(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
உலகில்அநுதினமும் வரும் அடியவர்கள் இடரகல
உரியபர கதி தெரியவே
உரகமணி எனஉழலும் இருவினையும் முறைபடவும்
இருள்கள்மிடி கெட அருளியே
கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு
கடினமுற வரில் அவைகளைக்
கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்து!சிற
கைக்கொட்டி நின்றாடுமாம்
மலைகள்நெறு நெறுநெறென அலைகள் சுவறிட அசுரர்
மடியஅயில் கடவு முருகன்
மகுடவட கிரியலைய மலையுமுலை வநிதைகுற
வரிசையின மகள்அவளுடன்
சிலைகுலிசன் மகள்மருவு புயன்இலகு சரவணச்
சிறுவன்அயன் வெருவ விரகிற்
சிரமிசையில் வெகு சினமொடடி உதவும் அறுமுகவன்
சேவல் திருத்துவசமே
திருப்பாடல் 2:
எரியனைய வியனவிரம் உளகழுது பலபிரம
ராட்சதர்கள் மிண்டுகள் செயும்
ஏவற் பசாசுநனி பேயிற் பசாசுகொலை
ஈனப் பசாசுகளையும்
கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின்உயர்
ககனமுற நிமிரும் வெங்கட்
கடிகளையும் மடமடென மறுகிஅலறிட!உகிர்க்
கரத்தடர்த்துக் கொத்துமாம்
தரணிபல இடமென் வன மதகரிகள் தறிகள்பணி
சமணர் கிடுகிடென நடனம்
தண்டைகள் சிலம்புகள் கலின்கலின் எனச்சிறிய
சரணஅழ கொடுபுரியும்வேள்
திரிபுரமதெரிய நகை புரியும்இறையவன் மறைகள்
தெரியும்அரன் உதவு குமரன்
திமிர தினகர முருக சரவண பவன்குகன்
சேவல் திருத்துவசமே
திருப்பாடல் 3:
கரிமுரட்டடி வலைக் கயிறெடுத்தெயிறு !பற்
களை இறுக்கியும் முறைத்துக்
கலகமிட்டி யமன்முற் கரமுறத் துடரும்அக்
காலத்தில் வேலு மயிலும்
குருபரக் குகனும்அப் பொழுதில் நட்புடன்வரக்
குரல்ஒலித்தடியர் இடரைக்
குலைத்தலறு மூக்கிற் சினப்பேய்களைக் கொத்தி
வட்டத்தில் முட்ட வருமாம்
அரியகொற்கையன் உடற் கருகும் வெப்பகையை !உற்
பனம் உறைத்தத மிகவும்!ஏ
வமணரைக் கழுவில் வைத்தவரு மெய்ப் பொடி!தரித்
தவனி மெய்த்திட அருளதார்
சிரபுரத்தவதரித்த அமுதத் தினமணிச்
சிவிகை பெற்றினிய தமிழைச்
சிவன் நயப்புற விரித்துரை செய் விற்பனன்இகற்
சேவல் திருத்துவசமே
திருப்பாடல் 4:
அச்சப்படக் குரல் முழக்கிப் பகட்டி!அல
றிக் கொட்டமிட்டமரிடும்
அற்பக் குறப்பலிகள் வெட்டுக்கள் பட்டுகடி
அறுகுழைகளைக் கொத்தியே
பிச்சுச் சினத்துதறி எட்டுத்திசைப் பலிகள்
இட்டுக் கொதித்து விறலே
பெற்றுச் சுடர்ச்சிறகு தட்டிக் குதித்தியல்
பெறக் கொக்கரித்து வருமாம்
பொய்ச்சித்திரப் பலவும் உட்கத் திரைச்சலதி
பொற்றைக் கறுத்தயில் விடும்
புத்தி ப்ரியத்தன் வெகுவித்தைக் குணக்கடல்
புகழ்ச்செட்டி சுப்ரமணியன்
செச்சைப் புயத்தன் நவரத்ன க்ரிடத்தன் மொழி
தித்திக்கு முத்தமிழினைத்
தெரியவரு பொதிகைமலை முநிவர்க்குரைத்தவன்
சேவல் திருத்துவசமே
திருப்பாடல் 5:
தானாய் இடும்புசெயு மோகினி இடாகினி
தரித்த வேதாள பூதம்
சருவ சூனியமும் அங்கிரியினால் உதறித்
தடிந்து சந்தோடம் உறவே
கோனாகி மகவானும் வானாள வானாடர்
குலவுசிறை மீளஅட்ட
குலகிரிகள் அசுரர்கிளை பொடியாக வெஞ்சிறைகள்
கொட்டிஎட்டிக் கூவுமாம்
மானாகம் அக்கறுகு மானுடையன் நிர்த்தமிடு
மாதேவன் நற்குருபரன்
வானீரம் அவனியழல் காலாய் நவக்கிரகம்
வாழ்நாள் அனைத்தும் அவனாம்
சேனாபதித் தலைவன் வேதாவினைச் சிறைசெய்
தேவாதி கட்கரசு கள்
தேனான மைக்கடலின் மீனானவற்கினியன்
சேவல் திருத்துவசமே
திருப்பாடல் 6:
பங்கமாகிய விட புயங்கமா படமது
பறித்துச் சிவத்தருந்திப்
பகிரண்ட முழுதும் பறந்து நிர்த்தங்கள் புரி
பச்சைக் கலாப மயிலைத்
துங்கமாய் அன்புற்று வன்புற்றடர்ந்து வரு
துடரும் பிரேத பூதத்
தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும்
துண்டப் படக் கொத்துமாம்
மங்கை யாமளை குமரி கங்கை மாலினி கவுரி
வஞ்சிநான்முகி வராகி
மலையரையன் உதவமலை திருமுலையில் ஒழுகுபால்
மகிழ அமுதுண்ட பாலன்
செங்கணன் மதலையிடம் இங்குளான் என்னு !நர
சிங்கமாய் இரணியனுடல்
சிந்தஉகிரிற்கொடு பிளந்தமால் மருமகன்
சேவல் திருத்துவசமே
திருப்பாடல் 7:
வீறான காரிகதி முன்னோடி பின்னோடி
வெங்கட் குறும்புகள் தரும்
விடுபேய்களே கழுவன் கொலைசாவு கொள்ளிவாய்
வெம்பேய்களைத் துரத்திப்
பேறான சரவண பவா என்னு மந்திரம்
பேசி உச்சாடனத்தாற்
பிடர்பிடித்துக் கொத்தி நகநுதியினால் உறப்
பிய்ச்சுக் களித்தாடுமாம்
மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம்
மகோதரம் பெருவியாதி
வாதபித்தஞ் சிலேற்பனங் குட்ட முதலான
வல்ல பிணிகளை மாற்றியே
சீறாத ஓராறு திருமுக மலர்ந்தடியர்
சித்தத்திருக்கு முருகன்
சிலைகள் உருவிட அயிலைவிடு குமர குருபரன்
சேவல் திருத்துவசமே
திருப்பாடல் 8:
வந்தார்ப்பரிக்கும் அம் மிண்டுவகை தண்டதரன்
வலிய தூதுவர்ப் பில்லி பேய்
வஞ்சினாற் பேதுற மகாபூதம் அஞ்சிட
வாயினும் காலினாலும்
பந்தாடியே மிதித்துக் கொட்டி வடவைசெம்
பவளமாகதிகாசமாப்
பசுஞ்சிறைத் தலமிசைத் தனியயிற் குமரனைப்
பார்த்தன்புறக் கூவுமாம்
முந்தாகமப் பலகை சங்காத மத்தர்தொழ
முன்பேறு முத்தி முருகன்
முதுகானகத்தெயினர் பண்டோடயிற் கணை
முனிந்தே தொடுத்த சிறுவன்
சிந்தா குலத்தையடர் கந்தா எனப்பரவு
சித்தர்க்கிரங்கறுமுகன்
செயவெற்றி வேள்புநிதன் நளினத்தன்முடி குற்றி
சேவல் திருத்துவசமே
திருப்பாடல் 9:
உருவாய் எவர்க்கு நினைவரிதாய் அனைத்துலகும்
உளதாய் உயிர்க்குயிரதாய்
உணர்வாய் விரிப்பரிய உரைதேர் பரப்பிரம
ஒளியாய் அருட்பொருளதாய்
வரும் ஈசனைக் களப முகனாதரித்திசையை
வலமாய் மதிக்க வருமுன்
வளர்முருகனைக் கொண்டு தரணிவலம் வந்தான்முன்
வைகுமயிலைப் புகழுமாம்
குருமா மணித்திரள் கொழிக்கும் புனற்கடக்
குன்றுதோறாடல் பழனம்
குழவுபழமுதிர் சோலை ஆவினன்குடி பரங்
குன்றிடம் திருவேரகம்
திரையாழி முத்தைத் தரங்கக்கை !சிந்தித்
தெறித்திடுஞ் செந்தில் நகர்வாழ்
திடமுடைய அடியர்தொழு பழையவன் குலவுற்ற
சேவல் திருத்துவசமே
திருப்பாடல் 10:
மகரசல நிதிசுவற உரகபதி முடிபதற
மலைகள்கிடு கிடுகிடெனவே
மகுடகுட வடசிகரி முகடுபட படபடென
மதகரிகள் உயிர்சிதறவே
ககனமுதல் அண்டங்கள் கண்ட துண்டப்படக்
கர்ச்சித்திரைத்தலறியே
காரையாழிந் நகரர் மாரைப் பிளந்து!சிற
கைக் கொட்டி நின்றாடுமாம்
சுகவிமலை அமலைபரை இமையவரை தருகுமரி
துடியிடைஅனகை அசலையாள்
சுதன் முருகன் மதுரமொழி உழைவநிதை
இபவநிதை துணைவன் எனதிதய நிலையோன்
திகுடதிகு டதிதிகுட தகுடதித குடதிகுட
செக்கண செகக்கணஎனத்
திருநடனம் இடுமயிலில் வருகுமர குருபரன்
சேவல் திருத்துவசமே
திருப்பாடல் 11:
பூவிலியன் வாசவன் முராரிமுநிவோர் அமரர்
பூசனை செய்வோர் மகிழவே
பூதரமும் எழுகடலும் ஆடஅமுதூற !அநு
போக பதினாலுலகமும்
தாவுபுகழ் மீறிட நிசாசரர்கள் மாளவரு
தானதவ நூல்தழையவே
தாள்வலியதான பல பேய்கள் அஞ்சச் சிறகு
கொட்டிக் குரற்பயிலுமாம்
காவுகனி வாழைபுளி மாவொடுயர் தாழை!கமு
காடவிகள் பரவுநடனக்
காரணமெய்ஞ் ஞானபரி சீரணவ ராசனக்
கனகமயில் வாகனன் அடற்
சேவகன் இராசத இலக்கண உமைக்கொரு
சிகாமணி சரோருக முகச்
சீதள குமார கிருபாகர மனோகரன்
சேவல் திருத்துவசமே
No comments:
Post a Comment