Thursday, July 26, 2018

கொடுங்குன்றம் (பிரான் மலை)

(பாண்டிய நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: பாண்டிய நாடு 

மாவட்டம்: சிவகங்கை

திருக்கோயில்: அருள்மிகு தேனாம்பிகை சமேத ஸ்ரீமங்கைபாகர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்:

சிவகங்கையிலிருந்து 60 கி.மீ தூரத்திலும், திருப்பத்தூரிலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்திலும் இத்தலம் அமைந்துள்ளது.

(Google Maps: Sri Kodunkundranathar Temple-Ishtadevata, Piranmalai, Tamil Nadu 630502, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனந்த தந்தம் தந்தம் தந்தந் ...... தந்ததான

அனங்கன் அம்பொன்றஞ்சும் தங்கும் ...... கண்களாலே
அடர்ந்தெழும்பொன் குன்றம் கும்பம் ...... கொங்கையாலே
முனிந்து மன்றம் கண்டும் தண்டும் ...... பெண்களாலே
முடங்குமெந்தன் தொண்டும் கண்டின்றின்புறாதோ
தெனந்தெனந்தெந் தெந்தெந் தெந்தெந் ...... தெந்தெனானா
செறிந்தடர்ந்தும் சென்றும் பண்பின் ...... தும்பிபாடக்
குனிந்திலங்கும் கொம்பும் கொந்தும் ...... துன்றுசோலை
கொழும் கொடும்திண் குன்றம் தங்கும் ...... தம்பிரானே.

திருப்பாடல் 2:
தனதனன தனதனன தத்தத்த தந்ததன
     தத்தத்த தந்ததன
தனதனன தனதனன தத்தத்த தந்ததன
     தத்தத்த தந்ததன
தனதனன தனதனன தத்தத்த தந்ததன
     தத்தத்த தந்ததன ...... தந்ததான.

எதிர்பொருது கவிகடின கச்சுக்களும் பொருது
     குத்தித் திறந்துமலை
இவைகளென வதிம்ருகமதப்பட்டு நின்றொழுகி
     முத்துச் செறிந்தவடம் 
எனுநிகளம் அவையற !உதைத்திட்டணைந்துகிரி
     னில் கொத்தும் அங்குசம் நெருங்குபாகர்

எதிர்பரவ உரமிசை துகைத்துக் கிடந்துடல்!ப
     தைக்கக் கடிந்துமிக
இரதிபதி மணிமவுலி எற்றி த்ரியம்பகனும் 
     உட்கத் திரண்டிளகி
இளைஞருயிர் கவளமென அட்டித் தசைந்தெதிர்!பு
     டைத்துச் சினந்துபொரு ...... கொங்கையானை

பொதுவில் விலையிடு மகளிர் பத்மக் கரம்தழுவி
     ஒக்கத் துவண்டமளி
புகஇணைய வரிபரவு நச்சுக் கருங்கயல்கள்
     செக்கச் சிவந்தமுது
பொதியுமொழி பதறஅளகக் கற்றையும்குலைய
     முத்தத்துடன் கருணை ...... தந்துமேல்வீழ்

புதுமைதரு கலவிவலையில் பட்டழுந்திஉயிர்
     தட்டுப்படும் திமிர
புணரிஉததியில்மறுகி மட்டற்ற இந்திரிய
     சட்டைக் குரம்பைஅழி
பொழுதினிலும் அருள்முருக சுத்தக் கொடுங்கிரியில் 
     நிர்த்தச் சரண்களை மறந்திடேனே

திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி
     தத்தத்த தந்ததத
தெதததெத தெதததெத தெத்தெத்த தெந்ததெத
     திக்கட்டி கண்டிகட
ஜெகணகெண கெணஜெகுத தெத்தித்ரி அந்திரித
     தக்கத்த குந்தகுர்த ...... திந்திதீதோ

திகுடதிகு தொகுடதொகு திக்கட்டி கண்டிகட
     டக்கட்ட கண்டகட
டிடிடுடுடு டிடிடுடுடு டிக்கட்டி கண்டிகட
     டுட்டுட்டு டுண்டுடுடு
திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு
     குக்குக்கு குங்குகுகு ...... என்றுதாளம்

முதிர்திமிலை கரடிகை இடக்கைக்கொடும்துடி!உ
     டுக்கைப் பெரும்பதலை
முழவுபல மொகுமொகென ஒத்திக்கொடும்!பிரம
     கத்திக்களும் பரவ
முகடுபுகு வெகுகொடிகள் பக்கத்தெழுந்தலைய
     மிக்கக் கவந்தநிரை ...... தங்கியாட

முதுகழுகு கொடிகருடன்ஒக்கத் திரண்டுவர
     உக்ரப்பெரும் குருதி
முழுகியெழு பயிரவர் நடித்திட்ட கண்டமும்!வெ
     டிக்கத் துணிந்ததிர
முடுகிவரு நிசிசரரை முட்டிச்சிரந்திருகி
     வெட்டிக் களம்பொருத ...... தம்பிரானே.

No comments:

Post a Comment