Sunday, July 29, 2018

ஆய்க்குடி:

(பாண்டிய நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: பாண்டிய நாடு 

மாவட்டம்: திருநெல்வேலி 

திருக்கோயில்: அருள்மிகு பால சுப்ரமண்ய சுவாமி திருக்கோயில்

தல வகை: முருகன் திருக்கோயில்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

தென்காசியிலிருந்து 6.5 கி.மீ தூரத்திலும், செங்கோட்டையிலிருந்து 15 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது இத்தலம்.

இத்தலத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் மற்றொரு திருப்புகழ் தலமான இலஞ்சி குமாரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

(Google Maps: Shri Balasubrahmanya Swami Temple, Ayikudi, Tamil Nadu 627852, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தாத்தனத் தானதன தாத்தனத் தானதன
     தாத்தனத் தானதன ...... தனதான

வாட்படச் சேனைபட ஓட்டிஒட்டாரை!இறு
     மாப்புடைத்தாள் அரசர் ...... பெருவாழ்வும்

மாத்திரைப் போதில் இடுகாட்டினில் போமெனஇல்
     வாழ்க்கை விட்டேறும் அடியவர் போலக்

கோட்படப் பாதமலர் பார்த்திளைப்பாற வினை
     கோத்தமெய்க் கோலமுடன் ...... வெகுரூபக்

கோப்புடைத்தாகி அலமாப்பினில் பாரிவரு
     கூத்தினிப் பூரையிட ...... அமையாதோ

தாட்படக் கோபவிஷ பாப்பினில் பாலன்மிசை
     சாய்த்தொடுப் பாரவுநிள் ...... கழல்தாவிச்

சாற்றுமக் கோரவுரு கூற்றுதைத்தார் மவுலி
     தாழ்க்க வஜ்ராயுதனும்  ...... இமையோரும்

ஆட்படச் சாம பரமேட்டியைக் காவலிடும்
     ஆய்க்குடிக் காவல உததிமீதே

ஆர்க்கும் அத்தானவரை வேற்கரத்தால் வரையை
     ஆர்ப்பெழச் சாடவல ...... பெருமாளே!!!

No comments:

Post a Comment