Wednesday, March 15, 2017

அத்திக்கரை:

(பொதுத் திருப்புகழ் திருப்பாடல்கள்)

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 

தத்தத்தன தத்தத் தனதன
     தத்தத்தன தத்தத் தனதன
          தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான

தொக்கைக் கழுவிப் பொற்றகும் உடை
     சுற்றிக்கலன் இட்டுக் கடிதரு
          சொக்குப்புலி அப்பிப் புகழுறு ...... களியாலே

சுத்தத்தைய கற்றிப் பெரியவர்
     சொற்றப்பி அகத்தைப் புரிபுல
          சுற்றத்துடன் உற்றிப் புவியிடை ...... அலையாமல்

முக்குற்றம் அகற்றிப் பலகலை
     கற்றுப்பிழை அற்றுத் தனையுணர்
          முத்தர்க்கடிமைப் பட்டிலகிய ...... அறிவாலே

முத்தித்தவ சுற்றுக் கதியுறு
     சத்தைத்தெரிசித்துக் கரையகல்
          முத்திப் புணரிக்குட் புகவரம் ...... அருள்வாயே

திக்கெட்டும் அடக்கிக் !கடவுள
     ருக்குப்பணி கற்பித்தருளறு
          சித்தத்தொடடுத்துப் படைகொடு ...... பொருசூரர்

செச்சைப்புயம் அற்றுப் புகவொரு
     சத்திப்படை விட்டுச் சுரர்பதி
          சித்தத்துயர் கெட்டுப் பதிபெற ...... அருள்வோனே

அக்கைப்புனை கொச்சைக் குறமகள்
     அச்சத்தை ஒழித்துக் கரிவரும்
          அத்தத்தில் அழைத்துப் பரிவுடன் ...... அணைவோனே

அப்பைப் பிறையைக் கட்டியசடை
     அத்தர்க்கருமைப் புத்திர விரி
          அத்திக்கரை இச்சித்துறைதரு ...... பெருமாளே

No comments:

Post a Comment