(பொதுத் திருப்புகழ் திருப்பாடல்கள்)
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 251:
தானத்த தான தந்த தானத்த தான தந்த
தானத்த தான தந்த ...... தனதான
சீறிட்டுலாவு கண்கள் மாதர்க்கு நாள் மருண்டு
சேவித்தும் ஆசை கொண்டும் ...... உழல்வேனைச்
சீரிட்டமாக நின்ற காசைக்கொடாத பின்பு
சீரற்று வாழும் இன்பம் ...... நலியாதே
ஆறெட்டுமாய் விரிந்து மாறெட்டுமாகி நின்றும்
ஆருக்குமே விளம்ப ...... அறியாதே
ஆகத்துளே மகிழ்ந்த ஜோதி ப்ரகாச இன்பம்
ஆவிக்குளே துலங்கி ...... அருளாதோ
மாறிட்டு வானடுங்க மேலிட்டு மேலகண்டம்
வாய்விட்டு மாதிரங்கள் ...... பிளவாக
வாள்தொட்டு நேர்நடந்த சூர்வஜ்ர மார்பு நெஞ்சும்
வான்முட்ட வீறு செம்பொன் ...... வரையோடு
கூறிட்ட வேல பங்க வீரர்க்கு வீர கந்த
கோதற்ற வேடர் தங்கள் ...... புனம்வாழுங்
கோலப்பெண் வாகு கண்டு மாலுற்று வேளை கொண்டு
கூடிக்குலாவும் அண்டர் ...... பெருமாளே
திருப்பாடல் 252:
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன ...... தனதான
சூதின் உணவாசை தனிலே சுழலு மீனதென
தூசுஅழகான வடிவதனாலே
சூதமுடன் நேருமென மாதர்நசை தேடுபொருள்
ஆசைதமிலே சுழல ...... வருகாலன்
ஆதிவிதியோடு பிறழாத வகை தேடி!என
தாவி தனையே குறுகி ...... வருபோது
ஆதிமுருகாதி முருகாதி முருகா எனவும்
ஆதிமுருகா நினைவு ...... தருவாயே
ஓதமுகிலாடு கிரியேறு பட வாழசுரர்
ஓலமிடவே அயில் கொடமராடீ
ஓநமசிவாய குரு பாதம் அதிலே பணியும்
யோகமயிலா அமலை ...... மகிழ்பாலா
நாத ரகுராம அரி மாயன் மருகா புவன
நாடும் அடியார்கள் மனதுறைவோனே
ஞானசுர ஆனைகணவா முருகனே அமரர்
நாடுபெற வாழஅருள் ...... பெருமாளே
திருப்பாடல் 253:
தனந்தான தானான தனந்தான தானான
தனந்தான தானான ...... தனதான
செழுந்தாது பார்மாதும் அரும்பாதி ரூபோடு
சிறந்தி யாதிலூம்ஆசை ...... ஒழியாத
திறம்பூத வேதாளன் அரும்பாவமே கோடி
செயுங்காய நோயாளன் ...... நரகேழில்
விழுந்தாழவே மூழ்க இடுங்காலன் மேயாவி
விடுங்காலமே நாயென் ...... வினைபாவம்
விரைந்தேகவே வாசி துரந்தோடியே ஞான
விளம்போசையே பேசி ...... வரவேணும்
அழுங்கோடி தேவார்கள் அமர்ந்தார வானீடி
அழன்றேகி மாசீத ...... நெடுவேலை
அதிர்ந்தோடவே காலன் விழுந்தோடவே கூர
அலங்கார வேலேவு ...... முருகோனே
கொழுங்கானிலே மாதர் செழுஞ்சேலையே கோடு
குருந்தேறு மால்மாயன் ...... மருகோனே
குறம்பாடுவார் சேரி புகுந்தாசை மாதோடு
குணங்கூடியே வாழு ...... பெருமாளே
திருப்பாடல் 254:
தத்த தனதனன தத்த தனதனன
தத்த தனதனன ...... தனதான
தத்தனமும் அடிமை சுற்றமொடு புதல்வர்
தக்க மனையினமு(ம்) ...... மனை வாழ்வுந்
தப்பு நிலைமை அணுகைக்கு வர!விரகு
தைக்கு மயல்நினைவு ...... குறுகாமுன்
பத்தியுடன்உருகி நித்தம் உனதடிகள்
பற்றுமருள் நினைவு ...... தருவாயே
பத்து முடி உருளுவித்த பகழியினர்
பச்சை நிறமுகிலின் ...... மருகோனே
அத்தி முகவன் அழகுற்ற பெழை வயிறன்
அப்பம் அவரைபொரி ...... அவல்தேனும்
அப்பி அமுதுசெயும் மொய்ப்பன் உதவ!அட
விக்குள் மறமகளை ...... அணைவோனே
முத்தி தருமுதல்வர் முக்கண் இறைவரொடு
முற்று மறைமொழியை ...... மொழிவோனே
முட்ட அசுரர்கிளை கெட்டு முறியமுதல்
வெட்டி அமர்பொருத ...... பெருமாளே
திருப்பாடல் 255:
தனதனன தானனம் தனதனன தானனம்
தனதனன தானனம் ...... தனதான
தலைவலய போகமுஞ் சலனமிகு மோகமுந்
தவறுதரு காமமுங் ...... கனல்போலுந்
தணிவரிய கோபமுந் துணிவரிய லோபமுஞ்
சமயவெகு ரூபமும் ...... பிறிதேதும்
அலமலம்எனா எழுந்தவர்கள் அநுபூதி!கொண்
டறியுமொரு காரணந் ...... தனை!நாடா
ததிமத புராணமுஞ் சுருதிகளுமாகி !நின்
றபரிமிதமாய் விளம்புவதோ தான்
கலகஇரு பாணமுந் திலகவொரு சாபமுங்
களபம்ஒழியாத கொங்கையுமாகிக்
கவரும் அவதாரமுங் கொடிய பரிதாபமுங்
கருதியிது வேளை என்றுகிராத
குலதிலக மானுடன் கலவிபுரிவாய் பொருங்
குலிசகர வாசவன் ...... திருநாடு
குடிபுக நிசாசரன் பொடிபட மகீதரன்
குலையநெடு வேல்விடும் ...... பெருமாளே
திருப்பாடல் 256:
தனதன தனதன தனதன தனதன தனதன ...... தனதான
தவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறிய ...... பரபாதத்
தருமிகள் கருமிகள் வெகுவித சமயிகள் அவரொடு ...... சருவா!நின்
றவனிவன் உவனுடன் அவளிவள் உவள்அது இதுவுது ...... !எனுமாறற்
றருஉரு ஒழிதரு உருவுடை அதுபதி தமியனும் ...... உணர்வேனோ
குவலய முழுவதும் மதிர்பட வடகுவடிடிபட ...... உரகேசன்
கொடுமுடி பலநெரிதர நெடு முதுகுரை கடல்புனல் ...... வறிதாகத்
துவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெட நிசிசரர் சேனை
துகளெழ நடநவில் மரகத துரகதம் வரவல ...... பெருமாளே
திருப்பாடல் 257:
தனதன தாத்தனத் தனதன தாத்தனத்
தனதன தாத்தனத் ...... தனதான
திதலை உலாத்துபொற் களபம் விடாப்புதுத்
த்ரிவித கடாக்களிற்றுர கோடு
சிகர மகாப்ரபைக் குவடென வாய்த்துநற்
சுரர் குடியேற்றி விட்டிளநீரை
மதனவிடாய்த் தனத்திளைஞரை வாட்டு!செப்
பிணைமுலை மாத்தவக் ...... கொடிபோல்வார்
வலையில் இராப்பகற் பொழுதுகள் போக்கும்!அற்
றெனைஉனை வாழ்த்த வைத்தருள்வாயே
சததள பார்த்திபற்கரி !புருஷோத்தமற்
கெரி கனல் ஏற்றவற்குணராதோர்
சகல சமார்த்த சத்திய வன சூக்ஷ!முக்
கிய பரமார்த்த முற் ...... புகல்வோனே
கதிர்மணி நீர்க்கடற் சுழிபுகு ராக்ஷதக்
கலக பராக்ரமக் ...... கதிர்வேலா
கருதிய பாட்டில் நிற்றலைதெரி மாக்ஷணக்
கவிஞர் உசாத்துணைப் ...... பெருமாளே
திருப்பாடல் 258:
தனதந்த தனதனன தனதந்த தனதனன
தனதந்த தனதனன ...... தனதான
திரைவஞ்ச இருவினைகள் நரையங்க மலமழிய
சிவகங்கை தனில்முழுகி ...... விளையாடிச்
சிவம்வந்து குதிகொள்அக வடிவுன்றன் வடிவமென
திகழண்டர் முநிவர்கணம் ...... அயன்மாலும்
அரன்மைந்தன் எனகளிறு முகன்எம்பி எனமகிழ
அடியென் கணளிபரவ ...... மயிலேறி
அயில்கொண்டு திருநடனம் என தந்தையுடன் மருவி
அருமந்த பொருளைஇனி ...... அருள்வாயே
பரியென்ப நரிகள்தமை நடனங்கொடொரு வழுதி
பரிதுஞ்ச வரு மதுரை ...... நடராஜன்
பழியஞ்சி எனதருகில் உறைபுண்டரிக வடிவ
பவளஞ்சொல் உமைகொழுநன் ...... அருள்பாலா
இருள்வஞ்ச கிரிஅவுணர் உடன்எங்கள் இருவினையும்
எரியுண்டு பொடியஅயில் ...... விடுவோனே
எனதன்பில் உறைசயில மகிழ்வஞ்சி குற!மகளொ
டெணு பஞ்சணையின் மருவு ...... பெருமாளே
திருப்பாடல் 259:
தானான தாத்த தானான தாத்த
தானான தாத்த ...... தனதான
தீயூதை தாத்ரி பானீயம் ஏற்ற
வானீதியால் திகழும் ஆசைச்
சேறூறு தோற்பை யானாக நோக்கு
மாமாயை தீர்க்க ...... அறியாதே
பேய்பூத மூத்த பாறோரி காக்கை
பீறா இழாத் தினுடல் பேணிப்
பேயோன் நடாத்து கோமாளி வாழ்க்கை
போமாறு பேர்த்துன் ...... அடிதாராய்
வேயூறு சீர்க்கை வேல்வேடர் காட்டில்
ஏய்வாளை வேட்க ...... உருமாறி
மீளாது வேட்கை மீதூர வாய்த்த
வேலோடு வேய்த்த ...... இளையோனே
மாயூர வேற்றின் மீதே புகாப்பொன்
மாமேரு வேர்ப்பறிய மோதி
மாறான மாக்கள் நீறாக ஓட்டி
வானாடு காத்த ...... பெருமாளே
திருப்பாடல் 260:
தனத்தன தனத்தன தனத்தன தனத்தன
தனத்தன தனத்தன ...... தனதான
துடித்தெதிர் வடித்தெழு குதர்க்க சமயத்தவர்
சுழற்கொரு கொடிக்கொடி ...... எதிர்கூறித்
துகைப்பனகிதத் தலை அறுப்பனயில் விட்டுடல்
துணிப்பன கணித்தலை ...... மிசைபார
முடித்தலை விழுப்பன முழுக்க அடிமைப்பட
முறைப்படு மறைத்திரள் ...... அறியாத
முதற்பொருள் புலப்பட உணர்த்துவன் எனக்கொரு
மொழிப்பொருள் பழிப்பற ...... அருள்வாயே
குடிப்பன முகப்பன நெடிப்பன நடிப்பன
கொழுத்த குருதிக்கடல்...... இடையூடே
குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன
குவட்டினை இடிப்பன ...... சிலபாடல்
படிப்பன திருப்புகழ் எடுப்பன முடிப்பன
பயிற்றி அலகைக்குலம் ...... விளையாடப்
பகைத்தெழும் அரக்கரை இமைப்பொழுதினிற் பொடி
படப் பொருதுழக்கிய ...... பெருமாளே
திருப்பாடல் 261:
தத்த தத்த தானனம் தத்த தத்த தானனம்
தத்த தத்த தானனத் ...... தனதான
துத்தி நச்சரா இளம் பிச்சி நொச்சி கூவிளஞ்
சுக்கிலக் கலாமிர்தப் ...... பிறைசூதம்
சுத்த ரத்த பாடலம் பொற்கடுக்கை ஏடலஞ்
சுத்த சொற் பகீரதித் திரைநீலம்
புத்தெருக்கு பாழிகங் கொத்தெடுத்த தாளிதண்
பொற்புமத்தை வேணியர்க்கருள் கூரும்
புத்தி சித்தி வாய்கனஞ் சுத்த சத்ய வாசகம்
புற்புதப் பிராணனுக்கருள்வாயே
பத்தியுற்ற தோகையம் பச்சை வெற்றி வாகனம்
பக்கமிட்டுலாவியச் ...... சுரர்மாளப்
பக்க விட்டு வாய்நிணங் கக்க வெட்டி வாய்தரும்
பத்ம சிட்டன் ஓட முத்தெறிமீனக்
கைத்தலை ப்ரவாகையுந் தத்தளிக்க !மாமுறிந்
துட்க முத்து வாரணச் ...... சதகோடி
கைக்களிற்று வாரணம் புக்கொளிக்க வாரணங்
கைப்பிடித்த சேவகப் ...... பெருமாளே
திருப்பாடல் 262:
தனன தத்த தய்ய தனன தத்த தய்ய
தனன தத்த தய்ய ...... தனதான
தெரிவை மக்கள் செல்வம் உரிமை மிக்க உண்மை
தெரிவதற்கு உள்ளம் ...... உணராமுன்
சினமிகுத்த திண்ணர் தனிவளைத்து வெய்ய
சிலுகு தைத்து வன்மை ...... சிதையாமுன்
பரவை புக்கு தொய்யும் அரவணைக்குள் வைகு
பரமனுக்கு நல்ல ...... மருகோனே
பழுதில் நிற்சொல் சொல்லி எழுதி நித்தம் உண்மை
பகர்வதற்கு நன்மை ...... தருவாயே
இருகிரிக்கள் உள்ளவரை தடிக்கு மின்னும்
இடியு மொய்த்ததென்ன ...... எழுசூரை
எழுகடற்குள் உள்ளு முழுகுவித்து விண்ணுள்
இமையவர்க்கு வன்மை ...... தருவோனே
அரிவை பக்கம்உய்ய உருகி வைக்கும் ஐயர்
அறிய மிக்க உண்மை ...... அருள்வோனே
அறிவினுக்குள் என்னை நெறியில் வைக்க வல்ல
அடியவர்க்கு நல்ல ...... பெருமாளே
திருப்பாடல் 263:
தந்தன தந்த தந்தன தந்த
தந்தன தந்த ...... தனதான
தென்றலும் அன்று இன்றலை பொங்கு
திண்கடல் ஒன்று ...... மிகமோதச்
செந்தழல் என்று வெந்தழல் சிந்து
திங்களும் வந்து ...... துணைஏய
அன்றிலும் அன்றி துன்று சரங்கள்
ஐந்தும் எனெஞ்சம் ...... அழியாதே
அந்தியில் என்றன் வெந்துயர் அஞ்ச
அன்பொடலங்கல் ...... தரவேணும்
வென்றி விளங்கு குன்றவர் வஞ்சி
விஞ்சிய கொங்கை ...... புணர்மார்பா
வெண்தரளங்கள் தண்டை சதங்கை
மின் கொடிலங்கு ...... கழலோனே
கொன்றையணிந்த சங்கரர் அன்று
கும்பிட வந்த ...... குமரேசா
குன்றிட அண்டர் அன்றுய என்று
குன்றமெறிந்த ...... பெருமாளே
திருப்பாடல் 264:
தானன தனன தானன தனன
தானன தனன ...... தனதான
தோரண கனக வாசலில் முழவு
தோல் முரசதிர ...... முதிராத
தோகையர் கவரி வீச வயிரியர்
தோள்வலி புகழ ...... மதகோப
வாரண ரத பதாகினி துரக
மாதிர நிறைய ...... அரசாகி
வாழினும் வறுமை கூரினு நினது
வார்கழல் ஒழிய ...... மொழியேனே
பூரண புவன காரண சவரி
பூதர புளக ...... தனபார
பூஷண நிருதர் தூஷண விபுதர்
பூபதி நகரி ...... குடியேற
ஆரண வனச ஈரிரு குடுமி
ஆரியன் வெருவ ...... மயிலேறும்
ஆரிய பரம ஞானமும் அழகும்
ஆண்மையும் உடைய ...... பெருமாளே
திருப்பாடல் 265:
தத்தனா தனத்த தத்தனா தனத்த
தத்தனா தனத்த ...... தனதான
நச்சுவாள் விழிக் கொடெற்றியே தனத்தை
நத்துவார் சுகத்தில் ...... நலமாக
நட்டமா மனத்தை இட்டமே கொடுத்து
நத்துவாழ் கடற்குள் ...... அணைபோலே
கச்சமே செலுத்தி அச்சமே படுத்து
கட்டஏழ் பிறப்பு ...... விடவேதான்
கற்றநூல் உகக்க வெட்கமே செறித்த
கட்டனேன் நினைப்பதொருநாளே
இச்சையே செலுத்தி உச்சிதாள் பலிக்கும்
இட்டமால் அவற்கு ...... மருகோனே
எற்று வாரிதிக்குள் முற்றிநீள் பொருப்பை
எக்கிநேர் மடித்த ...... இளையோனே
மெச்சவே புடைத்த முத்தமார் தனத்தி
மிக்கவாள் படைத்த ...... விழியாலே
வெட்டுமா மறத்தி ஒக்கவே இருக்க
வெற்றி வேலெடுத்த ...... பெருமாளே
திருப்பாடல் 266:
தத்ததன தான தத்த, தத்ததன தான தத்த
தத்ததன தான தத்த ...... தனதான
நற்குணம் உளார் தமைப்பொல் மைக்குழலிலே சிறக்க
நற்பரிமளாதி துற்ற ...... மலர்சூடி
நச்சுவிழியால் மயக்கி இச்சைபல பேசியுற்று
நற்பொருள் அவா மனத்தர் ...... வசமாகி
வெற்பனைய மாதனத்தை பொற்புற உறாஅணைத்து
மெத்த மயலாகி நித்த ...... மெலியாதே
வெட்சிகமழ் நீப புஷ்ப வெற்றிசிறு பாத பத்ம
மெய்க்கிருபை நீஅளிப்பதொரு நாளே
ரத்தினபணா நிருத்தன் மெய்ச்சுதனும் நாடு மிக்க
லக்ஷண குமார சுப்ரமணியோனே
நற்றிசையும் ஏறியிட்ட பொய்ச்சமணை வேரறுத்து
நற்றிருநிறே பரப்பி ...... விளையாடும்
சற்சன குமார வ்ருத்தி அற்புத சிவாயனுக்கொர்
சற்குரு விநோத சித்ர ...... மயில்வீரா
சக்ரதரன் மார்பகத்தில் உக்ரமுடனே தரித்த
சத்தி அடையாளம்இட்ட ...... பெருமாளே
திருப்பாடல் 267:
தானாந்த தானந் தாத்த தானாந்த தானந் தாத்த
தானாந்த தானந் தாத்த ...... தனதான
நாகாங்க ரோமங் காட்டி வாரேந்து நாகங் காட்டி
நாமேந்து பாலங் காட்டி ...... அபிராம
நானாங்க ராகங் காட்டி நாகேந்த்ர நீலங் காட்டி
நாயேன் ப்ரகாசங் காட்டி ...... மடலூர
மேகாங்க கேசங் காட்டி வாயாம்பல் வாசங் காட்டி
மீதூர்ந்த போகங் காட்டி ...... உயிர்ஈர்வார்
மேல்வீழ்ந்து தோயுந் தூர்த்தன் மோகாந்தகாரந் தீர்க்க
வேதாந்த தீபங் காட்டி ...... அருள்வாயே
ஏகாந்த வீரம் போற்றி நீலாங்க யானம் போற்றி
ஏடார்ந்த நீபம் போற்றி ...... முகில்தாவி
ஏறோங்கல் ஏழுஞ் சாய்த்த நான்மூன்று தோளும் போற்றி
யார் வேண்டினாலுங் கேட்ட ...... பொருளீயும்
த்யாகாங்க சீலம் போற்றி வாய் ஓய்ந்திடாதன்றார்த்து
தேசாங்க சூரன் தோற்க ...... மயிலேறிச்
சேவேந்தி தேசம் பார்க்க வேலேந்தி மீனம் பூத்த
தேவேந்த்ர லோகங் காத்த ...... பெருமாளே
திருப்பாடல் 268:
தனதன தனதனத் தனதன தனதனத்
தனதன தனதனத் ...... தனதான
பரிமள மலர் அடுத்தகில் மணமுழுகி மைப்
பரவிய ம்ருகமதக் ...... குழல்மானார்
பருமணி வயிர முத்திலகிய குழையினிற்
படைபொரு வனவிழிக் ...... கயலாலே
எரியுறு மெழுகெனத் தனிமனம் அடைய!நெக்
கினிமையோடுருக விட்டவமே யான்
இருவினை நலியமெய்த் திறலுடன் அறிவு!கெட்
டிடர்படுவது கெடுத்தருள்வாயே
சொரிமத அருவிவிட்டொழுகிய புகர்முகத்
தொளைபடு கரமலைக்கிளையோனே
துடியிடை ஒருகுறக் குலமயில் புளகிதத்
துணைமுலை தழுவுபொற் ...... புயவீரா
அரியன பலவிதத்தொடு திமிலையும் !உடுக்
கையும் மொகு மொகுவெனச் ...... சதகோடி
அலகையும் உடன்நடித்திட வடிஅயில்!எடுத்
தமர்செயும் அறுமுகப் ...... பெருமாளே
திருப்பாடல் 269:
தத்தனத் தத்தனத் தத்தனத் தத்தனத்
தத்தனத் தத்தனத் ...... தனதான
பற்ற நெட்டைப் படைத்துள் இருள் !தைத்தயிர்ப்
பத்தை முட்டிப் படுத்தயில் மாதர்
பக்கமிட்டுப்பொருள் கொட் குமிட்டப்பரப்
பற்றுகெட்டுப் பயிர்க் ...... களைபோலுங்
கற்ற கட்டுக்கவிக் கொட்டம் ஒட்டிக்!கனைத்
திட்டுகத் தத்தினுற்றக மாயுங்
கட்டமற்றுக் கழற் பற்றிமுத்திக் !கருத்
தொக்க நொக்குக் கணித்தருள்வாயே
வற்ற வட்டக்கடற் கிட்டிவட்டித் !துரத்
திட்டு மட்டுப்படப் ...... பொருமாயன்
மற்றும்ஒப்புத் தரித்தெட்ட எட்டப்!புறத்
துற்ற அத்தர்க்கருள் ...... பெருவாழ்வே
செற்றமுற்றச் சினத்திட்டு நெட்டைப்!பொருப்
பெட்டைமுட்டிச் செருச் ...... செயும்வேலா
சித்தர் சித்தத்துறப் பற்றி மெத்தப்புகழ்ச்
செப்பு முத்தித் தமிழ்ப் ...... பெருமாளே
திருப்பாடல் 270:
தானன தான தாத்த தானன தான தாத்த
தானன தான தாத்த ...... தனதான
பாதகமான யாக்கை வாதுசெய் பாவி கோத்த
பாணமும் வாளும்ஏற்ற ...... இருபார்வை
பாரபடீர மாப்பயோதர மாதர் வாய்த்த
பாயலின் மீதணாப்பி ...... இதமாடுந்
தோதகம் ஆய வார்த்தை போதகமாக நோக்கு
தூய்மையில் நாயினேற்கும் ...... வினைதீரச்
சூழம்அனாதி நீத்த யானொடு தானிலாச்!சு
கோதய ஞான வார்த்தை ...... அருள்வாயே
சாதன வேத நூற் புராதன பூண நூற்!ப்ர
ஜாபதி ஆண்மை தோற்க ...... வரைசாடிச்
சாகர சூர வேட்டை ஆடிய வீர வேற்!ப்ர
தாப மகீப போற்றி ...... எனநேமி
மாதவன் மாது பூத்த பாகர் அனேக நாட்ட
வாசவன் ஓதி மீட்க ...... மறைநீப
மாமலர் தூவி வாழ்த்த யானையை மாலை சூட்டி
வானவர் சேனை காத்த ...... பெருமாளே
திருப்பாடல் 271:
தான தனந்தன தான தனந்தன
தான தனந்தன ...... தனதான
பார நறுங்குழல் சோர நெகிழ்ந்து!ப
டீர தனம் புளகிதமாகப்
பாவையர் உந்தியல் மூழ்கி நெடும்!பரி
தாபமுடன் பரிமள வாயின்
ஆரமுதுண்டணை மீதில் !இருந்தநு
ராகம் விளைந்திட ...... விளையாடி
ஆக நகம்பட ஆர முயங்கிய
ஆசை மறந்துனை ...... உணர்வேனோ
நாரதன் அன்று சகாய மொழிந்திட
நாயகி பைம்புனம் ...... அதுதேடி
நாணம் அழிந்துருமாறிய வஞ்சக
நாடியெ பங்கய ...... பதநோவ
மார சரம்பட மோகமுடன்குற
வாணர் குறிஞ்சியின் ...... மிசையேபோய்
மாமுநிவன் புணர் மான்உதவுந் தனி
மானை மணஞ்செய்த ...... பெருமாளே
திருப்பாடல் 272:
தனதன தனதன தனதன தனதன
தானத் தனந்தம் ...... தனதான
பிரமனும் விரகொடு பிணிவினை இடர்கொடு
பேணிக் கரங்கொண்டிரு காலும்
பெறநிமிர் குடிலென உறஉயிர் புகமதி
பேதித்தளந்தம் ...... புவியூடே
வரவிட வரும்உடல் எரியிடை புகுதரு
வாதைத் தரங்கம் ...... பிறவாமுன்
மரகத மயில்மிசை வருமுருகனும்என
வாழ்க்கைக்கொர் அன்புந் ...... தருவாயே
அருவரை தொளைபட அலைகடல் சுவறிட
ஆலிப்புடன் சென்றசுரேசர்
அனைவரு மடிவுற அமர்பொருதழகுடன்
ஆண்மைத் தனங் கொண்டெழும் வேலா
இருவினை அகலிட எழில்உமை இடமுடை
ஈசர்க்கிடுஞ் செந்தமிழ் வாயா
இயல்பல கலைகொடு இசை மொழிபவரினும்
ஏழைக்கிரங்கும் ...... பெருமாளே
திருப்பாடல் 273:
தானன தானன தந்த தானன தானன தந்த
தானன தானன தந்த ...... தனதான
பூதகலாதிகள் கொண்டு யோகமும் ஆகமகிழ்ந்து
பூசைகள் யாது நிகழ்ந்து ...... பிழைகோடி
போம்வழியேது தெரிந்து ஆதிஅநாதி இரண்டு
பூரணி காரணி விந்து ...... வெளியான
நாதபராபரம் என்ற யோகிஉலாசம் அறிந்து
ஞானசுவாசம் உணர்ந்து ...... ஒளிகாண
நாடியொர் ஆயிரம் வந்த தாமரை மீதில் அமர்ந்த
நாயகர் பாதம் இரண்டும் ...... அடைவேனோ
மாது சர்வேஸ்வரி வஞ்சி காளி பிடாரி விபஞ்சி
வாணி வராகி மடந்தை ...... அபிராமி
வாழ்சிவகாம சவுந்த்ரி ஆலமெலா முக பஞ்ச
வாலைபுராரி இடந்தகுமைஆயி
வேதபுராணம் விளம்பி நீலமுராரியர் தங்கை
மேலொடு கீழுலகங்கள் ...... தருபேதை
வேடமெலாம் உக சங்க பாடலொடாடல் பயின்ற
வேணியர் நாயகி தந்த ...... பெருமாளே
திருப்பாடல் 274:
தனந்தா தனந்தா தனந்தா தனந்தா
தனந்தா தனந்த ...... தனதான
பெருங்காரியம்போல் வருங் கேடுடம்பால்
ப்ரியங்கூர வந்து ...... கருவூறிப்
பிறந்தார் கிடந்தார் இருந்தார் தவழ்ந்தார்
நடந்தார் தளர்ந்து ...... பிணமானார்
அருங்கான் மருங்கே எடுங்கோள் சுடுங்கோள்
அலங்கார நன்றிதென மூழ்கி
அகன்றாசையும் போய் விழும் பாழுடம்பால்
அலந்தேனை அஞ்சல் ...... எனவேணும்
இருங்கானகம் போய் இளங்காளை பின்!போ
க எங்கே மடந்தை ...... எனவேகி
எழுந்தே குரங்கால் இலங்கா புரந்தீ
இடுங் காவலன்தன் ...... மருகோனே
பொருங்கார் முகம்பாணி கொண்டே இறைஞ்சார்
புறஞ்சாய அம்பு ...... தொடும்வேடர்
புனங்காவலங் கோதை பங்கா அபங்கா
புகழ்ந்தோதும் அண்டர் ...... பெருமாளே
திருப்பாடல் 275:
தத்தத் தனத்தத்த தத்தத் தனத்தத்த
தத்தத் தனத்தத்த ...... தனதான
மக்கட் பிறப்புக்குள் ஒக்கப் பிறப்புற்ற
மட்டுற்ற சுற்றத்தர் ...... மனையாளும்
மத்யத் தலத்துற்று நித்தப் பிணக்கிட்டு
வைத்துப் பொருட்பற்று ...... மிகநாட
நிக்ரித்திடுத் துட்டன் மட்டித்துயிர் பற்ற
நெட்டைக் கயிற்றிட்டு ...... வளையாமுன்
நெக்குக் குருப்பத்தி மிக்குக் கழற்செப்ப
நிற்றத்துவச் சொற்கள் ...... அருள்வாயே
திக்கப் புறத்துக்குள் நிற்கப் புகழ்ப்பித்த
சித்ரத் தமிழ்க்கொற்றம் ...... உடையோனே
சிப்பக் குடிற்கட்டும் அற்பக் குறத்திச்சொல்
தித்திப்பை இச்சிக்கு ...... மணவாளா
முக்கட் சடைச்சித்தர் உட்புக்கிருக்கைக்கு
முத்தித் துவக்குற்று ...... மொழிவோனே
முட்டச் சினத்திட்டு முற்பட்டிணர்க் கொக்கை
முட்டித் தொளைத்திட்ட ...... பெருமாளே
திருப்பாடல் 276:
தத்தனா தத்ததன தத்தனா தத்ததன
தத்தனா தத்ததன ...... தனதான
மக்கள் தாயர்க்கு மருகர்க்கு மாமர்க்கு!மனை
விக்கும் வாழ்நர்க்கு மிக ...... மனதூடே
மைத்த வேலைக்கு நெடிதுற்ற மாயத் துயரம்
வைத்துவாடச் சமனும் ...... உறமேவித்
திக்குநாடிக் கரிய மெய்க்கடாவில் திருகி
திக்க ஆவிக்களவு ...... தெரியாமுன்
சித்தமோவித் துயிலும் அற்றுவாழச் சிறிது
சித்ரபாதக் கமலம் ...... அருள்வாயே
இக்குவேளைக் கருக முக்கண்நாடிக் கனலை
இட்டு யோகத்தமரும் ...... இறையோர்முன்
எச்சராதிக்கும்உற நிற்குமாயற்கு முதல்
எட்டொணா வித்தைதனை ...... இனிதீவாய்
பக்க ஆர்வத்துடன்உள் நெக்கு நாடிப் பரவு
பத்தர் பாடற்குருகு ...... முருகோனே
பக்கம் யானைத் திருவொடொக்க வாழக் குறவர்
பச்சை மானுக்கினிய ...... பெருமாளே
திருப்பாடல் 277:
தனனத் தனதன தனனத் தனதன
தனனத் தனதன ...... தனதான
மதனிக்கது கொடு பதுமப் புதுமலர்
மலையப் படவிடு ...... வலியாலே
வனமுற்றின வளை இனநித்தில மலை
வலையத்துகள் வளை ...... கடலாலே
விதனப்படு மதி வதனக் கொடியற
வெருவிப் பரிமள ...... அணைமீதே
மெலியக் கலைதலை குலையத் தகுமினி
விரையக் குரஅலர் ...... தரவேணும்
புதனைச் சதுமுக விதிஅச்சுதன் எதிர்
புனைவித்தவர் தொழு ...... கழல்வீரா
பொருகைச் சரிவரி பெருகச் செறிவுறு
புனமெய்க் குறமகள் ...... மணவாளா
முதுநற் சரவணம் அதனிற் சததள
முளரிப் பதிதனில் ...... உறைவோனே
முதுமைக் கடலடர் அசுரப் படைகெட
முடுகிப் பொரவல ...... பெருமாளே
திருப்பாடல் 278:
தனதன தனான தான தனதன தனான தான
தனதன தனான தான ...... தனதான
மதிதனை இலாத பாவி குருநெறி இலாத கோபி
மனநிலை நிலாத பேயன் ...... அவமாயை
வகையது விடாத பேடி தவநினைவிலாத மோடி
வரும்வகை இதேது காயம் ...... எனநாடும்
விதியிலி பொலாத லோபி சபைதனில் வராத கோழை
வினையிகல் விடாத கூளன் ...... எனைநீயும்
மிகுபரம் அதான ஞான நெறிதனை விசாரமாக
மிகும்உனது ரூப தானம் ...... அருள்வாயே
எதிர்வரும் உதார சூரன் இருபிளவதாக வேலை
இயலொடு கடாவு தீர ...... குமரேசா
இனியசொல் மறாத சீலர் கருவழி வராமல் நாளும்
இளமையது தானுமாக ...... நினைவோனே
நதியுடன் அராவு பூணு பரமர்குரு நாதனான
நடைபெறு கடூரமான ...... மயில்வீரா
நகைமுக விநோத ஞான குறமினுடனே குலாவு
நவமணி உலாவு மார்ப ...... பெருமாளே
திருப்பாடல் 279:
தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத்
தனந்தாத் தனத்தம் ...... தனதான
மலந்தோற் சலந்தேற்றெலும்பாற் !கலந்தீட்
டிடுங் கூட்டினில் தங்கிடுமாய
மயங்காத் தியங்காப் பயங் கோட்டிடுங் !காற்
றுடன்போக்குறத் தந்தையு மாதும்
குலந் தாய்க்குடம்பாற் பிறந்தேற்றிடுங் !கோத்
தடங் கூப்பிடத் தம் ...... புவியாவும்
குலைந்தார்ப்பெழுங் காட்டிலந்தாட்கள் அன்பாற்
குணங்காத்துனைக் கும்பிட ஆளாய்
தலந்தாள் தொடண்டாத் தளைந்தார்க்கிளங்காத்
தடந்தாள் புடைத்தன்பினர் வாழத்
தருங்கூத்தரும் பார்த்துகந்தேத்திடஞ் !சாத்
திரஞ் சாற்றி நிற்கும் ...... பெருவாழ்வே
அலைந்தாற்றெழுங் கோச் சலந்தீக் கலந்தாள்
தரம் போச்செனக் கன்றிடும் வேலா
அறங்காத்துறங்காத் திறம் !பார்த்திருந்தோர்க்
கயர்ந்தோர்க்களிக்கும் ...... பெருமாளே
திருப்பாடல் 280:
தனதான தான தந்த தனதான தான தந்த
தனதான தான தந்த ...... தனதான
மனநூறு கோடி துன்ப நொடிமீதிலே நினைந்து
மதனூடலே முயங்கி ...... அதிரூப
மடமாதர் ஆசை கொண்டு புவிமீதிலே மயங்கி
மதிசீரெலாம் அழிந்து ...... கொடிதான
வினைமூடியே திரிந்து புவிமீதிலே உழன்று
விரகால் மெயே தளர்ந்து ...... விடுநாளில்
விசையான தோகை துங்க மயிலேறி ஓடி வந்து
வெளிஞான வீடு தந்து ...... அருள்வாயே
தினைவேடர் காவல் தங்கு மலைகாடெலாம் உழன்று
சிறுபேதை கால்பணிந்த ...... குமரேசா
திரையாழி சேது கண்டு பொரு ராவணேசை வென்ற
திருமால் முராரி தங்கை ...... அருள்பாலா
முனிவோர்கள் தேவர் உம்பர் சிறையாகவே வளைந்த
முதுசூரர் தானை தங்கள் ...... கிளையோடு
முடிகோடி தூளெழுந்து கழுகோடு பாறருந்த
முனைவேலினால் எறிந்த ...... பெருமாளே
திருப்பாடல் 281:
தானதன தனத்ததந்த, தானதன தனத்ததந்த
தானதன தனத்ததந்த ...... தனதான
மாதர் மயல்தனிற் கலந்து காம பனியெனப் புகுந்து
மாடஇயலெனச் சுழன்று ...... கருவூறி
மாறிபல எனச்சுமந்து தேனுகுடம் எனத்திரண்டு
மாதம் இதுவெனத் தளர்ந்து ...... வெளியாகி
வேத புவிதனிற் கழன்று ஏனமென எத்தவழ்ந்து
வீறுமணிகளைப் புனைந்து ...... நடைமேலாய்
வேணவிதம் எனத்திரிந்து நாறு புழுகுடல்திமிர்ந்து
வேசிவலை தனிற்கலந்து ...... மடிவேனோ
ஆதிசரண் எனக்கயங் குலாவ முதலையைக் கிடங்கில்
ஆரவுடல் தனைப்பிளந்த ...... அரிநேமி
ஆமை கயல் எனச் செயங்கொள் கோலகுறள் !அரித்தடங்கை
யான அரவணைச் சயந்தன் ...... மருகோனே
சோதி உருவெனத் திரண்டு கோலஅருணையிற் கலந்த
சோமன் அணிகுடிற் சிலம்பன் ...... அருள்பாலா
தோகை மயிலெனச் சிறந்த ரூபிகுற மகட்கிரங்கி
தோள்கள் இறுகிடப் புணர்ந்த ...... பெருமாளே
திருப்பாடல் 282:
தத்ததன தானனத் தத்ததன தானனத்
தத்ததன தானனத் ...... தனதான
முத்துமணி ஆரமொய்த்திட்ட இரு கோடு!முற்
பட்டகரி போலும்அத் ...... தனமாதர்
முற்று மதியார் முகத்துற்ற முனை வேலுறப்
பட்டுமுகில் போல் மனத்திருள் மூடிச்
சுத்தமதி போய்வினைத் துட்டன் அவனாய்மனத்
துக்கம்உறவே மிகச் ...... சுழலாதே
சொற்கள்பல நாவினில் தொட்டுன் இரு தாள்தொழச்
சொற்கமல வாழ்வு சற்றருள்வாயே
கொத்து முடியான பத்தற்று விழவே !குறிப்
புற்றஅதி கோபன் அச்சுதன் மாயன்
கொற்ற மருகா குறக் கொச்சைமற !மாதினுக்
கிச்சை மொழி கூறுநற் ...... குமரேசா
பத்தியுடனே நினைத்தெத்தும் அடியார் வினைப்
பற்றுவிடு மாமறைப் ...... பொருளானாய்
பத்திவர ஞானசொற் கற்றவர்கள் பாடுநற்
பக்ஷபத தேவர்மெய்ப் ...... பெருமாளே
திருப்பாடல் 283:
தனதன தானத் தானன தனதன தானத் தானன
தனதன தானத் தானன ...... தனதான
முருக மயூரச் சேவக சரவண ஏனற் பூதரி
முகுள படீரக் கோமள ...... முலைமீதே
முழுகிய காதற் காமுக பதிபசு பாசத் தீர்வினை
முதிய புராரிக்கோதிய ...... குருவே!என்
றுருகியும் ஆடிப் பாடியும் இருகழல் நாடிச் சூடியும்
உணர்வினோடூடிக் கூடியும் ...... !வழிபாடுற்
றுலகினொர் ஆசைப் பாடற நிலைபெறு ஞானத்தால்இனி
உனதடியாரைச் சேர்வதும் ...... ஒருநாளே
மருகன் எனாமற் சூழ்கொலை கருதிய மாமப் பாதகன்
வரவிடு மாயப் பேய்முலை ...... பருகாமேல்
வருமத யானைக் கோடவை திருகி விளாவிற் காய்கனி
மதுகையில் வீழச் சாடிய ...... சதமா!புட்
பொருதிரு கோரப் பாரிய மருதிடை போயப் போதொரு
சகடுதையாமற் போர்செய்து ...... விளையாடிப்
பொதுவியர் சேரிக்கே வளர் புயல் மருகா வஜ்ராயுத
புரமதில் மாபுத்தேளிர்கள் ...... பெருமாளே
திருப்பாடல் 284:
தானா தனதன தானா தனதன
தானா தனதன ...... தனதான
மூலா நிலமதின் மேலே மனதுறு
மோகாடவி சுடர் ...... தனைநாடி
மோனா நிலைதனை நானா வகையிலும்
ஓதா நெறிமுறை ...... முதல்கூறும்
லீலா விதம் உனதாலே கதிபெற
நேமா ரகசிய ...... உபதேசம்
நீடூழிதனிலை வாடா மணியொளி
நீதா பலமது ...... தருவாயே
நாலா ருசியமுதாலே திருமறை
நாலாயது செப ...... மணிமாலை
நாடாய் தவரிடர் கேடா அரிகரி
நாராயணர்திரு ...... மருகோனே
சூலாதிபர் சிவ ஞானார் யமனுதை
காலார் தரவரு ...... குருநாதா
தோதீ திகுதிகு தீதீ செகசெக
சோதீ நடமிடு ...... பெருமாளே
திருப்பாடல் 285:
தனதனந் தனந்த தனதனந் தனந்த
தனதனந் தனந்த ...... தனதான
வரிபரந்திரண்டு நயனமுஞ் சிவந்து
வதன மண்டலங்கள் ...... குறுவேர்வாய்
மணி சிலம்பலம்ப அளகமுங் குலைந்து
வசம் அழிந்திழிந்து ...... மயல்கூர
இருதனங் குலுங்க இடை துவண்டனுங்க
இனியதொண்டைஉண்டு ...... மடவார்தோள்
இதமுடன் புணர்ந்து மதிமயங்கினும்பொன்
இலகு நின்பதங்கள் ...... மறவேனே
விரிபரந்தியங்கும் உததியுங் கலங்க
விடமினும் பிறந்ததென வானோர்
வெருவி நெஞ்சம்அஞ்சி உரனொடுந் தயங்கி
விரைபதம் பணிந்து ...... முறையோ!என்
றுரை மறந்துணங்க அயில்தொடும் ப்ரசண்ட
உயர்தலங் குலுங்க ...... வருதோகை
ஒருபெருஞ் சிகண்டி மயில் அமர்ந்திலங்கி
உலகமும் புரந்த ...... பெருமாளே
திருப்பாடல் 286:
தனதன தான தான, தனதன தான தான
தனதன தான தான ...... தனதான
வரிவிழி பூசலாட இருகுழை ஊசலாட
வளர்முலை தானுமாட ...... வளையாட
மணிவட மாலையாட முருகவிழ் ஓதியாட
மதுரமுதூறி வீழ ...... அநுராகம்
இருவரும் ஏக போகம் ஒருவர்தம் ஆகமாக
இதமொடு கூடி மாயை ...... படுபோதும்
இருகரம் ஆறுமாறும் அறுமுக நீப மார்பும்
இருகழல் தானு நானும் ...... மறவேனே
திருநடமாடு காளி பயிரவி மோடி சூலி
திரிபுர நீறதாக ...... அனல்மோதுஞ்
சிவை கயிலாசவாசி மலைமகள் நாரி பாரி
திருமுலை ஆயிதாயி ...... அருள்பாலா
குருபர நாதனாகி அரனொரு காதிலோது
குணநிதி ஆசை நேச ...... முருகோனே
குறமகள்ஆர பார முகிழ்முலை மீது தாது
குலவிய மாலை மேவு ...... பெருமாளே
திருப்பாடல் 287:
தனதனன தனதனன தனதனன தனதனன
தத்தத் தனந்தனம் தத்தத் தனந்தனம் ...... தந்ததான
விழையு மனிதரையு முநிவரையும் அவருயிர் துணிய
வெட்டிப் பிளந்துளம் பிட்டுப் பறிந்திடுஞ் ...... செங்கண்வேலும்
விரையளக முகிலுமிள நகையு ம்ருகமத கனவி
சித்ரத் தனங்களுந் தித்தித்த தொண்டையும் ...... புண்டரீகச்
சுழிமடுவும் இடையும் அழகிய மகளிர் தருகலவி
சுட்டித் திரிந்திஙன் தட்டுப் படுங்கொடும் ...... பங்கவாழ்வுந்
தொலைவில் பிறவியும் அகல ஒருமவுன பரமசுக
சுத்தப் பெரும்பதஞ் சித்திக்க அன்புடன் ...... சிந்தியாதோ
எழுதரிய அறுமுகமு மணிநுதலும் !வயிரமிடை
யிட்டுச் சமைந்தசெஞ் சுட்டிக் கலன்களுந் ...... துங்கநீள்!பன்
னிருகருணை விழிமலரும் இலகுபதினிரு குழையும்
ரத்நக் குதம்பையும் பத்மக் கரங்களுஞ் ...... செம்பொனூலும்
மொழிபுகழும் உடைமணியும் அரைவடமும் அடியிணையும்
முத்தச் சதங்கையுஞ் சித்ரச் சிகண்டியுஞ் ...... செங்கைவேலும்
முழுதும் அழகியகுமர கிரிகுமரி உடனுருகு
முக்கட் சிவன்பெருஞ் சற்புத்ர உம்பர்தந் ...... தம்பிரானே
திருப்பாடல் 288:
தானதன தாத்த தானதன தாத்த
தானதன தாத்த ...... தனதான
வீணையிசை கோட்டி ஆலமிடறூட்டு
வீரமுனை ஈட்டி ...... விழியார்தம்
வேதனையில் நாட்டம் ஆகியிடர் பாட்டில்
வீழுமயல் தீட்டி ...... உழலாதே
ஆணியுள வீட்டை மேவியுள மாட்டை
ஆவலுடன் ஈட்டி ...... அழியாதே
ஆவியுறை கூட்டில் ஞானமறை ஊட்டி
ஆனநிலை காட்டி ...... அருள்வாயே
கேணியுற வேட்ட ஞானநெறி வேட்டர்
கேள்சுருதி நாட்டில் ...... உறைவோனே
கீதஇசை கூட்டி வேதமொழி சூட்டு
கீரரியல் கேட்ட ...... க்ருபைவேளே
சேணினுயர் காட்டில் வாழு மறவாட்டி
சீதஇரு கோட்டில் ...... அணைவோனே
சீறவுணர் நாட்டில் ஆரஅழல் மூட்டி
தேவர்சிறை மீட்ட ...... பெருமாளே
திருப்பாடல் 289:
தானனா தத்ததன தானனா தத்ததன
தானனா தத்ததன ...... தனதான
வேலைவாளைக் கொடிய ஆலகாலத்தை மதன்
வீசுபாணத்தை நிகர் ...... எனலாகும்
வேதை சாதித்த விழி மாதர் ஆபத்தில்!விளை
யாடி மோகித் திரியும் ...... வெகுரூப
கோலகாலத்தை விடலாகி மாறக் !குணவி
காரம் ஓடத்தெளிய ...... அரிதான
கூறொணா தற்பரம ஞான ரூபத்தின்வழி
கூடலாகப் பெருமை ...... தருவாயே
வாலிமார்பைத் துணிய ஏழ்மரா இற்றுவிழ
வாளிபோடக் கருது ...... மநுராமன்
வானுலோகத்தில் அமரேசம் ஓலிக்கவளை
ஊதிமோகித்து விழ ...... அருள்கூரும்
நீலமேனிக்கு மருகா உதாரத்துவரு
நீசர்வாழ்வைக் களையும்......இளையோனே
நேசமாகக் குறவர் தோகைமானைப் புணரு
நீபதோள் ஒப்பரிய ...... பெருமாளே
திருப்பாடல் 290:
தத்ததன தானத் ...... தனதான
இத்தரணி மீதிற் ...... பிறவாதே
எத்தரொடு கூடிக் ...... கலவாதே
முத்தமிழை ஓதித் ...... தளராதே
முத்தி அடியேனுக்கருள்வாயே
தத்துவ மெய்ஞ் ஞானக் ...... குருநாதா
சத்த சொருபா புத்தமுதோனே
நித்திய க்ருதா நற் ...... பெருவாழ்வே
நிர்த்தஜெக ஜோதிப் ...... பெருமாளே
திருப்பாடல் 291:
தந்தந்த தனத்தன தாத்தன ...... தனதான
என்பந்த வினைத்தொடர் போக்கி விசையமாகி
இன்பந்தனை உற்று மகாப்ரியம் ...... அதுவாகி
அன்புந்திய பொற்கிணி பாற்கடல் ...... அமுதான
அந்தந்தனில் இச்சைகொளாற் பதம் ...... அருள்வாயே
முன்புந்தி நினைத்துருவாற் சிறு ...... வடிவாகி
முன்திந்தியெனப் பரதாத்துடன் ...... நடமாடித்
தம்பந்தம் அறத்தவ நோற்பவர் ...... குறைதீரச்
சம்பந்தன் எனத்தமிழ் தேக்கிய ...... பெருமாளே
திருப்பாடல் 292:
தனத்தத் தானத் ...... தனதான
கருப்பற்றூறிப் ...... பிறவாதே
கனக்கப் பாடுற்றுழலாதே
திருப்பொற் பாதத்தநுபூதி
சிறக்கப் பாலித்தருள்வாயே
பரப்பற்றாருக்குரியோனே
பரத்தப்பாலுக்கணியோனே
திருக்கைச் சேவற் ...... கொடியோனே
செகத்திற் சோதிப் ...... பெருமாளே
திருப்பாடல் 293:
தனத்த தத்தத் தனத்த தத்தத் தனத்த ...... தனதான
கருப்பையிற் சுக்கிலத்துலைத்துற்பவித்து ...... மறுகாதே
கபட்டசட்டர்க்கிதத்த சித்ரத் தமிழ்க்கள் ...... உரையாதே
விருப்பமுற்றுத் துதித்தெனைப் பற்றெனக் கருதுநீயே
வெளிப்படப் பற்றிடப் படுத்தத் தருக்கி ...... மகிழ்வோனே
பருப்பதத்தைத் தொளைத்த சத்திப் படைச் சமரவேளே
பணிக்குலத்தைக் கவர்ப் பதத்துக்களித்த ...... மயிலோனே
செருப்புறத்துச் சினத்தை முற்றப் பரப்பும் ...... இசையோனே
தினைப்புனத்துக் குறத்தியைக் கைப் பிடித்த ...... பெருமாளே
திருப்பாடல் 294:
தனதனன தானத் ...... தனதான
கொடியமத வேள்கைக் ...... கணையாலே
குரைகண் நெடுநீலக் ...... கடலாலே
நெடியபுகழ் சோலைக் ...... குயிலாலே
நிலைமைகெடு மானைத் ...... தழுவாயே
கடியரவு பூணர்க்கினியோனே
கலைகள்தெரி மாமெய்ப் ...... புலவோனே
அடியவர்கள் நேசத்துறை வேலா
அறுமுக விநோதப் ...... பெருமாளே
திருப்பாடல் 295:
தனன தத்தன தாத்தன ...... தனதான
சமய பத்தி வ்ருதாத்தனை ...... நினையாதே
சரண பத்ம சிவார்ச்சனை ...... தனைநாடி
அமைய சற்குரு சாத்திர ...... மொழிநூலால்
அருள் எனக்கினிமேல் துணை ...... தருவாயே
உமைமுலைத்தரு பாற்கொடு ...... அருள்கூறி
உரிய மெய்த்தவமாக்கி நல் உபதேசத்
தமிழ்தனைக் கரை காட்டிய ...... திறலோனே
சமணரைக் கழுவேற்றிய ...... பெருமாளே
திருப்பாடல் 296:
தனதன தாத்தனத் ...... தனதான
சருவிய சாத்திரத் ...... திரளான
சடுதிகழ் ஆஸ்பதத்தமையாத
அருமறையாற் பெறற்கரிதாய
அனிதய வார்த்தையைப் ...... பெறுவேனோ
நிருதரை மூக்கறுத்தெழுபார
நெடுதிரை ஆர்ப்பெழப் ...... பொருதோனே
பொருள் அடியாற்பெறக் ...... கவிபாடும்
புலவர் உசாத்துணைப் ...... பெருமாளே
திருப்பாடல் 297:
தனத்தத் தானன ...... தனதான
சினத்துச் சீறிய ...... வழிகாணச்
சிரித்துப் பேசியு ...... மயல்பூண
கனத்துப் போர்செயு ...... முலைதோணக்
கலைக்குட் பாதியு ...... மறைவாக
மனத்துக்காறுதல் ...... வருமாறு
மலைப்பப் பேணியு ...... மிகவாய
தனத்தைச் சூறைகொள் ...... மடவார்தம்
சதிக்குப் போம்வழி ...... தவிர்வேனோ
தெனத்தத் தாதென ...... எனவேபண்
திருத்தத்தோடளி ...... இசைபாடும்
புனத்துக் காவல்கொள் ...... குறமாதின்
புணர்ச்சிக்கேஒரு ...... வழிதேடி
இனத்துக் காவலர் ...... அறியாமல்
இணக்கித் தோகையை ...... மகிழ்வோய்!என்
றெனக்குத் தாளிணை ...... அருள்வாய்சூர்
இறக்கப் போர்செய்த ...... பெருமாளே
திருப்பாடல் 298:
தானத் தானன ...... தந்ததான
தீதுற்றேஎழு ...... திங்களாலே
தீயைத் தூவிய ...... தென்றலாலே
போதுற்றாடும் அநங்கனாலே
போதப் பேதை நலங்கலாமோ
வேதத்தோனை முனிந்த கோவே
வேடப் பாவை விரும்பு மார்பா
ஓதச் சூதம் ...... எறிந்த வேலா
ஊமைத் தேவர்கள் ...... தம்பிரானே
திருப்பாடல் 299:
தய்யதன தானத் ...... தனதான
துள்ளுமத வேள்கைக் ...... கணையாலே
தொல்லைநெடு நீலக் ...... கடலாலே
மெள்ளவரு சோலைக் ...... குயிலாலே
மெய்யுருகு மானைத் ...... தழுவாயே
தெள்ளுதமிழ் பாடத் ...... தெளிவோனே
செய்ய குமரேசத் ...... திறலோனே
வள்ளல் தொழு ஞானக் ...... கழலோனே
வள்ளி மணவாளப் ...... பெருமாளே
திருப்பாடல் 300:
தானதனத் ...... தனதான
தேனியல்சொற் ...... கணிமாதர்
சேவைதனைக் ...... கருதாதே
யான் எனதற்றிடு போதம்
யான் அறிதற்கருள்வாயே
வானவருக்கரசான
வாசவனுக்கினியோனே
ஆனைமுகற்கிளையோனே
ஆறுமுகப் ...... பெருமாளே
No comments:
Post a Comment