(பொதுத் திருப்புகழ் திருப்பாடல்கள்)
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தந்த தானன தானான தந்தன
தந்த தானன தானான தந்தன
தந்த தானன தானான தந்தன ...... தனதான
தந்த தானன தானான தந்தன
தந்த தானன தானான தந்தன ...... தனதான
கும்பகோணமொடாரூர் சிதம்பரம்
உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு
கொன்றை வேணியர் மாயூரம்அம்பெறு ...... சிவகாசி
கொந்துலாவிய ராமேசுரந்தனி
வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்
கும்பு கூடிய வேளூர் பரங்கிரி ...... தனில்வாழ்வே
செம்புகேசுர மாடானை இன்புறு
செந்தில் ஏடகம் வாழ்சோலையங்கிரி
தென்றல் மாகிரி நாடாள வந்தவ ...... செகநாதஞ்
செஞ்சொல் ஏரக மாஆவினன்குடி
குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல்
செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் ...... வருதேவே
கம்பை மாவடி மீதேய சுந்தர
கம்புலாவிய காவேரி !சங்கமு
கஞ் சிராமலை வாழ்தேவ தந்திர ...... வயலூரா
கந்த மேவிய போரூர் நடம்புரி
தென்சிவாயமு மேயாய் அயகம்படு
கண்டியூர்வரு சாமீ கடம்பணி ...... மணிமார்பா
எம்பிரானொடு வாதாடு மங்கையர்
உம்பர் வாணி பொனீள்மால் சவுந்தரி
எந்த நாள்தொறும் ஏர்பாக நின்றுறு ...... துதியோதும்
இந்திராணிதன் மாதோடு நன்குற
மங்கை மானையு மாலாய் !மணந்துல
கெங்கு மேவிய தேவாலயந்தொறு ...... பெருமாளே
No comments:
Post a Comment