(ஈழ நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: வடக்கு மாகாணம் (ஜாப்னா (Jaffna) மாநிலம், யாழ்ப்பாண மாவட்டம்)
திருக்கோயில்: அருள்மிகு திருத்தம்பலேஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத் தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
அமைவிடம் (செல்லும் வழி):
யாழ்ப்பாண மாவட்டம் - தெல்லிப்பழை வட்டத்தில் காங்கேயன்துறையிலிருந்து (காங்கேசன்துறை) 4 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.
(Google Maps: Keerimalai Naguleswaram Kovil, Kankesanturai, Sri Lanka)
(Google Maps: Keerimalai Naguleswaram Kovil, Kankesanturai, Sri Lanka)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனத்த தானன தனத்த தானன
தனத்த தானன தனத்த தானன
தனத்த தானன தனத்த தானன ...... தனதான
தொடுத்த வாளென விழித்து மார்முலை
அசைத்து மேகலை மறைத்து மூடிகள்
துடித்து நேர்கலை நெகிழ்த்து மாஇயல் ...... கொளுமாதர்
சுகித்த ஹாவென நகைத்து மேல்விழ
முடித்த வார்குழல் விரித்துமேஇதழ்
துவர்த்த வாய்சுருளடக்கி மால்கொடு ...... வழியேபோய்ப்
படுத்த பாயலில் அணைத்து மாமுலை
பிடித்து மார்பொடும் அழுத்தி வாயிதழ்
கடித்து நாணமதழித்த பாவிகள் ...... வலையாலே
பலித்து நோய்பிணி கிடத்து பாய்மிசை
வெளுத்து வாய்களும் மலத்தின் நாயென
பசித்து தாகமும் எடுத்திடா உயிர்...... உழல்வேனோ
வெடுத்த தாடகை சினத்தை ஓர்கணை
விடுத்து யாகமும் நடத்தியேஒரு
மிகுத்த வார்சிலை முறித்த மாயவன் ...... மருகோனே
விதித்து ஞாலமதளித்த வேதனை
அதிர்த்து ஓர்முடி கரத்துலாஅனல்
விழித்து காமனையெரித்த தாதையர் ...... குருநாதா
அடுத்த ஆயிர விடப் பணாமுடி
நடுக்க மாமலை பிளக்கவே!கவ
டரக்கர் மாமுடி பதைக்கவே பொரு ...... மயில்வீரா
அறத்தில் வாழ்உமை சிறக்கவே!அறு
முகத்தினோடணி குறத்தி !யானையொ
டருக்கொணாமலை தருக்குலாவிய ...... பெருமாளே.
அருக்கோணமலை(நகுலேச்சரம்) இலங்கையின் வட மாகணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் (ஜாப்னா மாநிலம் என்ற ஒன்று இல்லை. Jaffna என்பது யாழ்ப்பாணத்தின் ஆங்கில பெயர்) அமைந்துள்ளது. யாழ்ப்பாண நகரிலிருந்து வடக்கே 20 KM தொலைவில் கீரிமலை எனும் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் நகுலேஸ்வரர். அம்பாள் நகுலாம்பாள். இங்கு எழுந்தருளியுள்ள முருகப்பெருமான் மீது அல்லது இக்கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ள மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய முருகப்பெருமான் மீது அருணகிரிநாதர் திருப்புகழ் அருளியிருக்க வேண்டும். உக்கிர சோழனின் மகள் மாருதப்புரவீகவல்லியின் குதிரை முகம் நீங்க திருச்செந்தூர் செந்திலாண்டவ மூர்த்தியின் ஆணைப்படி இத்தலம் வந்து முருகனை வழிபட்டு குதிரை முகம் நீங்கப்பெற்றாள். இத்தல எம்பெருமான் தேவியர் இருவருடன் நின்ற திருக்கோலத்தில் ஒரு திரு முகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் எழுந்தருளியிருக்கின்றான்.
ReplyDelete