Tuesday, July 24, 2018

மதுரை

(பாண்டிய நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: பாண்டிய நாடு 

மாவட்டம்: மதுரை 

திருக்கோயில்: அருள்மிகு அன்னை மீனாட்சி சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர்  திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்:

மதுரை ரயில் நிலையத்திலிருந்து 1.5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது உலகப் பிரசித்தமான இத்திருக்கோயில்.

(Google Maps: Sri Meenakshi Amman Temple, Madurai, Venmani Rd, Sellur, Madurai, Tamil Nadu 625002, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 11.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 

திருப்பாடல் 1: 
தனதன தனனத் தந்த தானன
     தனதன தனனத் தந்த தானன
          தனதன தனனத் தந்த தானன ...... தந்ததான

அலகில் அவுணரைக் கொன்ற தோளென
     மலைதொளை உருவச் சென்ற வேலென
          அழகிய கனகத் தண்டை சூழ்வன ...... புண்டரீக

அடியென முடியில் கொண்ட கூதளம் 
     என வனசரியைக் கொண்ட மார்பென
          அறுமுகமென நெக்கென்பெலாம் உருகன்புறாதோ

கலகல கலெனக் கண்ட பேரொடு
     சிலுகிடு சமயப் பங்க வாதிகள்
          கதறிய வெகுசொல் பங்கமாகிய ...... பொங்களாவும் 

கலைகளும் ஒழியப் பஞ்ச பூதமும் 
     ஒழியுற மொழியின் துஞ்சுறாதன
          கரணமும் மொழியத் தந்த ஞானமிருந்தவாறென்

இலகுகடலை கற்கண்டு தேனொடும் 
     இரதமுறு தினைப் பிண்டி பாகுடன்
          இனிமையில் நுகர்உற்றெம்பிரான்ஒரு ...... கொம்பினாலே

எழுதென மொழியப் பண்டு பாரதம்
     வடகன சிகரச் செம்பொன் மேருவில்
          எழுதிய பவளக் குன்று தாதையை ...... அன்றுசூழ

வலம்வரும் அளவில் சண்ட மாருத
     விசையினும் விசையுற்றெண் திசாமுக
          மகிதலம் அடையக் கண்டு மாசுணம் உண்டுலாவு

மரகத கலபச் செம்புள் வாகன
     மிசைவரு முருகச் சிம்புளேஎன
          மதுரையில் வழிபட்டும்பரார் தொழு ...... தம்பிரானே.

திருப்பாடல் 2: 
தானதன தத்த தானதன தத்த
     தானதன தத்த ...... தனதான

ஆனைமுகவற்கு நேரிளைய பத்த
     ஆறுமுக வித்தகமரேசா

ஆதிஅரனுக்கும் வேதமுதல்வற்கும்
     ஆரணமுரைத்த ...... குருநாதா

தானவர் குலத்தை வாள்கொடு துணித்த
     சால்சதுர் மிகுத்த ...... திறல்வீரா

தாள் இணைகளுற்று மேவிய பதத்தில்
     வாழ்வொடு சிறக்க ...... அருள்வாயே

வானெழு புவிக்கு மாலும் அயனுக்கும்
     யாவரொருவர்க்கும் அறியாத

மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க
     மாமயில் நடத்து ...... முருகோனே

தேனெழு புனத்தில் மான்விழி குறத்தி
     சேரமருவுற்ற ...... திரள்தோளா

தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை
     வேல்கொடு தணித்த ...... பெருமாளே.

திருப்பாடல் 3: 
தனன தனந்தன தனன தனந்தன
     தனன தனந்தன ...... தனதான

பரவு நெடுங்கதிர் உலகில் விரும்பிய
     பவனி வரும்படி ...... அதனாலே

பகர வளங்களும் நிகர விளங்கிய
     இருளை விடிந்தது ...... நிலவாலே

வரையினில் எங்கணும் உலவி நிறைந்தது
     வரிசை தரும்பதம் அதுபாடி

வளமொடு செந்தமிழ் உரைசெய அன்பரும் 
     மகிழ வரங்களும் அருள்வாயே

அரஹர சுந்தர அறுமுக என்றுனி
     அடியர் பணிந்திட ...... மகிழ்வோனே

அசல நெடுங்கொடி அமையுமை தன்சுத
     குறமகள் இங்கித ...... மணவாளா

கருதரு திண்புய சரவண குங்கும
     களபமம் அணிந்திடு ...... மணிமார்பா

கனக மிகும்பதி மதுரை வளம்பதி
     அதனில் வளர்ந்தருள் ...... பெருமாளே.

திருப்பாடல் 4: 
தனத்த தாத்தன தனதன தனதன
     தனத்த தாத்தன தனதன தனதன
          தனத்த தாத்தன தனதன தனதன ...... தனதனத் தனதான

பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை
     ஒருத்தர் வாய்ச்சுருள் ஒருவர்கை உதவுவர்
          பணத்தை நோக்குவர் பிணமது தழுவுவர் ...... அளவளப்பதனாலே

படுக்கை வீட்டுனுள் அவுஷதம் உதவுவர்
     அணைப்பர் கார்த்திகை வருதென உறுபொருள்
          பறிப்பர் மாத்தையில் ஒருவிசை வருகென ...... அவரவர்க்குறவாயே

அழைப்பர் ஆஸ்திகள் கருதுவர் ஒருவரை
     முடுக்கி ஓட்டுவர் அழிகுடி அரிவையர்
          அலட்டினால் பிணை எருதென மயலெனும் ...... நரகினில் சுழல்வேனோ

அவத்தமாய்ச் சில படுகுழி தனில்விழும்
     விபத்தை நீக்கிஉனடியவர் உடனெனை
          அமர்த்தி ஆட்கொள மனதினில் அருள்செய்து ...... கதிதனைத் தருவாயே

தழைத்த சாத்திர மறைபொருள் அறிவுள
     குருக்கள் போல்சிவ நெறிதனை அடைவொடு
          தகப்பனார்க்கொரு செவிதனில் உரைசெய்த ...... முருக வித்தகவேளே

சமத்தினால் புகழ் சனகியை நலிவுசெய்
     திருட்டு ராக்கதன் உடலது துணிசெய்து
          சயத்தயோத்தியில் வருபவன் அரிதிரு ...... மருமகப் பரிவோனே

செழித்த வேல்தனை அசுரர்கள் உடலது
     பிளக்க ஓச்சிய பிறகமரர்கள் பதி
          செலுத்தி ஈட்டிய சுரபதி மகள்தனை ...... மணமதுற்றிடுவோனே

திறத்தினால்பல சமணரை எதிரெதிர்
     கழுக்களேற்றிய புதுமையை இனிதொடு
          திருத்தமாய்ப்புகழ் மதுரையில் உறைதரும் ...... அறுமுகப் பெருமாளே.

திருப்பாடல் 5: 
தான தானதன தத்ததன தத்ததன
     தான தானதன தத்ததன தத்ததன
          தான தானதன தத்ததன தத்ததன ...... தத்ததான

சீத வாசனை மலர்க்குழல் பிலுக்கிமுகம் 
     மாய வேல்விழி புரட்டிநகை முத்தமெழ
          தேமல் மார்பினிள பொற்கிரி பளப்பளென ...... தொங்கலாரம் 

சேரும் ஓவியமெனச் சடமினுக்கி வெகு
     ஆசை நேசமும் விளைத்து இடையுற்றவரி
          சேலை காலில்விழ விட்டுநடையிட்டு மயிலின்கலாபச்

சாதியாமென வெருட்டி நடமிட்டு!வலை
     யான பேர்தமை இரக்கவகை இட்டுகொடி
          சாக நோய்பிணி கொடுத்திடர் படுத்துவர்கள் ...... பங்கினூடே

தாவி மூழ்கிமதி கெட்டவலம் உற்றவனை
     பாவமான பிறவிக்கடல் உழப்பவனை
          தாருலாவு பத பத்தியில் இருத்துவதும் எந்தநாளோ

வாதவூரனை மதித்தொரு குருக்களென
     ஞான பாதம்வெளியிட்டு நரியின் குழுவை
          வாசியாமென நடத்துவகை உற்றரசன் அன்புகாண

மாடை ஆடைதர பற்றிமுனகைத்து வைகை
     ஆறின் மீது நடமிட்டு மணெடுத்துமகிழ்
          மாது வாணிதரு பிட்டுநுகர் பித்தனருள் ...... கந்தவேளே

வேத லோகர்பொனிலத்தர் தவ சித்தரதி
     பார சீலமுனி வர்க்கம் முறையிட்டலற
          வேலையேவி அவுணக்குலம் இறக்கநகை ...... கொண்டசீலா

வேதமீண கமலக்கணர் மெய் பச்சை!ரகு
     ராமர் ஈண மயிலொக்க மதுரைப்பதியின்
          மேவி வாழமரர் முத்தர்சிவ பத்தர்பணி ...... தம்பிரானே.

திருப்பாடல் 6: 
தனனத் தந்தன தந்தன தனதன
     தனனத் தந்தன தந்தன தனதன
          தனனத் தந்தன தந்தன தனதன ...... தனதான

புருவச் செஞ்சிலை கொண்டிரு கணைவிழி
     எறியக் கொங்கை இரண்டெனும் மதகரி
          பொர முத்தம்தரும் இங்கித நயவிதம் அதனாலே

புகலச் சங்கிசை கண்டம்அதனிலெழ
     உருவச் செந்துவர் தந்ததரமும் அருள்
          புதுமைத் தம்பலமும் சில தரவரு மனதாலே

பருகித் தின்றிடல் அஞ்சுகமென !மன
     துருகிக் குங்கும சந்தன அதிவியர்
          படியச் சம்ப்ரம ரஞ்சிதம் அருள் கலவியினாலே

பலருக்கும் கடை என்றெனை இகழவும் 
     மயலைத் தந்தரு மங்கையர் தமைவெகு
          பலமில் கொண்டிடு வண்டனும் உனதடி ...... பணிவேனோ

திருவைக் கொண்டொரு தண்டக வனமிசை
     வரஅச்சம்கொடு வந்திடும் உழையுடல்
          சிதறக் கண்டக வெங்கரனொடு திரிசிரனோடு

திரமில் தங்கிய கும்பகன் ஒருபது
     தலைபெற்றும்பரை வென்றிடும் அவனொடு
          சிலையில் கொன்ற முகுந்தன் நலகமகிழ் ...... மருகோனே

மருவைத் துன்றிய பைங்குழல் உமையவள்
     சிவனுக்கன்பருள் அம்பிகை கவுரிகை
          மலையத்தன்தரு சங்கரி கருணைசெய் ...... முருகோனே

வடவெற்பங்கயல் அன்றணி குச!சர
     வணையில் தங்கிய பங்கய முகதமிழ்
          மதுரைச் சங்கிலி மண்டப இமையவர் ...... பெருமாளே.

திருப்பாடல் 7: 
தனன தான தானத் தனந்த
     தனன தான தானத் தனந்த
          தனன தான தானத் தனந்த ...... தனதான

முகமெலாநெய் பூசித் தயங்கும் 
     நுதலின் மீதிலே பொட்டணிந்து
          முருகு மாலை ஓதிக்கணிந்த ...... மடமாதர்

முதிரும் ஆர பாரத் தனங்கள்
     மிசையில் ஆவியாய் நெக்கழிந்து
          முடிய மாலிலே பட்டலைந்து ...... பொருள்தேடிச்

செகமெலாம் உலாவிக் கரந்து
     திருடனாகியே சற்றுழன்று
          திமிரனாகி ஓடிப் பறந்து ...... திரியாமல்

தெளியும் ஞானமோதிக் கரைந்து
     சிவபுராண நூலிற் பயின்று
          செறியுமாறு தாளைப் பரிந்து ...... தரவேணும்

அகரம் ஆதியாம் அக்ஷரங்கள் 
     அவனி கால்விணார் அப்பொடங்கி
          அடைய வேக ரூபத்திலொன்றி ...... முதலாகி

அமரர் காணவே அத்த மன்றில்
     அரிவை பாட ஆடிக் கலந்த
          அமல நாதனார் முற்பயந்த ...... முருகோனே

சகல வேத சாமுத்ரியங்கள்
     சமயமாறு லோகத்ரயங்கள்
          தரும நீதி சேர்தத்துவங்கள் ...... தவயோகம்

தவறிலாமல் ஆளப் பிறந்த
     தமிழ்செய் மாறர் கூன்வெப்பொடன்று
          தவிர ஆலவாயில் சிறந்த ...... பெருமாளே.

திருப்பாடல் 8: 
தானத்தன தானன தானன
     தானத்தன தானன தானன
          தானத்தன தானன தானன ...... தனதான

ஏலப்பனி நீரணி மாதர்கள்
     கானத்தினுமே உறவாடிடும்
          ஈரத்தினுமே வளை சேர்கரம் அதனாலும்

ஏமக்கிரி மீதினிலேகரு
     நீலக் கயமேறிய நேரென
          ஏதுற்றிடு மாதன மீதினும் ...... மயலாகிச்

சோலைக்குயில் போல் மொழியாலுமே 
     தூசுற்றிடு நூலிடையாலுமே 
          தோமில் கதலீ நிகராகிய ...... தொடையாலும்

சோமப்ரபை வீசிய மாமுக
     சாலத்திலும் மாகடு வேல்விழி
          சூதத்தினும் நான் அவமே தினம் உழல்வேனோ

ஆலப்பணி மீதினில் மாசறு
     ஆழிக்கிடையே துயில் மாதவன் 
          ஆனைக்கினிதாய் உதவீயருள் ...... நெடுமாயன்

ஆதித்திரு நேமியன் வாமனன் 
     நீலப்புயல் நேர்தரு மேனியன்
          ஆரத்துளவார் திரு மார்பினன் ...... மருகோனே

கோலக்கய மாவுரி போர்வையர்
     ஆலக்கடு ஆர்களர் நாயகர்
          கோவிற் பொறியால்வரு மாசுத ...... குமரேசா

கூர்முத்தமிழ் வாணர்கள் வீறிய
     சீரற்புத மாநகராகிய
          கூடற்பதி மீதினில் மேவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 9: 
தானத் தனதான தானத் ...... தனதான

நீதத் துவமாகி .. நேமத் ...... துணையாகிப்
பூதத் தயவான .. போதைத் ...... தருவாயே
நாதத் தொனியோனே .. ஞானக் ...... கடலோனே
கோதற்றமுதானே .. கூடற் ...... பெருமாளே.

திருப்பாடல் 10: 
தனதன தத்தந் தான தானன
     தனதன தத்தந் தான தானன
          தனதன தத்தந் தான தானன ...... தனதான

மனநினை சுத்தம்  சூதுகாரிகள்
     அமளி விளைக்கும் கூளி மூளிகள்
          மதபல நித்தம் பாரி நாரிகள் அழகாக

வளைகுழை முத்தும் பூணும் வீணிகள்
     விழலிகள் மெச்சுண்டாடி பாடிகள்
          வரமிகு வெட்கம் போல ஓடிகள் ...... தெருவூடே

குனகிகள் பக்ஷம் போல பேசிகள்
     தனகிகள் இச்சம் பேசி கூசிகள்
          குசலிகள் வர்க்கம் சூறைகாரிகள் ...... பொருளாசைக்

கொளுவிகள் இஷ்டம் பாறி வீழ்பட
     அருளமுதத்தின் சேருமோர் வழி
          குறிதனில் உய்த்துன் பாதமேறிட ...... அருள்தாராய்

தனதன தத்தந் தான தானன
     டுடுடுடு டுட்டுண் டூடு டூடுடு
          தகுதிகு தத்தந் தீத தோதக ...... எனபேரி

தவில் முரசத்தம் தாரை பூரிகை
     வளைதுடி பொற்கொம்பார சூரரை
          சமர்தனில் முற்றும் பாறி நூறிட ...... விடும்வேலா

தினைவனம் நித்தம் காவலாளியள்
     நகைமுறை முத்தின் பாவை மான்மகள்
          திகழ்பெற நித்தம் கூடியாடிய ...... முருகோனே

திரிபுர நக்கன் பாதி மாதுறை
     அழகிய சொக்கன் காதிலோர் பொருள்
          செலஅருளித்தென் கூடல்மேவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 11: 
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
     தத்ததன தத்ததன ...... தனதான

முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட
     மொய்த்தகிரி முத்திதரு ...... எனவோதும்

முக்கண்இறைவர்க்கும்அருள் வைத்த முருகக்கடவுள்
     முப்பது முவர்க்கசுரர் அடிபேணி

பத்துமுடி தத்தும்வகை உற்றகணி விட்டஅரி
     பற்குனனை வெற்றிபெற ...... ரதமூரும்

பச்சைநிறம் உற்றபுயல் அச்சமற வைத்தபொருள்
     பத்தர் மனதுற்றசிவம் ...... அருள்வாயே

தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு
     தெய்த்ததென தெய்தததென ...... தெனனான

திக்குவென மத்தளம் இடக்கைதுடி தத்ததகு
     செச்சரிகை செச்சரிகை ...... எனஆடும்

அத்தனுடன் ஒத்தநட நித்ரிபுவனத்தி நவ
     சித்தியருள் சத்தியருள் ...... புரிபாலா

அற்பவிடை தற்பமது முற்றுநிலை பெற்றுவளர் 
     அற்கனக பத்மபுரி ...... பெருமாளே.


No comments:

Post a Comment