Thursday, July 26, 2018

குன்றக்குடி:

(பாண்டிய நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: பாண்டிய நாடு 

மாவட்டம்: சிவகங்கை

திருக்கோயில்: அருள்மிகு முருகன் திருக்கோயில்

தல வகை: முருகன் திருக்கோயில்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

காரைக்குடியிலிருந்து 12 கி.மீ தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. அடிவாரத்திலொன்றும் மலையுச்சியில் ஒன்றுமாய் இரு திருக்கோயில்கள் அமைந்துள்ளன, மூல மூர்த்தி மலைக்கோயிலில் எழுந்தருளி இருக்கின்றார்.

(Google Maps: Kundrakudi Murugan Temple, Kundrakudi, Tamil Nadu 623305, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 7.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனன தந்த தந்த தனன தந்த தந்த
     தனன தந்த தந்த ...... தனதான

அழகெறிந்த சந்த்ர முகவடம் கலந்த
     அமுத புஞ்ச இன்சொல் ...... மொழியாலே

அடி துவண்ட தண்டை கலிலெனும் !சிலம்பொ
     டணி சதங்கை கொஞ்சு ...... நடையாலே

சுழியெறிந்து நெஞ்சு சுழல நஞ்சணைந்து
     தொடுமிரண்டு கண்கள் அதனாலே

துணைநெருங்கு கொங்கை மருவுகின்ற பெண்கள்
     துயரை என்றொழிந்து ...... விடுவேனோ

எழுது கும்பகன்பின் இளைய தம்பி நம்பி
     எதிரடைந்திறைஞ்சல் ...... புரிபோதே

இதமகிழ்ந்திலங்கை அசுரர் அந்தரங்கம் 
     மொழிய வென்ற கொண்டல் ...... மருகோனே

மழுஉகந்த செங்கை அரன்உகந்திறைஞ்ச
     மநுஇயம்பி நின்ற ...... குருநாதா

வளமிகுந்த குன்ற நகர்புரந்து துங்க
     மலைவிளங்க வந்த ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தனதனன தனதனன தனதனன தனதனன
தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன
     தனதனன தனதனன தனதனன தனதனன
     தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன
          தனதனன தனதனன தனதனன தனதனன
          தந்தத்த தத்ததன தந்தத்த தத்ததன ...... தனதானா

ககுபநிலை குலையவிகல் மிகுபகடின் வலியுடைய
தந்தத்தினைத் தடிவ தொந்தத் திரத்தைஉள
     அகிலமறை புகழ்பரமர் ஞெகிழிகல கலகலெனும்
     அம்பொன் பதத்தர்தநு அம்பொன் பொருப்படர்வ
          களபபரிமள மெழுகும் எழிலில் முழுகுவ முளரி
          அஞ்சப் புடைத்தெழு வஞ்சக் கருத்துமதன் அபிஷேகம் 

கடிவபடு கொலையிடுவ கொடியமுக படமணிவ
இன்பச்சுடர்க் கனக கும்பத் தரச்செருவ
     பிருதில்புளகித சுகமும் மிருதுளமும் வளர்இளைஞர்
     புந்திக்கிடர்த் தருவ பந்தித்த கச்சடர்வ
          கயல்மகர நிகரமிக வியன்மருவு நதியில்முதிர்
          சங்கிப்பி முத்தணிவ பொங்கிக் கனத்தொளிர்வ ...... முலைமாதர்

வகுளமலர் குவளையிதழ் தருமணமும் மிருகமதம் 
ஒன்றிக் கறுத்துமுகில் வென்றிட்டு நெய்த்தகுழல்
     அசையருசி அமுர்த க்ருத வசியமொழி மயில்!குயிலெ
     னும்புட்குரல் பகர வம்புற்ற மல்புரிய
          வருமறலி அரணமொடு முடுகுசமர் விழியிணைகள்
          கன்றிச் சிவக்கமகிழ் நன்றிச் சமத்துநக ...... நுதிரேகை

வகைவகை மெயுற வளைகள் கழலவிடை துவளஇதழ்
உண்டுட் ப்ரமிக்கநசை கொண்டுற்றணைத்தவதி
     செறிகலவி வலையில் எனதறிவுடைய கலைபடுதல்
     உந்திப் பிறப்பற நினைந்திட்டமுற்றுனடி
          வயலிநகர் முருகசெரு உயல்பனிரு கரகுமர
          துன்றட்ட சிட்டகுண குன்றக்குடிக்கதிப ...... அருளாதோ

தகுகுதகு தகுதகுகு திகுகுதிகு திகுதிகுகு
தங்குத்த குத்தககு திங்குத்தி குத்திகிகு
     சகணசக சகசகண செகணசெக செகசெகெண
     சங்கச்ச கச்சகண செங்கச்செ கச்செகண
          தனனதன தனதனன தெனனதென தெனதெனன
          தந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெனன ...... தனனானா

தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி
தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு
     டணணடண டணடணண டிணிணிடிணி டிணிடிணிணி
     டண்டட்ட டட்டடண டிண்டிட்டி டிட்டிடிணி
          தரரதர தரதரர திரிரிதிரி திரிதிரிரி
          தன்றத்த ரத்தரர தின்றித்தி ரித்திரிரி ...... யெனதாளம் 

தொகுதிவெகு முரசுகரடிகை டமரு முழவுதவில்
தம்பட்ட மத்தளம்இனம் பட்ட டக்கை பறை
     பதலைபல திமிலைமுதல் எதிரஉதிர் பெரியதலை
     மண்டைத்திரள் பருகு சண்டைத்திரள் கழுகு
          துடர்நிபிட கருடனடர் தர கரட மொகுமொகென
          வந்துற்றிடக் குடர்நிணம் துற்றிசைத்ததிர ...... முதுபேய்கள்

சுனகனரி நெறுநெறென இனிதினிது தினவினைசெய்
வெங்குக்குடத்த கொடி துங்குக்கு குக்குகென
     வடனமிடு திசைபரவி நடனமிட அடலிரவி
     திங்கள் ப்ரபைக் கதிர்கள் மங்க ப்ரசித்தகுல
          துரககஜ ரதகடக முரணரண நிருதர்விறல்
          மிண்டைக் குலைத்தமர் செய்தண்டர்க்குரத்தையருள் ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தனதனன தந்த தானன தனதனன தந்த தானன
     தனதனன தந்த தானன ...... தனதான

கடினதட கும்ப நேரென வளருமிரு கொங்கை மேல்விழு
     கலவி தருகின்ற மாதரொடுறவாடிக்

கனவளக பந்தியாகிய நிழல்தனிலிருந்து தேனுமிழ்
     கனியிதழை மென்று தாடனை ...... செயலாலே

துடியிடை நுடங்க வாள்விழி குழைபொரநிரம்ப மூடிய
     துகில்நெகிழ வண்டு கோகில ...... மயில்காடை

தொனியெழ விழைந்து கூரிய கொடுநகம் இசைந்து தோள்மிசை
     துயிலவச இன்பமேவுதல் ஒழிவேனோ

இடி முரசறைந்து பூசல்செய் அசுரர்கள் முறிந்து தூளெழ
     எழுகடல் பயந்து கோவென ...... அதிகோப

எமபடரும் என்செய்வோமென நடுநடுநடுங்க வேல்விடு
     இரணமுக சண்ட மாருத ...... மயிலோனே

வடிவுடைய அம்பிகாபதி கணபதி சிறந்து வாழ்தட
     வயலிநகர் குன்ற மாநகர் உறைவோனே

வகைவகை புகழ்ந்து வாசவன் அரிபிரமர் சந்த்ர சூரியர்
     வழிபடுதல் கண்டு வாழ்வருள் ...... பெருமாளே.

திருப்பாடல் 4:
தானா தானா தந்தன தத்தன
     தானா தானா தந்தன தத்தன
          தானா தானா தந்தன தத்தன ...... தனதான

நேசாசாராடம்பர மட்டைகள்
     பேசாதேஏசும் கள மட்டைகள்
          நீசாளோடேயும் பழகிக்கவர் ...... பொருளாலே

நீயே நானே என்றொரு சத்தியம்
     வாய்கூசாதோதும் கபடத்திகள்
          நேராலே தானின்று பிலுக்கிகள் ...... எவர்மேலும்

ஆசா பாசா தொந்தரை இட்டவர்
     மேல்வீழ்வார்பால் சண்டிகள் !கட்டழ
          காயே மீதோலெங்கு மினுக்கிகள் ...... வெகுமோகம்

ஆகாதாவேசம் !தருதிப்பொழு
     தோகோ வாவா என்று பகட்டிகள் 
          ஆகா மோகா வம்பிகள் கிட்டிலும் உறவாமோ

பேசாதேபோய் நின்றுறியில் தயிர்
     வாயால் ஆஆ என்று குடித்தருள்
          பேராலேநீள் கஞ்சன் விடுத்தெதிர் ...... வருதூது

பேழ்வாய் வேதாளம் பகடைப்!பகு
     வாய்நீள் மானாளும் சரளத்தொடு
          பேயானாள் போர் வென்றெதிரிட்டவன் ...... மருகோனே

மாசூடாடாடும் பகையைப் பகை
     சூராளோடே வன் செருவைச்செறு
          மாசூரா பாரெங்கும் அருள்பொலி ...... முருகோனே

வானாடேழ் நாடும்புகழ் பெற்றிடு
     தேனாறேசூழ் துங்க மலைப்பதி
          மாயூரா வாழ் குன்றை தழைத்தருள் ...... பெருமாளே.

திருப்பாடல் 5:
தனதன தந்தத் தனதன தந்தத்
     தனதன தந்தத் ...... தனதான

பிறர்புகழ்இன்சொல் பயிலும் இளந்தைப்
     பருவ மதன்கைச் ...... சிலையாலே

பிறவிதரும் சிக்கது பெருகும்பொய்ப்
     பெருவழி சென்றக் ...... குணமேவிச்

சிறுமை பொருந்திப் பெருமை முடங்கிச்
     செயலும் அழிந்தற்பமதான

தெரிவையர் தங்கள் கயலை விரும்பிச்
     சிலசில பங்கப் ...... படலாமோ

கெறுவித வஞ்சக் கபடமொடெண்!திக்
     கிலுமெதிர் சண்டைக்கெழு சூரன்

கிளையுடன் மங்கத் தலைமுடி சிந்தக்
     கிழிபட துன்றிப் ...... பொருதோனே

குறுமுநி இன்பப் பொருள்பெற !அன்றுற்
     பன மநுவும்சொல் ...... குருநாதா

குலகிரி துங்கக் கிரியுயர் குன்றக்
     குடிவளர் கந்தப் ...... பெருமாளே.

திருப்பாடல் 6:
தனன தனன தனத்தந் ...... தனதான

தவள மதியம் எறிக்கும் ...... தணலாலே
சரச மதனன் விடுக்கும் ...... கணையாலே
கவன மிகவும் உரைக்கும் ...... குயிலாலே
கருதி மிகவும் மயக்கம் ...... படவோநான்
பவள நிகரும் இதழ்ப்பைங் ...... குறமானின்
பரிய வரையை நிகர்க்கும் ...... தனமேவும் 
திவளும் மணிகள் கிடக்கும் ...... திருமார்பா
திகழு மயிலின் மலைக்கண் ...... பெருமாளே.

திருப்பாடல் 7:
தானான தனதான தானான தனதான
     தானான தனதான ...... தனதான

நாமேவு குயிலாலும்  மாமாரன் அயிலாலும் 
     நாள்தோறும் மதிகாயும் ...... வெயிலாலும்

நார்மாதர் வசையாலும் வேயூதும் இசையாலும் 
     நாடாசை தருமோக ...... வலையூடே

ஏமாறி முழுநாளும் மாலாகி !விருதாவி
     லேவாரும் விழிமாதர் ...... துயரூடே

ஏகாமல்அழியாத மேலான பத மீதில்  
     ஏகீஉனுடன்மேவ ...... அருள்தாராய்

தாமோகமுடன்ஊறு பால்தேடி உரலூடு
     தானேறி விளையாடும் ஓருபோதில்

தாயாக வருசோதை காணாது களவாடு
     தாமோதரன் முராரி ...... மருகோனே

மாமாது வனமாது கார்மேவு சிலைமாது
     மாலாகி விளையாடு ...... புயவீரா

வானாடு புகழ்நாடு தேனாறு புடைசூழ
     மாயூர கிரிமேவு ...... பெருமாளே.

No comments:

Post a Comment