(பொதுத் திருப்புகழ் திருப்பாடல்கள்)
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 151:
தானான தானன தனத்த தத்தன
தானான தானன தனத்த தத்தன
தானான தானன தனத்த தத்தன ...... தந்ததான
ஊனோடு வாதுயிர் தரித்து மட்டற
ஊசாடு பாழ்குடில் எடுத்ததிற்படி
ஓயாத மாமயல் உழற்றினிற்படு ...... வம்பனேனை
ஊதாரியாய்விடு சமத்தில் நிற்பதும்
ஆராத காதலை மனத்தில் வைப்பது
மூரோடு போயெதிர் பிணக்கினிற்பது ...... முந்திடாதே
தேனூறு வாய்மொழி பரத்தையர்க்கொரு
நாய்போலவே அவர் வசத்தில் நிற்பது
சீர்கேடதாய் விடு சிறுப்பிளைத்தனம்...... என்றுநீபச்
சீதாள மாமலர் தொடுத்த பத்தர்கள்
சீராடி நாண்மலர் என ப்ரியப்படு
சீர்பாத போதகம் அநுக்ரகிப்பதும் ...... எந்தநாளோ
மானாக பாயலில் படுக்கையிட்டவர்
மாமேரு வாரியில் திரித்து விட்டவர்
மாடோடு போய்வரும் இடைக்குலத்தவர் ......அன்றுவாவி
வாய் நாகமோலிட பிடித்த சக்கிர
வாளேவியே கரவினைத் தறித்தவர்
மாமாயனாய் உலகளித்த வித்தகர் ...... தங்கைவாழ்வே
கானாரு மாமலை தினைப்புனத்தினில்
கால்மேல்விழாஒரு குறச்சிறுக்கியை
காணாது போயியல் புணர்ச்சி இட்டருள் ...... கந்தவேளே
காரேழு மாமலை இடித்துருக்கெட
காராழி ஏழவை கலக்கி விட்டுயர்
காவான நாடர்கள் பகைச் சவட்டிய ...... தம்பிரானே
திருப்பாடல் 152:
தத்தன தனதன தானா தனதன
தத்தன தனதன தானா தனதன
தத்தன தனதன தானா தனதன ...... தனதான
எட்டுடனொரு தொளை வாயாயது !பசு
மட்கலம் இருவினை தோயா மிகுபிணி
இட்டிடை செயவொரு போதாகிலும்உயிர் ...... நிலையாக
எப்படி உயர்கதி நாமேறுவதென
எட்பகிரினும்இது ஓரார் தம!தம
திச்சையின் இடருறு பேராசை கொள் கடல் ...... அதிலேவீழ்
முட்டர்கள் நெறியினில் வீழாதடலொடு
முப்பதின்அறுபதின் மேலாம் அறுவரு
முற்றுதல் அறிவரு ஞானோதயஒளி ...... வெளியாக
முக்குணமது கெட நானாஎனவரு
முத்திரை அழிதர ஆரா அமுதன
முத்தமிழ் தெரிகனி வாயால் அருளுவதொருநாளே
திட்டென எதிர்வரு மாகாளியினொடு
திக்கிட தரிகிட தீதோம் எனவொரு
சித்திர வெகுவித வாதாடிய பத ...... மலராளன்
செப்புக எனமுனம் ஓதாதுணர்வது
சிற்சுக பரவெளி ஈதேயெனஅவர்
தெக்ஷண செவிதனிலே போதனைஅருள் ...... குருநாதா
மட்டற அமர்பொரு சூராதிபன்உடல்
பொட்டெழ முடுகிவை வேலால் எறிதரு
மற்புய மரகத மாதோகையில் நடம் ...... இடுவோனே
வச்சிர கரதல வானோர் அதிபதி
பொற்புறு கரிபரி தேரோடழகுற
வைத்திடு மருமகனே வாழ்அமரர்கள் ...... பெருமாளே
திருப்பாடல் 153:
தத்த தனதனன தான தானதன
தத்த தனதனன தான தானதன
தத்த தனதனன தான தானதன ...... தனதான
எத்தி இருகுழையை மோதி மீனம்அதில்
முட்டியிடறி யம தூதர் போலமுகில்
எட்டிவயவர் கர வாளை வேல்முனையை ...... எதிர்சீறி
எத்திசையினும்ஒரு காம ராஜன்மிக
வெற்றி அரசுதனை ஆள வீசிஅடல்
எற்றி இளைஞர்உயிர் கோலு நீலவிழி ...... மடமாதர்
வித்தை தனிலுருகி ஆசையாகிஅவர்
கைக்குள் மருவுபொருளான ஆகும்வரை
மெத்தை தனிலுருகி மோகமாகிவிட ...... அதன்மேலே
வெட்கமிலை நடவும் ஏகுமேகும்இனி
மற்றவரை அழையு மாதரே எனமுன்
விட்ட படிறிகள்தம் நேச ஆசைகெட ...... அருள்வாயே
ஒத்த வரிகமுகு வாளை தாவுபுனல்
அத்தி நகரம் அரசான வாள்நிருபன்
ஒக்கு நினைவுமுன்இலாமல் வாகுபெல ...... நிலைகூற
உற்ற தருமன்அடல் வீமன் வேல்விசையன்
வெற்றி நகுல சகதேவர் தேர்தனிலும்
ஒத்து முடுகிவிடு பாகன் வாள்அமரில் ...... அசுரேசன்
பத்து முடிகள் துகளாக வாகுஇரு
பத்தும் ஒருகணையில் வீழ நேரவுணர்
பட்டு மடியஅமர் மோது காளமுகில் ...... மருகோனே
பச்சை மயிலில்வரு வீர வேல்முருக
துட்ட நிருதர்குல கால வானவர்கள்
பத்தியுடன் அடியில் வீழ வாழ்வுதவு ...... பெருமாளே
திருப்பாடல் 154:
தத்த தந்தன தந்தன தந்தன
தத்த தந்தன தந்தன தந்தன
தத்த தந்தன தந்தன தந்தன ...... தந்ததான
ஒக்க வண்டெழு கொண்டைகுலைந்திட
வெற்பெனுங்கன கொங்கை குழைந்திட
உற்பலங்கள் சிவந்து குவிந்திட ...... இந்த்ரகோபம்
ஒத்த தொண்டை துவண்டமுதந் தர
மெச்சு தும்பி கருங்குயில் மென்புற
ஒக்க மென்தொனி வந்துபிறந்திட ...... அன்புகூர
மிக்க சந்திரன் ஒன்று நிலங்களில்
விக்ரமஞ் செய்திலங்கு நகம்பட
மெத்த மென்பொருள் அன்பளவுந் துவள் ...... இன்பமாதர்
வித்தகந் தரு விந்து தபுங்குழி
பட்டழிந்து நலங்கு குரம்பையை
விட்டகன்று நினம்புய மென்பதம் ...... என்றுசேர்வேன்
மைக்கருங்கடல் அன்றெரி மண்டிட
மெய்க்ரவுஞ்ச சிலம்புடல் வெம்பிட
மற்று நன்பதி குன்றி அழிந்திட ...... உம்பர்நாடன்
வச்சிரங் கையணிந்து பதம்பெற
மெச்சு குஞ்சரி கொங்கை புயம்பெற
மத்த வெஞ்சின வஞ்சகர் தங்களை ...... நுங்கும்வேலா
குக்குடங்கொடி கொண்ட பரம்பர
சக்ர மண்டலம் எண்திசையும் புகழ்
கொட்க கொன்றை அணிந்த சிரஞ்சரண் ......அங்கிகாரா
கொத்தவிழ்ந்த கடம்பலர் தங்கிய
மிக்க வங்கண கங்கண திண்புய
கொற்ற அங்குற மங்கைவிரும்பிய ...... தம்பிரானே
திருப்பாடல் 155:
தான தத்தன தானன தானன
தான தத்தன தானன தானன
தான தத்தன தானன தானன ...... தனதான
ஓது வித்தவர் கூலிகொடாதவர்
மாதவர்க்கதி பாதகமானவர்
ஊசலிற் கனலாய்எரி காளையர் ...... மறையோர்கள்
ஊர் தனக்கிடரே செயும் ஏழைகள்
ஆர்தனக்கும் உதாசினதாரிகள்
ஓடி உத்தமர் ஊதிய நாடினர் ......!இரவோருக்
கேதும் இத்தனை தானம் இடாதவர்
பூதலத்தினில் ஓரமதானவர்
ஈசர் விஷ்ணுவை சேவைசெய்வோர்தமை ...... இகழ்வோர்கள்
ஏக சித்த தியானமிலாதவர்
மோகம் உற்றிடு போகிதம் ஊறினர்
ஈனர் இத்தனை பேர்களும் எழ்நரகுழல்வாரே
தாத தத்தத தாதத தாதத
தூது துத்துது தூதுது தூதுது
சாச சச்சச சாசச சாசச ...... சசசாச
தாட டட்டட டாடட டாடட
டூடு டுட்டுடு டூடுடு டூடுடு
தாடி டிட்டிடி டீடிடி டீடிடி ...... டிடிடீடீ
தீதி தித்திதி தீதிதி தீதிதி
தோதி குத்திகு தோதிகு தோதிகு
சேகு செக்குகு சேகுகு சேகுகு ...... செகுசேகு
சேயெனப்பலர் ஆடிடமாகலை
ஆயும் உத்தமர் கூறிடும் வாசக
சேகு சித்திரமாக நிணாடிய ...... பெருமாளே
திருப்பாடல் 156:
தானன தத்தன தத்த தத்தன
தானன தத்தன தத்த தத்தன
தானன தத்தன தத்த தத்தன ...... தந்ததான
ஓலைதரித்த குழைக்கும் !அப்புற
மோடி நிறத்து மதர்த்து !நெய்த்தற
லோதி நிழற்குள் அளிக் குலத்துடன் ...... ஒன்றிஞானம்
ஓதிமிகுத்த தவத்தவர்க்கிடர்
ஓகைசெலுத்தி வடுப்படுத்தகி
ஊடுவிடத்தை இருத்தி வைத்த ...... கணம்பினாலே
மாலை மயக்கை விளைத்து நற்பொருள்
வாசமுலைக்குள் அகப்படுத்திஇல்
வாஎன முற்றி நடத்தி உட்புகும் ...... அந்தமாதர்
மாயமயக்கை ஒழித்து மெத்தென
வானவருக்கருள் உற்ற அக்ஷர
வாய்மைஎனக்கும் இனித்தளித்தருள் ...... தந்திடாதோ
வேலையடைக்க அரிக்குலத்தொடு
வேணுமெனச்சொலும் அக்கணத்தினில்
வேகமொடப்பு மலைக் குலத்தை ...... நளன்கைமேலே
வீசஅவற்றினை ஒப்பம் இட்டணை
மேவிஅரக்கர் பதிக்குள் முற்பட
வீடணனுக்கருள் வைத்தவன் தமையன்கள் மாளக்
கால்அயிலக்கணை தொட்டருட்கன
மால்அமைதிக் கரையில் !தரித்துல
காள அளித்த ப்ரபுத்வருட்கடல் ...... தந்தகாமன்
காயம்ஒழித்தவர் பெற்ற கொற்றவ
நானில வித்த தினைப்புனத்தொரு
காதல் மிகுத்துமிக ப்ரமித்தருள் ...... தம்பிரானே
திருப்பாடல் 157:
தனன தந்தனந் தனன தந்தன
தனன தந்தனந் தனன தந்தன
தனன தந்தனந் தனன தந்தன ...... தனதான
கடை சிவந்தகன்றுரை புகன்றிரு
குழையையுந் துரந்தரி பரந்தொளிர்
கரிய கண் துறந்தவர் நிறந்தொளை ...... படவோடக்
கலை நெகிழ்ந்திருங் குழல்சரிந்திட
முலை சுமந்தசைந்திடை ஒசிந்துயிர்
கவர இங்கிதங் கெறுவிதம்பெற ...... விளையாடும்
படைமதன் பெருங்கிளை திருந்திய
அதர கிஞ்சுகந் தனைஉணர்ந்தணி
பணிநிதம்ப இன்பசுகமுந் தர ...... முதிர்காம
பரவசந் தணிந்துனை உணர்ந்தொரு
மவுன பஞ்சரம் பயில் தருஞ்சுக
பதம்அடைந்திருந்தருள் பொருந்தும் ...... அதொருநாளே
வடநெடுஞ் சிலம்புகள் புலம்பிட
மகிதலம் ப்ரியங்கொடு மகிழ்ந்திட
வருபுரந்தரன் தனபுரம்பெற ...... முதுகோப
மகர வெங்கருங் கடலொடுங்கிட
நிசிசரன் பெருங் குலம்ஒருங்கிற
வனசனின்றழும் படிநெருங்கிய ...... ஒருசூதம்
அடியொடும் பிடுங்கிய தடங்கர
வடிவ அஞ்சுரும்புற விரும்பிய
அடவியுந் தொழும்பொடு தொழும்படி ...... அநுராக
அவசமும் புனைந்தற முனைந்தெழு
பருவதஞ் சிறந்த கன தந்தியின்
அமுத மென்குயங்களில் முயங்கிய ...... பெருமாளே
திருப்பாடல் 158:
தனதன தனதன தத்தாத் தானன
தனதன தனதன தத்தாத் தானன
தனதன தனதன தத்தாத் தானன ...... தந்ததான
கதறிய கலைகொடு சுட்டாத் தீர்பொருள்
பதறிய சமயிகள் எட்டாப் பேரொளி
கருவற இருவினை கெட்டாற் காண்வரும் ...... என்றஏகங்
கருகிய வினைமனதுள் தாக்காதது
சுருதிகள் உருகியொர் வட்டாய்த் தோய்வது
கசடற முழுதையும் விட்டாற் சேர்வதுணர்ந்திடாதே
வித மதுகர முரல் மொட்டாற் சாடிய
ரதிபதி எனவரு துட்டாத்மாவுடன்
வினைபுரிபர் இடு முற்றாச் சாலிரு ...... புண்டரீக
ம்ருகமத முகுளித மொட்டாற் கார்முக
நுதலெழுதிய சிறு பொட்டாற் சாயக
விரகுடை விழிவலை பட்டால் தாது ...... நலங்கலாமோ
பதமலர் மிசைகழல் கட்டாப் பாலக
சுருதிகள் அடிதொழ எட்டாத் தேசிக
பருகென வனமுலை கிட்டாத் தாரகை ...... தந்துநாளும்
பரிவுற வெகுமுக நெட்டாற்றூடொரு
படுகையினிடை புழு எட்டாப் பாசடை
படர்வன பரிமள முள்தாள் தாமரை ...... தங்கிவாழுஞ்
சததள அமளியை விட்டாற்றேறிய
சலநிதி குறுகிட ஒட்டாச் சூரொடு
தமனிய குலகிரி பொட்டாய்த் தூளெழ ...... வென்றகோவே
தழைதரு குழைதரு பட்டாட் சாலவும்
அழகிய கலவி தெவிட்டாக் காதலி
தலைமக நிலமடி தட்டாத் தேவர்கள் ...... தம்பிரானே
திருப்பாடல் 159:
தனதன தனதன தானன தானந்
தனத் தனந்தன தனன தான தனதன
தானான தான தனனந் தானந்
தனன தாத்தன தானத் தானத் தானத் ...... தாத்தன தனதான
கலவியினலம் உரையா மடவார்!சந்
தனத் தனங்களில் வசமதாகி அவரவர்
பாதாதி கேசம்அளவும் பாடுங்
கவிஞனாய்த் திரிவேனைக் காமக்ரோதத் ...... தூர்த்தனை அபராதக்
கபடனை வெகுபரிதாபனை நாளும்
ப்ரமிக்கு நெஞ்சனை உருவ மாறி முறைமுறை
ஆசார ஈன சமயந் தோறுங்
களவு சாத்திரம்ஓதிச் சாதித்தேனைச் ...... சாத்திர நெறிபோய்!ஐம்
புலன்வழி ஒழுகிய மோகனை மூகந்
தனிற் பிறந்தொரு நொடியின் மீள அழிதரும்
ஆதேச வாழ்வை நிலையென்றேஅம்
புவியின் மேற்பசு பாசத்தே பட்டேனைப் ...... பூக்கழல்இணைசேரப்
பொறியிலி தனைஅதி பாவியை நீடுங்
குணத்ரயங்களும் வரும் அநேக வினைகளு
மாயா விகார முழுதுஞ் சாடும்
பொருளின் மேற்சிறிதாசைப் பாடற்றேனைக் ...... காப்பதும் ஒருநாளே
குலகிரி தரும்அபிராம மயூரம்
ப்ரியப்படும்படி குவளை வாச மலர்கொடு
வாராவுலாவி உணரும் யோகங்
குலைய வீக்கிய வேளைக் கோபித்தேறப் ...... பார்த்தருளிய பார்வைக்
குரிசிலும் ஒருசுரர் பூசுரன்!ஓமென்
றதற்கநந்தரம் இரணியாய நமவென
நாராயணாய நமஎன்றோதுங்
குதலை வாய்ச் சிறியோனுக்காகத் தூணில் ...... தோற்றிய வசபாணிப்
பலநக நுதியினிசாசரன் ஆகங்
கிழித்தளைந்தணி துளசியோடு சிறுகுடல்
தோள் மாலையாக அணியுங் கோவும்
பரவி வாழ்த்திடவே கற்றாரச் சோதிப்பாற் பணியிறை வாகைப்
படமுக அடலயிராபதம் ஏறும்
ப்ரபுப் பயங்கெட வடபராரை வரைகெட
வேலேவி வாவி மகரஞ் சீறும்
பரவை கூப்பிட மோதிச் சூர்கெட்டோடத் ...... தாக்கிய பெருமாளே
திருப்பாடல் 160:
தனத்த தானன தானான தந்தன
தனத்த தானன தானான தந்தன
தனத்த தானன தானான தந்தன ...... தந்ததான
கறுத்து நீவிடு கூர்வேலினுங் கடை
சிவத்து நீடிய வாய்மீன ஒண்குழை
கடக்க ஓடிய ஆலால நஞ்சன ...... வஞ்சநீடு
கயற்கணார்கனி வாயூறல் உண்டணி
கழுத்தும் ஆகமும்ஏகீ பவங்கொடு
கலக்க மார்பக பாடீர குங்கும ...... கொங்கைமீதே
உறுத்து ஆரமு மோகா வடங்களும்
அறுத்து நேரிய கூர்வாள் நகம்பட
உடுத்த ஆடையும் வேறாய் உழன்று ......கழன்றுவீழ
உருக்கு நாபியின் மூழ்கா மருங்கிடை
செருக்கு மோகன வாராதரங்களை
ஒழிக்க ஓர்வகை காணேன் உறுந்துணை ...... ஒன்றுகாணேன்
நிறத்த நூபுர பாதார விந்தமும்
உடுத்த பீலியும் வாரார் தனங்களும்
நிறத்திலே படு வேலான கண்களும் ...... வண்டுபாட
நெறித்த ஓதியுமா யான்மனம்!பர
தவிக்க மால் தரலாமோ கலந்திட
நினைக்கலாமென வேல்வேடர் கொம்புடன்நண்புகூர்வாய்
மறித்த வாரிதி கோகோஎனும்படி
வெறுத்த ராவணன் வாணாளை அம்பினில்
வதைத்த மாமனு மேவார் புரங்கனல் ...... மண்டமேரு
வளைத்த தாதையு மாறான குன்றமும்
அனைத்து லோகமும் வேதாகமங்களும்
மதித்த சேவக வானாளும் உம்பர்கள் ...... தம்பிரானே
திருப்பாடல் 161:
தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததன
தனத்ததன தனத்ததன ...... தனதான
குறிப்பரிய குழற்குமதி நுதற்புருவ விலுக்கும்இரு
குழைக்கும்வடு விழிக்குமெழு ...... குமிழாலுங்
கொடிப்பவள இதழ்க்குமிகு சுடர்த்தரள நகைக்கும்!அமு
தினுக்குமிக உறத்தழுவு ...... குறியாலும்
அறப்பெரிய தனக்குமன நடைக்கு மினின் இடைக்கு!மல
ரடிக்கும்இள நகைக்கும் உளம் ...... அயராதே
அகத்தியனொடுரைத்த பொருள் அளித்தருளி அரிப்பிரமர்
அளப்பரிய பதக்கமலம் ...... அருள்வாயே
கறுத்தடரும் அரக்கரணி கருக்குலைய நெருக்கியொரு
கணத்தில்அவர் நிணத்தகுடல் ...... கதிர்வேலாற்
கறுத்தருளி அலக்கணுறு சுரர்க்கவர்கள் பதிக்குரிமை
அளித்திடரை அறுத்தருளு ...... மயில்வீரா
செறுத்துவரு கரித்திரள்கள் திடுக்கிடவல் மருப்பையரி
சினத்தினொடு பறித்தமர்செய் ...... பெருகானிற்
செலக்கருதி அறக்கொடிய சிலைக்குறவர் கொடித்தனது
சிமிழ்த்தனமும் உறத்தழுவு ...... பெருமாளே
திருப்பாடல் 162:
தனதனன தனதான தானான தானான
தனதனன தனதான தானான தானான
தனதனன தனதான தானான தானான ...... தனதான
குனகியொரு மயில்போல வாரா மனோலீலை
விளையவினை நினையாமலேஏகி மீளாத
கொடிய மனதநியாய மாபாத காபோதி ...... எனஆசைக்
கொளுவஅதில் மயலாகி வீறோடு போய்நீள
மலரமளி தனிலேறி ஆமாறு போமாறு
குலவிநல மொழிகூறி வாரேறு பூணார ...... முலைமூழ்கி
மனமுருக மதராஜ கோலாடு மாபூசல்
விளையவிழி சுழலாடி மேலோதி போய்மீள
மதிவதனம் ஒளிவீச நீராளமாய் மேவி ...... அநுராக
வகைவகையில் அதிமோக வாராழி ஊடான
பொருள் அளவதளவாக யாரோடு மாலான
வனிதையர்கள் வசமாய நாயேனும் ஈடேற ...... அருள்வாயே
எனதுமொழி வழுவாமல் நீஏகு கான்மீதில்
எனவிரகு குலையாத மாதாவு நேரோத
இசையுமொழி தவறாமலேஏகி மாமாதும் ...... இளையோனும்
இனிமையொடு வருமாய மாரீச மானாவி
குலையவரு கரதூஷணா வீரர் போர்மாள
இறுகிநெடு மரமேழு தூளாகவே வாலி ...... உயிர்சீறி
அநுமனொடு கவிகூட வாராக நீராழி
அடைசெய்தணை தனிலேறி மாபாவியூர் மேவி
அவுணர்கிளை கெடநூறி ஆலால மாகோப ...... நிருதேசன்
அருணமணி திகழ்பார வீராகரா மோலி
ஒருபதுமொர் கணைவீழவே மோது போராளி
அடல்மருக குமரேச மேலாய வானோர்கள் ...... பெருமாளே
திருப்பாடல் 163:
தனதன தனனத் தனனத், தனதன தனனத் தனனத்
தனதன தனனத் தனனத் ...... தனதான
கொலைவிழி சுழலச் சுழலச் சிலைநுதல் குவியக் குவியக்
கொடியிடை துவளத் துவளத் ...... தனபாரக்
குறியணி சிதறச் சிதறக் கரவளை கதறக் கதறக்
குயில்மொழி பதறப் பதறப் ...... ப்ரியமோகக்
கலவியில் ஒருமித்தொருமித்திலவிதழ் பருகிப் பருகிக்
கரமொடு தழுவித் தழுவிச் ...... சிலநாளிற்
கையிலுள பொருள்கெட்டருள்கெட்டனைவரும் விடு சிச்சியெனக்
கடியொரு செயலுற்றுலகில் ...... திரிவேனோ
சலநிதி சுவறச் சுவறத் திசைநிலை பெயரப் பெயரத்
தடவரை பிதிரப் பிதிரத் ...... திடமேருத்
தமனிய நெடுவெற்பதிரப் பணிமணி சிரம்விட்டகலச்
சமனுடல் கிழியக் கிழியப் ...... பொருசூரன்
பெலமது குறையக் குறையக் கருவிகள் பறையப் பறையப்
பிறநரி தொடரத் தொடரத் ...... திரள்கூகை
பெடையொடு குழறக் குழறச் சுரபதி பரவப் பரவப்
ப்ரபையயில் தொடுநற் குமரப் ...... பெருமாளே
திருப்பாடல் 164:
தானனா தனன தத்த, தானனா தனன தத்த
தானனா தனன தத்த ...... தனதான
கோழையாணவ மிகுத்த வீரமே புகல்வர் அற்பர்
கோதுசேர் இழிகுலத்தர் ...... குலமேன்மை
கூறியே நடுவிருப்பர் சோறிடார் தரும புத்ர
கோவுநானென இசைப்பர் ...... மிடியூடே
ஆழுவார் நிதியுடைக் குபேரனாம்என இசைப்பர்
ஆசுசேர் கலியுகத்தினெறி ஈதே
ஆயுநூலறிவு கெட்ட நானும்வேறல அதற்குள்
ஆகையால் அவைஅடக்க ...... உரையீதே
ஏழைவானவர் அழைக்க ஆனைவாசவன் உருத்ர
ஈசன்மேல் வெயிலெறிக்க ...... மதிவேணி
ஈசனார் தமதிடுக்க மாறியே கயிலை வெற்பில்
ஏறியே இனிதிருக்க ...... வருவோனே
வேழமீதுறையும் வஜ்ர தேவர்கோ சிறைவிடுத்து
வேதனாரையும் விடுத்து ...... முடிசூடி
வீரசூர்அவன் முடிக்குள் ஏறியே கழுகு கொத்த
வீறுசேர் சிலையெடுத்த ...... பெருமாளே
திருப்பாடல் 165:
தந்தனந் தனந்த தந்த, தந்தனந் தனந்த தந்த
தந்தனந் தனந்த தந்த ...... தனதான
சந்தனங் கலந்த குங்குமம் புனைந்தணிந்த கொங்கை
சந்திரந் ததும்பசைந்து ...... தெருவூடே
சங்கினங் குலுங்க செங்கை எங்கிலும் பணிந்துடம்பு
சந்தனந் துவண்டசைந்து ...... வருமாபோல்
கொந்தளங் குலுங்க வண்சிலம்பு பொங்க இன்சுகங்கள்
கொஞ்சிபொன் தொடர்ந்திடும்பொன் ...... மடவார்தோள்
கொங்கைபைங் கரம் புணர்ந்தழிந்துணங்கலுந் தவிர்ந்து
கொஞ்சுநின் சரண்கள் அண்ட ...... அருள்தாராய்
தந்தனந்தசெஞ் சிலம்பு கிண்கிணின் குலங்கள் கொஞ்ச
தண்டையம் பதம் புலம்ப ...... வருவோனே
சந்தனம் புனைந்த கொங்கை கண்களுஞ் சிவந்து பொங்க
சண்பகம் புனங்குறம் பொன் ...... அணைமார்பா
வந்த நஞ்சுகந்தமைந்த கந்தரன் புணர்ந்த வஞ்சி
மந்தரம் பொதிந்த கொங்கை ...... உமையீனும்
மைந்தன் என்றுகந்து விஞ்சு மன்பணிந்த சிந்தை அன்பர்
மங்கலின்றுளம் புகுந்த ...... பெருமாளே
திருப்பாடல் 166:
தனன தனதனன தான தானன
தனதனன தான தானன
தனன தனதனன தான தானன தந்ததான
சுருதி வெகுமுக புராண கோடிகள்
சரியை கிரியைமக யோக மோகிகள்
துரித பரசமய பேதவாதிகள் ...... என்றும்ஓடித்
தொடரஉணரஅரிதாய தூரிய
பொருளை அணுகி அநுபோகம்ஆனவை
தொலைய இனியவொரு ஸ்வாமியாகிய ...... நின்ப்ரகாசங்
கருதி உருகிஅவிரோதியாய் அருள்
பெருகு பரமசுக மா மகோததி
கருணை அடியரொடு கூடியாடி ...... மகிழ்ந்துநீபக்
கனக மணிவயிர நூபுராரிய
கிரண சரண அபிராம கோமள
கமல யுகள மறவாது பாட நினைந்திடாதோ
மருது நெறுநெறென மோதி வேரோடு
கருதும் அலகைமுலை கோதி வீதியில்
மதுகையொடு தறுகண் ஆனை வீரிட ...... வென்றுதாளால்
வலிய சகடிடறி மாயமாய்மடி
படிய நடைபழகி ஆயர்பாடியில்
வளரு முகில்மருக வேல் விநோத ...... சிகண்டிவீரா
விருதர் நிருதர்குல சேனை சாடிய
விஜய கடதட கபோல வாரண
விபுதை புளகதன பார பூஷண ...... அங்கிராத
விமலை நகிலருண வாகு பூதர
விபுத கடக கிரி மேரு பூதர
விகட சமரசத கோடி வானவர் ...... தம்பிரானே
திருப்பாடல் 167:
தத்தத் தனதன தத்தன தனதன
தத்தத் தனதன தத்தன தனதன
தத்தத் தனதன தத்தன தனதன ...... தனதானத்
சுற்றத்தவர்களு மக்களும் இதமுள
சொற்குற்றரிவையும் விட்டது சலமிது
சுத்தச் சலமினி சற்றிது கிடைபடும் ...... எனமாழ்கித்
துக்கத்தொடு கொடிதொட்டியெ அழுதழல்
சுட்டக் குடமொடு சுட்டெரி கனலொடு
தொக்குத் தொகுதொகு தொக்கென இடுபறை ...... பிணமூடச்
சற்றொப்புளதொரு சச்சையும் எழுமுடல்
சட்டப் படவுயிர் சற்றுடன் விசியது
தப்பில் தவறுறு மத்திப நடையென ...... உரையாடிச்
சத்திப்பொடு கரம் வைத்திடர் தலைமிசை
தப்பிற்றிதுபிழை எப்படி எனுமொழி
தத்தச் சடம்விடும் அப்பொழுதிருசரண் ...... அருள்வாயே
சிற்றிற் கிரிமகள் கொத்தலர் புரிகுழல்
சித்ரப் ப்ரபைபுனை பொற்பினள் இளமயில்
செற்கட் சிவகதி உத்தமி களிதர ...... முதுபேய்கள்
திக்குச் செககெண தித்தரி திகுதிகு
செச்செச் செணக்ருத டொட்டரி செணக்ருத
டெட்டெட் டுடுடுடு தத்தரி தரியென ...... நடமாடுங்
கொற்றப் புலியதள் சுற்றிய அரனருள்
குட்டிக் கரிமுகன் இக்கவல் அமுதுசெய்
கொச்சைக் கணபதி முக்கணன் இளையவ ...... களமீதே
குப்புற்றுடன்எழு சச்சரி முழவியல்
கொட்டச் சுரர்பதி மெய்த்திட நிசிசரர்
கொத்துக் கிளையுடல் பட்டுக அமர்செய்த ...... பெருமாளே
திருப்பாடல் 168:
தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன
தந்த தத்தன தானாதன ...... தனதான
செங்கனற் புகைஓமாதிகள் குண்டமிட்டெழு சோமாசிகள்
தெண்டெனத் துணை தாள்மேல்விழ ...... அமராடிச்
சிந்தனைப்படி மோகாதியில் இந்த்ரியத்தினில் ஓடாசில
திண்திறல் தவவாள் வீரரொடிகலா !நின்
றங்கம் வெட்டிய கூர்வாள்விழி மங்கையர்க்கற மாலாய்மனம்
அந்தி பட்டிருள் மூடாவகை ...... அவிரோத
அந்த நிற்குண ஞானோதய சுந்தரச் சுடர் ஆராய!ந
லன்பு வைத்தருளாம் ஓர்கழல் ...... அருளாதோ
கொங்கடுத்த குரா மாலிகை தண்கடுக்கை துழாய் தாதகி
கும்பிடத்தகு பாகீரதி ...... மதிமீது
கொண்ட சித்ரகலா சூடிகை இண்டெருக்கணி காகோதர
குண்டலத்தர் பினாகாயுதருடன் ஏயச்
சங்கு சக்ர கதாபாணியும் எங்களுக்கொரு வாழ்வே சுரர்
தங்களைச்சிறை மீளாய்என ...... அசுரேசன்
தஞ்சம்அற்றிட வேதாகரன் அஞ்ச வெற்புக வீராகர
சண்ட விக்ரம வேலேவிய ...... பெருமாளே
திருப்பாடல் 169:
தானதனத் தானதனத் தானதனத் தானதனத்
தானதனத் தானதனத் ...... தனதான
சேலைஅடர்த்தால மிகுத்தேஉழையைச் சீறு!விதித்
தூறுசிவப் பேறுவிழிக் ...... கணையாலே
தேனிரதத்தே முழுகிப் பாகு நிகர்த்தாரமுதத்
தேறலெனக் கூறுமொழிச் ...... செயலாலே
ஆலிலையைப் போலும் வயிற்றால்அளகத்தால்!அதரத்
தாலும் இதத்தாலும் வளைப்பிடுவோர் மேல்
ஆசையினைத் தூரவிடுத்தே புகழ்உற்றே ப்ரிய!நற்
றாளிணையைச் சேர எனக்கருள்வாயே
காலனைமெய்ப் பாதமெடுத்தே உதையிட்டே மதனைக்
காய எரித்தே விதியின் தலையூடே
காசினியிற் காணஇரப்போர் மதியைச் !சூடியெருத்
தேறி வகித்தூரு திரைக் ...... கடல்மீதில்
ஆலமிடற்றானையுரித் தோலையுடுத்தீமம் !அதுற்
றாடியிடத்தே உமைபெற்றருள் வாழ்வே
ஆழியினைச் சூரனை வெற்பேழினை உற்றேஅயில்!விட்
டாதுலருக்காறு முகப் ...... பெருமாளே
திருப்பாடல் 170:
தத்தத்தத் தத்தத் தத்தன
தத்தத்தத் தத்தத் தத்தன
தத்தத்தத் தத்தத் தத்தன ...... தனதான
சொக்குப் பொட்டெத்திக் கைப்!பொரு
ளைக்கெத்திற் பற்றிச் சிக்கொடு
சுற்றுப் பட்டெற்றித் தெட்டிகள் ...... முலைமீதே
சுற்றுப்பொற் பட்டுக் கச்சினர்
முற்றிக்குத் தத்தைக்கொப்பென
சொற்பித்துக் கற்பிற் செப்பிய ...... துயராலே
சிக்குப் பட்டுட்கிப் பற்கொடு
எற்றிக்கைக் குத்துப்பட்டிதழ்
தித்திப்பிற்கொத்துப் பித்துயர் ...... கொடுநாயேன்
திக்குக் கெட்டொட்டுச் சிட்டென
பட்டத் துற்புத்திக் கட்டற
செப்பத்துற் பற்றற்கற்புதம் ......அருள்வாயே
தக்குத்தக் குக்குக் குக்குட
தட்டுட்டுட் டுட்டுட் டுட்டென
தக்குத்திக் கெட்டுப் பொட்டெழ ...... விருதோதை
தத்தித்தித் தித்தித் தித்தென
தெற்றுத் துட்டக் கட்டர்ப்படை
சத்திக் கொற்றத்திற் குத்திய ...... முருகோனே
துக்கித்திட்டத்தித் துக்கக
நெக்குப்பட்டெக்கித் துட்டறு
சுத்தப்பொற் பத்தர்க்குப்பொருள் ......அருள்வேலா
துற்றப்பொற் பச்சைக் கட்!கல
பச் சித்ரப் பக்ஷிக் கொற்றவ
சொக்கர்க்கர்த்தத்தைச் சுட்டிய ...... பெருமாளே
திருப்பாடல் 171
தானான தானன தானன தானன
தானான தானன தானன தானன
தானான தானன தானன தானன ...... தனதான
ஞானா விபூஷணி கார்அணி காரணி
காமா விமோகினி வாகினி யாமளை
மாமாயி பார்வதி தேவிகுணாதரி ...... உமையாள்தன்
நாதா க்ருபாகர தேசிகர் தேசிக
வேதாகமே அருள் தேவர்கள் தேவநல்
ஈசா சடா பரமேசர் சர்வேசுரி ...... முருகோனே
தேனார் மொழீவளி நாயகி நாயக
வானாடுளோர் தொழு மாமயில் வாகன
சேணாளு மானின் மனோகரமாகிய ...... மணவாளா
சீர்பாத சேகரன் ஆகவு நாயினன்
மோகாவிகார விடாய்கெட ஓடவெ
சீராகவே கலையால்உனை ஓதவும் ...... அருள்வாயே
பேணார்கள் நீறதிடா அமணோர்களை
சூராடியே கழு மீதினில் ஏறிட
கூனான மீனன் இடேறிட கூடலில் ...... வருவோனே
பேராண்மையாளன் நீசாசரர் கோன்இரு
கூறாக வாளிதொடூ ரகுநாயகன்
பூவாயனாரணன் மாயன்இராகவன் ...... மருகோனே
வாணாள் படாவரு சூரர்கள் மாளவெ
சேணாடுளோர் அவர் வீடதிடேறிட
கோனாகவே வரு நாத குரூபர ...... குமரேசா
வாசாம கோசரமாகிய வாசக
தேசாதியோர் அவர் பாதமதே தொழ
பாசா விநாசகனாகவும் மேவிய ...... பெருமாளே
திருப்பாடல் 172
தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
தனதனன தனதனன தந்தனந் தந்தனந்
தனதனன தனதனன தந்தனந் தந்தனந் ...... தனதான
தரணிமிசை அனையினிட உந்தியின் வந்துகுந்
துளிபயறு கழலினிய அண்டமுங் கொண்டதின்
தசையுதிர நிணநிறைய அங்கமுந் தங்கஒன்பதுவாயுந்
தருகரமொடினிய பதமுங் கொடங்கொன்பதும்
பெருகியொரு பதின்அவனி வந்து கண்டன்புடன்
தநயனென நடைபழகி மங்கைதன் சிங்கியின் ...... வசமாகித்
திரிகியுடல் வளையநடை தண்டுடன் சென்றுபின்
கிடையெனவு மருவிமனை முந்தி வந்தந்தகன்
சிதறவுயிர் பிணமெனவெ மைந்தரும் பந்துவும் ...... அயர்வாகிச்
செடமிதனை எடுமெடுமின் என்று கொண்டன்புடன்
சுடலைமிசை எரியினிட வெந்துபின் சிந்திடுஞ்
செனனமிது தவிரஇரு தண்டையுங் கொண்டபைங் ...... கழல்தாராய்
செருவெதிரும் அசுரர்கிளை மங்க எங்கெங்கணுங்
கழுகருடன் நயனமிது கண்டு கொண்டம்பரந்
திரியமிகு அலகையுடன் வெங்கணந் தங்களின் ...... மகிழ்வாகிச்
சினஅசுரர் உடலமது தின்று தின்றின்புடன்
டுமுடுமுட டுமுடுமுட டுண்டுடுண் டுண்டுடுண்
டிமிலைபறை முழவுதுடி பம்பையுஞ் சங்கமுந் ...... தவமோதச்
சரவரிசை விடுகுமர அண்டர்தம் பண்டுறுஞ்
சிறையைவிட வருமுருக என்று வந்திந்திரன்
சதுமுகனும் அடிபரவ மண்டுவெஞ்சம் பொருங் ...... கதிர்வேலா
சகமுழுதும் அடையஅமுதுண்டிடுங் கொண்டலுந்
தெரிவரிய முடியின் அரவங்களுந் திங்களுஞ்
சலமிதழி அணியுமொரு சங்கரன் தந்திடும் ...... பெருமாளே
திருப்பாடல் 173
தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத் தனந்தத்தத்
தனந்தத்தத் தனந்தத்தத் ...... தனதான
தனஞ்சற்றுக் குலுங்கப்பொற் கலன்கட் பட்டிலங்கப்பொற்
சதங்கைக்கற் சிலம்பொத்திக் ...... கையில்வீணை
ததும்பக்கைக் குழந்தைச்சொற் பரிந்தற்புக்கிதங்கப் பொற்
சரஞ் சுற்றிட்டிணங்கக்கட் ...... சரவேலால்
தினம் பித்திட்டிணங்கிச்சொற் கரங்கட்டிப் புணர்ந்திட்டுத்
தினந்தெட்டிக் கடன்பற்றிக் ...... கொளுமாதர்
சிலம்பத்தில் திரிந்துற்றிட்டவம் புக்கக் குணஞ்செற்றுச்
சிவம்பெற்றுத் தவம்பற்றக் ...... கழல்தாராய்
தனந்தத்தத் தனந்தத்தத் தடுண்டுட்டுட் டிடிண்டிட்டிட்
டடண்டட்டட் டிமிண்டுட்டுட் ...... டியல்தாளந்
தகுந்தொத்தித் திமிந்தித்தித் தவண்டைக்குட்கயர்ந்துக்கத்
தகண்டத்தர்க்குடன் பட்டுற்றசுராரைச்
சினந்தத்திக் கொளுந்தக்கைச் சரந்தொட்டுச் சதம்பொர்ப்பைச்
சிரந்தத்தப் பிளந்துட்கக் ...... கிரிதூளாச்
செகந்திக்குச் சுபம்பெற்றுத் துலங்கப்பொர்க் களம்புக்குச்
செயம்பற்றிக் கொளுஞ்சொக்கப் ...... பெருமாளே
திருப்பாடல் 174
தனனதன தான தான தனனதன தான தான
தனனதன தான தான ...... தனதான
நகரம்இரு பாதமாகி மகர வயிறாகி மார்பு
நடுசிகரமாகி வாய் ...... வகரமாகி
நதிமுடிய சாரமாகி உதயதிரு மேனியாகி
நமசிவய மாமையாகி ...... எழுதான
அகரஉகரேத ரோம சகர உணர்வான சூரன்
அறிவில்அறிவான பூரணமுமாகும்
அதனைஅடியேனும் ஓதி இதய கமலாலையாகி
மருவும் அவதான போதம் ...... அருள்வாயே
குகனும் அருளாண்மை கூர மகரமெனு சாபதாரி
குறையகல வேலை மீது ...... தனியூருங்
குழவி வடிவாகவே நம் பரதர் தவமாக மீறு
குலவுதிரை சேரு மாது ...... தனைநாடி
அகிலஉலகோர்கள் காண அதிசயமதாக மேவி
அரியமணமே செய்தேகவலை தேடி
அறுமுகவன் மீகரான பிறவி யம ராசை வீசும்
அசபைசெகர் சோதி நாத ...... பெருமாளே
திருப்பாடல் 175
தனதன தத்த தந்த தானத்த
தனதன தத்த தந்த தானத்த
தனதன தத்த தந்த தானத்த ...... தனதான
நரையொடு பற்கழன்று தோல்வற்றி
நடையற மெத்த நொந்து காலெய்த்து
நயனம்இருட்டி நின்று கோலுற்று ...... நடைதோயா
நழுவும் விடக்கை ஒன்று போல்வைத்து
நமதென மெத்த வந்த வாழ்வுற்று
நடலைபடுத்தும் இந்த மாயத்தை ...... நகையாதே
விரையொடு பற்றி வண்டு பாடுற்ற
ம்ருகமதம் அப்பி வந்த ஓதிக்கு
மிளிரு மையைச் செறிந்த வேல்கட்கும் ...... வினையோடு
மிகு கவினிட்டு நின்ற மாதர்க்கும்
இடைபடு சித்தம்ஒன்றுவேன் உற்றுன்
விழுமிய பொற்பதங்கள் பாடற்கு ...... வினவாதோ
உரையொடு சொற்றெரிந்த மூவர்க்கும்
ஒளிபெற நற்பதங்கள் போதித்தும்
ஒருபுடை பச்சை நங்கையோடுற்றும் .....உலகூடே
உறுபலி பிச்சை கொண்டு போயுற்றும்
உவரி விடத்தை உண்டு சாதித்தும்
உலவிய முப்புரங்கள் வேவித்தும் ...... உறநாகம்
அரையொடு கட்டி அந்தமாய் வைத்தும்
அவிர்சடை வைத்த கங்கையோடொக்க
அழகு திருத்தி இந்து மேல்வைத்தும் .....அரவோடே
அறுகொடு நொச்சி தும்பை மேல்வைத்த
அரிஅயன் நித்தம் வந்து பூசிக்கும்
அரநிமலர்க்கு நன்று போதித்த ...... பெருமாளே
திருப்பாடல் 176
தனந்த தனனந் தனந்த தனந்த தனனந் தனந்த
தனந்த தனனந் தனந்த ...... தனதான
நிமிர்ந்த முதுகுங் குனிந்து சிறந்த முகமுந் திரங்கி
நிறைந்த வயிறுஞ் சரிந்து ...... தடியூணி
நெகிழ்ந்து சடலந் தளர்ந்து விளங்கு விழிஅங்கிருண்டு
நினைந்த மதியுங் கலங்கி ...... மனையாள்!கண்
டுமிழ்ந்து பலருங் கடிந்து சிறந்த இயலும் பெயர்ந்து
உறைந்த உயிருங் கழன்று ...... விடுநாள்முன்
உகந்து மனமுங் குளிர்ந்து பயன்கொள் தருமம் புரிந்து
ஒடுங்கி நினையும் பணிந்து ...... மகிழ்வேனோ
திமிந்தி எனவெங் கணங்கள் குணங்கர் பலவுங் குழும்பி
திரண்ட சதியும் புரிந்து ...... முதுசூரன்
சிரங்கை முழுதுங் குடைந்து நிணங்கொள் குடலுந் தொளைந்து
சினங்கழுகொடும் பெருங் ...... குருதிமூழ்கி
அமிழ்ந்தி மிகவும் பிணங்கள் அயின்று மகிழ்கொண்டு மண்ட
அடர்ந்த அயில்முன் துரந்து ...... பொருவேளே
அலங்கலென வெண் கடம்பு புனைந்து புணருங் குறிஞ்சி
அணங்கை மணமுன் புணர்ந்த ...... பெருமாளே
திருப்பாடல் 177
தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன
தனன தாத்தன தானா தானன ...... தனதான
நிருதரார்க்கொரு காலா ஜேஜெய
சுரர்கள்ஏத்திடு வேலா ஜேஜெய
நிமலனார்க்கொரு பாலா ஜேஜெய ...... விறலான
நெடிய வேற்படையானே ஜேஜெய
எனஇராப்பகல் தானே நான்மிக
நினது தாள்தொழுமாறே தானினி ...... உடனேதான்
தரையின்ஆழ்த்திரைஏழே போலெழு
பிறவி மாக்கடலூடே நானுறு
சவலை தீர்த்துனதாளே சூடியுன் ...... அடியார்வாழ்
சபையின்ஏற்றியின் ஞானா போதமும்
அருளி ஆட்கொளுமாறே தானது
தமியனேற்கு முனேநீ மேவுவதொரு நாளே
தருவினாட்டரசாள்வான் வேணுவின்
உருவமாய்ப்பல நாளே தானுறு
தவசினாற் சிவனீபோய் வானவர் ...... சிறைதீரச்
சகல லோக்கியமே தான் ஆளுறும்
அசுர பார்த்திபனோடே சேயவர்
தமரை வேற்கொடு நீறாயேபட ...... !விழமோதென்
றருள ஏற்றமரோடே போயவர்
உறையு மாக்கிரியோடே தானையும்
அழிய வீழ்த்தெதிர் சூரோடே அமர் ...... அடலாகி
அமரில் வீட்டியும் வானோர் தானுறு
சிறையை மீட்டரனார் பால் மேவிய
அதிபராக்ரம வீரா வானவர் ...... பெருமாளே
திருப்பாடல் 178
தான தான தான தந்த தான தான தான தந்த
தான தான தான தந்த ...... தனதான
ஆர வாரமாய் இருந்து ஏம தூதரோடி வந்து
ஆழி வேலை போல்முழங்கி ...... அடர்வார்கள்
ஆக மீதிலே சிவந்து ஊசி தானுமே நுழைந்து
ஆலைமீதிலே கரும்பு ...... எனவேதான்
வீரமான சூரி கொண்டு நேரை நேரையே பிளந்து
வீசுவார்கள் கூகுவென்று ...... அழுபோது
வீடு வாசலான பெண்டிர் ஆசையான மாதர் வந்து
மேலை வீழ்வர் ஈது கண்டு ...... வருவாயே
நாரி வீரி சூரி அம்பை வேத வேதமே புகழ்ந்த
நாதர் பாலிலே இருந்த ...... மகமாயி
நாடியோடி வாற அன்பர் காண வேணதே புகழ்ந்து
நாளு நாளுமே புகன்ற ...... வரைமாது
நீரின் மீதிலே இருந்த நீலி சூலி வாழ்வு மைந்த
நீப மாலையே புனைந்த ...... குமரேசா
நீலனாக ஓடி வந்த சூரை வேறு வேறு கண்ட
நீதனானதோர் குழந்தை ...... பெருமாளே
திருப்பாடல் 179
தான தந்த தான தான தான தந்த தான தான
தான தந்த தான தான ...... தனதான
நீரும் என்பு தோலினாலும் ஆவதென்கை கால்களோடு
நீளும் அங்கமாகி மாய ...... உயிரூறி
நேசமொன்று தாதை தாயர் ஆசை கொண்ட போதில் மேவி
நீதியொன்று பாலனாகி ...... அழிவாய்!வந்
தூரும் இன்ப வாழ்வுமாகி ஊனம் ஒன்றிலாது !மாத
ரோடு சிந்தை வேடை கூர ...... உறவாகி
ஊழியைந்த கால மேதியோனும் வந்து பாசம் வீச
ஊனுடம்பு மாயு மாயம்...... ஒழியாதோ
சூரன் அண்ட லோக மேன்மை சூறை கொண்டு போய் விடாது
தோகையின் கண் மேவி வேலை ...... விடும்வீரா
தோளில் என்பு மாலை வேணி மீது கங்கை சூடியாடு
தோகை பங்கரோடு சூது ...... மொழிவோனே
பாரை உண்ட மாயன் வேயை ஊதி பண்டு பாவலோர்கள்
பாடல் கண்டு ஏகு மாலின் ...... மருகோனே
பாதகங்கள் வேறி நூறி நீதியின்சொல் வேத வாய்மை
பாடும் அன்பர் வாழ்வதான ...... பெருமாளே
திருப்பாடல் 180
தனதத்தத் தத்தத் தனதன
தனதத்தத் தத்தத் தனதன
தனதத்தத் தத்தத் தனதன ...... தனதான
பகல்மட்கச் செக்கர்ப் ப்ரபைவிடு
நவரத்நப் பத்தித் தொடைநக
நுதி பட்டிட்டற்றுச் சிதறிட ...... இதழூறல்
பருகித் தித்திக்கப் படுமொழி
பதறக்கைப் பத்மத்தொளி வளை
வதறிச் சத்திக்கப் புளகித ...... தனபாரம்
அகலத்தில் தைக்கப் பரிமள
அமளிக்குட் சிக்கிச் சிறுகென
இறுகக்கைப் பற்றித் தழுவிய ...... அநுராக
அவசத்திற் சித்தத்தறிவையும்
மிகவைத்துப் பொற்றித் தெரிவையர்
வசம் விட்டர்ச்சிக்கைக்கொரு பொழுதுணர்வேனோ
இகல்வெற்றிச் சத்திக் கிரணமு
முரணிர்த்தப் பச்சைப் புரவியும்
இரவிக்கைக் குக்டத் துவசமு ...... மறமாதும்
இடைவைத்துச் சித்ரத் தமிழ்கொடு
கவிமெத்தச் செப்பிப் பழுதற
எழுதிக் கற்பித்துத் திரிபவர் ...... பெருவாழ்வே
புகலில் தர்க்கிட்டுப் ப்ரமையுறு
கலகச் செற்றச் சட்சமயிகள்
புகலற்குப் பற்றற்கரியதொர் ...... உபதேசப்
பொருளைப் புட்பித்துக் குருபரன்
எனமுக்கட் செக்கர்ச் சடைமதி
புனை அப்பர்க்கொப்பித்தருளிய ...... பெருமாளே
திருப்பாடல் 181
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான
பத்தித் தரளக் கொத்தொளிர்வரி
பட்டப் புளகச் செப்பிள முலை
பட்டிட்டெதிர் கட்டுப் பரதவர் ...... உயர்தாளப்
பத்மத்தியர் அற்புக் கடுகடு
கட்சத்தியர் மெத்தத் திரவிய
பட்சத்தியர் இக்குச் சிலைஉருவிலி சேருஞ்
சித்தத் தருணர்க்குக் !கனியத
ரப் புத்தமுதத்தைத் தரும்அவர்
சித்ரக் கிரணப் பொட்டிடு பிறை ...... நுதலார்தந்
தெட்டிற்படு கட்டக் கனவிய
பட்சத்தருள் அற்றுற்றுனதடி
சிக்கிட்டிடை புக்கிட்டலைவது ...... தவிராதோ
மத்தப் பிரமத்தக் கய!முக
னைக் குத்திமிதித்துக் கழுதுகள்
மட்டிட்டஇரத்தக் குருதியில் ...... விளையாட
மற்றைப் பதினெட்டுக் கணவகை
சத்திக்க நடிக்கப் பலபல
வர்க்கத்தலை தத்தப் பொருபடை ...... உடையோனே
முத்திப் பரமத்தைக் கருதிய
சித்தத்தினில் முற்றத் தவமுனி
முற்பட்டுழை பெற்றுத் தருகுற ...... மகள் மேல் மால்
முற்றித்திரி வெற்றிக் குருபர
முற்பட்ட முரட்டுப் புலவனை
முட்டைப்பெயர் செப்பிக் கவிபெறு ...... பெருமாளே
திருப்பாடல் 182
தனதனன தந்ததன தானத் தாத்தன
தனதனன தந்ததன தானத் தாத்தன
தனதனன தந்ததன தானத் தாத்தன ...... தனதான
பரதவித புண்டரிக பாதத்தாட்டிகள்
அமுதுபொழியுங் குமுத கீதப் பாட்டிகள்
பலர்பொருள் கவர்ந்திடை கலாமிட்டோட்டிகள் ...... கொடிதாய
பழுதொழிய அன்பும்உடையாரைப் போற்!சிறி
தழுதழுது கண்பிசையும் ஆசைக் கூற்றிகள்
பகழியென வந்துபடு பார்வைக் கூற்றினர் ...... ஒருகாம
விரகம்விளைகின்ற கழுநீரைச் சேர்த்தகில்
ம்ருகமத மிகுந்தபனி நீரைத் தேக்கியெ
விபுதர்பதி அங்கதல மேவிச் சாற்றிய ...... தமிழ்நூலின்
விததிகமழ் தென்றல்வர வீசிக் கோட்டிகள்
முலைகளில் விழுந்து பரிதாபத்தாற்றினில்
விடியளவு நைந்துருகுவேனைக் காப்பதும் ...... ஒருநாளே
உரகபணை பந்திஅபிஷேகத் தாற்றிய
சகலவுலகுந் தரும் அமோகப் பார்ப்பதி
உடனுருவு பங்குடைய நாகக் காப்பனும் ...... உறிதாவும்
ஒருகளவு கண்டுதனி கோபத் தாய்க்குல
மகளிர்சிறு தும்புகொடு மோதிச் சேர்த்திடும்
உரலொடு தவழ்ந்த நவநீதக் கூற்றனும் ...... அதிகோபக்
கரவிகட வெங்கட கபோலப் போர்க்கிரி
கடவிய புரந்தரனும் வேளைப் போற்றுகை
கருமமென வந்துதொழ வேதப்பாற் பதி ...... பிறியாத
கடவுளை முனிந்தமரர் ஊரைக் காத்துயர்
கரவட க்ரவுஞ்சகிரி சாயத் தோற்றெழு
கடலென உடைந்தவுணர்ஓடத் தாக்கிய ...... பெருமாளே
திருப்பாடல் 183
தனதன தானத் தனந்த தனதன தானத் தனந்த
தனதன தானத் தனந்த ...... தனதான
பழுதற ஓதிக் கடந்து பகைவினை தீரத் துறந்து
பலபல யோகத்திருந்து ...... மதராசன்
பரிமள பாணத்தயர்ந்து பனைமடல் ஊர்தற்கிசைந்து
பரிதவியா மெத்த நொந்து ...... மயல்கூர
அழுதழுதாசைப் படுங்கண் அபிநய மாதர்க்கிரங்கி
அவர்விழி பாணத்து நெஞ்ச ...... மறைபோய்!நின்
றழிவது யான்முற் பயந்த விதிவசமோ மற்றையுன்றன்
அருள்வசமோ இப்ரமந் தெரிகிலேனே
எழுதரு வேதத்தும் அன்றி முழுதினுமாய் நிற்கும் எந்தை
எனவொரு ஞானக் குருந்தர்உள மேவும்
இருவுருவாகித் துலங்கி ஒருகன தூணிற் பிறந்து
இரணியன் மார்பைப் பிளந்த ...... தனியாண்மை
பொழுதிசையா விக்ரமன் தன் மருக புராரிக்கு மைந்த
புளக படீரக் குரும்பை ...... உடன்மேவும்
புயல்கரி வாழச் சிலம்பின் வனசர மானுக்குகந்து
புனமிசை ஓடிப் புகுந்த ...... பெருமாளே
திருப்பாடல் 184
தானத்தத் தனான தானன தானத்தத் தனான தானன
தானத்தத் தனான தானன ...... தந்ததான
பாணிக்குட்படாது சாதகர் காணச் சற்றொணாது வாதிகள்
பாஷிக்கத் தகாது பாதக ...... பஞ்சபூத
பாசத்திற்படாது வேறொர் உபாயத்திற் புகாது பாவனை
பாவிக்கப் பெறாது வாதனை ...... நெஞ்சமான
ஏணிக்கெட்டொணாது மீதுயர் சேணுக்குச் சமான நூல்வழி
ஏறிப் பற்றொணாது நாடினர் ...... தங்களாலும்
ஏதுச் செப்பொணாததோர் பொருள் சேரத் துக்கமா மகோததி
ஏறச்செச்சை நாறு தாளை வணங்குவேனோ
ஆணிப்பொற் ப்ரதாப மேருவை வேலிட்டுக் கடாவி வாசவன்
ஆபத்தைக் கெடா நிசாசரர் ...... தம்ப்ரகாசம்
ஆழிச் சத்ரசாயை நீழலில் ஆதித்தப் ப்ரகாச நேர்தர
ஆழிச் சக்ரவாளம் ஆள்தரும் ...... எம்பிரானே
மாணிக்க ப்ரவாள நீலமதாணிப் பொற் கிராதைநூபுர
வாசப் பத்மபாத சேகர ...... சம்புவேதா
வாசிக்கப் படாத வாசகம் ஈசர்க்குச் சுவாமியாய் முதல்
வாசிப்பித்த தேசிகா சுரர் ...... தம்பிரானே
திருப்பாடல் 185
தானன தனத்தத் தாத்த தானன தனத்தத் தாத்த
தானன தனத்தத் தாத்த ...... தனதான
பால்மொழி படித்துக் காட்டி ஆடையை நெகிழ்த்துக் காட்டி
பாயலில் இருத்திக் காட்டி ...... அநுராகம்
பாகிதழ் கொடுத்துக் காட்டி நூல்களை விரித்துக் காட்டி
பார்வைகள் புரட்டிக் காட்டி ...... உறவாகி
மேல்நகம் அழுத்திக் காட்டி தோதக விதத்தைக் காட்டி
மேல்விழு நலத்தைக் காட்டு ...... மடவார்பால்
மேவிடு மயக்கைத் தீர்த்து சீர்பத நினைப்பைக் கூட்டு
மேன்மையை எனக்குக் காட்டி ...... அருள்வாயே
காலனை உதைத்துக் காட்டி ஆவியை வதைத்துக் காட்டி
காரணம் விளைத்துக் காட்டி ...... ஒருகாலங்
கானினில் நடித்துக் காட்டி ஆலமு மிடற்றிற் காட்டி
காமனை எரித்துக் காட்டி ...... தருபாலா
மாலுற நிறத்தைக் காட்டி வேடுவர் புனத்திற் காட்டில்
வாலிபம் இளைத்துக் காட்டி ...... அயர்வாகி
மான்மகள் தனத்தைச் சூட்டி ஏனென அழைத்துக் கேட்டு
வாழ்வுறு சமத்தைக் காட்டு ...... பெருமாளே
திருப்பாடல் 186
தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன
தனன தானன தந்தன தந்தன ...... தனதான
புகரில் சேவல தந்துர சங்க்ரம
நிருதர் கோப க்ரவுஞ்ச நெடுங்கிரி
பொருத சேவக குன்றவர் பெண்கொடி ...... மணவாளா
புனித பூசுரருஞ் சுரரும்பணி
புயச பூதர என்றிரு கண்புனல்
பொழிய மீமிசை அன்பு துளும்பிய ...... மனனாகி
அகில பூதவுடம்பும் உடம்பினில்
மருவு மாருயிருங் கரணங்களும்
அவிழ யானுமிழந்த இடந்தனில் ......உணர்வாலே
அகிலவாதிகளுஞ் சமயங்களும்
அடைய ஆமென அன்றென நின்றதை
அறிவிலேன் அறியும்படி இன்றருள் ...... புரிவாயே
மகர கேதனமுந் திகழ் செந்தமிழ்
மலய மாருதமும் பல வெம்!பரி
மள சிலீமுகமும் பல மஞ்சரி ...... வெறியாடும்
மதுகராரம் விகுஞ்சணியுங் கர
மதுர கார்முகமும் பொர வந்தெழு
மதன ராஜனை வெந்துவிழும்படி ...... முனிபால
முகிழ்விலோசனர் அஞ்சிறு திங்களு
முது பகீரதியும் புனையுஞ் சடை
முடியர் வேதமு நின்று மணங்கமழ் ...... அபிராமி
முகர நூபுர பங்கய சங்கரி
கிரி குமாரி த்ரியம்பகி தந்தருள்
முருகனே சுர குஞ்சரி ரஞ்சித ...... பெருமாளே
திருப்பாடல் 187
தனனத்த தனத்த தனத்தன
தனனத்த தனத்த தனத்தன
தனனத்த தனத்த தனத்தன ...... தனதான
புருவத்தை நெறித்து விழிக்கயல்
பயிலிட்டு வெருட்டி மதித்திரு
புதுவட்டை மினுக்கி அளிக்குலம் ......இசைபாடும்
புயல்சற்று விரித்து நிரைத்தொளி
வளையிட்ட கரத்தை அசைத்தகில்
புனைமெத்தை படுத்த பளிக்கறை ...... தனிலேறிச்
சரசத்தை விளைத்து முலைக்கிரி
புளகிக்க அணைத்து நகக்குறி
தனைவைத்து முகத்தை முகத்துடன் ...... உறமேவித்
தணிவித்திரதத்ததரத்துமிழ்
அமுதத்தை அளித்து உருக்கிகள்
தருபித்தை அகற்றி உனைத்தொழ ...... முயல்வேனோ
பரதத்தை அடக்கி நடிப்பவர்
த்ரிபுரத்தை எரிக்க நகைப்பவர்
பரவைக்குள் விடத்தை மிடற்றிடுபவர் தேர்!கப்
பரையுற்ற கரத்தர் மிகப்!பகி
ரதியுற்ற சிரத்தர் நிறத்துயர்
பரவத்தர் பொருப்பில் இருப்பவர் ......உமையாளர்
சுரர்சுத்தர் மனத்துறை வித்தகர்
பணிபத்தர் பவத்தை அறுப்பவர்
சுடலைப் பொடியைப் பரிசிப்பவர் ...... விடையேறுந்
துணையொத்த பதத்தர் எதிர்த்திடு
மதனைக் கடிமுத்தர் கருத்தமர்
தொலைவற்ற க்ருபைக்குள் உதித்தருள் ...... பெருமாளே
திருப்பாடல் 188
தனத்தந் தான தனதன தனத்தந் தான தனதன
தனத்தந் தான தனதன ...... தனதான
புவிக்குன் பாதமதை நினைபவர்க்குங் கால தரிசனை
புலக்கண் கூடும் அதுதனை ...... அறியாதே
புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரை
புழுக்கண் பாவமது கொளல் ...... பிழையாதே
கவிக்கொண்டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி
களைக்கும் பாவ சுழல்படும் ...... அடிநாயேன்
கலக்குண்டாகு புவிதனில் எனக்குண்டாகு பணிவிடை
கணக்குண்டாதல் திருவுளம் ...... அறியாதோ
சிவத்தின் சாமி மயில்மிசை நடிக்குஞ் சாமி எமதுளெ
சிறக்குஞ் சாமி சொருபமிதொளி காணச்
செழிக்குஞ் சாமி பிறவியை ஒழிக்குஞ் சாமி பவமதை
தெறிக்குஞ் சாமி முனிவர்கள் ......இடமேவுந்
தவத்தின் சாமி புரிபிழை பொறுக்குஞ் சாமி குடிநிலை
தரிக்குஞ் சாமி அசுரர்கள் ...... பொடியாகச்
சதைக்குஞ் சாமி எமைபணி விதிக்குஞ் சாமி சரவண
தகப்பன் சாமி எனவரு ...... பெருமாளே
திருப்பாடல் 189
தானன தந்தன தந்த தந்தன
தானன தந்தன தந்த தந்தன
தானன தந்தன தந்த தந்தன ...... தனதான
பூசல்தருங் கயலும் பொருந்திய
வாசநறுங் குழலுந் துலங்கிய
பூரண கும்பமெனுந் தனங்களு ...... மடமாதர்
போகம் அடங்கலையும் !புணர்ந்தநு
ராகம் விளைந்து வரும் பெரும்பிழை
போயகலும்படி ஒன்றை அன்புற ...... நினையாதே
ஆசையெனும் படியுந் தனங்களும்
ஓகை நடந்திடவுந் தினங்களும்
ஆருடனும் பகை கொண்டு நின்றுற ...... நடமாடி
ஆடிய பம்பர முன்!சுழன்றெதி
ரோடி விழும்படி கண்டதொன்றுற
ஆவியகன்று விடும் பயங்கெட ...... அருள்வாயே
வாசவன் அன்பு விளங்க !நின்றசு
ரேசர் குலங்கள் அடங்கலுங்கெட
வானவர் நின்று தியங்குகின்றதொர் ...... குறைதீர
வாரிஅதிர்ந்து பயந்து நின்றிட
மேருஅடங்க இடிந்து சென்றிட
வாகை புனைந்தொரு வென்றி கொண்டருள் .....இளையோனே
வீசிய தென்றலொடந்தியும் !பகை
யாக முயங்க அநங்கனும்பொர
வேடையெனும் படி சிந்தை நொந்திட ...... அடைவாக
வேடர் செழும்புன வஞ்சி அஞ்சன
வேலின் உளங்கள் கலங்கி இன்புற
வேளையெனும்படி சென்றிறைஞ்சிய ...... பெருமாளே
திருப்பாடல் 190
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன
தான தந்தன தானா தானன ...... தனதான
பூசல் வந்திரு தோடார் காதொடு
மோதிடுங்கயல் மானார் மானமில்
போக மங்கையர் கோடா கோடிய ...... மனதானார்
பூர குங்கும தூளாமோத!ப
டீர சண்பக மாலா லாளித
பூதரங்களின் மீதே மூழ்கிய ...... அநுராக
ஆசை என்கிற பாராவாரமும்
ஏறுகின்றிலன் நானாபேத!அ
நேக தந்த்ர க்ரியா வேதாகம ...... கலையாய
ஆழியுங் கரை காணேன் நூபுர
பாத பங்கயம் ஓதேன் நேசிலன்
ஆயினுங் குருநாதா நீயருள் ...... புரிவாயே
வாசவன்பதி பாழாகாமல்!நி
சாசரன் குலம் வாழாதேஅடி
மாள வன்கிரி கூறாய் நீறெழ ...... நெடுநேமி
மாதவன்தரு வேதாவோடலை
மோது தெண்கடல் கோகோ கோவென
மாமுறிந்திட நீள்வேலேவிய ...... இளையோனே
வீசு தென்றலும் வேள்பூவாளியும்
மீறுகின்றமை ஆமோ !காமவி
டாய் கெடும்படி காவாய் ஆவியை ...... எனஏனல்
மீது சென்றுறவாடா வேடுவர்
பேதை கொங்கையின் மீதே மால்கொடு
வேடை கொண்ட பிரானே வானவர் ...... பெருமாளே
திருப்பாடல் 191
தந்தந் தனன தாத்தன தந்தந் தனன தாத்தன
தந்தந் தனன தாத்தன ...... தனதான
பொங்குங் கொடிய கூற்றனு நஞ்சும் பொதுவில் நோக்கிய
பொங்கும் புதிய நேத்திர ...... வலைவீசிப்
பொன் கண்டிளகு கூத்திகள் புன்கண் கலவி வேட்டுயிர்
புண்கொண்டுருகி ஆட்படு ...... மயல்தீரக்
கொங்கின் புசக கோத்திரி பங்கங் களையும் ஆய்க்குடி
கொங்கின் குவளை பூக்கிற ...... கிரிசோண
குன்றங் கதிரை பூப்பர முன்துன்றமரர் போற்றிய
குன்றம் பிறவும் வாழ்த்துவதொருநாளே
எங்கும் பகரமாய்க் கெடி விஞ்சும் பகழி வீக்கிய
வெஞ்சண்ட தனு வேட்டுவர் ...... சரணார
விந்தம் பணிய வாய்த்தருள் அந்தண் புவன நோற்பவை
மென்குங்கும குயாத்திரி ...... பிரியாதே
எங்குங் கலுழி ஆர்த்தெழ எங்குஞ் சுருதி கூப்பிட
எங்குங் குருவி ஓச்சிய ...... திருமானை
என்றென்றவசமாய்த் தொழுதென்றும் புதிய !கூட்டமொ
டென்றும் பொழுது போக்கிய ...... பெருமாளே
திருப்பாடல் 192
தனன தனதன தனத்தத் தாத்தன
தனன தனதன தனத்தத் தாத்தன
தனன தனதன தனத்தத் தாத்தன ...... தனதான
பொருத கயல்விழி புரட்டிக் காட்டுவர்
புளக தனவடம் அசைத்துக் காட்டுவர்
புயலின் அளகமும் விரித்துக் காட்டுவர் ...... பொதுமாதர்
புனித இதழ்மது நகைத்துக் காட்டுவர்
பொலிவின் இடைதுகில் குலைத்துக் காட்டுவர்
புதிய பரிபுர நடித்துக் காட்டுவர் ...... இளைஞோரை
உருக அணைதனில் அணைத்துக் காட்டுவர்
உடைமை அடையவெ பறித்துத் தாழ்க்கவெ
உததி அமுதென நிகழ்த்திக் கேட்பவர் ...... பொடிமாயம்
உதரம் எரிதர மருத்திட்டாட்டிகள்
உயிரினிலைகளை விரித்துச் சேர்ப்பவர்
உறவு கலவியை விடுத்திட்டாட்கொள ...... நினையாதோ
மருது பொடிபட உதைத்திட்டாய்ச் செரி
மகளிர் உறிகளை உடைத்துப் போட்டவர்
மறுக ஒரு கயிறடித்திட்டார்ப்புற ...... அழுதூறும்
வளரு நெடுமுகில் எதிர்த்துக் காட்டென
அசடன் இரணியன் உரத்தைப் பேர்த்தவன்
மழையின் நிரைமலை எடுத்துக் காத்தவன் ...... மருகோனே
விருது பலபல பிடித்துச் சூர்க்கிளை
விகட தடமுடி பறித்துத் தோட்களை
விழவு முறியவு மடித்துத் தாக்கிய ...... அயில்வீரா
வெகுதி சலதியை எரித்துத் தூட்பட
வினைசெய் அசுரர்கள் பதிக்குட் பாய்ச்சிய
விபுத மலரடி விரித்துப் போற்றினர் ...... பெருமாளே
திருப்பாடல் 193
தந்தானந் தாத்தந் தனதன
தந்தானந் தாத்தந் தனதன
தந்தானந் தாத்தந் தனதன ...... தனதான
மங்காதிங்காக்குஞ் சிறுவரும்
உண்டேஇங்காற்றுந் துணைவியும்
வம்பாருந் தேக்குண்டிட வறிதெணும் வாதை
வந்தேபொன் தேட்டங் கொடுமன
நொந்தே இங்காட்டம் பெரிதெழ
வண்போதன் தீட்டுந் தொடரது ...... படிஏமன்
சங்காரம் போர்ச் சங்கையில்உடல்
வெங்கானம் போய்த் தங்குயிர்கொள
சந்தேகந் தீர்க்குந் தனுவுடன் ...... அணுகாமுன்
சந்தாரஞ் சாத்தும் புயவியல்
கந்தா என்றேத்தும் படியென
சந்தாபந் தீர்த்தென்றடியிணை ...... தருவாயே
கங்காளன் பார்த்தன் !கையிலடி
யுண்டே திண்டாட்டங் கொளுநெடு
கல்சாபஞ் சார்த்துங் கரதலன் ...... எருதேறி
கந்தாவஞ் சேர்த்தண் புதுமலர்
அம்பால் வெந்தார்ப்பொன்றிட விழி
கண்டான் வெங் காட்டங்கனலுற ...... நடமாடி
அங்காலங் கோத்தெண் திசைபுவி
மங்காதுண்டாற்கொன்றதிபதி
அந்தாபந் தீர்த்தம் பொருளினை ...... அருள்வோனே
அன்பால் அந்தாட் கும்பிடும்அவர்
தம்பாவந் தீர்த்தம் புவியிடை
அஞ்சா நெஞ்சாக்கந் தரவல ...... பெருமாளே
திருப்பாடல் 194
தனன தனதன தனத்தா தன
தனன தனதன தனத்தா தன
தனன தனதன தனத்தா தன ...... தனதான
மதன தனுநிகர் இடைக்கே மனம்
உருக வருபிடி நடைக்கே இரு
வனச பரிபுர மலர்க்கே மது ...... கரம்வாழும்
வகுள ம்ருகமத மழைக்கே மணி
மகரம் அணிவன குழைக்கே மட
மகளிர் முகுளித முலைக்கே கடல் ...... அமுதூறும்
அதர மதுரித மொழிக்கே குழை
அளவும் அளவிய விழிக்கே !தள
வனையதொரு சிறு நகைக்கே பனி ...... மதிபோலும்
அழகு திகழ்தரு நுதற்கே !அந
வரதம் அவயவம் அனைத்தூடினும்
அவசமுறு மயல் தவிர்த்தாள்வதும் ...... ஒருநாளே
உததி புதைபட அடைத்தாதவன்
நிகரில் இரதமும் விடுக்கா நகர்
ஒருநொடியில் வெயில் எழச் சாநகி ...... துயர்தீர
உபய ஒருபது வரைத் தோள்களும்
நிசிசரர்கள் பதி தசக்ரீவமும்
உருள ஒருகணை தெரித்தானு(ம்) மவுனஞான
திதமில் அவுணர் தம்இருப்பாகிய
புரமும் எரியெழ முதற்பூதர
திலத குலகிரி வளைத்தானு(ம்) மகிழ வானோர்
திருவ நகர்குடி புகச் சீகர
மகர சலமுறை இடச் சூரொடு
சிகர கிரிபொடிபடச் சாடிய ...... பெருமாளே
திருப்பாடல் 195
தனதானன தனதானன தனதானன தனதானன
தனதானன தனதானன ...... தனதான
மதனேவிய கணையால்இரு வினையால்புவி கடல்சாரமும்
வடிவாய்உடல் நடமாடுக ...... முடியாதேன்
மனமாயையொடிரு காழ்வினை அறமூதுடை மலம்வேரற
மகிழ்ஞானக அநுபூதியின் ...... அருள்மேவிப்
பதமேவும்உன் அடியாருடன் விளையாடுக அடியேன்முனெ
பரிபூரண கிருபாகரம் ...... உடன்ஞான
பரிமேல் அழகுடனேறி விணவர்பூமழை அடிமேல்விட
பலகோடிவெண் மதிபோலவெ ...... வருவாயே
சதகோடிவெண் மடவார்கடல் எனசாமரை அசையாமுழு
சசிசூரியர் சுடராமென ...... ஒருகோடிச்
சடைமாமுடி முநிவோர்சரண் எனவேதியர் மறையோதுக
சதிநாடகம் அருள்வேணியன் ......அருள்பாலா
விதியானவன் இளையாள் எனதுள மேவிய வளிநாயகி
வெகுமாலுற தனமேல் அணை ...... முருகோனே
வெளிஆசையொடடை பூவணர் மருகாமணி முதிர்ஆடக
வெயில்வீசிய அழகா தமிழ் ...... பெருமாளே
திருப்பாடல் 196
தானதனத் தத்த தத்த தத்தன
தானதனத் தத்த தத்த தத்தன
தானதனத் தத்த தத்த தத்தன ...... தனதான
மாடமதிட் சுற்றும் ஒக்க வைத்திட
வீடுகனக்கத் தனத்தில் அச்சுறு
மாலிபம்ஒத்து ப்ரபுத் தனத்தினில் ...... அடைவாக
மாதர்பெருக்கத் தருக்கம் அற்றவர்
சூழஇருக்கத் தரிக்க இப்படி
வாழ்க்கையில் மத்த ப்ரமத்த சித்திகொள் ...... கடைநாளிற்
பாடையினிற் கட்டி விட்டு நட்டவர்
கூடஅரற்றிப் புடைத்துறுப்புள
பாவையெடுத்துத் தழற்கிரைப்பட ...... விடலாய
பாடு தொலைத்துக் கழிக்க அக்ருபை
தேடுமெனைத் தற்புரக்க உற்றிரு
பாதுகையைப் பற்றி நிற்க வைத்தெனை ...... அருளாதோ
ஆடகவெற்பைப் பெருத்த மத்தென
நாகவடத்தைப் !பிணித்துரத்தம
ரார்கள் பிடித்துத் திரித்திடப் புகை ...... அனலாக
ஆழிகொதித்துக் கதற்றி !விட்டிமை
யோர்கள் ஒளிக்கக் களித்த உக்கிர
ஆலவிடத்தைத் தரித்த அற்புதர் ...... குமரேசா
வேடர்சிறுக்கிக்கி லச்சை அற்றெழு
பாரும்வெறுத்துச் சிரிப்ப நட்பொடு
வேளையெனப் புக்கு நிற்கும் வித்தக ...... இளையோனே
வேகமிகுத்துக் கதிக்கும் விக்ரம
சூரர்சிரத்தைத் துணித்தடக்குதல்
வீரமெனத் தத்துவத்து மெச்சிய ...... பெருமாளே
திருப்பாடல் 197
தாந்தான தந்தன தந்தன
தாந்தான தந்தன தந்தன
தாந்தான தந்தன தந்தன ...... தனதான
மாண்டார் எலும்பணியுஞ் சடை
ஆண்டார் இறைஞ்ச மொழிந்ததை
வான்பூதலம் பவனங்கனல் ...... புனலான
வான்பூதமுங் கரணங்களும்
நான்போய் ஒடுங்க அடங்கலும்
மாய்ந்தால் விளங்கும் அதொன்றினை ...... அருளாயேல்
வேண்டாமை ஒன்றை அடைந்துள
மீண்டாறி நின் சரணங்களில்
வீழந்தாவல் கொண்டுருகன்பினை ...... உடையேனாய்
வேந்தா கடம்பு புனைந்தருள்
சேந்தாசரண் சரணென்பது
வீண்போமதொன்றல என்பதை ...... உணராதோ
ஆண்டார் தலங்கள் அளந்திட
நீண்டார் முகுந்தர் தடந்தனில்
ஆண்டாவி துஞ்சியதென்று முதலை !வாயுற்
றாங்கோர் சிலம்பு புலம்பிட
ஞான்றூது துங்க சலஞ்சலம்
ஆம்பூ முழங்கிஅடங்கும் அளவில்நேசம்
பூண்டாழி கொண்டு வனங்களில்
ஏய்ந்தாள வென்று வெறுந்தனி
போந்தோலம் என்றுதவும் புயல் ...... மருகோனே
பூம்பாளை எங்கு மணங்கமழ்
தேங்காவில் நின்றதொர் குன்றவர்
பூந்தோகை கொங்கை விரும்பிய ...... பெருமாளே
திருப்பாடல் 198
தானதன தான தத்த தானதன தான தத்த
தானதன தான தத்த ...... தனதான
மாறுபொரு காலன்ஒக்கும் வானிலெழு மாமதிக்கும்
வாரி துயிலாஅதற்கும் ...... வசையேசொல்
மாயமடவார் தமக்கும் ஆயர் குழலூதிசைக்கும்
வாயும் இள வாடையிற்கும் ...... அதனாலே
வேறுபடு பாயலுக்குமே எனது பேதை எய்த்து
வேறுபடு மேனி சற்றும் ...... அழியாதே
வேடர்குல மாதினுக்கு வேடை கெடவே நடித்து
மேவும்இரு பாதமுற்று ...... வரவேணும்
ஆறுமிடை வாளரக்கர் நீறுபட வேலெடுத்த
ஆறுமுகனே குறத்தி ...... மணவாளா
ஆழிஉலகேழடக்கி வாசுகியை வாயடக்கி
ஆலுமயிலேறி நிற்கும் ...... இளையோனே
சீறுபட மேரு வெற்பை நீறுபடவே சினத்த
சேவலவ நீப மொய்த்த ...... திரள்தோளா
சேரும் அடலால் மிகுத்த சூரர்கொடு போயடைத்த
தேவர்சிறை மீள விட்ட ...... பெருமாளே
திருப்பாடல் 199
தன்னதன தத்த தத்த தன்னதன தத்த தத்த
தன்னதன தத்த தத்த ...... தனதான
மின்னினில் நடுக்கமுற்ற நுண்ணிய நுசுப்பில் முத்த
வெண்ணகையில் வட்டம்ஒத்து ...... அழகார
விம்மிஇளகிக் கதித்த கொம்மைமுலையிற் குனித்த
வின்னுதலில் இட்ட பொட்டில் ...... விலைமாதர்
கன்னல்மொழியிற் சிறக்கும் அன்னநடையிற் கறுத்த
கண்ணின் இணையிற் சிவத்த ...... கனிவாயிற்
கண்ணழிவு வைத்த புத்தி ஷண்முக நினைக்க வைத்த
கன்மவசம் எப்படிக்கு ...... மறவேனே
அன்னநடையைப் பழித்த மஞ்ஞை மலையிற் குறத்தி
அம்மை அடவிப் புனத்தில் ...... விளையாடும்
அன்னை இறுகப் பிணித்த பன்னிரு திருப்புயத்தில்
அன்னிய அரக்கர் அத்தனையு மாளப்
பொன்னுலகினைப் புரக்கு மன்ன நல்வ்ரதத்தை விட்ட
புன்மையர் புரத்ரயத்தர் ...... பொடியாகப்
பொன்மலை வளைத்தெரித்த கண்ணுதல் இடத்திலுற்ற
புண்ணியஒருத்தி பெற்ற ...... பெருமாளே
திருப்பாடல் 200
தத்தன தான தனத்தன தத்தன தான தனத்தன
தத்தன தான தனத்தன ...... தனதான
முத்தமுலாவு தனத்தியர் சித்தசன் ஆணை செலுத்திகள்
முத்தமிடா மனுருக்கிகள் ...... இளைஞோர்பால்
முட்டஉலாவி மருட்டிகள் நெட்டிலை வேலின் விழிச்சியர்
முப்பது கோடி மனத்தியர் ...... அநுராகத்
தத்தைகள்ஆசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள்
தப்புறும் ஆறகம் எத்திகள் ...... அளவேநான்
தட்டழியாது திருப்புகழ் கற்கவும் ஓதவு முத்தமிழ்
தத்துவ ஞானம் எனக்கருள் ...... புரிவாயே
மத்தக யானை உரித்தவர் பெற்ற குமார இலட்சுமி
மைத்துனனாகிய விக்ரமன் ...... மருகோனே
வற்றிட வாரிதி முற்றிய வெற்றிகொள் சூரர் பதைப்புற
வற்புறு வேலை விடுத்தருள் ...... இளையோனே
சித்திரமான குறத்தியை உற்றொரு போது புனத்திடை
சிக்கெனவே தழுவிப்புணர் ...... மணவாளா
செச்சைஉலாவு பதத்தின மெய்த்தவர் வாழ்வு பெறத்தரு
சித்தவிசாக இயற்சுரர் ...... பெருமாளே
No comments:
Post a Comment