Thursday, March 30, 2017

வேல் விருத்தம்:

 (பிற தொகுப்புகள்)

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 

திருப்பாடல் 1:
மகரம்அளறிடை புரள உரக கணபண மவுலி
   மதியும் இரவியும் அலையவே

வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல
   மகிழ்வுபெறும் அறுசிறையவாஞ்

சிகரவரை மனைமறுகுதொறு நுளைய மகளிர்செழு
   செநெல்களொடு தரளம் இடவே

செகசிர பகிரதிமுதல் நதிகள்கதி பெற உததி
   திடர்அடைய நுகரும் வடிவேல்

தகர மிருகமதமென மணமருவு கடகலுழி
   தரு கவுளும் உறுவள் எயிறுந்

தழைசெவியும் நுதல்விழியும் உடையஒரு கடவுள்மகிழ்
   தருதுணைவன் அமரர்குயிலுங்

குகரமலை எயினர்குல மடமயிலும் எனஇருவர்
   குயமொடமர் புரியுமுருகன்

குமரன்அறுமுகன் எதிரும் விருது நிசிசரர்அணிகள்
   குலையவிடு கொடிய வேலே

திருப்பாடல் 2:
வெங்காள கண்டர்கைச் சூலமுந் திருமாயன்
   வெற்றிபெறு சுடர் ஆழியும்

விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங் கல்லி
   வெல்லா எனக்கருதியே

சங்க்ராம நீசயித்தருள் எனத் தேவருஞ்
   சதுர்முகனும் நின்றிரப்பச்

சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
   தனிஆண்மை கொண்ட நெடுவேல்

கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
   கெளமாரி கமலாசனக்

கன்னிநாரணி குமரி த்ரிபுரை பயிரவிஅமலை
   கெளரிகாமாஷி சைவ

சிங்காரி யாமளை பவாநி கார்த்திகைகொற்றி
   த்ரியம்பகி அளித்த செல்வச்

சிறுவன்அறுமுகன் முருகன் நிருதர்கள் குலாந்தகன்
   செம்பொன் திருக்கை வேலே

திருப்பாடல் 3:
வேதாள பூதமொடு காளி காளாத்ரிகளும்
   வெகுளுறு பசாச கணமும்

வெங்கழுகுடன்கொடி பருந்துசெம் புவனத்தில்
   வெம்பசி ஒழிக்க வந்தே

ஆதார கமடமுங் கணபண வியாளமும்
   அடக்கிய தடக்கிரியெலாம்

அலையநடமிடு நெடுந் தானவர் நிணத்தசை
   அருந்திப் புரந்த வைவேல்

தாதார் மலர்ச்சுனைப் பழநிமலை சோலைமலை
   தனிப் பரங்குன்றேரகம்

தணிகை செந்தூர்இடைக்கழி ஆவினன்குடி
   தடங்கடல் இலங்கைஅதனிற்

போதார் பொழிற் கதிர்காமத் தலத்தினைப்
   புகழும்அவரவர் நாவினிற்

புந்தியில் அமர்ந்தவன் கந்தன்முருகன்குகன்
   புங்கவன் செங்கை வேலே

திருப்பாடல் 4:
அண்டர் உலகுஞ்சுழல எண்திசைகளுஞ் சுழல
   அங்கியும் உடன் சுழலவே

அலைகடல்களுஞ் சுழல அவுணர்உயிருஞ் சுழல
   அகிலதலமுஞ் சுழலவே

மண்டல நிறைந்த ரவி சதகோடி மதியுதிர
   மாணப் பிறங்கிஅணியும்

மணிஒலியினிற் சகல தலமு மருளச்சிரம
   வகை வகையினிற் சுழலும் வேல்

தண்டமுடனுங் கொடிய பாசமுடனுங் கரிய
   சந்தமுடனும் பிறைகள் போல்

தந்தமுடனுந் தழலும் வெங்கணுடனும் பகடு
   தன்புறம் வருஞ்சமனை யான்

கண்டுகுலையும் பொழுதில் அஞ்சலென மென்சரண
   கஞ்சம் உதவுங் கருணைவேள்

கந்தன்முருகன் குமரன் வண்குறவர் தம்புதல்வி
   கணவன் அடல் கொண்ட வேலே

திருப்பாடல் 5:
ஆலமாய் அவுணருக்கமரருக்கமுதமாய்
   ஆதவனின் வெம்மைஒளி!மீ

தரிய தவ முநிவருக்கிந்துவின் !தண்ணென்
   றமைந்தன்பருக்கு முற்றா

மூலமாம் வினையறுத்தவர்கள் வெம் பகையினை
   முடித்திந்திரர்க்கும் எட்டா

முடிவில்ஆநந்த நல்கும் பதமளித்தெந்த
   மூதண்டமும் புகழும் வேல்

ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்து
   மின்பணைகள் உமிழு முத்தும்

இனிவாடை மான்மதம் அகிலோடு சந்தனம்
   இலவங்க நறவமாருந்

தால மாமர முதற் பொருள் படைத்திடும் எயினர்
   தரு வநிதை மகிழ்நன் ஐயன்

தனிநடம் புரிசமர முருகன்அறு முகன்குகன்
   சரவணக் குமரன் வேலே

திருப்பாடல் 6:
பந்தாடலிற் கழங் காடலிற் சுடர்ஊசல்
   பாடலினொடாடலின் எலாம்

பழந்தெவ்வர் கட்கம் துணித்திந்திரற்கரசு
   பாலித்த திறல் புகழ்ந்தே

சந்தாரு நாண்மலர்க் குழல் அரம்பையர்களும்
   சசிமங்கை அனையர் தாமுந்

தன்னைஅன்பொடு பாடி ஆடும் ப்ரதாபமும்
   தலைமையும் பெற்ற வைவேல்

மந்தாகிநித் தரங்கச் சடிலருக்கரிய
   மந்த்ர உபதேச நல்கும்

வரதேசிகன் கிஞ்சுகச் சிகாலங்கார
   வாரணக் கொடி உயர்த்தோன்

கொந்தார் மலர்க்கடம்புஞ் செச்சை மாலையுங்
   குவளையுஞ் செங்காந்தளுங்

கூதாள மலருந் தொடுத்தணியு மார்பினன்
   கோலத் திருக்கை வேலே

திருப்பாடல் 7:
அண்டங்கள் ஒருகோடி ஆயினுங் குலகிரி
   அநந்தம் ஆயினு மேவினால்

அடையஉருவிப் புறம் போவதல்லது தங்கல்
   அறியாது சூரனுடலைக்

கண்டம் படப்பொருது காலனுங் குலைவுறுங்
   கடியகொலை புரியும் அதுசெங்

கநகாசலத்தைக் கடைந்து முனையிட்டுக்
   கடுக்கின்ற துங்க நெடுவேல்

தண்டந் தநுத்திகிரி சங்கு கட்கங் கொண்ட
   தானவாந்தகன் மாயவன்

தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பஃறலைத்
   தமனியச் சுடிகையின் மேல்

வண்டொன்று கமலத்து மங்கையுங் கடல்ஆடை
   மங்கையும் பதம்வருடவே

மதுமலர்க் கண்துயில் முகுந்தன்மருகன் குகன்
   வாகைத் திருக்கை வேலே

திருப்பாடல் 8:
மாமுதல் தடிந்துதண் மல்கு கிரியூடு போய்
   வலிய தானவர் மார்பிடம்

வழிகண்டு கமல பவனத்தனைச் சிறையிட்டு
   மகவான் தனைச்சிறை !விடுத்

தோம இருடித்தலைவர் ஆசிபெற்றுயர் வானில்
   உம்பர்சொல் துதிபெற்று நா

உடைய கீரன் தனது பாடல் பெற்றுலகுதனில்
   ஒப்பில்புகழ் பெற்ற வைவேல்

சோமகலச ப்ரபாலங்கார தரஜடா
   சூடி காலாந்த காலர்

துங்கரக்ஷக த்ரோண கட்க குலிசஞ்சூல
   துரக கேசரமாம்பரச்

சேம வடவாம்புயப் பரண சங்காபரண
   திகம்பர த்ரியம்பக மகா

தேவ நந்தன கஜாநந சகோதர குகன்
   செம்பொன் திருக்கை வேலே

திருப்பாடல் 9:
தேடுதற்கரிதான நவமணி அழுத்தியிடு
   செங்கரனை அமுதம் வாய்கொள்

செயமளித்தருள் எனக்கென உவப்பொடுவந்து
   சேவடி பிடித்ததெனவும்

நீடுமைக் கடல் சுட்டதிற்கடைந்தெழு கடலும்
   நீஎமைக் காக்க எனவும்

நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் காவெனவும்
   நிகழ்கின்ற துங்கநெடுவேல்

ஆடுமைக் கணபணக் கதிர்முடிப் புடை!எயிற்
   றடலெரிக் கொடிய உக்ர

அழல்விழிப் படுகொலைக் கடையகட் !செவியினுக்
   கரசினைத் தனியெடுத்தே

சாடுமைப் புயலெனப் பசுநிறச் சிகரியில் 
   தாய் திமித்துடன் நடிக்குஞ்

சமரமயில் வாகனன் அமரர்தொழு நாயகன்
   சண்முகன் தன்கை வேலே

திருப்பாடல் 10:
வலாரிஅலல்ஆகுலம் இலாதகலவே கரிய
   மாலறியும் நாலு மறைநூல்

வலான் அலைவிலான் நசிவிலான் மலைவிலான்இவர்
   மநோலய உலாசம் உறவே

உலாவரு கலோல மகராலய சலங்களும்
   உலோகநிலை நீர்நிலையிலா

வொலாவொலி நிசாசரர் உலோகம்அதெலாம்அழல்
   உலாவிய நிலாவு கொலைவேல்

சிலாவட கலா விநொதவா சிலிமுகா !விலொச
   னா சின சிலாதணி விலா

சிலாமலர் எலாமதிய மோதமதி சேலொழிய
   சேவக சராப முகிலாம்

விலாச கலியாண கலை சேரபசு மேலைமுலை
   மேவிய விலாச அகலன்

விலாழிஇனிலாழிஅகல் வானில்அனல் ஆரவிடு
   வேழம் இளைஞன் கைவேலே

No comments:

Post a Comment