Sunday, July 29, 2018

வள்ளியூர்:

(பாண்டிய நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: பாண்டிய நாடு 

மாவட்டம்: திருநெல்வேலி 

திருக்கோயில்: அருள்மிகு கல்யாண சுப்பிரமண்யர் திருக்கோயில்

தல வகை: முருகன் திருக்கோயில்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

திருநெல்வேலியிலிருந்து 49 கி.மீ தூரத்திலும், திருச்செந்தூரிலிருந்து 66 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது இத்தலம்.

இத்தலத்திற்கு 20 கி.மீ தொலைவில் மற்றொரு திருப்புகழ் தலமான நாங்குநேரி ஸ்ரீநாகேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

(Google Maps: Arulmigu Sri Subrahmanya Swamy Temple, Vallioor, Tamil Nadu 627117, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தய்ய தானன ...... தனதான

அல்லில் நேரு(ம்) ......மினதுதானும்
அல்லதாகிய ...... உடல்மாயை
கல்லினேர அவ்வழிதோறும் 
கையும் நானும் ......உலையலாமோ
சொல்லி நேர்படு ...... முதுசூரர்
தொய்ய ஊர்கெட ...... விடும்வேலா
வல்லிமார் இருபுறமாக
வள்ளியூர்உறை ...... பெருமாளே.


No comments:

Post a Comment