(பாண்டிய நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: பாண்டிய நாடு
மாவட்டம்: தேனி
திருக்கோயில்: அருள்மிகு அறம் வளர்த்த நாயகி சமேத ஸ்ரீராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயில் (பால சுப்பிரமணியர் திருக்கோயில் எனவும் பிரசித்தமாக குறிக்கப் பெறுகின்றது)
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
பெரியகுளத்திலிருந்து 2.5 கி.மீ தூரத்திலும், மதுரையிலிருந்து 80 கி.மீ தூரத்திலும் இத்தலம் அமைந்துள்ளது.
(Google Maps: Balasubramaniyar Temple, Varaha River, Periyakulam, Tamil Nadu 625601, India)
(Google Maps: Balasubramaniyar Temple, Varaha River, Periyakulam, Tamil Nadu 625601, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனந்த தானனத் தனதன ...... தனதான
தரங்க வார்குழல் தநுநுதல் ...... விழியாலம்
தகைந்த மாமுலைத் துடியிடை ...... மடமாதர்
பரந்த மாலிருள் படுகுழி ...... வசமாகிப்
பயந்து காலனுக்குயிர்கொடு ...... தவியாமல்
வரம் தராவிடில் பிறரெவர் ...... தருவாரே
மகிழ்ந்து தோகையில் புவிவலம் ...... வருவோனே
குரும்பை மாமுலைக் குறமகள் ...... மணவாளா
குளந்தை மாநகர்த் தளியுறை ...... பெருமாளே.
No comments:
Post a Comment