Thursday, July 26, 2018

விநாயக மலை (பிள்ளையார்பட்டி):

(பாண்டிய நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: பாண்டிய நாடு 

மாவட்டம்: சிவகங்கை

திருக்கோயில்: அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில்

தல வகை: ஸ்ரீவிநாயகர் திருக்கோயில்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

சிவகங்கையிலிருந்து 45 கி.மீ தூரத்திலும், காரைக்குடியிலிருந்து 15 கி.மீ தூரத்திலும் இத்தலம் அமைந்துள்ளது.

(Google Maps: Arulmigu Thiru Karpaga Vinayagar Temple, Pillaiyarpatti, Koothadipatti, Pillayarpatti, Tamil Nadu 630207, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனதன தானா தனாதன தனதன தானா தனாதன
     தனதன தானா தனாதன ...... தனதான

சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம
     சததள பாதா நமோநம ...... அபிராம

தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம
     சமதள ஊரா நமோநம ...... ஜகதீச

பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
     பரிமள நீபா நமோநம ...... உமைகாளி

பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
     பவுருஷ சீலா நமோநம ...... அருள்தாராய்

இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூளேற வானவர் 
     எவர்களும் ஈடேற ஏழ்கடல் ...... முறையோ!என்

றிடர்பட மாமேரு பூதரம் இடிபடவே தான் நிசாசரர் 
     இகல்கெட மாவேக நீடயில் ...... விடுவோனே

மரகத ஆகார ஆயனும் இரணிய ஆகார வேதனும்
     வசுவெனும் ஆகார ஈசனும் அடிபேண

மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
     வனசரர் ஆதாரமாகிய ...... பெருமாளே.


No comments:

Post a Comment