Saturday, September 29, 2018

காமத்தூர் (காமக்கூர்):

(நடு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: நடு நாடு

மாவட்டம்: திருவண்ணாமலை

திருக்கோயில்: அருள்மிகு அமிர்தாம்பிகை சமேத ஸ்ரீசந்திரசேகர சுவாமி திருக்கோயில்

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

ஆரணியிலிருந்து 8 கி.மீ தூரத்திலும், ஆற்காட்டிலிருந்து 35 கி.மீ தூரத்திலும், திருவண்ணாமலையிலிருந்து 60 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது இத்தலம்.

கூடுதலாக அன்னை ஸ்ரீகாமாட்சி சன்னிதியையும், ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்விக்கப் பெற்ற சக்கர யந்திரத்தையும்  இத்திருக்கோயிலில் தரிசிக்கலாம்.

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தானத் தானத் தானத் தானத்
     தானத் தானத் ...... தனதானா

ஆகத்தே தப்பாமல் சேர்!இக்
     கார்கைத் தேறல் ...... கணையாலே

ஆலப் பாலைப் போலக் !கோலத்
     தாயக் காயப் ...... பிறையாலே

போகத்தேசற்றே தன் பாயல் 
     பூவில் தீயில் ...... கருகாதே

போதக் காதல் போகத் தாளைப்
     பூரித்தாரப் ...... புணராயே

தோகைக்கே உற்றேறித் தோயம் 
     சூர் கெட்டோடப் ...... பொரும்வேலா

சோதிக் காலைப் போதக் கூவத்
     தூவல் சேவல் ...... கொடியோனே

பாகொத்தே சொல் பாகத்தாளைப்
     பாரித்தார் நல் ...... குமரேசா

பாரில் காமத்தூரில் சீலப்
     பாலத் தேவப் ...... பெருமாளே.

(2019 ஜனவரி மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)



No comments:

Post a Comment