Monday, October 29, 2018

பந்தணைநல்லூர்

(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: சோழ நாடு (காவிரி வடகரை)

மாவட்டம்: தஞ்சாவூர் 

திருக்கோயில்: அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்.

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

கும்பகோணத்திலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவிலும், திருப்பனந்தாளிலிருந்து 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது பந்தணைநல்லூர். ஞானசம்பந்த மூர்த்தியாலும், நாவுக்கரசு சுவாமிகளாலும் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. 

சிவபரம்பொருள் பசுபதீஸ்வரராகவும், இறைவி வேணுபுஜாம்பிகையாகவும் எழுந்தருளி இருக்கின்றனர். திருப்பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் கருவறைச் சன்னிதிக்குத் தடுப்பு வைக்கப் பெற்றுள்ளது. இறைவரைச் சற்று தூரத்திலிருந்தே தரிசித்துப் பணிந்தோம். சிறிய திருமேனியர். அம்பிகை அற்புத அலங்காரத்தோடு கூடிய ஆச்சர்யமான திருக்கோலத்தில், அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாகத் திருக்காட்சி தருகின்றாள். 

அம்பிகை பசுவடிவில் இறைவரைப் பூசித்து வர, இறைவர் திருக்காட்சி அளித்து அம்மையை மணம் புரிந்தருளிய திருத்தலம்.

வெளிப்பிரகாரச் சுற்றின் பின்புறம், கந்தப் பெருமான் ஆறு திருமுகங்கள் பன்னிரு திருக்கரங்களுடன், இரு தேவியரும் உடனிருக்க, மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரியார் இம்மூர்த்தியை 7 திருப்பாடல்களால் போற்றிப் பரவியுள்ளார்.

Google Maps: Shri Shiva Temple, Pandanallur, Tamil Nadu 609807, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 7.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனதந்தன தனதந்தன தனதந்தன தான
     தனதந்தன தனதந்தன தனதந்தன தான
          தனதந்தன தனதந்தன தனதந்தன தானத் ...... தனதான

இதசந்தன புழுஞ்ம்சில மணமுந்தக வீசி
     அணையுந்தன கிரிகொண்டிணை அழகும்பொறி சோர
          இருளுங்குழல் மழையென்ப நவரசங்கொளுமோகக் ...... குயில்பொலே

இடையுங்கொடி மதனன்தளை இடுகுந்தள பார
     இலையுஞ்சுழி தொடை ரம்பையும் அமுதந்தடமான
          இயலங்கடி தடமும்பொழி மதவிஞ்சைகள் பேசித் ...... தெருமீதே

பதபங்கயம் அணையும்பரி புரம்அங்கொலி வீச
     நடைகொண்டிடு மயிலென்பன கலையும் சுழலாட
          பரிசும்பல மொழியும்சில கிளிகொஞ்சுகை போலப் ...... பரிவாகிப்

பணம் உண்டெனதவலம்படு நினைவுண்டிடை சோர
     இதுகண்டவர் மயல்கொண்டிட மனமுஞ்செயல் மாற
          பகலும்சில இரவுந்துயில் சிலவஞ்சகர் மாயைத் ...... துயர்தீராய்

திதிதிந்திமி தனதந்தன டுடுடுண்டுடு பேரி
     டகுடங்குகு டிகுடிங்குகு படகம்துடி வீணை
          செகணஞ்செக எனவும்பறை திசையெங்கினும் மோதக் ...... கொடுசூரர்

சிரமுங்கர உடலும்பரி இரதங்கரி யாளி
     நிணமும் குடல் தசையுங்கடல் என செம்புனலோட
          சிலசெம்புள்கள் கழுகுஞ்சிறு நரியுங்கொடியாடப் ...... பொரும்வேலா

மதவெங்கயம் உரிகொண்டவர் மழுவுங்கலை பாணி
     இடமன்பொடு வளரும்சிவை புகழ்சுந்தரி ஆதி
          வளருந்தழல் ஒளிர்சம்பவி பரைவிண்டிள தோகைத் ...... தருசேயே

வதனஞ்சசி அமுதம்பொழி முலைநன்குற !மாதொ
     டிசையுஞ்சுரர் தருமங்கையொடிதயங் களிகூர
          வரு பந்தணை நகர்வந்துறை விமலன்குருநாதப் ...... பெருமாளே

திருப்பாடல் 2:
தனதன தந்த தனதன தந்த
     தனதன தந்த ...... தனதான

இருவினை அஞ்ச வருவினை கெஞ்ச
     இருள்பிணி துஞ்ச ...... மலமாய

எனதிடர் மங்க உனதருள் பொங்க
     இசைகொடு துங்க ...... புகழ்கூறித்

திருமுக சந்த்ர முருககடம்ப
     சிவசுத கந்த ...... குகவேல

சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சு
     திகழநடஞ்செய் ...... கழல்தாராய்

மருதொடு கஞ்சன் உயிர்பலி கொண்டு
     மகிழரி விண்டு ...... மருகோனே

வதைபுரிகின்ற நிசிசரர் குன்ற
     வலம்வரு செம்பொன் ...... மயில்வீரா

அருகுறு மங்கையொடு விடையுந்தும் 
     அமலனுகந்த ...... முருகோனே

அருள்செறி பந்தணையில் இருமங்கை
     அமளி நலங்கொள் ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தனன தந்தன தானன தானன
     தனன தந்தன தானன தானன
          தனன தந்தன தானன தானன ...... தனதான

எகினினம்பழி நாடகமாடிகள்
     மயிலெனும் செயலார்அகி நேரல்குல்
          இசையிடும் குரலார் கடனாளிகள் ...... வெகுமோகம்

எனவிழுந்திடு வார்முலை மேல்துகில்
     அலையவும் திரிவார் எவராயினும்
          இளகுகண் சுழல்வார் விலை வேசியர் ...... வலைவீசும்

அகித வஞ்சக பாவனையால்மயல்
     கொடுவிழுந்திட ராகமும் நோய்பிணி
          அதிகமுங்கொடு நாயடியேன்இனி ...... உழலாமல்

அமுத மந்திர ஞானொபதேசமும்
     அருளிஅன்புறவே முருகாவென
          அருள்புகுந்திடவே கழலார்கழல் ...... அருள்வாயே

ககன விஞ்சையர் கோவெனவே!குவ
     டவுணர் சிந்திடவே கடல் தீவுகள்
          கமற வெந்தழல் வேல்விடு சேவக ...... முருகோனே

கரிநெடும்புலி தோலுடையார் எனை
     அடிமை கொண்ட சுவாமி சதாசிவ
          கடவுள்எந்தையர் பாகம் விடாஉமை ...... அருள்பாலா

செகமும் அண்டமும் ஓருருவாய்நிறை
     நெடிய அம்புயல் மேனியனார்அரி
          திருவுறைந்துள மார்பகனார்திரு ...... மருகோனே

தினைவனந்தனில் வாழ்வளி நாயகி
     வளர்தனம்புதை மார்பழகா மிகு
          திலக பந்தணை மாநகர் மேவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 4:
தந்தன தனத்த தந்தன தனத்த
     தந்தன தனத்த ...... தனதான

கும்பமும் நிகர்த்த கொங்கையை வளர்த்த
     கொஞ்சு கிளியொத்த ...... மொழிமானார்

குங்கும பணிக்குள் வண்புழுகுவிட்ட
     கொந்தளகம் வைத்த ...... மடவார்பால்

வம்புகள் விளைத்து நண்புகள் கொடுத்து
     மங்கி நரகத்தில் ...... மெலியாமல்

வண்கயிலை சுற்றி வந்திடு பதத்தை
     வந்தனை செய்புத்தி ...... தருவாயே

பம்பு நதியுற்ற பங்கொரு சமர்த்தி
     பண்டுள தவத்தில் அருள்சேயே

பைம்புயல்உடுத்த தண்டலை மிகுத்த
     பந்தணை நகர்க்குள் உறைவோனே

சம்புநிழலுக்குள் வந்தவதரித்த
     சங்கரர் தமக்கும் இறையோனே

சங்கணி கரத்தர் உம்பர் பயமுற்ற
     சஞ்சலம் அறுத்த ...... பெருமாளே.

திருப்பாடல் 5:
தந்ததன தந்ததன தனதனத்
     தந்ததன தந்ததன தனதனத்
          தந்ததன தந்ததன தனதனத் ...... தனதான

கெண்டைகள் பொருங்கண் மங்கையர்மலர்க்
     கொண்டைகள் குலுங்க நின்றருகினில் 
          கெஞ்சுபலுடன் குழைந்தமளியில் ...... கொடுபோய்வண்

கெந்தபொடியும் !புனைந்துறவணைத்
     தின்பவசனம் தருந்தொழில் !அடுக்
          கின்றமயலின் படும் துயரறப் ...... ப்ரபைவீசும் 

தண்டைகள் கலின்கலின் கலினெனக்
     கிண்கிணி கிணின்கிணின் கிணினெனத்
          தண்கொலுசுடன் சிலம்பசையஉள் ..... பரிவாகிச்

சந்ததமும் வந்திரும் பரிமளப்
     பங்கய பதங்களென் கொடுவினைச்
          சஞ்சலமலம் கெடும்படிஅருள் .... புரிவாயே

தொண்டர்கள் சரண்சரண் சரணெனக்
     கொம்புகள் குகும்குகும் குகுமெனத்
          துந்துமி திமிந்திமிந் திமினெனக் ...... குறுமோசை

சுந்தரிமணம் செயும் சவுரியக்
     கந்தகுற வஞ்சி தங்கருவனத்
          துங்கமலையும் புரந்தமரருக்கிடர் கூரும்

பண்டர்கள் புயங்களும் பொடிபடக்
     கண்டவ ப்ரசண்ட குஞ்சரியெழில் 
          பைந்தரு வனம் புரந்தகழ்எயில் ...... புடைசூழும்

பந்திவரு மந்திசெண்பகம்அகில் 
     சந்துசெறி கொன்றை துன்றியவனப்
          பந்தணையில் வந்திடும் சரவணப் ...... பெருமாளே.

திருப்பாடல் 6:
தான தந்ததன தான தந்ததன
     தான தந்ததன தான தந்ததன
          தான தந்ததன தான தந்ததன ...... தந்ததான

தேனிருந்த இதழார் பளிங்கு!நகை
     யார்குளிர்ந்த மொழியார் சரங்கள்விழி
          சீர்சிறந்த முகவார் இளம்பிறையதென் புரூவர்

தேனமர்ந்த குழலார் களங்!கமுகி
     னார் புயங்கழையினார் தனங்குவடு
          சேர்சிவந்த வடிவார் துவண்டஇடை ...... புண்டரீகம்

சூனியங்கொள்செயலார் அரம்பை!தொடை
     யார் சரண்கமல நேரிளம்பருவ
          தோகை சந்தம்அணிவாருடன் கலவி ...... இன்பமூடே

சோகமுண்டு விளையாடினும்கமல
     பாதமும் புயமிராறும் இந்துளபல்
          தோடலங்கலணி மார்பமும் பரிவுளம் கொள்வேனே

ஓநமந்தசிவ ரூபி அஞ்சுமுக
     நீலி கண்டி கலியாணி விந்துவொளி
          ஓசை தங்கும் அபிராமி அம்பிகை பயந்தவேளே

ஓலமொன்றவுணர் சேனை மங்கையர்கள்
     சேறுடன் குருதியோட எண்திசையும்
          ஓதுகெந்தருவர் பாட நின்று நடனங்கொள் வேலா

ஏனல் மங்கைசுசி ஞான ரம்பை!என
     தாயி சந்த்ரமுக பாவை வஞ்சிகுற
          மானொடும்பர் தரு மானணைந்தழகிலங்கு மார்பா

ஏர்கரந்தையறு கோடு கொன்றைமதி
     ஆறணிந்த சடையார் விளங்குமெழில்
          ஈறில் பந்தணை நலூர் அமர்ந்துவளர் ...... தம்பிரானே.

திருப்பாடல் 7:
தனனந் தத்தன தனந்த தானன
     தனனந் தத்தன தனந்த தானன
          தனனந் தத்தன தனந்த தானன ...... தனதான

மதிஅஞ்சத்திரு நிறைந்த மாமுகம் 
     மயிலஞ்சக்கிளி இனங்களாமென
          மதுரஞ்செப்பிய மடந்தை மேனகை ...... ரதிபோல

மருவும் பொற்குடம் எழுந்த மாமுலை
     வளர்வஞ்சிக் கொடி நடந்தவாறென
          வரு துங்கக்கடல் அணங்கு போல்பவர் ...... தெருவூடே

நிதம்இந்தப்படி இருந்து வாறவர்
     பொருள் தங்கப்பணி கலந்து போய்வர
          நெறிதந்திட்டவர் வசங்களாமென ...... உழலாதே

நிதிபொங்கப்பல தவங்களால்உனை
     மொழியும் புத்திகள் தெரிந்து நானுனை
          நிகர் சந்தத்தமிழ் சொரிந்து பாடவும் அருள்தாராய்

நதி மிஞ்சச்சடை விரிந்த நாயகன் 
     உமையன்பில் செயும் மிகுந்த பூசனை
          நலமென்றுட்குளிர் சிவன்பராபரன் அருள்பாலா

நவகங்கைக்கிணை பகர்ந்த மாமணி
     நதிபங்கிற்குலவு கந்துகாபுரி
          நகர்பொங்கித் தழையவந்து வாழ்வுறு ...... முருகோனே

கெதி தங்கத்தகு கணங்கள் வானவர்
     அரிகஞ்சத்தவர் முகுந்தர் நாவலர்
          கிளைபொங்க க்ருபை புரிந்து வாழ்கென ...... அருள்நாதா

கெருவம் பற்றிகல் விளைந்த சூரொடு
     தளம்அஞ்சப் பொருதெழுந்து தீயுகள்
          கிரவுஞ்சக்கிரி வகிர்ந்த வேலுள ...... பெருமாளே.


(2024 நவம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)


















No comments:

Post a Comment