(பாண்டிய நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: பாண்டிய நாடு
மாவட்டம்: சிவகங்கை
திருக்கோயில்: அருள்மிகு சிவகாமி அம்மை சமேத ஸ்ரீதிருத்தளி நாதர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
காரைக்குடியிலிருந்து 22 கி.மீ தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
(Google Maps: PNT006 - Thiruthalinathar Temple,Padal Petra Temple, SH 35, Tirupattur, Tamil Nadu 630211, India)
(Google Maps: PNT006 - Thiruthalinathar Temple,Padal Petra Temple, SH 35, Tirupattur, Tamil Nadu 630211, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தனத்தத் தான தனன தனதன
தனத்தத் தான தனன தனதன
தனத்தத் தான தனன தனதன ...... தனதான
கருப்புச் சாபன்அனைய இளைஞர்கள்
ப்ரமிக்கக் காதல் உலவு நெடுகிய
கடைக்கண் பார்வை இனிய வனிதையர் ...... தனபாரம்
களிற்றுக் கோடு கலச மலிநவ
மணிச்செப்போடை வனச நறுமலர்
கனத்துப் பாளை முறிய வருநிகர் இளநீர்போல்
பொருப்பைச் சாடும் வலியை உடையன
அறச்சற்றான இடையை நலிவன
புதுக்கச் சார வடமொடடர்வன ...... எனநாளும்
புகழ்ச்சிப் பாடல் அடிமை அவரவர்
ப்ரியப்பட்டாள உரைசெய் இழிதொழில்
பொகட்டெப் போது சரியை கிரியை செய்துயிர்வாழ்வேன்
இருட்டுப் பாரில் மறலி தனதுடல்
பதைக்கக் கால்கொடு துதை செய்தவன்விழ
எயில்துப்போவி அமரர் உடலவர் ...... தலைமாலை
எலுப்புக் கோவை அணியும் அவர்மிக
அதிர்த்துக் காளி வெருவ நொடியினில்
எதிர்த்திட்டாடும் வயிர பயிரவர் ...... நவநீத
திருட்டுப் பாணி இடப முதுகிடை
சமுக்கிட்டேறி அதிர வருபவர்
செலுத்துப் பூதம் அலகை இலகிய ...... படையாளி
செடைக்குள் பூளை மதியம் இதழி!வெ
ளெருக்குச் சூடி குமர வயலியல்
திருப்புத்தூரில் மருவியுறைதரு ...... பெருமாளே.
திருப்பாடல் 2:
தான தாத்த தனத்தத் தானன
தான தாத்த தனத்தத் தானன
தான தாத்த தனத்தத் தானன ...... தனதான
வேலை தோற்க விழித்துக் காதினில்
ஓலை காட்டி நகைத்துப் போதொரு
வீடு காட்டி உடுத்தப் போர்வையை ...... நெகிழ்வாகி
மேனி காட்டி வளைத்துப் போர்முலை
யானை காட்டி மறைத்தத் தோதக
வீறு காட்டி எதிர்த்துப் போரெதிர் ...... வருவார்மேல்
காலமேற்க உழப்பிக் கூறிய
காசு கேட்டது கைப்பற்றாஇடை
காதியோட்டி வருத்தப் பாடுடன் ...... வருவார்போல்
காதல் போற்று மலர்ப்பொன் பாயலின்
மீதணாப்பும் அசட்டுச் சூளைகள்
காம நோய்ப்படு சித்தத் தீவினை ...... ஒழியேனோ
ஆல கோட்டு மிடற்றுச் சோதி!க
பாலி பார்ப்பதி பக்ஷத்தால்!நட
மாடி தாத்திரி பட்சித்தாவென ...... உமிழ்வாளி
ஆடல் கோத்த சிலைக்கைச் சேவகன்
ஓடை பூத்த தளக்கள் சானவி
ஆறு தேக்கிய கற்றைச் சேகர ...... சடதாரி
சீல மாப்பதி மத்தப் பாரிட
சேனை போற்றிடும் அப்பர்க்கோதிய
சேதனார்த்த ப்ரசித்திக்கே வரு ...... முருகோனே
சேலறாக் கயல்தத்தச் சூழ்!வய
லூர வேற் கர விப்ரர்க்காதர
தீர தீர்த்த திருப்புத்தூருறை ...... பெருமாளே.
No comments:
Post a Comment