(பாண்டிய நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: பாண்டிய நாடு
மாவட்டம்: ராமநாதபுரம்
திருக்கோயில்: அருள்மிகு மங்களநாத சுவாமி திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், மணிவாசகர் (திருவாசகம்)
தலக் குறிப்புகள்:
இராமநாதபுரத்திலிருந்து 18 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.
(Google Maps: Arulmigu Mangalaleswari Udanurai Mangalanatha Swamy Temple, Ramanathapuram Rd, Uthiragosamangai, Tamil Nadu 623533, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தத்தன தானத் தனதன தந்தத்
தத்தன தானத் தனதன தந்தத்
தத்தன தானத் தனதன தந்தத் ...... தனதான
கற்பக ஞானக் கடவுள் முன்!அண்டத்
தில்புத சேனைக்கதிபதி இன்பக்
கட்கழை பாகப்பம்அமுது வெண்சர்க்கரை பால்தேன்
கட்டிள நீர்முக்கனி பயறம்பொன்
தொப்பையின் ஏறிட்டருளிய தந்திக்
கட்டிளையாய் பொற்பதமதிறைஞ்சிப் ...... பரியாய
பொற்சிகியாய் கொத்துருண்மணி தண்டைப்
பொற்சரி நாதப் பரிபுர என்றுப்
பொற்புற ஓதிக் கசிவொடு சிந்தித்தினிதேயான்
பொற்புகழ் பாடிச் சிவபதமும்!பெற்
றுப்பொருள் ஞானப் பெருவெளியும் !பெற்
றுப் புகலாகத்தமுதையும் உண்டிட்டிடுவேனோ
தெற்பம்உளாகத் திரள்பரியும்!பற்
குப்பைகள் ஆகத்தசுரர் பிணம்!திக்
கெட்டையும் மூடிக் குருதிகள் மங்குல் ...... செவையாகித்
திக்கயமாடச் சிலசில பம்பைத்
தத்தன தானத் தடுடுடு வென்கச்
செப்பறை தாளத் தகுதொகு வென்கச் ...... சிலபேரி
உற்பனமாகத் தடிபடு !சம்பத்
தற்புதமாகத்தமரர் புரம்!பெற்
றுள் செல்வமேவிக் கனமலர் சிந்தத் ...... தொடுவேலா
உட்பொருள் ஞானக் குறமகள்உம்பல்
சித்திரை நீடப் பரிமயில் முன்!பெற்
றுத்தரகோசத் தலமுறை கந்தப் ...... பெருமாளே
No comments:
Post a Comment