Friday, July 27, 2018

திருவாடானை

(பாண்டிய நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: பாண்டிய நாடு 

மாவட்டம்: ராமநாதபுரம் 

திருக்கோயில்: அருள்மிகு சினேகவல்லி அம்மை சமேத ஆதி ரத்னேஸ்வரர் திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்:

தேவக்கோட்டையிலிருந்து 23 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது  இத்திருக்கோயில்.

(Google Maps: Thiruvadanai Periya Kovil,Padal Petra Temple, Kochi-Madurai-Tondi Point Road, Thiruvadanai, Tamil Nadu, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தானான தத்ததன தானான தத்ததன
     தானான தத்ததன ...... தனதான

ஊனாரும் உட்பிணியும் ஆனாகவித்தவுடல் 
     ஊதாரி பட்டொழிய ...... உயிர்போனால்

ஊரார் குவித்துவர ஆவாஎனக்குறுகி
     ஓயா முழக்கமெழ ...... அழுதோய

நானா விதச்சிவிகை மேலே கிடத்தியது
     நாறாதெடுத்தடவி ...... எரியூடே

நாணாமல் வைத்துவிட நீறாமென்இப்பிறவி
     நாடாதெனக்குன்அருள் ...... புரிவாயே

மாநாக துத்திமுடி மீதே நிருத்தமிடும் 
     மாயோனும் மட்டொழுகு ...... மலர்மீதே

வாழ்வாயிருக்குமொரு வேதாவும் எண்திசையும் 
     வானோரும் அட்டகுல ...... கிரியாவும்

ஆனா அரக்கருடன் வானார் பிழைக்கவரும் 
     ஆலாலமுற்ற அமுதயில்வோன் முன்

ஆசார பத்தியுடன் ஞானாகமத்தையருள்
     ஆடானை நித்தமுறை ...... பெருமாளே

No comments:

Post a Comment