Saturday, July 28, 2018

செங்குன்றாபுரம்:

(பாண்டிய நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: பாண்டிய நாடு 

மாவட்டம்: விருதுநகர் 

திருக்கோயில்: அருள்மிகு முருகன் திருக்கோயில் 

தல வகை: முருகன் திருக்கோயில்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

விருதுநகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது செங்குன்றபுரம், இத்தலத்திலிருந்து 1/2 கி.மீ தொலைவிலுள்ள 'குமரகுளம் கண்மாய் கரையில்' புராதனமான (திருப்புகழ் பெற்றுள்ள) முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. இவ்வாலயம் தற்பொழுது எல்லிங்கநாயகன்பட்டி எனும் சிற்றூரின் எல்லையில் இருப்பினும், சிறிது காலம் முன்பு வரையினில் செங்குன்றாபுரம் எல்லைக்குட்பட்ட பகுதியாகவே இச்சிற்றூரும் இருந்து வந்துள்ளது தெளிவு.

செங்குன்றாபுரத்தில் அமையப்பெற்றுள்ள மற்றொரு புராதனத் தலமான ஸ்ரீகைலாச நாதர் திருக்கோயிலையும் அவசியம் தரிசித்தல் வேண்டும்.

(Google Maps: Sengunrapuram, Tamil Nadu, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தந்தந் தானன தானன தானன
     தந்தந் தானன தானன தானன
          தந்தந் தானன தானன தானன ...... தனதான

வம்பும் கோபமுமேஅசுராதிகள்
     வந்தஞ்சாமலும் வானவர் பாலினில்
          மண்டும் போர்செயும் வேளைஅன்னோரைவெல் ...... வடிவேலா

தம்பம் போலுறு மூடர்கள் மீது!க
     ரும்பும் தேனிகர் பாஉரையாதுன
          தஞ்சம் பாரென ஓதுவன் நீஅருள் ...... புரிவாயே

அம்பென்றேவிழி சேர்குறமாது தன்
     இன்பம் தேடிமுன்னோர் கணியாகவும்
          அன்றுன் பால்வர மோகமதாஉற ...... அணைவோனே

செம்பொன் மாமதில் வானுற வாவிகள்
     எங்கும் தாமரை மாமலர் சூழ்தரு
          செங்குன்றாபுரம் வாழ்குமரா எனும் ...... முருகோனே.


No comments:

Post a Comment