Thursday, November 29, 2018

தென்கடம்பந்துறை (கடம்பர் கோயில்)

(சோழ நாடு (காவிரி தென்கரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (தென்கரை)

மாவட்டம்: கரூர் 

திருக்கோயில்: அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், அப்பர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

கரூரிலிருந்து 42 கி.மீ தூரத்திலும், குளித்தலையிலிருந்து 1 கி.மீ தூரத்திலிருந்தும் அமைந்துள்ளது இத்திருக்கோயில் (தற்கால வழக்கில் "கடம்பர் கோயில்" என்று இத்தலம் அறியப்பட்டு வருகின்றது).

(Google Maps: Kadamba Vaneswarar, Kulithalai, Kadambar Kovil St, Kulithalai, Tamil Nadu 639104, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந்
     தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந்
          தனதனன தந்தனந் தந்தனந் தந்தனந் ...... தனதான

புணரியும் அனங்கன் அம்பும் சுரும்பும்!கருங்
     கயலினொடு கெண்டையும் சண்டனும் கஞ்சமும்
          புதுநில வருந்தியும் துஞ்சுநஞ்சும் பொருப்பெறிவேலும்

பொருவென இகன்றகன்று அங்குமிங்கும்!சுழன்
     றிடை கடை சிவந்து வஞ்சம் பொதிந்திங்கிதம்
          புவிஇளைஞர் முன் பயின்றம்பொனின் கம்பிதக் ...... குழை மோதிக்

குணலையொடும் இந்த்ரியம் சஞ்சலம் கண்டிடும்
     படிஅமர் புரிந்தரும் சங்கடம் சந்ததம் 
          கொடுமைசெய் துசம்கொடும் சிங்கி தங்கும் கடைக் ...... கணினார்பால்

குலவுபல செந்தனம் தந்து தந்தின்புறும் 
     த்ரிவித கரணங்களும் கந்தநின் செம்பதம் 
          குறுகும்வகை அந்தியும் சந்தியும் தொந்தம் அற்றமைவேனோ

துணர்விரி கடம்பமென் தொங்கலும் பம்புறும்
     புழுகும் அசலம்பசும் சந்தனம் குங்குமம் 
          தொகு களபமும் துதைந்தென்று நன்கொன்றும் பத்திருதோளும் 

தொலைவில் சண்முகங்களும் தந்த்ர மந்த்ரங்களும்
     பழநிமலையும் பரங்குன்றமும் செந்திலும் 
          துதிசெயுமெய் அன்பர்தம் சிந்தையும் சென்று செய்ப் ...... பதிவாழ்வாய்

கணபண புயங்கமும் கங்கையும் திங்களும் 
     குரவும் அறுகும் குறும் தும்பையும் கொன்றையும் 
          கமழ்சடில சம்புவும் கும்பிடும் பண்புடைக் ...... குருநாதா

கன குடகில் நின்ற குன்றம் தரும்  சங்கரன்
     குறுமுனி கமண்டலம் கொண்டுமுன் கண்டிடும் 
          கதிசெய்நதி வந்துறும் தென்கடம்பந்துறைப் ...... பெருமாளே.

No comments:

Post a Comment