Tuesday, March 28, 2017

சிவலோக வகுப்பு:

(பிற தொகுப்புகள்)

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 

உரகமும் இதழியும் உதகமும் உடுபதியும் !புனை
    யும் பஞ்சாட்சரர் பங்கின் கொடிதாளினில்   ....1    

உலகமு மலைகளும் உததியும் உயிரும் !அடங்கவொ
    டுங்கும் பார்ப்பதி மைந்தன் கமலாலயன்   ....2  

உபநிட முடிவினும் இடபமதனிலு முயங்கி!வ
    யங்குஞ் சீர்ப்பதி ஒன்றென்றவிதா என   ....3  

உறைவிடு படையினன், அடலுடை நிசிசரர் !தண்டமு
    டைந்தங்கார்ப்பெழ வங்கம் பொருசேவகன்   ....4  

வரபதி சுரபதி, சரவண மடுவினில் வந்தருள்
    கந்தன், கார்த்திகெயன், செங்கழு நீர்மலர்   ....5 

மழுவிய குருபரன், வனசரி பதயுக கஞ்சம்!வ
    ணங்கும் பாக்ய கதம்பன், கருணாகரன்   ....6  

வடதரு இலையிலும் வெகுமுக மவுலி அனந்தன்!எ
    னுஞ் செஞ்சேக்கையிலுங் கண் துயில்மால்திரு   ....7  

மருமகன், இமையவர் வழிபடு மணியணி கிங்கிணி
    பண் கொண்டார்த்திசை கொஞ்சும் பதசூடிகை   ....8  

அருவுரு ஒழியஓர் அபிநவ வடிவருளுந் தனி
    அந்தந் தீக்ஷையெனுங் குண்டல பூஷணம்   ....9  

அணிமயம் எனுமொரு சிவிகையொடதிகுண மஞ்சினு
    மஞ்சொன்றாக்கியதென் பொங்கரியாசனம்   ....10  

அறநெறி முறைமையில் ஒழுகிய அழகிய பண்பெனும்
    அம்பொன் சேர்த்த கலிங்கஞ் சயசாரமும்   ....11  

அவனவள் அதுஎன மொழியவும் இலதொரு வன்!பிணி
    யுங் கொண்டாக்கமும் இன்பங்களுமே தரும்   ....12  

இரவலர் மிடிகெட உதவிய விதரண கங்கணம்
    இங்கங் காப்பில் எனுஞ் சுந்தரகாகளம்   ....13  

எனதறு துறவினும் உயர்கொடை அவிரத !சங்குல
    கெங்குங் கேட்டு வழங்கும் பொறை !மாமுர   ....14  

சிமையவர் கணமுனி கணமுடன் இனிது ப்ரபஞ்சம்!இ 
    றைஞ்சுங் கீர்த்தி துரங்கந் திறல்வாரணம்   ....15  

இருவினை கெடஒரு நிரமய பரமவுனந் தரும்
    இன்பந் தேக்கிய அன்பின் சிவலோகமே   ....16

No comments:

Post a Comment