Tuesday, March 28, 2017

வேல் வகுப்பு:

(பிற தொகுப்புகள்)

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
    கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
        விழிக்கு நிகராகும்   ....1

பனைக்கமுக படக்கரட மதத்தவள
    கசக்கடவுள் பதத்திடுநிகளத்து முளை
        தெறிக்க வரமாகும்   ....2

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்குமொரு
    கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
        இடித்துவழி காணும்   ....3  

பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
    ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
        புசிக்கஅருள் நேரும்   ....4

சுரர்க்கு முநிவரர்க்கு மகபதிக்கும்,விதி
    தனக்கும்,அரி தனக்கு(ம்),நரர் தமக்கும்உறும்
        இடுக்கண் வினை சாடும்   ....5  

சுடர்பருதி ஒளிப்ப,நிலவொழுக்கு மதி
    ஒளிப்ப,அலை அடக்குதழல் ஒளிப்ப,ஒளிர்
        ஒளிப்பிரபை வீசும்   ....6  

துதிக்கும் அடியவர்க்கொருவர் கெடுக்கஇடர்
    நினைக்கின்,அவர் குலத்தைமுதல் அறக்களையும்
        எனக்கோர் துணையாகும்   ....7  

சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை
    அடுத்தபகை அறுத்தெறிய உருக்கியெழும் 
        அறத்தைநிலை காணும்   ....8

தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி
    தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
        கழற்கு நிகராகும்   ....9 

தலத்திலுள கணத்தொகுதி களிப்பின்உண
    அழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
        விதிர்க்க வளைவாகும்   ....10 

தனித்துவழி நடக்குமெனதிடத்தும் ஒரு
    வலத்தும் இருபுறத்தும் அருகடுத்திரவு
        பகல் துணையதாகும்   ....11 

சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
    பெருத்தகுடர் சிவத்ததொடை எனச்சிகையில்
        விருப்பமொடு சூடும்   ....12  

திரைக்கடலை உடைத்துநிறை புனர்கடிது
    குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
        நிறைத்து விளையாடும்   ....13 

திசைக்கரியை முதற்குலிசன் அறுத்தசிறை
    முளைத்ததென முகட்டினிடை பறக்கஅற
        விசைத்ததிர ஓடும்   ....14 

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
    குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
        விழித்தலற மோதும்   ....15 

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
    விருத்தன் எனதுளத்தில்உறை கருத்தன்மயில்
        நடத்துகுகன் வேலே   ....16

No comments:

Post a Comment