலகோர்கள்
மொழியுமது மதியாமல் ...... தலைகீழ்!வீழ்ந்
தகமகிழ விதமான நகையமுதம் எனவூறல்
அசடரகம் எழஆகி ...... மிகவே!உண்
டழியுமொரு தமியேனும் மொழியும் உனதிருதாளின்
அமுது பருகிட ஞானம் ...... அருளாயோ
மகரமெறி திரைமோது பகரகடல் தடவாரி
மறுகுபுனல் கெடவேலை ...... விடுவோனே
வரிசைஅவுண் மகசேனை யுகமுடிய மயிலேறி
வருபனிரு கரதீர ...... முருகோனே
பகர்அரியர் எனலாகும் உமைகொழுநர் உளமேவும்
பரமகுரு எனநாடும் இளையோனே
பணிலமணி வெயில்வீசு மணிசிகர மதிசூடு
பழநிமலை தனில்மேவு ...... பெருமாளே.
திருப்பாடல் 75:
தனன தனன தனத்த தனன தனன தனத்த
தனன தனன தனத்த ...... தனதான
முதிர உழையை வனத்தில் முடுகி வடுவை அழித்து
முதிய கயல்கள் கயத்தின் இடையோடி
முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி
முறைமை கெடவும் மயக்கி ...... வருமாதர்
மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு
வலிய அடிமை புகுத்தி ...... விடுமாய
மனதையுடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன்
மகிழ உனது பதத்தை ...... அருள்வாயே
சதுரன் வரையை எடுத்த நிருதன் உடலை வதைத்து
சகடு மருதம் உதைத்த ...... தகவோடே
தழையும் மரமும் நிலத்தில் மடிய அமரை விளைத்த
தநுவை உடைய சமர்த்தன் ...... மருகோனே
அதிர முடுகி எதிர்த்த அசுரர் உடலை வதைத்து
அமரர் சிறையை விடுத்து ...... வருவோனே
அரிய புகழை அமைத்த பெரிய பழநி மலைக்குள்
அழகு மயிலை நடத்து ...... பெருமாளே.
திருப்பாடல் 76:
தத்தத்தத் தத்தத் தத்தன
தத்தத்தத் தத்தத் தத்தன
தத்தத்தத் தத்தத் தத்தன ...... தனதான
முத்துக்குச் சிட்டுக் குப்பி!மு
டித்துச் சுக்கைப் பின்சுற்றியும்
முற்பக்கத்தில் பொற்புற்றிட ...... நுதல்மீதே
முக்யப் பச்சைப் பொட்டிட்டணி
ரத்நச் சுட்டிப் பொற் பட்டிவை
முச்சட்டைச் சித்ரக் கட்டழகெழிலாடத்
தித்திக்கச் சொல் சொல்துப்பிதழ்
நச்சுக்கண் கற்புச் சொக்கியர்
செப்புக்கொக்கக் கச்சுப்பெறு ...... தனமேருத்
திட்டத்தைப் பற்றிப் பற்பல
லச்சைக்குட்பட்டுத் தொட்டுயிர்
சிக்கிச் சொக்கிக் கெட்டிப்படி ...... உழல்வேனோ
மெத்தத் துக்கத்தைத் !தித்தியி
னிச் சித்தத்தில் பத்தத்தொடு
மெச்சிச் சொர்க்கத்தில் சிற்பரம் அருள்வாயே
வித்தைக்குக் கர்த்ருத் தற்பர
முக்கண் சித்தர்க்குப் புத்திர
விச்சித்ரச் செச்சைக் கத்திகை ...... புனைவோனே
நித்யக் கற்பத்தில் சித்தர்கள்
எட்டுத் திக்குக்குள் பட்டவர்
நிஷ்டைக்கன்புற்றப் பத்தர்கள் ...... அமரோரும்
நெட்டுக்குப் புட்பத்தைக் கொடு
முற்றத்துற்றர்ச்சிக்கப் !பழ
நிக்குள் பட்டத்துக்குற்றுறை ...... பெருமாளே.
திருப்பாடல் 77:
தானந்தன தானன தானன
தானந்தன தானன தானன
தானந்தன தானன தானன ...... தனதான
மூலம்கிளர் ஓர் உருவாய்நடு
நாலங்குல மேல் நடுவேர்இடை
மூள்பிங்கலை நாடியொடாடிய ...... முதல் வேர்கள்
மூணும் பிரகாசமதாய் ஒரு
சூலம்பெற ஓடிய வாயுவை
மூலம்திகழ் தூண்வழியே அளவிட ஓடிப்
பாலம் கிளராறு !சிகாரமொ
டாரும் சுடராடு பராபர
பாதம்பெற ஞான சதாசிவம் அதின்மேவிப்
பாடும்தொனி நாதமும் நூபுரம்
ஆடும் கழலோசையிலே !பரி
வாகும்படியே அடியேனையும் ...... அருள்வாயே
சூலம்கலை மான்மழுஓர் துடி
வேதன் தலையோடும் அராவிரி
தோடும்குழை சேர் பரனார்தரு ...... முருகோனே
சூரன் கரமார் சிலை வாளணி
தோளும் தலை தூள்படவே அவர்
சூளும்கெட வேல்விடு சேவக ...... மயில்வீரா
காலின் கழலோசையும் நூபுர
வார் வெண்டைய ஓசையுமேஉக
காலங்களின் ஓசையதா நடமிடுவோனே
கானம்கலை மான் மகளார்தமை
நாணம் கெடவேஅணை வேள்!பிர
காசம் பழனாபுரி மேவிய ...... பெருமாளே.
திருப்பாடல் 78:
தனதனன தனதனன தனதனன தனதனன
தனதனன தனதனன ...... தனதான
முருகுசெறி குழலவிழ முலைபுளகம் எழநிலவு
முறுவல்தர விரகமெழ ...... அநுராகம்
முதிரவசம் அறஇதரி எழுகைவளை கலகலென
முகநிலவு குறுவெயர்வு ...... துளிவீச
அருமதுர மொழிபதற இதழமுது பருகிமிக
அகமகிழ இருகயல்கள் ...... குழையேற
அமளிபடும் அமளிமலர் அணையின்மிசை துயிலுகினும்
அலர்கமல மலரடியை ...... மறவேனே
நிருதனொடு வருபரியும் அடுகரியும் ரதநிரையும்
நெறுநெறன முறியவிடும் ...... வடிவேலா
நிகழகள சகளகுரு நிருபகுரு பரகுமர
நெடியநெடு ககன முகடுறைவோனே
வருமருவி நவமணிகள் மலர்கமுகின் மிசைசிதற
மதுவின்நிரை பெருகுவளி ...... மலைமீதே
வளர்குறவர் சிறுமியிரு வளர்தனமும் இருபுயமும்
மருவிமகிழ் பழநிவரு ...... பெருமாளே.
திருப்பாடல் 79:
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
முருகு செறிகுழல் முகிலென நகில்நறு
முளரி முகையென இயலென மயிலென
முறுவல் தளவென நடைமட அனமென ...... இருபார்வை
முளரி மடலென இடைதுடி அதுவென
அதரம் இலவென அடியிணை மலரென
மொழியும் அமுதென முகமெழில் மதியென ...... மடமாதர்
உருவம் இனையன எனவரும் உருவக
உரைசெய்தவர் தரு கலவியில் அலவிய
உலையின் மெழுகென உருகிய கசடனை ...... ஒழியாமல்
உவகை தருகலை பலஉணர் பிறவியில்
உவரி தனிலுறும் அவலனை அசடனை
உனது பரிபுர கழலிணை பெறஅருள் ...... புரிவாயே
அரவம் மலிகடல் விடம்அமுதுடன் எழ
அரிஅயனும்நரை இபன்முதல் அனைவரும்
அபயம் மிகவென அதைஅயில் இமையவன் அருள்பாலா
அமர்செய் நிசிசரர் உடலவை துணிபட
அவனி இடிபட அலைகடல் பொடிபட
அமரர் சிறைவிட அடலயில் நொடியினில் ...... விடுவோனே
பரவு புனமிசை உறைதரு குறமகள்
பணைகொள் அணிமுலை முழுகு பனிருபுய
பணில சரவணை தனில்முளரியில் வரு ...... முருகோனே
பரம குருபர எனுமுரை பரசொடு
பரவி அடியவர் துதிசெய மதிதவழ்
பழநி மலைதனில் இனிதுறை அமரர்கள் ...... பெருமாளே.
திருப்பாடல் 80:
தனதனன தாத்த ...... தனதான
தனதனன தாத்த ...... தனதான
வசனமிக ஏற்றி ...... மறவாதே
மனது துயராற்றி ...... உழலாதே
இசைபயில் ஷடாக்ரம் அதாலே
இகபர செளபாக்யம் அருள்வாயே
பசுபதி சிவாக்யம் உணர்வோனே
பழநிமலை வீற்றருளும் வேலா
அசுரர்கிளை வாட்டி ...... மிகவாழ
அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.
திருப்பாடல் 81:
தனனா தனனா ...... தனதான
தனனா தனனா ...... தனதான
வரதா மணிநீ ...... எனஓரில்
வருகாதெது தான் அதில்!வாரா
திரதாதிகளால் ...... நவலோகம்
இடவே கரியாம் இதிலேது
சரதா மறையோதயன் மாலும்
சகலாகம நூல் அறியாத
பரதேவதையாள் ...... தருசேயே
பழனாபுரி வாழ் ...... பெருமாளே.
திருப்பாடல் 82:
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
வனிதையுடல் காய நின்று உதிரமதிலே உருண்டு
வயிறில்நெடு நாள்அலைந்து ...... புவிமீதே
மனிதர் உருவாகி வந்து அநுதினமுமே வளர்ந்து
வயது பதினாறு சென்று ...... வடிவாகிக்
கனகமுலை மாதர் தங்கள் வலையில்மிகவே உழன்று
கனிவதுடனே அணைந்து ...... பொருள்தேடிக்
கனபொருளெலாம் இழந்து மயலில் மிகவே அலைந்த
கசடனெனை ஆள உந்தன் அருள்தாராய்
புனமதனில் வாழுகின்ற வநிதை ரகுநாதர் தந்த
புதல்விஇதழ் ஊறலுண்ட ...... புலவோனே
பொரு மதனை நீறு கண்ட அரியசிவனார் உகந்த
புதிய மயிலேறு கந்த ...... வடிவேலா
பனகமணி மா மதங்கி குமரிவெகு நீலி சண்டி
பரம கலியாணி தந்த ...... பெருவாழ்வே
பகையசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று
பழநிமலை மீதில் நின்ற ...... பெருமாளே.
திருப்பாடல் 83:
தானந் தத்தன தானன தானன
தானந் தத்தன தானன தானன
தானந் தத்தன தானன தானன ...... தனதான
வாதம் பித்த மிடா வயிறீளைகள்
சீதம் பற்சனி சூலை மகோதர
மாசங் கண்பெரு மூல வியாதிகள் ...... குளிர்காசம்
மாறும் கக்கலொடேசில நோய்!பிணி
யோடும் தத்துவகாரர் தொணூறறு
வாரும் சுற்றினில் வாழ் சதிகாரர்கள் ...... வெகுமோகர்
சூழ்துன் சித்ர கபாயை முவாசை!கொ
டேதும் சற்றுணராமலெ மாயைசெய்
சோரம் பொய்க்குடிலே சுகமாமென ...... இதின்மேவித்
தூசின் பொற்சரமோடு குலாய்!உல
கேழும் பிற்பட ஓடிடு மூடனை
தூவம் சுத்தடியார் அடி சேர நினருள் தாராய்
தீதந் தித்திமி தீதக தோதிமி
டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு
சேசெஞ் செக்கெண தோதக தீகுட ...... எனபேரி
சேடன் சொக்கிட வேலை !கடாகமெ
லாமம் சுற்றிடவே அசுரார்கிரி
தீவும் பொட்டெழவே அனல் வேல்விடு ...... மயில்வீரா
வேதன் பொற்சிர மீது கடாவிநல்
ஈசன் சற்குருவாய் அவர் காதினில்
மேவும் பற்றிலர் பேறருளோதிய ...... முருகோனே
வேஷம் கட்டி பினேகி மகாவளி
மாலின் பித்துறவாகி விணோர்பணி
வீரம் கொள் பழனாபுரி மேவிய ...... பெருமாளே.
திருப்பாடல் 84:
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன
தனன தந்தன தானன தானன ...... தனதான
விதம் இசைந்தினிதா மலர் மாலைகள்
குழல் அணிந்தநுராகமுமே சொலி
விதரணம் சொலி வீறுகளே சொலி ...... அழகாக
விரி குரும்பைகளாம் என வீறிய
கனக சம்ப்ரம மேரு அதாம்அதி
விரகம் ஒங்கிய மாமுலையால் எதிர் அமர்நாடி
இதம் இசைந்தனமாம் எனவேஇன
நடை நடந்தனர் வீதியிலே வர
எவர்களும் சிதமால்கொளும் மாதர்கண் ...... வலையாலே
எனது சிந்தையும் வாடி விடாவகை
அருள் புரிந்தழகாகிய தாமரை
இருபதங்களினால் எனை ஆள்வதும் ஒருநாளே
மதம் இசைந்தெதிரே பொரு சூரனை
உடலிரண்டு குறாய் விழவே சின
வடிவு தங்கிய வேலினை ஏவிய ...... அதிதீரா
மதுர இன்சொலி மாதுமை நாரணி
கவுரி அம்பிகை யாமளை பார்வதி
மவுந சுந்தரி காரணி யோகினி ...... சிறுவோனே
பதம் இசைந்தெழு லோகமுமே வலம்
நொடியில் வந்திடு மாமயில் மீதொரு
பவனி வந்த க்ருபாகர சேவக ...... விறல்வீரா
பருதியின் ப்ரபை கோடியதாமெனும்
வடிவு கொண்டருள் காசியின் மீறிய
பழநியங்கிரி மீதினில் மேவிய ...... பெருமாளே.
திருப்பாடல் 85:
தனதனன தனன தந்த தனதனன தனன தந்த
தனதனன தனன தந்த ...... தனதான
விரைமருவு மலரணிந்த கரியபுரி குழல் சரிந்து
விழவதன மதி விளங்க ...... அதிமோக
விழிபுரள முலைகுலுங்க மொழிகுழற அணை புகுந்து
விரகமயல் புரியும் இன்ப ...... மடவார்பால்
இரவுபகல் அணுகி நெஞ்சம் அறிவழிய உருகும் அந்த
இருளகல உனது தண்டை ...... அணிபாதம்
எனதுதலை மிசையணிந்து அழுதழுதுன் அருள் விரும்பி
இனியபுகழ் தனை விளம்ப ...... அருள்தாராய்
அரவில்விழி துயில்முகுந்தன் அலர்கமல மலர் மடந்தை
அழகினொடு தழுவு கொண்டல் ...... மருகோனே
அடலசுரர் உடல் பிளந்து நிணமதனில் முழுகி அண்ட
அமரர்சிறை விடு ப்ரசண்ட ...... வடிவேலா
பரவைவரு விடம்அருந்து மிடறுடைய கடவுள் கங்கை
படர்சடையர் விடையர் அன்பர் உளமேவும்
பரமர் அருளிய கடம்ப முருக அறுமுகவ கந்த
பழநிமலை தனில்அமர்ந்த ...... பெருமாளே.
No comments:
Post a Comment