(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: சோழ நாடு (காவிரி வடகரை)
மாவட்டம்: தஞ்சாவூர்
திருக்கோயில்: (ஏழு திருக்கோயில்கள்)
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
சப்தஸ்தானமாகிய ஏழு திருக்கோயில்களும் தஞ்சை மாவட்டத்திலேயே அமைந்துள்ளது. இவைகளில், 'தென்கரையிலுள்ள திருப்பூந்துருத்தி மற்றும் வடகரையிலுள்ள திருவையாறு; திருநெய்த்தானம் ஆகிய மூன்று தலங்களுக்கும்' தனித்தனித் திருப்பாடல்களையும், ஏழு தலங்களுக்குமாய்ச் சேர்த்து ஒரு திருப்பாடலையும் அருணகிரிப் பெருமான் அருளிச் செய்துள்ளார்.
மீதமுள்ள 4 தலங்களில், திருப்பழனம் (ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்) வடகரையிலும், திருச்சோற்றுத்துறை (ஓதவனேஸ்வரர் திருக்கோயில்), திருக்கண்டியூர் (பிரம சிர கண்டீஸ்வரர் திருக்கோயில்), திருவேதிக்குடி (வேதபுரீஸ்வரர் திருக்கோயில்) ஆகிய தலங்கள் தென்கரையிலும் அமைந்துள்ளன.
மேற்குறித்துள்ள ஏழு தலங்களையும் தரிசித்தால் சப்தஸ்தான திருப்புகழ் தலத்தினைத் தரிசித்ததாகக் கொள்ளலாம்.
Google Maps:
SCN011 - Sri Pushpavana Nathar Temple, Big Temple Street, Thiruppoonthuruthi, Tamil Nadu 613103, India
Sri Aiyarappar Temple, SH 22, Thiruvaiyaru, Tamil Nadu 613204, India)
Sri Neyyadiyappar Temple, அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோவில் தில்லைஸ்தானம் அஞ்சல் தஞ்சாவூர் மாவட்டம் PIN - 613203, Thillaisthanam, Tamil Nadu 613203, India)
Apathsahayar Temple, Thirupazhanam, SH 22, SH 22, Thirupazhanam, Tamil Nadu 613204, India)
Odhavaneswarar Temple (Siva Temple), Ayyampettai-Thirukkandiyur Road, Thiruchotruthurai, Tamil Nadu 614206, India)

திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனன தானன தான தனத்தன
தனன தானன தான தனத்தன
தனன தானன தான தனத்தன ...... தனதான
மருவுலாவிடும் ஓதி குலைப்பவர்
சமர வேலெனும் நீடு விழிச்சியர்
மனதிலே கபடூரு பரத்தையர் அதிகேள்வர்
மதனனோடுறழ் பூசல்இடைச்சியர்
இளைஞர் ஆருயிர் வாழு முலைச்சியர்
மதுர மாமொழி பேசு குணத்தியர் ...... தெருமீதே
சருவி யாரையும் வாஎனழைப்பவர்
பொருளிலேவெகு ஆசை பரப்பிகள்
சகல தோதக மாயை படிப்பரை ...... அணுகாதே
சலச மேவிய பாத நினைத்துமுன்
அருணை நாடதிலோது திருப்புகழ்
தணிய ஓகையில்ஓத எனக்கருள் ...... புரிவாயே
அரிய கானக மேவு குறத்திதன்
இதணிலேசில நாளும் மனத்துடன்
அடவி தோறுமெ வாழியல்பத்தினி ...... மணவாளா
அசுரர் வீடுகள் நூறு பொடிப்பட
உழவர் சாகரம் ஓடிஒளித்திட
அமரர் நாடுபொன்மாரி மிகுத்திட ...... நினைவோனே
திருவின் மாமரமார் பழனப்பதி
அயிலும் சோறவை ஆளும் துறைப்பதி
திசையில் நான்மறை தேடிய முற்குடி ...... விதியாதிச்
சிரமும் மாநிலம் வீழ் தருமெய்ப்பதி
பதும நாயகன் வாழ்பதி நெய்ப்பதி
திருவையாறுடன் ஏழு திருப்பதி ...... பெருமாளே.
No comments:
Post a Comment