(சோழ நாடு (காவிரி வடகரை) திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: சோழ நாடு (காவிரி வடகரை)
மாவட்டம்: திருச்சி
திருக்கோயில்: அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
திருச்சியிலிருந்து 8.5 கி.மீ தூரத்திலுல் அமைந்துள்ளது இத்தலம்.
(Google Maps: Tiruvanaikovil Arulmigu Jambukeswarar Akhilandeswari Temple, N Car St, Thiruvanaikoil, Srirangam, Tiruchirappalli, Tamil Nadu 620005, India)
(Google Maps: Tiruvanaikovil Arulmigu Jambukeswarar Akhilandeswari Temple, N Car St, Thiruvanaikoil, Srirangam, Tiruchirappalli, Tamil Nadu 620005, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 14.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தந்தன தானன தத்ததத்தன
தந்தன தானன தத்ததத்தன
தந்தன தானன தத்ததத்தன ...... தனதான
அஞ்சன வேல்விழி இட்டழைக்கவும்
இங்கிதமாக நகைத்துருக்கவும்
அம்புயல் நேர்குழலைக் குலைக்கவும் ...... நகரேகை
அங்கையின் மூலம்வெளிப்படுத்தவும்
மந்தர மாமுலை சற்றசைக்கவும்
அம்பரம் வீணில் அவிழ்த்துடுக்கவும் இளைஞோர்கள்
நெஞ்சினிலாசை நெருப்பெழுப்பவும்
வம்புரை கூறி வளைத்திணக்கவும்
மன்றிடையாடி மருள் கொடுக்கவும் எவரேனும்
நிந்தைசெயாது பொருள்பறிக்கவும்
இங்கு வலார்கள் கையில் பிணிப்பற
நின்பத சேவை அநுக்ரகிப்பதும் ஒருநாளே
குஞ்சர மாமுக விக்கிநப்ரபு
அங்குச பாச கரப்ரசித்தனொர்
கொம்பன் மகோதரன் முக்கண்விக்ரம ...... கணராஜன்
கும்பிடுவார் வினை பற்றறுப்பவன்
எங்கள் விநாயகன் நக்கர்பெற்றருள்
குன்றைய ரூபக கற்பகப்பிளை ...... இளையோனே
துஞ்சலிலாத சடக்ஷரப்!பிர
பந்த சடானன துஷ்டநிக்ரக
தும்பிகள் சூழவையில் தமிழ்த்ரய ...... பரிபாலா
துங்க கஜாரணியத்தில் உத்தம
சம்புதடாகம் அடுத்த தக்ஷிண
சுந்தர மாறன் மதிற்புறத்துறை ...... பெருமாளே
திருப்பாடல் 2:
தந்தன தானத் தானன தந்தன தானத் தானன
தந்தன தானத் தானன ...... தனதான
அம்புலி நீரைச் சூடிய செஞ்சடை மீதில் தாவிய
ஐந்தலை நாகப் பூஷணர் அருள்பாலா
அன்புடன் நாவில் பாவது சந்ததமோதிப் பாதமும்
அங்கையினால் நின் பூசையும் அணியாமல்
வம்பணி பாரப் பூண்முலை வஞ்சியர் மாயச் சாயலில்
வண்டுழலோதித் தாழலில் இருகாதில்
மண்டிய நீலப் பார்வையில் வெண்துகிலாடைச் சேர்வையில்
மங்கியெ ஏழைப் பாவியென் அழிவேனோ
கொம்பனை நீலக் கோமளை அம்புய மாலைப் பூஷணி
குண்டலி ஆலப் போசனி ...... அபிராமி
கொஞ்சிய வானச் சானவி சங்கரி வேதப் பார்வதி
குன்றது வார்பொன் காரிகை ...... அருள்பாலா
செம்பவளாயக் கூரிதழ் மின்குற மானைப் பூண்முலை
திண்புயமாரப் பூரணம் அருள்வோனே
செந்தமிழ் பாணப் பாவலர் சங்கித யாழைப் பாடிய
தென்திருவானைக்காஉறை ...... பெருமாளே.
திருப்பாடல் 3:
தனத்த தான தானான தனத்த தான தானான
தனத்த தான தானான ...... தனதான
அனித்தமான ஊனாளும் இருப்பதாகவே நாசி
அடைத்து வாயுஓடாத ...... வகை !சாதித்
தவத்திலே குவால்மூலி புசித்து வாடும் ஆயாச
அசட்டு யோகியாகாமல் ...... மலமாயை
செனித்த காரியோபாதி ஒழித்து ஞான ஆசார
சிரத்தையாகி யான்வேறென் உடல்வேறு
செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சியா மநோதீத
சிவச்சொரூப மாயோகி ...... எனஆள்வாய்
தொனித்த நாத வேயூது சகஸ்ரநாம கோபால
சுதற்கு நேச மாறாத ...... மருகோனே
சுவர்க்கலோக மீகாம சமஸ்த லோக பூபால
தொடுத்த நீப வேல்வீர ...... வயலுரா
மனித்தராதி சோணாடு தழைக்க மேவு காவேரி
மகப்ரவாக பானீயம் அலைமோதும்
மணத்த சோலை சூழ்காவை அனைத்து லோகம்ஆள்வாரும்
மதித்த சாமியே தேவர் ...... பெருமாளே.
திருப்பாடல் 4:
தானதன தானத் தானதன தானத்
தானதன தானத் ...... தனதான
ஆரம் அணிவாரைப் பீறியற !மேலிட்
டாடவர்கள் வாடத் ...... துறவோரை
ஆசைமடல் ஊர்வித்தாளும் அதிபாரப்
பாளித படீரத் ...... தனமானார்
காரளக நீழல் காதளவும்ஒடிக்
காதும்அபிராமக் ...... கயல்போலக்
காலனுடல் போடத் தேடிவரு நாளில்
காலை மறவாமல் ...... புகல்வேனோ
பாரடைய வாழ்வித்தாரபதி பாசச்
சாமள கலாபப் ...... பரியேறிப்
பாய்மத கபோலத்தானொடிகலா முன்
பாடிவரும் ஏழைச் ...... சிறியோனே
சூரர்புர சூறைக்கார சுரர் !காவற்
கார இளஏனல் ...... புனமேவும்
தோகைதிரு வேளைக்கார தமிழ் வேதச்
சோதிவளர் காவைப் ...... பெருமாளே.
திருப்பாடல் 5:
தான தத்தன தத்தன தத்தன
தான தத்தன தத்தன தத்தன
தான தத்தன தத்தன தத்தன ...... தனதான
ஆலம் வைத்த விழிச்சிகள் சித்தசன்
ஆகமக்கலை கற்ற சமர்த்திகள்
ஆர் மனத்தையும் எத்தி வளைப்பவர் ...... தெருவூடே
ஆரவட்ட முலைக்கு விலைப்பணம்
ஆயிரக்கலம் ஒட்டிஅளப்பினும்
ஆசையப் பொருளொக்க நடிப்பவர் உடன்மாலாய்
மேலிளைப்பும் முசிப்பும் !அவத்தையு
மாய்எடுத்த குலைப்பொடு பித்தமும்
மேல்கொளத் தலையிட்ட விதிப்படி ...... அதனாலே
மேதினிக்குள் அபத்தன் எனப்பல
பாடுபட்டு புழுக்கொள் மலக்குகை
வீடுகட்டிஇருக்கும் எனக்குநின் அருள்தாராய்
பீலி க்க மயில் துரகத்தினில்
எறிமுட்ட வளைத்து வகுத்துடல்
பீறலுற்றவு யுத்த களத்திடை ...... மடியாத
பேரரக்கர் எதிர்த்தவர் அத்தனை
பேரை உக்ர களப்பலி இட்டுயர்
பேய்கை கொட்டிநடிப்ப மணிக் கழுகுடனாட
ஏலம் வைத்த புயத்தில் அணைத்தருள்
வேலெடுத்த சமர்த்தை உரைப்பவர்
ஏவருக்கு மனத்தில் நினைப்பவை ...... அருள்வோனே
ஏழிசைத் தமிழில் பயனுற்ற!வெ
ணாவல்உற்றடியில் பயிலுத்தம
ஈசன் முக்கண் நிருத்தன் அளித்தருள் ...... பெருமாளே.
திருப்பாடல் 6:
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
தனத்தா தனத்தான ...... தந்ததான
உரைக்காரிகைப் பாலெனக்கே முதற்பேர்
உனக்கோ மடற்கோவை ...... ஒன்றுபாட
உழப்பாதிபக் கோடெழுத்தாணியைத்!தே
டுனைப் பாரில்ஒப்பார்கள் ...... கண்டிலேன்யான்
குரைக்கான வித்யா கவிப்பூபருக்கே
குடிக்காண் முடிப்போடு ...... கொண்டுவாபொன்
குலப்பூண் இரத்நாதி பொன் தூசெடுப்பாய்
எனக் கூறிடர்ப்பாடின் ...... மங்குவேனோ
அரைக்காடை சுற்றார் தமிழ்க்கூடலில்போய்
அனற்கே புனற்கே வரைந்த!ஏடிட்
டறத்தாய் எனப்பேர் படைத்தாய் புனற்சேல்
அறப்பாய் வயற்கீழ் அமர்ந்தவேளே
திரைக்காவிரிக்கே கரைக் கானகத்தே
சிவத்யானமுற்றோர் சிலந்திநூல்செய்
திருக்காவணத்தே இருப்பார் அருள்கூர்
திருச்சாலகச் சோதி ...... தம்பிரானே.
திருப்பாடல் 7:
தான தனன தனதந்த தந்தன
தான தனன தனதந்த தந்தன
தான தனன தனதந்த தந்தன ...... தனதான
ஓல மறைகள் அறைகின்ற ஒன்றது
மேலை வெளியில்ஒளிரும் பரஞ்சுடர்
ஓதுசரியை க்ரியையும் புணர்ந்தவர் எவராலும்
ஓதஅரிய துரியம் கடந்தது
போதஅருவ சுருபம் ப்ரபஞ்சமும்
ஊனும் உயிரும் முழுதும் கலந்தது ...... சிவஞானம்
சாலவுடைய தவர்கண்டு கொண்டது
மூல நிறைவு குறைவின்றி நின்றது
சாதி குலமும் இலதன்றி அன்பர்சொன வியோமம்
சாரும் அநுபவர் அமைந்தமைந்த மெய்
வீடு பரம சுகசிந்து இந்த்ரிய
தாப சபலம் அறவந்து நின்கழல் ...... பெறுவேனோ
வால குமர குககந்த குன்றெறி
வேல மயில எனவந்து கும்பிடு
வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் ...... களைவோனே
வாச களப வரதுங்க மங்கல
வீர கடக புயசிங்க சுந்தர
வாகை புனையும் ரணரங்க புங்கவ ...... வயலூரா
ஞால முதல்வி இமயம் பயந்தமின்
நீலிகவுரி பரைமங்கை குண்டலி
நாளும்இனிய கனிஎங்கன்அம்பிகை ...... த்ரிபுராயி
நாத வடிவி அகிலம் பரந்தவள்
ஆலின்உதரமுள பைங்கரும்புவெண்
நாவல்அரசு மனைவஞ்சி தந்தருள் ...... பெருமாளே.
திருப்பாடல் 8:
தனதனதன தானத் தானன
தனதனதன தானத் தானன
தனதனதன தானத் தானன ...... தனதான
கருமுகில்திரளாகக் கூடிய
இருளென மருளேறித் தேறிய
கடிகமழ்அளகாயக் காரிகள் ...... புவிமீதே
கனவிய விலையோலைக் காதிகள்
முழுமதி வதனேரப் பாவைகள்
களவியமுழு மோசக்காரிகள் ...... மயலாலே
பரநெறிஉணரா அக்காமுகர்
உயிர்பலிகொளும் மோகக்காரிகள்
பகழியை விழியாகத் தேடிகள் ...... முகமாயப்
பகடிகள் பொருளாசைப் பாடிகள்
உருவிய தனபாரக் கோடுகள்
படவுளம் அழிவேனுக்கோர்அருள் ...... புரிவாயே
மரகதவித நேர்முத்தார்நகை
குறமகள் அதிபாரப் பூண்முலை
மருவிய மணவாளக் கோலமும் உடையோனே
வளைதருபெரு ஞாலத்தாழ்கடல்
முறையிட நடுவாகப் போயிரு
வரைதொளைபட வேல் விட்டேவிய ...... அதிதீரா
அரவணை தனிலேறிச் சீருடன்
விழிதுயில் திருமால் சக்ராயுதன்
அடியிணைமுடி தேடிக் காணவும் ...... அரிதாய
அலைபுனல் சடையார் மெச்சாண்மையும்
உடையதொர் மயில் வாசிச் சேவக
அழகிய திருவானைக்காஉறை ...... பெருமாளே.
திருப்பாடல் 9:
தானத் தான தான தனதன
தானத் தான தான தனதன
தானத் தான தான தனதன ...... தனதான
காவிப் பூவை ஏவை இகல்கவன
நீலத்தாலகால நிகர்வன
காதிப் போக மோகம் அருள்வன ...... இருதோடார்
காதில் காதி மோதி உழல்கண
மாயத்தார்கள் தேக பரிசன
காமக்ரோத லோப மதமிவை ...... சிதையாத
பாவிக்காயு வாயு வலம்வர
லாலிப்பார்கள் போத கரும!உ
பாயத்தான ஞான நெறிதனை ...... இனிமேல்!அன்
பாலெக்காக யோக ஜெபதப
நேசித்தாரவார பரிபுர
பாதத்தாளுமாறு திருவுளம் ...... நினையாதோ
கூவிக் கோழி வாழியென மயில்
ஆலித்தாலகாலம் எனஉயர்
கூளிச் சேனை வான மிசைதனில் ...... விளையாடக்
கோரத் தீர சூரனுடை வினை
பாறச் சீறல் ஏனபதி தனை
கோலக்காலமாக அமர்செய்த ...... வடிவேலா
ஆவிச் சேல்கள் பூக மடலிள
பாளைத் தாறு கூறுபடஉயர்
ஆலைச் சோலை மேலை வயலியில் உறைவோனே
ஆசைத் தோகைமார்கள் இசையுடன்
ஆடிப் பாடி நாடி வருதிரு
ஆனைக்காவில் மேவியருளிய ...... பெருமாளே.
திருப்பாடல் 10:
தனதன தானந்த தான தந்தன
தனதன தானந்த தான தந்தன
தனதன தானந்த தான தந்தன ...... தனதான
குருதி புலாலென்பு தோல்நரம்புகள்
கிருமிகள் மாலம் பிசீத மண்டிய
குடர்நிணம் ரோமங்கள் மூளையென்பன ...... பொதிகாயக்
குடிலிடை ஓரைந்து வேடர்ஐம்புல
அடவியிலோடும் துராசை வஞ்சகர்
கொடியவர் மாபஞ்ச பாதகஞ்செய ...... அதனாலே
சுருதி புராணங்கள் ஆகமம்பகர்
சரியை க்ரியாஅண்டர் பூசை வந்தனை
துதியொடு நாடும் தியானம் ஒன்றையும் ...... முயலாதே
சுமடமதாய் வம்பு மால்கொளுந்திய
திமிரரொடே பந்தமாய் வருந்திய
துரிசற ஆநந்த வீடு கண்டிட ...... அருள்வாயே
ஒருதனி வேல்கொண்டு நீள் க்ரவுஞ்சமும்
நிருதரு மாவுங்க லோல சிந்துவும்
உடைபட மோதுங்கு மார பங்கய ...... கரவீரா
உயர்தவர் மாஉம்பரான அண்டர்கள்
அடிதொழுதே மன்பராவு தொண்டர்கள்
உளமதில் நாளும் கலாவி இன்புற ...... உறைவோனே
கருதிய ஆறங்க வேள்வி அந்தணர்
அரிகரி கோவிந்த கேசவென்திரு
கழல்தொழு சீரங்க ராசன்நண்புறு ...... மருகோனே
கமலனும் ஆகண்டலாதி அண்டரும்
எமது பிரானென்று தாள்வணங்கிய
கரிவனம் வாழ்சம்பு நாதர் தந்தருள் ...... பெருமாளே.
திருப்பாடல் 11:
தானத் தானத் ...... தனதான
தானத் தானத் ...... தனதான
நாடித் தேடித் ...... தொழுவார்பால்
நான் நத்தாகத் ...... திரிவேனோ
மாடக் கூடற்பதிஞான
வாழ்வைச் சேரத் ...... தருவாயே
பாடற் காதற் ...... புரிவோனே
பாலைத் தேனொத்தருள்வோனே
ஆடல் தோகைக்கினியோனே
ஆனைக்காவில் ...... பெருமாளே.
திருப்பாடல் 12:
தனந்த தத்தன தானான தானன
தனந்த தத்தன தானான தானன
தனந்த தத்தன தானான தானன ...... தந்ததான
நிறைந்த துப்பிதழ் தேனூறல் நேரென
மறம் தரித்தகண் ஆலாலம் நேரென
நெடுஞ்சுருட்குழல் ஜீமூத நேரென ...... நெஞ்சின்மேலே
நெருங்கு பொன்தனம் மாமேரு நேரென
மருங்கு நிட்கள ஆகாசம் நேரென
நிதம்ப முக்கணர் பூணாரம் நேரென ...... நைந்துசீவன்
குறைந்திதப்பட வாய்பாடி ஆதரம்
அழிந்தழைத்தணை மேல்வீழும் மாலொடு
குமண்டையிட்டுடை சோரா விடாயில் அமைந்துநாபி
குடைந்திளைப்புறு மாமாய வாழ்வருள்
மடந்தையர்க்கொரு கோமாளமாகிய
குரங்கை ஒத்துழல்வேனோ மனோலயம் என்றுசேர்வேன்
மறந்த சுக்ரிப மாநீசன் வாசலில்
இருந்துலுத்த நிஓராததேது சொல்
மனம் களித்திடலாமோ துரோகிதம் ...... முன்புவாலி
வதம்செய் விக்ரம சீராமன் நானிலம்
அறிந்ததிச்சரம் ஓகோ கெடாதினி
வரும் படிக்குரையாய் பார் பலாகவம் என்றுபேசி
அறம்தழைத்தநுமானோடு மாகடல்
வரம் படைத்ததின் மேலேறி ராவணன்
அரண்குலைத்தெதிர் போராடு நாரணன் ...... மைந்தனான
அநங்கன் மைத்துன வேளே கலாபியின்
விளங்கு செய்ப்பதி வேலாயுதா வியன்
நலம்கயப்பதி வாழ்வான தேவர்கள் ...... தம்பிரானே.
திருப்பாடல் 13:
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன
தனதன தனதன தாந்த தானன ...... தனதான
பரிமள மிகவுள சாந்து மாமத
முருகவிழ் வகைமலர் சேர்ந்து கூடிய
பலவரி அளிதுயில் கூர்ந்து வானுறு ...... முகில்போலே
பரவிய இருள்செறி கூந்தல் மாதர்கள்
பரிபுர மலரடி வேண்டிஏவிய
பணிவிடைகளில் இறுமாந்த கூளனை ...... நெறிபேணா
விரகனை அசடனை வீம்பு பேசிய
விழலனை உறுகலை ஆய்ந்திடா முழு
வெகுளியை அறிவது போம் கபாடனை ...... மலமாறா
வினையனை உரைமொழி சோர்ந்த பாவியை
விளிவுறு நரகிடை வீழ்ந்த மோடனை
வினவி முனருள்செய்து பாங்கினாள்வதும் ஒருநாளே
கருதலர் திரிபுரம் மாண்டு நீறெழ
மலைசிலை ஒருகையில் வாங்கு நாரணி
கழலணி மலைமகள் காஞ்சி மாநகர் உறைபேதை
களிமயில் சிவனுடன் வாழ்ந்த மோகினி
கடலுடை உலகினை ஈன்ற தாயுமை
கரிவனம் உறை அகிலாண்ட நாயகி ...... அருள்பாலா
முரணிய சமரினில் மூண்ட ராவணன்
இடியென அலறி முனேங்கி வாய்விட
முடிபல திருகிய நீண்ட மாயவன் ...... மருகோனே
முதலொரு குறமகள் நேர்ந்த நூலிடை
இருதன கிரிமிசை தோய்ந்த காமுக
முதுபழ மறைமொழி ஆய்ந்த தேவர்கள் ...... பெருமாளே.
திருப்பாடல் 14:
தானத் தானன தத்தன தத்தன
தானத் தானன தத்தன தத்தன
தானத் தானன தத்தன தத்தன ...... தனதான
வேலைப் போல்விழியிட்டு மருட்டிகள்
காம க்ரோதம் விளைத்திடு துட்டிகள்
வீதிக்கே திரி பப்பர மட்டைகள் ...... முலையானை
மேலிட்டே பொரவிட்ட பொறிச்சிகள்
மார்பைத் தோளைஅசைத்து நடப்பிகள்
வேளுக்காண்மை செலுத்து சமர்த்திகள் ...... களிகூரும்
சோலைக் கோகிலம்ஒத்த மொழிச்சிகள்
காசற்றாரை இதத்தில்ஒழிச்சிகள்
தோலைப் பூசிமினுக்கி உருக்கிகள் ...... எவரேனும்
தோயப் பாயலழைக்கும் அவத்திகள்
மோகப் போக முயக்கி மயக்கிகள்
சூறைக்காரிகள் துக்கவலைப்படல் ஒழிவேனோ
காலைக்கே முழுகிக் குண திக்கினில்
ஆதித்யாய எனப்பகர் தர்ப்பண
காயத்ரீ செபம்அர்ச்சனையைச்செயும் ...... முநிவோர்கள்
கானத்தாசிரமத்தினில் உத்தம
வேள்விச் சாலை அளித்தல் பொருட்டெதிர்
காதத் தாடகையைக் கொல் க்ருபைக்கடல் ...... மருகோனே
ஆலைச்சாறு கொதித்து வயல்தலை
பாயச்சாலி !தழைத்திரதித்தமு
தாகத் தேவர்கள் மெச்சிய செய்ப்பதி ...... உறைவேலா
ஆழித் தேர் மறுகிற்பயில் மெய்த்திரு
நீறிட்டான்மதிள் சுற்றிய பொன்!திரு
ஆனைக் காவினில் அப்பர் ப்ரியப்படு ...... பெருமாளே.
No comments:
Post a Comment