(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
வசைதவிர் ககன சரசிவ கரண மகாவ்ருத
சீல சால வரமுநி சித்தரை
அஞ்சல் அஞ்சல் என்று வாழ்வித்து நின்றன ....1
மணிவட மழலை உடைமணி தபனிய !நாணழ
காக நாடி வகைவகை கட்டு!ம
ருங்குடன் பொருந்து ரீதிக்கிசைந்தன ....2
வருணித கிரண வருணித வெகு தருணாதப
சோதியாடை வடிவுபெறப் புனை
திண்செழுங் குறங்கின் மேல் வைத்தசைந்தன ....3
வளைகடல் உலகை வலம்வரு பவுரி வினோத!க
லாப கோப மயில் வதனத்து !வி
ளங்கும் அங்குசங் கடாவிச் சிறந்தன ....4
வரைபக, நிருதர் முடிபக, மகர மகோததி
தீயின் வாயின் மறுக விதிர்த்தயில்
வென்றி தங்கு துங்க வேலைப் புனைந்தன ....5
மதியென உதய ரவியென வளைபடு தோல்!வி
சால நீலமலி பரிசைப் படை
கொண்டு நின்றுழன்று சாதிக்க முந்தின ....6
மனகுண சலன மலினமில் தூியஅதீத!சு
காநுபூதி மவுன நிரக்ஷர
மந்திரம் பொருந்தி மார்பில் திகழ்ந்தன ....7
வகைவகை குழுமி மொகுமொகு மொகென அநேக!ச
மூக ராக மதுபம் விழச்சிறு
சண்பகஞ் செறிந்த தாரிற் பொலிந்தன ....8
மிசைமிசை கறுவி வெளி முகடளவு நிசாசர
சேனை தேடி விததி பெறச்சில
கங்கணங் கறங்க மீதிற் சுழன்றன ....9
வெருவுவ வெருவ எரிசொரி விழியுள பூத!பி
சாசு போத மிகுதொனி பற்றி!மு
ழங்கு விஞ்சு கண்டை வாசிக்கை கொண்டன ....10
விதமிகு பரத சுர வனிதையர் கண மேல்தொறும்
லீலையாக விமல சலத்தினை
விண்திறந்து மொண்டு வீசிப் பொலிந்தன ....11
விதரண தருவின் மலரிடை செருகிய கூதள
நீப மாலை விபுதர் குலக்!குலி
சன் பயந்த செங்கை யானைக்கிசைந்தன ....12
விகசித தமர பரிபுர முளரி தொழா !அபி
ராம வேடர் விமலை தினைப்புன
மங்கை கொங்கை கண்டு வேளைப் புகுந்தன ....13
விதிர்தரு சமர முறிகர கமல நகாயுத
கோழி வீற விதரண சித்ர!அ
லங்க்ருதம் புனைந்து பூரித்திலங்கின ....14
விரகுடை எனது மனதுடன் அகில்பனி நீர்!புழு
கோடளாவி ம்ருகமத கற்புர
குங்குமங் கலந்து பூசித் துதைந்தன ....15
வினைபுரி பவனி தொழுதழுதுருகிய கோதையர்
தூது போக விடுமது பக்ஷண
வண்டினந் திரண்டு சூழப் படிந்தன ....16
இசைதனில் இனிய கயிசிகை கவுட வராளி!த
னாசி தேசி பயிரவி குச்சரி
பஞ்சுரந் தெரிந்து வீணைக்கிசைந்தன ....17
இறுதியில் உதய ரவிகண நிகரென ஆறிரு
காது தோயும் இலகு மணிக்கன
விம்ப குண்டலங்கள் மேவிப் புரண்டன ...,18
எதிர்படு நெடிய தருஅடு பெரிய கடாம்உமிழ்
நாக மேகம் இடிபட மற்பொரு
திண்சிலம்படங்க மோதிப் பிடுங்கின ....19
எழுதரும் அழகு நிறமலி திறல்இசையாக!உ
தார தீரம் என உரை பெற்ற!அ
டங்கலுஞ் சிறந்து சாலத் ததும்பின ....20
இருள்பொரு கிரண இரணிய வடகுல பாரிய
மேரு சாதி இனமென !ஒத்துல
கங்கள் எங்கணும் ப்ரகாசித்து நின்றன ....21
இயன்முநி பரவ ஒருவிசை அருவரை !ஊடதி
பார கோர இவுளி முகத்தவள்
கொங்கை கொண்ட சண்ட மார்பைப் பிளந்தன ....22
இபரத துரக நிசிசரர் கெடஒரு சூரனை
மார்பு பீறி அவன் உதிரப்புனல்
செங்களந் துளங்கி ஆடிச் சிவந்தன ....23
எவையெவை கருதில் அவையவை தரு!கொடை
யால்மணி மேகராசி சுரபி அவற்றொடு
சங்க கஞ்ச பஞ்சசாலத்தை வென்றன ....24
அசைவற நினையும் அவர்பவம் அகலவெ மேல்வரு
கால தூதரை உடையும் அப்படி
அங்கும் இங்கும் எங்கும் ஓடத் துரந்தன ....25
அகிலமும் எனது செயல்அலதிலையென யானென
வீறு கூறி அறவு மிகுத்தெழும்
ஐம்புலன் தியங்கி வீழத் திமிர்ந்தன ....26
அனலெழு துவசம் உடுகுலம் உதிர வியோமமும்
ஏழு பாரும் அசலமும் மிக்க!பி
லங்களுங் குலுங்க ஆலித்ததிர்ந்தன ....27
அடல்நெடு நிருதர் தளமது மடிய வலாரிதன்
வானை ஆள அரசு !கொடுத்தப
யம் புகுந்த அண்டர்ஊரைப் புரந்தன ....28
அடவியில் விளவு தளவலர் துளவு குராமகிழ்
கோடல் பாடல் அளிமுரல் செச்சை!அ
லங்கல் செங்கடம்பு நேசித்தணிந்தன ....29
அரியதொர் தமிழ்கொடுரிமையொடடி தொழுதே கவி
மாலையாக அடிமை தொடுத்திடு
புன்சொல் ஒன்று நிந்தியாமற் புனைந்தன ....30
அழகிய குமரன் உமைதிரு மதலை பகீரதி
மாதர் வாழும் அறுவர் ப்ரியப்படு
கந்தன் எந்தை இந்த்ரநீலச் சிலம்பினன் ....31
அநுபவன் அநகன் அனனியன் அமலன் அமோகன்!அ
நேகன் ஏகன் அபினவன் நித்தியன்
அஞ்சலென் ப்ரசண்ட வாகைப் புயங்களே ....32
No comments:
Post a Comment