(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: கொங்கு நாடு
மாவட்டம்: கோவை
திருக்கோயில்: அருள்மிகு மேல்முடி ரங்கநாதர் திருக்கோயில்
(பன்நெடுங்காலமாய் முருகன் திருக்கோயிலாக இருந்துப் பின்னர் கடந்த 50 வருடங்களாக பெருமாள் ஆலயமாக அறியப்பட்டு வந்திருக்கக் கூடும் என்று ஆய்வுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன)
தல வகை: முருகன் திருக்கோயில்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
அமைவிடம் (செல்லும் வழி):
('அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' நூலாசிரியரான திரு.வலையப் பேட்டை கிருஷ்ணன் அவர்களின் அரிய பெரிய பிரயத்தனத்தினால் இத்தலம் கண்டறியப் பெற்றுள்ளது)
(கோவை ரயில் நிலையத்திலிருந்து 18 கி.மீ தூரத்திலுள்ள) 'சின்னத் தடாகம்' எனும் பகுதியிலிருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இம்மலை. 7 கி.மீ தூரம் மலைப்பாதையில் பயணிக்க வேண்டும், பாதை செம்மையாக இல்லை, சுமார் 2 மணி நேர நடைப்பயணத்தில் மலைக்கோயிலை அடையலாம்.
ஆலயத்தில் மூன்று செவ்வகக் கற்கள் எழுந்தருளப் பெற்றுள்ளன, இதனைத் தற்பொழுது பெருமாள் என்கின்றனர், சமீப காலத்தில் முருகப் பெருமான் உள்ளிட்ட சில விக்கிரகத் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப் பெற்றுள்ளன.
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனன தனதன தனன தனதன
தனன தனதன ...... தனதான
கருடன் மிசைவரு கரிய புயலென
கமல மணியென ...... உலகோரைக்
கதறி அவர்பெயர் செருகி மனமது
கருதி முதுமொழி ...... களைநாடித்
திருடிஒருபடி நெருடி அறிவிலர்
செவியில் நுழைவன ...... கவிபாடித்
திரியும் அவர்சில புலவர் மொழிவது
சிறிதும் உணர்வகை ...... அறியேனே
வருடை இனமது முருடு படும்அகில்
மரமும் மருதமும் அடிசாய
மதுரமெனும்நதி பெருகி இருகரை
வழிய வகைவகை ...... குதிபாயும்
குருடி மலையுறை முருக குலவட
குவடு தவிடெழ ...... மயிலேறும்
குமர குருபர திமிர தினகர
குறைவில் இமையவர் ...... பெருமாளே.
No comments:
Post a Comment