Thursday, September 27, 2018

வேப்பஞ்சந்தி (வேப்பூர்):

(நடு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: நடு நாடு

மாவட்டம்: கடலூர் 

திருக்கோயில்: அருள்மிகு வில்வவனேஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

விருத்தாசலத்திலிருந்து சுமார் 23 கி.மீ தொலைவிலும், உளுந்தூர்பேட்டையிலிருந்து 25 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது வேப்பஞ்சந்தி (தற்கால வழக்கில் வேப்பூர்). திருப்புகழ் தலமென்றுப் பிரசித்தமாக அறியப் பெறாத நிலையிலுள்ள ஆலயமிது என்றால் அது மிகையில்லை. ஏகாந்தமான சூழலில் அமைந்துள்ள திருத்தலம், ஆலயத் திருக்குளம் என்று கூற இயலா விட்டாலும், திருக்கோயிலுக்கு அருகிலுள்ள சிறு ஏரி இத்தலத்திற்கு மேலும் அழகு சேர்க்கின்றது.

சிவமூர்த்தி வில்வவனேஸ்வரர் எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றார், அம்பிகை பிரஹந்நாயகி. பிரகாரச் சுற்றின் துவக்கத்திலேயே திருப்புகழ் தெய்வம் இரு தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரிப் பெருமான் இம்மூர்த்திக்கென ஒரு திருப்புகழ் திருப்பாடலை அருளியுள்ளார், 

(Google Maps: Sri Brahannayagi Sametha Sri Villvaneshvarar Temple, 30A/1, North St, Veppur, Tamil Nadu 606304)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தாத்தந் தந்தத் தந்தத் தனனத் ...... தனதான

நாட்டம் தங்கிக் கொங்கைக் குவடில் ...... படியாதே
நாட்டும் தொண்டர்க்கண்டக் கமலப் ...... பதம்ஈவாய்
வாட்டம் கண்டுற்றண்டத்தமரப் ...... படைமீதே
மாற்றம் தந்துப் பந்திச் சமருக்கெதிரானோர்
கூட்டம் கந்திச் சிந்திச் சிதறப் ...... பொருவோனே
கூற்றன் பந்திச் சிந்தைக் குணமொத்தொளிர்வேலா
வேட்டம் தொந்தித் தந்திப் பரனுக்கிளையோனே
வேப்பஞ்சந்திக் கந்தக் குமரப் ...... பெருமாளே

(2020 நவம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:

Post a Comment