Saturday, March 11, 2017

பொதுத் திருப்புகழ் திருப்பாடல்கள் 201 - 250:

(பொதுத் திருப்புகழ் திருப்பாடல்கள்)

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 201:
தனன தானன தத்தான தானன
     தனன தானன தத்தான தானன
          தனன தானன தத்தான தானன ...... தனதான

முருகுலாவிய மைப்பாவு வார்குழல்
     முளரி வாய்நெகிழ் வித்தார வேல்விழி
          முடுகுவோர் குலைவித்தான கோடெனு ...... முலையாலே

முறைமை சேர்கெட மைத்தார்வு வார்கடல்
     முடுகுவோரென எய்த்தோடி ஆகமு
          மொழியும் வேறிடு பித்தேறினார் எனு ...... முயல்வே!கொண்

டுருகுவார் சில சிற்றா மனோலயம் 
     உயிரும் ஆகமும் ஒத்தாசையோடுளம் 
          உருகி தீமெழுகிட்டானதோ என ...... உரையா!நண்

புலகவா ஒழிவித்தார் மனோலயம் 
     உணர்வு நீடிய பொற்பாத சேவடி
          உலவு நீயெனை வைத்தாளவே அருள் ...... தருவாயே

குருகுலாவிய நற்றாழி சூழ்நகர்
     குமரனேமுனை வெற்பார் பராபரை
          குழக பூசுரர் மெய்க்காணும் வீரர்தம் ...... வடிவேலா

குறவர் சீர்மகளைத் தேடி வாடிய
     குழையு நீள்கர வைத்தோடியே அவர்
          குடியிலே மயிலைக்கோடு சோதிய ...... உரவோனே

மருகு மாமதுரைக்கூடல் மால்வரை
     வளைவுளாகிய நக்கீரர் ஓதிய
          வளகை சேர்தமிழுக்காக நீடிய ...... கரவோனே

மதிய மேவிய சுற்றாத வேணியர்
     மகிழ நீநொடியற்றான போதினில்
          மயிலை நீடுலகைச்சூழ ஏவிய ...... பெருமாளே

திருப்பாடல் 202:
தனனானத் தனந்த தந்தன
     தனனானத் தனந்த தந்தன
          தனனானத் தனந்த தந்தன ...... தனதான

முலைமேலிற் கலிங்கம் ஒன்றிட
     முதல்வானிற் பிறந்த மின்பிறை
          நுதல்மேல் முத்தரும்ப புந்தியில் ...... இதமார

முக நேசித்திலங்கவும் பல
     வினைமூசிப் புரண்ட வண்கடல்
          முரணோசைக்கமைந்தவன் சரம் ...... எனமூவா

மலர்போலச் சிவந்த செங்கணில்
     மருள்கூர்கைக்கிருண்ட அஞ்சனம்
          வழுவாமற் புனைந்து திண்கயம் ...... எனநாடி

வருமாதர்க்கிரங்கி நெஞ்சமு
     மயலாகிப் பரந்து நின்செயல்
          மருவாமற் கலங்கும் வஞ்சகம் ...... ஒழியாதோ

தொலையா நற்றவங்கள் நின்றுனை
     நிலையாகப் புகழ்ந்து கொண்டுள
          அடியாருள் துலங்கி நின்றருள் ...... துணைவேளே

துடி நேரொத்திலங்கு மென்கொடி
     இடை தோகைக்கிசைந்த ஒண்தொடி
          சுரர்வாழப் பிறந்த சுந்தரி ...... மணவாளா

மலைமாளப் பிளந்த செங்கையில்
     வடிவேலைக் கொடந்த வஞ்சக
          வடிவாகக் கரந்து வந்தமர் ...... பொருசூரன்

வலிமாளத் துரந்த வன்திறல்
     முருகாமற் பொருந்து திண்புய
          வடிவா மற்றநந்தம் இந்திரர் ...... பெருமாளே

திருப்பாடல் 203:
தனன தந்தன தாத்தன தந்தன
     தனன தந்தன தாத்தன தந்தன
          தனன தந்தன தாத்தன தந்தன ...... தனதான

முனைஅழிந்தது மேட்டி குலைந்தது
     வயது சென்றது வாய்ப்பல் உதிர்ந்தது
          முதுகு வெஞ்சிலை காட்டி வளைந்தது ...... ப்ரபையான

முகம் இழிந்தது நோக்கும் இருண்டது
     இருமல் வந்தது தூக்கம் ஒழிந்தது
          மொழி தளர்ந்தது நாக்கு விழுந்தது ...... அறிவேபோய்

நினைவயர்ந்தது நீட்டல் முடங்கலும் 
     அவசமும்பல ஏக்கமும் உந்தின
          நெறிமறந்தது மூப்பு முதிர்ந்தது ...... பலநோயும்

நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது
     சலமலங்களின் நாற்றம் எழுந்தது
          நிமிஷம் இங்கினி ஆச்சுதென் முன்பினிதருள்வாயே

இனைய இந்திரனேற்றமும் அண்டர்கள்
     தலமு மங்கிட ஓட்டியிருஞ் சிறை
          இடும் இடும்புள ராக்கதர் தங்களில் ...... வெகுகோடி

எதிர்பொரும்படி போர்க்குள் எதிர்ந்தவர்
     தசை சிரங்களு நாற்றிசை சிந்திட
          இடிமுழங்கிய வேற்படை ஒன்றனை ...... எறிவோனே

தினைவனங் கிளி காத்த சவுந்தரி
     அருகு சென்றடி போற்றிமணஞ் செய்து
          செகமறிந்திட வாழ்க்கை புரிந்திடும் ...... இளையோனே

திரிபுரம் பொடியாக்கிய சங்கரர்
     குமர கந்த பராக்ரம செந்தமிழ்
          தெளிவு கொண்டடியார்க்கு விளம்பிய ...... பெருமாளே

திருப்பாடல் 204:
தத்தத்தத் தத்தத் தனதன
     தத்தத்தத் தத்தத் தனதன
          தத்தத்தத் தத்தத் தனதன ...... தனதான

மைக்குக்கைப் புக்கக் கயல்விழி
     எற்றிக் கொட்டிட்டுச் சிலைமதன்
          வர்க்கத்தைக் கற்பித்திடுதிற ...... மொழியாலே

மட்டிட்டுத் துட்டக் கெருவிதம் 
     இட்டிட்டுச் சுற்றிப் பரிமள
          மச்சப்பொற் கட்டிற் செறிமலர் ......அணைமீதே

புக்குக்கைக் கொக்கப் புகுமொரு
     அற்பச் சிற்றிற்பத் தெரிவையர்
          பொய்க்குற்றுச் சுற்றித் திரிகிற ...... புலையேனைப்

பொற்பித்துக் கற்பித்துனதடி
     அர்ச்சிக்கச் சற்றுக் க்ருபைசெய
          புத்திக்குச் சித்தித்தருளுவதொருநாளே

திக்குக்குத் திக்குத் திகுதிகு
     டுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுடு
          தித்தித்தித் தித்தித் திதியென ...... நடமாடுஞ்

சித்தர்க்குச் சுத்தப் பரமநல்
     முத்தர்க்குச் சித்தக் க்ருபையுள
          சித்தர்க்குப் பத்தர்க்கருளிய ...... குருநாதா

ஒக்கத் தக்கிட்டுத் திரியசுர்
     முட்டக் கொட்டற்றுத் திரிபுரம் 
          ஒக்கக் கெட்டிட்டுத் திகுதிகு ...... எனவேக

உற்பித்துக் கற்பித்தமரரை
     முற்பட்டக் கட்டச் சிறைவிடும் 
          ஒட்குக்டக் கொற்றக் கொடியுள ...... பெருமாளே

திருப்பாடல் 205:
தான தனதனன தான தாத்தன
     தான தனதனன தான தாத்தன
          தான தனதனன தான தாத்தன ...... தனதான

மோது மறலியொரு கோடி வேற்படை
     கூடி முடுகி எமதாவி பாழ்த்திட
          மோகமுடைய வெகு மாதர் கூட்டமும் ...... அயலாரும்

மூளும் அளவில்விசை மேல் விழாப்பரி
     தாபமுடனும்விழி நீர்கொளாக் கொடு
          மோக வினையில்நெடு நாளின் மூத்தவர் ...... இளையோர்கள்

ஏது கருமமிவர் சாவெனாச்சிலர்
     கூடி நடவுமிடு காடெனாக்!கடி
          தேழு நரகினிடை வீழ்மெனாப் பொறியறு பாவி

ஏழு புவனமிகு வான நாட்டவர்
     சூழு முநிவர்கிளை தாமும் ஏத்திட
          ஈசனருள்குமர வேதம் ஆர்த்தெழ ...... வருவாயே

சூது பொரு தருமன்நாடு தோற்றிரு
     ஆறு வருஷம் வனவாசம் ஏற்றியல்
          தோகையுடனுமெ விராட ராச்சியம் ...... உறைநாளிற்

சூறை நிரைகொடவர் ஏக மீட்டெதிர் 
     ஆளும்உரிமை தருமாறு கேட்டொரு
          தூது செலஅடு வலாண்மை தாக்குவன் ...... எனமீள

வாது சமர் திருதரானராட்டிர
     ராஜ குமரர் துரியோதனாற் பிறர்
          நிருபரொடு சேனை தூட்பட ...... வரிசாப

வாகை விஜயனடல் வாசி பூட்டிய
     தேரை முடுகுநெடு மால்பராக்ரம
          மாயன் மருகஅமர் நாடர் பார்த்திப ...... பெருமாளே

திருப்பாடல் 206:
தனனத்தன தானன தானன
     தனனத்தன தானன தானன
          தனனத்தன தானன தானன ...... தனதான

வடிகட்டிய தேனென வாயினில் 
     உறுதுப்பன ஊறலை ஆர்தர
          வரைவில் திகழ் ஊடலிலேதரு ...... மடவார்பால்

அடிபட்டலை பாவ நிர்மூடனை
     முகடித்தொழிலா முன !நீயுன
          தடிமைத் தொழிலாக எநாளினில் ...... அருள்வாயோ

பொடிபட்டிட ராவணன் மாமுடி
     சிதறச்சிலை வாளிகளே கொடு
          பொருகைக் கள மேவிய மாயவன் ...... மருகோனே

கொடுமைத் தொழிலாகிய கானவர்
     மகிமைக்கொளவே அவர் வாழ்சிறு
          குடிலிற்குற மானொடு மேவிய ...... பெருமாளே

திருப்பாடல் 207:
தத்த தனத்தத் தனத்த தத்தன
     தத்த தனத்தத் தனத்த தத்தன
          தத்த தனத்தத் தனத்த தத்தன ...... தனதான

வட்ட முலைக் கச்சவிழ்த்து வைத்துள
     முத்து வடத்தைக் கழுத்தில் இட்டிரு
          மைக்குவளைக்கண் குறிப்பழுத்திய ...... பொதுமாதர்

மட்ட மளிக்குள் திருத்தி முத்தணி
     மெத்தை தனக்குள் செருக்கி வெற்றிலை
          வைத்த பழுப் பச்சிலைச்சுருள் கடி ...... இதழ்கோதிக்

கட்டி அணைத்திட்டெடுத்துடுத்திடு
     பட்டை அவிழ்த்துக் கருத்திதத்தொடு
          கற்ற கலைச் சொற்களிற் பயிற்றுள ...... முயல்போதுங்

கைக்குள் இசைத்துப் பிடித்த கட்கமும்
     வெட்சி மலர்ப்பொற் பதத்திரட்சணை
          கட்டு மணிச் சித்திரத் திறத்தையு ...... மறவேனே

கொட்ட மிகுத்திட்டரக்கர் பட்டணம்
     இட்டு நெருப்புக் கொளுத்தி அத்தலை
          கொட்டை பரப்பச் செருக்களத்திடை ...... அசுரோரைக்

குத்தி முறித்துக் குடிப்ப ரத்தமும்
     வெட்டி அழித்துக் கனக் களிப்பொடு
          கொக்கரியிட்டுத் தெரித்தடுப்பன ...... ஒருகோடிப்

பட்ட பிணத்தைப் பிடித்திழுப்பன
     சச்சரி கொட்டிட்டடுக்கெடுப்பன
          பற்கள் விரித்துச் சிரித்திருப்பன ...... வெகுபூதம்

பட்சி பறக்கத் திசைக்குள் மத்தளம்
     வெற்றி முழக்கிக் கொடிப் பிடித்தயில்
          பட்டறவிட்டுத் துரத்தி வெட்டிய ...... பெருமாளே

திருப்பாடல் 208:
தனதன தாத்த தாத்த தனதன தாத்த தாத்த
     தனதன தாத்த தாத்த ...... தனதான

வளைகர மாட்டி வேட்டின் இடைதுயில் வாட்டியீட்டி
     வரிவிழி தீட்டி ஏட்டின் ...... மணம்வீசும்

மழைகுழல் காட்டி வேட்கை வளர்முலை காட்டி நோக்கின்
     மயில்நடை காட்டி மூட்டி ...... மயலாகப்

புளகித வார்த்தை ஏற்றி வரிகலை வாழ்த்தி ஈழ்த்து
     புணர்முலை சேர்த்து வீக்கி ...... விளையாடும்

பொதுமடவார்க்கு ஏற்ற வழியுறு வாழ்க்கை வேட்கை
     புலைகுணம் ஓட்டி மாற்றி ...... அருள்வாயே

தொளைஒழுகேற்ற நோக்கி பலவகை வாச்சி தூர்த்து
     சுடரடி நீத்தலேத்தும் ...... அடியார்கள்

துணைவன்மை நோக்கி நோக்கின் இடைமுறை ஆய்ச்சிமார்ச்சொல்
     சொலிஅமுதூட்டிஆட்டு ...... முருகோனே

இளநகை ஓட்டி மூட்டர் குலம்விழ வாட்டி ஏட்டை
     இமையவர் பாட்டை மீட்ட ...... குருநாதா

இயல்புவி வாழ்த்தியேத்த எனதிடர் நோக்கி நோக்கம்
     இருவினை காட்டி மீட்ட ...... பெருமாளே.

திருப்பாடல் 209:
தானன தனன தனத்தத்த
     தானன தனன தனத்தத்த
          தானன தனன தனத்தத்த ...... தனதான

வாடையில் மதனை அழைத்துற்று
     வாள்வளை கலகலெனக் கற்றை
          வார்குழல் சரிய முடித்திட்டு ...... துகிலாரும்

மால்கொள நெகிழ உடுத்திட்டு
     நூபுரம் இணையடியைப் பற்றி
          வாய்விட நுதல்மிசை பொட்டிட்டு ...... வருமாய

நாடக மகளிர் நடிப்புற்ற
     தோதக வலையில் அகப்பட்டு
          ஞாலமு முழுது மிகப்பித்தன்...... எனுமாறு

நாணமு மரபும் ஒழுக்கற்று
     நீதியும் அறிவும் அறக்கெட்டு
          நாயடிமையும் அடிமைப்பட்டு ...... விடலாமோ

ஆடிய மயிலினை ஒப்புற்று
     பீலியும் இலையும் உடுத்திட்டு
          ஆரினும் அழகு மிகப்பெற்று ...... யவனாளும்

ஆகிய இதண்மிசை உற்றிட்டு
     மானின மருள விழித்திட்டு
          ஆயுத கவண்ஒருகைச்சுற்றி ...... விளையாடும்

வேடுவர் சிறுமி ஒருத்திக்கு
     யான்வழியடிமை எனச்செப்பி
          வீறுள அடியிணையைப் பற்றி ...... பலகாலும்

வேதமும் அமரரு மெய்ச்!சக்ர
     வாளமும் அறிய விலைப்பட்டு
          மேருவில் மிகவும் எழுத்திட்ட ...... பெருமாளே

திருப்பாடல் 210:
தனதனன தனதனன தனன தாத்ததன
     தனதனன தனதனன தனன தாத்ததன
          தனதனன தனதனன தனன தாத்ததன ...... தனதான

விரைசொரியு ம்ருகமதமு மலரும் வாய்த்திலகு
     விரிகுழலும் அவிழநறு மெழுகு கோட்டுமுலை
          மிசையில்வரு பகலொளியை வெருவ ஓட்டுமணி ...... வகையாரம்

விடுதொடைகள் நகநுதியில் அறவும் வாய்த்தொளிர
     விழிசெருக மொழிபதற அமுது தேக்கியகை
          விதறிவளை கலகலென அழகு மேற்பொழிய ...... அலர்மேவும்

இருசரண பரிபுரசுருதிகள் ஆர்க்கவசம் 
     இலகுகடல் கரைபுரள இனிமை கூட்டியுளம் 
          இதம்விளைய இருவரெனும் அளவு காட்டரிய ...... !அநுராகத்

திடைமுழுகி எனது மனதழியு நாட்களினும் 
     இருசரண இயலும்வினை எறியும் வேற்கரமும் 
          எழுதரிய திருமுகமும் அருளும் ஏத்தும்வகை ...... தரவேணும்

அரிபிரமர் அடிவருட உததி கோத்தலற
     அடல்வடவை அனலுமிழ அலகை கூட்டமிட
          அணிநிணமு மலைபெருக அறையும் வாச்சியமும் ...... அகலாது

அடல்கழுகு கொடிகெருடன் இடைவிடாக் கணமு
     மறுகுறளும் எறிகுருதி நதியின் மேற்பரவ
          அருணரண முக வயிரவர்களும் ஆர்ப்பரவம் ...... இடநாளும்

பரவுநிசிசரர் முடிகள் படியின் மேற்குவிய
     பவுரிகொடு திரியவரை பலவும் வேர்ப்பறிய
          பகர்வரிய ககன முகடிடிய வேட்டைவரு ...... மயில்வீரா

படருநெறி சடையுடைய இறைவர் கேட்குரிய
     பழயமறை தருமவுன வழியை யார்க்குமொரு
          பரமகுருபரன் எனவும் அறிவு காட்டவல ...... பெருமாளே

திருப்பாடல் 211:
தானத்த தந்த தந்த தானத்த தந்த தந்த
     தானத்த தந்த தந்த ...... தனதான

வேலொத்து வென்றி அங்கை வேளுக்கு !வெஞ்சரங்க
     ளா மிக்க கண்களென்றும் ...... இருதோளை

வேயொக்கும் என்று கொங்கை மேல் வெற்பதென்று கொண்டை
     மேகத்தை வென்றதென்றும் ...... எழில்மாதர்

கோலத்தை விஞ்ச வெஞ்சொல் கோடித்து வஞ்ச நெஞ்சர்
     கூடத்தில் நின்று நின்று ...... குறியாதே

கோதற்ற நின்பதங்கள் நேர்பற்றி இன்பம் அன்பு
     கூர்கைக்கு வந்து சிந்தை ...... குறுகாதோ

ஞாலத்தை அன்றளந்து வேலைக்குளுந் துயின்று
     நாடத்தி முன்பு வந்த ...... திருமாலும்

நாடத் தடஞ்சிலம்பை மாவைப் பிளந்தடர்ந்து
     நாகத்தலங் குலுங்க ...... விடும்வேலா

ஆலித்தெழுந்தடர்ந்த ஆலத்தை உண்ட கண்டர் 
     ஆகத்தில் மங்கை பங்கர் ...... நடமாடும்

ஆதிக்கு மைந்தன் என்று நீதிக்குள் நின்ற அன்பர்
     ஆபத்தில் அஞ்சலென்ற ...... பெருமாளே

திருப்பாடல் 212:
தனதான தந்த தந்த தனதான தந்த தந்த
     தனதான தந்த தந்த ...... தனதான

அடியார் மனஞ்சலிக்க எவராகிலும் பழிக்க
     அபராதம் வந்து கெட்ட ...... பிணிமூடி

அனைவோரும் வந்து சிச்சியென நால்வருஞ் சிரிக்க
     அனலோடழன்று செத்து ...... விடுமாபோற்

கடையேன் மலங்கள் முற்றும் இருநோயுடன் பிடித்த
     கலியோடிறந்து சுத்த ...... வெளியாகிக்

களிகூர என்றனுக்கு மயிலேறி வந்து முத்தி
     கதியேற அன்பு வைத்துன் ...... அருள்தாராய்

சடைமீது கங்கை வைத்து விடையேறும் எந்தை சுத்த
     தழல்மேனியன் சிரித்தொர் ...... புரமூணும்

தவிடாக வந்தெதிர்த்த மதனாகமுஞ் சிதைத்த
     தழல்பார்வை அன்றளித்த ...... குருநாதா

மிடிதீர அண்டருக்கு மயிலேறி வஞ்சர் கொட்டம்
     வெளியாக வந்து நிர்த்தம் ...... அருள்வோனே

மினநூல் மருங்குல் பொற்பு முலை மாதிளங் குறத்தி
     மிகு மாலொடன்பு வைத்த ...... பெருமாளே

திருப்பாடல் 213:
தனதன தாத்தன தனதன தாத்தன
     தனதன தாத்தன ...... தனதான

அடியில் விடாப் பிணம் அடைய விடாச்!சிறி
     தழியுமுன் வீட்டுமுன் ...... உயர்பாடை

அழகொடு கூட்டுமின் அழையுமின் வார்ப்பறை
     அழுகையை மாற்றுமின் ...... நொதியாமுன்

எடுமினி யாக்கையை என இடுகாட்டெரி
     இடைகொடு போய்த்தமர் ...... சுடுநாளில்

எயினர் குலோத்தமையுடன் மயில் மேற்!கடி
     தெனதுயிர் காத்திட ...... வரவேணும்

மடுவிடை போய்ப்பரு முதலையின் வாய்ப்படு
     மதகரி கூப்பிட ...... வளையூதி

மழைமுகில் போற்கக பதிமிசை தோற்றிய
     மகிபதி போற்றிடு ...... மருகோனே

படர்சடை ஆத்திகர் பரிவுற ராட்சதர்
     பரவையில் ஆர்ப்பெழ ...... விடும்வேலாற்

படமுனியாப் பணி தமனிய நாட்டவர்
     பதி குடியேற்றிய ...... பெருமாளே

திருப்பாடல் 214:
தத்தன தான தானன தத்தன தான தானன
     தத்தன தான தானன ...... தனதான

அப்படி ஏழுமேழும் வகுத்து வழாது போதினின் 
     அக்ரமவியோம கோளகை ...... மிசைவாழும்

அக்ஷர தேவி கோவின் விதிப்படி மாறி மாறி!அ
     னைத்துருவாய காயமதடைவே !கொண்

டிப்படி யோனி வாய்தொறும் உற்பவியா விழா!உல
     கிற்றடு மாறியே திரி ...... தருகாலம்

எத்தனை யூழி காலம் எனத்தெரியாது வாழி!இ 
     னிப்பிறவாது நீயருள் ...... புரிவாயே

கற்பக வேழம் ஏய்வன பச்சிள ஏனல் மீதுறை
     கற்புடை மாது தோய்தரும் ....அபிராம

கற்புர தூளி லேபன மற்புய பாக சாதன
     கற்பகலோக தாரண ...... கிரிசால

விப்ர சமூக வேதன பச்சிம பூமி காவல
     வெட்சியு நீப மாலையும் ...... அணிவோனே

மெத்திய ஆழி சேறெழ வெற்பொடு சூரன் நீறெழ
     விக்ரம வேலை ஏவிய ...... பெருமாளே

திருப்பாடல் 215:
தனன தானனம் தனன தானனம்
     தனன தானனம் ...... தனதான

அயில் விலோசனங் குவிய வாசகம்
     பதற ஆனனங் ...... குறு!வேர்வுற்

றளக பாரமுங் குலைய மேல்!விழுந்
     ததர பானம் உண்டியல் மாதர்

சயில பார குங்கும பயோதரந்
     தழுவும் ஆதரந் ...... தமியேனால்

தவிரொணாதுநின் கருணை கூர்தருந்
     தருண பாதமுந் ...... தரவேணும்

கயிலையாளியுங் குலிச பாணியுங்
     கமல யோனியும் ...... புயகேசன்

கணபணா முகங் கிழிய மோதுவெங்
     கருட வாகனந் ...... தனிலேறும்

புயல்இலேகரும் பரவ வானிலும்
     புணரி மீதினுங் ...... கிரிமீதும்

பொரு நிசாசரன் தனது மார்பினும்
     புதைய வேல்விடும் ...... பெருமாளே

திருப்பாடல் 216:
தனத்த தத்தனா தனத்த தத்தனா
     தனத்த தத்தனா ...... தனதான

அருக்கி மெத்ததோள் திருத்தி உற்று!மார்
     பசைத்துவக்கு மால் ...... இளைஞோரை

அழைத்து மிக்க காசிழைத்து மெத்தை!மீ
     தணைத்து மெத்த மால் ...... அதுகூர

உருக்கி உட்கொள் மாதருக்குள் எய்த்துநா
     உலற்றி உட்கு நாணுடன் மேவி

உழைக்கும் அத்தைநீ ஒழித்து முத்தி!பா
     லுறக் குணத்ததாள் ...... அருள்வாயே

சுருக்க முற்றமால் தனக்கும் !எட்டிடா
     தொருத்தர் மிக்கமா ...... நடமாடுஞ்

சுகத்தில் அத்தர் தாமிகுத்த பத்திகூர்
     சுரக்க வித்தைதான் ...... அருள்வோனே

பெருக்க வெற்றிகூர் திருக்கை கொற்றவேல்
     பிடித்து குற்றமார் ...... ஒருசூரன்

பெலத்தை முட்டிமார் தொளைத்து நட்டுளோர்
     பிழைக்க விட்டவோர் ...... பெருமாளே

திருப்பாடல் 217:
தனந்த தாத்தனத் தனந்த தாத்தனத்
     தனந்த தாத்தனத் ...... தனதான

அரும்பினால் தனிக் கரும்பினால் !தொடுத்
     தடர்ந்து மேல் தெறித்தமராடும்

அநங்கனார்க்கிளைத்தயர்ந்தணாப்பி!எத்
     தரம்பை மார்க்கடைக்கலமாகிக்

குரும்பை போற்பணைத்தரும்புறாக் !கொதித்
     தெழுந்து கூற்றெனக் ...... கொலைசூழுங்

குயங்கள் வேட்டறத் தியங்கு தூர்த்தனைக்
     குணங்களாக்கி நற் ...... கழல்சேராய்

பொருந்திடார்ப் புரத்திலங்கை தீப்படக்
     குரங்கினாற் படைத்தொரு தேரிற்

புகுந்து நூற்றுவர்க்கொழிந்து !பார்த்தனுக்
     கிரங்கி ஆற்புறத்தலை மேவிப்

பெருங் குறோட்டை விட்டுறங்கு காற்றெனப்
     பிறங்கவேத் தியக்குறு மாசூர்

பிறங்கல் ஆர்ப்பெழச் சலங்கள் கூப்பிடப்
     பிளந்த வேற்கரப் ...... பெருமாளே

திருப்பாடல் 218:
தனதன தத்தனாத் தனதன தத்தனாத்
     தனதன தத்தனாத் ...... தனதான

அலமலம் இப்புலாற் புலையுடல் !கட்டனேற்
     கறுமுக நித்தர் போற்றிய நாதா

அறிவிலி இட்டுணாப் பொறியிலி சித்தமாய்த்
     தணிதரு முத்தி வீட்டணுகாதே

பலபல புத்தியாய்க் கலவியில் எய்த்திடாப்
     பரிவொடு தத்தை மார்க்கிதமாடும்

பகடி துடுக்கன் வாய்க் கறையன் எனத்தராப்
     படியில் மனித்தர் தூற்றிடலாமோ

குலகிரி பொற்றலாய்க் குரைகடல் வற்றலாய்க்
     கொடிய அரக்கரார் ஆர்ப்பெழ வேதக்

குயவனை நெற்றியேற்றவன் எதிர் குட்டினாற்
     குடுமியை நெட்டைபோக்கிய வீரா

கலைதலை கெட்டபாய்ச் சமணரை நட்டகூர்க்
     கழுநிரை முட்டஏற்றிய தாளக்

கவிதையும் வெற்றிவேற் கரமுடன் வற்றிடாக்
     கருணையும் ஒப்பிலாப் ...... பெருமாளே

திருப்பாடல் 219:
தனன தான தந்த தந்த தனன தான தந்த தந்த
     தனன தான தந்த தந்த ...... தனதான

அளக பாரமுங் குலைந்து அரிய பார்வையுஞ் சிவந்து
     அணுகி ஆகமும் முயங்கி ...... அமுதூறல்

அதர பானமும் நுகர்ந்து அறிவு சோரவும் மொழிந்து
     அவசமாகவும் புணர்ந்து ...... மடவாரைப்

பளகன் ஆவியுந் தளர்ந்து பதறும் ஆகமும் பயந்து
     பகல்இராவையும் மறந்து ...... திரியாமற்

பரம ஞானமுந் தெளிந்து பரிவு நேசமுங் கிளர்ந்து
     பகருமாறு செம்பதங்கள் ...... தரவேணும்

துளப மாயனுஞ் சிறந்த கமல வேதனும் புகழ்ந்து
     தொழுது தேடரும் ப்ரசண்டன் ...... அருள்பாலா

சுரர்கள் நாயகன் பயந்த திருவை மாமணம் புணர்ந்து
     சுடரு மோகனம் மிகுந்த ...... மயில்பாகா

களப மார்புடன் தயங்கு குறவர் மாதுடன் செறிந்து
     கலவி நாடகம் பொருந்தி ...... மகிழ்வோனே

கடிய பாதகந் தவிர்ந்து கழலை நாடொறுங் கிளர்ந்து
     கருதுவார் மனம் புகுந்த ...... பெருமாளே

திருப்பாடல் 220:
தானான தான தனதன தானான தான தனதன
     தானான தான தனதன ...... தனதான

ஆசார வீனன் அறிவிலி கோபாபராதி அவகுணன் 
     ஆகாத நீசன் அநுசிதன் ...... விபரீதன்

ஆசாவிசார வெகுவித மோகாசரீத பரவசன் 
     ஆகாச நீர்மண் அனல்வளி ...... உருமாறி

மாசான நாலெண் வகைதனை நீநான்எனாத அறிவுளம்
     வாயாத பாவி இவனென ...... நினையாமல்

மாதாபிதாவின் அருணல மாறா மகாரில் எனையினி
     மாஞான போதமருள்செய ...... நினைவாயே

வீசால வேலை சுவறிட மாசூரர் மார்பு தொளைபட
     வேதாள ராசி பசிகெட ...... அறைகூறி

மேகாரவாரமென அதிர் போர்யாது தானர் எமபுர
     மீதேற வேல்கொடமர் செயும்...... இளையோனே

கூசாது வேடன்உமிழ்தரு நீராடி ஊனுண் எனுமுரை
     கூறாமனீய அவனுகர் ...... தருசேடங்

கோதாம் எனாமல் அமுதுசெய் வேதாகமாதி முதல்தரு
     கோலோக நாத குறமகள் ...... பெருமாளே

திருப்பாடல் 221:
தானனா தத்த தானனா தத்த
     தானனா தத்த ...... தனதான

ஆசைகூர் பத்தனேன் மனோ !பத்ம
     மானபூ வைத்து ...... நடுவே!அன்

பான நூலிட்டு நாவிலே !சித்ர
     மாகவே கட்டி ...... ஒருஞான

வாசம்வீசி ப்ரகாசியா நிற்ப
     மாசிலோர் புத்தி ...... அளிபாட

மாத்ருகா புஷ்ப மாலை கோல!ப்ர
     வாள பாதத்தில் ...... அணிவேனோ

மூசுகானத்து மீதுவாழ் முத்த
     மூரல் வேடிச்சி ...... தனபார

மூழ்குநீப ப்ரதாப மார்பத்த
     மூரிவேழத்தின் ...... மயில்வாழ்வே

வீசுமீனப் பயோதிவாய் விட்டு
     வேக வேதித்து ...... வருமாசூர்

வீழமோதிப் பராரை நாகத்து
     வீரவேல் தொட்ட ...... பெருமாளே

திருப்பாடல் 222:
தானத் தனத்ததன தானத் தனத்ததன
     தானத் தனத்ததன ...... தனதான

ஆசைக் கொளுத்தி வெகுவாகப் பசப்பிவரு
     மாடைப் பணத்தை எடென்உறவாடி

ஆரக் கழுத்துமுலை மார்பைக் குலுக்கி!விழி
     யாடக் குலத்துமயில் ...... கிளிபோலப்

பேசிச் சிரித்துமயிர் கோதிக் குலைத்துமுடி
     பேதைப் படுத்தி மயலிடு மாதர்

பீறற் சலத்துவழி நாறப் படுத்தியெனை
     பீடைப் படுத்துமயல் ...... ஒழியாதோ

தேசத்தடைத்து பிரகாசித்தொலித்து வரி
     சேடற் பிடுத்துதறு ...... மயில்வீரா

தேடித் துதித்த அடியார் சித்தமுற்றருளு
     சீர்பொற் பதத்தஅரி ...... மருகோனே

நேசப் படுத்தி இமையோரைக் கெடுத்தமுழு
     நீசற் கனத்தமுற ...... விடும்வேலா

நேசக் குறத்தி மயலோடுற்பவித்த பொனி
     நீர்பொற் புவிக்குள்மகிழ் ...... பெருமாளே

திருப்பாடல் 223:
தான தான தனத்தன தான தான தனத்தன
     தான தான தனத்தன ...... தனதான

ஆசை நேச மயக்கிகள் காசு தேடு மனத்திகள்
     ஆவி சோர உருக்கிகள் ...... தெருமீதே

யாவரோடு நகைப்பவர் வேறு கூறு விளைப்பவர்
     ஆலகால விழிச்சிகள் ...... மலைபோலு

மாசிலாத தனத்தியர் ஆடை சோர நடப்பவர்
     வாரியோதி முடிப்பவர் ...... ஒழியாமல்

வாயிலூறல் அளிப்பவர் நாளு நாளு மினுக்கிகள்
     வாசல் தேடி நடப்பது ...... தவிர்வேனோ

ஓசையான திரைக்கடல் ஏழு ஞாலமும் உற்றருள்
     ஈசரோடுறவுற்றவள் ...... உமையாயி

யோகி ஞானி பரப்ரமி நீலி நாரணி உத்தமி
     ஓலமான மறைச்சிசொல் ...... அபிராமி

ஏசிலாதமலைக் கொடி தாய் மனோமணி சற்குணி
     ஈறிலாத மலைக்கொடி ...... அருள்பாலா

ஏறு மேனி ஒருத்தனும் வேதனான சமர்த்தனும்
     ஈசனோடு ப்ரியப்படு ...... பெருமாளே

திருப்பாடல் 224:
தான தாத்த தனதன தான தாத்த தனதன
     தான தாத்த தனதன ...... தனதான

ஆலமேற்ற விழியினர் சால நீட்டி !அழுதழு
     தாக மாய்க்க முறைமுறை ...... பறைமோதி

ஆடல் பார்க்க நிலையெழு பாடை கூட்டி விரைய!ம
     யானமேற்றி உறவினர் ...... அயலாகக்

காலமாச்சு வருகென ஓலை காட்டி யமபடர்
     காவலாக்கி உயிரது ...... கொடுபோமுன்

காம வாழ்க்கை பொடிபட ஞானம் வாய்த்த கழலிணை
     காதலாற் கருதுமுணர் ...... தருவாயே

வேல கீர்த்தி விதரண சீலர் வாழ்த்து சரவண
     வியாழ கோத்ர மருவிய ...... முருகோனே

வேடர் நாட்டில் விளைபுன ஏனல் காத்த சிறுமியை
     வேட மாற்றி வழிபடும் ...... இளையோனே

ஞாலமேத்தி வழிபடும் ஆறு பேர்க்கு மகவென
     நாணல் பூத்த படுகையில் ...... வருவோனே

நாத போற்றியென முது தாதை கேட்க அநுபவ
     ஞான வார்த்தை அருளிய ...... பெருமாளே

திருப்பாடல் 225:
தானதன தானத்த தானதன தானத்த
     தானதன தானத்த ...... தனதான

ஆலுமயில் போலுற்ற தோகையர்களே மெத்த
     ஆரவட மேலிட்ட ...... முலைமீதே

ஆனதுகிலே இட்டு வீதிதனிலே நிற்க
     ஆமவரையே சற்றும் ...... உரையாதே

வேலும் அழகார் கொற்ற நீலமயில் மேலுற்று
     வீறும் உனதார் பத்ம ...... முகமாறு

மேவியிரு பாகத்தும் வாழும்அனைமார் தக்க
     மேதகவு நானித்தம் ...... உரையேனோ

நாலுமுக வேதற்கும் ஆலிலையில் மாலுக்கு
     நாடஅரியார் பெற்ற ...... ஒருபாலா

நாணமுடையாள் வெற்றி வேடர்குல மீதொக்க
     நாடுகுயில் பார்மிக்க ...... எழில்மாது

வேலைவிழி வேடச்சியார் கணவனே மத்த
     வேழமுகவோனுக்கும்  ...... இளையோனே

வீரமுடனே உற்ற சூரன்அணி மார்பத்து
     வேலைமிகவே விட்ட ...... பெருமாளே

திருப்பாடல் 226:
தனனத்தன தனனத்தன தனனத்தன ...... தனதான

இடைஇத்தனை உளதத்தையர் இதழ்துய்த்தவர் ...... அநுபோகம்
இளகிக்கரை புரளப் புளகித கற்புர ...... தனபாரம்
உடன் மற்கடைபடு துற்குணமற நிற்குண ...... உணர்வாலே
ஒருநிஷ்கள வடிவிற்புக ஒருசற்றருள் ...... புரிவாயே
திடமற்றொளிர் நளினப்ரம சிறைபுக்கனன் ...... எனஏகுந்
தெதிபட்சண க்ருதபட்சண செகபட்சணன் ...... எனவோதும்
விடபட்சணர் திருமைத்துனன் வெருவச்சுரர் ...... பகைமேல்வேல்
விடுவிக்ரம கிரியெட்டையும் விழவெட்டிய ...... பெருமாளே

திருப்பாடல் 227:
தனதன தான தானன, தனதன தான தானன
     தனதன தான தானன ...... தனதான

இருகுழை மீது தாவடி இடுவன ஓதி நீழலின் 
     இடமதுலாவி மீள்வன ...... நுதல்தாவி

இழிவன காம வேதமு மொழிவன தாரை வேலென
     எறிவன காள கூடமும்  ...... அமுதாகக்

கருகிய நீல லோசன அபிநய மாதரார் தரு
     கலவியில் மூழ்கி வாடிய ...... தமியேனுங்

கதிபெற ஈடறாதன பதிபசு பாசம் ஆனவை
     கசடற வேறு வேறு செய்தருள்வாயே

ஒருபது பார மோலியும் இருபது வாகு மேருவும் 
     உததியில் வீழ வானரம் ...... உடனே!சென்

றொருகணை ஏவு ராகவன் மருக விபூதி பூஷணர்
     உணருபதேச தேசிக ...... வரையேனற்

பரவிய கான வேடுவர் தரும் அபிராம நாயகி
     பரிபுர பாத சேகர ...... சுரராஜன்

பதி குடியேற வேல்தொடு முருக மயூர வாகன
     பரவச ஞான யோகிகள் ...... பெருமாளே

திருப்பாடல் 228:
தனனா தனத்ததன தனனா தனத்ததன
     தனனா தனத்ததன ...... தனதான

இருநோய் மலத்தைசிவ ஒளியால்மிரட்டியெனை
     இனிதா அழைத்தெனது ...... முடிமேலே

இணைதாள் அளித்துனது மயில்மேல் இருத்தியொளிர் 
     இயல்வேல் அளித்துமகிழ் ...... இருவோரும்

ஒருவாகெனக் கயிலை இறையோன் அளித்தருளும் 
     ஒளிர்வேத கற்பகநல் ...... இளையோனே

ஒளிர் மாமறைத் தொகுதி சுரர்பார் துதித்தருள
     உபதேசிகப் பதமும்  ...... அருள்வாயே

கருநோய் அறுத்தெனது மிடிதூள் படுத்திவிடு
     கரிமாமுகக் கடவுள் ...... அடியார்கள்

கருதா வகைக்கு வரம் அருள்ஞான தொப்பைமகிழ்
     கருணா கடப்பமலர் ...... அணிவோனே

திருமால் அளித்தருளும் ஒருஞான பத்தினியை
     திகழ் மார்புறத் தழுவு ...... மயில்வேலா

சிலைதூள் எழுப்பி கவடவுணோரை வெட்டிசுரர்
     சிறைமீள விட்டபுகழ் ...... பெருமாளே

திருப்பாடல் 229:
தனதனன தந்தனம் தனதனன தந்தனம்
     தனதனன தந்தனம் ...... தந்ததான

இனமறை விதங்கள் கொஞ்சிய சிறுசதங்கை!கிண்
     கிணியிலகு தண்டையம் ...... புண்டரீகம்

எனதுமன பங்கயங் குவளை குரவம்!புனைந்
     திரவுபகல் சந்ததஞ் ...... சிந்தியாதோ

உனதருளை அன்றி இங்கொரு துணையும் இன்றி!நின்
     றுளையுமொரு வஞ்சகன் ...... பஞ்சபூத

உடலது சுமந்தலைந்துலகு தொறும் வந்து!வந்
     துழலுமது துன்பு கண்டன்புறாதோ

கனநிவத தந்த சங்க்ரம கவள துங்கவெங்
     கடவிகட குஞ்சரந் ...... தங்கும்யானை

கடகசயிலம் பெறும் படியவுணர் துஞ்சமுன்
     கனககிரி சம்பெழுந்தம்பு ராசி

அனலெழ முனிந்த சங்க்ரம மதலை கந்தன்!என்
     றரனும் உமையும் புகழ்ந்தன்பு கூர

அகில புவனங்களுஞ் சுரரொடு திரண்டு!நின்
     றரிபிரமர் கும்பிடுந் ...... தம்பிரானே

திருப்பாடல் 230:
தானா தனந்த தானா தனந்த
     தானா தனந்த ...... தனதான

ஊனேறெலும்பு சீசீ !மலங்க
     ளோடே நரம்பு ...... கசுமாலம்

ஊழ்நோய் அடைந்து மாசான மண்டு
     மூனோடுழன்ற ...... கடைநாயேன்

நானார் ஒடுங்க நானார் வணங்க
     நானார் மகிழ்ந்து ...... உனையோத

நானார் இரங்க நானார் உணங்க
     நானார் நடந்து ...... விழநானார்

தானே புணர்ந்து தானே அறிந்து
     தானே மகிழ்ந்து ...... அருளூறித்

தாய்போல் பரிந்த தேனோடுகந்து
     தானே தழைந்து ...... சிவமாகித்

தானே வளர்ந்து தானே இருந்த
     தார்வேணி எந்தை ...... அருள்பாலா

சாலோக தொண்டர் சாமீப தொண்டர்
     சாரூப தொண்டர் ...... பெருமாளே

திருப்பாடல் 231:
தனதனன தனதனன தனதனன தனதனன
     தத்தத்த தத்தான ...... தந்ததான

எதிரொருவர் இலைஉலகில் எனஅலகு சிலுகு!விரு
     திட்டு க்ரியைக்கே  ...... எழுந்து பாரின்

இடையுழல்வ சுழலுவன சமயவித சகலகலை
     எட்டெட்டும் எட்டாத ...... மந்த்ர வாளால்

விதிவழியின் உயிர்கவர வருகொடிய யமபடரை
     வெட்டித் துணித்தாண்மை ...... கொண்டுநீபம்

விளவினிள இலைதளவு குவளைகமழ் பவளநிற
     வெட்சித் திருத்தாள்  ......வணங்குவேனோ

திதிபுதல்வரொடு பொருது குருதிநதி முழுகியொளிர்
     செக்கச் செவத்தேறு ...... செங்கைவேலா

சிகரகிரி தகரவிடும் உருவ மரகத கலப
     சித்ரக் ககத்தேறும் ...... எம்பிரானே

முதிய பதினொரு விடையர் முடுகுவன பரிககன
     முட்டச் செலுத்தாறிரண்டு தேரர்

மொழியும்இரு அசுவினிகள் இருசதுவித வசுவெனு
     முப்பத்து முத்தேவர் ...... தம்பிரானே

திருப்பாடல் 232:
தனந்தனந் தத்தத் தனந்தனந் தத்தத்
     தனந்தனந் தத்தத் ...... தனதானம்

எழுந்திடுங் கப்புச் செழுங் !குரும்பைக்கொத்
     திரண்டு கண் பட்டிட்டிளையோர் !நெஞ்

சிசைந்திசைந்தெட்டிக் !கசிந்தசைந்திட்டிட்
     டிணங்கு பொன் செப்புத் ...... தனமாதர்

அழுங்கல் அங்கத்துக் குழைந்துமன் !பற்றுற்
     றணைந்துபின் பற்றற்றகல் !மாயத்

தழுங்கு நெஞ்சுற்றுப் புழுங்கு !புண்பட்டிட்
     டலைந்தலைந்தெய்த்திட்டுழல்வேனோ

பழம்பெருந் தித்திப்புறுங் !கரும்பப்பத்
     துடன் பெருங் கைக்குள் ...... படவாரிப்

பரந்தெழுந் தொப்பைக்கருந்தி முன் !பத்தர்க்
     கிதஞ் செய்தொன்றத்திக்கிளையோனே

தழைந்தெழுந்தொத்துத் தடங்கை கொண்டப்பிச்
     சலம் பிளந்தெற்றிப் ...... பொருசூரத்

தடம்பெருங் கொக்கைத் தொடர்ந்திடம் புக்குத்
     தடிந்திடுஞ் சொக்கப் ...... பெருமாளே

திருப்பாடல் 233:
தாத்த தானன தாத்த தானன
     தாத்த தானன ...... தந்ததான

ஏட்டிலே வரை பாட்டிலே சில
     நீட்டிலே இனிதென்று தேடி

ஈட்டு மாபொருள் பாத்துணாதிகல் 
     ஏற்றமான குலங்கள் பேசிக்

காட்டிலே இயல் நாட்டிலே பயில்
     வீட்டிலே உலகங்கள் ஏசக்

காக்கை நாய்நரி பேய்க்குழாம்உண
     யாக்கை மாய்வதொழிந்திடாதோ

கோட்டும் ஆயிர நாட்டன் நாடுறை
     கோட்டு வால்இப ...... மங்கைகோவே

கோத்த வேலையில் ஆர்த்த சூர்பொரு
     வேற் சிகாவள ...... கொங்கில் வேளே

பூட்டுவார் சிலை கோட்டு வேடுவர்
     பூட்கை சேர்குற ...... மங்கைபாகா

பூத்த மாமலர் சாத்தியே கழல்
     போற்று தேவர்கள் ...... தம்பிரானே

திருப்பாடல் 234:
தத்தத் தாத்த தத்தத் தாத்த
     தத்தத் தாத்த ...... தனதான

கச்சுப் பூட்டுகைச் !சக்கோட்ட
     கத்திற் கோட்டு ...... கிரிஆலங்

கக்கித் தேக்கு செக்கர்ப் !போர்க்க
     யற் கட்கூற்றில் ...... மயலாகி

அச்சக் கூச்சம் அற்றுக் !கேட்ட
     வர்க்குத் தூர்த்தன் ...... எனநாளும்

அத்தப் பேற்றில் இச்சிப் !பார்க்க
     றப் பித்தாய்த் திரியலாமோ

பச்சைக் கூத்தர் மெச்சிச் சேத்த
     பத்மக் கூட்டில் ...... உறைவோர்!இ

பத்திற் சேர்ப்பல் சக்கிற் கூட்டர்
     பத்தக் கூட்டர் ...... இயல்வானம்

மெச்சிப் போற்ற வெற்புத் தோற்று
     வெட்கக் கோத்த ...... கடல்மீதே

மெத்தக் காய்த்த கொக்குக் கோட்டை
     வெட்டிச் சாய்த்த ...... பெருமாளே

திருப்பாடல் 235:
தனதனந் தனதனன தனதனந் தனதனன
     தனதனந் தனதனன ...... தனதான

கடலினும் பெரியவிழி மலையினும் பெரியமுலை
     கவரினுந் துவரதரம் ...... இருதோள் பைங்

கழையினுங் குழையும்என மொழிபழங் கிளவிபல
     களவு கொண்டொருவர் மிசை ...... கவிபாடி

அடல சஞ்சலம் அதுலன் அநுபமன் குணதரன்மெய்
     அருள்பரங்குரன் அபயன் ...... என!ஆசித்

தலமரும் பிறவியினி அலமலம் பிறவியற
     அருண பங்கய சரணம்...... அருள்வாயே

வடநெடுங் குலரசத கிரியினின்றிரு கலுழி
     மகிதலம் புகவழியும் ...... அதுபோல

மதசலஞ் சலசலென முதுசலஞ் சலதிநதி
     வழிவிடும் படிபெருகு ...... முதுபாகை

உடைய சங்க்ரம கவள தவள சிந்துர திலகன் 
     உலகும் இந்திரனு நிலை ...... பெறவேல்!கொண்

டுததி வெந்தபயம்இட மலையொடுங் கொலை!அவுண
     ருடன் உடனன்றமர் பொருத ...... பெருமாளே

திருப்பாடல் 236:
தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததன
     தத்தத் தனத்த ...... தனதான

கட்டக் கணப்பறைகள் கொட்டக் குலத்திளைஞர்
     கட்டிப் புறத்தில் ..... அணைமீதே

கச்சுக் கிழித்த துணி சுற்றிக் கிடத்திஎரி
     கத்திக் கொளுத்தி ...... அனைவோரும்

சுட்டுக் குளித்துமனை புக்கிட்டிருப்பர்இது
     சுத்தப் பொய்ஒப்பதுயிர் வாழ்வு

துக்கப் பிறப்பகல மிக்கச் சிவத்ததொரு
     சொர்க்கப் பதத்தை ...... அருள்வாயே

எட்டுக் குலச்சயில முட்டத் தொளைத்தமரர்
     எய்ப்புத் தணித்த ...... கதிர்வேலா

எத்திக் குறத்தியிரு முத்தத் தனக்கிரியை
     எற்பொற் புயத்தில்..... அணைவோனே

வட்டக் கடப்பமலர் மட்டுற்ற செச்சைமலர்
     வைத்துப் பணைத்த ...... மணிமார்பா

வட்டத் திரைக்கடலில் மட்டித்தெதிர்த்தவரை
     வெட்டித் துணித்த ...... பெருமாளே

திருப்பாடல் 237:
தந்த தானன தந்த தானன
     தந்த தானன ...... தனதான

கண்டு போல்மொழி வண்டு சேர்குழல்
     கண்கள் சேல்மதி ...... முகம்வேய்தோள்

கண்டு பாவனை கொண்டு தோள்களில் 
     ஒண்டு காதலில் ...... இருகோடு

மண்டி மார்பினில் விண்டதாம்என
     வந்த கூர்முலை ...... மடவார்தம்

வஞ்ச மாலதில் நெஞ்சு போய்!மடி
     கின்ற மாயம்அதொழியாதோ

கொண்டலார் குழல் கெண்டை போல்விழி
     கொண்டு கோகில ...... மொழிகூறுங்

கொங்கையாள் குறமங்கை வாழ்தரு
     குன்றில் மால்கொடு ...... செலும்வேலா

வெண்டி மாமன மண்டு சூர்கடல்
     வெம்ப மேதினி ...... தனில்மீளா

வென்று யாவையும் அன்றி வேளையும்
     வென்று மேவிய ...... பெருமாளே

திருப்பாடல் 238:
தத்தன தத்தன தத்தன தத்தன
     தத்தன தத்தன ...... தனதான

கப்பரை கைக்கொள வைப்பவர் மைப்பயில்
     கண் பயிலிட்டிள ...... வளவோரைக்

கைக்குள் வசப்பட பற்கறை இட்டு!மு
     கத்தை மினுக்கி வரும் உபாயப்

பப்பர மட்டைகள் பொட்டிடு நெற்றியர்
     பற்றென உற்றவொர் ...... தமியேனைப்

பத்ம பதத்தினில் வைத்தருள் துய்த்திரை
     பட்டதெனக்கினி ...... அமையாதோ

குப்பரவப்படு பட்ச மிகுத்துள
     முத்தரையர்க்கொரு ...... மகவாகிக்

குத்திரம் அற்றுரை பற்றுணர்வற்றஓர்
     குற்றம் அறுத்திடு ...... முதல்வோனே

விப்ர முனிக்குழை பெற்ற கொடிச்சி!வி
     சித்ர தனக்கிரி ...... மிசைதோயும்

விக்ரம மற்புய வெற்பினை இட்டெழு
     வெற்பை நெருக்கிய ...... பெருமாளே

திருப்பாடல் 239:
தனதாத்த தய்ய தனதாத்த தய்ய
     தனதாத்த தய்ய ...... தனதான

கலைகோட்டு வல்லி விலைகாட்டு வில்!அ
     ரிவைமார்க்கு மெய்யில் ...... அவநூலின்

கலைகாட்டு பொய்ய மலைமாக்கள் சொல்ல
     கடுகாட்டி வெய்ய ...... அதிபாரக்

கொலைகோட்டு கள்ளிடறிவோர்க்கும் !உள்ள
     முகை யாக்கை நையும் ...... உயிர்வாழக்

கொடிகோட்டு மல்லி குரவார்க்கொள் தொல்லை
     மறைவாழ்த்து செய்ய ...... கழல்தாராய்

சிலைகோட்டு மள்ளர் தினைகாத்த கிள்ளை
     முலைவேட்ட பிள்ளை ...... முருகோனே

திணிகோட்டு வெள்இபவன் நாட்டிலுள்ள
     சிறைமீட்ட தில்ல ...... மயில்வீரா

அலைகோட்டு வெள்ள மலைமாக்கள் விள்ள
     மலைவீழ்த்த வல்ல ...... அயில்மோகா

அடிபோற்றி அல்லி முடிசூட்ட வல்ல
     அடியார்க்கு நல்ல ...... பெருமாளே

திருப்பாடல் 240:
தனன தந்த தத்தான தனன தந்த தத்தான
     தனன தந்த தத்தான ...... தனதான

களவு கொண்டு கைக்காசின் அளவறிந்து கர்ப்பூர
     களப துங்க வித்தார ...... முலைமீதே

கலவியின்பம் விற்பார்கள் அவயவங்களைப் பாடு
     கவிதெரிந்து கற்பார்கள் ...... சிலர்தாமே

உள நெகிழ்ந்தசத்தான உரைமறந்து சத்தான
     உனைஉணர்ந்து கத்தூரி ...... மணநாறும்

உபய பங்கயத் தாளில் அபயம் என்றுனைப்பாடி
     உருகி நெஞ்சு சற்றோதில் ...... இழிவாமோ

அளவில் வன்கவிச் சேனை பரவ வந்த சுக்ரீவ
     அரசுடன் கடற்றூளி ...... எழவேபோய்

அடல்இலங்கை சுட்டாடி நிசிசரன் தசக்ரீவம் 
     அறவொர் அம்பு தொட்டார் தமருகோனே

வளரு மந்தரச் சோலை மிசைசெறிந்த முற்பாலை
     வனசர் கொம்பினைத் தேடி ...... ஒருவேட

வடிவு கொண்டு பித்தாகி உருகி வெந்தறக் கானில்
     மறவர் குன்றினிற் போன ...... பெருமாளே

திருப்பாடல் 241:
தய்யனா தத்ததன தய்யனா தத்ததன
     தய்யனா தத்ததன ...... தனதான

கள்ள மீனச்சுறவு கொள்ளு மீனற்பெரிய
     கல்வி வீறக்கரிய ...... மனமாகுங்

கல்விடாதுற்ற திசை சொல் விசாரத்திசைய
     மெய்கள் தோணிப்பிறவி ...... அலைவேலை

மெள்ள ஏறிக்குரவு வெள்ளிலார் வெட்சி!தண
     முல்லைவேர் உற்பல முளரி நீபம்

வில்லநீள் பொற்கனக வல்லிமேல் இட்டுனது
     சொல்லை ஓதிப் பணிவதொரு நாளே

துள்ளு மால் நித்தமுனி புள்ளிமான் வெற்புதவு
     வள்ளிமானுக்கு மயல் ...... மொழிவோனே

தொல் வியாளத்து வளர் செல்வர் யாகத்தரையன்
     எல்லை காணற்கரியர் ...... குருநாதா

தெள்ளு நாதச் சுருதி வள்ளல் மோலிப் புடைகொள்
     செல்வனே முத்தமிணர் ...... பெருவாழ்வே

தெய்வயானைக்கிளைய வெள்ளையானைத் தலைவ
     தெய்வயானைக்கினிய ...... பெருமாளே

திருப்பாடல் 242:
தன்னன தனதன தன்னன தனதன
     தன்னன தனதன ...... தனதான

கன்னியர் கடுவிட மன்னிய கயலன
     கண்ணிலும் இருகன ...... தனமீதுங்

கன்மைகள் மருவிய மன்மதன் உருவிலி
     மென்மைகொள் உருவிலு ...... மயலாகி

இன்னல்செய் குடிலுடன் இன்னமும் உலகினில் 
     இந்நிலை பெறஇஙன் ...... உதியாதே

எண்ணும் உனடியவர் நண்ணிய பதமிசை
     என்னையும் வழிபட ...... விடவேணும்

பொன்நவமணி பயில் மன்னவ புனமற
     மின்முலை தழுவிய ...... புயவீரா

புண்ணியம் உளபல விண்ணவர் தொழுமுதல்
     எண்மலையொடு பொரு ...... கதிர்வேலா

தன்னிறை சடையிறை என்முனி பரவரு
     இன்னிசை உறுதமிழ் ...... தெரிவோனே

தண்ணளி தருமொரு பன்னிரு விழிபயில்
     சண்முகம் அழகிய ...... பெருமாளே

திருப்பாடல் 243:
தந்ததன தத்த தத்த தந்ததன தத்த தத்த
     தந்ததன தத்த தத்த ...... தனதான

கிஞ்சுகம் எனச் சிவத்த தொண்டையள் மிகக் கறுத்த
     கெண்டையள் புனக்கொடிச்சி ...... அதிபாரக்

கிம்புரி மருப்பை ஒத்த குங்கும முலைக் குறத்தி
     கிங்கரன் எனப்படைத்த ...... பெயர்பேசா

நெஞ்சுருகி நெக்கு நெக்கு நின்றுதொழு நிர்க்குணத்தர்
     நிந்தனையில் பத்தர் வெட்சி ...... மலர்தூவும்

நின்பதயுக ப்ரசித்தி என்பன வகுத்துரைக்க
     நின்பணி தமிழ் த்ரயத்தை ...... அருள்வாயே

கஞ்சன் வரவிட்ட துட்ட குஞ்சர மருப்பொசித்த
     கங்கனு மதித் திகைக்க ...... மதம்வீசுங்

கந்தெறி களிற்றுரித்து வென்றுதிரு நட்டமிட்ட
     கம்பனு மதிக்க உக்ர ...... வடிவேல்!கொண்

டஞ்சிய ஜகத்ரயத்தை அஞ்சலென விக்ரமித்து
     அன்பர் புகழப் பொருப்பொடமராடி

அன்றவுணரைக் களத்தில் வென்றுததியைக் கலக்கி
     அண்டர்சிறை வெட்டி விட்ட ...... பெருமாளே

திருப்பாடல் 244:
தனதனன தாத்தன தனதனன தாத்தன
     தனதனன தாத்தன ...... தனதான

குடிமை மனையாட்டியும் அடிமையொடு கூட்டமும்
     குலமும் இறுமாப்பு மிகுதியான

கொடியபெரு வாழ்க்கையில் இனியபொருள் ஈட்டியெ
     குருடுபடு மோட்டென ...... உடல்வீழில்

அடைவுடை விடாச்சிறு பழையதுணி போர்த்தியெ
     அரிட சுடுகாட்டிடை ...... இடுகாயம்

அழியும் அளவாட்டில் உன் அமலமலர் மாப்பத
     அருண சரணாஸ்பதம் ...... அருள்வாயே

அடியினொடு மாத்தரு மொளமொள மொளாச்சென
     அலறிவிழ வேர்க்குலமொடு சாய

அவுணர்படை தோற்பெழ அருவரைகள் ஆர்ப்பெழ
     அயில் அலகு சேப்பெழ ...... மறைநாலும்

உடையமுனி ஆட்பட முடுகவுணர் கீழ்ப்பட
     உயரமரர் மேற்பட ...... வடியாத

உததி கமராப்பிள முதுகுலிச பார்த்திபன்
     உலகு குடியேற்றிய ...... பெருமாளே

திருப்பாடல் 245:
தனன தந்த தத்த தனன தந்த தத்த
     தனன தந்த தத்த ...... தனதான

குறைவதின்றி மிக்க சலம்எலும்பு துற்ற
     குடிலில்ஒன்றி நிற்கும் ...... உயிர்மாயம்

குலைகுலைந்து தெர்ப்பை இடைநினைந்து நிற்ப
     கொடிய கொண்டல்ஒத்த ...... உருவாகி

மறலி வந்து துட்ட வினைகள் கொண்டலைத்து
     மரணமென்ற துக்கம்  ...... அணுகாமுன்

மனம் இடைஞ்சலற்றுன் அடிநினைந்து நிற்க
     மயிலில் வந்து முத்தி ...... தரவேணும்

அறுகும் இந்து மத்தம் அலையெறிந்த அப்பும் 
     அளிசிறந்த புட்பம் ...... அதுசூடி

அருநடஞ்செய் அப்பர் அருள் இரங்குகைக்கு
     அரிய இன்சொல் செப்பு ...... முருகோனே

சிறுகுலந் தனக்குள் அறிவு வந்துதித்த
     சிறுமிதன் தனத்தை ...... அணைமார்பா

திசைமுகன் திகைக்க அசுரர் அன்றடைத்த
     சிறை திறந்து விட்ட ...... பெருமாளே

திருப்பாடல் 246:
தான தனன தத்த தான தனன தத்த
     தான தனன தத்த ...... தனதான

கோகனக முகிழ்த்த போக புளகிதத்த
     கோடு தலைகுலைத்த ...... முலையாலே

கூட வரஅழைக்கு மாடு குழையடர்த்த
     நீடிய குவளைக்கண் ...... மடமானார்

ஆகமுற அணைத்து காசை அபகரித்து
     மீள இதழ் கடிப்பதறியாதே

ஆசையது கொளுத்தும் ஆலம் அதுகுடித்த
     சேலில் பரிதவிப்பதினி ஏனோ

மாக நதிமதி ப்ரதாப !மவுலியர்க்கு
     சாவியது ஓர்அர்த்த ...... மொழிவோனே

வாகுவலைய சித்ர ஆறிரு புய வெற்பில்
     வாழ்வு பெறுகுறத்தி ...... மணவாளா

வேக உரக ரத்ந நாக சயன சக்ரம் 
     ஏவி மரகதத்தின் ...... மருகோனே

வீசு திரைஅலைத்த வேலை சுவற வெற்றி
     வேலை உருவ விட்ட ...... பெருமாளே

திருப்பாடல் 247:
தந்தந் தனந்த தந்தந் தனந்த
     தந்தந் தனந்த ...... தனதான

சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த
     தண்கொங்கை வஞ்சி ...... மனையாளுந்

தஞ்சம் பயின்று கொஞ்சுஞ் சதங்கை
     தங்கும் பதங்கள்  ...... இளைஞோரும்

எந்தன் தனங்கள் என்றென்று நெஞ்சில் 
     என்றும் புகழ்ந்து ...... மிகவாழும்

இன்பங் களைந்து துன்பங்கள் மங்க
     இன்றுன் பதங்கள் ...... தரவேணும்

கொந்தின் கடம்பு செந்தண் புயங்கள்
     கொண்டங் குறிஞ்சி ...... உறைவோனே

கொங்கின் புனஞ்செய் மின்கண்ட கந்த
     குன்றம் பிளந்த ...... கதிர்வேலா

ஐந்திந்த்ரியங்கள் வென்றொன்றும் அன்பர்
     அங்கம் பொருந்தும் ...... அழகோனே

அண்டந் தலங்கள் எங்குங் கலங்க
     அன்றஞ்சலென்ற ...... பெருமாளே

திருப்பாடல் 248:
தனதன தனத்த தத்த தனதன தனத்த தத்த
     தனதன தனத்த தத்த ...... தனதான

சலமலம் அசுத்த மிக்க தசைகுருதி யத்தி மொய்த்த
     தடியுடல் தனக்குள் உற்று ...... மிகுமாயம்

சகலமும் இயற்றி மத்த மிகும் இரு தடக்கை யத்தி
     தனிலுரு மிகுத்து மக்களொடு தாரம்

கலனணி துகிற்கள் கற்பினொடு குலம்அனைத்து முற்றி
     கருவழி அவத்திலுற்று ...... மகிழ்வாகிக்

கலைபல பிடித்து நித்தம் அலைபடும்  அநர்த்த முற்றி
     கடுவினை தனக்குள் நிற்பதொழியாதோ

மலைமகள் இடத்து வைத்து மதிபுனல் சடைக்குள் வைத்து
     மழுவனல் கரத்துள் வைத்து ...... மருவார்கள்

மடிவுற நினைத்து வெற்பை வரிசிலை இடக்கை வைத்து
     மறைதொழ நகைத்த அத்தர் ...... பெருவாழ்வே

பலதிசை நடுக்கமுற்று நிலைகெட அடற்கையுற்ற
     படையது பொருப்பில் விட்ட ...... முருகோனே

பழுதறு தவத்திலுற்று வழிமொழி உரைத்த பத்தர்
     பலருய அருட்கண் வைத்த ...... பெருமாளே

திருப்பாடல் 249:
தாந்தன தானதன தாந்தன தானதன
     தாந்தன தானதன ...... தனதான

சாங்கரி பாடியிட ஓங்கிய ஞானசுக
     தாண்டவம் ஆடியவர் ...... வடிவான

சாந்தம் அதீதம் உணர் கூந்தம சாதியவர்
     தாங்களு ஞானமுற ...... அடியேனுந்

தூங்கிய பார்வையொடு தாங்கிய வாயுவொடு
     தோன்றிய சோதியொடு ...... சிவயோகந்

தூண்டிய சீவனொடு வேண்டிய காலமொடு
     சோம்பினில் வாழும்வகை ...... அருளாதோ

வாங்குகை யானையென ஈன்குலை வாழைவளர்
     வான்பொழில் சூழும்வயல் ...... அயலேறி

மாங்கனி தேனொழுக வேங்கையில் மேலரிகள்
     மாந்திய ஆரணிய ...... மலைமீதிற்

பூங்கொடி போலும்இடை ஏங்கிட வாரமணி
     பூண்பன பாரியன ...... தனபாரப்

பூங்குற மாதினுடன் ஆங்குறவாடி இருள்
     பூம்பொழில் மேவிவளர் ...... பெருமாளே

திருப்பாடல் 250:
தனதான தந்ததன தனதான தந்ததன
     தனதான தந்ததன ...... தனதான

சிவஞான புண்டரிக மலர்மாதுடன் கலவி
     சிவபோக மன்பருக ...... அறியாமற்

செகமீதுழன்று மல வடிவாய் இருந்துபொது
     திகழ்மாதர் பின்செருமி ...... அழிவேனோ

தவமாதவங்கள் பயில் அடியார் கணங்களொடு
     தயவாய் மகிழ்ந்துதினம் ...... விளையாடத்

தமியேன் மலங்களிரு வினைநோய் இடிந்தலற
     ததிநாளும் வந்ததென்முன் ...... வரவேணும்

உவகாரி அன்பர்பணி கலியாணி எந்தையிடம் 
     உறைநாயகங் கவுரி ...... சிவகாமி

ஒளிர் ஆனையின் கரமில் மகிழ் மாதுளங்கனியை
     ஒருநாள் பகிர்ந்த உமை ...... அருள்பாலா

அவமே பிறந்த எனை இறவாமல் அன்பர்புகும் 
     அமுதாலயம் பதவி ...... அருள்வோனே

அழகாநகம் பொலியு மயிலா குறிஞ்சிமகிழ்
     அயிலா புகழ்ந்தவர்கள் ...... பெருமாளே

No comments:

Post a Comment