Wednesday, November 28, 2018

திருவீழிமிழலை

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (தென்கரை)

மாவட்டம்: திருவாரூர்

திருக்கோயில்: அருள்மிகு வீழிநாதேஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்), சேந்தனார் (திருவிசைப்பா)


தலக் குறிப்புகள்

திருவாரூரிலிருந்து 25 கி.மீ தூரத்திலும், மயிலாடுதுறையிலிருந்து 30 கி.மீ தூரத்திலும், பூந்தோட்டம் எனும் சிற்றூரிலிருந்து 10 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது இத்திருக்கோயில்.

(Google Maps: Sri Vezhinatheswarar Mapillaiswamy Temple, East Coast Rd, Thiruveezhimizhalai, Tamil Nadu 609501, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனனா தனனா தனனா தனனா
     தனனா தனனா ...... தனதான

எருவாய் கருவாய் தனிலே உ ருவாய் 
     இதுவே பயிராய் ...... விளைவாகி

இவர்போய் அவராய் அவர்போய் இவராய் 
     இதுவே தொடர்பாய் ...... வெறிபோல

ஒருதாய் இருதாய் பலகோடியதாய் 
     உடனே அவமாய் அழியாதே

ஒருகால் முருகா பரமா குமரா
     உயிர்கா எனவோதருள் தாராய்

முருகா எனவோர் தரம்ஓதடியார்
     முடிமேல் இணைதாள் அருள்வோனே

முநிவோர் அமரோர் முறையோ எனவே
     முதுசூர்உரமேல் ...... விடும்வேலா

திருமால் பிரமா அறியாதவர்சீர்
     சிறுவா திருமால் ...... மருகோனே

செழுமா மதில்சேர் அழகார் பொழில்சூழ்
     திருவீழியில்வாழ் ...... பெருமாளே.

No comments:

Post a Comment