Tuesday, October 30, 2018

திருப்பழுவூர் (கீழ்ப்பழுவூர்)

(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (காவிரி வடகரை)

மாவட்டம்: அரியலூர்

திருக்கோயில்: அருள்மிகு ஆலந்துறை நாதர் (வடமூலநாதர்) திருக்கோயில்

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

திருச்சியிலிருந்து 58 கி.மீ தூரத்திலும், அரியலூரிலிருந்து 13 கி.மீ தூரத்திலும், கீழ்ப்பழுவூரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

(Google Maps: Sri Aalanthuraiyar or Vadamoolanathar Shiva Temple, National Highway 227, Paluvur, Tamil Nadu 621707, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனன தந்தன தாத்த தானன
     தனன தந்தன தாத்த தானன
          தனன தந்தன தாத்த தானன ...... தனதான

விகட சங்கட வார்த்தை பேசிகள்
     அவல மங்கையர் ஊத்தை நாறிகள்
          விரிவடங்கிட மாற்றும் வாறென ...... வருவார்தம்

விதம் விதங்களை நோக்கி ஆசையில் 
     உபரிதங்களை மூட்டியே தம
          இடுமருந்தொடு சோற்றையேயிடு ...... விலைமாதர்

சகல மஞ்சனம்ஆட்டியே முலை
     பட வளைந்திசை மூட்டியேவரு
          சரச இங்கித நேத்தியாகிய ...... சுழலாலே

சதிமுழங்கிட வாய்ப் பணானது
     மலர உந்தியை வாட்டியேயிடை
          தளரவும் கணையாட்டும் வேசியர் உறவாமோ

திகிரி கொண்டிருளாக்கியே இரு
     தமையர் தம்பியர் மூத்த தாதையர்
          திலக மைந்தரையேற்ற சூரரை ...... வெகுவான

செனமடங்கலும் மாற்றியேஉடல்
     தகர அங்கவர் கூட்டையேநரி
          திருகியுண்டிட ஆர்த்த கூளிகள் அடர்பூமி

அகடு துஞ்சிட மூட்டு பாரத
     முடிய அன்பர்களேத்தவே அரி
          அருளும் மைந்தர்கள் வாழ்த்து மாயவன் ...... மருகோனே

அமரர் அந்தணர் போற்றவேகிரி
     கடலதிர்ந்திட நோக்கு மாமயில்
          அழகொடும் பழுவூர்க்குள் மேவிய ...... பெருமாளே


(2024 நவம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

























No comments:

Post a Comment